WSWS
:செய்திகள்
& ஆய்வுகள் : ஆசியா
: இந்தியா
India
Tamil Nadu government steps
up repression to crush bus strike
தமிழ்நாடு அரசாங்கம் பேருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை
நசுக்க ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது
By Ram Kumar
24 November 2001
Use
this version to print |
Send this link by email
| Email the author
தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாடு அரசாங்கம், இவ்வாண்டு தீபாவளி போனஸை வெட்டுவதால்
தூண்டி விடப்பட்ட, இரண்டுவார காலமாக நடைபெற்றுவரும் 1,25 000 பேருந்து போக்குவரத்துத் தொழிலாளர்களின்
வேலைநிறுத்தத்தை உடைப்பதற்கான எல்லா வழிவகைளையும் மேற்கொண்டு வருகிறது. ஆண்டு சம்பளத்தின் 20
சதவீதத்திலிருந்து (ரூபாய் 6000 அல்லது 125 அமெரிக்க டாலர்கள்) 8.33 சதவீதமாக வெட்டி, முதலமைச்சர்
பன்னீர் செல்வம் வேலை நிறுத்தம் செய்பவர்களை வேலையிலிருந்து நீககப் போவதாய் அச்சுறுத்தி, "ஒழுங்கு நடவடிக்கை"
எடுக்கப் போவதாய் எச்சரித்துள்ளார்.
நவம்பர் 9ம் தேதி தொடங்கிய வேலை நிறுத்தத்தை உடைப்பதற்கு அரசாங்கம் ஏற்கனவே
போலீஸ் ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஐந்து நாட்களுக்குள் 11000 தொழிலாளர்கள் அளவில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
நவம்பர் 17ம் தேதி அன்று மறியலில் ஈடுபட்டதற்காக பேருந்து தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் மனைவியர் பிள்ளைகளுமாக
இன்னொரு 2000 பேர் சிறையிலடைக்கப்பட்டனர். மொத்தத்தில் வேலைநிறுத்தம் செய்பவர்களும் அவர்களின் ஆதரவாளர்களுமாக
12,000 பேர் இப்பொழுது சிறைகளில் உள்ளனர். கிட்டத்தட்ட 4000 பேர் வேலைநிறுத்தம் தொடங்கியதுமே
"முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக" கைது செய்யப்பட்டனர். அதேவேளை எஞ்சியோர் பேருந்து பணிமனைகளில்
தங்களின் மறியல் செய்யும் ஜனநாயக உரிமைகளை பயன்படுத்துதல் உட்பட குறிப்பிட்ட குற்றங்கள் என்று சொல்லப்படுபவற்றை
செய்ததால் சிறையிலடைக்கப்பட்டனர்.
இப்பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு, அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகம் (அதிமுக) தலைமையிலான அரசாங்கம், சில சதவீத புள்ளிகளை கூட்ட வேண்டி அழுத்தம் கொடுப்பதற்காக,
தொழிற்சங்கத் தலைவர்கள் நவம்பர் 23 அன்று ஒரு நாள் அடையாள பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
மின் வாரியம் மற்றும் பொதுவிநியோக சேவை நிறுவனமான தமிழ்நாடு நுகர்வோர்
போக்குவரத்துக் கழகம் உட்பட ஏனைய மாநில அரசு நிறுவனங்களிலும் நவம்பர் 13 அன்று வேலைநிறுத்தம் வெடித்தது.
அது ஆரம்பித்து 24 மணி நேரத்திற்குள் தொழிற்சங்க தலைவர்கள் மின்வாரியத் தொழிலாளர்களை, எதனையும் வென்றெடுக்காமல்
வேலைக்கு திருப்பி அனுப்பினர். இதன் மூலம் சக்திமிக்க வகையில் பேருந்து தொழிலாளர்களைத் தனிமைப்படுத்தினர்.
