World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்:ஆபிரிக்கா

Is the US preparing an invasion of Somalia?

சோமாலியாவில் ஆக்கிரமிப்பு செய்ய ஐக்கிய அமெரிக்க அரசுகள் தயாரிக்கின்றனவா?

By Chris Talbot
6 December 2001

Use this version to print | Send this link by email | Email the author

வரிசைக்கிரமமான அண்மைய பத்திரிகைச் செய்திகள், வறுமை பிடித்த ஆபிரிக்க நாடான சோமாலியாவை "பயங்கரவாத நடவடிக்கைக்கான மையமாகவும் அதனை அமெரிக்கா பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் அடுத்த இலக்காகப் பரிந்துரை செய்தும்படம் பிடித்துக் காட்ட விழைகின்றன.

வெளிநாடுகளில் வாழும் சோமாலியர்கள் நிதிகளை நாட்டிற்கு அனுப்பும் அல் பரக்காத் எனப்படும் பிரதான நிதி நிறுவனமானது, இணைய நிறுவனத்துடன் சேர்த்து கடந்தமாதம் புஷ் நிர்வாகத்தால் மூடப்பட்டன. அவை இரண்டும் அல் கொய்தா நிதிகளுக்கான வடிகாலாக இருப்பதாகக் கூறப்பட்டது. கடந்த ஒரு தசாப்தமாகப் போரிடும் குழுக்களுக்கிடையில் பிளவுபட்டுள்ள, மிகைபணவீக்கம் மற்றும் வறட்சியாலும் பாதிக்கப்பட்டுள்ள, ரிப்ட் பள்ளத்தாக்கு காய்ச்சலின் காரணமாக கால்நடைகள் மத்திய கிழக்கிற்கு ஏற்றுமதி செய்வதைத் தடை செய்வதுடன் அல் பரக்காத் மூடுவது காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை ஆகும். ஐ.நா அலுவலர்கள், பெரும்பாலான சோமாலியர்கள் வருமானத்திற்காக வெளிநாடுகளில் உள்ள தங்களது உறவினர்களை சார்ந்துள்ளனர், நாட்டிற்கான சர்வதேச உதவியான 60 மில்லியன் டாலர்களை மட்டும் ஒப்பிட்டால், இந்தவகையில் ஒரு ஆண்டுக்கு 200 மில்லியன் டாலர்கள் முதல் 500 மில்லியன் டாலர்கள் வரை மாற்றப்படுகிறது என்று சுட்டிக் காட்டுகின்றனர்.

சோமாலியாவுக்கு எதிரான நடவடிக்கை இராணுவத் தாக்குதலாக (இடக்கரடக்கலாக "குண்டூசித் தாக்குதல்கள்" எனப்படுகிறது) அல்லது ஒரேயடியான இராணுவ ஆக்கிரமிப்பு விரிவுபடுத்தப்பட வேண்டும் என திரும்பத்திரும்பக் கூறப்பட்ட கருத்துரைகள் இருந்தன. மேற்கத்திய துருப்புக்களினால் ஆன தாக்குதல் இல்லை எனில் பக்கத்து நாடான எத்தியோப்பியாவிலிருந்து அமெரிக்க ஆதரவுடன் நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. நவம்பர் 29 ேவால்ஸ்ட்ரீட் பத்திரிகையில் "ஆப்கானிஸ்தான் போருக்குப் பிந்திய கட்டம் இறகு வடிவெடுக்கிறது" என்ற கட்டுரை, சோமாலியா நேரடி இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான மிக எளிதான இடம் என அமெரிக்க அதிகாரிகள் கூறியதை மேற்கோள் காட்டியது. ஆப்கானிஸ்தான் போலவே அது "பேரம் பேசும் தேசிய அரசாங்கத்தக் கொண்டிருக்கிறது, மற்றும் அதற்கு அமெரிக்க தலையீட்டை எதிர்ப்பதற்கு சில நண்பர்களே இருக்கின்றனர்". இந்தியக் கடலில் சோமாலியா அமைந்துள்ளதால், ஆப்கானிஸ்தானைவிட "அமெரிக்கத் துருப்புக்களை நகர்த்துவது மற்றும் அருகிலுள்ள கப்பலில் இருந்து ஆயுதபாணி ஆக்குவது அதிகம் எளிதானது" என பத்திரிகை மேலும் கூறியது. அதேநாளின் ராய்ட்டர் செய்தியின்படி, ஆப்கானிஸ்தானிலிருந்து அல் கொய்தா போராளிகள் தப்பித்துச் செல்வதைத் தடுப்பதற்கு அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் ஜேர்மன் கப்பல்கள் ஏற்கனவே சோமாலியா கடற்கரையோரத்தை கண்கானித்துவருவதாக கூறப்படுகிறது.

பிரிட்டனின் டிசம்பர்2 சண்டே டெலிகிராப் பின்வருமாறு கூறுகிறது: "புளோரிடாவில், தம்பாவில் உள்ள அமெரிக்க நடுவண் ஆணையகத்திற்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் உயர் இராணுவ அதிகாரிகள் சோமாலியாவில் பகுதிகளைத் தாக்குவதற்கான மூலோபாயத்தைத் தயார் செய்யும்படி கேட்கப்பட்டார்கள். அவர்கள் இத்திட்டத்தைப் பற்றி பாதுகாப்பு அமைச்சக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக லண்டன் திரும்பினர்."

அல் இத்திஹாட் அல் இஸ்லாமியா எனப்படும் சோமாலிய இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாத இயக்கம் அல் கொய்தாவுடனும் பின் லேடனுடனும் தொடர்பு வைத்திருக்கின்றது என்று சோமாலியா மீதான இராணுவத் தாக்குதலுக்கான நியாயப்படுத்தல் ேவால்ஸ்ட்ரீட் பத்திரிகையிலும், அது திரும்பத் திரும்ப செய்தி ஊடகம் முழுவதும் செய்யப்பட்டது.

வாஷிங்டன் போஸ்ட்டில் நவம்பர் 4ம் தேதி கட்டுரையில் இக்கூற்றைக் கூறிய முதலாவதாக இருந்தது. அது அரசுத்துறை, பென்டகன், சி.ஐ.ஏ மற்றும் பாதுகாப்புச் சபையில் உள்ள உளவு ஆய்வாளர்கள் "எங்கு மற்றும் எப்படி" அல் கொய்தா இயங்குகிறது என கலந்துரையாடினார்கள் என்று கூறியது. அது (போஸ்ட்டால் உண்மை என கூறப்பட்டாலும் உளவுத்துறை ஆய்வாளர்களிடமிருந்து வந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு மெய்யெனக் கொள்ளப்பட்டது) விளக்கியது:

*அல் இத்திஹாத் அல் கொய்தாவின் உள்ளூர் "கூட்டாளி" அல்லது "இணைப்பாக" இருக்கின்றது

*1993ல் பின் லேடன் பல உயர் தளபதிகளை "யுத்தப் பிரபு" மொகமது அய்தீதிடம் அனுப்பினார் மற்றும் அய்தீது படைகள் ஐக்கியநாடுகள் சபையின் இராணுவத்தில் சேவை செய்த 18 அமெரிக்கத் துருப்புக்களைக் கொன்றது.

*1998ல் கென்யாவிலும் தான்சானியாவிலும் உள்ள மெரிக்கத் தூதரகங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்வதற்காக தயாரிப்புக்கள் உள்பட, அல் கொய்தா உறுப்பினர்கள் சோமாலியாவை தளமாகத் தொடர்ந்து பயன்படுத்தினர்.

*பக்கத்து எத்தியோப்பியாவிலிருந்து அதிகாரிகள் அல் கொய்தாவால் ஆதரிக்கப்படும் அல் இத்திஹாதத் சோமாலியாவின் வடபகுதியில் புன்ட்லாண்ட் (Puntland) எனப்படும் அரை சுயாட்சிப் பிரதேசத்தை கட்டுப்பாட்டில் எடுக்க முயற்சிக்கின்றார்கள்

அதன் பின்னால் பல்வேறு சேர்க்கைகள் செய்யப்பட்டன. எடுத்துக்காட்டாக, நவம்பர் 25 பிரிட்டிஷ் சண்டே டைம்ஸ் அல் இத்திஹாத் பின் லேடனின் பாதுகாப்புத் தலைவரான முகம்மது அட்டெப்புடன் தொடர்புகொண்டிருந்ததாக கூறியது. அவர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க குண்டுவீச்சின்போது கொல்லப்பட்டார். அல் இத்திஹாத் அல் கொய்தாவின் "மூர்க்கத்தனமான உள்ளூர் இணைப்பு" என்றும் சோமாலியா அல் கொய்தா இயக்கிகளுக்கு ஆதரவு என்று சொல்லப்படுகிறது என்றும் குறிப்பிட்டது.

மிக அண்மையில் சண்டே டெலிகிராப் புதிய திரித்தலைத் தந்தது: அது அல் கொய்தாவுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ள இஸ்லாமிய போராளிக் குழுவால் பயன்படுத்தப்படும் பல பயங்கரவாத முகாம்களுக்கு சதாம் ஹூசைன் நிதி உதவி செய்வது என வெளிப்பட்டது. லண்டனை அடிப்படையாகக் கொண்ட ஈராக்கிய அதிருப்தியாளர் குழுக்களின்படி ஐ.நா பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதில் சோமாலி அதிகாரிகளிடமிருந்து கிடைக்கும் உதவிக்கு கைம்மாறாக அல் இத்திஹாத் மற்றும் அல் இஸ்லாமியா சோமாலி குழுவிற்கு நிதி, பயிற்சி மற்றும் தளவாடம் வழங்க சதாம் ஹூசைன் சம்மதித்திருக்கிறார். "அமெரிக்க அதிகாரி கூறியதை டெலிகிராப் மேற்கோள்காட்டுகிறது," இது சதாமிற்கு முக்கியமான அபிவிருத்தி ஆகும். இது போன்ற கூட்டுக்களை அமைப்பதன் மூலம் இப்பிராந்தியத்தில் அமெரிக்க படைகளிடமிருந்து விடுதலை பெறமுடியும் என நினைக்கிறார். "தென் சோமாலியாவில் அல்கொய்தா பல பயிற்சி முகாம்களை வைத்திருக்கின்றன என்றும் கூட கூறினார்.

ஒரு மாதத்திற்கும் மேலாக சோமாலியாவுக்கு எதிரான திட்டமிட்ட பொய் மற்றும் இருட்டடிப்பு பிரச்சாரம் அமெரிக்க உளவுத் துறையால் அபிவிருத்தி செய்யப்பட்டது. அல் கொய்தா பயங்கரவாதத்திற்கான மையமாக முத்திரை குத்தும் முயற்சியில், அவை புகார் கூறும் செய்தி ஊடகங்கள் முழுவதாலும் ஆதரிக்கப்பட்டிருக்கின்றன.

மேற்கண்டவாறு பட்டியிலிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுப்பதற்கு, அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் மத்தியில் சோமாலியா தொடர்பான அறிவு உண்மையில் இல்லாமை பற்றி ஒருவர் கட்டாயம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நவம்பர் 4ம் தேதி போஸ்ட் கட்டுரை 1991ல் அமெரிக்கத் தூதரகம் மூடப்பட்டது மற்றும் இன்றைய சோமாலியா, அமெரிக்க கொள்கை வகுப்போர்க்கும் பயங்கரவாத எதிர்ப்பு வல்லுநர்க்கும் ஒருவகை புதிராக இருக்கிறது. "பிரிட்டிஷ் உளவுத்துறை சோமாலியாவில் உள்ள இஸ்லாமிய குழுக்களை கவனிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்று டெலிகிராப் செய்து வெளியிட்டது: "ஏறத்தாழ பெரிய உளவுத்துறை இடைவெளிகளை நாம் கண்டுபிடித்தோம்."

அல் கொய்தாவால் நிதி அளிக்கப்பட்டது என்பதற்கோ அல் பரக்காத் மூலம் நிதி செல்கிறது என்பதற்கோ சான்று கொடுக்கப்படவில்லை. பரக்காத் தொலைத் தொடர்பு மேலாளர் அப்துல்லாகஹியே கம்பெனியின் புத்தகங்களை அமெரிக்க அதிகாரிகள் பார்வையிட வருமாறு அழைத்தார், ஆனால் அவ்வழைப்பு நிராகரிக்கப்பட்டது. (இந்த அமைப்பு சோமாலியாவில் கூட தளம் கொண்டிருக்கவில்லை, அது பாதுகாப்பற்றது எனக் கருதி துபாயில் அமைந்திருக்கிறது.) அவர் IRIN செய்தி நிறுவனத்திடம் கூறினார்: "நீதியை நிலை நாட்ட வேண்டி நான் அமெரிக்கர்களிடம் வாருங்கள் விசாரணை செய்யுங்கள் என்றேன். பொறாமை மிக்க போட்டியாளர்கள் அல்லது மற்றவர்களின் மறைமுக நிகழ்ச்சி நிரலால் வைக்கப்படும் வதந்திகள் பொய்களைச் சார்ந்திருக்காதீர்கள். மறைப்பதற்கு எங்களிடம் எதுவும் இல்லை." அமெரிக்க கருவூலத்தால் ஆன பதில் "மிக, மிக பலமான ஆதாரம்" இருக்கிறது என்று வலியுறுத்துவதாக இருந்தது.

சோமாலியாவிற்கு எதிரான பிரச்சாரம், அமெரிக்க கல்விமான் வடகரோலினா, டேவிட்சன் கல்லூரி பேராசிரியர் மென்காஸ் ஆல் முன்வைக்கப்பட்ட விஷயங்களால் முழுவதுமாக அம்பலப்படுத்தப்படுகிறது. சோமாலியா மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் தொடர்பான வல்லுநரான மென்காஸ் ஐநாவிற்கான ஆலோசகர் மற்றும் தற்போது ஐ.நா மற்றும் அமெரிக்கா இரண்டுக்கும் ஆலோசகராக இருக்கின்றார். நவம்பர் 27 அன்று சர்வதேச அமைதிக்கான பராமரிப்பு அறக்கட்டளைக்கு முன்னுரையில் சோமாலியாவில் அல் கொய்தா தொடர்பு என்ற கூற்றுக்கு ஆதாரம் இல்லை என்று மிகத் தெளிவாகக் கூறினார்.

மென்காஸின்படி, "அல் கொய்தா தொடர்பாக குறிப்பாகச் சொன்னால், பின் லேடன் அமைப்பைப் பொருத்தமட்டில் சோமாலியா 'ஒப்பீட்டளவில் வள ஆதரவற்ற சமவெளி' ஆக இருக்கும். இந்த நாட்டில் உள்ள கூட்டாளிகள் நம்பமுடியா அளவிற்கு நிலையுறுதி அற்றவர்கள், மற்றும் நாட்டில் இரகசியத்தைக் காப்பாற்றுதல் கடினமாக இருப்பது அல் கொய்தா ஒளிவு மறைவாய் இயங்குதற்கு கஷ்டத்தை அளிக்கும்."

அரசாங்கம் இல்லாத பரந்த கடற்கரை கொண்ட சோமாலிய பயங்கரவாதிகளுக்கு "மாறும் இடமாக" பயன்படுத்தமுடியும், ஆனால் அல் கொய்தா நடவடிக்கைகளுக்கான ஆதாரத்தை வழங்கவில்லை என்று மென்காஸ் குறிப்பிட்டார். "கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக அல் இத்திஹாத் பிரதானமான மிகத் தீவிரமான இஸ்லாமிய குழுவாக இருந்து வருகிறது" என அவர் ஒப்புக் கொண்டார். "மொகம்மது சியாட் பார்ரே -ன் ஊழல் மற்றும் ஒடுக்குமுறை அரசாங்கத்துடன் குறிப்பாகத் துண்டித்துக்கொண்ட" இளைஞர்களின் குழுக்களால் 1980களில் அது உதயமானது. (சியாட்பார்ரே எத்தியோப்பியாவில் சோவியத் ஆதரவு ஆட்சிக்கு எதிரிடையாக அமெரிக்காவால் 1970 களின் மத்தியில் ஆதரிக்கப்பட்டார் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் பொறிவினைத் தொடர்ந்தே அது ஆதரவை நிறுத்திக் கொண்டது.)

அல் இத்தாத் பற்றிய படப்பிடிப்பில் அது செயலூக்கமான பயங்கரவாத இயக்கம் என்பதற்கான எந்த நியாயப்படுத்தலும் இல்லை. 1990களின் ஆரம்பத்தில் அல் இத்திஹாத் பல பகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் 1996ல் எத்தியோப்பியத் துருப்புக்களால் விரட்டி அடிக்கப்படும் வரை கென்ய எல்லை அருகே லுக் என்ற நகரைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. "சோமாலியாவில் எல்லைப் பகுதிகளில் தனது கட்டுப்பாட்டை அமல்படுத்த எடுத்த முயற்சியில் அல் இத்திஹாத் தோல்வியுற்றது. "இத் தோல்விக்குப் பிறகு" அல் இத்திஹாத் தலைவர்கள் சோமாலியா, இஸ்லாமிய ஆட்சிக்கு இன்னமும் தயாராக இல்லை என்ற முடிவுக்கு வந்தனர்."

சோமாலிய சமூகத்தில் மேலாதிக்கம் செய்யும் யுத்தப் பிரபுக்களிடமிருந்து சுதந்திரமாக இயங்குவதற்கு அது முயற்சி செய்ததால் அல் இத்திஹாத் தோல்வி அடைந்தது மற்றும் அது சூடானிலிருந்து ஆதரவைவை பெற்றதன் காரணமாக சோமாலியர்கள் மத்தியில் அது ஒரு வெளிநாட்டுக் கைப்பொம்மையாகப் பார்க்கப்பட்டது என மென்காஸ் விளக்குகிறார். இப்பொழுது அது, அரசாங்க அமைப்பில் ஊடுருவி அது இருக்கத்தக்கதாய் மற்றும் பெரு முதலாளிகளிடம் செல்வாக்கை செலுத்த முயற்சிக்கும் மற்றும் இஸ்லாமிய அடிப்படை வாதத்தை முனனெடுக்கும் ஆற்றொணா நிலையில் உள்ளது. அதன் பிரதான இலக்குகள் அல் கொய்தா போல் அல்லாமல் "உள்நாட்டினதாக இருக்கிறது, வெளிநாட்டினதாக இல்லை."

அல்கொய்தா, அல் இத்திஹாத் மற்றும் சோமாலியாவில் பயங்கரவாதம் சமபந்தமாக செய்தி ஊடகக் கூற்றுக்களைப் பொறுத்தவரை அமெரிக்க உளவுத்துறை முகவர்களுடையதான கட்டுக்கதை அல்ல. மென்காஸ் அவைகளின் ஆதார மூலத்தை விளக்குகிறார்: "அந்த குழுவுடன் மோதுதற்காக உதவியைப் பெறுவதற்காக வேண்டி அல் இத்திஹாத் நடவடிக்கைகளை மிகைப்படுத்திக் காட்டுவதில் அது அதிகார கும்பலின் நலனைக் கொண்டிருப்பதால் எத்தியோப்பிய அரசாங்கத்திடமிருந்து வரும் தகவல்களின்மீது மிக நம்பிக்கை வைத்தலை அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் தவிர்க்கவேண்டும். சோமாலியாவிற்குள்ளும் கூட: "அல் இத்திஹாத்துடன் சண்டை இட விரும்பும் உள்ளூர் குழுக்களின் மீது அளவுக்கு அதிகமாக நம்பிக்கை வைப்பது கட்டாயம் தவிர்க்கப்படவேண்டும், ஏனென்றால் பெரும்பாலான இக்குழுக்கள் உண்மையில் பயங்கரவாத அச்சுறுத்தல்களை துடைத்தழிப்பதைக்காட்டிலும் தொடர்ச்சியாக அமெரிக்க வளங்களை பெறுவதில்தான் அதிக அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றனர்."

அமெரிக்க நிதி உதவியைப் பெறும் அதேநோக்கம் ஈராக்கிய எதிர்ப்புக் குழுக்களுக்கும் நிச்சயமாகப் பொருந்தும். மேலும் சதாம் ஹூசைன் சோமாலியாவில் அல் கொய்தாவுடன் தொடர்பு கொண்ட பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதி அளிக்கிறார் என்ற குற்றச்சாட்டு ஈராக்கில் இராணுவத் தலையீட்டைச் செய்து எதிர்ப்பு அணியை அமெரிக்காவின் பொம்மை அரசாங்கமாக ஆட்சியில் அமர்த்துவதற்கான அழைப்புடன் சரியாகப் பொருந்துகிறது.

சோமாலியா தொடர்பான எத்தியோப்பிய ஆட்சியின் தேசிய அபிலாஷைகள் அரிதாகவே இரகசியமானது. ேவால்ஸ்ட்ரீட் பத்தரிக்கை யின்படி, அல் இத்திஹாத் புன்ட்லாண்டை கைப்பற்றி விட்டது என்ற பொய்யான கூற்றை ஒரு நியாயப்படுத்தலாகப் பயன்படுத்தி, எத்தியோப்பிய இராணுவம் இப்பொழுது அந்தப் பகுதிக்குள் நுழைந்துள்ளது. இந்த ஆக்கிரமிப்புக்கு உத்தியோகபூர்வமாக அனுமதிக்காத அதேவேளை, அமெரிக்க அதிகாரி "அது எந்த விதமான எச்சரிக்கையையும் ஏற்படுத்தவில்லை. மற்றும் அது பரந்தஅளவில் அமெரிக்க நோக்கங்களுடன் பொருந்துவதாகவும் இருந்தது என்று குறிப்பிட்டதாக நவம்பர் 28ம் தேதி கட்டுரை குறிப்பிட்டது.

இறுதியாக, ஒசாமா பின் லேடன்1993ல் தனது உயர்மட்ட தளபதிகளை மொகம்மது அய்தீதுக்கு ஆதாரவாக அனுப்பினார் என்பது முற்றிலும் கட்டுக் கதை ஆகும்.

சோமாலியாவில், அமெரிக்க இராணுவ நலன் அதன் மூலோபய ஸ்தானத்தின் காரணமாகத்தான் ஆபிரிக்க கொம்பு கடற்கரையோரம் வழியாக செல்லும் பெரும்பாலான ஐரோப்பிய எண்ணெய் விநியோகம் மற்றும் மத்திய கிழக்குக்கு அது அருகாமையில் உள்ளமை இவற்றால் சோமாலியா பிரதான பூகோள அரசியல் முக்கியத்துவம் உடையதாக இருக்கிறது. 1993ல் மனிதாபிமான அமைதி காப்புபாத்திரம் என்ற பாசாங்கின் கீழ், தனது ஆக்கிரமிப்பிற்காக அமெரிக்கா ஆதரவைப் பெற முயற்சித்தது. இரு உள்ளூர் யுத்தப் பிரபுக்களான- அய்தீது மற்றும் அலி மாஹ்தீது உடனான முதலாவது பேச்சுவார்த்தைப் பேரத்திற்குப் பின்னர், 1993ல் 20,000க்கும் மேற்பட்ட துருப்புக்கள் அனுப்பப்பட்ட போது,-ஆக்கிரமிப்புக்கு வளர்ந்து வந்த பரந்த மக்களின் எதிர்ப்பு அய்தீதை தீயசக்தியாக உருவகப்படுத்திக்காட்டுதல் மூலம் விளக்கப்பட்டது. கெலிஹாப்டர் பீரங்கிகளால் நூற்றுக்கணக்கான அப்பாவி குடிமக்கள் சுட்டுவீழ்த்தப்படுவதை அர்த்தப்படுத்துவதாயினும், அய்தீதுக்கு எதை விலை கொடுத்தும் பாடம்புகட்ட வேண்டிஇருந்தது. விளைவு அய்தீது மட்டும் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்தார் என்பது அல்ல மாறாக சோமாலி மக்கள் ஒட்டு மொத்தமாக திருப்பித் தாக்குவதாக, தற்காலிகமாகவேனும் போரிடும் யுத்தப் பிரபுக்களின் பிரிவுகள் கூட ஐக்கியப்படும் வகையில் இழிவுபடும் படியான அவமதிப்பாக 18 அமெரிக்க படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.

சோமாலியாவில் இருந்து அமெரிக்கத் துருப்புக்களை பலவந்தமாகத் திரும்பப்பெற வைத்தது முதல் ஒசாமா பின் லேடன் மற்றும் மொகம்மது அய்தீது வரை "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" என்பது வசதியான புனைகதையாக இருக்கிறது. முரண்பட்ட உண்மையாக, அய்தீது சூடானில் உள்ள மத அடிப்படைவாதிகளிடமிருந்து ஆதரவைப் பெற்றார் என்பதற்கான சான்று எதுவும் இல்லாத போதிலேயே -அந்தநேரம் பின்லேடன் அங்கு வசித்தார்- மேலோட்டமாக ஆப்கானிஸ்தானுடன் தொடர்பு இருக்கிறது. சோவியத் விமானங்களைத் தகர்க்க ஏவுகணை எறி குண்டுகளை எப்படிப் பயன்படுத்துவது என்று அமெரிக்க உளவுத்துறையினர் கற்றுக் கொடுத்த, முஜாஹைதீன்களால் பயிற்றுவிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த சோமாலியர்கள் மொகதிஷ்ஷில் அமெரிக்க பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களை வீழ்த்தினர்.