WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா
:
பிரான்ஸ்
Lionel Jospin and Trotskyism: the debate over the French
prime minister's past
லியோனல் ஜொஸ்பனும் ட்ரொட்ஸ்கிசமும்: பிரெஞ்சு
பிரதமரின் கடந்த காலம் தொடர்பான விவாதம்
Peter Schwarz
27 June 2001
Back to screen version
கீழே காண்பது இக்கட்டுரையின் இறுதிப்பகுதியாகும்.
முதலாம் பகுதி 29/06/2001
ம் இரண்டாம் பகுதி 04/07/2001
ம் பிரசுரிக்ப்பட்டிருந்தது.
OCI உம்
நான்காம் அகிலமும்
1964 ஆம் ஆண்டு ஜொஸ்பன் OCI
உடன் தொடர்புகளை ஏற்படுத்தும்
போது, OCI
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்
குழுவின் பிரெஞ்சு பிரிவாக இருந்தது. அனைத்துலகக் குழுவானது மைக்கல்
பப்லோவாலும், ஏர்னஸ்ட் மன்டேலாலும் தலைமை தாங்கப்பட்ட
சந்தர்ப்பவாத போக்கான பப்லோவாதத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கிசத்தின்
பாரம்பரியத்தை பாதுகாக்கும் நோக்குடன் 1953 ஆம் ஆண்டு
நிறுவப்பட்டது. அனைத்துலக் குழுவுடனான OCI
இன் உடைவும் மித்திரோனுக்கான அவர்களது
ஆதரவும் பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தை நான்காம் அகிலத்தின்
முன்னோக்கிலிருந்து துண்டித்ததுடன், சகல புரட்சிகரமான மாற்றீட்டினையும்
இல்லாதொழித்தது. இது தொழிலாள வர்க்கத்ததிடம் இன்று காணப்படும்
நெக்கடிக்கான முக்கிய காரணமாகும். தொழிலாள வர்க்கம்
போர்க்குணமிக்க போராட்டங்களை தொடர்ச்சியாக செய்தபோதும்
தனது அரசியல், சமூக நலன்களை பாதுகாத்துக் கொள்ள இயலாதுள்ளது.
இதனை புரிந்துகொள்ள நான்காம் அகிலத்தின் வரலாற்றை சற்று
திரும்பிபார்ப்பது அவசியமாகும்.
பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டமானது
ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முன்னோக்கின் அடிப்படையான கொள்கைகள்
சம்பந்தப்பட்டதாகும்.
1930 ஆம் ஆண்டுகளில் ட்ரொட்ஸ்கி நான்காம்
அகிலத்தை நிறுவுவதற்கான ஆயத்தங்களை செய்தபோது, சமூக
ஜனநாயகமான இரண்டாவது அகிலமும், கம்யூனிச அகிலமான
மூன்றாம் அகிலமும் எவ்வித எதிர்பார்ப்புமில்லாமல் சீரழிந்துபோயும்,
சமூகத்தின் முன்னேற்றத்திற்கான ஒரு அமைப்பாக இயங்க இலாயக்கற்றுப்
போய்விட்டது என்ற முடிவிற்கு வந்தார். சமூக ஜனநாயகமானது
முதலாம் உலக மகா யுத்தத்திலிருந்து முதலாளித்துவத்தின் உண்மையான
உதவியாளனாக தன்னைக் காட்டிக்கொண்டது. மூன்றாம் அகிலம்,
மொஸ்கோவின் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் ஆயுதமாக மாறியதன்
மூலம் சர்வதேச தொழிலாள வர்க்கத்தினதும் முக்கியமாக ஜேர்மன்
தொழிலாள வர்க்கத்தினதும் பாரதூரமான தோல்விக்கு காரணமாகியது.
