WSWS :செய்திகள் & ஆய்வுகள் :
ஆசியா
: சீனா
Prisoners die in Chinese mines: an indictment of "reform
through labour"
சீன சுரங்கங்களில் கைதிகள் சாவு: "உழைப்பு
மூலம் சீர்திருத்தம்" என்பதன் குற்றச்சாட்டுப் பத்திரம்
By John Chan
20 June 2001
Use
this version to print
தென்சீனாவில் ஏப்ரல் 1 முதல் 18 வரையிலான
ஆறுவாரங்களில், 66 தனித்தனி சுரங்க விபத்துக்களில் குறைந்த பட்சம்
592 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 90 பேர் மே 18 அன்று நடைபெற்ற
நான்கு விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர்.
குவாங்க்சி மாகாணத்தில், பெய்ஹாய் சிறிய ஜிப்சம்
சுரங்கத்தில் கூரை சரிந்ததால், 200 மீட்டர்கள் அடி ஆழத்தில் 29
சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டிருந்தார்கள். அதனை
அடுத்து நான்கு நாட்களாக நடந்த மீட்பு நடவடிக்கை உடல்களையோ
அல்லது உயிரோடு தப்பி இருப்பவர்களையோ கண்டு பிடிக்கத்
தவறியது. இது அதிகாரிகளால் அனைத்துத் தொழிலாளர்களும் இறந்து
விட்டனர் எனக் கணிப்பதற்கு இட்டுச் சென்றுள்ளது என பெய்ஜிங்
மார்னிங் போஸ்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதே நாளில் சிச்சுவான்
மாகாணத்தின் இரு நிலக்கரி சுரங்கங்களில் வாயு வெடிப்பினால் 12
சுரங்கத் தொழிலாளர்கள் இறந்துபோனதாக சீனா டெய்லி செய்தி
வெளியிட்டுள்ளது.
மே 18ல் மோசமான விபத்து, சிச்சுவானில் செங்து
நகருக்கு அருகில், குய்ங்லோங்சுய்யில் தனித்த தொலைதூரத்து
நிலக்கரி சுரங்கத்தில் நடந்தது. அங்கு திடீர் வெள்ளத்தில் 39 பேர்கள்
சிக்கிக் கொண்டனர். இருப்பினும், அவர்களுக்கு வேலையாட்களாக
சம்பளம் வழங்கப்படவில்லை. மாறாக அவர்கள் அரசாங்க
அதிகாரிகளின் வார்த்தையில், "தீர்ப்பளிக்கப்பட்ட குற்றவாளிகள்"
எனக் கருதப்பட்டனர்.
அது பற்றி சிச்சுவான் பாதுகாப்பு மேற்பார்வைக்
கழகத்தைச் சேர்ந்த அதிகாரி பத்திரிக்கை ஏஜென்சிகளிடம் கூறினார்:
"அவர்கள் உயிரோடிருப்பர் என்பதில் கொஞ்சமே நம்பிக்கை
இருக்கிறது. குழியில் தண்ணீர் பாய்ந்த பொழுது அவர்கள் உடனடியாக
மூழ்கி இறந்திருக்கலாம்". மீட்புப் பணியாளர்கள் குழியின் ஆழத்தில்
தேடிப்பார்க்க முயற்சித்த பொழுது, இன்னும் சுரங்கத்துக்குள்
பாய்ந்து கொண்டிருந்த தண்ணீரின் ஊற்றுமூலம் கண்டுபிடிக்க
முடியாதிருந்தது. மூன்று நாட்கள் கழித்து, மீட்பு முயற்சிகள் கைவிடப்பட்டன,
மற்றும் 39 கைதிகள் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.
பிரெஞ்சு பத்திரிகை ஏஜென்சி மற்றும் டச்சு
பத்திரிக்கை ஏஜென்சி அறிக்கைகளின் படி, கடந்த நவம்பரில்
இன்னொரு சிச்சுவான் நிலக்கரிச் சுரங்கத்தில், அதிகம் வெள்ளம்
பாய்ந்த பொழுது 19 கைதிகள் இறந்துள்ளனர் எனத் தெரிகிறது.
அறிக்கைகள் மாகாண அரசாங்க அதிகாரி சுரங்கத்தை பெங் செங்
சிறையில் அடைக்கப்பட்ட "கைதிகளுக்கு கல்வி புகட்டுவதற்கான
தளம்" என்று விளக்கியதை மேற்கோள் காட்டியது. உண்மையில்
சுரங்கக் கம்பெனி உழைப்பைப் பயன்படுத்திக் கொள்வதற்காக,
அது சிறைக்கு பணம் செலுத்துவதாக அதிகாரி ஒப்புக்கொண்டார்.
வர்த்தகர்களுக்கு வாடகைக்கு விடப்பட்ட கைதிகளில்
பலர் டஜன் கணக்கில் இறந்ததும் மோசமாக கட்டி அமைக்கப்பட்ட
மற்றும் மோசமான காற்றோட்ட வசதி கொண்ட வாயிற் குழிகளை
உடைய சுரங்கத்தில் நிலக்கரியைத் தோண்டி எடுக்க நூற்றுக்
கணக்கான மீட்டர்கள் நிலத்தினடியில் அனுப்பப்பட்டமையும், சீனா
முழுவதும் "உழைப்பின் மூலம் சீர்திருத்தம்" அல்லது லாவோகை
முறையின் காட்டுமிராண்டித்தனமான பண்பை சான்றளிக்கிறது.
அது "சீர்திருத்தத்"துடன் ஒன்றும் சம்பந்தம் கொண்டிருக்கவில்லை
மாறாக, ஒரு வகை அடிமை உழைப்பு வடிவத்துடன் சம்பந்தம்
கொண்டிருக்கிறது.
சீனக் குற்றவியல் சட்டத்தின் 41வது ஷரத்து குற்றத்திற்காக
தண்டிக்கப்பட்ட எவரும் மற்றும் உழைக்கக்கூடிய எவரும்,
"உழைப்பின் மூலம் சீர்திருத்தத்தின் கீழ் செல்ல வேண்டும்"
என விளக்குகிறது. அமெரிக்காவை அடித்தளமாகக் கொண்ட
லாவோகை ஆய்வு நிறுவனம், 68 இலட்சம் பேர் வரை தங்கி உள்ள
குறைந்த பட்சம் 1,100 "உழைப்பின் மூலம் சீர்திருத்தம்"
எனும் நிறுவனங்கள் சீனாவில் இருப்பதாக மதிப்பிடுகிறது.
இருப்பினும், கட்டாய உழைப்புக்கு ஆக்கப்பட்டோரின்
ஒரு சதவீதம் எந்தக் குற்றத்திற்கும் தண்டிக்கப்படாதவர்கள்.
சீனாவின் சட்ட முறையின் கீழ், போலீஸ் வட்டாரத்தினர் சட்ட செயல்முறை
எதுவும் இல்லாமல், 3 ஆண்டுகள் வரை "உழைப்பின் மூலம்
மறு கல்வி" அல்லது லாவோஜியாவோ- ஐ நடைமுறைப்படுத்துவதற்கு
நிர்வாக அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு
பாதுகாப்பு ஆலோசனை உரிமையோ அல்லது மனுச் செய்ய உரிமையோ
இல்லை.
18வது மற்றும் 19வது நூற்றாண்டுகளின் பொழுது
இங்கிலாந்தின் "கடுமையான சட்டங்களை" நினைவூட்டும்
விதமாக, பொலீசார் சீனக் குடிமகனை "நேர்மையான குறிக்கோளில்
ஈடுபடாதவர்" மற்றும் "இயலக்கூடிய உடம்பைக்
கொண்ட ஆனால் வேலை செய்ய மறுக்கின்ற" என்ற நிலையில்
லாவோஜியாவோ ஆக பழித்துரைக்கலாம்.
அத்தகைய அதிகாரங்கள் முறையான குடிஉரிமை
வசதி இன்றி கிராமப்புறத்திலிருந்து புலம் பெயர்ந்தோர், வீடற்றோர்,
சந்தேகத்திற்குரிய விலைமாதர்கள் அல்லது போதைப் பொருள்
பயன்படுத்துவோர் மற்றும் அரசாங்கத்தின் அரசியல் எதிராளிகள்
ஆகியோருக்கு எதிராக மனம்போன போக்கில் பயன்படுத்தப்படுகின்றன.
நியூயோர்க்கை அடித்தளமாகக் கொண்ட, சீனாவில் மனித உரிமைகள்
எனும் அமைப்பின்படி, டிசம்பர் 2000ல் "மறு கல்விக்காக"
2,60,000 பேர்கள் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர் எனத் தெரிகிறது.
அங்கு தண்டனை நிறைவேறிய பிறகும் கூட தனிநபர்கள்
விடுதலை செய்யப்படுவார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
1981 தேசிய மக்கள் பேராயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டம்,
தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் மற்றும் லாவோஜியாவோவில்
தங்கி இருப்பவர்கள் இருவரிலும்" தங்களின் தண்டனைகளை முடித்த
ஆனால் முழுமையாக திருத்தப்படாதவர்கள் வேலையில் அமர்த்தப்படுவதற்காக
அல்லது ஜியுயே வுக்காக முகாம்களில் வைக்கப்படுவர்"
என விதி செய்கிறது.
உத்தியோக ரீதியாய் தீய வழிபாடு என கண்டனம்
செய்யப்பட்டதும் 1999 ஜூலையில் தடை செய்யப்பட்டதுமான
ஃபாலன் கோங் மத அமைப்பு, மிக அண்மையில் குறி வைக்கப்பட்டது.
தங்களின் நம்பிக்கைகளை கைவிட மறுத்த பின்பற்றாளர்கள் 10,000
பேர் வரையில், உள்ளூர் போலீசாரால் ஒன்றிலிருந்து மூன்றுக்கு
இடையிலான ஆண்டுகளுக்கு லாவோஜியாவோ தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக
ஃபாலன் கோங் கூறுகிறது.
மே30ல் வெளியிடப்பட்ட ஃபாலன் கோங் பத்திரிக்கை
செய்தி அறிக்கை தங்களது பின்பற்றாளர்கள் பாதுகாப்புக் காவலில்
வைக்கப்பட்டிருக்கும் மசாஞ்சியா முகாம் வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்களுக்கு
ஒத்திகை சுற்றுலாவாக அண்மையில் காட்டப்பட்டதைக் கண்டனம்
செய்துள்ளது. பத்திரிகை செய்தியாளர்களுக்கு புதிதாய் வண்ணம்
பூசப்பட்ட கட்டிடம் காட்டப்பட்டது. அங்கு முன்னாள்
ஃபாலன் கோங் செயல் முறையாளர்கள் --தீவிர மத வழிபாட்டின்
அபாயங்களை, சீன துணைத் தலைப்புக்களுடன் ஆங்கிலத்தில் விளக்கிக்
காட்டும் --- "மறு கல்வியூட்டல் திட்டங்களை" கவனித்துக்
கொண்டிருந்தனர்.
இருப்பினும், முன்னர் முகாம்களில் பாதுகாப்புக்
காவலில் வைக்கப்பட்ட, தற்போது கனடா மற்றும் அமெரிக்காவில்
வாழ்ந்து வருகிற ஃபாலன் கோங் உறுப்பினர்கள், தாங்கள்
பொம்மைகள், பிளாஸ்டிக் பூக்கள் மற்றும் ஏனைய ஏற்றுமதி
தொடர்பான உற்பத்திகளை செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டதாக
சான்று அளித்தனர். கைதிகளின் உண்மையான வாழ்க்கை "கடும்
உழைப்பு, அழுகிய உணவு மற்றும் சேறு கலந்த தண்ணீர்,
சுகாதார வசதிகள் அற்ற மற்றும் கூட்டம் நிரம்பிய வாழ்விடம்
மற்றும் அவர்களிடமும் அவர்களது குடும்பத்தினரிடமும் அச்சுறுத்தி
முறைகேடாகப் பணம் பறித்தல்" என பத்திரிக்கைச் செய்தி
கூறியது.
கடந்த வாரம் வாஷிங்டன் போஸ்ட், 50
அரசியல் அதிருப்தியாளர்கள் உட்பட 2000க்கும் 3000க்கும் இடையிலான
கைதிகளைக் கொண்ட ஹூனான் ஸ்பெஷல் மின்சார எந்திரத்
தொழிற்சாலை அல்லது ஹூனான் மாநிலத்தின் எண். 1 தொழிற்சாலையில்
உள்ள நிலைமைகளைப் பற்றி செய்தி வெளியிட்டது.
அங்கு இருப்போரின்படி, அவர்கள் ஒரு நாளைக்கு
12லிருந்து 16 மணி நேரமும், நில வேளைகளில் வாரத்திற்கு ஏழுநாட்களும்
வேலை செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். சிறையானது
தொழிற்துறை ஜெனரேட்டர்களை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்பட்டது,
ஆனால் மிகவும் சக்தி வாய்ந்த அதனது போட்டியாளருடன்
அதனால் போட்டியிட முடியாமற் போனது மற்றும் இப்பொழுது
தப்பிக்க முடியாதவாறு ஒப்பனை முடிகள் (விக்), மருந்துப் பெட்டிகள்,
கையுறைகள் மற்றும் கிறிஸ்துமஸ் விளக்குகள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்கு
பயன்படுத்தப்படுகிறது.
ழாங் ஷாங்குவாங் 1989ல் அரசாங்க எதிர்ப்புக்
கிளர்ச்சியில் அவரது பாத்திரத்திற்காக 1989-1996 வரை சிறையிடப்பட்டார்.
அவர் கதவடைப்பு செய்யப்பட்ட தொழிலாளர் மன்றத்தை
அமைக்க முயற்சித்ததற்காக,1998ல் மீண்டும் கைது செய்யப்பட்டு
" மறு கல்வி" தண்டனை விதிக்கப்பட்டார். ழாங்கால்
எழுதப்பட்டு, சீன மனித உரிமைக் குழுவால் கடத்தி வரப்பட்ட
மனுவில், அவர் விவரிப்பதாவது : " சில சமயங்களில் சக கைதிகள்
உறக்கம் இல்லாமல் இரவு முழுவதும் வேலை செய்வர். சக
கைதிகள் இரத்தவாந்தி எடுப்பதும் களைப்பால் மயங்கி விழுவதும்
அடிக்கடி காணக்கூடியதாக இருக்கிறது.... யாராவது ஒருவர்
செத்தால் அன்றி, கைதிகளுக்கு முறையான மருத்துவ கவனிப்பு
கிடைக்காது."
சிறை உழைப்பு சீனப் பொருளாதாரத்தில் சிறிய
ஆனால் குறிப்பிடத்தக்க பாத்திரத்தினை ஆற்றுகின்றது. நன்கு தெரிந்த
99லாவோகை முகாம்கள் --மொத்தத்தில் 9 சதவீதம் மட்டுமே-1999ல்
அதன் மொத்த ஆண்டு விற்பனை 842.7 மில்லியன் டாலர்கள் என ஆய்வாளர்கள்
டன் மற்றும் பிராட் ஸ்ட்ரீட் ஆகியோர் மதிப்பிடுகின்றனர். சிறை
உழைப்பு ஸ்பிரிங் கிளிப்புகள் முதல் சுரங்கம் வரையிலான உற்பத்தி,
உள்நாட்டு சந்தை மற்றும் ஏற்றுமதிக்கானது என இரண்டுக்குமான
உற்பத்தி ஒவ்வொன்றிலும் சம்பந்தப்பட்டிருக்கிறது.
வர்த்தக நிறுவனங்களுடன் தொடர்புடைய சிறைச்சாலைகள்
கட்டாய உழைப்பைப் பயன்படுத்துகின்றன என்ற உண்மையை
மறைக்க, சிறை முகாம்களுக்கு கோர்ப்ரேட் கம்பெனிகளது
பெயர்கள் வைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, "ஹாங்ழோ
வுலின் மெஷின் வேர்க்ஸ்" என்பது ழெஜியன் மாகாணத்து எண்.4
சிறைச்சாலையின் பொதுப் பெயர்களுள் ஒன்று.
தமது வர்த்தக நடவடிக்கைகளில் சிறை ஊழியர்களது
சம்பளம் உட்பட 70 சதவீதம் வரை நிதி வழங்குவதற்கு சிறைகள்
பொறுப்பாகும். அவற்றுள் பெரும்பாலானவை பெரும் கடன்களில்
சிக்கி உள்ளன மற்றும் பொதுவாக திறமைக்குறைவானதாக இருக்கின்றன.
இது சிறைக்கைதிகளை, நிலக்கரி சுரங்கங்களில் -- தவிர்க்க
முடியாத துன்பகரமான விளைவுகளுக்கு ஆளாக்கும் -- ஒப்பந்த
உழைப்பிற்கு விடல் போன்ற ஈவு இரக்கமற்ற சுரண்டலுக்கு தூண்டுகிறது.
|