World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்:உலகப் பொருளாதாரம்

US Fed cuts rates, citing decline in investment

அமெரிக்க மத்திய வங்கி முதலீட்டு வீழ்ச்சியை காட்டி வட்டி வீதத்தை வெட்டுகிறது

By Nick Beams
16 May 2001

Back to screen version

அமெரிக்க பெடரல் றிசேர்வ் போட் -அமெரிக்க மத்திய வங்கி- (Federal Reserve Board) மீண்டும் ஒரு தடவை வட்டி வீதத்தை 0.5 சதவீதத்தினால் வெட்டிக் குறைத்துள்ளது. அமெரிக்கப் பொருளாதாரம் பின்னடைந்து போவதைத் தடுப்பதற்கான ஒரே வழி நுகர்வுச் செலவீனத்தை தொடர்ந்தும் பராமரிப்பதே எனக் கூறியே அப்படிச் செய்துள்ளது.

ஒரு சில மாதங்களுள் ஐந்தாவது தடவையாக இந்த வட்டி வீத குறைப்பை கடந்த புதன்கிழமை அறிவித்த அமெரிக்க பெடரல் றிசேர்வ் போட் (Fed) வட்டி வீதத்தை 4 வீதத்துக்கு கொணர்ந்துள்ளது. ஏழு ஆண்டுகளுள் இது ஆகக் குறைந்த மட்டமாகும்.

பெடரல் றிசேர்வ் போர்ட் அதனது அறிக்கையில் குறிப்பிட்டது போல் இந்த ஆண்டின் முன்னைய அறிக்கையில் அது சுட்டிக்காட்டியது போல் மேலதிக சாமான்கள் பட்டியலின் குறைப்பு பெரிதும் முன்னெடுக்கப்பட்டு, நுகர்வு, வீடமைப்பு செலவுகள் "இந்த துறைகளில் சமீபத்தில் குறைபாடுகள் நியாயமான அளவில் மொட்டையாக்கப்பட்டு" நிறுத்தப் பட்டுள்ளதாக தெரிகின்றது.

ஆனால் பொருளாதாரத்தின் உந்து சக்திகளான முதலீட்டினதும் இலாபத்தினதும் தீர்க்கமான துறைகளில் இது வேறு விதமாக உள்ளது. மூலதனக் கருவிகளில் முதலீடு "தொடர்ந்து வீழ்ச்சி கண்டதோடு" பொருளாதார வீழ்ச்சி விரைவில் முற்றுப் பெறாது எனவும் அமெரிக்க நாணய சபை தெரிவிக்கிறது.

"வர்த்தக நோக்கிலான கணிசமான அளவு ஸ்திரமின்மையுடன் சேர்ந்த வண்ணம் நடைமுறை, எதிர்கால இலாபமீட்டும் தன்மையிலான தேய்வு மூலதனச் செலவு தொடர்ந்து முன்நோக்கிச் செல்லும் சாத்தியத்தை கொண்டுள்ளது. இந்தச் சாத்தியமான தடை நுகர்வின் மீதான பங்குடமை செல்வங்களிலான முன்னைய வீழ்ச்சியின் சாத்தியமான தாக்கங்களுடன் சேர்ந்து, வெளிநாட்டில் மெதுவான வளர்ச்சி ஏற்படும் ஆபத்தையும் ஏற்படுத்தியதோடு பொருளாதாரத்திலும் தொடர்ந்து தாக்கத்தை உண்டுபண்ணியது."

ஜூன் மாதக் கடைசியில் சமஷ்டி பகிரங்க சந்தை கமிட்டியின் (Federal Open Market Committee) அடுத்த கூட்டத்துக்கு முன்னதாக வட்டி வீதத்தை மற்றொரு தடவை வெட்டும் சாத்தியம் இருந்து கொண்டுள்ளது. பெடரல் றிசேர்வ் போட் அறிக்கை, பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் "எதிர்பார்க்கப்படும் எதிர்காலத்தில் நிலைமைகள் உருவாக்கக் கூடிய பொருளாதாரப் பலவீனத்தில் இருந்து ஏற்படக் கூடிய ஆபத்து பற்றியும்" கூறியது.

இந்த பெடரல் றிசேர்வ் போட்டின் தீர்மானம் பற்றி கருத்து வெளியிட்ட ஸ்ரான்டட் அன்ட் புவர்ஸ் (Standard and Poor's Economist) பொருளியலாளர் டேவிட் வைஸ் அமெரிக்கப் பொருளாதாரத்தின் வளர்ச்சி கண்டுவரும் ஈடாட்டம் கண்ட நிலையை சுட்டிக் காட்டினார். பெருமளவுக்கு உயர் மட்டத்திலான நுகர்வு செலவீனங்களினால் ஸ்தம்பித்துப்போன இது கடன்களின் அதிகரிப்பினாலேயே எண்ணெய் வார்க்கப்பட்டது.