முக்கியமாக 1933 ஆம் ஆண்டு ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியினது மோசமான
அரசியலின் காரணமாக ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் தோல்வியானது
கிட்லர் பதவியேற்றபோது அவர்களை இயக்கமற்ற நிலைக்கு இட்டுச்சென்றதுபோது,
ட்ரொட்ஸ்கி மூன்றாம் அகிலமானது சோசலிச புரட்சிக்கு இலாயக்கற்றுப்போய்விட்டது
என்ற முடிவிற்கு வந்தார்.
அதனால் தொழிலாள வர்க்கத்தின் தலைமை
நெருக்கடியானது புதிய தொழிலாள வர்க்க கட்சிகளை, அதாவது
நான்காம் அகிலத்தின் பிரிவுகளை கட்டுவதன் மூலமே தீர்க்கப்படலாம்
என கூறினார். மேலும் நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணமானது
1938 இல் இது தொடர்பாக பின்வருமாறு குறிப்பிடுகின்றது. ''நான்காம்
அகிலம் இரண்டாம், மூன்றாம் அகிலங்களின் அதிகாரத்துவத்திற்கு
எதிராகவும், அம்ஸ்ரடாம், தீவாரவாத- தொழிற்சங்கவாத அகிலங்களுக்கு
எதிராகவும் அவற்றின் ஏனைய மத்தியவாத பிரிவுகளுக்கு எதிராகவும்
தனது சமாதானப்படுத்த முடியாத போராட்டத்தை பிரகடனப்படுத்துகின்றது.
இவ்வமைப்புக்கள் எதிர்காலத்திற்கான உத்தரவாதமல்ல,
மாறாக இவை கடந்தகாலத்தின் அழிகிப்போகும் எச்சசொச்சங்களாகும்''.
பப்பலோவாதமானது இம்முன்னோக்கை நிராகரித்தது.
இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னர் செம்படையால் ஆக்கிரமிக்கப்பட்ட
நாடுகளில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட
தேசியமயமாக்கலுக்கு அடிபணிந்து பப்பலோ புறநிலையான நிகழ்வுகளின்
அழுத்தங்களின் கீழ் ஸ்ராலினிசம் சுயசீர்திருத்தத்திற்கு உள்ளாகும் என
கூறினார். மேலும் சோசலிசத்தின் வளர்ச்சியானது அப்போது கிழக்கு
ஐரோப்பாவில் நிகழ்ந்ததுபோல் நூற்றாண்டிற்கு மேலாக
''உருக்குலைந்த தொழிலாளவர்க்க அரசு'' என்ற வடிவத்தை எடுக்கும்
எனவும், அதற்கு ஏற்றாற்போல நான்காம் அகிலத்தின் கடமையானது,
ஸ்ராலினிசக் கட்சிகளுக்கு எதிராக போராடாது அவர்களின் மீது
ஆழுமை செலுத்துவதனூடாக அவர்களுக்குள் இருக்கும் முற்போக்கான
பிரிவினரை கண்டுபிடிக்கவேண்டும் அல்லது எம்மை அவர்களுக்குள்
கலைத்துவிடவேண்டும் என பப்பலோ தெரிவித்தார்.
பின்னர் இந்நிலைப்பாட்டை பப்பலோவாதம் பலதரப்பட்ட
குட்டிமுதலாளித்துவ இயக்கங்களான மாவோவின் விவசாய இராணுவத்திற்கும்,
பிடல் காஸ்ரோவின் கெரில்லாப்படைக்கும், 60 ஆம் ஆண்டுகளின் பலதரப்பட்ட
தேசிய விடுதலை இயக்கங்களுக்கும் மாணவர் இயக்கங்களுக்கும்
பிரயோகித்தது. இம்முன்னோக்கின் உள்ளடக்கம் ஒன்றாகவே இருந்தது.
அதாவது சோசலிசப் புரட்சிக்கான முக்கிய காரணி தனது சொந்தகொடியின்
கீழ் தொழிலாள வர்க்கமல்ல, மாறாக புறநிலை அழுத்தங்களின் கீழ்
இடதுபக்கம் செல்லக்கூடிய ஏனைய சமூகசக்திகளாகும்.
