World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

The
New York Times and Bush's military tribunals

நியூ யோர்க் டைம்ஸ் உம் புஷ் இன் இராணுவ நீதிமன்றமும்

By David Walsh
26 November 2001

Use this version to print | Send this link by email | Email the author

நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையின் 6ஆம் திகதி ஆசிரியர் தலையங்கம், பயங்கரவாதிகள் எனப்படுவோருக்கு எதிராக அதிகாரத்துவ முறையிலான இரகசிய இராணுவ நீதிமன்றத்தை அமைக்க புஷ் நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட முறையினது ஜனநாயக விரோதமானதும், சர்வாதிகார நடவடிக்கைகளையும் ஒத்துக்கொண்டுள்ளது. அதன் பத்திரிகையாசிரியர்கள் இந் நீதிமன்றங்களை ''அரசியலமைப்புக்கு மாறாக எடுக்கப்பட்ட பிரச்சனைக்குரிய நடவடிக்கைகளின் முயற்சியில் அண்மையானது'' என குறிப்பிட்டுள்ளனர். அதில் மேலும் கைது செய்யப்பட்டவர்கள் தமது வழக்கறிஞர்களை சந்திப்பதை கண்காணிப்பது, நூற்றுக்கணக்கானோரை அவர்களின் அடையாளமின்றியும், அவர்களுக்கு மேல் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இரகசியமாக வைத்திருப்பதையும், அவ் இரகசியங்களுக்கான காரணத்தையாவது தெரிவிக்காது இருப்பது தொடர்பாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஆசிரியர் தலையங்கம், ''ஒரு பேனையின் உதறுதலுடன்....., இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக மிகுந்த பிரயத்தனத்துடன் ஒன்றிணைக்கப்பட்ட அமெரிக்க நீதித்துறையின் சட்டப் புத்தகங்கள் மீது முக்கியமாக தனது அக்கறையின்மையை காட்டியுள்ளார். நேர்மையான விசாரணைகளும், வழக்குகளும் நடைபெற்றதை அவர் ஒரு சர்வாதிகாரியால் மட்டும் அநுமதிக்கப்படக்கூடிய மூர்க்கமானதும், நினைத்துப்பார்க்கமுடியாததுமால் பிரதியீடு செய்துள்ளார்'' என குறிப்பிட்டுள்ளது.

புஷ் நிர்வாகத்தால் அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பை சிதறடிக்கும் வேகத்தையும், அளவினையும் குறித்து அரசியல், செய்தித்துறை அமைப்பினரிடையே அதிகரித்துவரும் கவலையையே டைம்ஸ் இன் ஆசிரியர் தலையங்கம் ஐயுறவிற்கின்றி வெளிப்படுத்துகின்றது. சில நாட்களுக்கு முன்னர் அரசியல் கைதிகளை சித்திரவதை செய்வதை ஆரதவளித்த நியூஸ் வீக் சஞ்சிகையின் Jonathan Alter அண்மையை கட்டுரை ஒன்றில் ''இரகசிய இராணுவ நீதிமன்றங்கள்? அமெரிக்கா எப்போது பெரு [Peru] ஆகியது?'' என எழுதியுள்ளார்.

டைம்ஸ், புஷ் இனது நடவடிக்கைகளின் பிற்போக்கான தன்மை குறித்து வெளிப்படையாக ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் அதனை ஒரு நேர்மையற்ற முறையில் செய்கின்றது. அதாவது உள்நாட்டில் இடம்பெறும் ஜனநாயக உரிமை மீதான தாக்குதலையும், அமெரிக்க இராணுவத்தின் முடிவற்ற மூர்க்கமான ''பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தையும்'' பிரிக்க முயல்கின்றது. இப்பத்திரிகையானது ''ஒரு சர்வாதிகாரியால் அனுமதிக்கப்பட கூடிய'' நடவடிக்கைகளுடன் எவ்வாறு ஒரு ''நீதியான'' யுத்தத்தை தொடர்புபடுத்தலாம் என்ற கேள்விக்கு பதிலளிக்காதது மட்டுமல்லாது அக்கேள்வியை எழுப்பவுமில்லை.

