WSWS :செய்திகள்
& ஆய்வுகள் : வட
அமெரிக்கா: ஐக்கிய
அமெரிக்கா
New York Times documents military role in theft of 2000 election
2000ம் ஆண்டு தேர்தல் மோசடியில் இராணுவத்தின்
பாத்திரம் பற்றி நியூயோர்க் டைம்ஸ் ஆதாரம் காட்டுகிறது
By Barry Grey
19 July 2001
Use
this version to print
ஜூலை 15 ம் தேதி வெளியிட்ட விரிவான பத்திரிக்கை
செய்தியில், 2000ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை தனக்கு சாதகமாக்கிக்
கொள்வதற்கு புஷ் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட வழிமுறைகள்
மீது நியூயார்க் டைம்ஸ் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சி உள்ளது.
"புஷ் புளோரிடாவை எவ்வாறு கைப்பற்றினார்: கடல் கடந்து
வாழ்வோரில் வாக்களிக்காதோரின் வாக்கை தோண்டி எடுத்தல்"
என்று தலைப்பிடப்பட்ட அச்செய்தியானது, அமெரிக்காவுக்கு வெளியே
இருந்து அஞ்சலில் இடப்பட்ட வாக்குகளை புளோரிடா அலுவலர்கள்
கையாண்ட முறை ஆறுமாதகாலம் டைம்ஸால் புலனாய்வு
செய்யப்பட்டதன் விளைவாக இருந்தது. புளோரிடா தேர்தல்
பற்றிய சர்ச்சை மீதாக புஷ் க்கும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்
அல்கோருக்கும் இடையிலான போராட்டத்தில் கடல் கடந்து
வாழ்வோரின் இவ்வாக்குகள் மத்திய புள்ளியாக இருந்தன.
குடியரசுக் கட்சியினர் வலுவாக உள்ள இடங்களில்
கடல்கடந்து வாழ்வோரின் வாக்குகளை ஏற்குமாறு அழுத்தம்
கொடுப்பதற்கு சட்டரீதியாகவும் பிரச்சார ரீதியாகவும் இணந்த
தாக்குதலை எப்படி புஷ் பிரச்சாரம் நடத்தியது என்பதை
டைம்ஸ் விளக்கியது. அவை புளோரிடா தேர்தல் விதிமுறைகளின் கீழ்
சட்ட விரோதமானவை மற்றும் நிராகரிக்கப்பட வேண்டும்.
அதே நேரத்தில் ஜனநாயகக் கட்சி ஆதரவு உள்ள மாவட்டங்களில்
உள்ள வாக்களிக்க ஆதரவு திரட்டும் வாரியங்களில் கடல்கடந்து
வாழ்வோரின் வாக்குகளை சட்ட முறைப்படி செல்லுபடியாகாமல்
இருக்கத்தக்க அடையாளத்துடன் நிராகரிக்கும்படி புஷ் வழக்குரைஞர்கள்
வலியுறுத்தினர்.
இம்முயற்சியானது கடல்கடந்து வெளிநாடுகளில்
தங்கி இருக்கும் இராணுவத்தினரிடம் இருந்து வரும் நூற்றுக்கணக்கான
வாக்குகள் மீது மையப்படுத்தி இருந்த புஷ்ஷின் வாக்குகளை சட்ட
விரோதமாக உயர்த்தியது. இராணுவத்தினரது வாக்குகளின் எண்ணிக்கையை
அதிகரிக்க குடியரசுக் கட்சியினர் இராணுவ உயர்மட்டத்தின் உதவியை
தேர்ந்தெடுத்தனர். உள்ளூர் தேர்தல் வாரியங்களை நவம்பர்
7ம் தேதிக்குப் பின்னர் அஞ்சல் அடையாளம் பதிக்கப்பட்ட அல்லது
அஞ்சல் அடையாளம் இல்லாத வாக்குகளை அல்லது மற்றைய
சட்டபூர்வ தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியவற்றையும்
செல்லுபடியாக்குவதற்கு கூட அவர்கள் வலியுறுத்தினர்.