ரொயிட்டரிடம் பேசுகையில் அவர் கூறியதாவது: "பொருளாதாரப் பின்னடைவுக்கு வெளியே எம்மை பாதுகாத்துக் கொண்டிருப்பது நுகர்வோன்." முன்யோசனை மீது தாக்குதல் இடம்பெறும் ஆபத்து உள்ளது. மக்கள் தமது சக்திக்கு அப்பால் வாழ்வதை நிறுத்திக் கொண்டால் அது ஒரு பொருளாதாரப் பின்னடைவாகத் திரும்ப இடமுண்டு"

இந்த வாரத்தின் ஆரம்பத்தில் அமெரிக்க பெடரல் றிசேர்வ் போட் கைத்தொழில் உற்பத்தி சம்பந்தமாக வெளியிட்ட புள்ளிவிபரங்கள் அமெரிக்க பொருளாதாரத்தின் தொடர்ச்சியான நோக்கத்தைக் காட்டியது. ஏப்பிரலில் சுரங்கங்கள், தொழிற்சாலைகள், பயன்தரு சேவைகளின் வெளியீடு காலத்துக்கு காலம் சீர்செய்யப்பட்ட் ஒரு 0.3 சதவீதத்தினால் வீழ்ச்சி கண்டது. இது ஏழாவது தடவையாக தொடர்ந்து இடம்பெற்ற மாதாந்த வீழ்ச்சியாகும். ஒரு ஆண்டின் முன்னைய நிலைமையை விட 1 சதவீதம் குறைவானதாகும். முன்னைய மாதத்துடன் ஒப்பிடும்போது கைத்தொழில் இயலளவு பயன்பாட்டு வீதம் 0.4 வீதத்தினால் வீழ்ச்சி கண்டது. ஒரு தசாப்தத்தில் ஆகக் குறைவானதாகும்- 78.5 சதவீதம்.

வேலைவாய்ப்பு புள்ளிகளிலும் கைத்தொழில் வெளியீடு வீழ்ச்சி கண்டது. கடந்த 10 மாதங்களில் உற்பத்தி கைத்தொழில் 500,000 தொழில்களை இழந்தது. பெடரல் றிசேர்வ் போர்ட்டின்படி எதிர்காலத்தில் அதிக வேலையிழப்புகள் ஏற்படும். ஒரு தசாப்த காலத்தில் உயர்ந்த மட்டமான 233,000 தொழில்களை வேலைகொள்வோர் வெட்டியதன் காரணமாக வேலையில்லாத் திண்டாட்ட வீதம் கடந்து மாதம் 4.5 வீதத்தினால் அதிகரித்தது.

இலாபம் பற்றிய புள்ளி விபரங்கள் முதலீட்டு, வெளியீடு, இதன் பெறுபேறாக தொழில் வீழ்ச்சியையும் சுட்டிக்காட்டுகின்றது. பிஸ்னஸ் வீக்கினால் தொகுக்கப்பட்ட தரவுகளின்படி 900 கம்பனிகளின் இலாபங்கள் 2வது காலாண்டில் 25 சதவீதத்தினால் வீழ்ச்சி கண்டது. 1990-91 பொருளாதாரப் பின்னடைவின் பின்னர் இடம்பெற்ற பெரிய காலாண்டு வீழ்ச்சி இதுவாகும். இரண்டாவது காலாண்டில் இலாபங்கள் தொடர்ந்து இரட்டை தரவு வீதங்களில் வீழ்ச்சி கண்டது.

உயர் தொழில்நுட்ப துறையிலான ஆழமான முதலீட்டு வீழ்ச்சிகள் அமெரிக்கப் பொருளாதாரத்திலான சில இருண்ட மதிப்பீடுகளுக்கு வருமாறு தள்ளியது. கடந்த மாதம் வாஷிங்டன் போஸ்டில்' றொபேட் சமுவேல்சன் எழுதிய "பசுமையான காலம் எதிர் அபரிமிதம்" (Green span Vs The Glut) என்ற தலைப்பிலான கட்டுரையில் இது வெளியிடப்பட்டது.