பேருந்துத் தொழிலாளர்கள் உட்பட பொதுத்துறை ஊழியர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக
20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டு வந்தனர். மேலும் அரசு ஊழியர்கள் அரை நூற்றாண்டு காலமாக இந்து
பண்டிகைக்காக, பண்டிகைக்கால முன் தொகை ரூபாய் 1500 பெற்று வந்தனர். ஆனால் இந்த ஆண்டு ஒரே ஒரு பிரிவைச்
சேர்ந்த அரசு ஊழியர்கள் மட்டுமே அதைப் பெற்றனர்.
ஆறு மாதங்களுக்கு முன்னர்தான் ஆட்சிக்கு வந்த அதிமுக தலைமையிலான அரசாங்கம்,
முந்தைய திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் அரசு கருவூலத்தைக் காலியாக்கி விட்டிருந்தது, அது 20 சதவீத
போனஸை வழங்க முடியாமல் செய்துவிட்டது என்று கூறியது. முதலமைச்சர் பன்னீர் செல்வமும் கூட பேருந்துப் போக்குவத்துக்
கழகங்கள் நஷ்டத்தில் ஓடுவதாக அறிவித்தார்- இந்த ஆண்டில் மட்டும் 481 கோடி ரூபாய்கள் என்றார்.
போலீஸ் ஒடுக்குமுறை ஒரு பக்கம் இருக்க, அரசாங்கம் குண்டர்களையும் பயன்படுத்தியது.
தொழிற் சங்கத்தினரின் தகவல்களின்படி, அதிமுக குண்டர்கள் 6 லிருந்து 7 அங்குல கத்திகளை வைத்துக் கொண்டு
சென்னையில் உள்ள அண்ணா நகர் பணிமனைகளில் தொழிலாளர்களைத் தாக்கினர். போலீஸ் அமைதியாக வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்க, அவர்கள் நான்கு தொழிலாளர்களைக் காயப் படுத்தியுள்ளனர். அது நடந்து முடிந்ததும், "வன்முறையைத்
தூண்டி விட்டதாக மற்றும் சட்டம் ஒழுங்குக்கு ஊறு விளைவித்ததாக " போலீஸ் பல தொழிலாளர்களைக் கைது செய்தது.
நீதிமன்றம் வேலைநிறுத்தத்தை சட்டவிரோதம் என அறிவிக்கவும் வேலை நிறுத்தம் செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை
எடுக்கக் கோரியும் பொதுநல சேவை என்று அழைக்கப்படுவதினின்று சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு செய்யப்பட்டிருக்கிறது.
அரசாங்கம் மாநிலத்தில் தனியார் பேருந்துகள், சிற்றுந்துகள் (மினி பஸ்), வேன்களை
கூட ஏற்பாடு செய்தது, அத்துடன் கூடுதலாக பக்கத்து மாநிலங்களில் இருந்து 1500க்கும் அதிகமான பேருந்துகளை
வருவித்திருந்தது. அது பரந்த வேலையில்லா இளைஞர்களின் சேனையிலிருந்து பரந்த அளவில் ஓட்டுநர்களையும் நடத்துநர்களையும்
வேலைக்கு எடுத்தது, அதே போல முன்னாள் இராணுவ வாகன ஓட்டுநர்களையும் வேலைக்கு எடுத்தது. கருங்காலி
பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதுடன் அவை பல விபத்துக்களிலும் சம்பந்தப்பட்டன. அவற்றுள் 28 பேர்களைக்
கொன்ற 15 பேர்களைக் காயப்படுத்திய சம்பவமும் ஒன்று.
தொழிலாளர்கள் அவர்களது உறுதியை வெளிப்படுத்துகின்றனர். "அத்தியாவசியப் பொருட்களின்
விலை ஏறி இருக்கையில், மூன்று வருடங்களாகப் பெற்று வந்த போனஸை தொழிலாளர்கள் ஏன் குறைத்துக் கொள்ள
வேண்டும்?" என ஒருவர் கேட்டார்.
