World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : சீனா

Chinese think-tank warns of growing unrest over social inequality

சமூக சமத்துவமின்மை மீதான வளர்ந்து வரும் அமைதி இன்மையை சீன ஆலோசனைக் குழு எச்சரிக்கின்றது.

By James Conachy
15 June 2001

back to screen version

அரசாங்கத்துடனான சமூக அதிருப்தி பரவி வளர்ந்து வருகின்றது என உயர்மட்ட சீன ஆலோசனைக் குழு எச்சரித்ததாக ஜூன் 1 அன்று உத்தியோகபூர்வமல்லாத செய்தி வெளியானது. ஜூன் 3ம் தேதி நியூயோர்க் டைம்ஸின் படி அறிக்கை "சமத்துவமின்மை, ஊழல் மற்றும் உத்தியோகபூர்வமாய் கண்டு கொள்ளாது இருத்தல் ஆகியவற்றின் மீதான அதிகரிக்கும் பொது மக்களது கோபத்தை விவரிக்கின்றது மற்றும் கிட்டத்தட்ட வெளிநாடுகளில் உள்ள அதிருப்தியாளர்களால் எதிர்காலம் தெளிவில்லை என்று கூறப்படுகின்றவாறு, அது கொதிக்கும் அமைதி இன்மை பற்றிய படத்தை வரைந்தும் காட்டுகின்றது".

டைம்ஸ் மற்றும் மேற்கத்திய செய்தித் தொடர்பு சாதனங்களால் பெறப்பட்ட 308 பக்கங்களைக் கொண்ட பத்திரத்தின் படிகள், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சக்திமிக்க மத்திய குழு அமைப்பின் துறையால் வெளியிடப்பட்டு, அரசின் மத்திய தொகுப்பு மற்றும் மொழி பெயர்ப்பு அச்சகத்தால் வெளியிடப்பட்டது.

"புதிய சூழ்நிலைகளின் கீழ் மக்களுக்குள்ளேயான முரண்பாடுகளை ஆய்தல்" என தலைப்பிடப்பட்ட இவ்வறிக்கை இலக்கு வைத்த பார்வையாளர்கள், கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்துவத்தின் மேல்தட்டினர் ஆவர். 11 சீன மாகாணங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளை ஒன்று திரட்டி, அமைதி இன்மைக்கான காரணங்களை ஆட்சியாளர்களுக்கு கூறி அவர்களை உஷார் படுத்துவதும் அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை வரைவதும் அதன் குறிப்பிட்ட நோக்கம் ஆகும்.

அதிருப்தியாளர் அமைப்பான மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான ஹாங்காங் மையத்தின்படி, கடந்த ஆண்டு சீனாவில் 1,20,000 க்கும் மேலான தனித்தனி ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் நடைபெற்றன. மிகவும் எழுதப்பட்டவைகளுள் அரசுக்கு சொந்தமான கதவடைப்பு செய்யப்பட்ட தொழிற்சாலைகளில் நஷ்டஈடு இன்மைக்கு எதிரானது மற்றும் மேலதிக வரி மட்டங்களுக்கு விவசாயிகளின் எதிர்ப்பு ஆகியன சம்பந்தப்பட்டுள்ளன.

அரசின் ஆலோசனைக் குழு ஆர்ப்பாட்டங்கள் பலவற்றைப்பற்றி தமது சொந்த மதிப்பீட்டைத் தரவில்லை, மாறாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட குறிப்பு கூறுகிறது: "அண்மைய வருடங்களில், மோசமாகக் கையாளுதல் மற்றும் பல காரணங்களால், சில பகுதிகளில் குழு சம்பவங்கள் மற்றும் அவற்றின் அளவு விரிவடைந்துள்ளன, அடிக்கடி ஆயிரத்துக்கும் அல்லது பத்தாயிரத்துக்கும் அதிகமான ஆட்கள் சம்பந்தப்பட்டு வருகின்றனர்...."