"நாம் இப்போது தொலைத் தொடர்பு துறைகளிலும் மின்சார கருவி, இன்டர்நெட் போன்றவற்றில் அமெரிக்க முதலீட்டு செலவின் அதிர்ச்சி தரும் வீழ்ச்சியை கண்டு கொண்டுள்ளோம்." என அவர் எழுதினார். "இது மிகவும் கெடுதியானது. ஆனால் இது ஏனைய கைத்தொழில்களுக்கும் பரவுமானால் இது விரைவாக பொருளாதார எதிர்பார்ப்புகளை இருட்டடிக்கச் செய்யும். ஒரு வார்த்தையில் சொன்னால் ஆபத்து அபரிமிதமானது. குறைந்த வட்டி வீதங்கள் மூலம் பொருளாதார வளர்ச்சியை புதுக்கியமைக்க பெடரல் றிசேர்வ் போட் செய்யும் பிரச்சாரத்தை அபரிமிதமான இயலளபு வெற்றி கொள்ளும். கம்பனிகள் தேவையை இட்டு நிரப்பும் பிரமாண்டமான சக்தியை அவை ஏற்கனவே கொண்டிருப்பின் கடன்வாங்கி முதலீடு செய்யப் போவதில்லை."

1980பதுகளில் AT&T யின் பிளவையும் கடந்த தசாப்தத்தில் கைத்தொழிலில் ஏற்பட்ட சீரழிவையும் தொடர்ந்து பிரமாண்டமான அபரிமிதமான முதலீடு இடம்பெற்ற சமயத்தில் தொலைத்தொட்ர்பு கைத்தொழிலில் நெருக்கடி ஏற்பட்டது. 1980பதுகளில் இறுதியில் மூன்று நீண்ட- தூரக் கம்பனிகள் இருந்தன. ஆனால் தற்சமயம் ஒலிக்கும் தரவுக்குமென குறைந்தபட்சம் 15 கம்பனிகள் -Fiber-optic networks- உள்ளன.

இந்த கம்பனிகளின் விஸ்தரிப்பே சிஸ்கோ (Cisco) நோர்ட்ரெல் (Nortel) லூசன்ட் (Lucent) போன்ற கருவிகளை விநியோகிக்கும் உயர் தொழில்நுட்ப நிறுவனங்களின் பெருக்கத்துக்கு எண்ணெய் வார்த்தது. 1995 தொடக்கம் 2000 செப்டம்பர் வரை தொலைத் தொடர்பு சாதனங்களின் கடன்கள் 75 பில்லியன்களில் இருந்து 300 பில்லியன்களாக- நான்கு மடங்கால்- அதிகரித்தது. விற்பனையைப் பொறுத்தமட்டில் 1995ல் 37 சதவீதமாக இருந்த கடன் 2000ம் ஆண்டின் இறுதியில் கிட்டத்தட்ட 100 சதவீதமாக அதிகரித்தது.

அமெரிக்கப் பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டு வந்த பின்னடைவுப் போக்கானது உயர் தொழில்நுட்ப தொலைத் தொடர்பு கைத்தொழிலையே கணிசமான அளவுக்கு மையமாகக் கொண்டிருந்தது. இக்கைத்தொழில் எல்லாவற்றுக்கும் மேலாக "சந்தையின் மஜிக்" ஆகவும் "புதிய பொருளாதாரம்" எனப்பட்டதன் சக்தியாகவும் கொள்ளப்பட்டது.

ஆனால் இயற்கையான ஊதாரித்தனம், அராஜகம் சந்தையினதும் இலாப அமைப்பினதும் ஈடாட்டம் சம்பந்தமான சில பழைய பொருளியல் விதிகள் எதிர்காலத்தைப் பற்றிய பாரதூரமான கவலைகள் தோன்ற இடமளித்துக் கொண்டுள்ளது.

சாமுவேல்சனின்படி "தொலைத் தொடர்பு துறையிலான வேலைநீக்கங்கள் ஏனையவற்றின் ஒரு முன்னோடியாக அமைந்து விடும் சாத்தியம் இருந்து கொண்டுள்ளது என்பதே இன்றைய பெரும் கவலையாகும். கம்பனிகள் முதலீடுகளை தடுக்கின்றன. ஏனெனில் இலாபம் வீழ்ச்சி கண்டு வருகின்றது. அவர்கள் எதிர்கால கோரிக்கைகளையிட்டு பெரிதும் நம்பிக்கை கொண்டவர்களாக விளங்கினர் என முடிவு செய்தனர். இது ஒரு அதிர்ச்சி தரும் அடியாகும். இது நிச்சயம் வேலையின்மையை அதிகரிக்கும். நுகர்வோர் நம்பிக்கையை வீழ்ச்சி காணச் செய்யும். இது சுயபூர்த்தி ஜோஸ்யத்தை அச்சுறுத்துகின்றது: வீழ்ச்சிகண்டு வரும் முதலீட்டுச் செலவு குறைவான நுகர்வு செலவீட்டுக்கு இட்டுச் செல்கின்றது. பதிலாக இது முதலீட்டு அபரிமிதங்களை மோசமடையச் செய்கிறது. அத்தோடு இலாபங்கள், விலைகள், நம்பிக்கையைச் சோர்வடையச் செய்கிறது."