இரகசிய நீதிமன்றங்களையும், அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளையும் பாதுகாக்கையில் புஷ் இனது நிர்வாகத்தின் பேச்சாளர்களும், அதனது செய்தித்துறை ஆரதவாளர்களும் உள்நாட்டு யுத்தகாலத்தில் ஆபிரகாம் லிங்கனால் ஆட்கொணர்வு மனு (habeas corpus) வினை நிறுத்தியதை எடுத்துக்காட்டுகின்றனர். புஷ் இன் நீதித்துறையினை புகழ்வதற்கு மேலாக, இவ்வகையான ஒப்பிடுதலானது ஆப்கானிஸ்தான் மீதான யுத்தத்தினதும், உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலினதும் பிற்போக்கான உள்ளடக்கத்தை மறைக்க முயல்கின்றனர்.

லிங்கன், இவ் அவசரகால நடவடிக்கைகளை எடுத்த காலகட்டம், 1776 இல் குடியரசு அமைக்கப்பட்டு வாஷிங்டனுக்கு மிக அண்மையில் ஆயுதம் தாங்கிய இரத்தம் தோய்ந்த மோதலில் அகப்பட்டிருந்த நிலைமையிலேயாகும். அவ் யுத்தத்தின் விளைவு என்ன என்பது தெளிவாக தெரியாதிருந்தது. மிகவும் அடிப்படையில் அடிமைத்தனத்தை சட்டபூர்வமாக்குவதை தடுப்பதற்காக ஒரு சில உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டன. லிங்கன் Gettysburg என்னுமிடத்தில் தனது உரையில் குறிப்பிட்டவாறு உள்நாட்டு யுத்தம் ''சுதந்திரத்தின் புதிய பிறப்பு'' இனை கொண்டுவருவதற்காக செய்யப்பட்டதாகும்.

1861-65 வரையிலான யுத்தமானது ஜனநாயக உரிமைகளை பரந்தளவில் பரவலாக்கும் அரசியலமைப்பை திருத்துவதற்கான சட்டத்தை முன்மொழியப்பட்டபோது உருவாகியது. இதன் கீழ் அடிமைத்தனத்தை இல்லாதொழிப்பது, முன்னாள் அடிமைகளுக்கு குடியுரிமை வழங்குவது, சட்டத்தினதும், விசாரணையின் கீழும் சமமான உரிமையை வழங்குவது, சுதந்திரமடைந்த அடிமைகளுக்கான வாக்குரிமைக்கு உத்தரவாதம் வழங்குதல் என்பன அடங்கும்.

தற்போதைய ஆப்கான் யுத்தமானது சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு மாறாக, வெற்றிபெறுவதற்கான ஒரு காலனித்துவ யுத்தத்தை போன்றதாகும். குறிப்பிடப்படாத அதன் மத்திய நோக்கமானது, காஸ்பியன் கடலை சூழவுள்ள எண்ணெயும், இயற்கை வாயுக்களும் நிறைந்த பிரதேசத்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவாதாகும். இந்த மோதலானது முக்கியமாக எண்ணெயால் ஆதிக்கம் செய்யப்படும் முதலாளித்துவ அரசாங்கத்தால் நடாத்தப்படுகின்றது. இது செப்டம்பர் 11ம் திகதிக்கு முன்னர் அரசியல் ரீதியாக எதிர்பார்த்திருக்காத மக்களை ஆற்றலிழக்கச்செய்யும், குழப்பத்திற்குள்ளாக்கும் பைத்தியகாரத்தனத்துடன் ஒரு அரசாங்க பிரச்சாரத்துடன் ஆரம்பித்தது. இது முன்னரே தயாரிக்கப்பட்ட அதிகாரத்துவ ஒடுக்குமுறையினை விரைவாக அறிமுகப்படுத்துவதுடன் இணைந்திருந்தது.

