WSWS: செய்திகள்
& ஆய்வுகள் :மார்க்கிச
அரசியல் பொருளாதாரம்
Further correspondence on socialism and human nature
சோசலிசம் மற்றும்
மனித இயல்பு பற்றிய மேலும் கடிதப்பரிமாற்றம்
22 June 2001
Use
this version to print
அன்புள்ள ஆசிரியருக்கு,
"சோசலிசம் மற்றும் மனித இயல்பு பற்றிய
கருத்துப் பரிமாற்றம்" (http://www.wsws.org/articles/2001/may2001/corr-m01.shtml),
தலையங்கத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாகத் தெரியவில்லை,
பதிலால் நான் ஏமாற்றம் அடைந்தேன். சோசலிசம்
போவதைப் பொறுத்தவரை, என்னைப் பொறுத்தவரை, பெரிதும்
உங்களது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிறேன். அது மனித இயல்பின்பாற்பட்டது
என்பதில் உங்களது நிலைப்பாட்டில் குறைபாடு இருப்பதைக்
காண்கிறேன். புராதனப் பொதுவுடைமைக்குப் பின்னர், மனித
நடவடிக்கையின் அதிகரித்த விதத்தில் சோசலிச மயமாக்கலை கணக்கில்
எடுத்துக்கொள்ளும் சமூக அமைப்பின் தேர்வே சோசலிசம் ஆகும்.
சொத்துடைமை தேவையா தேவை இல்லையா என்பது பற்றிய
புகழ் பெற்ற மனிதர்களின் சிந்தனைகளைப் பற்றி நீங்கள்
நன்றாகவே சொல்லி இருக்கிறீர்கள், ஆனால் மனித இயல்பு பற்றி
நீங்கள் பேசவில்லை.
இந்தப் பிரச்சினையை அணுகுகின்ற ஒரே பந்தி
ரூசோ தொடர்பானதில் இருக்கிறது. இயற்கையிலேயே சொத்துடைமைக்கான
உரிமை இல்லை; பின்னர் சமத்துவமின்மை, குற்றங்கள், யுத்தம் மற்றும்
படுகொலை இவற்றின் அடி மூலத்தில் தனிச்சொத்துடைமை இருக்கிறது
என்ற கருத்துக்கு முன் செல்கிறீர்கள். துல்லியமாக இதற்கு ஒருவர்
விடை அளித்தாக வேண்டும். சொத்துடைமை அற்ற நிலையிலிருந்து
அதனை சுவீகரித்துக் கொண்ட நிலைக்கு மாற்றம், மற்றும் அதன்
காரணமாக சொத்துடைமையைப் பேணுவதற்காக சமூகம் ஏற்படுத்தப்பட்டது
மனித இயல்பின் விளைவாகவா அல்லது இல்லையா? தனது பொம்மையைப்
பாதுகாக்கும் ஒரு சிறு குழந்தையைப் பார்க்கும் பொழுது
நான் வியப்படைந்தேன். "தனது" சொந்தமானதை நண்பனுக்கு
(பிறருக்கு) கொடுக்க மறுக்கும் அக்குழந்தை நண்பனது (பிறரது)
உடைமைகளைப் பற்றிக் கொள்ள விரும்பும்பொழுது இன்னும்
அதிகம் வியப்படைகிறேன்.
அன்புடன்,
RP
அன்புள்ள RP
சோசலிசம் மற்றும் மனித இயல்பு பற்றிய உங்களது
மின் மடல், இந்த முக்கியமான பிரச்சினையில் மேலும் செல்வதற்கு
வாய்ப்பு அளித்தமைக்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உற்பத்திச் சாதனங்களின் முதலாளித்துவ சொத்துடமை
மற்றும் "சுதந்திர சந்தை" இவற்றுக்கு வக்காலத்து
வாங்குபவர்களின் வாதம், சோசலிசம் என்பது "இயற்கைக்கு
முரணானது", ஆகையால் தோல்வி அடையும், ஏனெனில் ஒவ்வொரு
மனித உயிர்களிடமும் உள்ள பிரத்தியேக சொத்துடைமையை நோக்கிய
உள்ளார்ந்த இயக்கத்தை அது மீறுகிறது என்பதாகும். குழந்தைகள்
மற்றும் அவர்களது பொம்மைகள் பற்றிய உங்களது உதாரணத்துக்கு
நான் திரும்பி வருவேன். அது நீங்கள் இந்த திக்கில் சாய்வதை அல்லது
குறைந்தபட்சம் இந்தக் கருத்தால் செல்வாக்கு செலுத்தப்பட்டுள்ளதை
சுட்டிக் காட்டுகிறது.