மேலும் வட்டி வீத வெட்டை ஆதரிக்கும் அதே வேளையில் சமுவேல்சன், இது தாக்கிப்பிடிக்கக் கூடிய முழு மூலோபாயத்தை பிரதிநிதித்துவம் செய்ததாக நம்பவில்லை.

அவர் எழுதியதாவது: அமெரிக்க பெடரல் றிசேர்வ் போட் சில காலமாக நுகர்வுச் செலவும் நம்பிக்கையும்- ஏற்கனவே சற்று ஆட்டம் கண்டுவிட்டதாக நம்பியது. மோசமான முதலீட்டு வெட்டுக்கள் இடம்பெறும் வரை இது நீண்டு சுருங்கும் தன்மை கொண்டதாக விளங்கி வந்தது. ஒரு நாணய சூழ்ச்சி என்ற விதத்தில் இது பெரும் அளவிலான கஷ்டத்தை கொண்டுள்ளது: பயமுறுத்தலுக்கும் முடியாமைக்கும் இடையே நின்றுகொண்டுள்ளது."

அமெரிக்கப் பொருளாதாரத்தின் ஒரு நீண்டகால நடைமுறை வீழ்ச்சி தாக்கங்களைக் காட்டும் மற்றொரு எச்சரிக்கை இவ்வார பினான்சியல் டைம்ஸ் பத்திரிகையில் பிரசுரமாகியது. மோகன் ஸ்ரான்லியின் பிரதம கணக்காளர் ஸ்ரீபன் றோச்சின்படி அமெரிக்கப் பொருளாதாரம் பெரிதும் மெதுவான வளர்ச்சி காலப்பகுதியினுள் நடைபோடும்.

அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுள் வளர்ச்சி 1.5 வீதத்துக்கும் 2 சதவீதத்துக்கும் இடைப்பட்டதாக விளங்கும். இது 1995-2000ம் ஆண்டின் நடுப்பகுதிவரை பதிவு செய்யப்பட்ட 4.5 சதவீத வளர்ச்சியின் அரைவாசிக்கும் குறைவானதாகும். றோச் தற்போதைய நிலைமை இரண்டாம் உலக யுத்தத்துக்கு முன்னர் இருந்த பொருளாதார பின்னடைவை காட்டிலும் பெரிதும் அதிகமானது என்றுள்ளார். இதனால் கடந்த 50 ஆண்டுகளில் அனுபவித்திராத படுமோசமான இயலளபுக்கு மேலான தன்மை காரணமாக இப்பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களாக அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஒரு தொகை "அமைப்பு ரீதியான தோஷங்கள்" அபிவிருத்தி கண்டுள்ளன. இது என்றுமில்லாத மூலதனச் செலவீனங்கள், வளர்ச்சி காணும் கம்பனி, நுகர்வோர் கடன்களையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது. முன்னொருபோதும் இல்லாத சென்மதி நிலுவைப் பற்றாக்குறை இடைவெளியும் இருந்து கொண்டுள்ளது.

"இந்த அமைப்பு ரீதியானதும் சுழற்சியானதுமான மேலதிகங்கள் இடம்பெற பல வருடங்கள் பிடித்தன. இதனால் அவற்றை விரைவில் ஒழித்துக் கட்டிவிடுவது என்பது சாத்தியம் இல்லை. பீதி கொண்ட அமெரிக்க பெடரல் றிசேர்வ் போட் இப்போது செய்ய முயல்வதுபோல் அதிகாரிகள் பொருளாதாரத்தை பாய்ந்து தள்ள முயற்சிப்பதை நிறுத்திவிடாது. தனியார்துறை ஐந்தொகைகளில் வளர்ச்சி கண்டு வந்த முறைமுறையான சமபலமற்ற நிலை, மேலதிகங்களின் தனித்துவமான சிறப்புக் காரணமான நாணய, நிதி சம்பந்தமான ஊக்கிகளை விரைவாகப் பொருத்துவது இம்முறை பலன்தரும் சாத்தியம் இல்லை" என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved