World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பால்கன்

Behind the Milosevic trial: the US, Europe and the Balkan catastrophe

மிலோசிவிக்கின் மீதான வழக்கின் பின்னணி: அமெரிக்காவும் ஐரோப்பாவும் பால்கனின் சீரழிவும்

By Chris Marsden and Barry Grey
4 July 2001

Use this version to print

முன்னைநாள் யூகோஸ்லாவியாவின் ஜனாதிபதியான சுலோபோடான் மிலோசிவிக் தொடர்பான எவருடைய கருத்து எவ்வாறு இருந்தாலும், உலக சோசலிச வலைத்தளம் -WSWS- முன்னாள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் பிரதிநிதியாகவிருந்து சேர்பிய தேசியவாதியாகவும், முதலாளித்துவ மறுசீரமைப்பின் பாதுகாவலனாகவும் மாறிய அவரை பாதுகாப்பவர்களின் மத்தியில் தீர்மானகரமாக இருக்கவில்லை. அவரின் கைதும், Hague இற்கு கடத்தியதையும் சூழ்ந்துள்ள சம்பவங்கள் பால்கனின் ஜனநாயக உரிமைகளையும், சட்டம் ஒழுங்கையும் பாதுகாப்பதாக மேற்கு நாடுகள் கூறுவதை பரிகாசத்திற்குள்ளாக்கின்றது.

ஒரு சில முதலாளித்துவ பத்திரிகையாளர்கள் முன்னாள் தலைவர் யூகோஸ்லாவிய ஜனாதிபதியான கொஸ்ருனிக்காவின் முதுகின் பின்னாலும், மிலோசிவிக்கின் கடத்தல் மீதான உத்தரவை யூகோஸ்லாவிய அரசியலமைப்பு நீதிமன்றம் தடைசெய்ததின் சில மணித்தியாலங்களுக்கு முன்னரும் அவர் கடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். அவர் Hague இலுள்ள முன்னாள் யூகோஸ்லாவியாவிற்கான சர்வதேச குற்றங்களுக்கான நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டமை, அமெரிக்காவிற்கும் சேர்பிய பிரதமரான ஸோரான் ஜிங்ஜிக்கிற்கும் இடையில் இடையிலான வெறுப்புமிக்க வர்த்தக உடன்படிக்கையின் ஒரு பகுதியாகும். மிலோசிவிக் யூகோஸ்லாவியாவிற்கான சர்வதேச குற்றங்களுக்கான நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டால் மட்டுமே புறூஸெல்சில் நடைபெறும் உதவிவழங்கும் மாநாட்டில் 1 பில்லியன் டொலர் உதவியை பெல்கிராட்டிற்கு நிராகரிப்பேன் என்ற எச்சரிக்கையை பின்வாங்குவதாக அமெரிக்கா குறிப்பிட்டது.

வெளிப்படையான ஊழல்மிக்க இந்த நடவடிக்கையின் தன்மை ஐரோப்பிய முதலாளித்துவத்தின் பிரிவினர் மத்தியில் கவலையை உருவாக்கியது. ஏனெனில் அமெரிக்காவின் ஆதரவுடனான நடவடிக்கை தவிர்க்கமுடியாதவாறு Hague நீதிமன்றத்திற்கு அவமரியாதையை உருவாக்கும் எனவும், அது அமெரிக்காவின் பால்கன் கொள்கைகளுக்கான ஒரு அமைப்பாக உருவாகிவிட்டதாக வெளிப்படுத்திக்காட்டும் என அவர்கள் ஒரளவு நியாயத்துடன் பயமடைந்தனர். சுவிற்சலாந்தின் பத்திரிகையான Le Temps பின்வருமாறு குற்றம்சாட்டியது. ''முன்னாள் சர்வாதிகாரியின் ஒப்படைப்பு ஒரு வியாபார உடன்படிக்கை என்பதில் ஒரு மிகைப்படுத்தலும் இல்லை. யார் இதில் ஈடுபட்டிருந்தபோதும், விஷேடமாக நாங்கள் அவரை வெறுத்தால் சட்டம் சட்டம்தான். இந்த நடவடிக்கை வழமையாக மேற்கு நாடுகளால் விநோதமான கொள்கைகளின் உதவியுடனான பலாத்காரமான செயலைத்தவிர ஒன்றுமில்லை''.

மனித உரிமைகள், நீதி தொடர்பாக பரப்பப்படும் வார்த்தைகளுக்கு மத்தியிலும், மிலோசிவிக்கின் கடத்தலானது சிறிய நாடுகளின் சுதந்திரத்தின் மீதும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் மீதான பலம்வாய்ந்த நாடுகளின் அவமதிப்பினையும், அலட்சியத்தினையும் மேலதிகமாக எடுத்துக்காட்டுகின்றது. இந்த நிகழ்வைப்போல அந்நாடுகளின் அதிகாரத்தின்மீது இப்பலம் வாய்ந்த நாடுகள் தமது கைகளை வைத்துள்ளன. Hague இன் யூகோஸ்லாவியாவிற்கான சர்வதேச குற்றங்களுக்கான நீதிமன்றம் சிறிய நாடுகள் மீது ஏகாதிபத்திய நாடுகளின் காலனித்துவத்தினை ஒத்த தலையீடுகளுக்கு திரும்புவதற்கான சட்டபூர்வமான வழியமைக்கும் கைக்கூலியாக இயங்கும் பங்குவகிக்கின்றது.

யூகோஸ்லாவியாவிற்கான சர்வதேச குற்றங்களுக்கான நீதிமன்றம் 1999 இல் யூகோஸ்லாவியா மீதான அமெரிக்க- நேட்டோ யுத்தத்தின் போது மிலோசிவிக்கை யுத்த குற்றங்களுக்காக குற்றம் சாட்டியதிலிருந்து தனது சார்பற்ற தன்மையின் பாசாங்குத்தமையை ஏற்கனவே இழந்துவிட்டது. இவ்வறிக்கை சேர்பியாவின் பொதுமக்கள் நிலைகள் மீதான தாக்குதல் குறித்த பொதுமக்களின் கவனத்தின் அதிகரிப்பின் மத்தியில் வெளிவந்தது. இதனை உலக சோசலிச வலைத்தளம் அந்நேரம் ''நீதியின் போர்வையின் கீழான அரசியல் நடவடிக்கை'' என குறிப்பிட்டது.

இந்த நிலைமைகளின் கீழ் உருவாகும் வழக்கானது பொதுவாக அங்கீகரிக்கப்படும் நியாயமானதான தன்மையை தரத்தை கொண்டிருக்கும் என்பதும், வெளிப்படையானதாகவும் இருக்கும் என உறுதிப்படுத்துவது முட்டாள்த்தனமானது. கொசவோ அல்பானிய மக்கள் மீதான மிலோசிவிக்கின் அழிவுகரமான வேலைகள் எவ்வாறிருந்தபோதும், Hague நீதிமன்றத்தின் முன்னுள்ள வழக்கு ஒரு பொய்யானதாகவே இருக்கும்.

இந்த வழக்கை முன்னெடுக்கும், 1999 ஆம் ஆண்டு பால்கன் யுத்தத்தை செய்தும், பின்னர் அதனால் யூகோஸ்லாவியா அழிந்ததையும் பார்க்கவிரும்பாத அமெரிக்க, ஐரோப்பிய அரசுகள் மிலோசிவிக்கை ஒரு புதிய பேயாக காட்டுவதற்கான புதிய பிரசாரத்தை கட்டவிழ்த்துவிட்டதன் பின்னணியில் ஒரு உறுதியான நலன்கள் உள்ளன. அது மிலோசவிக்கை ஒரு பேயாக்கி காட்டுவதனூடாக கடந்த பத்துவருடமாக அப்பிராந்தியத்தை சூழ்ந்துள்ள அழிவுக்கான பொறுப்புக்களை அவரின் மேல் மட்டும் சுமத்துவதாகும்.

இவ்வரசியல் நோக்கம் மேற்கு நாடுகளின் பால்கன் தொடர்பான கொள்கைகளின் விபரீதமான விளைவுகளை தெளிவாக காட்டியுள்ளது. பொஸ்னியாவை இனரீதியானதாக பிரித்து தமது இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததுடன், நேட்டோவின் ஆதரவான அல்பானிய பிரிவினைவாதிகளான கொசவோ விடுதலை இராணுவத்தின் உதவியுடன் கொசவோவில் இருந்து சேர்பியர்களை வெளியேற்றியதுடன், மஸடோனியாவில் உள்நாட்டு யுத்தத்தை உருவாக்கியுள்ளது. மிகைப்படுத்தல்களையும் பொய்களையும் எடுத்துக்காட்டுவதனை பாவித்து மேற்குநாடுகள் 1999 இலையுதிர்காலத்தில் யூகோஸ்லாவிய யுத்தத்திற்கு முன்னரும், யுத்ததின்போதும் பொதுமக்களின் அபிப்பிராயத்தை திரிபுபடுத்துவதற்கு பாவித்தது.

மிலோசிவிக் மீதான வழக்கு முரண்பாடுகளால் நிறைந்துள்ளது. முதலாவதாக யூகோஸ்லாவியாவிற்கான சர்வதேச குற்றங்களுக்கான நீதிமன்றம் 1999 ஆம் ஆண்டு சேர்பிய படைகளால் கொசவோ அல்பானியர்கள் வெளியேற்றத்தை உருவாக்குவதில் நேட்டோவின் ஆகாயத்தாக்குதலின் பங்கு தொடர்பாக கவனமெடுக்க மறுக்கின்றது. யுத்தத்தின் முன்னர் கொசவோ விடுதலை இராணுவத்திற்கு அமெரிக்க CIA உம், ஐரோப்பிய உளவுப்படைகளும் ஆதரவளித்ததை கவனத்திற்கெடுக்கவில்லை. இதன்போது அல்பானிய கெரில்லாக்கள் சேர்பிய பொலிசாருக்கு எதிரான அச்சுறுத்தல்களையும், கொசவோவில் உள்ள சேர்பிய பொதுமக்களுக்கு எதிரான பயங்கரவாதத்தையும் கட்டவிழ்த்துவிட்டிருந்தனர்.

மிலோசிவிக் ஒரு இனவாத கொள்கையை கடைப்பிடித்தார் என்பதும், அல்பானிய மக்களுக்கு எதிரான வன்முறைத்தாக்குதல்களையும் மேற்கொண்டார் என்பது தொடர்பான எவ்வித ஐயுறவுமில்லை. ஆனால் வாஷிங்டனும், ஐரோப்பிய தலைமைகளும் அழிவுகரமான, உறுதிப்பாட்டை கலைக்கும் கொள்கையை நடைமுறைப்படுத்தியதுடன், இது இனவாத மோதல்களை தவிர்க்க முடியாததாக்கியது.

தொலைத்தொடர்பு சாதனங்களின் அறிக்கையின் படி யூகோஸ்லாவியாவிற்கான சர்வதேச குற்றங்களுக்கான நீதிமன்றம் மிலோசிவிக்கிற்கு எதிராக பொஸ்னியாவின் உள்நாட்டுயுத்தத்தின் போது நிகழ்ந்த உறுதிப்படுத்தப்படாத படுகொலைகள் வரை சுமத்துவதற்காக திட்டமிட்டிருப்பதாக தெரியவருகின்றது. அப்போது அமெரிக்காவும், ஐரோப்பாவும் பொஸ்னிய யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்து ஐக்கிய நாடுகள் சபையின் இராணுவத்தின் கட்டுப்பாட்டை உருவாக்கிய 1995 இன் டேட்றன் உடன்படிக்கையின் முக்கிய ஆதரவாளராக்கினர். Hague நீதிமன்றம் வரலாற்று உண்மைகளை கருத்திற்கொண்டும், அதன் தர்க்கவியலாலும், உறுதியாலும் வழிநடத்தப்படுமானால், அது ஜனாதிபதி கிளின்டன் உட்பட மேற்கின் தலைவர்கள் பலரை தகவல்களின் அடிப்படையில் இப்படுகொலைகளுக்கு உடந்தையாக இருந்தமைக்காக பெயர் குறிப்பிட கடமைப்பட்டுள்ளது.

மேலும் ஒருவர் மேற்கு நாடுகள் மனித உரிமைகள், யுத்த குற்ற கைதிகளை நடாத்துவது தொடர்பான அவர்களுக்குரிய முறையான இரட்டை தன்மையை எவ்வாறு எடுத்துக்காட்ட முடியும்? வாஷிங்டன் சிலியின் சர்வாதிகாரியான ஒகஸ்டோ பினோஷே பாரிய படு கொலைகளுக்காக பிரித்தானியாவில் கைதுசெய்யப்பட்டு ஸ்பெயினுக்கு நாடுகடத்தப்பட இருக்கையில் அவருக்கு எதிரான வழக்கை வெளிப்படையாக நிராகரித்தது.

இது ஜனநாயக ரீதியாக 1973 இல் தெரிவுசெய்யப்பட்ட அலன்டேயின் அரசாங்கத்தை பதவிகவிழ்த்த பினோஷேயின் சதிக்கு உடந்தையாகி அவரது பயங்கரமான அரசுக்கு ஆதரவளித்ததில் உள்ள தமது பங்கு தொடர்பாக உள்நோக்கிப்பார்க்க துணிவற்றிருக்கின்றதை காட்டுகின்றது. இதைவிட சிலியின் நிகழ்வுகளில் முக்கிய பங்குவகித்த முன்னாள் வெளிநாட்டு அமைச்சரான கென்றி கீஸில்கர் உட்பட முக்கிய நபர்களுக்கு எதிராக பெல்ஜியத்திலும், இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் வழக்குத்தொடரப்பட்டுள்ளன. ஆச்சரியத்திற்கிடமின்றி புஷ் நிர்வாகம் இவ்விசாரணைகளுடன் ஒத்துழைக்க மறுக்கின்றது.

ஐக்கிய நாடுகளின் முன்னாள் வழக்குத்தொடுனரான றிச்சட் கோல்ட்ஸ்ரோன் இஸ்ரேலின் பிரதமரான ஆரியல் ஷரோன் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களை கொலைசெய்தமைக்காக யுத்தக் கைதியாக குற்றம் சாட்டப்படவேண்டும் என கூறியுள்ளார். ஆனால் ஷரோன் அமெரிக்காவின் தொடர்ச்சியான நவீன ஆயுதங்களாலும், பில்லியன் கணக்கான டொலர்களாலும் ஆதரவளிக்கப்படுவார் என்பது தொடர்பாக எவரும் ஐயுறவுகொள்ளமாட்டார்.

சர்வதேச நீதியை மனித சமுதாயத்திற்கு எதிராக குற்றங்களுக்கு புறநிலையாக பிரயோகிக்க வேண்டுமானால், அமெரிக்காவினதும், ஐரோப்பாவினதும் அரசியல் பிரதிநிதிகளுடன் ஒப்பிடுகையில் அவ்வரிசையில் மிலோசிவிக் கீழ்மட்டத்திலேயே இருப்பார். அமெரிக்காவினதும், ஐரோப்பாவினதும் அரசியல் பிரதிநிதிகளின் நடவடிக்கைகள் கொரியாவிலும், ஆபிரிக்காவிலும், வியட்னாமிலும், ஏனைய நாடுகளிலும் இலட்சக்கணக்கான மக்களின் கொலைக்கு இட்டுச்சென்றது. அண்மைய உதாரணமான ஈராக்கிற்கு எதிரான யுத்தத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதுடன், அதன் பின்னான இத்தோற்கடிக்கப்பட்ட நாட்டின் மீது வரலாற்றில் உதாரணம் இல்லாதவாறான பொருளாதாரத்தடையாலும், ஆகாயத்தாக்குதலாலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா தனது அரசியல்வாதிகளும், படையினரும் யுத்தகுற்றங்களுக்காக குற்றம்சாட்டப்படுவதிலிருந்த பாதுகாத்து சுயமாக இயங்குவதற்கு தன் சக்திக்கு இயன்ற அனைத்தையும் செய்துள்ளது. ஒரு பரந்த குற்றங்களுக்கான சர்வதேச நீதிமன்றம் ஒன்றை உருவாக்குவதற்கு அமெரிக்கா தனது எதிர்ப்பை தெரிவித்தது. அதனை உருவாக்குவதற்கு 30 நாடுகள் ஏற்றுக்கொண்டபோதும், அதனை நிறுவுவதற்கு ஆரம்பத்தில் 60 நாடுகளின் ஒருங்கிணைப்பு தேவை. 1984 ஆம் ஆண்டு நிக்கரகுவாவின் துறைமுகங்களில் கண்ணிவெடிகளை வைத்தன்மூலம், சர்வதேச சட்டங்களை மீறியது என்பதால் முன்னாள் நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள றீகன் நிர்வாகம் மறுத்தது.

