WSWS :செய்திகள்
& ஆய்வுகள் :கணனி
தொழில்நுட்பம்
The Microsoft lawsuit: Appeals court ruling favours company
மைக்ரோசொப்ட்
வழக்கு: மேன்முறையீட்டு நீதிமன்றம் கம்பெனிக்கு சாதகமாக தீர்ப்பு
By Mike Ingram
6 July 2001
Use
this version to print
கொலம்பியா மாவட்டத்து அமெரிக்க மேல்முறையீட்டு
நீதிமன்றமானது, மைக்ரோசொப்ட் இன் தனி ஆளுமை உடைக்கப்பட
வேண்டும் என்ற நீதிபதி தோமஸ் பென்பீல்ட் ஜாக்சனின் [Thomas
Penfield Jackson] தீர்ப்பை தள்ளுபடி செய்துள்ளது.
நீதிபதிகள், நீதிபதி ஜாக்சனின் நடத்தையைப்பற்றி கடுமையாகக்
குறை கூறியதுடன் இவ்வழக்கில் இனிவரும் விசாரணைகளில் அவரை
அகற்றுமாறும் கூறியுள்ளனர்.
இருப்பினும் எல்லாம் எல்லோருக்கும் என்றவாறு
முன்வைக்கப்பட்ட தீர்ப்பில், ஏழு நீதிபதிகளைக் கொண்ட குழு நீதிபதி
ஜாக்சனின் பெரும்பாலான விவாதங்களை நிறுத்தி வைத்துள்ளதுடன்
வழக்கை கீழ் நீதிமன்றத்திற்கே திருப்பி அனுப்பி வைத்துள்ளது.
மைக்ரோசொப்ட் நிறுவனம் வின்டோஸ் இயக்குமுறையுடன்
[Windows operating system]
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வெப் பிரவுசரையும்
[Internet Explorer web browser]
சேர்த்து ஒன்றிணைப்பதன் மூலம் சட்டவிரோதமாக செயல்படுகிறது,
மற்றும் இது தனது ஏகபோகத்தைக் காப்பதற்கான வரிசைக்கிரமமான
சட்டவிரோத நடவடிக்கையின் ஒருபகுதி என்ற நீதிபதி ஜாக்சனின் தீர்ப்பினை
நிறுத்தி வைத்துள்ளது. நெட்ஸ்கேப் கம்யூனிகேசன் [Netscape
Communications - AOL Time Warner -இப்பொழுது
ஏஓஎல் டைம் வார்னரின் பகுதி], ஆப்பிள் கம்ம்பியூட்டர் [Apple
Computer], இன்டெல் [Intel]
மற்றும் சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் [Sun
Microsystems] போன்ற கம்பெனிகளுடன்
வைத்திருக்கும் வியாபாரத் தொடர்புகளில் தனது ஏகபோகத்தைப்
பாதுகாக்க மைக்ரோசொப்ட் நிறுவனம் சட்டவிரோத நிலைகளை
எடுத்திருக்கிறது என்ற தீர்ப்பினையும்கூட நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது ஜாவா
புரோகிராமிங் மொழியின் [Java
programming language]
பதிப்பைத் தயாரிப்பதில் ஏனைய
கணனிகளுக்கு ஒவ்வாத முறையில் தயாரித்ததில் சட்டவிரோதமாக
செயல்பட்டுள்ளது, இதன் மூலம் தளம் கடந்து புரோகிராமிங்
[Cross platform programming]
சூழலை உண்டுபண்ணுதற்கான சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின்
[Sun Micro systems]
முயற்சிகளைக் கவிழ்த்துள்ளது எனவும் நீதிபதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்..
"ஜாவா அபிவிருத்திக் கருவிகள் தொடர்பான
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நடத்தை இயக்குமுறையின் உயர்தன்மையையோ
அல்லது அதனைச் செய்தவர்களுக்கோ அது தொடர்பாக அறிந்துகொள்ளகூடமுடியாத
வகையில் அதன் இயக்குமுறையை அமைத்திருப்பதால் இதனூடாக
அதன் ஏகபோகத்தைப் பாதுகாக்க சேவை செய்துள்ளதுடன் மற்றும்
அதனால் சந்தையில் போட்டிக்கு எதிரானதாய் இருக்கின்றது",
என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. "ஆச்சரியப்படாவகையில், அபிவிருத்தியாளர்களை
ஏமாற்றுவதற்கான அதன் பிரச்சாரத்திற்கு போட்டி சார்பு விளக்கம்
(pro-competitive explanation)
எதனையும் மைக்ரோசொப்ட் நிறுவனம் வழங்கவில்லை"
என நீதிபதிகள் மேலும் சேர்த்தனர் .
மைக்ரோசொப்ட் நிறுவனம் இணைய வாய்ப்பு
வழங்குபவர்கள் (ISPs)
உடனான சிறப்பு ஒப்பந்தங்கள் ஷெர்மான் ரஷ்ட் எதிர்ப்பு சட்டத்தை
(Sherman Antitrust Act)
மீறுகிறது. மைக்ரோசொப்ட் பிரவுசரை Apple
பயன்படுத்துவதற்கான சிறப்பு பேரத்தை
இல்லாது செய்யப்போவதாக அச்சுறுத்தி, Apple
இன் பதிப்பை (Version)
Microsoft Office
உள்ளடக்கச்செய்தது, என்ற நீதிபதி ஜாக்சனின் தீர்ப்புடன் நீதிமன்றம்
உடன்பட்டது.
மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கும் Apple
க்கும் இடையிலான சிறப்பு பேரங்கள்
போட்டி பிரவுசர்களுக்கு வழங்குவதன் மீது கணிசமான பாதிப்புக்களைக்
கொண்டிருக்கிறது" என நீதிமன்றம் கூறியது.
நீதிபதி ஜாக்சனை வழக்கில் இருந்து அகற்றுவது
தொடர்பாக நீதிமன்றம் இவ்விலக்கல் அலட்சியமாக ஒருபோதும்
எடுத்துக் கொள்ளப்படக்கூடாது, ஏனெனில் வழக்கு நிலுவையில்
இருக்கும்போது செய்தியாளர்களுடனான அவரது பேட்டியின் வெளிச்சத்தில்
இவ்விலக்கல் தேவையானது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. நீதிபதி
ஜாக்சனின் துண்டாடல் தீர்ப்போடு, அது முடிந்து போகவில்லை
வழக்கு இன்னும் நிலுவையிலேயே உள்ளது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
சட்ட நிலைப்பாட்டிலிருந்து மிகவும் அக்கறை கொள்ளவேண்டியது
என்னவென்றால், ஜாக்சன் தனது தீர்ப்பை அறிவிப்பதற்கு முன் துண்டாடல்
திட்டம் பற்றிய சான்றுகள் பற்றிய விசாரணைகளுக்கு அனுமதி மறுத்தார்
என்பதுதான். அங்கு "நிவாரணக் கட்டத்தின் பொழுது பல உண்மைகள்
தொடர்பாக வாதி பிரதிவாதிகள் சர்ச்சை கொண்டிருக்கும்
படியான அக்கறை கொண்ட சந்தேகம் எதுவுமில்லை"
என்று நீதிபதி ஜாக்சன் கூறினார்.
நீதிபதி ஜாக்சனை அகற்றல் மைக்ரோசொப்ட்
நிறுவனத்திற்கு நீதிபதிகள் வழங்கிய ஒரே ஒரு சலுகை அல்ல. ஒன்றிணைந்த
உற்பத்திகளை செய்வதற்கு தாம் அனுமதிக்கப்படவேண்டும்
என்ற மைக்ரோசொப்ட் வாதங்களை ஏற்காத அதேவேளை,
மேல் முறையீட்டு நீதி மன்றம் உற்பத்தி வடிவத்திற்கு புதிய தர நிர்ணயம்
செய்துள்ளது, அது உண்மையான தீர்ப்புக்கு எதிராகப் போகிறது.
கடந்த காலத்தில், நீதிமன்றங்கள் ஏகபோக உற்பத்தியுடன் இணைந்த
எந்த தனிப்பட்ட உற்பத்தியும் சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்திருந்தன.
மைக்ரோசொப்ட் வழக்கின் ஆரம்ப விசாரணைகளில் இந்த
தர நிலைப்பாடுதான் நீதிபதி ஜாக்சனால் பயன்படுத்தப்பட்டது.ஆனால்
கடந்த வாரம் மேல் முறையீட்டு நீதிமன்றத்தால் ஏற்படுத்தப்பட்ட
தரநிர்ணயமானது, போட்டிக்கான சாத்தியமான தீமை, நுகர்வோர்களுக்கான
நன்மையைவிட விஞ்சி நின்றால் மட்டும்தான் உற்பத்தியுடன்
இணைப்பது சட்டவிரோதமானது என்று கூறுகிறது, இது நிரூபிப்பதற்கு
கடினமானது.
துண்டாடல் ஆணையை மீண்டும் வழங்க கீழ் நீதிமன்றத்தில்
இன்னும் வாய்ப்பு இருந்தாலும், பல காரணங்களால் அது குறைவான
சாதகத்தையே கொண்டிருக்கிறது.
இவற்றுள் முதலாவது அரசாங்கத்தில் ஏற்ப்டட
மாற்றம் ஆகும். மைக்ரோசொப்ட் வழக்கு விவகாரத்தில் கட்சிகளிடையே
கடும்பிளவு இல்லாதிருந்தாலும் --நீதிபதி ஜாக்சனே ஒரு றேகனிச
குடியரசுக்கட்சியாளர்-- ஜனாதிபதி புஷ்ஷிடமிருந்து மிக சாதகமான
பதிலை அந்நிறுவனம் பெறும் என்பது பொதுவாக கணிக்கப்பட்ட
ஒன்று. அந்த உண்மை இதுதான், குடியரசுக்கட்சி பிரச்சாரத்திற்கு
பில்கேட்டின் நிறுவனம் 25 லட்சம் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது.
தீர்ப்பின் வழியே நீதித்துறை வேலை செய்து முடிக்கும்
வரைக்கும் ஜனாதிபதி கருத்துக்கூறாது இருப்பார் என்று வெள்ளை
மாளிகைகூறுகிறது, ஆனால் இப்பிரச்சினை தொடர்பான அவரது
கருத்தில் இரகசியம் ஒன்றும் இல்லை. "பொதுவாக பேசுவதாயின்,
நமது சமுதாயத்தில் சட்ட உரிமை பற்றி எதிர்த்துப் போராடுவது
அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது என நம்புகிறார்" ஜனாதிபதி
என்று புஷ்ஷின் பேச்சாளர் ஏர்பிளெய்ச்சர் கூறினார்.
கம்பெனி சட்டவிரோதமாக செயல்பட்டிருக்கிறது
என்ற தீர்ப்பை உயர்த்திப் பிடிக்கும் அதேவேளையில் நீதிபதி ஜாக்சனை
அகற்றலும் அவரது துண்டாடல் ஆணையை ரத்துச் செய்தலும்
--- மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் அரை மனதான முடிவு என நம்பப்படுகிறது.
இது சமரசத்திற்கு போதுமான சாத்தியத்தையும் நீதிமன்றத்துக்கு
வெளியில் தீர்த்துக் கொள்ளக்கூடியதற்கான தளத்தையும் கொண்டுள்ளது.
மைக்ரோசொப்ட்டுக்கு சாதகமான இரண்டாவது
காரணி அமெரிக்கப் பொருளாதாரத்தினுள்ளே அதற்குரிய
பேரளவு முக்கியத்துவமாகும். வழக்கு மைக்ரோசொப்ட் பங்குகள்மீது
பெருமளவில் எதிர்மறை விளைவையே ஏற்படுத்தியது. உயர்தொழில்
நுட்ப நிறுவனங்களின் பங்கு முதல்கள் துடைத்துக்கட்டப்பட்டதில்
இதுவும் குறிப்பிடத்தக்க காரணியாக இருந்திருக்கிறது. மேல்முறையீட்டு
நீதிமன்றத்தின் முடிவானது, அந்நிறுவனத்தின் பங்குகள் மூடப்படும்போது
இருந்த 72.74 டாலர் அளவில் இருந்து 2.25சதவீதம் அதிகரித்து
76.15 டாலர்களுக்கு உயர்ந்திருந்தது, இவ்வாறு பங்கு முதல்சந்தையில்
பேரார்வத்துடன் வரவேற்கப்பட்டது.
இறுதியாக, 11 ஆண்டுகளுக்கு முன்னர் அந் நிறுவனம்
தொடங்கப்பட்டதன் பின்னர் இருந்து கம்பெனி தொடர்பானவை
நிறையவே மாறி உள்ளன. மைக்ரோசொப்ட் தொடர்பான
பேசப்படாத அம்சம் டெஸ்க்ரொப் கணினி (Desktop
computers) சந்தையில் தனது ஏகபோகத்தைப்
பாதுகாக்க, மைக்ரோசொப்ட் நிறுவனமானது ஜப்பானிலும்
ஐரோப்பாவிலும் அமெரிக்க போட்டியாளர்களுக்கு வழிதிறந்துவிடும்
புதுமுறை காணலுக்கு இடம்பெயர்ந்தது என்ற கிளிண்டன் அரசாங்கத்தின்
நம்பிக்கை ஆகும்.
தொழில் நுட்பமானது டெஸ்க்ரொப்பிலிருந்து எண்ணற்ற
நகரும் சாதனங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டபிறகு, அது
புது முறை காணலையும் நெகிழ்வுத் தன்மையையும் வேண்டி நிற்கும்பொழுது,
துல்லியமாக இந்தக் கட்டத்தில் துண்டாடல் ஆணை வழங்கப்பட்டது
முற்றிலும் பொருந்தாததாகும். மைக்ரோசொப்ட் இந்த
மாற்றங்களை புரிந்துகொள்ளத் தவறியது மற்றும் இணையம் [Internet]
பரந்த தொடர்புசாதனமாக தோன்றியதற்கு அந்நிறுவனத்தின்
காலந்தாழ்த்திய பிரதிபலிப்பு என்பன பெரிதும் கவனிக்கப்படத்தக்கவை
ஆகும்.
நீதிபதி ஜாக்சனின் தீர்ப்பிற்குப் பின்னரான காலகட்டத்தில்,
மைக்ரோசொப்ட் அதனது மூலோபாயத்தை நேரடியாக இணையத்தை
[Internet]
நோக்கி மாற்றிக் கொண்டது. அதனுடைய நெட் மூலோபாயம்
என்று அழைக்கப்படுவது அந்நிறுவனத்தை பாரம்பரியமாய் டெஸ்க்டாப்பில்
தங்கியிருந்த நிலையில் இருந்து அகற்றி, அதிகரித்து வரும் போட்டிமிக்க
இணைய சேவையாளர்களின் சந்தைக்குள் நுழைத்திருக்கிறது. புதிய
மூலோபாயத்திற்கு மையமாக இருப்பது மைக்ரோசொப்ட்
வேர்ட் [Microsoft Word]
எனும் சொல்லாளர் [word
processors] மற்றும் மைக்ரோசொப்ட்
ஆபீஸ் [Microsoft Office ]
பகுதியின் ஏனையபகுதிகள் போன்ற வர்த்தகப் பயன்பாட்டுக் கருத்துருக்கள்
தொலைவிலிருந்து கட்டுப்படுத்தும் சேர்வர்களாலும் [Remote
servers]
அதிவேக வலைப்பின்னல்களில் அடையக்கூடியதாகவும்
இருக்கின்றன என்பதே ஆகும். இதன் முக்கிய சாதகமானதன்மை
நகருகின்ற தொழிலாளர்கள் அவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ
அங்கெல்லாம் ஒரே வேலைச் சூழலைப்பெற முடியும். அரசியல்
ஸ்தாபனப் பகுதிகளுக்குள்ளேயான மென்மையான அணுகுமுறையானது,
அண்மைய மூலோபாய மாற்றங்கள் ஊடாக மைக்ரோசொப்ட்
நிறுவனம் (அதன் மூலம் அமெரிக்க ஐக்கிய நாடுகள்) அடுத்த
தொழில் நுட்பப் புரட்சி அலைக்கு வழி அமைக்கும் என்ற நம்பிக்கையுடன்
நன்றாகப் பிணைக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும் புஷ் நிர்வாகத்தின்
பகுதியில் இருந்து எடுக்கப்படும் முடிவு அது வழக்கை ஒரேயடியாக
கைவிடுவதாக இருந்தாலும் சரி அல்லது துண்டாடல் வகையிலான
தீர்வுக்கு வந்தாலும் சரி, அவை பிரச்சினைகளை அதிகரித்துவைக்கும்.
அத்தகைய எந்தவித தீர்வுக்கும் அரசாங்கத்தின் சக வழக்குத்தொடுனர்களிடமிருந்தும்
-- அதாவது 19 மாநிலங்கள் மற்றும் கொலம்பியா மாவட்டத்தின்
வழக்குத்தொடுனர்களினரின் உடன்பாடு தேவைப்படும், அவற்றுள்
இரண்டு, நீதிபதி ஜாக்சனால் வழங்கப்பட்ட துண்டாடல்
முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்திருக்கின்றன.
மைக்ரோசொப்ட், அரசாங்கத்தால் புறக்கணிக்கத்தகாத
செய்தியாகிவிட்டது பற்றியும் அடிப்படை நம்பிக்கை விரோத விசாரணைகளைத்
தூண்டிவிடும் அதே சட்ட அத்து மீறல்களைத் திரும்பச் செய்கிறது
என்பது பற்றியும் மாநில அரசுகள் கவலையை வெளிப்படுத்தியுள்ளன.
மைக்ரோசொப்ட்டின் புதிய இயக்கு முறைகளான விண்டோஸ்
XP, எக்ஸ்புளோரர் பிரவுசரை மட்டும்
அல்லாமல் உடனடிதகவல் வழங்கலையும் [Instant
messaging] விண்டோஸ் மீடியா
பிளேயரையும் [Windows Media Player]
உள்ளடக்கி இருக்கிறது.
மாநில அரசுகள் ஒரு தீர்வு பற்றி திருப்திப்பட முடிந்தாலும்
கூட, மைக்ரோசொப்ட்டின் போட்டியாளர்களான AOL
மற்றும் டைம் வார்னர் [Time
Warner] மற்றும் வீடியோ நிறுவனமான
ரியல் நெட்வொர்க் [Real
Networks] போன்றவற்றால் எதிர்
காலத்தில் வழக்குகள் தொடுப்பதற்கான வழி இன்னும் திறந்துதான்
இருக்கிறது, இது இவ்வாறு உயர் தொழில் நுட்பப் பங்குகளின் மத்தியிலான
மேலும் நிலையற்ற தன்மை தொடரும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
|