WSWS:
செய்திகள் & ஆய்வுகள் :
மத்திய
கிழக்கு
Sharon makes clear his expansionist policies for Israel
ஷரோன் இஸ்ரேலுக்கான தனது விரிவுபடுத்தும்
கொள்கைகளை தெளிவுபடுத்துகின்றார்
By Chris Marsden and Jean Shaoul
7 July 2001
Use
this version to print
இஸ்ரேல் பிரதமரான ஆரியல் ஷரோன் லிகுட் கட்சியின்
விரிவுபடுத்தும் பாரம்பரிய கொள்கையான ''பாரிய இஸ்ரேலுக்கு''
முற்றுமுழுதாக அடிபணிந்து பாலஸ்தீனர்களுடனான ஒரு உடன்படிக்கை
ஏற்படுவதற்காக எஞ்சியிருந்த நம்பிக்கைகள் அனைத்தையும் இல்லாதொழிக்க
முயல்கின்றார்.
பாலஸ்தீனர்களுடனான இஸ்ரேலின் முரண்பாட்டுக்கு
ஆதரவு தேடி ஜேர்மனிக்கும், பிரான்சுக்கும் இரண்டுநாள் விஜயத்தை
தற்போது ஷரோன் முடித்துள்ளார். ஜேர்மனியின் பிரதமரான ஹெகார்ட்
ஷரோடரிடமிருந்து அவருக்கு ஒரளவு நல்ல வரவேற்புக்கிடைத்து.
ஏனெனில் ஜேர்மனி இஸ்ரேலுக்கான முக்கிய முதலீட்டாளராகவும்,
வர்த்தக பங்காளராகவும், ஆயுத தளபாடங்களின் விநியோகஸ்தராக
அமெரிக்காவிற்கு எதிராக போட்டியிட விரும்புகின்றது. ஆனால்
பிரான்சில், அரபுநாடுகளுடனான அதனது நீண்டகால இராஜதந்திர
தொடர்புகள் காரணமாக ஷரோனுக்கு ஒரு முழுமனதான வரவேற்பு
கிடைக்கவில்லை. பிரான்சின் ஜனாதிபதியான சிராக் பாலஸ்தீன தலைவரான
யாசீர் அரபாத்தின் நிலைமையை பலவீனப்படுத்தவேண்டாம் எனவும்,
அது ''எதிர்விளைவுகளை'' உருவாக்கும் என எச்சரித்தார்.
அதேவேளையில் பாரிசில் 1000 ஆர்ப்பாட்டக்காரர்கள் ''ஷரோன்
கொலையாளி'' என கூக்குரலிட்டதுடன், அவர் யுத்த குற்றவாளிகளின்
நீதிமன்றத்திற்கு முன்கொண்டுவரப்பட வேண்டும் எனவும் கோரினர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அலுவலகம் இருக்கும் பெல்ஜியத்திற்கு
ஷரோன் விஜயம் செய்யவில்லை. ஏனெனில் 1982 ஆம் ஆண்டு அவர்
பாதுகாப்பு அமைச்சராக இருக்கையில் பெய்ரூட்டிலுள்ள பாலஸ்தீன
அகதி முகாம் மீது லெபனானின் கிறிஸ்தவ படையுடன் சேர்ந்து செய்த
படுகொலைகளுக்காக பெல்ஜியத்தில் சட்ட ஆய்வுகள் செய்யப்படுவதற்கான
சாத்தியக்கூறுகள் இருந்தமையாலாகும்.
CIA இன் தலைவரான George
Tenet ஆல் மேற்கொள்ளப்பட்ட சமாதான
முயற்சிகள் தோல்வியடைந்து விட்டது என ஷரோன் அறிவிக்காததற்கு
காரணம் மேற்குக்கரையிலும், காஸா பிரதேசத்திலும் அதனது
ஒடுக்குமுறை மீதான சர்வதேச கண்டனங்களை தவிர்த்துக் கொள்வதற்காகும்.
ஷரோன் பேர்லினை வந்தடைந்தபோது தென்
காஸாபிரதேசத்தின் ஒரு நகரமான Rafah
இல் மூர்க்கமான மோதல் தொடங்கியதுடன்,
இஸ்ரேலிய தாங்கிகளால் ஆக்குறைந்தது 20 வீடுகள் சேதமடைந்தன.
அதே நாள் மேற்குக்கரையிலுள்ள நகரமான Ramallah
ஏற்பட்ட மோதலில் ஒரு பாலஸ்தீன
குடிமகன் கொல்லப்பட்டார். Jenin
நகரத்துக்கு அண்மையில் யூதக்குடியேற்ற
பெண்மணி ஒருவர் கொல்லப்பட்டதற்கான பதில் தாக்குதலில்
இஸ்ரேலிய படையினர் 30 பாலஸ்தீன கடைகளை நொருக்கினர்.
ஷரோனின் ''சமையல் பாராளுமன்றம்'' தாம்
இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதால் மூன்றுகிழமைக்கு முன்னர் யுத்தநிறுத்தத்தை
ஏற்றுக்கொண்டது. இஸ்ரேலியர்களின் முக்கிய ஆதரவாளர்களால்
வரையப்பட்ட இந்த உடன்படிக்கை வன்முறையை முற்றாக இல்லாதொழிப்பதற்கான
முழுப்பொறுப்பையும் பாலஸ்தீன தலைவரான யசீர் அரபாத்தின்
மீது சுமத்தப்பட்டது. இவ்வுடன்படிக்கையை நிறைவேற்றமுடியாது
செய்யப்படும் அரபாத்தின் எந்தவொரு நடவடிக்கையும், இஸ்ரேல்
சமாதானத்தை ஏற்படுத்த விரும்பிய நடவடிக்கைகளை தோல்வியடையச்
செய்வதால் பாலஸ்தீனர்களுக்கு எதிராக ஒரு முழு அளவிலான இராணுவ
நடவடிக்கையை மேற்கொள்ளுவதை தவிர வேறு எந்த சாத்தியக்கூற்றையும்
இல்லாது செய்துள்ளது என இஸ்ரேலால் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை இஸ்ரேல் யுத்த நிறுத்தத்தை தோல்வியடையச்
செய்வதற்கு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்கின்றது. அமெரிக்க
ஜனாதிபதி புஷ் இனதும், அரசு செயலாளரான கொலின் பெளல்
இனதும், ஐக்கிய நாடுகளினது செயலாளர் கொபி அனானினதும்
தீவிரமான இராஜதந்திர நடவடிக்கைகளினதும் மத்தியிலும் ''யுத்த
நிறுத்தம் தொடரும் என்பதற்கான அறிகுறிகள் காணப்படவில்லை''
என ஐக்கிய நாடுகளுக்கான மத்திய கிழக்கு பிரதிநிதியான Terje
Roed Larsen குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலின் மூர்க்கமான ஆக்கிரமிப்பிற்கு எதிரான
பாலஸ்தீனர்களின் எதிர்ப்பை நிபந்தனையின்றியும், ஒருதலைப்பட்டசமாகவும்
அவர்கள் நிறுத்தாதவரை பேச்சுவார்த்தைக்கு திரும்ப
ஷரோன் மறுத்துள்ளார். ''முழுதான அமைதி'' இல்லாது தாம் ஒத்துக்கொண்ட
7 நாள் பரீட்சாத்தமான யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு
வாராது என இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. அமைதிக்கான 6 கிழமையினுள்
ஏதாவது வன்முறைகள் நிகழுமானால், திரும்பவும் அத்தவணை
பின்னோக்கித் திருப்பப்படும் எனவும் குறிப்பிட்டது. கொள்கை
ரீதியான யுத்த நிறுத்தம் ஒப்புக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு 3 கிழமைகள்
கடந்துவிட்டது, இதுவரை 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களின்
பெரும்பான்மையானோர் பாலஸ்தீனர்கள். பாலஸ்தீனர்கள் ''ஏழு
நாள் யுத்தநிறுத்த பரீட்சாத்தகாலம்'' முடிந்துவிட்டதாக இஸ்ரேலியர்களை
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டபோது, அது இன்னமும்
ஆரம்பிக்கப்படவில்லை என இஸ்ரேல் அரசாங்கம் கூறியதிலிருந்து
லிகுட் கட்சியினர் யுத்த நிறுத்தம் தொடர்பாக எந்தளவிற்கு எதிர்ப்பாக
இருக்கின்றார்கள் என்பது எடுத்துகாட்டப்படுகின்றது.
இஸ்ரேல் மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களின்
மீதான தடையை இன்னும் அமுல்படுத்தியுள்ளது. முக்கிய பாலஸ்தீன
நகரங்களான Nablus, Hebron,
Tulkram போன்றவை முற்றாக சுற்றிச்சூழப்பட்டுள்ளன.
இது யூத குடியேற்றவாதிகள் தமது வஞ்சனையை தீர்த்துக் கொள்ளவதற்காக
பாலஸ்தீன கிராமங்களுக்கு அருகில் காவல் நிலையங்களையும்
அமைப்பதற்கும், பாலஸ்தீனர்களின் பயிர்களை நாசம் செய்வதற்கும்
வழியமைத்துள்ளது. 25 யூன் மாதம் இராணுவத்தால் முற்றுமுழுதாக
சூழப்பட்டுள்ள 400 குடியேற்றவாசிகள் வாழும் ஹப்ரோன் நகரத்தில்
முழு அளவிலான மோதல் வெடித்தது. ஜெருசலமை விட மேற்குகரையிலும்,
காஸா பிரதேசத்திலும் செழிப்பான நிலத்தையும், நீர்வள வசதியும்
உள்ள பிரதேசத்தை 400,000 குடியேற்றவாசிகள் கட்டுப்பாட்டினுள்
வைத்திருக்கின்றனர்.
முன்னாள் அமெரிக்க செனட்டரான George
Mitchell இன் குழுவின் அறிக்கையில் சமாதான
உடன்பாட்டுக்காக முன்மொழியப்பட்டவை மேற்குக்கரையிலும்,
காஸாவிலும் மேலும் சியோனிச குடியேற்றங்களை அமைப்பதை
நிறுத்தும்படி ஆலோசனை கூறியது. ஆனால் ஷரோன் குடியேற்றங்கள்
அகற்றப்படுவதை எதிர்த்துடன், மேற்குக்கரையில் ஏற்கனவே
அமைக்கப்பட்டுள்ள 6000 வீடுகளுடன் மேலும் 700 புதிய வீடுகளை கட்ட
அறிவித்துள்ளார். அவர் இச் செலவுகளுக்காக மேலும் 500 மில்லியன்
டொலருக்கு பாராளுமன்றத்திடம் பெயரளவிலான அனுமதி கேட்டுள்ளார்.
இஸ்ரேல், வழமையாக 90% ஆன ஆக்கிரமிக்கப்பட்ட
பிரதேசத்திற்கு பாலஸ்தீனர்கள் திரும்புதற்கான தமது மனமுவந்த
கோரிக்கையை அவர்கள் கடந்த வருடம் நிராகரித்ததை கூறுகின்றபோதும்,
இஸ்ரேலியர்களோ அல்லது George
Mitchell இன் குழுவினரோ எவ்வாறு இவ்வெண்ணிக்கைக்கு
வந்தனர் என கூறவில்லை. பாரிய ஜெருசலமினது எல்லைகள் புதிய
யூத நகரை அண்டிய பிரதேசங்களான கிழக்கு ஜெருசலமினை
நோக்கி விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், மேற்க்குகரையின் மத்திய
பகுதியான 30% இனையும் கொண்டுள்ளது. இது தொடர்பாக
ஒன்றும் குறிப்பிடப்படவில்லை. யூத குடியேற்றம் 15% ஆல் அதிகரித்துள்ளதுடன்,
அவற்றை இணைக்கும் இராணுவப்பாதை பாலஸ்தீன நகரங்களை
ஒன்றிலிருந்து ஒன்றை தனிமைப்படுத்தியுள்ளதுடன், அவற்றிறை
அணுகமுடியாமல் செய்துள்ளது.
ஷரோன் தனது பல அறிக்கைகளில் தனது அரசாங்கம்
மேற்குக்கரையையும், காஸா பிரதேசத்தையும், கிழக்கு ஜெருசலமையும்
இஸ்ரேல் தொடர்ந்தும் ஆக்கிரமித்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
அப்பிரதேசத்திற்கான அவரது விஜயத்தின்போது ஷரோன் ''ஜோர்டான்
மலைப்பிரதேசம் எப்போதும் இஸ்ரேலின் ஒற்றுமையின் கீழ் இருக்கும்,
நாங்கள் மலைப்பிரதேசத்தைப்பற்றி பேசும் போது நாங்கள்
ஒரு சிறிய ஓடையான பகுதியை அல்ல மாறாக அலோன் வீதியில்
சென்றுமுடியும் மேற்குமலையான மேற்குஎல்லையான கிழக்கு
பாதுகாப்பு ஓடைவரை செல்வதையே'' குறிப்பிடுகின்றோம் என
தாம் என்ன கருதுகின்றோம் என்பதை தெளிவாக்கினார். இது
ஷரோன் மேற்குக்கரையின் ஒன்றையும் விட்டுக்கொடுக்கும்
நோக்கமில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.
ஷரோன் இதனை லெபனானில் உள்ள சிரியாவின் நிலைகள்
மீதான பாரிய ஆகாயத்தாக்குதலால் பலப்படுத்தியுள்ளார். 29
ம் திகதி யூன் மாதம் Shaaba
பண்ணையில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இரண்டு இஸ்ரேலிய படைவீரர்களை
சுட்டுக் காயப்படுத்தினர். இச்சிறிய பிரதேசம் கடந்த வருடம்
லெபனானல் இருந்து பறித்துக்கொண்டதாகும். இஸ்ரேல் இதனை
சிரியாவின் பகுதி எனவும் 1967 ஆம் ஆண்டு சிரியாவிடமிருந்து பறித்த
கோலான் குன்றுப்பகுதியை பாதுகாக்க தேவை என கூறுகின்றது.
இஸ்ரேல், லெபனானில் உள்ள சிரியாவின் நிலைகள் மீது யுத்த விமானங்கள்
மூலம் லேசர் உதவியுடனான குண்டுத்தாக்குதலை நடாத்தியது.
பிரதமராக பதவிக்கு வந்த பின்னர் ஷரோன் நடாத்திய இரண்டாவது
தடவையான தாக்குதலாகும். ஏப்பிரல் நடுப்பகுதியில் ஹிஸ்புல்லா
நடத்திய தாக்குதலில் ஒரு இஸ்ரேலிய படைவீரர் கொல்லப்பட்டதால்,
முதல் தடவையாக Bekaa
மலைப்பகுதியிலுள்ள சிரியாவின் ராடார் நிலையங்கள் மீது ஆகாயத்
தாக்குதலை இஸ்ரேல் நடாத்தியது. தனது இராணுவ நிலையங்கள்
மீதான 14ம் திகதி ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல பாரிய
ஆட்டிலறித்தாக்குதலை நடாத்தியது. இஸ்ரேலின் பிரதி இராணுவத்
தலைவரான Moshe Yaalon
இஸ்ரேலுக்கும் சிரியாவிற்கும் இடையில் யுத்தம் ஏற்படுவதற்கான
சாத்தியம் குறித்து எச்சரித்தார்.
பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் ஆத்திரமூட்டல்
தொடர்ச்சியாக அதிகரித்துவருகின்றது. யூன் 30 ம் திகதி மேற்குக்கரையில்
இரண்டு பாலஸ்தீனர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். யூலை 1ம்
திகதி இஸ்லாமிய ஜிகாத் இயக்கத்தினர் சென்றுகொண்டிருந்த கார்
மீதான விமானத் தாக்குதலில் மூன்றுபேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு ஆயுதக்குழுக்களான ஜிகாத்தும், ஹமாஸ்
உம் கொள்கைரீதியான யுத்தநிறுத்தம் அர்த்தமற்றது என அறிவித்தனர்.
திங்கட்கிழமை வீதிக்கரையில் குண்டுவைக்க திட்டமிட்டதாக சந்தேகப்பட்டு
மேற்குகரையில் பாலஸ்தீன வாடகைக்கார் சாரதி ஒருவரை இராணுவத்தினர்
சுட்டுக்கொன்றனர். ஆனால் அப்பொதியில் பாவனைப்பொருட்களே
இருந்தன.
மிகவும் மோசமான ஆத்திரமூட்டல் ஷரோனின்
ஐரோப்பிய விஜயத்தின் போது நிகழ்ந்ததாகும். பாலஸ்தீன அமைப்பாளர்களுக்கு
எதிராக கொலையை திட்டமிடுவதற்காக இராணுவத்திற்கு கூடிய
அதிகாரம் வழங்க இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு கூட்டப்பட்டது.
இஸ்ரேலிய இராணுவ அதிகாரியான General
Shaul Mofaz அமெரிக்காவின் அரசு செயலாளரான
பெளலையும், தேசிய பாதுகாப்பு ஆலோசகரான Condoleezza
Rice உடனான தனது குறுகிய விஜயத்தை
விரைவில் முடித்துக்கொண்டு திரும்பினார். அக்கூட்டத்தின் பின்னர்
அரபாத்தை அமெரிக்காவால் முக்கியமாக தேடப்படும் ஒஸ்மா-பின்
-லாடனுக்கு ஷரோன் ஒப்பிடுவதாகவும், பாலஸ்தீனிய ஆட்சியாளருக்கு
எதிராக ஒரு ''முற்றுமுழுதான தாக்குதலை'' செய்ய வேண்டும்
என தனது அரசாங்கம் கருத்தைக் கொண்டிருப்பதாக எச்சரித்தார்.
அவர், அரபாத் எமது பின்-லாடன் ''உலகத்திலுள்ள எவராவது பின்-
லாடனுடன் பேச்சுவார்த்தை நடாத்துவார்களா? என கேட்டார்.
பாதுகாப்பு அமைச்சின் முடிவு அமெரிக்காவாலும்,
ஐரோப்பாவாலும், ஐக்கிய நாடுகள் சபையாலும் உடனடியாக
கண்டனத்திற்குள்ளானது. அவர்கள் ஷரோனின் சியோனிச அரசை பரவலாக்கும்
கவனமற்ற கொள்கை, வன்முறையை அதிகரிக்க செய்யும் எனவும்
அண்மையிலுள்ள நாடுகளை இம்முரண்பாட்டினுள் இழுத்து முழு மத்திய
கிழக்கையும் ஸ்திரமற்றதாக்கிவிடுமென பயமுற்றனர்.
ஆனால் அடுத்தநாள் தொழிற்கட்சி பாராளுமன்ற
உறுப்பினரான பாதுகாப்பு அமைச்சர் Binyamin
Ben-Eliezer இஸ்ரேலிய இராணுவ
வானொலிக்கு ''எம்மை ஒருவரும் தடுக்கமுடியாது'' என கூறியதுடன்,
பாலஸ்தீனியர்கள் தமது போராட்டத்தின் பயனின்மையை ஏற்றுக்கொள்ளும்
வரை அதற்கு எதிரான ''ஒரு நீண்ட போராட்டத்தை நோக்கி''
இஸ்ரேலிய மக்கள் செல்வதாக எச்சரித்தார். 26 பாலஸ்தீன
போராளிகள் கொலைப்பட்டியலில் இருப்பதாகவும், 250 பேர்
கைது செய்யப்படவுள்ளதாகவும் இராணுவம் அறிவித்துள்ளது. கடந்த
செப்டம்பரில் இன்டிபாடா ஆரம்பித்ததிலிருந்து இதுவரை தமது
40 அங்கத்தவர்கள் இஸ்ரேலினால் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீனியர்கள்
அறிவித்துள்ளனர்.
|