மூலதனத்தின் முதல் அத்தியாயத்தில், "பண்டங்களின்
வழிபடல்" (Fetishism of
commodities) பற்றிய அவரது ஆய்வில்,
மார்க்ஸ், சமுதாயத்தைப் புரிந்துகொள்வதில் நாம் எதிர்கொள்ளுகின்ற
பெரும் சிக்கல்களுள் ஒன்று நாம் அதனை ஆய்வு செய்யும்
முன்னரே அது ஏற்கனவே கணிசமான அபிவிருத்திக்குள் சென்றுவிட்டது
என்பதுதான் என விளக்குகின்றார்.
"சமூக வாழ்வின் வடிவங்கள் மீதான மனிதனின்
எதிரொலிப்புக்கள் மற்றும் அதன்விளைவாக, அந்த வடிவங்கள் பற்றிய
அவனது விஞ்ஞான ஆய்வு கூட, அதன் உண்மையான வரலாற்று அபிவிருத்திக்கு
நேரடியாய் எதிர்ப் பாதையை எடுக்கிறது என அவர் எழுதினார்.
அவனுக்கு முன்னால் தயாராக வைக்கப்பட்டிருக்கும்
அபிவிருத்திகளின் நிகழ்ச்சிப்போக்குகளின் விளைவாக, நிகழ்ச்சிக்குப்
பிந்தையதுடன் அவன் ஆரம்பிக்கின்றான்.
வேறு வார்த்தைகளில் சொன்னால், ஏற்கனவே
கையில் உள்ள வகையினங்கள் மற்றும் வடிவங்கள் பற்றிய சிந்தனையுடன்
தொடங்கும் ஆய்வானது, இந்த வடிவங்களைத் தோற்றுவித்துள்ள
வரலாற்று நிகழ்ச்சிப்போக்குகளின் சூழ்நிலைமைகளின் கீழ் புரியாததாக
இருக்கின்றது. அதனால் இச் சிந்தனை வடிவங்கள் வரலாற்று நிகழ்ச்சிப்
போக்குகளின் விளைபொருளாக புரிந்துகொள்ளப்படவில்லை,
அவை மனிதன் தன்னின் "உள் இயல்பில்" இருந்து எழும் எழுச்சியாகத்
தோற்றம் அளிக்கிறது.
எடுத்துக்காட்டாக, வட்டி பற்றிய பிரச்சினையை
எண்ணிப் பார்ப்போம். அங்கு பணத்தைப் பயன்படுத்துவதன் மீதாக
வசூலிக்கப்படும் வட்டி அல்லது பணம் செலுத்துகையாக இருப்பதை
விட அதிக "இயற்கையானது" எதுவும் தோற்றம் அளிக்கவில்லை.
வேறு விதமாகச் சிந்தித்தால் அது "இயற்கைக்கு முரணானதாக"
கருதப்படும். இருப்பினும் நூற்றுக் கணக்கான வருடங்களாக
அநியாய வட்டி பற்றிய கண்டனங்களும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு
தண்டனைகளும் விதிக்கப்பட்டன.
நிலப்பிரபுத்துவ ஒழுங்கின் முறிவு மற்றும் நெருக்கடியிலிருந்து
முதலாளித்துவத்தின் தோற்றத்தைச் சூழ உள்ள அனைத்துப் பிரச்சினைகளுள்ளும்
போவது அதிக இடத்தையும் அதிக நேரத்தையும் எடுக்கும்.
முக்கிய விஷயங்களைச் சுட்டிக்காட்ட அனுமதிக்கவும்.
