பிரான்ஸ்
France: Support for war, attacks on democratic rights
பிரான்ஸ்:
யுத்தத்திற்கு ஆதரவளிப்பதுடன் ஜனாநாயக உரிமைகள் மீது தாக்குதல் நடத்துகின்றது
By Marianne Arens and Françoise Thull
23 November 2001
Use
this version to print |
Send this link by email
| Email the author
பிரெஞ்சு படை 16 நவம்பரில் இருந்து ஆப்கான் யுத்தத்தில் பங்குபற்றி வருகின்றது.
58 இராணுவ படையினரைக் கொண்ட முதலாவது படைப்பிரிவு இஸ்ட்றெஸ் [Istres]
என்னும் இடத்தில் இருக்கும் பிரெஞ்சுத் தளத்தில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதனது நோக்கம் வட ஆப்கான்
Mazar-e-Sharif ல் இருக்கும் விமானத்தளத்தை
பாதுகாப்பதுடன், ஏனைய படைகளின் வருகைக்கு பாதையைத் தயார் செய்வதாக இருக்கும். இந்தப் படையினரின் அனுப்புதலுடன்,
''மேலதிக போர் விமானங்களை அனுப்புவதன் ஊடாக எமது பங்களிப்பை விரிவாக்க'' தானும், பிரதமர் லியோனல்
ஜொஸ்பனும் முடிவெடுத்திருக்கிறோம்'' என ஜனாதிபதி ஜாக் சிறாக் தொலைகாட்சியில் அறிவித்தார்.
ஐக்கிய அரபு எமிரெட்ஸ் இல் இருக்கும் மிராஜ்
IV போர் விமானங்கள் மற்றும் 2 ஆயிரம் பிரெஞ்சு இராணுவப் படையினரும் ஏற்கனவே
''இரகசிய உளவு சேவை செயல்'' களில் ஈடுபட்டுள்ளன
என ஜாக் சிறாக் அறிவித்தார்.
நவம்பர் 13 இல் நடந்த பாராளுமன்றத்தில், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த
மத்திய ஆசியாவில் பிரான்ஸ் தனது முயற்சியின் நிலைப்பாட்டை மறைக்க முயற்சிப்பதன் பாகமாக பிரதமர் ஜொஸ்பன்
மனிதாபிமான உதவி என்ற கேள்வியை முன்னெடுத்தார். காபூலின் வீழ்ச்சியைப் பற்றி பேசும் போது, ''இந்த நிலைமைகள்
மிகவும் சாதகமானதாக உள்ளன. ஏனெனில் இவை ஒரு புதிய மூலோபாய அபிவிருத்திக்கு அனுமதியளிப்பதுடன் மனிதாபிமான
கேள்வி பற்றி ஒரு புதிய நடவடிக்கையை எடுப்பதற்கு பாதையை திறந்துவிட்டிருக்கின்றது.
Mazar-e-Sharif ஆக்கிரமிப்பும், காபூலின் வீழ்ச்சியும்
சில வடக்கு பிராந்தியங்கள் விடுவிக்கப்பட்டதானதும்.... ஒரு புதிய மனிதாபிமான உதவிக்கான பாதையை திறந்துவிட்டுள்ளதுடன்
பிரான்ஸ் மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் சர்வதேச சமூகமும் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையும் இதை
பயன்படுத்திக்கொள்ள விரும்புகின்றன.'' என அவர் மேலும் குறிப்பிட்டார்.
பிரான்ஸ் வெளிப்படையாகவும் தீவிரமாகவும் ஆப்கான் யுத்தத்தில் பங்கெடுப்பதை
நோக்கி திரும்பியதானது உள்நாட்டில் ஜனநாயக உரிமைகளை தாக்குவதில் நேரடியாக தொடர்புபட்டிருக்கிறது. யுத்தத்தில்
பங்கெடுப்பது பற்றி பாராளுமன்ற வாக்குக்கு விடாமல் அரசாங்கம் நனவுபூர்வமாக செய்தன் மூலம் ஏற்கனவே இதைத்
தெளிவாக்கியுள்ளது.
இடம்பெற்ற ஆப்கான் யுத்தம் ஆரம்பித்து இரண்டு நாள் கழித்து அக்டோபர் 9 இல் விடுத்த
முதல் அறிக்கைக்கு மாறாகவும், வளைகுடா மற்றும் பால்கன் யுத்தத்தங்களின் போது என்ன நடந்தன என்பது
பற்றியும், பாராளுமன்றம் தொடர்ந்து நடக்கும் எனவும் ஆனால் ஒரு வாக்கெடுப்புக்கு நான் அனுமதிக்கமாட்டேன் என
ஜொஸ்பன் தீர்மானகரமான முறையில் பாராளுமன்றத்தில் கூறினார். இந்த யுத்தம் வளைகுடா மற்றும் பால்கன்
யுத்தத்தம் போன்றதல்ல, மாறாக இது சர்வதேச பயங்கரவாதத்துடனான ஒரு உலகரீதியான முரண்பாடாக இருக்கிறது
என பிரதமர் வாதித்தார்.
பசுமைக்கட்சியிடம் இருந்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், பாதுகாப்பு செயலாளர்
Alain Richard, 15 நவம்பரில் ஒரு கலந்துரையாடலும்
ஒரு பாராளுமன்ற விவாதமும் இருக்கும் எனவும், ஆனால் அவைகள் ஒரு வாக்கெடுப்புடன் முடிவடையாது எனவும் குறிப்பிட்டார்.
''இந்தப் புள்ளியில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை'' என அவர் கூறினார்.
''உண்மையிலே இப்படியான ஒரு நடவடிக்கை-பாராளுமன்ற வாக்கெடுப்புக்கு விடுவது-
சோசலிசக் கட்சி மற்றும் வலதுசாரிகளிடமும் இருந்துதான் இதற்கான ஆதரவு கிடைக்கும் ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியினதோ
அல்லது பசுமைக்கட்சியினரதோ ஆதரவு இதற்கு கிடைக்காததுடன் வித்தியாசமான பிரிவுகளை கொண்ட அரசாங்க
கூட்டினது உடைவையும் ''பலப்படுத்தும் என ஜொஸ்பன் பயப்படுகிறார்'' என பிரெஞ்சு நாளந்த பத்திரிகையான
Le Monde விளக்கியிருந்தது.
கம்யூனிஸ்ட் மற்றும் பசுமைக் கட்சியினரது யுத்தத்திற்கு எதிரான காரணங்கள் எதுவும்
எந்தவொரு கோட்பாட்டு ரீதியான எதிர்ப்பில் இருந்தோ அல்லது ஜனநாயத்தின் மேலான மதிப்பில் இருந்தோ எழவில்லை.
அரசாங்கத்தின் வலது திருப்பத்திற்கு எதிராக இவர்கள் எப்போதாவதுதான் பலவீனமான முறையில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள்.
உதாரணமாக, பசுமைக் கட்சியினது ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதியான டானியல் கோன் பென்டிட் (Daniel
Cohn-Benditt) இந்த யுத்தத்திற்கு ஆதரவாக வெளிப்படையான வக்கீலாக இருந்துவருகிறார். எப்படியிருந்த
போதும், அடுத்த வருடம் பிரான்சில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி, பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களை
கவனத்தில் கொண்டு அவர்கள் செயல்படுகின்றனர்.
அரச இயந்திரத்தை
பலப்படுத்துகிறது
ஏனைய அரசாங்கங்களைப் போன்றே பாரீசும் செப்டம்பர் 11 தாக்குதலை நீண்ட
கால திட்டங்களை செயல்படுத்த பயன்படுத்துவதுடன், ''தேசிய பாதுகாப்பு'' என்ற கொடியின் கீழ் முக்கியத்துவமான
வகையில் அரச இயந்திரத்தை பலப்படுத்திவருகிறது.
12 செப்டம்பர் இரவு விஜிபிராற்
பாதுகாப்பு திட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டது. இது, அல்ஜீரிய இஸ்லாமியவாதிகளிடம் இருந்து வந்த பயமுறுத்தலுக்கு
பதிலீடாக 1995 இல் கோலிச பிரதமரான அலன் யூப்பேயால் அறிமுகப்படுத்தப்பட்டது. குண்டு வைக்கப்படலாம்
என்ற பயத்தில் பாரீசின் தெருக்களில் உள்ள குப்பைத்தொட்டிகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதுடன் இந்த பாதுகாப்பு
விஜிபிராற் திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான காவல் துறையினரும்,
CRS எனப்படும் உதவி
இராணுவப் படையும் மற்றும் இராணுவ படையினரும் பாரீசின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும், ஏனைய பெரிய
நகரங்களிலும் இப்போது பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கின்றனர்.
"Vigipirate என்பது
பொது இடங்களில் குறிப்பாக இவர்கள் முக்கியமான பொதுஜன நடமாட்டம் உள்ள இடங்களில் பெரும் எண்ணிக்கையிலான
காவல் துறையினரும், இராணுவத்தினரும் பாதுகாப்பில் ஈடுபட்டிருப்பர்"
என பாதுகாப்பு செயலாளரான
Alain Richard
விளங்கப்படுத்தியிருந்தார். இது பயங்கரவாதத்தின் ''தர்க்கவியல் மற்றும் புத்திசாதுரிய விளைவு'' ஆகும்.
உள்நாட்டிலும் வெளியிலும் இராணுவத்தால் எடுக்கப்பட்ட விரிவாக்கும் நடவடிக்கையின் காரணாமாக
பிரதமர் மேலதிகமாக சேவை அடிப்படையிலான 100 ஆயிரம் பேரை உள்ளடக்கிய ஒரு புதிய படையை அறிமுகப்படுத்த
விருமபுகின்றார். பிரான்சின் ''பாதுகாப்புக்கான பங்களிப்பை'' செய்ய விரும்பும் அனைத்து இளைஞர்களும் அடுத்த
வருடம் நடைபெறவிருக்கும் 14 நாட்கள் கொண்ட பயிற்சி திட்டத்தில் கலந்துகொள்ளலாம் என நவம்பர் 17 இல்
பிரதமர் அறிவித்தார். கடந்த வருடந்தான் கட்டாய இராணுவச் சேவை இல்லாமல் செய்யப்பட்டது.
New York மற்றும்
Washington மீதான தாக்குதலுக்குப் பின்னர், ''அன்றாட
வாழ்க்கையின் பாதுகாப்புக்கான சட்டம்'' (லிஷினிறீஷீவீ
suக்ஷீ றீணீ sஙநீuக்ஷீவீtங ஹீuஷீtவீபீவீமீஸீஸீமீ) சட்டமன்ற மேலவை
மற்றும் பாராளுமன்றத்திலும்
ஒரு பெரும்பான்மையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இது அக்டோபர் 31 இல்
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தனிமனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் கடுமையான முறையில் நுளைவதற்கான பரந்த
அதிகாரத்தை இந்தச் சட்டம் அரசுக்கு வழங்கியிருக்கிறது. காவல்துறையினரின் வலைவீச்சு நடவடிக்கைகளும் இதற்குள்
உள்ளடங்கும். முன் விசாரணைக்கான நிலையில் வீடுகளை சோதனையிடல், தொலைபேசிகளை தொடர்ச்சியாக
ஒட்டுக்கேட்டல், குடிபெயர்வு நடவடிக்கையை கடுமையாக கட்டுப்படுத்தல் மற்றும் இன்னும் அதிமான நடவடிக்கைகளை
இது உள்ளடக்கியிருக்கின்றது. தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ஒரு பெரும் அதிகாரத்தை இது கையளித்துள்ளது.
பொது இடங்களில் தனிநபர்களை சோதனையிடல், அங்கே பேசப்படும் மொழிகளை விசாரணை செய்தல் மற்றும் இப்போது
உடலை சோதனை செய்தலும் உள்ளடங்கியிருக்கிறது.
இணையம் மற்றும் மின்னஞ்சலை சோதனைக்கு உட்படுத்தலும் விரிவாக்கப்படவுள்ளன. இனி
வருங்காலத்தில் தொலைதொடர்பு நிறுவனங்கள் அவர்களது பாவனையாளர்களினை இனம்கண்டுகொள்ளும் அனைத்து
இரகசிய இலக்கங்களையும் ஒரு வருடங்களுக்கு பாதுகாத்து வைத்திருக்வேண்டும், தேவையெனில் விசாரணை செய்யும் நீதிபதியிடம்
அனைத்தையும் கையளிக்க வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு செய்திகளை பிரித்தறியும் தொழில்நுட்பங்களை உபயோகப்படுத்துவதற்கான
உரிமை கையளிக்கப்பட்டுள்ளது. விசாரணையாளர்கள் கேட்கும் பட்சத்தில் அவைகளை பிரித்தறியும் சாதனங்களை அபிவிருத்தி
செய்பவர்கள் அவர்களது மென்பொருள்களை கொடுத்து உதவ கடமைப்பட்டுள்ளார்கள்.
புதிய சட்டம் பிரான்சின் எல்லையில் அகதிகளுக்கு எதிரான தடையை கொண்டுவருவதற்கும்
முயற்சி செய்கிறது. உதாரணமாக, பிரித்தானிய பக்கத்தில் இருந்து ஈரோசுரங்க [Eurotunnel]
நிலவடிபாதையின் முழு அமைப்பிலும் பயணச்சீட்டை பரிசோதனை செய்ய பிரென்ஞ்சு பொலிசாருக்கு அனுமதியளிக்கப்படும்.
இதற்கான பின்னணி ஈரோ சுரங்கப் பாதையின் நுளைவாயிலில் இருக்கும் கலேக்கு [Calais]
அருகில் இருக்கும் Sangatte
அகதிமுகாமில் நடைபெற்ற கொடூரமான நிகழ்வாகும். பிரித்தானிய அரசாங்கம்
''சட்டபூர்வமற்ற முறையில் குடிபெயர்'' பவர்கள் ஈரோசுரங்க பாதையின் மூலம் பிரித்தானியாவுக்குள் வருவதை
முடிவுக்கு கொண்டுவர விரும்புகின்றது. புதிய கடுமையான கட்டுப்பாடுகளை பிரான்சின் பக்கத்தில் உள்ள சானலில்
விதிக்கும் படி சுரங்க இரயில் பாதையின் நிர்வாகிகள் பிரெஞ்சு அரசாங்கத்தை நிர்பந்தித்துக் கொண்டுள்ளார்கள்.
யூரோ சுரங்கப் பாதை நிர்வாகிகளின் அறிக்கையின் படி, ஒரு நாளைக்கு 100 பேர் இந்தப் பாதையின் நுளைவாயிலின்
அருகாமையில் பிடிபடுவதுடன் இந்த வருடம் இப்படியான முப்பது ஆயிரம் நிகழ்வுகள் நடந்துள்ளதாக பதிவாகியுள்ளது.
ஓடிக்கொண்டிருக்கும் இரயிலில் ஏற முயலும்போது குறைந்தபட்சம் நான்கு பேர் இறந்துள்ளனர்.
நீண்டகாலத் திட்டம்
செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின்னரான நிலைமைகளை குறிப்பிட்டுக்கொண்டு அரசாங்கம்
புதிய சட்டத்தை நியாயப்படுத்தியபோதும், முக்கியமாக அரசின் கட்டுப்பாட்டை முழு சமூகத்தின் மீதும் விரிவாக்குவதே
இதன் அர்த்தமாகும். இது நான்குவருடங்களாக பிரெஞ்சு ஆளும் பிரிவு மேற்கொண்டுவரும் ஒரு திட்டமாகும்.
1995 முடிவில் பிரெஞ்சு ஆளும் வர்க்கம் தனது கட்டுப்பாட்டிற்கு பாதகத்தை
உண்டுபண்டும் அச்சுறுதலான ஒரு பொது வேலை நிறுத்தத்தின் அதிர்வுடன் முரண்பட்டுக்கொண்டது. 1997 அக்டோபர்
இல் ஜொஸ்பன் அலுவலகத்திற்குள் நுழைந்த சிறிது காலத்தில், அவரது அரசாங்கம் அதனது வேலைத்திட்டத்தில் குறிப்பிட்ட
பாதுகாப்பு புள்ளிகளை ஏற்றுக்கொண்டது. அதில் ஊர் காவல் படை மற்றும் மத்திய அரசாங்கத்திற்கும் சுயாதீன
நகரசபைகளுக்கும் இடையிலான உள்ளூர் பாதுகாப்பு உடன்படிக்கை போன்றவகளை அறிமுகப்படுத்தியது.
இந்த அளவுகளின் அடிப்படையில் உள்ளூர் கட்டுப்பாட்டு ஒழுங்குகளினது ஒரு வலைத்தொடர்
மூலமும், உதாரணமாக, சுற்றுவட்டார போக்குவரத்து முறையை உபயோகப்படுத்திக்கொண்டு தனியார் பாதுகாப்பாளர்கள்
வலைப்பின்னல்களையும் வீடியோ கமெராக்களையும் அறிமுகப்படுத்தியதன் மூலம் பிரெஞ்சு அரச இயந்திரம் பலமான முறையில்
மத்தியப்படுத்தப்பட்டுள்ளது. கடினமான தொழிலாள வர்க்க அயல்வட்டாரத்தை அவதானிக்க எடுத்த முயற்சியில் நகர
பிதாக்கள் ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்துள்ளனர்.