பிரெஞ்சு ட்ரொட்ஸ்கிஸ்டுக்கள் இக்கேள்வி தொடர்பாக
பிளவடைந்தனர். 1952 ஆம் ஆண்டு பப்பலோவால் கட்டுப்படுத்தப்பட்ட
சர்வதேச செயலகத்தின் உதவியுடன் பப்பலோவாத சிறுபான்மையினர்
பெரும்பான்மை ட்ரொட்ஸ்கிஸ்டுகளை கட்சியிலுருந்து வெளியேற்றினர்.
பின்னர் OCI என
அழைக்கப்பட்ட பெரும்பான்மையினர் 1953 ஆம் ஆண்டு அனைத்துலகக்
குழுவுடன் இணைந்துகொண்டனர். சிறுபான்மையினர் சர்வதேச செயலகத்துடன்
(இது பின்னர் ஐக்கிய செயலகம் என அழைக்கபட்டது) இருந்தனர்.
இதிலிருந்து தற்போது Alan Krivine
ஆல் தலைமை தாங்கப்படும் Revolutionary
Communist League [LCR] உருவானது. இதைவிட
பிரான்சில் மூன்றாவது பிரிவு ஒன்றும் உள்ளது. அது தன்னை ட்ரொட்ஸ்கிஸ்டுக்கள்
என கூறிக்கொள்வதுடன், 1938 இல் இருந்தே நான்காம் அகிலத்தில்
இணைய மறுப்பதுடன், இன்று Arlette
Laguiller ஆல் தலைமை தாங்கப்படும் Lutte
Ouvrière [LO-
Workers Struggle] ஆகும். இவர்கள் தீவிர
தொழிற்சங்கவாதப் போக்கை கொண்டிருப்பதுடன், இன்று ஒரு
அரசியல் நிலைப்பாட்டை எடுப்பதற்காக சர்வதேச விவாதங்களை
கவனத்துடன் அவதானித்துவருகின்றனர்.
1960 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அனைத்துலகக்
குழு பப்பலோவாதத்திற்கு எதிராக நடாத்திய போராட்டத்தை OCI
கேள்விக்குள்ளாக்கியது. அதன் ஆரம்பமாக
அவர்கள் பப்பலோவாதத்தினால் நான்காம் அகிலம் அழிக்கப்பட்டுவிட்டதாகவும்,
அது புதிதாகக் கட்டப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
அனைத்துலக் குழுவின் பிரித்தானிய பிரிவான சோசலிச
தொழிலாளர் கழகம் [Socialist
Labour League- SLL] இந்நிலைப்பாட்டை
மூர்க்கமாக எதிர்த்தது. 1967 ஆம் ஆண்டு அவர்கள் OCI
இற்கு ''நான்காம் அகிலம் தமது
போராட்டத்தை காட்டிக் கொடுத்த ஸ்ராலினிசத்தினதும், சீர்திருத்தவாதிகள்
மீதான வெறுப்புக்களையும், அனுபவங்களையும் கொண்ட இலட்சக்கணக்கான
தொழிலாள வர்க்கத்தின் நலன்களை எதிர்காலத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும்.
நான்காம் அகிலம் உணர்மையுடன் தலைமைக்கான போராட்டத்தில்
ஈடுபடவேண்டும். முதலாளித்துவத்திற்கும், அதிகாரத்தவத்திற்கும்
எதிரான போராட்டத்திற்கு உள்இழுக்கப்படும் இலட்சக்கணக்கான
தொழிலாள வர்க்கத்தின் தலைமையை எடுத்துக்கொள்வதற்கு அதன்
காரியாளர்களை தயார் செய்வற்கு திரிபுவாதத்திற்கான போராட்டம்
மட்டுமே முக்கிய பங்குவகிக்கும். பப்லோவாதத்திற்கு எதிரான
உயிருள்ள ஒரு போராட்டமும், அதன் காரியாளர்களையும் கட்சியினையும்
இப்போராட்டத்தின் அடித்தளத்தில் பயிற்றுவிப்பதும் 1952 ஆம் ஆண்டின்
பின்னர் நான்காம் அகிலத்தின் உயிர்வாழ்க்கையாகும்'' என எழுதினர்.
[Trotskyism versus Revisionism,
vol. 5, London 1975, pp. 107-114]
1968 இன் பாரியபோராட்டங்களின்
முன்னர் OCI இன் ஐயுறவுவாதம் தொடர்பாக
சோசலிச தொழிலாளர் கழகம் பின்வருமாறு எச்சரித்தது. ''முக்கியமாக
பிரான்சிலும், ஐரோப்பாவிலும் தொழிலாள வர்க்கத்தின் தீவிரமயமாகல்
விரைவாக அபிவிருத்தியடைகின்றது. அப்படியான அபிவிருத்தி நிகழும் காலகட்டத்தில்
தொழிலாள வர்க்கத்தின் நிலைமைக்கு புரட்சிகரமான திசையில்
அணுகாமல், தமது முன்னாள் தலைமைகளிடம் இருந்து தொழிலாள
வர்க்கம் பெற்ற சொந்த அனுபவத்தினுள் கட்டுப்படுத்தப்பட்ட
மட்டத்தில் கட்சியும் இயங்கும் அபாயம் எப்போதும் உள்ளது.
அதாவது ஆரம்ப குழப்பமான நிலைமை காணப்படும். சுயாதீனமான
கட்சிக்கான போராட்டத்தையும், இடைமருவு கோரிக்கைகளையும்
திரிபுபடுத்துவது வழக்கமாக 'தொழிலாள வர்க்கத்தை நெருங்குவது,
அனைவருடனுமான கூட்டு, போராட்டத்தின் மத்தியில் நிற்றல்,
காலக்கேடு விதிக்காதுவிடல், உறுதியாக நிற்காதுவிடல்' போன்றவற்றின்
திரையின் பின்னாலேயே நிகழ்கின்றது.
இவ் எச்சரிக்கை கவனமெடுக்கப்படாது விடப்பட்டது.
1968 இன் எழுச்சிகளின் போது ஆயிரக்கணக்கான அனுபவமற்ற, புதிய
இளம் அங்கத்தவர்கள் OCI இனுள்ளும்,
அதன் இளைஞர் அமைப்பான AJS இனுள்ளும்
அங்கத்தவராகினர். OCI இந்த
பிரிவினரின் குழப்பங்களுக்கு அடிபணிந்தது. 1967 அம் ஆண்டு சோசலிச
தொழிலாளர் கழகத்தினாலே ஏற்கனவே எச்சரிக்கப்பட்ட ''ஐக்கிய
வர்க்க கூட்டு'' OCI சமூகஜனநாயக
கட்சியின் அதிகாரத்துவத்திற்கு அடிபணியும் சுலோகமானதுடன், புதிதாக
அணிதிரண்டவர்களை சக்திகளை பழைய அதிகாரத்துவ அமைப்பினுள்
போகச்செய்தது.
OCI இனது நிலைப்பாடு பப்பலோ
வாதத்தினதை விட பாரியளவில் வித்தியாசத்தை கொண்டிருக்கவில்லை.
அவர்களிடமிருந்த ஒரேயொரு வித்தியாசம் OCI தனது
சமூக ஜனநாயக் கட்சியை நோக்கிய அடிபணிவானால், தமது ஸ்ராலினிச
எதிர்ப்பை மேலும் மேலும் சமூக ஜனநாயகத்தின் கம்யூனிச எதிர்ப்பிற்கு
அடிபணிய செய்தது. ஆனால் பப்பலோவாதம் ஸ்ராலினிச கட்சிகளை
நோக்கிய திருப்பத்தை தொடர்ந்தும் பாதுகாத்தனர்.
1970 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் OCI
சமூக ஜனநாயத்தின் இளம் தலைமுறையினரை
உருவாக்கும் ஒரு பிற்களமானது. OCI
இன் கல்விக்கூடத்தினூடாக உருவாகிய பலரில்
ஜொஸ்பனும் ஒருவாராவர். சோசலிச கட்சியின் வலதுபிரிவில் இருக்கும்
பப்பலோவாத இளைஞர் அமைப்பான LCR
இன் உறுப்பினரான இருந்த Henri
Weber இன் கருத்துப்படி ''சோசலிச கட்சியினுள்
நூற்றுக்கணக்கான ட்ரொட்ஸ்கிஸ்டுக்கள் இருக்கின்றனர். இது ஒரு
விஷேடமான பாதையாகும். அவர்களை வைத்து ஒரு அமைப்பே கட்டிவிடலாம்,
எனவும் பாரம்பரிய ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கும், ட்ரொட்ஸ்கிஸ்டுக்கள்
என கூறிக்கொள்ளும் பப்பலோவாத OCI
போன்றவற்றை ஒன்றிணைத்து அவர் ட்ரொட்ஸ்கிசம்
கல்வியூட்டலுக்கான சிறந்த பாடசாலை எனக் கூறினார்''.
ஜொஸ்பனின் ஆதரவாளரான Marisol
Touraine ஜொஸ்பன் OCI
இன் கோரிக்கையின் பேரில் தான் சோசலிசக்
கட்சியில் இணைந்தார் என்ற குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கையில்
''இறுதியில் சமூக ஜனநாயத்தில் சென்று முடியுமானால், உள்புகுவாதம்
எதற்காக சிறந்தது'' என கூறினார்.
OCI தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும்
தனது கதவுகளை திறந்துவைத்திருந்தது. முக்கியமாக ஸ்ராலினிச CGT
இன் இருந்து வலதுசாரித்தனமாக பிரிந்த Force
Ouvrière உடன் நெருங்கிய தொடர்புகளை
வைத்திருந்தது. OCI இன் பல முக்கிய தலைவர்கள்
Force Ouvrière அமைப்புகளுள்
இயங்கியதுடன், Force Ouvrière இன்
தலைவரான André Bergeron இற்கு OCI
இன் தலைவரான Pierre Lambert முக்கிய
ஆலோசகராக இருந்தார். André Bergeron இற்கு
பின்னர் பதவிக்குவந்த Marc Blondel உம்
தனது தெரிவிற்கு OCI இற்கு நன்றி தெரிவிக்கவேண்டும்
என்றார்.
1980 èOTM OCI தன்னை
சோசலிச கட்சியினுள் ஒரளவு கலைத்துக்கொண்டு Parti
des Travailleurs [PT-Workers' Party]
என்ற பெயருடன் இயங்கியது. ஆனால் இது பாரம்பரிய ட்ரொட்ஸ்கிசத்தை
நோக்கி திரும்பியதற்றகான அறிகுறியல்ல. Parti des
Travailleurs வலதுசாரி சமூக ஜனநாய வாதிகளின்
கூட்டமைப்பானதுடன், பதவிக்கான பிரச்சனைகளாலோ அல்லது
வேறு காரணங்களுக்காவோ சோசலிச கட்சியிலிருந்து விலகினர்.
OCI இனது அரசியலின் விளைவு
தொழிலாள வர்க்கத்திற்கு மிக பாரதூராமானதாகும். 'இடது கூட்டினதும்,
பின்னர் வலதுசாரிகளினதும் உதவியுடன் 14 வருட மித்திரோனின் ஆட்சியில்
தொழிலாள வர்க்கத்தினது சமூகநலன்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதுடன்,
அவர்களுக்கு ஒரு அரசியல் மாற்றீடும் இருக்கவில்லை. மித்திரோன்
இறுதியில் Gaullists கள் மீண்டும் ஆட்சிக்கு
திரும்ப வழிவகுத்தார்.