வரலாற்று உண்மையை தேடுவதற்கு மாறாக, மிலோசிவிக் மீதான வழக்கு பால்கனின் பிரச்சனைக்கு காரணமான ஏகாதிபத்திய சக்திகளின் பங்கு என்னவென்பதிலிருந்து உலக மக்களின் பகிரங்க கருத்தினை திசைதிருப்பவே பயன்படுத்தப்படும். எந்தவொரு செய்திகளிலும் பால்கனின் வரலாற்று பிரச்சனைக்கான அடிப்படை காரணம் என்னவென்பது அணுகப்படவில்லை. இது ஒரு தற்செயலானதல்ல. முக்கியமாக அமெரிக்கா பால்கனின் சீரழிவு தொடர்பான பொதுமக்களின் கவனத்தை கருத்திற்கொள்ளாது, இப்பிரதேசத்தில் தனது கொள்ளையடிக்கும் அரசியலை கிட்டத்தட்ட சுயாதீனமாக நடைமுறைப்படுத்துகின்றது.

யூகோஸ்லாவியா இரண்டாம் உலகயுத்தத்தின் போது நாஜிகளுக்கும், சேர்பிய அரசரின் படைகளுக்கும் எதிரான பொதுமக்கள் எழுச்சியால் உருவாக்கப்பட்டது. பாட்டிசான் எழுச்சி என குறிப்பிடப்படும் இவ் எழுச்சியானது டிட்டோவாலும் [Josip Broz -Tito], யூகோஸ்லாவிய கம்யூனிஸ்ட் கட்சியாலும் தலைமை தாங்கப்பட்டது. டிட்டோ வித்தியாசமான இன, மத குழுக்களை கொண்ட ஒரு பலமற்ற கூட்டரசை உருவாக்கினார். குளிர் யுத்த கால நிலைமைகளின் விஷேடமான வரலாற்று நிலைமைகளின் கீழ் டிட்டோவின் அரசாங்கமானது அமெரிக்காவிற்கும், சோவியத் யூனியனுக்கும் இடையில் பலவருடங்களாக சமாளித்துக்கொண்டு போகக்கூடியதாக இருந்தது. அத்துடன் சேர்பிய, குரோசிய, பொஸ்னிய முஸ்லீம்கள், அல்பானிய கொசவோவினர் போன்றோர்கள் உள்ளடங்கிய வித்தியாசமான இன கூட்டுக்களுக்கு அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பை வழங்கியதன் மூலம் ஒரு ஐக்கியப்பட்ட கூட்டமைப்பை பாதுகாத்துக் கொள்ளக் கூடுயதாக இருந்தது.

பொஸ்னிய, கொசவோ முரண்பாடுகளுக்கான அடித்தளம் 1980 களின் முடிவிலும், 1990 களின் ஆரம்பத்திலும் மேற்குநாடுகளால் கட்டளையிடப்பட்ட கொள்கைகளை கடைப்பிடிக்கவும், உலக வங்கியினதும், சர்வதேச நாணய நிதியத்தினதும் சீர்திருத்த கொள்கைகளை நடைமுறைப்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டதால் யூகோஸ்லாவியா உடைந்ததன் விளைவாகும். மேற்கினது நோக்கம் அரசின் கட்டுப்பாட்டிலிருந்த பொருளாதாரத்தை இல்லாதொழிப்பதும் யூகோஸ்லாவியா மீது சர்வதேச மூலதனத்தின் ஆழுமையை புனருத்தானம் செய்வதுமாகும்.