இதன்விளைவாக வெளியிலிருந்து பெறப்பட்ட தேர்தல்
நாளுக்குப் பின்னர் சட்டரீதியாக எண்ணப்பட்ட, ஒவ்வொரு
நான்கு வாக்குகளிலும் ஒன்றுக்கு மேலான வாக்குகள், அதாவது
2490 வாக்குகளில் 680 வாக்குகள் குறைபாடுடையவையாக இருந்தன.
வெளிநாடுகளில் இருந்து வாக்குகளைப் பெறுவதற்கான கடைசித்
தேதியான நவம்பர் 17ம் தேதி தேர்தல் ஆதரவு வாரியத்தால்
தொடக்கத்தில் நிராகரிக்கப்பட்ட 288 வாக்குகள், புஷ்ஷின் பிரச்சாரத்தாலும்,
இராணுவம் மற்றும் பத்திரிகை ஆகியவற்றின் அழுத்தத்தின் கீழ் அவை
ஏற்றுக்கொள்ளப்பட்டன.
புளோரிடாவில் புஷ்ஷின் உத்தியோகப்பூர்வ வெற்றியின்
வேறுபாடானது 537 வாக்குகள்தான். புளோரிடா அரசதுறையின்
வலைதளப்பகுதியில் மேற்கோள்காட்டி டைம்ஸ் பத்திரிக்கையானது,
தேர்தல் நாளுக்குப் பின்னர் எண்ணப்பட்ட வெளிநாடுகளில் இருந்து
வந்த வாக்குகள் இல்லாமல் புளோரிடாவை கோர் வென்றிருப்பார்
எனவும், 202 வாக்குகள் வித்தியாசத்தில் வெள்ளை மாளிகைக்கு
கோர் போயிருப்பார் என்று கூறியது.
குடியரசுக் கட்சியின் வேட்பாளரின் சகோதரரும்
மாநில ஆளுநரும் ஆன ஜெப் புஷ்ஷால் தலைமை தாங்கப்படும்,
புஷ்ஷின் பிரச்சார மற்றும் புளோரிடா அதிகாரிகள், புளோரிடா
தேர்தல் விதிகளை படிப்படியாக மீறிக்கொண்டு, அதேவேளை
தேர்தல் விதிகளை கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்
என்ற அடிப்படையில், புளோரிடா வாக்கை சட்டபூர்வமாக
சான்றளிப்பதற்கான இறுதிநாளை எவ்விதத்திலும் தாமதிப்பது
அனுமதிக்க முடியாதது என்று கூறிக்கொண்டனர்.
வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் வாக்குகள்
பற்றிய சமமற்ற மோசமான நடத்தையானது பல்வேறு மாவட்டங்களில்
உள்ள சர்ச்சைக்கு உரிய வாக்குகளைத் தீர்மானிப்பதற்கு சிறப்பான
மற்றும் ஒரேமாதிரியான கட்டளை விதி இல்லாமை அமெரிக்க
அரசியற் சட்டத்தின் சமபாதுகாப்பு என்ற பிரிவினை மீறுகின்றது என்ற
குடியரசுக் கட்சியினரின் ஏனைய பிரதான வாதங்களுக்கு எதிராக
திரும்புகின்றது. இப்புதுமையான கருத்து தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டால்,
தேர்தல் சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்ற மற்றும்
நாடு முழுவதும் மாவட்டத்திற்கு மாவட்டம் தேர்தல் செயல்
முறைகள் வேறுபடுகின்ற அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒவ்வொரு
மட்டத்திலும் தேர்தலை செல்லாததாக்கிவிடும். இருப்பினும்,
அது இறுதியில் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில், கைகளால் வாக்கு
எண்ணலை 5க்கு 4 என்ற பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பின் மூலம்
தடுத்து நிறுத்தியதுடன், சமமாகப் பாதுகாத்தல் என்ற கொள்கையை
மீறியதாகக் கூறப்படும் அடிப்படையில் ஜனாதிபதி பதவியை புஷ்ஷிடம்
கையளித்தல் என்பதன் பேரில், வலதுசாரி குடியரசுக்கட்சியின்
பெரும்பான்மையால் அது கைப்பற்றப்பட்டது.
பெரும் அளவில் மோசடியும் குற்றமும் பற்றிய
அதன் கணக்கை டைம்ஸ் முன் வைக்கும்பொழுதும் கூட,
அது தேர்தலுக்கு சட்டரீதியான பூச்சை பூசுகிறது. "எந்தக்
கட்சியாலும் வாக்கு மோசடி செய்யப்பட்டதற்கான சான்று
இல்லை" என்று டைம்ஸ் கண்டறிந்ததாக எந்த விளக்கமும்
இல்லாமல் கட்டுரை கூறுகிறது. "புஷ்ஷின் பிரச்சாரம் தாமதமாகக்
கிடைத்த வாக்குகளை வலியுறுத்திக் கேட்க முயற்சியை ஏற்பாடு
செய்ததாக ஜனநாயகக் கட்சியினர் ஐயம் கொள்வதற்கான எந்த
ஆதரவும் காணப்படவில்லை" என்று அதன் விசாரணை கூறிச்செல்கிறது.
பின் ஒரு புள்ளியில், "தேர்தல் நாளுக்குப் பின்னர் சட்ட
விரோதமாக வாக்களிக்க பென்டகன் வாக்குச் சீட்டுக்களைத்
தெரிந்தே வழங்கி இருப்பதற்கான சான்று இல்லை" என்று
கூறுகிறது.
வெளிநாடுகளில் இருந்து வந்த குறைபாடுள்ள
வாக்குகள் கைவிடப்பட்டாலும் கூட புஷ் 245 வாக்குகள் வித்தியாசத்தைத்
தக்க வைத்திருப்பார் என்று மதிப்பிட்ட, வாக்களிப்பு முறை பற்றிய
பொறுப்பில் உள்ள ஒருவரை ஆசிரியர் மேலும் மேற்கோள் காட்டிச்
செல்கிறார்.
ஆனால் டைம்ஸ் பத்திரிகையால் முன்வைக்கப்பட்ட
உண்மைகள் இந்த முடிவுகளுடன் முரண்படுகின்றன. உதாரணமாக,
அனைத்து கடிதங்களும் அஞ்சல் குறியீடு இடப்படவேண்டும் என்று
இராணுவ விதிமுறைகள் இருப்பினும், வெளிநாடுகளில் இராணுவத்திலிருக்கும்
புளோரிடா வாக்காளர்களிடம் இருந்து வந்த வாக்குகளில் 17
சதவீதம் அஞ்சல் முத்திரை இன்றி வந்ததாக கட்டுரை குறிப்பிட்டது.
முத்திரை இடப்படாத இந்த அசாதாரணமான வீதமானது நாட்டின்
ஏனைய பகுதிகளில், தேர்தல் கால கட்டத்தின் பொழுது வெளிநாடுகளில்
இராணுவத்திடம் இருந்து வந்த முத்திரை இடப்படாத 1 சதவீதத்துக்கும்
குறைவானதுடன் ஒப்பிடுகையில் மிக வேறுபாட்டைக் கொண்டுள்ளது.
தாம் நேர்காணல் செய்த பென்டகன் அதிகாரிகளால்
"ஏன் அந்த அளவுக்கு அஞ்சல் குறியீடின்றி வாக்குச்சீட்டுக்கள்
வந்தன என்பதற்கு முழுமையாய் விளக்க முடியவில்லை" என்று
டைம்ஸ் அறிவித்தது. எவ்வாறிருப்பினும், ஐயத்திற்கிடமில்லாத
ஒரு விளக்கம் இருக்கிறது அது என்னவெனில், இராணுவத்தினரிடமிருந்து
தாமதமான வாக்குகளைப் பெறவும் அவை சட்டவிரோதமானவை
என்பதை மூடி மறைப்பதற்கு ஏற்றவாறும், அஞ்சல் குறியீடின்றி
அவற்றை அனுப்ப வலிந்த முயற்சி ஒன்று அங்கு இருந்தது
என்பதுதான்.
டைம்ஸ் அறிக்கையிலிருந்து மிக உறுதியாய் இரண்டு
அரசியல் பிரச்சினைகள் தோன்றுகின்றன. முதலாவது தேர்தல்
முடிவைத் தீர்மானிப்பதற்கு இராணுவம் வகித்த பங்கு.
புளோரிடா முட்டுச்சந்தில் இராணுவ உயர்மட்டம்
சம்பந்தப்பட்டது வெள்ளிக்கிழமைக்குப்பின் நவம்பர்17
பொதுவடிவத்தை எடுத்தது. அந்த நாளில் இரு பிரச்சினைக்குரிய
நிகழ்ச்சிகள் நடந்தன. புளோரிடாவில் உள்ள மாவட்ட தேர்தல்
பிரச்சார வாரியங்கள் தேர்தல் நாளுக்குப்பின்னர், வெளிநாடுகளில்
இராணுவத்தினரிடமிருந்து பெற்ற நூற்றுக் கணக்கான வாக்குச் சீட்டுக்கள்
உட்பட பெற்ற வாக்குச்சீட்டுக்களில் மூன்றில் ஒருபகுதியை நிராகரித்தது.
வெளிநாடுகளில் இருந்து வந்த வாக்குகளில் சான்றளிக்கப்பட்ட
மொத்த வாக்குகள், புஷ் உத்தியோகபூர்வ வாக்கு வித்தியாசத்தை
நூற்றுக்கணக்கான அளவு அதிகரித்தபோதிலும், தெற்கு புளோரிடாவில்
கைகளால் வாக்கு எண்ணப்படலை தடுத்து நிறுத்துவதற்கான
குடியரசுக் கட்சியினரின் முயற்சிகள் தோல்வி அடைந்தால், கோர்
முகாமுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படும் கூடுதல் வாக்குகளை
வெல்வதற்குத் தேவையான வாக்குகளை அவ்வித்தியாசம் வழங்கத்தவறியது.
மாநிலச் செயலாளர் ஹாரிஸ் கைகளால் வாக்கு
எண்ணலை முன்னரே கைப்பற்றித் தனதாக்கிக்கொண்டு, நவம்பர்
18 சனிக்கிழமை அன்று புளோரிடாவில் புஷ் வெற்றியாளர் என்று அறிவிக்க
இருந்த அவரின் திட்டத்தில் புளோரிடா உச்ச நீதிமன்றம் கட்டளை
இட்டதுதான் குடியரசுக் கட்சியினருக்கு மிக அச்சுறுத்தலாக
இருந்தது.
இதற்குப் பதிலான புஷ்ஷின் பிரச்சாரம், ஜனநாயகக்
கட்சியினர் இராணுவத்தினரின் சட்டவிரோத வாக்குகளைகளை எடுப்பதற்கான
முயற்சியை ஆயுதப்படைகள் மீதான அமெரிக்க விரோத தாக்குதல்
என உருவகப்படுத்தி கோர்மீது சூழ்ச்சி மிக்க தாக்குதலைத்
தொடுப்பதாக இருந்தது.
குடியரசுக் கட்சி பிரச்சாரத்தின் முன்னனிப் பேச்சாளர்
மொன்டானா ஆளுநர் மார்க் ராசிகாட், நவம்பர் 18 அன்று செய்தியாளர்
கூட்டத்தைக்கூட்டி, "...என்னுடைய கணிப்பில்..... உதவி ஜனாதிபதியின்
வழக்கறிஞர்கள் ஆயுதப்படைகளில் பணி ஆற்றும் ஆண்களுக்கும்
பெண்களுக்கும் எதிராக யுத்தத்துக்குச் சென்றுள்ளனர்"
என்று கூறினார்.
பணியாளர்கள் தங்களின் வாக்களிக்கும் உரிமையை
கோர் மறுப்பதாக கண்டனம் செய்வதற்கு, வளைகுடாப்
போரில் கொமாண்டராக இருந்தவரும் புஷ்ஷின் பகிரங்க
ஆதரவாளருமான ஓய்வு பெற்ற படைத்தளபதி நோர்மன் ஸ்வார்ட்ஸ்கொப்
[Norman Schwarzkopf]
முன் கொண்டுவரப்பட்டார். அவர், கோர் புளோரிடாவில்
வென்றால் அவர்தான் அவர்களின் புதிய, கொமாண்டராக இருப்பார்
என இராணுவத்திற்கு நினைவூட்டும் வகையில் குறிப்பிட்டார். அவர்
கீழ்ப்படியாமையை மெல்லியதாய் மறைமுகமாகத் தூண்டும் வண்ணம்
வாசிக்கப்படக்கூடிய கூற்றாகவே இருக்கும் ஒரு கூற்றைக்
கூறினார்.
நவம்பர் 17 அன்று உள்ளூர் தேர்தல் அதிகாரிகள்
நிராகரித்த இராணுவத்தினரின் வாக்குகளை செல்லும்படி செய்ய
புஷ்ஷின் பிரச்சாரம் இரு பாதக செயல்களைச் செய்யும்படி
அவர்களை நிர்ப்பந்தித்தது. சட்ட அரங்கில், குடியரசுக் கட்சி
மாவட்டங்களில் 14 தேர்தல் பிரச்சார வாரியங்களில், வாரிய
உறுப்பினர்கள் அஞ்சற் குறியீடுகள் அல்லது மற்றைய சட்டரீதியான
தேவைகள் இல்லை என்று இராணுவத்தினரின் வாக்குகளை நிராகரித்ததன்
மூலம் கூட்டாட்சி சட்டத்தை மீறியதாக குற்றம் சுமத்தி வழக்கு
தொடுத்தனர். இவ்வழக்குகள் தகுதியற்றவையாக இருந்தன எனவே
இறுதியில் தள்ளுபடி செய்யப்பட்டன. பிரச்சார வாரியங்களின் கீழ்ப்படியாமையை
மிரட்டிப் பணிய வைக்கும் முயற்சியை அவை கொண்டிருந்தன.
கொள்கைப் பிரச்சார அரங்கில், குடியரசுக்
கட்சியினர் மாநில அளவிலும் தேசிய அளவிலும் இராணுவ உயர்மட்டத்தின்
நற்கருணையின் மூலம், வெளிநாடுகளில் தங்கி இருக்கும் இராணுவத்தினரில்
வாக்குகள் நிராகரிக்கப்பட்டோரின் பெயர்கள் மற்றும் மின் அஞ்சல்
முகவரிகளை பெற்றனர். அவர்கள் மாலுமிகளிடமிருந்தும் கடற்படை
விமானிகளிடமிருந்தும் கோர் மற்றும் ஜனநாயகக்கட்சியினரை கண்டனம்
செய்யும் அறிக்கைக்ளை வலியுறுத்திப் பெற்றனர். அவை நெகிழ்வுடைய
பத்திரிக்கை சாதனங்களுக்கு தீனியாக அமைந்தன. இந்த வெறியின்
உச்சக் கட்டத்துக்கு, ஒன்றை மேற்கோள் காட்டலாம், எடுத்துக்காட்டாக,
NBC தொலைக்காட்சியில் Katie
Couric [காட்டி கோரிக்]
"இன்று" என்ற நிகழ்ச்சியில் கடற்படை விமானி ஒருவரது
மனைவியை நேர்காணல் செய்தார். அவர் அவரது கணவரின் வாக்குச்சீட்டு
தகுதியற்றதாக செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
டைம்ஸால் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்ட
இரண்டாவது விமர்சன ரீதியான விஷயம் ஜனநாயகக் கட்சியின்
கோழைத்தனமும் திராணியின்மையும் ஆகும் மற்றும் எல்லாவற்றுக்கும்
மேலாக இராணுவத்தின் முன் அதன் மண்டியிடலும் ஆகும். ஜனாதிபதியாக
இருக்கின்ற சூழ்நிலையிலும் கூட, ஜனநாயகக்கட்சியின் ஜனாதிபதி மற்றும்
துணை ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவரும் இராணுவ உயர்மட்டத்தின்
எதிர்ப்பின் முன்னர் செயலிழந்து போயினர்.
குடியரசுக் கட்சியினர் இராணுவத்தினரின் வாக்குச்சீட்டு
தொடர்பான அவர்களின் சூழ்ச்சித் தாக்குதல்களுக்கு ஒருநாள்
அடுத்து, நவம்பர் 19, ஞாயிறு அன்று, "செய்தியாளரை சந்தித்தல்"
எனும் NBC
நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி வேட்பாளர் செனட்டர் ஜோசப்
லிபர்மேன் [Joseph Lieberman]
தோன்றியது தொடர்பானதை டைம்ஸ் அளிக்கிறது. குடியரசுக்கட்சியின்
முன்னாலும் பென்டகன் முன்னாலும் லிபர்மேன் சரணாகதியால்
புளோரிடாவில் உள்ள ஜனநாயகக் கட்சியின் அலுவலர்கள் கூட அதிர்ச்சி
அடைந்து போயினர்.
சட்டவிரோத வாக்குச் சீட்டுக்களை சேர்க்க
எதிர்ப்பு தெரிவித்த ஜனநாயகக் கட்சியின் அலுவலர்களைப்
பாதுகாப்பதற்கு லிபர்மேன் மறுத்து விட்டார். அதற்குப் பதிலாக
அவர், "ஐயத்தின் பலனை" இராணுவத்தினரின் வாக்குகளுக்கு
தான் தருவதாகவும், புளோரிடா தேர்தல் அதிகாரிகளை
"திரும்ப ஒருதடவை பாருங்கள்" என்றும் அவர்களுக்கு
அழைப்பு விடுத்தார். அவை இரண்டு நாட்களுக்கு முன்னர்தான்
நிராகரிக்கப்பட்டிருந்தன.
ஜனாதிபதி வேட்பாளர் கோரும் இராணுவத்தின்
முன் குறைவாக மண்டியிடவில்லை. சட்டவிரோத வாக்குகளை
சவால் செய்யச் சொன்ன பிரச்சார வல்லுநர்களின் அறிவுரையை
அவர் நிராகரித்தார். டைம்ஸ் ஜனநாயகக் கட்சி தேசிய
குழுவின் பொது வழக்கறிஞரான ஜோ சான்ட்லரை [Joe
Sandler] மேற்கோள் காட்டியுள்ளது,
அது கோர் எப்படி தனது நிலைப்பாட்டை விளக்கினார் என்று காட்டுகிறது:
"என்னால் அவர் சொன்ன வார்த்தைகளை
அப்படியே தரமுடியும்.' கையளவே ஆன இராணுவ வாக்குகளால்
நான் வெற்றி பெற்றால், குடியரசுக் கட்சியினராலும் பத்திரிக்கைகளாலும்
ஒவ்வொரு நாளும் எனது ஜனாதிபதி பதவி வேட்டையாடப்படும்,
மற்றும் அது மதிப்புடையதாக இருக்காது என அவர் குறிப்பிட்டார்.
"
இன்னொரு கோர் உதவியாளர் மேற்கோள் காட்டிக்
கூறுவதாவது, "அவர் ஜனாதிபதியாக ஆனால், அது தேசிய
நலனின்பாற்கொண்ட அவரது உறவுகளினால் அல்லாமல் இராணுவம்
பற்றிய அவரது நம்பிக்கை இன்மையால் பண்பிட்டுக்காட்டப்படும்
என்ற கருத்தில் கோர் மிக உறுதியாக இருந்தார்."
இவை அசாதாரணமான கூற்றுக்கள். தேசிய தேர்தலின்
வெளிப்பாடு மற்றும் வெள்ளை மாளிகையில் அமர்தல் இவற்றின் மீதான
இராணுவ அதிகாரத்தை ஏற்றுக் கொள்ளுவதற்கு அவை வலு சேர்த்திருக்கின்றன.
மக்களாட்சிக்கு இராணுவத்தை கீழ்ப்படியச்
செய்தல் அமெரிக்க அரசியல் சட்டத்தின் முதன்மைக் கொள்கை
ஆகும். ஜனநாயகத்தின் இந்த ஆதாரக்கல் அந்த அளவுக்கு
அரித்துப்போய்விட்டமை அமெரிக்க ஐக்கியநாடுகளில் முதலாளித்துவ
ஜனநாயக அமைப்புக்கள் அழுகிப்போய்விட்டதன் அழுத்தமான குறிகாட்டி
ஆகும்.
டைம்ஸின் அறிக்கை உலக சோசலிச வலைதளத்தால்
செய்யப்பட்ட 2000 ம் ஆண்டு தேர்தல் பற்றிய ஆய்வை உறுதி செய்கின்றது:
அதாவது அமெரிக்க முதலாளித்துவ ஆட்சியின் பாரம்பரிய வடிவங்களுடனான
தீர்க்கமான முறிவைக் குறிக்கும் ஆரம்பத்திற்கான நிகழ்ச்சியாகும்.
டைம்ஸில் வெளிப்படுத்தப்பட்ட விவரங்கள் தொழிலாள வர்க்கம்
எதிர்கொள்ளும் பேரளவிலான ஆபத்துக்களை கோடிட்டுக்காட்டி
அம்பலப்படுத்துகிறது. அதன் அடிப்படை உரிமைகள் சர்வாதிகார
ஆட்சியை நோக்கி இரக்கமில்லாமல் நகரும் அரசியல் அமைப்பு
முறையால் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளன.
ஜனநாயக உரிமைகள் மீதான வலதுசாரி தாக்குதலுக்கு
தற்போதுள்ள அரசியல் அமைப்புக்கு உள்ளேயான எந்தவிதமான
அக்கறையுடன் கூடிய எதிர்ப்பும் இல்லாமை, டைம்ஸின் அறிக்கை
தொடர்பான பத்திரிக்கை செய்தி சாதனங்களின் பதிலில் எதிரொலிக்கிறது.
பதவி நீக்க விசாரணை மற்றும் 2000ம் ஆண்டு தேர்தல் மோசடி
இவை இரண்டுடனுமான தொடர்ச்சியான அவற்றின் குற்றத்திற்கு
உடந்தையாயிருத்தலின் பாகமாக, பிரதான செய்தி வலைப்பின்னல்கள்
டைம்ஸ் கட்டுரைகளுக்கும் அவை எழுப்பிய விஷயங்களுக்கும்
உண்மையில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
ஜனநாயகக் கட்சியினர் மீண்டும் அதேபோல
அமைதியாக இருந்தனர். அவர்கள் விரும்பும் கடைசி விஷயம் புஷ் நிர்வாகத்தின்
பின்னே இருக்கும் குற்றத்தன்மையைப்பற்றி பொதுக் கூச்சல்
போடுவதுதான்.
இருப்பினும், இந்த செய்தி இவ்வமைப்பு முறையின்
முன்னணி வெளியீட்டில் வெளியாகி இருக்கிறது என்ற உண்மை
தொலைநோக்குடைய புறநிலை முக்கியத்துவம் உடையதாகும்.
இது 2000ம் ஆண்டு தேர்தல் மோசடி மீதான அரசியல் பிரேத
அறுவைச் சோதனையின் வளர்ந்து வரும் பாணியின் ஒரே ஒரு எடுத்துக்காட்டு
ஆகும். புளோரிடாவில் தொழிலாளர்கள் மற்றும் சிறுபான்மை
வாக்காளர்களின் பரந்த அளவிலான வாக்களிக்கும் உரிமையை
பறித்தல் பற்றியதை சான்று காட்டும் எண்ணிறைந்த செய்திகள்
அண்மைய வாரங்களில் இடம்பெற்றுள்ளன. ஜனநாயக உரிமைகளை
ஏளனம் செய்து தேர்தலை புஷ்ஷூக்கு சாதகமாக கொடுத்த
உச்சநீதிமன்றத்தின் பாத்திரத்தைக் குற்றம் கூறும் புத்தகங்கள்
வரத்தொடங்கியுள்ளன.
இந்த வெளியீடுகள், ஐக்கிய அமெரிக்க அரசில்
அரசியல் ஆட்சியின் ஆழமாகிச் செல்லும் நெருக்கடியைப் பிரதிபலிக்கின்றன.
அந்நெருக்கடியானது, ஜனநாயக விரோத வழிகளில் அரசாங்கத்தை
நிறுவுதலால் கிளறிவிடப்பட்டிருக்கிறது. புஷ் பதவியேற்று ஏழுமாதங்கள்
கழிந்த பின்னரும் அவரது நிர்வாகத்தின் சட்டரீதியான தன்மை பற்றிய
கேள்விகளை அரசியல் அமைப்புக்களால் தடுத்து நிறுத்த
முடியாது உள்ளது. ஜனநாயக வழிமுறையை மீறியது முழு அரசியல்
அமைப்பினையும் செல்வாக்கு இழக்கப்பண்ணுவதுடன் உழைக்கும்
மக்கள் தொகையின் பரந்த தட்டினரை தீவிரமயப்படுத்தலுக்கான
வழியை அமைத்துக் கொடுத்திருக்கிறது என்ற பற்களை நடுங்க
வைக்கும் அச்சம் ஆளும் தட்டுக்குள்ளே ஏற்பட்டிருக்கிறது.
|