பெரம்பூர் பணிமனையில் மின்துறையைச் சேர்ந்த ஒரு தொழிலாளி கூறினார்: "பணிமனை
மேலாளர்கள் 20,000 ரூபாய் சம்பளமும் இதர வசதிகளையும் அனுபவிக்கும்போது ஏன் தொழிலாளர்கள் குறைக்கப்பட்ட
போனஸை ஏற்றுக் கொள்ள வேண்டும்? பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பளத்தை உயர்த்த அக்கறை கொள்ளும் போது
ஏன் தொழிலாளர்கள் தங்களது போனஸைப்பற்றி அக்கறைப்படக்கூடாது?"
அவர், அரசாங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை
முறையான சுகாதார வசதி இன்றி சிறைச்சாலைகளில் வைத்திருக்கிறது என குற்றம் சாட்டினார். மேலும் பேருந்துக்கட்டண
உயர்வு பொது மக்களைப் பாதித்துள்ளன என்றார். "நாள் ஒன்றுக்கு 50 ரூபாய் பெறும் போது ஒரு சாதாரண
தொழிலாளியால் இக்கட்டண உயர்வை செலுத்த முடியாது" என்றார் அவர்.
அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல்
பேருந்து தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க அரசாங்கத்துக்கு ஆகும் செலவு
60 கோடி ரூபாய்கள்தான், இருப்பினும் அது வேலைநிறுத்தத்தால் ஒருநாளைக்கு 8 கோடி ரூபாய்கள் வீதம் இழந்து
கொண்டிருக்கிறது--மொத்தம் இதுவரை 80 கோடி ரூபாய்களுக்கும் அதிகமாக செலவு ஏற்பட்டுள்ளது. அரசாங்கம்
இரு காரணங்களுக்காக இவ் வேலை நிறுத்தத்தை நசுக்க விரும்புகின்றது. முதலாவதாக, இவ்வேலை நிறுத்தம் வாழ்க்கைத்தரங்கள்
கடுமையாக சீரழிக்கப்படுவதை எதிர் கொண்டிருக்கும் இதர தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் என அஞ்சுகிறது.
ஆட்சிக்கு வந்த உடனேயே, இவ்வரசாங்கம் தவணை கடந்து செல்லுபடியற்றதாகிய சம்பள உடன்பாட்டைத் திருத்த
வேண்டி வேலைநிறுத்தம் செய்த நெய்வேலி லிக்னைட் கார்ப்பொரேஷனைச் சார்ந்த சுரங்கத் தொழிலாளர்களைத்
தாக்குவதற்கு போலீசை அனுப்பியது.
இரண்டாவதாக, தமிழ்நாட்டில் உள்ள அதிமுக ஆட்சியானது, தொழிலாளர்களின் தோல்வி
பேருந்துப் போக்குவரத்துக் கழகத்தை தனியார்மயமாக்கும் திட்டத்தை அதற்கு எளிதாக ஆக்கும் என்று கணக்குப்
போடுகின்றது. மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் இரண்டும் சர்வதேச நாணய நிதியம் ஆணையிடும் சீர்திருத்த திட்டங்களின்
ஒரு பகுதியாக தனியார் மயமாக்கல் திட்டங்களை நீண்ட காலமாக வைத்திருக்கின்றன, ஆனால் தொழிலாளர்களின்
எதிர்ப்பு அவர்களின் நகர்வை ஒத்திப் போடச் செய்துள்ளது.
அதிமுகவின் மிக நெருங்கிய கூட்டாளிகளுள் ஒருவரான திராவிடர் கழகத் தலைவரான
கி.வீரமணி, தொழிலாளர்களுக்கு எதிராக தைரியமாய் நடவடிக்கை எடுக்குமாறும் அரசுக்குச் சொந்தமான போக்குவரத்துக்
கழகங்களை தனியார்மயமாக்குமாறும் தமிழ்நாடு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார். தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு
சில வழித்தடங்களைக் கொடுக்கவும், அதேபோல மற்றைய பகுதியளவு தனியார்மயமாக்க வடிவங்களையும் அரசாங்கம்
எண்ணி வருவதாக நவம்பர்21ம் தேதி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
அதே நாளிதழின்படி, இலாபகரமான தொலைதூர மற்றும் நகர்களுக்கு இடையிலான
போக்குவரத்து வழித்தடங்களை தனியாரிடம் கைகழுவிவிடுமாறு உலக வங்கியானது இந்திய அரசாங்கத்தை வற்புறுத்துகிறது.
தொழிலாளர்களும் ஏழைமக்களும் இதனை எதிர்ப்பார்கள் ஏனெனில் இந்தியாவில் புகையிரத சேவைக்கு அடுத்தபடியாக
பேருந்துகள்தான் மலிவான போக்குவரத்துச் சாதனங்களாகும்.
திமுக தலைமையிலான தொழிற்சங்கம் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தாலும்,
திமுக வின், மத்திய அரசு வர்த்தகத்துறை அமைச்சர் முரசொலிமாறன் அரசாங்கத்தின் தனியார்மயமாகல் வேலைத்திட்டத்திற்கு
பலமான ஆதரவாளர் ஆவார். மத்திய அரசாங்கமும் கூட தமிழ்நாடு அரசாங்கத்துக்கு நிதியை வெட்டியுள்ளமை, அதனை
வாழ்க்கைத் தரங்கள் மேல் தாக்குதல் தொடுக்க விரட்டுகிறது.
வேலை நிறுத்தமானது போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் போராட்டக் குழுவால்
வழி நடத்தப்படுகிறது. இது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான சி.ஐ.டி.யு, சி.பி.ஐ தலைமையிலான
ஏ.ஐ.டி.யு.சி, திமுக தலைமையிலான எல்.பி.எப் மற்றும் காங்கிரஸ்(இ) தலைமையிலான ஐ.என்.டி.யு.சி, அத்துடன்
கூடவலதுசாரி இந்து மஸ்தூர் சங்கம் ஆகியவற்றால் அமைக்கப்பட்ட முன்னணி ஆகும். பெரும்பாலான அதிமுக பேருந்து
தொழிலாளர் சங்கங்களும் கூட வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்திருப்பதாக தொழிலாளர் மத்தியில் உணர்வு காணப்படுகிறது.
இருப்பினும், அதிமுக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இந்தக் கட்சிகளும் குறிப்பாகப் பொறுப்பேற்கின்றன.
அது சி.பி.ஐ(எம்), சி.பி.ஐ, காங்கிரஸ்(இ) மற்றும் ஏனைய முதலாளித்துவக் கட்சிகளுடன் தேர்தல் கூட்டுடனும்
ஆதரவுடனும் அதேபோல தொழிற் சங்க அதிகாரத்துவங்களது ஆதரவுடனும் ஆட்சிக்கு வந்தது.
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின்போது, தொழிற்சங்கத் தலைவர்கள்
தொழிலாளர்களுக்கு 8.33 சதவீதத்தை இப்பொழுதும் மீதம்11.67 சதவீதத்தை பின்னரும் கொடுப்பதாக வாக்குறுதி
அளிக்கும் பட்சத்தில் அதற்குப் பிரதியீடாக வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர முன்வந்திருக்கின்றனர். ஆனால்
அரசாங்கமானது தொழிற்சங்கத்தின் மானத்தைக் காப்பாற்றும் திட்டத்திற்கு ஒரேயடியாக மறுத்துவிட்டது. தொழிற்சங்கங்கள்
மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களுக்கும் அவற்றின் தனியார்மயமாக்கல் மற்றும் மற்றைய பொருளாதார "சீர்திருத்த"
நடவடிக்கைகளுக்கும் எதிராகப் போராட எந்தவிதமான பரந்துபட்ட அரசியல் போராட்டத்தையும் எதிர்த்து
|