1980 களின் இறுதியிலும், 1990 களின் ஆரம்பத்திலும் மேற்கின் அழுத்தம், பணவீக்கத்தையும், வேலையின்மையையும் அதிகரிக்கசெய்தது. இந்நிலைமைகள் யூகோஸ்லாவிய தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் வேலை நிறுத்தங்களையும், பாரிய எதிர்ப்பு ஊர்வலங்களையும் உருவாக்கியது. வர்க்கப்போராட்டத்தை பிளவடையச் செய்வதற்காக முன்னாள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் பிரதிநிதிகளான மிலோசிவிக்கும், அவரைப்போன்ற குரோசியாவின் பிரான்கோ ருஜ்மான் ஆகியோரும் மேற்கின் ஆதரவை பெறுவதற்கான போட்டியில் தேசியவாத உணர்வுகளை உருவாக்கிவிட்டனர். மிலோசிவிக் ஆரம்பத்தில் மேற்கின் பாதுகாவலனும், முதலாளித்துவ சந்தைப்பொருளாதார கொள்கையின் ஆதரவாளனுமாவார்.

1991 இல் ஜேர்மனி, தனது மறுஇணைப்பின் பின்னர், ஒரளவு செழிப்பான சுலோவினியாவை யூகோசிலாவியாவிலிருந்து பிரிப்பதன் மூலம் பால்கனில் தனது நலன்களை பாதுகாத்துக்கொள்ள சிறப்பாக இருக்கும் என கருதியது. இப்பிரிவினைத் தொடர்ந்து குரோசியாவும் பிரிந்தது. ஆரம்பத்தில் அமெரிக்கா யூகோசிலாவியா பிரிவதை எதிர்த்தது. ஆனால் விரைவில் அது பொஸ்னியாவின் சுதந்திரத்திற்கான மேற்கின் முக்கிய பாதுகாவலனாகியது.

பால்கனினதும், யூகோஸ்லாவியாவினதும் வரலாற்றை ஏற்றுக்கொண்ட வரலாற்றாசிரியர்கள் யூகோஸ்லாவியாவின் விரைவான உடைவானது இனவாத யுத்தத்திற்கு இட்டுச்செல்லும் என எச்சரித்தனர். உதாரணமாக குரோசியாவினதும், பொஸ்னியாவினதும் பிரிவானது அதுவரை சிறுபான்மையினத்தவர்கள் கூட்டமைப்பின் கீழ் அரசியலமைப்பு ரீதியாக அனுபவித்துவந்த பாதுகாப்பை திடீரென இல்லாது செய்தது. தேசியவாத அரசியல்வாதிகளான சேர்பியாவின் மிலோசிவிக், குரோசியாவின் ருஜ்மான், பொஸ்னியாவின் அலியா இஸட்பிக்கோவிஜ் போன்றோர்கள் மக்களின் பயத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தமது முன்னோக்கை முன்வைத்தனர்.சிறுபான்மையினருக்கு எதிரான ''இனச்சுத்திகரிப்பு'', மற்றும் ஏனைய பயங்கரவாத நடவடிக்கையில் இம்மூன்று தலைவர்களுக்கு இடையில் உள்ள வித்தியாசம் மிகக்குறைவு.

முக்கியமாக அமெரிக்கா உட்பட மேற்கினால் வழங்கப்பட்ட யூகோஸ்லாவியாவின் பிரிவிற்கான ஆதரவு மிலோசிவிக்குடனான முரண்பாட்டிற்கு இட்டுச்சென்றது. சேர்பிய ஆளும்தட்டு தான் முக்கிய பங்குவகிப்பதற்கு ஒரு ஒன்றிணைந்த நாட்டை பாதுகாப்பதில் மிகவும் ஆர்வத்தை காட்டும் என வாஷிங்டன் முடிவெடுத்தது. கடந்தகாலங்களில் பலதடவை நிகழ்ந்ததுபோல், முன்னாளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசியல் வாரிசுகளாக இருந்த பனாமாவில் நொரிகா, ஈராக்கில் சதாம் ஹுசெயின் போல் இத்தடவை மிலோசிவிக் அமெரிக்காவின் துப்பாக்கியின் குறிவைப்புக்குள்ளானார்.

அமெரிக்க- நேட்டோ யுத்தத்தின்போது கொசவோ தேசிய விடுதலை இயக்கத்திற்கான அமெரிக்காவின் ஆதரவும், அல்பானிய தேசியவாதிகளை அரவணைத்தும் சேர்பிய எதிர்ப்புக் கொள்கைகளின் பகுதியாகும். யூகோஸ்லாவியாவிற்கான சர்வதேச குற்றங்களுக்கான நீதிமன்றத்தின் மிலோசிவிக்குக்கு எதிரான தீர்ப்பும் இவ் ஆக்கிரமிப்பு கொள்கையின் தொடர்ச்சியாகும்.

நேட்டோ தனது 76 நாள் குண்டுத்தாக்குதல் பிரசாரத்தை கொசவோ அல்பானியர்களின் மீதான இனப்படுகொலையை தடுப்பதற்காக செய்ததாக பிரச்சாரம் செய்கின்றது. மிலோசிவிக் ''சேர்பிய கிட்லர்'' ஆக்கப்பட்டார்.

மிலோசிவிக்கை தற்கால கிட்லராக காட்டுவது கூடுதலான மிகைப்படுத்தலும், மிகவும் ஆத்திரமூட்டலுமாகும். முதலாவதாக மிலோசிவிக் பொருளாதாரம் பலவீனமான ஒரு சிறிய நாட்டின் முதலாளித்துவ தலைவராகும். அது நாஜி ஜேர்மனியை போல் ஒரு ஏகாதிபத்தியமல்ல. இரண்டாவதாக அவர் பாரிய அழிப்பு கொள்கைகளை கொண்டிருந்ததற்கான எவ்வித ஆதாரமுமில்லை. மற்றும் கொசவோவில் சாதாரண மக்களின் இறப்பின் அளவு நாஜிகளின் கொலைமுகாம்களில் நிகழ்ந்தின் அளவிற்கு ஒப்பிக்கூடியதல்ல.

அமெரிக்க- நேட்டோ தாக்குதலின் பின்னர், யூகோஸ்லாவியாவிற்கான சர்வதேச குற்றங்களுக்கான நீதிமன்றம் கொசவோ யுத்தத்தின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட இறந்த உடல்களின் அளவு '' 10,000 குறைவானது'' என குறிப்பிட்டுள்ளது. ஆனால் இதுவரை எங்காவது இந்தளவிலான உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

மிலோசிவிக்தான் சர்வதேச குற்றவாளிகளின் நீதிமன்றத்தின் முன்னர் முதலாவதாக விசாரிக்கப்படும் ஒரு நாட்டின் தலைவராக இருப்பார். இது யுத்தக்குற்றவாளிகள் தமது உத்தியோகபூர்வ பதவிகளின் பின்னர் ஒழித்துக்கொள்ள முடியாததற்கான புதிய காலகட்டத்தின் விடிவு எனப்புகழப்படுகின்றது. இவ்வாறான கருத்துக்களை ஏற்றுக்கொள்வதானது அரசியல் ரீதியாக மிகவும் சாதுர்யமற்றதாகும்.

எல்லாவிதமான குற்றங்களையும் அவர்களே செய்த பின்னர், அமெரிக்க, ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தால் அல்லது அவர்களால் கட்டுப்படுத்தப்படும் சர்வதேச அமைப்புக்களாலும் சர்வதேச நீதி அமுல்படுத்தப்படலாம் என்பது நகைப்புக்கிடமானதாகும். மிலோசிவிக் அரசியல் காரணங்களுக்காக தண்டனைக்குள்ளாக்கப்படுவது பிரயோசனமற்றதாகவே கருதலாம், ஏனெனில் இப்படியான நடவடிக்கைகள் ஏகாதிபத்தியத்தின் தலைவர்களுக்கோ அல்லது அவர்களின் அடிவருடிகளுக்கோ பிரயோகிக்கப்படபோவதில்லை.