WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா
:
பிரான்ஸ்
Lionel Jospin and Trotskyism: the debate over the French
prime minister's past
லியனல் ஜொஸ்பனும்
ட்ரொட்ஸ்கிசமும்: பிரெஞ்சு பிரதமரின் கடந்தகாலம் தொடர்பான
விவாதம்
Peter Schwarz
27 June 2001
Back to screen version
கடந்த
வார தொடர்ச்சி
OCI உம் மித்திரோனும்
''இடதுகளின் கூட்டும்'' (Union
de la Gauche)
இறுதியாக ஜொஸ்பன் தனது தீவிரவாத கடந்தகாலத்தைப்
பற்றி ஏற்றுக்கொண்டமை ஒரு தந்திரோபாய நோக்கிலாகும்.
பகிரங்கமாக இதனை ஏற்றுக்கொள்வதன் மூலம் அடுத்த வருடம்
நடைபெறவிருக்கும் தேர்தலில் இப்பிரச்சனையை தனது எதிராளிகள்
பயன்படுத்தாமல் இருப்பதற்காகும். நாளாந்த அரசியல் நோக்கிலிருந்து
பார்க்காவிட்டாலும், ஜொஸ்பனிற்கும் OCI
இற்கும் இடையிலான தொடர்புகள் அடிப்படையான
கேள்விகளை எழுப்புகின்றன. தனது 30 ஆவது வயதுகளில் ட்ரொட்ஸ்கிச
சிந்தனைகளின் மீது ஆர்வத்தைக் காட்டியவரும், அநேகமாக
நான்காம் அகிலத்தின் பிரிவில் உறுப்பினராக இருந்த ஒரு மனிதன், 25
வருடங்களின் பின்னர் முதலாளித்துவத்தின் முக்கிய பிரதிநிதியாக பிரெஞ்சு
அரசாங்கத்தின் தலைமையை எவ்வாறு பிரதிநிதித்துவப் படுத்தக்கூடியதாக
இருக்கின்றது?
ஜொஸ்பனின் நோக்கங்கள் குறித்து ஒருவர் ஊகம்
தெரிவிக்கவே முடியும். தனது இளமைக் காலத்தில் ட்ரொட்ஸ்கிச
கருத்துக்களுக்கு அவர் உண்மையில் எந்தளவிற்கு ஆதரவளித்தார்
என்பதை அவர் மட்டுமே குறிப்பிடமுடியும். இதை அவர் செய்ய மறுக்கின்றார்.
ஆனால் ஜொஸ்பனின் போக்கிற்கும் OCI
இன் அபிவிருத்திக்கும் நெருங்கிய தொடர்பு
உண்டு. 1960ம் ஆண்டுகளில் ஜொஸ்பன் OCI
உடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்த
காலகட்டத்தில், 1971 ஆம் ஆண்டு ஜொஸ்பன் சோசலிச கட்சியில்
இணையும் போது, ட்ரொட்ஸ்கிச
கொள்கைகளில் இருந்து விலகி அமைப்பு ரீதியாக பிரான்சின் பிரிவாக
இயங்கி வந்த OCI நான்காம்
அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலிருந்து உடைத்துக்கொண்டது.
1971 ஆம் ஆண்டு OCI,
ட்ரொட்ஸ்கியின் கொள்கைகளுக்கு
பொருந்தாத, சோசலிசக் கட்சி தலைவரான பிரான்சுவா மித்திரோனின்
நோக்கங்களுக்கு பொருந்தக்கூடிய அரசியல் நிலைப்பாட்டை
எடுத்து. இது Patrick Dierich இற்கும்,
ஜொஸ்பனிற்கும் அவரது OCI உடனான
தொடர்பு மித்திரோனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் என்பதை எடுத்துக்காட்டுகின்றது.
ஆனால் அது தொடர்பாக எவ்வித எதிர்ப்பும் எழவில்லை. Patrick
Dierich இன்படி ''மித்திரோனுக்கு
ஜொஸ்பனின் இரட்டை அங்கத்துவம் தொடர்பாக தெரிந்திருந்தது.
அவர் முன்னர் உள்நாட்டு அமைச்சராக இருந்தார் என்பதை
மறக்காதீர்கள். அந்நேரம் நாங்கள் சோசலிச கட்சியை விட கம்யூனிஸ்ட்
கட்சி தொழிலாளர்களுக்கு நெருக்கமாக இருந்தது என கருதவில்லை.
மேலும் தேர்தல் தந்திரோபாயத்தின் படி சோசலிச கட்சியின்
வேட்பாளரே வலதுசாரிகளை தோற்கடிக்கமுடியும். எனவே மித்திரோனுக்கு
உதவிசெய்யவேண்டும். இதனையே ஜொஸ்பனும் தனக்கு இயலுமானளவு
செய்தார். OCI புறநிலைரீதியாக
சோசலிச வாதிகளின் கூட்டாகும்''.
மித்திரோன், ஜொஸ்பனை விரைவாகப் புரிந்துகொண்டு
1973 ஆம் ஆண்டு கட்சியின் தேசிய செயலாளராக்கினார். Radio
Europe 1 இற்கு
அவர் வழங்கிய பேட்டியில் OCI இல்
தனது அங்கத்துவம் இதற்கு தடையாக இருக்கவில்லை என உறுதிப்படுத்தியிருந்தார்.
அதில் மித்திரோனுக்கு ஏதாவது தெரியுமா? என கேட்கப்பட்டபோது
''எனது கருத்தின்படி யாரோ மித்திரோனின் காதுக்குள் இது தொடர்பாக
ஓதியுள்ளார்கள். ஆனால் நாங்கள் இது தொடர்பாக ஒருதடவையும்
கதைத்தது கிடையாது. நான் செய்தது அவருக்கு பிடித்திருந்தது என
நான் நினைக்கின்றேன்'' என கூறினார்.
1971 எப்பினே (Épinay)
என்னும் இடத்தில் நடந்த மாநாட்டில்,
மித்திரோன் சோசலிச கட்சியின் தலைமையை எடுத்ததுடன், மிகவும்
ஆச்சரியப்படத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தினார். 2ம் உலக யுத்தத்திற்கு
பின்னர் பதவியிலிருந்த, குளிர்யுத்தகால கருத்துகளுக்கு அடிபணிந்திருந்த
முன்னாள் தலைவரான Guy Mollet இற்கு
மாறாக மித்திரோன் இடதுசாரிகளின் கூட்டிற்கு வழிமொழிந்தார்.
இதன் மூலம் அந்நேரத்தின் தேர்தல் வாய்ப்புகளில் கம்யூனிஸ்ட் கட்சி
பின்தங்கி இருந்த நிலமையில் குடியரசு வாதிகளையும், பிரிவுகளாக
இருந்த சோசலிச போக்குகளையும், கம்யூனிஸ்ட் கட்சியையும்
ஒன்றிணைத்து சோசலிச கட்சி முன்னணிப்பங்கு வகிக்கலாம் என கருதினார்.
மித்திரோன் அந்நேரத்தின் ஒரு இடது சாரியாகவோ
அல்லது சோசலிச வாதியாகவோ இருக்கவில்லை. நாஜிகளின் சார்பான
விச்சி (Vichy regime)
அரசாங்கத்தின் அதிகாரியாகவும், பின்னர் நான்காம் குடியரசில் முதலாளித்துவ
அமைச்சராகவும் இருந்த அவர், பாரிய அரசியல் நோக்கங்களை
கொண்டிருந்தார், ஆனால் அரசியல் நம்பிக்கைகளை கொண்டிருக்கவில்லை.
அவர் மற்றவர்களின் நம்பிக்கையை பாவிப்பதில் நவீன Joseph
Fouché போல் நம்பிக்கை கொண்டிருந்தார்.
இவர் 1965 இல் General de Gaulle இற்கு
எதிரான இடதுசாரிகளின் பிரதிநிதியாக தேர்தலில் போட்டியிட்டு குறிப்படத்தக்க
வாக்குகளை பெற்றபோதும், பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
1968 மே-யூன் பொதுவேலை
நிறுத்தமும், மாணவர்கள் எழுச்சியும் மித்திரோனின் ''இடது கூட்டுக்கு''
உருவாக்கம் முயற்சிக்கு புது உத்வேகம் வழங்கியது. அப்போது
ஐந்தாவது குடியரசு வேருடன் ஆட்டங்கண்டிருந்தது. ஜனாதிபதியான
General de Gaulle தற்காலிகமாக கட்டுப்பாட்டை
இழந்திருந்ததுடன் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடனேயே பதவியை தக்கவைத்துக்
கொள்ள முடிந்தது. அவரின் ஆட்சியின் முடிவிற்கான அறிகுறிகள் காணப்பட்டன.
இவ்வரசாங்கத்தின் நெருக்கடியானது சமுதாயத்தில்
ஏற்பட்ட மாற்றத்தின் விளைவுமாகும். 1950-60 ஆம் ஆண்டுகளில் கைத்தொழிலுக்கும்
விவசாயத்திற்கும் உள்ள சமநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
இது பிரான்சின் அரசியலில் அதுவரை ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த
கிராமப்புற விவசாயிகளின் முக்கியத்துவதை இல்லாது செய்தது.
நகரங்களில் ஒரு இளம் தொழிலாள வர்க்கம் வளர்ச்சியடைந்தது.
ஸ்ராலினிஸ்டுக்களால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகளுக்கும், சோசலிஸ்டுக்களின்
மத்தியிலிருந்த உடைவுகளுக்கு மத்தியிலும் இப்புதிய தட்டினரது போர்க்குணம்
ஒரு புதிய புரட்சிகர திசையை நோக்கிபோகும் அபாயத்தை
கொண்டிருந்தது.
இந்நிலைமைகளின் கீழ் ''இவ் இடதுகளின் கூட்டு'' இவ்வியக்கத்தை
திசைதிருப்பி அபாயமற்ற நிலையை உருவாக்கியது. மித்திரோனுக்கு
அவரது கடந்தகாலம் காரணமாக பாரிய மதிப்பில்லாத போதிலும்,
இவ் இடதுகளினது கூட்டின் (Union de
la Gauche) உதவியுடன்
பரந்த தொழிலாளர்கள் மத்தியில் ஒரளவு ஆதரவை பெறமுடிந்தது.
70 ஆம் ஆண்டுகளில் இடதுகளினது கூட்டின் மேலிருந்த நப்பாசைகளும்,
எதிர்பார்ப்புக்களும் மிக அதிகமாகும். இதனை தொடர்ந்து 1981ம்
ஆண்டு மித்திரோன் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டபோது ஆயிரக்கணக்கானோர்
வீதிகளில் நடனமாடினர். ஆனால் மித்திரோனின் மீதுவைக்கப்பட்ட நம்பிக்கைகுக்கு
அவர் வெகுவிரைவில் ஏமாற்றத்தை வழங்கினார்.
1971ம் ஆண்டு OCI,
மித்திரோனால் உருவாக்கப்பட்ட நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புக்களையும்
பலப்படுத்துவதில் ஒரு முக்கியபங்கு வகித்தது. இவர்கள் அவருக்கு
மிகவும் முக்கியமானதும், வரவேற்புக்குரியதுமான பாதுகாப்பை
இடதுபக்கமிருந்து வழங்கினர்.
1969 ஏப்பிரல் மாதம் ஜனாதிபதியான General
de Gaulle பதவிவிலகியதிலிருந்து இவர்கள்
ஜனாதிபதி வேட்பாளராக சோசலிசகட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும்
இணைந்து ஒருவரை தெரிவு செய்யவேண்டும் என்பதை தமது
அரசியலின் மத்திய புள்ளியாக கொண்டிருந்தனர். அவர்கள் இதனை
''தொழிலாளர் ஐக்கிய முன்னணி'' எனவும், இது ஒரு தந்திரோபாய
நோக்கல்ல மாறாக இது தமது முக்கிய மூலோபாயமென வலியுறுத்தினர்.
இது முதலாளித்துவத்திற்கும், அரசுக்கும், அதன் அரசாங்கத்திற்கும்
எதிராக தொழிலாள வர்க்கத்தை ஒரு சுயாதீனமாக நிறுத்துவதன்
அடித்தளத்தில் உருவாகியதாக கூறினர். இவர்கள் தமது பத்திரிகையான
உண்மை (La Vérité இல.
