World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா:கனடா

Canadian immigration officials falsified documents to bar refugees

கனேடிய குடி வரவு அதிகாரிகள் அகதிகளைத் தடுப்பதற்கு பத்திரங்களைப் பொய்மைப்படுத்தல்

By François Legras
22 June 2001

Use this version to print

கனேடிய குடி வரவு ஏஜண்டுகளது நடத்தை பற்றிய இரகசிய ஆய்வு பற்றி அண்மையில் வெளியிடப்பட்ட குறிப்புக்கள், அரசாங்க அதிகாரிகள் மனுதாரரை அகதிகள் அந்தஸ்தினை இழக்கச்செய்ய பத்திரங்களைப் பொய்மைப்படுத்தி உள்ளதைக் காட்டுகின்றன.

இந்த வெளிப்படுத்தலும் இதேபோன்ற ஏனையவைகளும் பனிப்பாறையின் மேலோட்டமாகத் தெரிகின்ற நுனிப்பகுதிதான். "குடிவரவு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிலர் மறுபுறம் உள்ள மக்கள் நாட்டுக்கு உள்ளே நுழைவதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என நினைக்கின்றனர்; அந்தப் புள்ளியிலிருந்து, அகதிகளை நாட்டுக்கு வெளியே வைத்திருக்க தங்கள் சக்திக்கு முடிந்த ஒவ்வொன்றையும் செய்வது அவர்களைப் பொருத்தவரை சரி என்று கருதுகிறார்கள் மற்றும் தங்களது நடவடிக்கைகளில் எந்த மட்டுப்பாட்டையும் நடைமுறைப்படுத்துவதில்லை" என கனேடிய அகதிகள் சபையின் முந்தைய தலைவர், குடிவரவு வழக்கறிஞர் டேவிட் மதாஸ் எச்சரிக்கிறார்.

அகதியாக உரிமை கோரும் திரு. கோவனை, கனேடிய பாதுகாப்பு புலனாய்வுத்துறை (CSIS) "குர்திஸ் பயங்கரவாதி" என குற்றம் சாட்டியதுடன், கனேடிய குடிவரவு ஏஜண்டுகள், அவரது அகதிக்கான அந்தஸ்தை இழக்கப் பண்ண பத்திரங்களை பொய்மைப்படுத்தி உள்ளனர். அதன் பின் கனடிய பாதுகாப்பு புலனாய்வுத்துறை கோவனை குர்திஸ் மக்கள் கட்சியின் போராளி அல்ல என ஏற்றுக் கொண்டுள்ளது. குர்திஸ் மக்கள் கட்சியானது, துருக்கி அதன் சிறுபான்மை குர்திஸ் மக்களுக்கு எதிராக காட்டும் படிப்படியான பாரபட்சங்களை சவால் செய்கின்ற முதலாளித்துவ தேசியவாத இயக்கமாகும்.

எட்டு மணி நேரம் நீடித்த விசாரணையின் பொழுது கோவன் CSIS ஏஜண்டுகளால் முரட்டுத்தனமாக நடத்தப்பட்டதுடன் அச்சுறுத்தப்பட்டார். இதனால் அதிர்ச்சியும் கோபமும் அடைந்த கோவன், CSIS நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் அரசின் அங்கமான கனேடிய பாதுகாப்பு புலனாய்வு மீளாய்வு குழுவிடம் புகார் செய்துள்ளார்.

கோவனை மதிப்பிழக்கச் செய்யும் முகமாக, கனேடிய குடி வரவு அதிகாரிகள் CSIS ஏஜண்டுகளை கோவன் சந்திக்கும்படி ஆணையிட்டு அனுப்பப்பட்டது போன்ற போலி கடித நகல் ஒன்றை மீளாய்வு குழுவிடம் சமர்ப்பித்துள்ளனர். இந்தப் போலி ஆணை கோவனின் விசாரணையை ஆரம்பிப்பதற்காக பின்னர் கொடுக்கப்பட்டது. இவ்வாறு அவர் அதனைப்பற்றி பொய் கூறுவதாக கருத்துரைக்கிறது. அது அவர் வசித்த முகவரியிலிருந்து வேறுபட்ட முகவரியையும் கூட வழங்கியது.