"புராதன பொது உடைமை" மறைந்ததன் பின்னர், மனித
சமுதாயம் வர்க்கங்களாகப் பிளவுண்டு போனது. அனைத்து வர்க்க
சமுதாயங்களிலும் உள்ள அடிப்படை சமூக உறவு, மற்றும் அதன்
உள்ளமைப்பியலைப் புரிந்துகொள்ளலுக்கான திறவுகோல், சுரண்டப்படும்
வர்க்கங்களிடமிருந்து ஆளும் வர்க்கங்கள் உபரி உழைப்பைக்
கறந்தெடுக்கும் வழிமுறை ஆகும்.
நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில், உபரி உழைப்பை
சுவீகரித்தல் அரசியல் சாதனங்களூடாக இடம்பெற்றது ---சட்டங்களின்
அமைப்பு, படைகளின் ஆதரவு மற்றும் சேர்ச்சின் (அதுதாமே ஆளும்
வர்க்கத்தின் அங்கம்) பொறுப்பாளரால் வழங்கப்பட்ட
அனுமதி அளிப்பு ஆகியன. விவசாயி அல்லது பண்ணை அடிமை ஒரு குறிப்பிட்ட
அளவு உழைப்பை நேரடியாகவோ மறைமுகமாகவோ உற்பத்தி
வடிவத்தில் நிலப்பிரபுவுக்கு அளிப்பார்.
இருப்பினும், நிலப்பிரபுத்துவ சமுதாயம் நில
உடைமையாளர்களுக்கும் சேர்ச்சுகளுக்கும் தொடரான கடப்பாடுகளுடன்
மட்டும் சம்பந்தம் கொண்டிருக்கவில்லை. சுரண்டப்படும்
வர்க்கங்கள் கூட பயிரிடுவதற்கும் விலங்குகளது மேய்ச்சலுக்கும்
குறிப்பிட்ட பொது நிலங்களைப் பெற்றிருந்தன. மேலும், விவசாயிகள்
அல்லது பண்ணை அடிமைகள் கூட தங்களது உயிர்வாழ்வுக்காய்
உற்பத்திச் சாதனங்களை உடைமையாய்க் கொண்டிருந்தனர்.
முதலாளித்துவ சமுதாயத்தில் உபரி உழைப்பைச்
சுரண்டல் அரசியல் சாதனங்களூடாக இடம் பெறவில்லை
மாறாக, பொருளாதார ரீதியாக இடம் பெற்றது. அதாவது,
நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் விவசாயியை கடப்பாடுடையவனாக
ஆக்கும் எண்ணற்ற சட்டங்கள் இருந்த அதேவேளை, முதலாளித்துவ
சமுதாயத்தில் அத்தகைய சட்டங்கள் இல்லை. ஒரு தொழிலாளி
அவனது அல்லது அவளது உழைப்பை மூலதனத்தின் உடைமையாளருக்கு
விற்க நிர்ப்பந்திக்கும் சட்ட விதிமுறை எதுவும் அங்கு இல்லை.
அவனோ அல்லது அவளோ பொருளாதார தேவையின் அழுத்தத்தினால்
அவ்வாறு செய்யும்படி நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். நிலப்பிரபுத்துவ
சமுதாயத்தில் உள்ள விவசாயி அல்லது சிறு உற்பத்தியாளர் போல்
அல்லாமல், முதலாளித்துவ சமுதாயத்தில் தொழிலாளி உற்பத்திச்
சாதனங்களில் இருந்து முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்
என்ற உண்மையில் இருந்து அந்த நிர்ப்பந்தம் எழுகிறது.
ஆகையால் முதலாளித்துவத்திடமிருந்து நிலப்பிரபுத்துவத்திற்கு
இடையேயான மாற்றத்தில் ஆய்வு செய்யப்பட வேண்டிய முக்கிய
பிரச்சினை எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டது என்பதாகும்.
அதாவது, ---நிலப்பிரபுத்துவ கடப்பாடுகள் மற்றும் உற்பத்திச்
சாதனங்கள் ஆகிய இரண்டிலிருந்தும் சுதந்திரமானவராக--- விற்பதற்கு
தங்களது உழைப்புச் சக்தியைத்தவிர வேறு எதுவும் இல்லாமல்,
எப்படி சுதந்திர கூலி உழைப்பாளர்கள் தோன்றினர் என்பதாகும்.
இந்த மாற்றம் ஏதோ உள்ளார்ந்த மனித இயல்பின்
விளைவு அல்ல, மாறாக சந்தையை அடிப்படையாகக் கொண்ட
சமூக அமைப்பின் புது வடிவங்களின் வெளிப்பாடு என்று வரலாறு காட்டுகிறது.
முதலாளித்துவத்தின் தோற்றம் தனிச்சொத்துடைமையை உடைமையாகக்
கொள்வதற்கான ஏதோ உள்ளார்ந்த இயக்கத்தின் விளைவு
என்று கூறுபவர்கள் ஏன் முதலாளித்துவத்திற்கான மாற்றம் 16ம் நூற்றாண்டிற்கும்
18ம் நூற்றாண்டிற்கும் இடையில் நிகழ்ந்தது என்ற கேள்விக்கு
ஒருபோதும் விடை அளிக்க முடியவில்லை. அது எல்லாம் மனித
இயல்பின் பிரச்சினை என்றால், ஏன் அதற்கு முன்னால் நிகழவில்லை,
அல்லது ஏன் அதற்குப் பின்னால் நிகழவில்லை?
முதலாளித்துவத்தின் அபிவிருத்தியில் மிக முக்கியமான
யுத்தங்களுள் ஒன்று பிரத்தியேக சொத்துரிமைகளை ஏற்படுத்துதல்,
எல்லாவற்றுக்கும் மேலாக நிலத்தில், நிலப்பிரபுத்துவத்தின் கீழ்
விவசாயியின் வாழ்க்கையில் முக்கிய பாத்திரத்தை ஆற்றிய பொதுச்
சொத்து உரிமைகள் மீதாக பிரத்தியேக சொத்துரிமைகளை ஏற்படுத்தல்
ஆகும். மிக இளம் வயதிலேயே வெளிப்படும், ஏதோ உள்ளார்ந்த
மனித குணாம்சத்தை வெளிப்படுத்துவதற்கும் அப்பால், இப்புதிய
சொத்து வடிவம் நிலம் எல்லோருக்கும் பொதுவானதாக
இருக்க வேண்டும் மற்றும் அதன் பலாபலன்கள் எல்லோருக்கும்
கிடைக்க வேண்டும் என்ற கருத்துருவுக்கு எதிராக தன்னை ஏற்படுத்திக்
கொண்டது.
இந்த புதிய முதலாளித்துவ சமுதாயத்தின் தோற்றத்திற்கு
தேவையான தத்துவார்த்த ஆயுதங்களை உருக்கி வார்த்தது
ஜோன் லோக்கின் பாத்திரமாக இருந்தது.
கனேடிய அரசியல் தத்துவார்த்தவியலார் சி.பி.
மாக்பெர்சன் வார்த்தைகளில்: "பூமியும் அதன் பலன்களும்
ஆதியில் மனித குலத்திற்கு பொதுவாக வழங்கப்பட்டன என்ற
திருமறைநூல் மற்றும் இயற்கை அறிவு இரண்டினதும் ஆணையை ஏற்று
லோக் தொடர்கிறார். இது மத்திய காலத்தில் காணப்பட்டது
போன்ற மற்றும் பதினேழாம் நூற்றாண்டின் கிறித்தவ மதத்தின் கடும்
தூய்மைக் கோட்பாடு போன்ற பாரம்பரிய கண்ணோட்டமாக
நிச்சயமாக இருந்தது. ஆனால் லோக் அதிலிருந்து முன்னர்
பெறப்பட்ட முடிவினை மறுதலிக்க மட்டும் இந்த நிலைப்பாட்டை
ஏற்றுக் கொண்டார். அது சொத்து என்பது இயற்கையான தனிநபர்களது
உரிமையை விட குறைவான ஒன்று என விளங்கச் செய்திருந்தது.
"ஆனால் இது இப்படி இருப்பதாக (பூமி மனித
குலத்திற்கு பொதுவானதாக வழங்கப்பட்டது என) வைத்துக்
கொள்வோம், எப்படி எவரும் எதிலும் சொத்தைக் கொண்டிருக்க
முடியும், பார்ப்பதற்கு அது மிகவும் கடினமானதாக இருக்கிறது.......
கடவுள் மனித குலத்திற்கு பொதுவாகக் கொடுத்ததில் பல பகுதிகளில்,
பொதுமக்களின் பிணைக்கப்பட்ட வெளிப்பாடு இல்லாமல், எப்படி
மனிதர்கள் சொத்தை அடைவார்கள் என்பதை நான் காட்ட முயற்சிப்பேன்"
என லோக் எழுதினார்..
வேறுவார்த்தைகளில் சொன்னால், இன்று மனித
இயல்பில் இருந்து ஊற்றெடுப்பதாகக் கருதப்படும் பிரத்தியேகத்தை
அடிப்படையாகக் கொண்ட சொத்து வடிவங்கள், அவை விவாதிக்கப்பட்டவாறு
ஒரு சமயம் "இயற்கைக்கு முரணானது" என்று கருதப்பட்டது.
நீங்கள் மேற்கோள் காட்டும் எடுத்துக்காட்டான,
தனது பொம்மையை நண்பனிடமிருந்து பாதுகாக்கும் குழந்தை
மற்றும் அவனுக்குச் சொந்தமானதைப் பற்றிக்கொள்ள விரும்பும்
குழந்தை, தனிச் சொத்துடைமைக்கான ஓட்டத்தின் உள்ளார்ந்த
இயல்பினை விளக்கிக்காட்டவில்லை. இன்னும் சொல்லப்போனால்,
இருகின்ற சமுதாயத்தில் விஞ்சி நிற்பவை, எப்படி விரைவாக, அதுவும்
ஆரம்பப் பருவத்திலேயே, நடத்தையைத் தீர்மானிக்கத் தொடங்குகிறது
என்று காட்டுகின்றது.
நீங்கள் விவரிக்கும் நடத்தைப் பாணி ஒரு குறிப்பிட்ட
வகை சமுதாயத்தில் உள்ள குழந்தைகளால் வெளிப்படுத்தப்படும்.
மற்ற சமுதாய வடிவங்களின் குழந்தைகள், "இயற்கையாகவே",
தங்களது உடைமைகளைப் பகிர்ந்து கொள்கின்றன. அல்லது இன்னும்
சொல்லப்போனால், பொருட்கள் தனிநபர்களது உடைமைகளாகக்
பார்க்கப்படவில்லை மாறாக பொதுவான பயன்பாட்டுக்காகவும்
பொது அனுபவித்தலுக்காகவும் வைக்கப்பட்டிருப்பதாகக்
கொள்ளப்படும்.
எந்த வகையிலும் நனிநபரது சொத்து அல்லது
உடைமைகள் உண்மையில் சோசலிசத்தை ஏற்படுத்துவதில் ஒன்றும்
செய்வதற்கில்லை.
மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில்
எழுதுகிறார்,"கம்யூனிசத்தின் சிறப்பு இயல்பு பொதுவில் சொத்தை
இல்லாமல் செய்வது அல்ல, மாறாக முதலாளித்துவ சொத்துடைமையை
இல்லாமற் செய்வதாகும்." அதாவது உற்பத்திச் சாதனங்களின்
தனிச்சொத்துடைமையை இல்லாமற் செய்வதாகும்.
அவர் தொடர்கிறார், "மூலதனம் என்பது கூட்டு
உற்பத்திப் பொருள், பல உறுப்பினர்களின் ஒன்றிணைந்த நடவடிக்கையால்
மட்டும் அல்ல, இறுதியில் சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களின்
ஒன்றுபட்ட நடவடிக்கையால் மட்டும், அது இயங்க வைக்கப்பட
முடியும்." 1848ல் மார்க்ஸ் வருவதை முன்கூட்டி அறியும்
ஒருவகைக் குறிப்புக்களைக் கொண்டிருந்தார் எனில், அவை
இன்று தனிநபர்களின் உடைமையாக அல்லாமல் பூகோளரீதியாக
ஒன்றுதிரட்டப்பட்ட வளங்களின் ஊடானதாக இருக்கும் பரந்த
நாடு கடந்த கம்பனிகளது சகாப்தத்தில் முற்று முழுதான உண்மை
ஆகும்.