544, பக்கம்
10) இல் ஆட்சி அதிகாரத்திற்கான கேள்விக்கான
பதிலில் ''தொழிலாள வர்க்கத்தின் ஐக்கிய முன்னணியுள்'' அடங்கியிருப்பதாகவும்,
இது அதிகாரத்திற்கும் அரசுக்குமான கேள்விக்கான பதிலுடன் தவிர்க்கமுடியாதாக
உள்ளது என குறிப்பிட்டது.
சோசலிசக் கட்சியினதும், ஸ்ராலினிச கட்சியினதும்
இணைந்த ஒரு வேட்பாளருக்கான ஆதரவை தொழிலாள வர்க்கத்தின்
ஆட்சியதிகாரத்துடன் இணைத்து பார்ப்பது உண்மையில் ஒரு முட்டாள்
தனமானதாகும். பலபத்து வருடங்களாக இவ்விரு கட்சிகளும் முதலாளித்துவ
அரசின் மீதான தமது அடிபணிவை எடுத்துக்காட்டியுள்ளனர். ஆனால்
மித்திரோனின் அரசியலுக்கு இடதுசாயம் பூசும் தன்மையின்
தேவையை பூர்த்திசெய்தது. 1969 இல் இணைந்த இடது வேட்பாளரை
உருவாக்குவது சாத்தியமற்றுப் போனபோது OCI,
சோசலிச கட்சியினையும், ஸ்ராலினிச கட்சியினையும்
அவர்கள் ''பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க முன்னணியை'' அழித்ததாக
குற்றம் சாட்டினர். Michel Rocard இன்
ஐக்கிய சோசலிச கட்சி (United
Socialist Party-PSU) உம் Alain
Krivine இன்
Communist League தமது வேட்பாளர்களுடன்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது,
"வர்க்க முன்னணியை உடைப்பதாக"
OCI குற்றஞ்சாட்டியது.
மித்திரோன் வெளிப்படையாக இப்பிரிவினரின் ஆரதவை
தெரிந்துகொண்டார். OCI அவரது
முடிவிற்காக மட்டும் பிரசாரம் செய்யவில்லை, மாறாக அது அவருக்கான
முக்கிய ஆதரவை திரட்டிக்கொடுத்து. ஜொஸ்பனின் சுயசரிதை எழுதிய
Gérard Leclerc, Florence Muracciole இருவரும்
OCI (அதை
அவர்கள் அந்நேரத்தில் PCI என
குறிப்பிடுகின்றனர்) தொடர்பாக பின்வருமாறு குறிப்பிடுகின்றனர், ''68 மேயின்
நிகழ்வுகளால் 70 களின் ஆரம்பத்தில் PCI
இனுள் ஒரு புதிய தாக்கத்தை கொடுத்தது.
அவர்கள் 8000 இற்கு மேலான அங்கத்தவர்களை கொண்டிருந்தபோதும்,
தமது இளைஞர் அமைப்பான AJS இனுள்
பத்தாயிரக்கணக்கானோரை அணிதிரட்டக் கூடியாதாக இருந்தது.
அது முக்கிய மாணவர் அமைப்பான UNEF-ID
கட்டுப்பாட்டினுள் வைத்திருந்ததுடன், Force
Ouvrière தொழிற்சங்கத்தினுள்
நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட பல கிளைகளையும் கொண்டிருந்தது.
ஆசிரியர்களின் தொழிற்சங்கமான கம்யூனிஸட் கட்சியால் கட்டுப்படுத்தப்பட்ட
CGT இனுள்
தனிமைப்படுத்தப்பட்டிருந்தபோதும் அதனுள்ளும் இயங்கிக்கொண்டிருந்தனர்.
[Lionel Jospin,
L'héritier Rebelle", pp. 43-44].
1971 இல் பாரிஸ் கம்யூனின் 100 வது ஆண்டுவிழாவினை OCI
ஒழுங்கு செய்திருந்ததோடு, அதற்கு மித்திரோனை
பிரதம பேச்சாளராக அழைத்ததுடன், கூட்டத்திற்கான ஒழுங்காளர்களாகவும்
இயங்கினர்.
தொடரும்......
|