"ஆர்ப்பாட்டக்காரர்கள் அடிக்கடி பாலங்களை மூடுகின்றனர், சாலைகளை அடைக்கின்றனர், கட்சி மற்றும் அரசாங்க அலுவலகங்களை தாக்குகின்றனர், கட்சிக் கமிட்டிகளையும் அரசாங்கத்தையும் பலவந்தமாகத் தடுக்கின்றனர் மற்றும் அங்கு சரீர ரீதியான தாக்குதல், உதைத்தல், சூறையாடுதல் மற்றும் தீவைத்தல் போன்ற குற்றச் சம்பவங்களும் நடக்கின்றன"

சீனாவின் கிராமப்புறங்களில், அறிக்கை எடுத்துக்காட்டாக மேற்கோள் காட்டியவாறு, ஒரு சம்பவத்தில் இரு அதிகாரிகள் கொல்லப்பட்டனர், இன்னொரு சம்பவத்தில் எட்டு போலீசார் காயமடைந்தனர் மற்றும் ஒரு சம்பவத்தில் வரி வசூலிக்கும் அதிகாரியின் காது விரக்தி அடைந்த விவசாயியால் வெட்டப்பட்டது.

டைம்ஸின் படி, ஆர்ப்பாட்டங்கள் இப்பொழுது "விவசாயிகளிடமிருந்தும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களிடமிருந்தும் இன்னும் வேலையில் இருக்கும் தொழிலாளர்கள், தனிப்பட்ட வர்த்தக உடைமையாளர்கள், பணி ஓய்வு பெற்ற படைவீரர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளடங்கலாக அனைவருக்கும் பரவி உள்ளது. அது அரசாங்கம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்துவங்கள்" அதிகாரிகளுக்கும் பொது மக்களுக்கும் இடையில் தூண்டிவிடப்படும் மோதல்களுக்கு பிரதான மின் தடை" ஆக இருக்கின்றனர் என குற்றம் சாட்டுகின்றது.

இருப்பினும், அறிக்கையின் முடிவு, அமைதி இன்மையின் பிரதான காரணம் ஊழல் அல்ல என்கிறது கம்யூனிஸ்ட் கட்சி, அதை அப்படியே பார்த்தால், செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் பெருகிவரும் இடைவெளியாகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முதலாளித்துவ சந்தையை உத்தியோகப்பூர்வமாகத் தழுவி, மற்றும் வெளிநாட்டு மூலதனங்களுக்கு நாட்டைத் திறந்து விட்டு 22 வருடங்களுக்குப் பின்னர், சமத்துவமின்மை "அபாய மட்டத்தை" அடைந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.

சீனா, உலக வர்த்தக அமைப்புக்குள் (WTO) செல்வதும் மேலும் பொருளாதாரத்தைத் திறந்து விடுவதும் சமூக துருவமுனைப்படுத்தலை அகலப்படுத்தலாம் என அது எச்சரிக்கின்றது. "நமது நாடு உலக வர்த்தக அமைப்புக்குள் நுழைவது அதிகரிக்கும் ஆபத்துக்களையும் அழுத்தங்களையும் கொண்டு வரலாம், மற்றும் அது பின்வரும் காலகட்டத்தில் பல குழுச் சம்பவங்கள் திடீரென எழும்பலாம், சமூக ஸ்திரத்தன்மையை கடுமையாகப் பாதிக்கலாம் மற்றும் சீர்திருத்தங்களை மெதுவாக நடைமுறைப்படுத்துவதையும் அதற்கு திறந்து விடுவதையும் கூட இடையூறு செய்யலாம் என்று அதனைக் கணிப்பிட முடியும்."

அறிக்கையானது, முதலாளித்துவ சந்தை உறவுகளின் அபிவிருத்தியால் தோற்றுவிக்கப்பட்ட பதட்டங்கள் மற்றும் அதிகரித்துவரும் சமத்துவமின்மையின் அரசியல் விளைவுகள் மீது கம்யூனிஸ்ட் கட்சி தலைமையின் உயர்மட்டம் அதிகம் எச்சரிக்கை கொண்டிருப்பதை எதிரொலிக்கிறது. வரிசையான மற்றைய விவரங்கள் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான, அறிக்கையால் சுட்டிக்காட்டப்பட்ட, இடைவெளியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

பெய்ஜிங் கொள்கைகளைப் பற்றி விமர்சிக்கும் சீனப் பொருளாதார விமர்சகர் ஹெ குங்லியான், சமத்துவமின்மை பற்றிய கினி அளவீட்டால் சீனா தரப்படுத்தப்பட்டமையை --0 வை முற்று முழுதான சமத்துவமாகக் கொண்டு 1 என்பதை முற்று முழுதான சமத்துவமின்மையாகக் கொண்டு அளவிடப்பட்ட அளவை வைத்து மதிப்பீடு செய்கிறார்-- அது 1978ல் 0.15 லிருந்து 1999ல் உலகின் மிகக்குறைவானதாக 0.59 ஆக அதிகரித்துள்ளது, சீனாவை பூமியில் சமமற்ற நாடுகள் மத்தியில் மிகவும் சமமற்றதாக ஆக்கியுள்ளது.

பரந்த பெரும்பான்மையான மக்கள் --ஒரு கோடி மக்களுக்கும் மேலானோர்-- எப்படியோ உயிர்வாழ்வதற்கு வழிவகை தேடுபவராக இருக்கின்றனர். அன்குய், ஜியாங்க்சி, ஹூனான், ஹூப்பே மற்றும் சிச்சுவான் போன்ற கிராமப்புற மாகாணங்களில்,1980 களில் நிலம் தனியார் குத்தகைக்கு அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் விவசாயிகள் சமூக எழுச்சிகளில் தள்ளப்பட்டார்கள். சிறிய துண்டு நிலத்தை மட்டும் குத்தகைக்கு கொடுக்க முடிந்த எண்ணற்ற விவசாய குடும்பங்கள், ஆண்டிற்கு 250 அமெரிக்க டொலர்களுக்கும் குறைவாகவே ஈட்டினர், அதிலும் பட்டியலிட்டு உத்தியோகபூர்வ வரிகளுக்கு செலுத்தவேண்டி இருந்தது.

இலட்சக்கணக்கான விவசாயிகள் நிலத்தைவிட்டு விடுமாறு நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி, இப்பொழுது பணக்கார விவசாயிகளுக்கு அல்லது கிராமப்புற தொழிற்சாலைகளில் கைவிடப்பட்ட கூலித் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். குறைந்த பட்சம் பத்து கோடி இளைஞர்கள் கிராமப்புற சீனாவில், இப்படி நகர்ப்புற மையங்களுக்காக கிராமப்புறங்களை கைவிட்டுள்ளனர், அங்கு வருமானம் 2.65 மடங்கு அதிகமாகும்.

பலர் வேலை பெற்றிருக்கும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில், தொழிலாளர்கள் மாதம் 30 டொலர்கள் முதல் 80 டொலர்கள் வரையிலான அளவுகளில் கூலி பெறுகின்றனர் மற்றும் மோசமான சூழ்நிலைமைகளில் அதிக நேரம் உழைக்கின்றனர். 1999ல் குவாங்டாங் மாகாணத்தில் மட்டும் 36,990 தொழிற் தகராறுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தேசிய மொத்தத்தில் 33 சதவீதமாகும் மற்றும் கடந்த ஆண்டை விட 28 சதவீதம் அதிகமாகும். கிராமப்புற புலம் பெயர்வோர் கிழக்குக் கடற்கரை மாகாணங்களுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக நகர்கையில், பழைய தொழில் துறைகளைக் கொண்ட வடகிழக்கு மாகாணங்களில் வேலை இன்மை, ஆயிரக்கணக்கான அரசுடைமை நிறுவனங்கள் மூடப்பட்டதன் காரணமாக 15 லிருந்து 20 சதவீதத்துக்கு இடையில் உள்ளது.

கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

மக்களின் ஏழ்மைக்கு ஒப்பீட்டு அடிப்படையில், மாறுபட்டதாக இப்போது அங்கு 1000 பேர் "நூறு கோடிகள் உடையவர்களாக" (பில்லியனர்களாக), தனிப்பட்ட சொத்தே நூறு கோடி யுவான்கள் அல்லது 12 கோடி அமெரிக்க டொலர்களுக்கு மேல் கொண்டிருப்பதாக மே 31 எக்கனாமிஸ்ட் பதிப்பால் மேற்கோள் காட்டப்பட்ட சீன தகவல்கள் கூறுகின்றன. அங்கு 1,20,000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் மதிப்புடைய சொத்துக்களை உடைய 30 லட்சம் "மில்லியனர்கள்" கூட இருக்கின்றனர். சீனாவின் மிகப் பணக்காரரும் வங்கியாளரும் மற்றும் "சிவப்பு முதலாளி" எனப்படுபவருமான ரோங் யிரன், 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை செல்வமாகக் கொண்டிருக்கிறார்.

அரசாங்க புள்ளி விபரக் கழகத்தால் மார்ச்சில் வெளியிடப்பட்ட ஆய்வின் படி, நகர்ப்புற சராசரி தலைவீத ஆண்டு வருமானம் 760 அமெரிக்க டொலர்களாக இருக்கையில், பிரதானமாக வர்த்தகர்கள், மேலாளர்கள் மற்றும் ஊகவணிகர்கள் இவர்களைக் கொண்ட --ஒரு சதவீதத்துக்கும் குறைவான மெல்லிய நகர்ப்புறத் தட்டினர்-- ஆண்டுக்கு 1,20,000 டொலர்களுக்கு மேல் சம்பாதிக்கின்றனர். மூன்று சதவீத நகர்ப்புறவாசிகள் 60,000 டொலர்களுக்கு மேல் சம்பாதிக்கின்றனர். பத்து சதவீதத்தினர் 3,600 டொலர்கள் சம்பாதிக்கின்றனர், இது சராசரி அளவில் 4.5 மடங்கு ஆகும்.

64.5 லட்சம் கட்சி உறுப்பினர்கள் சலுகைமிக்க பத்து சதவீதத்திலிருந்து அபரிமிதமான அளவு பெறப்பட்டவர்கள் என்ற உண்மை கம்யூனிஸ்ட் கட்சிமேல் குரோதத்தைத் தூண்டி விடுகின்றது. உதாரணமாக ஷாங்காயில் 50% க்கும் அதிகமான கட்சி உறுப்பினர்கள் வர்த்தகர்கள் ஆவர். அண்மைய ஆய்வு ஒன்று, மூன்றில் ஒரு பங்கு பல்கலைக்கழக மாணவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர மனுச் செய்துள்ளனர் என்கிறது --இதன் நோக்கம் வர்த்தகத் தொடர்பைப் பெறுவதற்காக எனச் சந்தேகிக்கப்படுகிறது.

மத்திய குழு அமைப்புத் துறை அறிக்கையின் பிரதான பரிந்துரையில், மார்ச்சில் தேசிய மக்கள் காங்கிரஸில் பிரதமர் ழு ரோங்ஜியால் சுருக்கமாகக் குறிப்பிடப்பட்ட, ஏழைகளுக்கான வரிசையான பொருளாதார மற்றும் அரசியல் சலுகைகள் அவசரமாக நடைமுறைப்படுத்தப் படுவதற்கானதாகும். கிராமப்புற வரிகளைக் குறைத்தல், கதவடைப்பு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு வேலையில்லாமைக்கான சலுகைகளை அளித்தல் மற்றும் உத்தியோக ரீதியான ஊழல்களைக் களை எடுத்தல் ஆகியன இவற்றுள் உள்ளடங்குவன.