1996 இன் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தின்
விளைவாக 1997 இல் ஜொஸ்பன் ஆச்சரியப்படத்தக்க வகையில்
பிரதமராக தெரிவுசெய்யப்பட்டார். அவர்களுக்கு இடையிடையேயான
இடதுசாரி வார்த்தை ஜாலங்களுக்கு மத்தியிலும் அவர்களது
பொருளாதார, சமூகக்கொள்கைகள் தமது முன்னையவர்களைவிட
வித்தியாசப்படவில்லை. தற்போது ஜொஸ்பனின் ''பெரும்பான்மை
இடதுகளின் அரசாங்கம்'' தன்மீது வைக்கப்பட்ட நம்பிக்கைகள்
அனைத்தையும் இழக்கச்செய்து விட்டது. முக்கியமாக கம்யூனிஸ்ட்
கட்சி தனது ஆதரவை இழந்துவருகின்றது. தனது எழுச்சியான சிறந்த
காலங்களில் 20% வாக்குக்களை பெற்றவர்கள் தற்போது 7-8%
மான வாக்குகளை பெற்று பசுமைக்கட்சியால் மேவிச்செல்லப்படும்
நிலையில் உள்ளது.
ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாறு தொடர்பான பல கட்டுரைகளுடன்
பிரான்சின் தொலைத்தொடர்பு சாதனங்களில் விவாதிக்கப்படும் இவ்விடயம்
தற்போதைய பிரான்சின் அரசியல் நிலைமைகளுடன் தொடர்புபட்டது.
ஜொஸ்பனின் அரசாங்கத்தின் நெருக்கடியின் மத்தியிலும் முதலாளித்துவம்
ட்ரொட்ஸ்கிஸ்டுக்கள் என கூறிக்கொள்ளும் Krivine
இன் LCR இடமிருந்தும்
Laguiller இன்
Lutte Ouvrière இடமிருந்தும் புதிய
ஆரதவை பெற்றுக்கொள்ளமுனைகின்றது. 1953 ஆம் ஆண்டு நான்காம்
அகிலத்தின் முன்னோக்கிலிருந்து விட்டுச்சென்ற பப்பலோவாத OCI
உடனான அனுபவங்களில் முதலாளித்துவம்
அதிருப்தி அடைந்துள்ளது. தற்போது Lutte
Ouvrière தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன்
நெருங்கி இணைந்துகொள்ள முனைகின்றது, LCR
கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒன்றிணைய விரும்புகின்றது.
தொழிலாள வர்க்கத்திற்கு இவ்விரு கட்சிகளும் எந்தவொரு
முன்னோக்கையும் வழங்கவில்லை. எனவே 1971 ஆம் ஆண்டு OCI
கைவிட்ட முன்னோக்கான நான்காம்
அகிலத்தின் அனைத்துலக் குழுவின் பிரிவை கட்டுவதை நோக்கி திரும்புவது
அவசியமாகின்றது.
பி.கு: Joseph
Fouché என்பவர்
Jacobin வாதியான இவர் முன்னாள் அரசர்களினதும்,
அதிகாரிகளினதும் கொடுங்கோல் ஆட்சியின் முக்கிய பாதுகாவலராகும்.
அவர் Jacobin இன்
கொடுங்கோல் ஆட்சியை தூக்கிவீசுவதற்கான வலதுசாரி சதி
ஒன்றினை ஒழுங்குசெய்தார். பின்னர் முதலாளித்துவ ஆட்சியின் பொலிஸ்
அதிகாரியாக 1794-1799 வரை கடமையாற்றி பின்னர் நெப்போலியன்
போனபாட்டின் கீழும் இதே பதவியுடன் பணிபுரிந்தார். இவர்
கொடுமையான, நேர்மையற்ற, கொள்கைகளற்ற ஒரு அரசியல்
பிரதிநிதித்துவத்திற்கான அடையாளமாகும்.
|