WSWS :செய்திகள்
& ஆய்வுகள்:
ஆசியா
: ஆப்கானிஸ்தான்
After US massacre of Taliban POWs: the stench of death and
more media lies
தலிபான் யுத்தக் கைதிகளைப் படுகொலை செய்த பின்னர்: மரணத்தின் முடை
நாற்றமும் செய்தி ஊடகங்களின் மிகையான பொய்களும்
By Jerry White
29 November 2001
Use
this version to print |
Send this link by email
| Email the author
பத்திரிகையாளர்களும் செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளும் புதன் கிழமை அன்று, மஜார்-இ-ஷெரிப்
அருகே உள்ள சிறை வளாகத்திற்குள் அவர்கள் நுழைகையில் கண்ட கோரப் படுகொலை காட்சி பற்றி அறிவித்துள்ளனர்.
அங்கு அமெரிக்க சிறப்பு படைப்பிரிவுகளாலும் சி.ஐ.ஏ ஆட்களினாலும் வழிநடத்தப்பட்ட மூன்று நாள் படை அரண்
முற்றுகையின் போது 800 வெளிநாட்டு தலிபான் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
அமெரிக்க பத்திரிகைகளில் மேற்கோள் காட்டப்பட்ட வடக்குக் கூட்டணி வட்டாரங்களின்
படி, கொல்லப்பட்டோரில் பெரும்பாலானோர் சிறை வளாகத்திற்குள் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் வான் தாக்குதலின்
காரணமாக இறந்தனர். மூன்று நாட்கள் முற்றுகையின் பொழுதும் குறைந்த பட்சம் 30 குண்டு வீச்சுத் தாக்குதல்கள்
அமெரிக்க விமானம் மற்றும் ஹெலிகாப்டர் பீரங்கித் தாக்குதல், சிறையில் உள்ள சிறப்புப் படைப் பிரிவுகளால் சுட்டிக்
காட்டப்பட்ட இலக்குகள் மீது நடத்தப்பட்டன.
நேரில் பார்த்தவர்கள், இன்னும் எரிந்து கொண்டிருந்த கட்டிட மற்றும் கட்டிட இடிபாடுகளுக்கு
இடையில் நூற்றுக் கணக்கான தலிபான் கைதிகளின் துண்டிக்கப்பட்ட உடல்கள் சிதறிக் கிடந்ததையும், டஜன் கணக்கான
இறந்துபோன குதிரைகளின் வெடித்துச் சிதறிய உடல்கள் மற்றும் துப்பாக்கி ரவைகளால் துளைத்தெடுக்கப்பட்ட வாகனங்களைக்
கண்டதாகவும் கூறினர். செஞ்சிலுவைச் சங்கத்தினர் அவர்களைப் புதைப்பதற்காக உடல்களை வாகனங்களை ஏற்றும்
வண்டிகளில் [Trailors]
அள்ளுகையில் காற்றில் இறந்த உடல்களின் பிண நாற்றம் நிரம்பி இருந்தது என்று கூறினர்.
வடக்குக் கூட்டணி ஜெனரல் ரஷீத் தோஸ்தும், இறந்து போன உடல்கள் மத்தியில் உயிருள்ள
கைதிகள் இன்னும் ஒளிந்து கொண்டிருப்பர் அல்லது ஏனையோர் தாம் கொல்லப்படுவதற்கு முன்னர் தங்களது உடல்களில்
தொடு வெடிப் பொறி அமைவுகளை வைத்திருக்கலாம் என்று கூறிக் கொண்டு, வளாகத்தின் தென்பகுதிக்கு செய்தியாளர்கள்
செல்வதைத் தடுக்க முனைந்தார்.
அந்த இடத்தில் அலைந்து கொண்டிருந்த அசோசியேட் செய்தி நிறுவன படப்பிடிப்பாளர்
ஒருவர், கறுப்புத் துணியால் பின்புறமாக கைகள் கட்டப்பட்ட நிலையில் 50 கைதிகளின் இறந்து போன உடல்களை
தாம் கண்டதாகக் கூறினார். வடக்குக் கூட்டணி படைவீரர்கள் அந்தத் துணிக்கட்டுக்களை கத்தரிக் கோலாலும் கத்தியாலும்
அகற்றுவதில் சுறுசுறுப்பாய் இருந்தனர். கைதிகளில் எவராவது இன்னும் உயிருடன் இருக்கலாம் எனக் கருதி, வடக்குக்
கூட்டணிப் படையினர் தலிபான்களின் உடல்களில் சுட்டதாக பி.பி.சி செய்தி அறிவித்தது.
இறந்து போனவர்கள் பெரும்பாலும் பாகிஸ்தானியர்கள், செச்சென்கள், அரேபியர்
மற்றும் ஆப்கன் அல்லாதவர்கள். இவர்கள் தலிபானின் வடக்கு வலுவான நிலையான குண்டுஸ் வடக்குக் கூட்டணி
துருப்புக்களிடம் விழுந்த பொழுது, நவம்பர் 24 , ஞாயிறு அன்று சரணடைந்தவர்கள் ஆவர்.
பல்வேறு அமெரிக்க செய்தி ஊடக வெளிப்பாடுகளாக, இந்த இரத்தம் தோய்ந்த காட்சிகள்
சிலவற்றை காண்போரைப் பாதிக்கக் கூடும் என அடிக்குறிப்பு இட்டு எச்சரிக்கையுடன் ஒளிபரப்பின. ஆனால் வலைப்பின்னல்
{Networks} மற்றும் செய்தித்தாள்கள் உண்மை என்னவாக
இருந்தது என்பதை: மஜார்-இ-ஷெரிப்பில் நடைபெற்ற ஒரு இரத்தக் குளியல் படுகொலை என்பதையும் ஐக்கிய அமெரிக்க
அரசுகளால் தலைமை வகித்து வழி நடத்தப்பட்ட, இரண்டாம் உலகப் போரின் பொழுதான நாஜிப் படுகொலை
மற்றும் மை லாய் படுகொலைகளை நினைவூட்டும் ஒரு யுத்தக் குற்றம் என்பதையும் கூற மறுத்தனர்.
இன்னும் கூறுமிடத்து, அமெரிக்க செய்தி ஊடகம் படுகொலை செய்யப்பட்ட கைதிகளுக்காகவும்
பொதுவாக மத்திய ஆசியப் பகுதி மக்களுக்காகவும் , ஐக்கிய அமெரிக்க அரசுகள் அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு
எதிராக அவர்களைப் பாதுகாக்க என்று கூறுதலை ஏளனம் செய்வதற்குப் பதிலாக, அதன் கவனத்தை வளாகத்திற்குள்
சி.ஐ.ஏ ஏஜண்ட் இறந்தது பற்றிக் குவிமையப்படுத்தியது. அவரது இறப்பை யுத்தத்துக்கு ஆதரவு உணர்வைத் தூண்டி வளர்ப்பதற்குப்
பயன்படுத்துவதற்கு, அவை இந்த தொழில் ரீதியான கொலைகாரனை தேசிய நாயகனாகப் படம்பிடித்துக் காட்டின.
சர்வதேச மனித உரிமைக் கழகம் செவ்வாயன்று குவாலா-ஐ-ஜாங்கி சிறையில் நடந்த
சம்பவங்களைப் பற்றியும் வடக்குக் கூட்டணி, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் இராணுவத்தினரின் "பதிலின் தகவுப்
பொருத்தம்" {"proportionality of the response"}
பற்றியும் விசாரணைக்கு அழைப்பு விடுத்தது. அமெரிக்கா போர்க்கைதிகளை மனிதாபிமான முறையில் நடத்துவதற்கான
விதிமுறைகளைக் கூறும் ஜெனிவா விதிமுறைகளை முழுதாய் நிறைவேற்றுதற்கு தார்மீகக் கடமையாகக் கொண்டிருக்க
வேண்டும் என்று குறிப்பிட்டது.
இருப்பினும், அமெரிக்க செய்தி ஊடகத்தின் பிரதான முன்னீடுபாடு, இப்படுகொலையில்
புஷ் நிர்வாகம், அமெரிக்க இராணுவம் மற்றும் சி.ஐ.ஏ வின் நேரடிப் பாத்திரத்தினை மூடி மறைத்திருக்கிறது. செய்தி
ஊடகமானது தலிபான் கைதிகள் ஆயுதங்களைக் அரணுக்குள் கடத்திச் சென்று , வடக்குக் கூட்டணியின் சிறைபிடிப்பாளர்களுக்கு
எதிராக புறத்தூண்டுதலற்ற தாக்குதலை நடத்தினர் என்றதன் காரணமாக இப்படுகொலை நிகழ்ந்தது என்று நியாயப்
படுத்திய அமெரிக்க அரசாங்கத்தின் கூற்றை விமர்சனமற்று திரும்பத் திரும்பக் கூறியது. இது பல்வேறு நேரில்
கண்டோரது சாட்சியங்களால் முரண்படுகின்றது. ஆயினும் அது உண்மையாக இருந்தாலும் கூட, நிராயுதபாணியான
பெரும்பான்மையான கைதிகளைப் பரந்த அளவில் படுகொலை செய்தலை, இராணுவ நிலைப்பாட்டிலிருந்து கூட நியாயப்படுத்த
முடியாது.
அமெரிக்கப் படைகளாலும் அவர்களின் வடக்குக் கூட்டணி கைப்பொம்மைகளாலும் தூண்டிவிடப்பட்ட
எழுச்சி என்று சொல்லப்படுவது வெளிநாட்டு தலிபான் கைதிகளைப் படுகொலை செய்வதற்கான சாக்குப் போக்கு
என்பதற்கு அதிகரிக்கும் சான்றுகள் உள்ளன. புதன்கிழமை டைம்ஸ் ஆப் லண்டன் அறிக்கையின்படி, சி.ஐ.ஏ
ஏஜண்டுகள் தலிபான் போர்க்கைதிகளை விசாரணை செய்ய, ஏற்பட்ட மோதலில் குறைந்த பட்சம் நிராயுதபாணியான
ஐந்து கைதிகளை சுட்டுக் கொன்றது சம்பந்தப்பட்டதற்குப் பின்னர், ஞாயிறு மாலை வரை தலிபான் கைதிகளால்
பரந்த அளவிலான எதிர்ப்பு எதுவும் வெடிக்கவில்லை.
"தலிபான் கைதிகளைக் கட்டுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளால் கூட
கிளர்ச்சி தூண்டிவிடப்பட்டிருக்கக் கூடும், அவர்களில் பெரும்பாலோர் தாங்கள் கொல்லப்படக் கூடும் என வெளிப்படையாக
நம்பினர். ஒரு செய்தி அறிவிப்பின் படி, ஏனையோர் கிளர்ந்து எழுவதற்கு முன்னர், 250 கைதிகள் அவர்களது காவலர்களால்
கட்டப்பட்டிருந்தனர்" என்று டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. "கிளர்ச்சி" என்று கூறப்படுவதை ஆதரித்து
ஊக்குவதற்கான சாத்தியத்திற்கும் அதன் பின்னர் அவர்கள் அதிக ஆளுமை கொண்ட சுடுதிறானால் நசுக்கப்படுவதற்குமான
சாத்தியத்திற்கும் வழிவிட்டு, குறைந்த பட்சம் சரணடைந்த தலிபான்களைக் கொண்டு வந்த வாகனங்களுள் இரண்டு வடக்குக்
கூட்டணிப் படைகளாலும் அவர்களின் அமெரிக்கக் கூட்டாளிகளாலும் வேண்டுமென்றே சோதிக்கப்படவில்லை என்ற
விசித்திரமான செய்தியை கட்டுரை குறிப்பிட்டது.
செய்தித்தாளானது, கிளர்ச்சியை ஏற்படுத்திய பின்வரும் நிகழ்ச்சியைப் பற்றிய விளக்கத்தைத்
தருகிறது. ஒரு சாட்சி டைம்ஸிடம் குறிப்பிட்டார்: "சி.ஐ.ஏ வில் இருந்து வந்த இருவரால் தலிபான்கள்
விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பொழுது சண்டை ஆரம்பமானது. அவர்கள் தலிபான்களை எங்கிருந்து வந்தனர்
என்பதையும் மற்றும் அவர்கள் அல் கொய்தா அமைப்பினராக இருக்கக்கூடுமோ என்றும் அறிய விரும்பினர்."
இரு சி.ஐ.ஏ நபர்கள் ஆப்கான் உடையில், நரைத்த தாடி வைத்திருந்ததோடு பேர்ஷிய
மொழியில் பேசினர். ஒருவர் மைக்கேல், மற்றொருவர் டேவிட் என அறியப்பட்டதாக டைம்ஸ் அறிவித்தது.
டைம்ஸின் நேரில் பார்த்த சாட்சி தொடர்ந்து கூறியது: " மைக்கேல் ஒரு தலிபானிடம்
ஏன் அவர் ஆப்கானிஸ்தானுக்கு வந்தார் எனக் கேட்டார். அதற்கு அவர், ' உங்களைக் கொல்வதற்கு வந்தோம்'
என்று கூறி மைக்கேல் மீது பாய்ந்தார், அவர் கீழே விழுவதறகு முன், பிஸ்டலால் அவரையும் மற்றும் மூவரையும்
சுட்டுக் கொன்றார்."
ஏனைய பல தலிபான் கைதிகள் அடித்து, உதைத்து மற்றும் கடித்து ஒரு சி.ஐ.ஏ ஏஜண்டை
(இப்பொழுது சி.ஐ.ஏ வால் இராணுவத் துணைப்படை நடவடிக்கை அதிகாரி ஜொனி "மைக்" ஸ்பான் என்று இனங்காணப்பட்டுள்ள
ஏஜண்டை) கொன்று பதில் கொடுத்தனர், பின்னர் கூட்டணியின் காவலர்கள் பக்கம் திரும்பினர்.
டைம்ஸின் சாட்சி, இரண்டாவது சி.ஐ.ஏ ஏஜண்ட் டேவிட்டும் கூட குறைந்த பட்சம்
ஒரு கைதியையாவது கொன்றார், மற்றும் அவர் கைதிகளை விசாரணை செய்து கொண்டிருந்த கட்டிடத்தை விட்டு பிரதான
கட்டிடத்திற்கு ஓடினார், அங்கு செயற்கைக் கோள் தொலைபேசியைப் பயன்படுத்தி, உஸ்பெக்கிஸ்தானில் உள்ள அமெரிக்கத்
தூதரகத்தைத் தொடர்பு கொண்டு சிறையைத் தகர்க்க ஹெலிகாப்டர் மற்றும் துருப்புக்களை அனுப்புமாறு கேட்டார்.
அரணுக்கு அருகே இராணுவ விமான நிலையத்தில் தளம் கொண்டிருந்த அமெரிக்க மற்றும்
பிரிட்டிஷ் சிறப்புப் படைகள் முதலில் வந்து தாக்குதலைத் தொடங்கினர். ஜேர்மன் தொலைக் காட்சியில் ஒளிபரப்பிய
காட்சி மதில் சுவர்களைத் தாண்டி உள்ளே உள்ள திரளான கைதிகள் மேல் சுடுவதைக் காட்டியது. மற்றவர்கள் ஏஜண்டைக்
காப்பாற்றும் அல்லது அவர்களது உடல்களைக் கைப்பற்றும் முயற்சியில் கோட்டைக்குள் நுழைந்தனர். இதற்கிடையில் இரண்டாவது
ஏஜண்ட் சுவர்களைத் தட்டுத் தடுமாறிப் பிடித்துக் கொண்டு பாதுகாப்பாக கீழே உருண்டார். தப்ப முயற்சித்த தலிபான்
கைதிகள் அமெரிக்க, பிரிட்டிஷ் அல்லது கூட்டணிப் படைகளால் உடனடியாகக் கொல்லப்பட்டனர். அங்கு வாயிலில்
சாய்க்கப்பட்டிருந்த தலிபான்களின் உடல்கள், ஒவ்வொன்றும் தனித்தனி துப்பாக்கி ரவைகளால் தலையில் சுடப்பட்டுக்
கொல்லப்பட்ட நிலையில் இருந்ததாக செய்திகள் இருந்தன.
அமெரிக்கக் குண்டுத் தாக்குதல் ஞாயிறு அன்று ஆரம்பித்தது மற்றும் திங்கள் அன்று
உக்கிரம் அடைந்தது. நவம்பர் 26 அன்று பொழுது புலரும் வேளையில், தப்பிப் பிழைத்த கைதிகள் எண்ணிக்கை வளாகத்தில்
இருந்த 800 பேர்களில் இருந்து 100 அளவுக்கு வீழ்ந்திருக்கலாம். தப்பிப் பிழைத்த கைதிகளை மேலும் குறைப்பதற்கு
இரவு முழுவதும் தொடர்ந்து குண்டு வீசப்பட்டது.
இக் கோரக்காட்சியை விவரித்து, டைம்ஸ் ஆப் லண்டன் எழுதியது:" இவு நேர
திடீர்ச் சோதனை பல உடல்களை அரைகுறையாயப் புதைக்கும்படி விட்டது. கை கால் உறுப்புக்கள் மற்றும் முண்டங்கள்
காட்டுத் தீக்குப் பிறகு மண்ணில் மரத்துண்டுகள் நீட்டிக் கொண்டிருப்பது போல் தோன்றியது.
நவம்பர் 27 செவ்வாய்க்கிழமை அன்று காலையில், 200 கூட்டணித் துருப்புக்களை ஏற்றிக்
கொண்டு டிரக்குகள் அரணுக்கு வந்து சேர்ந்தன. அமெரிக்க சிறப்புப் படை உள்ளே செல்லவும் அமெரிக்க யுத்த விமானங்கள்
மேலே வட்டமிட்டபடியும் இருந்தன. கைதிகளை எடுத்துச் செல்லாது கூட்டணிப் படைகள் , ஒவ்வொரு அறையாகச்
சென்று, காயம்பட்டுள்ளோர் உட்பட உயிருடன் விட்டு வைக்கப்பட்டுள்ளவர்களைக் கொன்று, பிணங்களின் மீது துப்பாக்கி
ரவைகளையும் ராக்கெட்டுகளையும் கூட செலுத்தினர்.
அமெரிக்க மற்றும் பிரிட்டீஷ் சிறப்புப் படைகள் எஞ்சி இருந்த மூன்று தலிபான்கள்
அடைக்கலம் புகுந்த இடத்தை எண்ணெய் ஊற்றி எரித்த பின்னர் சண்டை செவ்வாய்க் கிழமை நண்பகல் முடிவுற்றது. பின்னர்
வடக்குக் கூட்டணி பல பாகிஸ்தானிய மற்றும் அரபு தலிபான் தொண்டர்கள் மீது டாங்கிகளை ஏற்றினர். மற்றும் 20
யார் தொலைவில் சுட்டனர், கட்டிடங்களை அழித்து கடைசியாக நீடித்து இருந்தவர்களைக் கொன்றனர்.
கைதிகளின் எண்ணிக்கையைக் குறைத்து மதிப்பிடுகையில், வடக்குக் கூட்டணி பாதுகாப்பு
மற்றும் உளவு அமைச்சக துணைத் தலைவர் அப்துல்லா ஜான் தாவீதி, "300 வெளிநாட்டு துருப்புக்கள் கொல்லப்பட்டனர்,
அது ஒரு பெரிய விஷயமல்ல" என்றார்.
வடக்குக் கூட்டணி தலைவர் ஜெனரல் ரஷீத் தோஸ்துமிற்கும் குண்டுஸில் இருந்த தலிபான்
கொமாண்டருக்கும் இடையிலான உடன்பாட்டின் கீழ், நகரை விட்டுக் கொடுப்பதற்காக வெளிநாட்டுக் கைதிகள் அரணுக்குள்
கொண்டு வரப்பட்டனர். ஐந்தாயிரம் தலிபான் படைவீரர்கள் படையை விட்டு விலகி ஓட அல்லது அவர்களின் கிராமத்திற்கு
பாதுகாப்பாக செல்ல அனுமதிக்கப்பட்டதாக செய்தி அறிவிக்கிறது. அதேவேளை, ஆப்கான் அல்லாதவர்கள் குவாலா-இ-ஜாங்கியில்
,தோஸ்துமின் தலைமையகத்தில் படை அரணில் சிறை வைக்கப்பட்டனர். அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர்
டொனால்ட் ரம்ஸ்பீல்ட் உட்பட அமெரிக்க அதிகாரிகள், சரண் அடைவதற்கு மாற்றாக வெளிநாட்டு தலிபான் துருப்புக்கள்
பாகிஸ்தானுக்குப் பாதுகாப்பாக செல்லும் எந்த பேரத்தையும் பகிரங்கமாக எதிர்த்தனர் மற்றும் தலிபான்கள் கொல்லப்பட
வேண்டும் என்பது அவர்களின் விருப்பத் தேர்வாக இருந்தது.
முரண்பட்ட வகையில் அதிக சான்றுகள் இருக்க, தோஸ்தும் அந்நிய போர்க்கைதிகள்
தங்கள் படைகளால் தவறாக நடத்தப்படவில்லை என்று மறுத்தார். ஆனால் தோஸ்தும் இம்மாத ஆரம்பத்தில் மஜார்-
இ- ஷெரிப்பில் ஆரம்பத் தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே விசாரணையின் கீழ் இருக்கிறார். அங்கு செஞ்சிலுவைச்
சங்கம் 600 உடல்களைக் கண்டுபிடித்தது. மேலும் இந்த வாரம் அவரது படைகள் உள்ளூர் தலிபான் வீரர்களையும் வெளிநாட்டு
தலிபான் வீரர்களையும் கொன்றதான செய்திகள் மேல் மட்டத்துக்கு வந்துள்ளன. அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனம்
அறிவித்தது:" பிடிக்கப்பட்ட தலிபான்கள் மீது காறி உமிழ்ந்தனர் மற்றவர்கள் காயம்பட்டுக் கீழேவிழுமாறு சுட்டனர்,
எதிரணிப்படையினர் திங்கள் அன்று குண்டுஸ் முழுவதும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டன.
தோஸ்தும் மற்றுமொரு 6000 தலிபான் சிறைக் கைதிகளை அருகில் உள்ள ஷெபர்கான்
நகரில் பிடித்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. தலிபானின் கடைசி நிலையான காந்தஹாரில் அமெரிக்க சிறப்புப்
படையினர் தேடி அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. ஆப்கானிஸ்தானின் தெற்குப் பகுதியில் அதே போன்ற படுகொலைகள்
இடம்பெறுகிறது என்ற ஐயம் சிறிது எழுந்துள்ளது. ராய்ட்டர் செய்தியின்படி, தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பஷ்துன்
இனக்குழுப் படையின் மூத்த கொமாண்டர் குல் அக்ஹா, புதன்கிழமை அன்று சரணடைய மறுத்த தலிபான்கள் 160
பேரை அமெரிக்க இராணுவ அதிகாரிகள் கண்களின் முன்னே எந்திரத் துப்பாக்கிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக்
கூறினார்.
அமெரிக்க யுத்தக் குற்றங்கள் நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன்
போஸ்ட் போன்ற தாராண்மைப் பத்திரிகைகள் என்று கூறப்படுகின்றவை உட்பட அமெரிக்க செய்தி ஊடகத்தால்
இருட்டடிப்பு செய்யப்படுகின்றது. அவை சிறைப் படுகொலைகள் பற்றி தலையங்கக் கருத்தைக் கூட வெளியிட மறுக்கின்றன.
மாறாக, செவ்வாயன்று கோழைத்தனமான தலையங்கத்தில், நியூயோர்க் டைம்ஸ் ," ஆரம்ப சண்டையில்
இருந்து விடப்பட்ட ஒரு பிரச்சினை வடக்கு ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்காகப் போரிட்ட மற்றும் இப்பொழுது
தோற்கடிக்கப்பட்ட வெளிநாட்டவர்களின் தலைவிதி பற்றியதாகும். அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் டொனால்ட்
ரம்ஸ்பீல்ட், அவர்களை சாதாரணமாக ஓடிச்செல்ல விட்டுவிடக் கூடாது என்று சரியாகச் சொன்னார்", என்று எழுதி,
பெண்டகனின் இரத்தம் தோய்ந்த கொள்கையை கைதட்டி ஆதரித்தது.
|