இந்த மட்டுப்படுத்தப்பட்ட கொள்கைகளைக் கூட நிறைவேற்றுவதற்கு விருப்பமில்லாதிருக்கிறது. அறிக்கை வெளியிடப்பட்ட பின், ஜூலை 8ல் வட்டார வரிவசூல் கட்டணத்தை பதிலீடு செய்த ஒரே தேசிய வரி நாடு முழுவதும் விஸ்தரிக்கப்பட முடியாது என ரோங்ஜி அறிவித்தார். அன்குய் மாகாணத்தில் கடந்த ஆண்டு சோதனைத்திட்டமாக செயல்படுத்தப்பட்டது, விவசாயிகள் வரி செலுத்துகையை கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அளவில் குறைத்தது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், வருவாய் இழப்பு வட்டார அரசாங்கங்களை கல்வி மற்றும் ஏனைய சமூகப்பணிகளுக்கு செலவழிக்கமுடியாமல் செய்யும் என ரோங்ஜி அறிவித்தார். வேறு வார்த்தைகளில் சொன்னால், கிராமப்புற வரிச்சுமையைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனலாம்.

நகர்ப்புற தொழிலாளர்களுக்கான வேலையின்மைக்கான சலுகைகளை விரிவுபடுத்துவதை பெருமளவுக்கு வெட்ட இருப்பதாகவும் கூட பிரதமர் அறிவித்தார். வடகிழக்கு மாகாணமான லயோனிங்கில் பல நகரங்களில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மாதத்துக்கு 22 டொலர்கள் சலுகைத் திட்டம், சமூகப் பதட்டங்களை குறைப்பதாக வரவேற்கப்பட்டது. முன்னர் பெய்ஜிங் இத்திட்டத்தை ஒவ்வொரு மாகாணத்திலும் பிரதான நகரங்களுக்கு விஸ்தரிக்கப் போவதாக முன்மொழிந்தது, ஆனால் அது இப்பொழுது ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு நகரில் மட்டும் செயல்படுத்தப்படுகிறது. அரசாங்கத்தின் மிகக் குறைவாகக் கணிக்கப்பட்ட, சொந்த மதிப்பீடான உத்தியோக ரீதியான வேலை இன்மை, இந்த ஆண்டு குறைந்த பட்சம் 19 லட்சம் அளவில் அதிகரித்து 85 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களாக ஆகும்.

அறிக்கையின் மற்ற பரிந்துரைகளில் ஒன்று மார்க்சிசத்தை பின்பற்றுதற்கான வலுவான கட்சிப் பிரச்சாரத்தை தொடர்தலாகும். வெளித் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிடும்போது, அம் முன்மொழிவு முட்டாள்தனமானதாகும் --1920 களில் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிசத்துடன் முறித்துக் கொண்டது, இன்று அது நாட்டின் செல்வந்தத்தட்டுக்கு அரசியல் வாகனம் ஆகும். ஆனால் இத்தகைய பரிந்துரைகள் ஆளும் தட்டின் தனிமைப்படலை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன-- மாவோவாலும் அவரது விவசாயப் படையாலும் தலைமை தாங்கப்பட்ட 1949 புரட்சியை பிரதிநிதித்துவப்படுத்துதற்கு என்றுமில்லா அளவு மெலிதாய் உரிமை கோரல்தான் மக்கள் மீதான அதன் ஒரே அரசியல் பிடிமானம் ஆகும்.

1989 ஜூனில் தியனென்மன் சதுக்கப் படுகொலைக்குப் பின்னர் அதிகமான வெடிக்கும் சூழ்நிலை பலவழிகளில் இருக்கிறது. அதிருப்தி நகர்ப்புறத் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் மட்டும் பரவவில்லை, மாறாக ஆட்சியானது அதன் பிரதான ஆதாரமாகக் கொண்டுள்ள, இராணுவத்திற்கு பெரும்மான்மையான ஆட்களை எடுத்த, கிராமப்புற பகுதியிலும் பரவி வருகிறது. சீனத் தலைமையானது, அதன் கொள்கைகள் இன்னொரு மக்கள் கொந்தளிப்புக்கு தயார் செய்கின்றன என்ற வாய்ப்பு வளத்தால் பீதிக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved