World Socialist Web Site www.wsws.org |
WSWS: செய்திகள் & ஆய்வுகள் :உலகப் பொருளாதாரம்Political issues arising from the Genoa summit ஜெனோவா உச்சிமாநாட்டில் இருந்து உருவாகும் அரசியல் முடிவுகள்By Nick Beams26 July 2001 உலக முதலாளித்துவத்தின் தலைவர்கள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் தேவைகளையும், அபிலாசைகளையும் பூர்த்தி செய்வதற்கு ஒரு வேலைத்திட்டத்தை இல்லாவிடினும், ஒரு முன்னோக்கையாவது முன்வைக்க முடியாது பாதுகாப்பு அரண்களுக்குள் இருந்து கொண்டு சமூக நீதிக்காக குரல் கொடுத்தோருக்கு பதிலாக பொலிஸ் குண்டாந்தடித் தாக்குதலையும், கண்ணீர்ப்புகை குண்டுகளையும், பொலிஸ் தேடுதல்களையும், கொலையையுமே பதிலாக வழங்கக்கூடியதாக இருந்தது. ''சோசலிசத்தின் மரணத்தையும்'', ''சந்தையின் வெற்றியையும்'' புகழ்ந்த அவர்களின் அறிக்கைகளின் ஒரு பத்தாண்டுகளின் பின்னர் உலக முதலாளித்துவத்தின் தலைவர்கள் நன்கு அறியப்பட்ட வரலாற்று வடிவங்களான முன்னைய வங்குரோத்துக்களினதும், சீரளிந்த சமூக அமைப்புகளினதும் பிரதிநிதிகளிடமிருந்து அனைத்தையும் எடுத்துள்ளனர். இதுதான் ஜெனோவாவின் G8 உச்சிமாநாட்டின் முக்கியத்துவமாகும். 1999 நவம்பர்- டிசம்பரில் சியாட்டிலில் நிகழ்ந்த உலக வர்த்தக சம்மேளனத்தின் பேச்சுவார்த்தைகளின் போது இடம்பெற்ற எதிர்ப்பு இயக்கத்தின் ஆரம்பத்திலிருந்து, இப்போது ஜெனோவாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆகக்கூடுதலாக 150.000 பேர் கலந்துகொண்டனர். ஆனால் இந்த எண்ணிக்கை தொடர்பான தரவுகளை விட முக்கியமானது என்னவெனில் அபிவிருத்தியடைந்த முதலாளித்துவ நாடுகளிலும், ஏழ்மையான நாடுகளிலும் இருக்கும் தற்போதைய சமூக அமைப்பிற்கு எதிராக பல இலட்சக்கணக்கான மக்களின் ஆழமடைந்துவரும் எதிர்ப்பு இருக்கின்றது என்பதாகும். இவ்வெதிர்ப்பானது தற்போது அரசியல் ரீதியான வடிவம் எடுக்காதிருக்கின்றது. ஆனால் எளிதில் உணரக்கூடியதாக இருக்கின்றது. இது ''ஒரு பெறுமதியான காரணமில்லாது ஒரு எதிர்ப்பு ஊர்வலம் 100,000 அல்லது 150,000 மக்களை கவரமுடியாது'' என பிரான்சின் ஜனாதிபதியை ஒத்துக்கொள்ள வைத்துள்ளது. போர்த்துக்கல்லின் பிரதமரான Antonio Guterres இன்னும் நேரடியாகவே G8 இனை ''அவர்களது சுயநலவாத, சர்வதேச உறவுகள் தொடர்பான குறுகிய பார்வையை கைவிடக்கோரியதுடன், போக்கினை மனிதாபிமானதாக மாற்ற அழைப்புவிட்டதுடன், ஏழைகளின் உடல்நலம் தொடர்பாக வசதிபடைத்தவர்கள் கவனமெடுக்கவேண்டும் இல்லாவிடின் ஒருநாள் ஏழைகள் வசதிபடைத்தவர்களின் உடல்நலத்தை கவனமெடுக்கவேண்டியிருக்கும்'' என தெரிவித்தார். ஜெனோவாவின் நிகழ்வுகள் முதலாளித்துவத்தின் சீரழிவினை வெளிப்படையாக காட்டினால், அவை உலக முதலாளித்துவத்திற்கு எதிரான அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கான முன்னோக்கு தொடர்பான அடிப்படைக் கேள்விகளையும் தீர்மானகரமாக முன்வைக்கின்றது. அவை பூகோளமயமாக்கல் போக்கின் வரலாற்று முக்கியத்துவம் தொடர்பாகவும், முதலாளித்துவ சமூக உறவுகளுடனான அதன் உறவுகளையும் விளங்கிக்கொள்ளவதனாலேயே பதிலளிக்கமுடியும். கார்ல் மார்க்ஸ் ஒருதடவை முதலாளித்துவத்தின் கீழ் உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தி எல்லாவற்றையும் தலைகீழாக்கின்றது என கூறினார். அவர் தொடர்ந்தும் ''ஒரு பக்கத்தில் முன்னைய மனித வரலாற்றில் எந்தவொரு காலகட்டத்திலும் எதிர்பார்த்திருந்திராத அளவு உற்பத்தி சக்திகள் கைத்தொழிலினதும், விஞ்ஞானத்தினதும் சக்திகளாக தமது வாழ்க்கையை ஆரம்பித்துள்ளபோது, மறுபக்கத்தில் ரோமானிய அரசாட்சியின் இறுதிக் காலகட்டங்களின் பயங்கரத்தை கடந்தசெல்லும் சீரழிவிற்கான அறிகுறிகள் நிலவுகின்றன'' என குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் ''எமது நாட்களில் எல்லாம் அவற்றிற்கு மாறானவற்றால் நிரம்பியிருப்பதாக தெரிகின்றது. இயந்திரங்களின் அதிசயிக்கத்தக்க பலத்தினால் மனித உழைப்பின் காலம் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதிக பலனைத்தருவதாகவும் இருப்பதுடன், நாங்கள் அவை இல்லாதுபோவதை அவதானிக்கப்பதுமட்டுமல்லாது கூடுதலாகவும் வேலைசெய்கின்றோம். சிலவேளை இயற்கைக்கு மாறானதாக தோன்றும் செல்வத்தின் ஊற்றுக்கான புதிதான வடிவம் தேவையின் ஊற்றாக மாறுகின்றது. ஒருபுறத்தில் உள்ள நவீன தொழிற்துறைக்கும் விஞ்ஞானத்திற்கும், மறுபுறத்தில் நவீன ஏழ்மைக்கும் மரணத்திற்கும் இடையிலான முரண்பாடு காணப்படுகின்றது. உற்பத்தி சக்திகளுக்கும் சமூக உறவுகளுக்கும் இடையிலான இம்முரண்பாடானது எமது காலகட்டத்தில் உண்மையானது மட்டுமல்லாது, தெளிவானதும் தீர்க்கக்கூடியமானதே தவிர மறுக்ககூடியதல்ல'' என எழுதினார். இவ்வசனங்கள் எழுதப்பட்டு ஒன்றரை நூற்றாண்டின் பின்னரும் அவை மிகவும் பொருத்தமானவை. மார்க்சினால் அபிவிருத்திசெய்யப்பட்ட சோசலிசத்திற்கான போராட்டம் தொடர்பான கேள்விகள் இன்றும் உள்ளன. எவ்வாறு இம்முரண்பாடுகள் தீர்க்கப்படமுடியும்? மனித உழைப்பினை பாரியளவில் அதிகரித்துள்ள தொழிற்நுட்பத்தின் பாரிய அபவிருத்தியும், உற்பத்தி சக்திகளும் இலாபத்தினை குவிக்கும் மூலதனத்தின் பூர்த்திசெய்யப்படமுடியாத கோரிக்கைகளுக்கு அடிபணியப்படுத்தாமலும், ஒரு சிறுபான்மையினரை செல்வந்தராக பயன்படுத்தாமலும் எவ்வாறு மனித சமுதாயத்தின் தேவைகளே பூர்த்திசெய்ய பயன்படுத்தப்படமுடியும்?. நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் எவ்வாறு அனைவரினதும் நலன்களுக்காக அபிவிருத்தி செய்யப்படமுடியும்?. அவை எவ்வாறு பொருளாதாரத்தினதும், அரசியல் அமைப்புகளினதும் உண்மையான ஜனநாயக வடிவங்களை ஸ்தாபிப்பதற்கு பிரயோகிக்கமுடியும்?. கோடிக்கணக்கான மக்கள் தமது வாழ்க்கை மீதும், சமூக இருப்பின் மீதும் கட்டுப்பாடுகள் அனைத்தும் பறிக்கப்பட்டு இருப்பதுமான, உலக சந்தையின் பேரில் ஜனநாயகரீதியாக தெரிவுசெய்யப்பட்டதென கூறப்படும் அதன் கைக்கூலிகளின் கூட்டான அதிகாரத்துக்கு கட்டுப்பட்டிருக்கும் தற்போதைய அரசியல் அமைப்பினை மாற்றியமைப்பதற்கு இவற்றை எவ்வாறு பயன்படுத்தமுடியும்?. இவைதான் இன்றைய முக்கிய கேள்விகளாகும். உற்பத்தி இலாபத்தை அதிகரிப்பதன் நோக்கத்தால் ஆளுமைசெலுத்தப்படும் போட்டி தேசிய அரசுகளுக்கு இடையில் பிரிக்கப்பட்டிருக்கும் உலகத்தை அடிப்படையாகக் கொண்ட சமூக உறவுகளினுடன் உற்பத்தி சக்திகள் முரண்பாட்டுக்கு வந்துள்ளதிலேயே உலக முதலாளித்துவத்தின் வரலாற்று நெருக்கடிக்கான காரணம் தங்கியுள்ளது. தற்போதைய சமூக அமைப்பு தூக்கிவீசப்பட்டு உலகரீதியான பொருளாதார சமூகவாழ்க்கையை பங்கிட்டு ஒருங்கமைக்கும் ஒரு புதிய பொருளாதார சமூககட்டமைப்பு உருவாக்கப்படவேண்டும். இல்லையேல் மனிதகுலம் பாரிய அழிவை சந்திக்கவேண்டியிருக்கும். இதற்கான அறிகுறிகள் அதிகரித்துவரும் அளவில் காணப்படுகின்றன. உலக முதலாளித்துவத்திற்கு எதிரான அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான அடிப்படைக் கேள்விகளை அணுகுவது தவிர்ந்த ''மூன்றாவது வழி'' ஒன்றும் கிடையாது. நிறுவனங்களுக்கு எதிரான எதிர்ப்பு இயக்கத்தின் மத்தியில் பிரச்சனைக்குரியது பூகோளமயமாக்கல் அல்ல மாறாக நிறுவனங்களினதும், நிதித்துறையினதும் பலமே என்ற கருத்து அதிகரித்து வருகையில், அவ்வியக்கத்தினது தலைமையையை போல் பரந்தளவிலான கலந்துகொள்வோர்களின் மத்தியிலும் தேசிய அரசுகளின் மூலமாக உலகச் சந்தை மீது அரசியல் கட்டுப்பாட்டை பிரயோகிப்பதால் எவ்வாறாயினும் தீர்த்துக்கொள்ளலாம் என்ற கருத்து இருக்கின்றது. வேறுவார்த்தைகளில் கூறினால், முதலாளித்துவத்தின் மத்திய அரசியல் அமைப்பான தேசிய அரசமைப்பை வரலாற்றினால் வழங்கப்பட்ட ஒரு காலகட்டமாக விமர்சனமேதுமின்றி ஏற்றுக்கொள்ளும் தன்மை காணப்படுகின்றது. ஜெனோவாவின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் இம்முன்னோக்கு கனடாவை சேர்ந்த நடவடிக்கையாளரும், கூடுதலாக விற்க்கப்பட்ட புத்தகமான No Logo இன் ஆசிரியருமான Naomi Klein தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றை வழங்கியிருந்தார். Naomi Klein இன் கருத்துப்படி நிறுவனங்களின் நடைமுறையை நம்பவைக்கும் விவாதங்களால் மாற்றமுடியாததால் ''நீங்கள் பொறுப்பாக கோரக்கூடியது.... நிறுவனங்களை ஒழுங்கமைக்க நாங்கள் கண்டுபிடித்த தேசிய வழிமுறைகள் போல், நிறுவனங்களை ஒழுங்கமைக்க சர்வதேச வழிகளை கண்டுபிடிக்கவேண்டும்''. யுத்தத்திற்கு பின்னான ஒழுங்கமைப்பு ஆனால் Naomi Klein அல்லது சர்வதேச ஒழுங்கமைப்பை பிரேரிக்கும் வேறு எவராவது ஏன் முன்னைய கட்டமைப்பு உடைந்து போனது என்பதை ஆராயவில்லை. அவர்களால் ஏதாவது ஒரு விளக்கத்தை கொடுக்ககூடியதாக இருப்பின், அது ''சுதந்திர சந்தை'' முன்னோக்கானது 1980களில் ஆரம்பத்தில் றேகனினதும், மார்கிரட் தாட்சரினதும் அபிவிருத்தியின் விளைவே என்பதாகும். இது முதலாளித்துவத்தினது வரலாற்றின் ஆய்வு காட்டுவது போல் வரலாற்று அபிவிருத்தியின் உண்மையான காரணத்தை தலை கீழாக நிறுத்துவதாகும். யுத்தத்திற்கு பின்னான பொருளாதார ஒழுங்கமைப்பு 1944 ஆம் ஆண்டின் பிரெட்டன்-வூட்ஸ் நாணய உடன்படிக்கையிலும் [Bretton Woods monetary agreement], 1947-48 மார்சல் திட்டமும் [Marshall Plan] உள்ளடங்கியதாகும். இது மிகவும் சிக்கலான தேசிய, சர்வதேச ஒழுங்கமைப்பாகும். இன்றைய ஒவ்வொரு தேசிய பொருளாதாரத்தை ஆதிக்கம் செலுத்தவதை போன்று, யுத்தத்திற்கு முந்திய அரசுகள் மூலதனத்தின் மீதும், நிதிச்சந்தைகள் மீதும் கட்டுப்பாட்டை விதித்திருந்ததுடன், ஒன்றிணைந்த சர்வதேச நிதி அமைப்பை தடைசெய்தன. ஆனால் இவ்வுடன்படிக்கைகள் சுதந்திர வர்த்தகத்திற்கு வழியமைத்தன. இவ் ஒழுங்கமைக்கும் திட்டமானது யுத்தத்தின் 30 ஆண்டுகளின் பின்னர் முதலாளித்துவத்தால் பின்பற்றப்பட்ட தேசிய சீர்திருத்த கொள்கைகளின் மத்திய அடிப்படையானதாக இருந்தது. ஆனால் இது இலாப வீதத்தின் வீழ்ச்சியுடன் உடைவிற்கு வந்தது. அதற்காக அவர்கள் உற்பத்தியையும், இலாபத்தையும் அதிகரிக்க பூகோளமயமாக்கலுடனான உற்பத்தியுடன் இணைந்த புதிய தொழில்நுட்பத்தை அபிவிருத்தி செய்ய முன்தள்ளப்பட்டனர். மிகவும் அடிப்படையான மட்டத்தில் 1980 இன் இறுதியில் நாணயத்தினதும், மூலதன அசைவின் மீதான கட்டுப்பாட்டின் அழிப்பானது, உற்பத்தி சக்திகள் தேசிய அரசமைப்பு முறையினுள் இருந்து உடைத்துக்கொள்ள முயன்றதன் விளைவாகும். றேகனும், தட்சரும் அவர்களை தொடர்ந்த ஏனைய ''சுதந்திர சந்தையின்'' முன்மொழிவாளர்களும் இப்போக்கினை முன்தள்ளவில்லை, ஆனால் அவர்கள் இதனால் முன்தள்ளிச்செல்லப்பட்டனர். வேறுவார்த்தைகளால் கூறுவதானால், முதலாளித்துவத்தின் கீழ் உற்பத்தியின் பூகோளமயமாக்கலானது முரண்பாடான நிகழ்வாகும். அது புறநிலையாக முற்போக்கான வரலாற்றுப் போக்கினை கொள்ளையடிக்கும் வெளிப்பாடாகும். அது உற்பத்தி சக்திகள் முதலாளித்துவத்தின் அரசியல் கட்டமைப்பான தேசிய அரசமைப்பினுள் இறுக்கிக்கொண்டிருக்கும் கால்கட்டுக்களை உடைக்கும் போக்காகும். இது தீர்க்ககரமான அரசியல் தாக்கங்களை கொண்டுள்ளது. இது வரலாற்று ரீதியாக எந்தவொரு முற்போக்கான முன்னோக்கும் புதிய உற்பத்தி சக்திகளை பழைய தேசிய ஒழுங்கமைப்பிற்கோ அல்லது ஏதாவது வழமைக்குமாறான வடிவத்திற்கோ அடிபணியச்செய்யும் நோக்கத்தை கொண்டிருக்கமுடியாது என்பதை வலியுறுத்துகின்றது. மாறாக ஒரு சாத்தியமான முன்னோக்கு முன்னர் நிலப்பிரபுத்துவத்திற்கு செய்ததைப்போல், முதலாளித்துவ அரசமைப்பும், தனிச்சொத்துடமை அமைப்பும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியினால் காலத்திற்கு ஒவ்வாததாக மாறிவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ளவதிலிருந்து ஆரம்பிக்கவேண்டும். ஒரு வரலாற்று முன்னோக்கு என்பது சாராதணமான ஒரு தத்துவார்த்தக் கருத்து அல்ல. இது முன்னேறிய, அபிவிருத்தியடையாத நாடுகளில் பாரிய மக்கள் திரளினர் எதிர்நோக்கும் அதிகரித்துவரும் சமூக, பொருளாதார அரசியல் போராட்டங்களுக்கான முன்னோக்கினை வழிநடாத்தும் பாதையாக இருக்கவேண்டும். இப்பிரச்சனைகளை முதலாளித்துவத்தின் அரசியல் பிரதிநிதிகள் தீர்க்கவிரும்பினால் கூட அவர்களால் தீர்க்கமுடியாது. ஏனெனில் சந்தைகளுக்கும் இலாபத்துக்குமாக உந்தப்பட்ட பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தியானது முதலாளித்துவ தேசிய அரசுகளுக்கிடையிலான மோதல்களை குறைப்பதற்கு பதிலாக அதனை அதிகரித்துள்ளது. இப்போக்கானது G8 உச்சிமாநாட்டில் வெளிப்படையாக தெரிந்தது. இவ் உச்சிமாநாடு முதலில் 1975 இல் ஆரம்பித்ததிலிருந்து, பாரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், இதற்காக எவ்விதமான ஒன்றிணைந்த கொள்கைகள் அபிவிருத்தி செய்யப்படவுமில்லை, கண்ணாடி தாவர வளர்ப்பு நிலையங்களில் இருந்து உருவாகும் வாயுக்களை கட்டுப்படுத்த உடன்படிக்கை ஏற்படவுமில்லை, அணு ஏவுகணைகள் பாதுகாப்பு திட்டம் தொடர்பான அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பாக முரண்பாடுகள் அதிகரித்துள்ளதுடன், சியாட்டிலில் உலகவர்த்தக சம்மேளத்தினது பேச்சுவார்த்தைகள் உடைந்ததிலிருந்து உலக வர்த்தகம் ஸ்தம்பித நிலையில் உள்ளது. பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தியால் உருவான வரலாற்று நெருக்கடி தேசிய அரசு அமைப்பு முறைக்கு திரும்புவதால் தீர்க்கப்பட முடியாது. இதற்கு இத்தேசிய அரசமைப்புக்களின் சமூக, அரசியல் உறவுகளுக்கான முக்கிய அமைப்பான முதலாளித்துவத்திற்கு முடிவுகட்டப்படவேண்டும். முதலாளித்துவத்திடம் மனமார்ந்த, வீரமிக்க அல்லது சமூகநீதிக்கான கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலம் இது தீர்க்கப்படமுடியாது. இப்படியான கோரிக்கைகளுக்கு G8 இன் தலைவர்கள் ஜெனோவாவில் தமது பதிலை வழங்கினர். இதற்கு பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தியால் உருவாக்கப்பட்டு முன்வந்த, முதலாளித்துவத்தின் உலக ஆளுமையை எதிர்க்கக்கூடிய ஒரேயொரு சமூகசக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அரசியல் இயக்கம் அபிவிருத்திசெய்யப்படுவது தேவையாகின்றது. தனது அளவில் குறைவதற்கு மாறாக தொழிலாள வர்க்கம் தனது உள்ளார்ந்த அர்த்தத்திலும் தனது சமூக தாக்கத்திலும் அதிகரித்துள்ளது. இது ஒரு பரந்த தொலைநோக்கான அரசியல் முக்கியத்துவமாகும். 