சோசலிச சமுதாயத்தை நிறுவுதல் மனிதகுலம்
எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஆயத்த தீர்வைக்
காணாது. மாறாக அவை கவனிக்கப்படக்கூடிய சமூகக் கட்டமைப்பை
மட்டும் ஏற்படுத்தும்.
நிலப்பிரபுத்துவ சமுதாயத்தை இல்லாமற் செய்தது
எதுவெனில், ஒருபுறம் அதன் கடப்பாடுகளுடனும் மறுபுறம்
பொதுச் சொத்து உரிமையுடனும் உற்பத்தி சக்திகளின் மேலதிக
வளர்ச்சிக்கு அது தடையாக இருந்ததுதான், அதற்கு புதிய சொத்து
வடிவங்கள் தேவைப்பட்டன. இன்று, தொழில் நுட்பத்திறனின் புதிய
வடிவங்கள் செல்வத்தின் மீதான தனியுடைமை சுவீகரிப்புடன் பொருந்தாது
இருக்கின்றது. அறிவியலுக்கு தகவல் மற்றும் அறிவுத்துறையில் சுதந்திரமான
பரிவர்த்தனை தேவைப்படுகிறது. ஆனால் மூலதனமானது அதனை
அச்சு வெளியீட்டு உரிமை மற்றும் காப்புரிமம் ஆகியவற்றுக்கு கீழ்ப்படுத்துகின்றது---மனித
குலத்தின் மரபியல் கட்டமைப்பு பற்றிய அறிவுக்கும் கூட அவ்வாறு
செய்கின்றது.
இணையத்தின் அடிப்படையில் புதிய தகவல் தொடர்புகளின்
வடிவங்களின் தோற்றம் அனைவரும் பரஸ்பர நலன்களுக்காக
தகவல்களைப் பகிர்ந்து கொள்வதனைச் சார்ந்து இருக்கின்றது.
வலைதளத்தில் இசை மற்றும் பொழுதுபோக்கு வளங்கள் இருப்பது
அதனை அதிகம் பகிர்ந்து கொள்ளும் தனிநபர்களுக்கு நலன்பயக்கும்.
கணினி மென்பொருள் திட்டங்கள் (Computer
software programs) அவை பகிர்ந்து கொள்ளும்
மற்றும் ஏற்றுக்கொள்ளப்படும் மட்டத்துக்கு அபிவிருத்தி செய்யப்படுகின்றது
மற்றும் முன்னேற்றப்படுத்தப்படுகின்றது. இருப்பினும், மூலதனம்
அத்தகைய நிகழ்ச்சிப் போக்குகளை தடைப்படுத்த முயற்சிப்பது
மனித இயல்பின் ஏதோ உள்ளார்ந்த சொத்தின் காரணமாக அல்ல,
மாறாக சொத்து உரிமைகளின் மீதாக தங்கி இருக்கும் இலாபத்தைக்
கவர்ந்து கொள்வதன் காரணமாகத்தான்.
எதிர்கால சோசலிச சமுதாயத்தில் உற்பத்தி வளங்கள்
எல்லோருக்கும் சொந்தமானது மற்றும் ஜனநாயக ரீதியாக
கட்டுப்படுத்தக்கூடியது, அறிவு பகிர்ந்துகொள்ளபடும் ஏனெனில்
இந்த வழியில் அனைவரது செல்வமும் அதிகரிக்கப்பட முடியும்.
இன்று "இயற்கையானது" என்று காணப்படும் சொத்து
உரிமை பற்றிய கருத்துருக்கள் முற்று முழுதாக காலத்திற்கு ஒவ்வாததாக
கருதப்படும்.
தங்கள் உண்மையுள்ள,
நிக் பீம்ஸ்
|