WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா
G8 summit: Brutal policing in Genoa leaves one dead and hundreds injured
G 8 உச்சிமகாநாடு:
ஜெனோவாவில் மூர்க்கமான பொலிஸ் நடவடிக்கையால் ஒருவர்
கொல்லப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்
Chris Marsden
23 July 2001
Use
this version to print
கடந்த சனிக்கிழமை G8
மகாநாட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்த
700 அமைப்புகளின் இணைஅமைப்புகளின் தலைமையகமான Genoa
Social Forum மீதான பொலிசாரின் திட்டமிட்ட
தேடுதல் நடவடிக்கையானது முன்னொருபோதும் இல்லாத மூர்க்கத்தனத்தை
காட்டியுள்ளதுடன், ஒரு ஆர்ப்பாட்டக்காரரை மரணத்திற்கு இட்டுச்சென்றதுடன்,
நூற்றுக்கணக்கானோரை காயமடைய செய்தது.
கடந்தவார இறுதியின் நிகழ்வுகளில் ஒரு பெண்
தலையில் தாக்கப்பட்டு கோமா நிலைக்குள்ளானதுடன், 300
பேர் காயமடைந்துள்ளனர். நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கைது
செய்யப்பட்டுள்ளதுடன், பலர் கொலைசெய்ய முயற்சித்த குற்றச்சாட்டுகளுக்கும்
உள்ளாகியிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது.
சனிக்கிழமை நள்ளிரவு Genoa
Social Forum இன் தலைவர்கள் தங்கியிருந்த
உள்ளூர் பாடசாலையின் நுழைவாசலை உடைத்துக்கொண்டு
சென்ற பொலிசார் அக்கட்டிடத்தில் தங்கியிருந்தோரை மூர்க்கமாக
தாக்கியதாக வானொலி அறிவிப்பாளர்கள் தெரிவித்தனர். ஸ்பெயின்,
பிரான்ஸ், பிரித்தானியாவை சேர்ந்த 10 பேர் இரத்த காயங்களுடன்
கைதுசெய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டதுடன், ஒருவர்
முதலுதவிக்கட்டிலில் எடுத்துச்செல்லப்பட்டார்.
பொலிசார் கணனி பதிவுத்தட்டுக்களை (computer
disks) எடுத்துச்சென்றுள்ளனர். இது
அதிலுள்ள தனிப்பட்ட நபர்களின் தகவல்களின் அடித்தளத்தில் மேலும்
கைதுகள் இடம் பெறுவதற்கான சாத்தியத்தை கொண்டுள்ளது.
இத்தாலிய உதவிபொலிஸ் படையான Carabinieri
ஆல் மேற்கொள்ளப்பட்ட
''எதுவித பொறுமையுமற்ற'' இராணுவ ரீதியான நடவடிக்கைகளால்
அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் சர்வதேசரீதியான
ஆத்திரத்தை உருவாக்கியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 23 வயதான
ஜெனோவாவாசியான Carlo
Giuliani இன் கொலை கடந்த இரண்டு
வருடங்களாக இடம்பெற்றுவரும் முதலாளித்துவ எதிர்ப்பு அல்லது
பூகோளமயமாதலுக்கு எதிரான ஆர்ப்பாட்ட ஊர்வலங்களில் முதலாவதாகும்.
இம்மரணம் சம்பவிக்கும் முன்னரே பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும்
இடையிலான கெடுபிடி உச்சநிலையை அடைந்திருந்தது. ஆனால்
இது ஒரு இணைந்த மரணதண்டனை வழங்குவதனை இச்சம்பவங்கள்
நியாயப்படுத்தவில்லை.
ஜெனோவாவில் பல்லாயிரக்கணக்கானோர்
அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சில ஆயிரக்கணக்கான
பலவித மாவோவாத, அராஜகவாதிகளும் [anarchist]
பொலிசாருடன் மோதல்களில் ஈடுபட்டிருந்ததுடன்,
அங்கும் இங்குமாக கார்களுக்கும், வர்த்தக நிலையங்களுக்கும்
தீவைப்பதில் ஈடுபட்டிருந்தனர். G8
இன் தலைவர்கள் கூடிய Palazzo
Ducale ஐ சுற்றி
உருவாக்கப்பட்ட ''சிவப்பு வலயத்தை''
சுற்றி 20,000 கனரகஆயுதம் தரித்த கலகத்தடுப்பு பொலிசார் கண்ணீர்
புகைக்குண்டுகளுடனும், தண்ணீர் துப்பாக்கிகளுடனும், ஆயுதம்
வாகனங்களுடனும், தன்னியக்க துப்பாக்கிகளுடனும், குண்டாந்
தடிகளுடனும் ஆர்ப்பாட்டக்காரர்களை இப்பிரதேசத்தினுள் புகுந்துவிடாது
காவல்புரிந்தனர். இவர்கள் 'கறுப்பு அணியினர்'' [black
block-anarchist] என அழைக்கப்படுபவர்களிலும்
பார்க்க எண்ணிக்கையில் மிகவும் அதிகமாக இருந்தனர். இது Carlo
Giuliani இனை பொலிஸ் உத்தியோகத்தர்
பாதுகாப்பிற்கு சுட்டார் என்பதை அர்த்தமற்றதாக்குகின்றது.
பொலிசாருக்கு துர்அதிஸ்டவசமாக ராய்ட்டர்
செய்தி ஸ்தாபனத்தின் படப்பிடிப்பாளரான Dylan
Martinez இச்சம்பவத்தை படம்பிடித்துள்ளார்.
துணைப்பொலிசாரின் ஆயுதவாகனத்தை 30 ஆர்ப்பாட்டக்காரர்கள்
கற்களாலும், இரும்புகளாலும் தாக்கினர். ஆனால் பொலிசாருக்கு
எவ்வித உடலியல் ரீதியான ஆபத்திற்கும் உள்ளாகியிருக்கவில்லை. Carlo
Giuliani தீயணைக்கும் கருவி ஒன்றை
தலைக்குமேல் தூக்கிப்பிடித்து அதனை பொலிஸ் வாகனத்தை நோக்கி
எறிய முயற்சித்தபோது, வாகனத்தினுள் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்
ஒருவர் Giuliani இன்
தலையை நோக்கி சுட்டது படம்பிடிக்கப்பட்டுள்ளது. Giuliani
இரு தடவை சுடப்பட்டதுடன் தரையில்
வீழ்ந்தார். பொலிஸ் வாகனம் அங்கிருந்து போகும் முன்னர்
அவரின் உடல் மீது ஏற்றப்பட்டது. பொலிசார் ஆர்ப்பாட்டக்கார்ரகள்
Giuliani இன்
உதவிக்கு வருவதை தடுத்து அவரின் உடலை பொறுப்பு எடுத்தனர்.
நீதித்துறையினர் உத்தியோகத்தர் கொலைக்குற்றச்சாட்டினை
எதிர்நோக்கவேண்டுமா என்பது தொடர்பாக சட்டவிசாரணைகள்
மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். ஆனால் தனது தற்பாதுகாப்பு
நடவடிக்கைக்காக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படலாம்
எனவும் வலியுறுத்தப்பட்டது. அவ் அதிகாரி ஜெனோவா வைத்தியசாலையில்
காயங்களுக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஜெனோவா பொலிஸ் பேச்சாளர் ஒருவர் Giuliani
மீது சட்டவிரோதமான ஆயுதங்களை
வைத்திருந்ததுடன், வேறு முக்கிய குற்றங்களையும் எதிர்நோக்கியிருப்பதாக
கூறினார்.
Giuliani இன் கொலையானது
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கடுமையான நிட்சயமாக நடக்ககூடிய
அரச ஒடுக்குமுறையின் அளவினைக்காட்டுகின்றது. உச்சிமாநாட்டிற்கான
ஆயத்தங்களின் போதே ஐரோப்பாவினுள் சுதந்திரமாக செல்வது
தடைசெய்யப்பட்டதுடன், ஜெனோவா நகரம் ஒரு இராணுவ
தளத்திற்கும் மிகவும் பாதுகாப்பான சிறைச்சாலைப் பிரதேசத்திற்கும்
இடைப்பட்ட ஒன்றாக மாற்றப்பட்டது. ஜனநாயக உரிமைகள் மீதான
தாக்குதலுக்கான அடிப்படையான பொறுப்பு எங்கு உள்ளதெனில்,
4 மீற்றர் உயரமான இரும்பு தடுப்புச்சுவர்க்கு பின்னால் ''சிவப்பு
பிரதேசத்தில்'' உலக தலைவர்களும் அவர்களது பரிவாரங்களும்
சந்தித்தற்கு அப்பால் இரண்டு கிலோ மீற்றர் தூரத்திலேயே இப்பரிதாபகரமான
சூட்டு சம்பவம் நிகழ்ந்ததாகும். இது முதலாளித்துவ எதிர்ப்பு
ஆர்ப்பாட்டத்தை மீண்டும் மீண்டும் நிராகரித்த, எதிர்ப்பாளர்களுக்கு
எதிரான ஒடுக்குமுறை நடவடிக்கைகளை ஆதரித்த மற்றும் நியாயப்படுத்தியவர்களால்
அனுமதிக்கப்பட்டதாகும்.
இத்தாலிய பிரதமரான சில்வியோ பெர்லுஸ்கோனி
இம்மரணத்திற்கு கவலை தெரிவித்து பகிரங்கமான அறிக்கை எதனையும்
விடுக்காததுடன், அதற்கான பொறுப்பை ஜனாதிபதியான Carlo
Azeglio Ciampi இடம் கொடுத்தார்.
பெர்லுஸ்கோனியின் பத்திரிகையான Il
Giornale ''உலகத்தின்
பிரச்சனைகளுக்கு மேற்கின் ஜனநாயகம் தான் காரணம் என
தமது மத்திய-இடது அரசாங்கங்களில் இருந்த தகப்பன்மாரால்
தவறாக கற்பிக்கப்பட்ட, பிழையாக வழிநடத்தப்பட்ட பரம்பரை
அலகுகளில் மாற்றம் செய்யப்பட்ட இளம் தலைமுறையினரின் செயலென''
சற்றும் பின்வாங்காது குற்றம் சாட்டியது.
Giuliani இன் மரணத்தை
தொடர்ந்து அனைத்து G8
இன் தலைவர்களும் சிறுபான்மை ஆர்ப்பாட்டக்காரர்களால்
''வன்முறை அராஜகமாகின்றது'' என குற்றம்சாட்டி இணைந்த
அறிக்கை ஒன்றினை விடுத்தனர். இத்தாலியின் உள்நாட்டு அமைச்சரான
Claudio Scajola குறுகிய
அறிக்கையில் Giuliani "பொலிஸாரின்
தற்பாதுகாப்பிற்காக துப்பாக்கியால் சுடப்பட்டதாக'' குறிப்பிட்டார்.
பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயர் முதலாளித்துவ
எதிப்பாளர்களுக்கு எதிரான தனது கடுமையான நிலைப்பாட்டை
திரும்பவும் எடுத்துக்காட்டினார். BBC
Radio Four இற்கு வழங்கிய பேட்டியில்
ஒரு சிறுபான்மையினர் ''வன்முறையை நோக்கி திரும்பியுள்ளதாக''
கூறியதுடன், இத்தாலிய பொலிசாரின் பாதுகாப்பு நடவடிக்கையை
விமர்சிக்க மறுத்தார். உச்சிமாநாட்டிற்கு முன்னர் பிளேயர் ''சிறிய
குழு அராஜகவாதிகளும் குழப்பவாதிகளும் நியாயமான எதிர்ப்பினை
கலவரத்திற்கும் குழப்பத்திற்குமான வாகனமாக பாவிக்கின்றனர்''
என குற்றம் சாட்டினார்.
ஜனாதிபதி புஷ் தனது பங்கிற்கு கடும் பிரச்சனையாளர்கள்
சர்வதேச தலைவர்களின் சட்டபூர்வமான விவாதங்களை தடுப்பதில்
வெற்றிகொள்ளமுடியாது என நம்புவதாகவும், G8
இன் தலைவர்கள் தமது தலைகளை
உயர்த்தியபடி ஜெனோவாவை விட்டு வெளியேறுவதற்கான உரிமை
உண்டு எனவும் தெரிவித்தார்.
இம்மரணத்திற்கான உத்தியோகபூர்வமான பிரதிபலிப்பு
ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் ஆத்திரமிக்க
எதிர்ப்புக்கு எதிராக ஒருக்குமுறையை அதிகரிப்பதாகும். சனிக்கிழமை
நள்ளிரவு Genoa Social Forum
இன் மீது பொலிசாரால் எடுக்கப்பட்ட
நடவடிக்கை அதன் ஒருவடிவம் மட்டுமே. இது Social
Forum இன் தலைவரான Vittorio
Agnoletti அராஜகவாத குழுக்களினால்
பயன்படுத்தப்படும் வன்முறை தொடர்பாகவும், அவர்களுக்கு
எதிராக பொலிசாரால் பயன்படுத்தப்படும் சுடு ஆயுதங்கள்
தொடர்பாகவும் கவலை தெரிவித்திருந்த போதும் இடம்பெற்றுள்ளது.
சனிக்கிழமை பிரதான ஊர்வலத்திலிருந்த பிரிந்து
சென்ற அராஜகவாத ஆர்ப்பாட்டக்காரர்களை துரத்திச்சென்ற
பொலிசார் வாடிக்கையாளர்களால் நிறைந்திருந்த கோப்பிக்கடைக்குள்
சென்று கண்ணீர்ப்புகைப்பிரயோகம் செய்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களை
மோசமாக தாக்கிய பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில்
சாதாரண உடையணிந்த பொலிசாரையும் அனுப்பியிருந்ததாக ஒத்துக்கொண்டனர்.
இது அவர்களின் நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதையும்,
குழப்பத்தில் ஈடுபட்டிருந்த அராஜகவாதிகள் மத்தியில் பொலிஸ்
ஆத்திரமூட்டல்காரர்களால் ஊடுருவப்பட்டிருந்ததாகவும் குற்றம்சாட்டப்படுகின்றது.
இது சகலவிதமான எதிர்ப்பிற்கும், அரசியல் மாற்றுக்கருத்துக்கும்
எதிரான ஒடுக்குமுறைக்கான முன்நிபந்தனைகளை உருவாக்குவதற்காகவாகும்.
|