ஆபிரகாம் லிங்கனது யுத்தகால நடவடிக்கைகளும், புஷ் இனது நோக்கங்களும் எதிரெதிரானவை என்பதை இவ்விடயத்தை சற்று துல்லியமாக நோக்குவதால் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். முன்னாள் Missouri இன் செனட்டரும் தற்போதைய அரச வழக்குத்தொடுனருமான John Ashcroft ஒரு கிறிஸ்தவ அடிப்படைவாதியும், வலதுசாரியும், இனவாதியுமாவார். 1998 இல் Southern Partisan சஞ்சிகைக்கு அவர் வழங்கிய பேட்டியில் ''உங்களது சஞ்சிகை சரியான பாதையில் கொண்டு செல்ல உதவுவதாக'' தான் அவதானித்ததாக குறிப்பிட்டார்.

Southern Partisan ஒரு புதிய கூட்டமைப்பின் [neo-Confederate] வெளியீடாகும். அது அடிமையுடமையையும், வெள்ளை இனவாதத்தையும், இனவெறியையும் பிரதிநிதித்துவப் படுத்துகின்றது. அத்துடன் அது வழமையாக லிங்கனின் படுகொலை தினத்தை கொண்டாடுவதுடன், இப்பத்திரிகையின் அண்மைய சிறப்பு கட்டுரையாக கூட்டமைப்பு [Confederate] சார்பாளரான Clement Laird Vallandigham மற்றும் Ohio மாநிலத்தின் காங்கிரஸ் உறுப்பினர் பற்றியும் அத்தோடு உள்நாட்டு யுத்தத்தின்போது இராணுவ நீதிமன்றத்தின் முன்நிறுத்தப்பட்டவர்களில் ஒருவரைப்பற்றியதாகும். இப்பத்திரிகை லிங்கனை ''அரசியலமைப்புக்கு மாறான, சட்டத்திற்கு அப்பாற்பட்ட கருத்துகளுக்காக'' கண்டித்ததுடன், ''பொலிஸ் அரசு'' அவரது ''உண்மையான பாரம்பரியம்'' ஆக இருந்ததெனக் குறிப்பிட்டது. இவ்வகைப்பட்ட அரசியல் சக்திகள் தான் புஷ் இனையும், John Ashcroft இனையும், அவர்களது தற்போதைய ''பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தையும்'' ஆதரிக்கின்றனர்.

டைம்ஸ் இன் ஆசிரியத் தலையங்கமானது ஜேர்மன் நாசி தலைவர்களுக்கு எதிரான நூரன்பேர்க் [Nuremberg] வழக்கு விடயத்தை எழுப்பியது. இவ் வழக்கின் பிரதான அமெரிக்க வழக்குத்தொடுனரும் கேடுற்ற நீதி என்று எச்சரித்தவருமான Robert Jackson ''பிரதிவாதிகளுக்கு ஒரு நஞ்சுக்கிண்ணத்தை கொடுக்கையில் நாம் எமது உதடுகளிலும் நஞ்சை பூசிக்கொள்வதாக'' என்ற வார்த்தைகளை மேற்கோள் காட்டினார். ஆனால் அவர்கள் இந்த மேற்கோள் விளக்கத்தை தலையங்கத்தில் கொடுக்கவில்லை.

இராணுவ நீதிமன்றத்தின் வலதுசாரி பாதுகாப்பாளர்கள் பின் லேடனும், அல் கொய்தாவும் பயங்கரமானவர்கள் எனவே அவர்களுக்கு உண்மையான விசாரணை தேவையில்லை என கூறுகின்றனர். செப்டம்பர் 11ம் திகதியின் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின் லேடன் தான் குற்றவாளி என்பதற்கான முக்கிய சாட்சியங்களை புஷ் நிர்வாகம் முன்வைக்காததை கவனத்திற்கு எடுக்காதுள்ளனர். வளர்ச்சியடைந்த ஏகாதிபத்திய நாட்டை தம்மிடம் வைத்திருக்கும், இலட்சகணக்கானோரை திட்டமிட்டு கொலைசெய்து வரலாற்றில் பாரிய குற்றத்தை செய்த இரண்டாம் உலக யுத்தத்தில் வெற்றிபெற்ற கூட்டணியினருக்கான பொருத்தமான இடம், பாரிய கொலைகளுக்கான தண்டணை வழங்கும் பகிரங்க நீதிமன்றமாகும்.

தற்போதைய பிரச்சனையில் அமெரிக்க அரசாங்கம், ஆப்கானிஸ்தானின் குகைகளில் வாழும் ஒரு சில ஆயிரம் பயங்கரவாதிகளுடன் வெளிவேடமிட்டு யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. ஒப்பிடுகையில் குற்றம் சாட்டப்படுபவர்களின் குற்றங்கள் சற்று குறைவானதாகும், இருப்பினும் இரகசிய இராணுவ நீதிமன்றங்களுக்கான அவசியத்தை அது வலியுறுத்துகின்றது, மேலும் முழு பரந்த அரசியலமைப்புக்கு விரோதமான நடவடிக்கைகளுக்கு வரலாற்றில் முன்னர் ஒருபோதும் இவ்வாறு கோரவில்லை. இதனை எவ்வாறு விளங்கப்படுத்துவது?

புஷ் நிர்வாகமானது பொய்யும், சதியும் கொண்ட முறைகளை பயன்படுத்துவது, மறுபக்கத்தில் பயங்கரவாதத் தாக்குதலை சூழ்ந்த நிகழ்வுகளை ஆராய்வதற்கு அதற்கு உண்மையான அக்கறை இல்லை என்பதை காட்டுகின்றது. பின் லேடனுக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் எதிரான பகிரங்க விசாரணையானது, அவர்களுக்கு எதிராக வைக்கப்பட்ட சாட்சியங்களின் உறுதியின்மையையும், மற்றும் அமெரிக்க உளவுத்துறையினருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்திவிடுவதுடன், செப்டம்பர் 11ம் திகதி தாக்குதல் அமெரிக்க உளவுத் துறையினருக்கு தெரியாது திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது என்ற அவர்களது கற்பனாவாதம் மிக்க கருத்தையும் நகைப்புக்கிடமானதாக்கிவிடும்.

இன்னும் சிலகாலத்தில் இராணுவ விசாரணைகள், முக்கியமாக அமெரிக்க மக்களிடமிருந்து மறைக்கப்படும்.

பொலிஸ் அரசை நோக்கிய நகர்வானது, யுத்தத் தேவைகளுக்காக அல்லாது உள்நாட்டு தேவைகளை நோக்கியே பரந்தளவில் முன்னெடுக்கப்பட்டது. அமெரிக்கா பாரிய சமூக நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. பொருளாதார வீழ்ச்சியின் கீழ் பரந்த மக்கள் பிரிவினருக்கும், வசதிபடைத்த தட்டினருக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்து வருகின்றது. இந்த நெருக்கடிக்கு எந்தவொரு பிரிவினரோ அல்லது இரண்டு கட்சியினரிடமோ ஒரு தீர்வும் கிடையாது. அவர்களின் ஒரே ஒரு பதில், ஒடுக்குமுறைக்கு மேல் மேலதிக ஒடுக்குமுறையாகும். பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு எதிராக எடுக்க என கூறப்படும் நடவடிக்கைகளானது உண்மையில் உள்ளூர் எதிர்ப்புகளுக்கு எதிரானதாகும்.

நியூ யோர்க் டைம்ஸ் உம் முற்றுமுழுதான தாராளவாத அமைப்பு முறையும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலை ஆதரிக்கின்றன. அவர்களது நோக்கம் ஆப்கானிஸ்தான் யுத்தம் ஒரு ஏகாதிபத்திய யுத்தம் என்பதை மறைப்பதாகும்.FTM டைம்ஸ் இற்கு விஷேட தகமைகள் உள்ளது. இப்பத்திரிகை கிளின்டனுக்கு எதிரான Whitewater ஊழலை நியாயப்படுத்துவதில் குற்றமிக்க பங்குவகித்ததுடன், அதிவலதுசாரிகளின் குற்றஞ்சாட்டும் முயற்சியுடன் இணைந்து கொண்டதுடன், 2000 ம் ஆண்டில் தேர்தல் புஷ் முகாமினால் களவாடப்பட்டதை வெளிப்படுத்திக்காட்டவும் மறுத்தது.

புஷ் இன் சர்வாதிகார முறைகளை நிராகரிப்பதில் கூட டைம்ஸ் பொய் கூறியது. நவம்பர் 16ம் திகதி ஆசிரிய தலையங்கத்தில் ''புஷ் அமெரிக்காவை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கையில், சட்டத்தை அமுல்படுத்துவது உட்பட அவர் பாதுகாக்க விரும்பும் கொள்கைகளின் மிகவும் அடிப்படையான பெறுமதிகளை இல்லாதொழிக்கின்றார்'' என குறிப்பிட்டது. .

டைம்ஸ் இன் ஆசிரியர்கள் அறிந்திருப்பது போல் புஷ், ஜனநாயகத்தின் ''அடிப்படையான மதிப்புக்களையும், கொள்கைகளையும்'' பாதுகாக்க முனையவில்லை. உள்நாட்டில் எடுக்கப்படும் மோசமான ஜனநாயக விரோத நடவடிக்கைகள், யுத்தத்தின் நோக்கங்களின் தன்மையுடன் ஒன்றாக இணைந்திருக்கின்றது. அதாவது மத்திய ஆசியாவில், அமெரிக்காவின் இலாபத்திற்காக பூகோள நலன்களை மறுசீரமைப்பதை நோக்கமாக கொண்டதாகும். புஷ் இனது இராணுவ வாதமும், யுத்தமும் சர்வாதிகார ஆட்சி முறையுடன் ஒன்றிணைந்ததாகும்.

டைம்ஸ் இன் ஆசிரியர்களுக்கு, புஷ் சட்டத்தை தூக்கியெறிந்து அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டதும், வலதுசாரி கோடீஸ்வரர்களை கொண்ட அவரது அமைச்சரவையும், குடியரசுக் கட்சியின் பாசிசவாத பிரிவினரும் முக்கிய அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானவர்கள் என்பதும் தெரியும்.

ஒரு குறைந்த, கவனமற்ற பாதையை மேற்கொள்ளவேண்டாம் என்பதை கூறுவதன் மூலம் புஷ் நிர்வாகத்தின் மீது தனது குற்றச்சாட்டையும், செல்வாக்கையும் பதிக்க விரும்புகின்றது. பத்திரிகையாசிரியர்கள் புஷ் இன் பொலிஸ் அரசு முறையானது பிழையானது எனவும் அதை திருத்திக்கொள்ளவேண்டும் எனவும் ஆலோசனை கூறுகின்றனர். இதுவும் முழுப்பொய்யாகும்.

அமெரிக்க அரசியல் அமைப்புமுறை சர்வாதிகார அமைப்பை நோக்கி மாற்றமடைவதும், வெளிநாட்டு கொள்கையான இராணுவ வாதமும் நவ காலனித்துவமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும். அதாவது அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடியானது அமெரிக்க ஜனநாயகத்துடனான உடைவினையும், சர்வதேச ரீதியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூர்க்கமான எழுச்சியையும் ஒரே நேரத்தில் தோற்றுவிக்கின்றது.