20ம் நூற்றாண்டின் அதிர்ச்சிகளில் முதலாளித்துவம் அதிகாரத்தில் தப்பிப்பழைத்து இருக்க முடிந்ததற்கான காரணம், வளர்ச்சியடைந்த நாடுகளில் மத்தியதர வர்க்கத்தட்டும், வளர்ச்சியடையாத நாடுகளில் விவசாயிகளும் அதன் முக்கிய முண்டுகோலாக இருந்ததாலாகும். ஆனால் பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தியுடன் இணைந்த போக்கானது இம்முன்னோக்கை குழிதோண்டிப் புதைத்துவிட்டது. முன்னேறிய நாடுகளில் பரந்த தொழில்நுட்ப மாற்றங்கள் தம்மை ஒருகாலத்தில் மத்தியதர பிரிவாக கருதிய முழு மக்களையும் தொழிலாளர் மயமாக்கியுள்ளது. இதேவேளை பின்தங்கிய நாடுகளில் இது நூற்றுக்கணக்கான இலட்சங்களாகியுள்ளது. அதாவது தமது வாழ்க்கை தேவைக்காக தமது உழைப்பை விற்கும் தொழிலாள வர்க்கம் வரலாற்றில் முதல் தடவையாக உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையாகியுள்ளது. தற்போது தொழிலாள வர்க்கம் இன்னும் முன்னணிக்கு வரவில்லை. ஆனால் உலக முதலாளித்துவத்தின் அதிகரித்துவரும் நெருக்கடியினால் அது இப்போதோ அல்லது பிந்தியோ முன்னணிக்கு வரப்போகின்றது. இப்போராட்டத்தின் விளைவு தொழிலாள வர்க்கம் எந்தளவிற்கு அரசியல் ரீதியாக திரும்ப ஆயுதபாணியாக இருக்கின்றது என்பதில் தான் தங்கியுள்ளது. 20ம் நூற்றாண்டின் அனுபவங்களும், முக்கியமாக ஸ்ராலினிச, சமூகஜனநாயக வாத, தொழிற்சங்க அதிகாரத்துவ தலைமைகளான இதன் முன்னைய தலைமைகளின் காட்டிக்கொடுப்பு தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் அரசியல் குழப்பத்தையும், முன்னோக்கின் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அரசியல் தெளிவுக்கும், மறுஒழுங்கமைப்பிற்குமான நிலைமைகள் உருவாகியுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த நூற்றாண்டில் சர்வதேச சோசலிச இயக்கத்தை பின்னடைய செய்ததில் அழிவிற்குரிய பங்குவகித்த தேசியவாத முன்னோக்குகளின் வங்குரோத்தை பூகோளமயமாக்கல் போக்கானது வெளிப்படையாக்கியுள்ளது. மேலும் தொலைத்தொடர்பில் ஏற்பட்ட பாரிய அபிவிருத்தியானது தொழிலாள வர்க்கத்தின் ஒன்றிணைவிற்கான புறநிலைமையை மட்டுமல்லாது அதற்கான வழிவகைகளையும் உருவாக்கியுள்ளது. ஜெனோவா உச்சிமாநாட்டில் இருந்து பெற்றுக்கொள்ளகூடிய முக்கியமான படிப்பினை என்னெவெனில், இது முழு முதலாளித்துவ அமைப்பினதும் ஆழமான நெருக்கடியை வெளிப்படுத்தியுள்ளதாகும். இந்நெருக்கடியின் அதிகரிப்பு 20 ம் நூற்றாண்டின் அனுபவங்களை பெற்றுக்கொள்வதன் மூலம் தொழிலாள வர்க்கம் அரசியல் ரீதியாக ஆயுதபாணியாவதற்கும், சர்வதேச சோசலிசப் புரட்சி முன்னோக்கின் அடித்தளத்தில் ஒரு அரசியல் இயக்கமாக அபிவிருத்தியடைவதை ஆரம்பிப்பதற்கான புதிய அரசியல் சாத்தியங்களை உருவாக்கிவிடும். உலக சோசலிச வலைத் தளமானது இப்போக்கை இயக்குவதற்கான வசதிகளை உருவாக்குவதற்காக சர்வதேச சோசலிச இயக்கத்தினை உயர்ந்த மட்டத்தில் புதுப்பிப்பதற்காக முயன்றுவருகின்றது. See Also: 25 July 2001 |