"இந்த திருத்தல்கள் கோவனின் நம்பகத்தன்மையை அழிக்க நோக்கங் கொண்டவையாக இருந்தன", என்று அவரது முன்னாள் வழக்குரைஞர் ஷரின் அய்க்கன் குறிப்பிட்டார்.

குடிவரவு துறை மற்றும் நடுவண் அரசின் குடிவரவு அமைச்சர் எலினோர் கப்ளானுக்கு பேசச்சாளரான டெரக் ஹோட்க்சன், பத்திரமானது குடிவரவு துறையின் கணனியிலிருந்து வந்ததை --:"குடிவரவு துறை போலிப்பத்திரங்களைச் செய்யாது, இரகசிய செய்திகளை திறக்கும் அல்லது கண்ணுக்குத் தெரியாத மையை வெளிப்படுத்தும் பொறிகளைப் பயன்படுத்தாது"-- என அவர் ஏற்றுக் கொண்டபோதிலும், அரசாங்கத்தின் தரப்பிலோ அல்லது அரசாங்க அதிகாரிகளின் தரப்பிலோ எந்த தவறும் செய்யப்படவில்லை என வலியுறுத்தினார்.

ஹோட்க்சன் குடிவரவு துறையின் கணினி பயன்படுத்தும் மென்பொருள் போலி ஆணையை தயாரித்துவிட்டது என்று முழு சம்பவத்திற்கும் கணனி தொழிற்பாட்டுக் கோளாறை குற்றம் சாட்டினார்.

இந்த விளக்கம் முன்னாள் மீளாய்வுக் குழு தலைவரும் முன்னாள் ஒட்டோரியோ முதல்வருமான போப் ரேயால் நிராகரிக்கப்பட்டது." கணினி மனித ஆணைகளுக்கு பதிலளிக்கிறது. யாரோ இந்தப் பத்திரத்தை தயாரிக்குமாறு கணினியைக் கையாண்டிருக்கின்றனர்-- அதாவது, அது போலியானதைத் தயாரிக்குமாறு செய்துள்ளனர்".

"இந்த பத்திரத்தை அவர்கள் பொய்யாக உருவாக்கியிருந்தால், ஏனைய பலர் எத்தனைபேர் பொய்மைப்படுத்தப்பட்டிருப்பரோ கடவுளே அறிவார்" எனக் கூறிய கோவன் உண்மையில் அத்தகைய அரச அடக்குமுறையிலிருந்து தப்பவே கனடாவுக்கு பறந்தார்.

நாட்டிலிருந்து வெளியேற்றும் வகையில் பத்திரங்களைத் திருத்தி அல்லது திருடி மோசடி செய்தல் மற்றும் தங்களது அதிகாரங்களை குடிவரவு அதிகாரிகள் துஷ்பிரயோகம் செய்த மற்றும் பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. கடந்த ஆண்டு இரு மூத்த குடிவரவு அதிகாரிகள் 1990க்குப் பின்னர் திருப்பத்திரும்ப பத்திரங்களை மோசடி செய்து குற்றம் இழைத்ததாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். குளோப் அண்ட் மெயில் படி, 1996ல் டொரண்ட்டோவை தளமாகக் கொண்ட இனனும் இரு குடிவரவு ஏஜண்டுகள், சைபீரியாவிலிருந்து வந்து புகலிடம் கோரிய ஒருவரை திருப்பி அனுப்பும் வகையில் பத்திரங்களைப் பொய்மைப்படுத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளனர். 1995ல் வின்னிபெக்கில் உள்ள கனடிய குடிவரவு மையத்தின் தலைவர், திருப்பி அனுப்பப்பட்ட ஒருவரின் உத்தியோக ரீதியான பயணப் பத்திரங்களில் அவரது கையொப்பத்தை, தான் இரு முறை திருத்தியதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

கோவனின் சம்பவம், குடிவரவு வழக்கறிஞர்கள் மற்றும் அகதிகள் உரிமைகளுக்கான இயக்கம் ஆகியன குடிவரவு அதிகாரிகள்பால் கூடுதல் கவனத்தைச் செலுத்துவதற்கான அழைப்புக்களைப் புதுப்பித்துள்ளது. அகதிகளுக்கான கனேடிய சபையின் தலைவர் ஜோனட் டெஞ்ச், "அவர்கள் என்ன செய்யவிரும்புகிறார்களோ அதைச் செய்கிறார்கள்" என குற்றம் சுமத்தினார். அவரது அமைப்பு குடிவரவுத் துறை, குடிவரவு அதிகாரிகளால் ஆன சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் தொடர்பான புகார்களை விசாரிக்க கடப்பாடுடைய சுதந்திரமான அலுவலகம் ஒன்றைத் திறக்குமாறு மனுச் செய்துள்ளது.

முக்கியமாக, கார்ப்பொரேட் பத்திரிக்கை தொடர்பு சாதனங்கள் கனேடிய குடிவரவு அதிகாரிகளால் செய்யப்படும் தவறுகள் பற்றிய வெளிப்பாடுகளை கிட்டத்தட்ட முழுமையாகவே புறக்கணித்துள்ளன. மாறாக, அவை "உண்மையான" அரசியல் ஒடுக்கு முறைக்கு தப்பி ஓடுபவர்களுக்கும் கொடிய வறுமையிலிருந்து தப்ப முயற்சிப்பவர்களுக்கும் இடையிலான போலியான வேறுபடுத்தலின் அடிப்படையில், நாடு "போலி" அகதிகளால் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது என்று கருத்துரைக்கும் செய்திகளை தொடர்ச்சியாக கடைந்தெடுக்கின்றன.

புகலிடம் கோருதற்கான உரிமையின் சாரத்தை அகற்றல்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கைவிடப்பட்ட கப்பலிலிருந்து விவரிக்க முடியாத சூழ்நிலைமைகளில் பல நாற்றுக்கணக்கான சீன புலம்பெயர்ந்தோர் பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப கால "மஞ்சள் இனத்தவர் ஆதிக்க அபாயம்" பற்றிய பழஞ் செய்திப் பீதியின் மிகை உணர்ச்சிக் கோளாறுப் பிரச்சாரத்தை பத்திரிக்கைகள் முன்னெடுத்தன. மைய தாராண்மைவாத அரசாங்கம் முன் என்றும் இல்லாத அளவில், குழந்தைகள் உட்பட அனைத்து சீனர்களையும் சிறையில் அடைத்ததுடன் அவர்களது அகதியாய் தஞ்சம் கோரலை கிடப்பில் வைத்து பதிலிறுத்தது. பெரும்பான்மையான செய்தி ஸ்தாபனங்களைப் பொறுத்தவரை இது போதுமானதாக இல்லை. வெள்ளம் போல் ஆசிரியத் தலையங்கங்களும் கருத்துக் குறிப்புக்களும் சீனர்கள் உடனடியாகத் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்றன. இறுதியில், ஒரு சிலரைத்தவிர அனைவரும் சீனாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

நாஷனல் போஸ்ட்டிலிருந்து முன்மாதிரியை எடுத்துக் கொண்டு, கனேடிய அலையன்ஸ் தாராண்மைவாதிகளைத் திரும்பத்திரும்ப பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக குற்றம் சாட்டியது. ஏனெனில், நிதி அமைச்சர் பால் மார்ட்டின் இலங்கைத் தமிழர்களின் கலாச்சார அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட விழா ஒன்றில் கலந்து கொண்டார். அது பொதுவாக நிலவும் கருத்தின்படி எல்.டி.டி.இ உடன் (சிறிலங்காவில் உள்ள தமிழ் பிரிவினைவாத இயக்கம்) தொடர்புடையதாகும். நாஷனல் போஸ்ட்டும் கனேடிய அலையன்ஸூம் சிறிலங்கா அரசால் தமிழ் சிறுபான்மையினர் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்படல் பற்றி ஒரு போதும் குறிப்பிடுவதில்லை என்பதை சொல்லத் தேவையில்லை. அவ்வொடுக்குமுறையின் விளைவாக லட்சக்கணக்கான தமிழர்கள் கனடாவுக்கு சென்றனர்.

இப்பிரச்சாரத்துக்கு பதிலளிக்கும் விதமாக, தாராண்மைவாதிகள் இன்னும் வலது புறத்திற்கு விரைந்து ஓடினர். இம்மாத ஆரம்பத்தில், பொதுமக்கள் சபை புதிய குடிவரவு சட்டம், மசோதா C -11 ஐ நிறைவேற்றினர். அது 1999ன் சீன புலம்பெயர்ந்தோருடன் பொருந்துகின்ற வகையிலான நடைமுறைகளை ஏற்படுத்துவதாகும். --அதாவது, சிறையிடல் ஆகும்-- சட்ட விரோத முறையில் கனடாவிற்குள் நுழையும் எவருக்குமான கட்டளை உரிமை ஆகும். இதன் மூலம் "ஒத்துழைக்காதவர்கள்" அல்லது முறையான பயணப் பத்திரங்கள் இல்லாதவர்கள் கூட காவலில் வைக்கப்பட முடியும்.

அரசியல் துஸ்பிரயோகத்திற்கு கீழ்ப்படுத்தப்படுபவர்களுக்கான அகதிகள் முறையைப் பேணல் என்ற அடிப்படையில் இந்நடவடிக்கைகளை அரசாங்கம் நியாயப்படுத்தும் அதேவேளை, அது உண்மையில் அகதிகள் என்ற வரையறையை எல்லைக்குட்படுத்துவதை நோக்கி அதிகரித்தளவில் நகர்கிறது, மிகவும் ஆபத்தில் உள்ளவர்களுக்கு புகலிடம் அளிப்பதை மறுக்கும் உரிமையை தானே வழங்கிக்கொள்கிறது.

C-11 மசோதாவின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் சிறைத்தண்டனையை பெறும் எவரும் அகதிகளுக்கான அந்தஸ்திற்கு மனுச்செய்வதிலிருந்து தடை செய்யப்படுவர் மற்றும் அகதிகளுக்கான அந்தஸ்தினைப் பெற நடுவண் நீதிமன்ற நீதிபதிக்கு மனுச்செய்யுமாறு நிர்பந்திக்கப்படுவர். அகதி உரிமை கோருகிறவர்களின் விசாரணைகளுடன் நீதிமன்றங்கள் ஒத்துப்போகும் என்பதற்கு சட்ட மசோதா கூட உத்தரவாதம் தராது.

குடிவரவு அமைச்சர் எலினார் கேப்ளன், சர்வாதிகார ஆட்சியை எதிர்த்ததற்காக சிறையிடப்பட்டவர்கள் மற்றும்/ அல்லது ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டவர்கள் அகதிகளாக உரிமைகோர மறுக்கப்பட முடியும் என்பதை ஒப்புக் கொண்டார். புகலிடம் கோருதற்கான உரிமைக்கு எதிரான இனவாத எதிராளிகள் மற்றும் வலதுசாரியினருக்கு வேண்டுகோள் விடுத்து தெளிவாக வடிவமைக்கபட்ட அறிக்கையில், ஆம் என்று கேப்ளான் கூறினார், எதிர்கால "நெல்சன் மண்டேலா" புதிய சட்டங்களின்படி முறைதவறியவராக ஆகலாம், ஆனால் கனேடியர்கள் நீதிமன்றங்களில் மற்றும் அல்லது அமைச்சர் சரியானதைச் செய்வதில் நம்பிக்கை வைக்க வேண்டும்." நாங்கள் அடைக்க விரும்பும் கதவு, படு குற்றவாளிகளுக்கு, படு பயங்கரவாதிகளுக்கு கனடாவுக்கு ஆபத்தை விளைவிப்பவர்களுக்கான கொல்லைப்புறக் கதவாகும்..."

பயங்கரவாதத்துடன் தொடர்புடையவராக CSIS குற்றம் சாடுபவர்களிடமிருந்து அறவழியில் உதவி பெறும் தகுதியை நீக்க தாராண்மைவாதிகள் கூட சட்டத்தை வைத்துள்ளார்கள்.

குடிவரவுத் துறை ஏஜண்டுகளது படுதவறான நடத்தைகளை மூடி மறைக்கும் அதேவேளை, தாராண்மைவாதிகள் துஷ்பிரயோகம் செய்வதையும் குற்றங்களையும் எதிர்த்துப் போராடல் என்ற பெயரில், அகதியாய் உரிமை கோருவதுடன் தொடர்புடைய மிகவும் அடிப்படையான பாதுகாப்பின் சாரத்தை அகற்றுகின்றனர்.