உள்ளூர் பாதுகாப்பு உடன்பாடுகள் தீவிர பிற்போக்கான நடவடிக்கைகளுக்கான
பாதையை திறந்துவிட்டுள்ளது. யூன் 15 இல் ஓர்லேயோனின் [Orleans]
புதிய கோலிச நகரபிதாவான, Serge Grouard,
மூன்று பிரச்சனையான சுயாதீன நகரங்களில் வயது குறைந்தவர்களுக்கான மட்டுப்படுத்தப்பட்ட
ஒரு ஊரடங்கு சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். 14 வயதிற்கு
குறைந்தவர்கள் அனைவரும் இரவு 11 மணிக்கு பின்னர் வெளியில் இறங்குவதை தடைவிதித்திருப்பதுடன் அவர்களது குழைந்தைகள்
வருவாயை அல்லது பொதுவீட்டு மனைகளுக்கான நிதிஉதவிகளை கொடுக்க மறுப்பதன் மூலம் பெற்றோர்களையும்
தண்டித்துக்கொண்டுள்ளது. இவருக்கு முன்னைய சோசலிசக் கட்சி நகரபிதா ஏற்கனவே ஒரு ''பாதுகாப்பு உடன்படிக்கை''
யை இந்த மாவட்டங்களில் அறிமுகப்படுத்தியதன் காரணத்தாலே இவரால் இன்று இப்படியான பிரத்தியேகமான நடவடிக்கைளை
செய்யக்கூடியதாக இருந்தது.
" பொது பாதுகாப்பு'' என்ற
கொடியின் கீழ் தொடக்கத்தில் இருந்தே அரச கட்டுப்பாட்டின் மீளமைப்பு சோசலிச கட்சி மற்றும் லியோனல்
ஜொஸ்பனது அரசாங்கத்தினது வேலைத்திட்டமாக இருந்துவருகிறது. சோசலிச கட்சி செயலாளர்
François Hollande
கடந்த கட்சி காங்கிரசில், ''ஒரு மதிப்புக்குரிய அரசியல் அமைப்புடைய அரசு
இருந்தால் மட்டுமே விழிப்புணர்வு-நனவு இருக்கமுடியும்'' என இதை ஏற்றுக்கொண்டார். ஊர்காவல் படையின் விரிவாக்கத்திற்கு
உற்சாகமான முறையில் கட்சியின் இடது கன்னை அழைப்புவிட்டதுடன் அப்படியில்லாவிடில் சமூகத்தின் ஏழ்மையான பகுதியினர்
குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட நேரிடும் என்பதால் 24 மணிநேர பிரத்தியேக பயிற்சிபெற்ற காவல் படையினரை
பணியில் அமர்த்துவதை உத்தரவாதப்படுத்துவதற்கும் ஆதரவளித்தது.
ஜொஸ்பன் அலுவலகத்திற்குள் நுழைந்ததில் இருந்து, காவல் படை இயந்திரம் 15 வீதத்தால்
அதிகரித்துள்ளதுடன் 1997 இல் 125,000 ஆக இருந்த பிரெஞ்சு காவல் துறையினரின் எண்ணிக்கை 2002 இல்
145,000 ஆக உயரவிருக்கிறது. ஆகஸ்ட் 2001 இல் TF1
தொலைக்காட்சி நிலையத்திற்கு அளித்த பேட்டியில், பாதுகாப்பை
உறுதிப்படுத்த இவருக்கு அரசியல் நோக்கம் இல்லை என்ற அவர் மீதான குற்றச்சாட்டை மறுத்த ஜொஸ்பன்,
''1997 இல் இருந்து செவனுமோவுடன்
(Chevènement, உள்நாட்டமைச்சர்) இணைந்து பாதுகாப்பை
எனது அரசியலின் மையத்தில் வைத்துள்ளேன்'' என தெரிவித்தார்.
மக்கள் இயக்கத்தினது
Jean-Pierre Chevènement, ''மத்தியப்படுத்தப்பட்ட குடியரசு
அரசின்'' நம்பகம் வாய்ந்த பிரதிநிதியாவர். எப்படியிருந்தபோதும் உள்நாட்டமைச்சர் என்ற முறையிலும், அவரது
அமைச்சகத்தின் உயர் கட்டளையிடும் தலைவர் மற்றும்
Bergougnoux காவல் துறையின் தலைவர் என்ற முறையிலும் இவர்
கூட்டமைப்பு ஒன்றினை அபிவிருத்தி செய்து அறிமுகப்படுத்தி உள்ளதுடன், உள்ளூர் பாதுகாப்பு உடன்படிக்கைகளையும் பன்முகப்படுத்தியும்
இருக்கிறார். கோர்சிகா தீவுக்கு எந்தவொரு பக்கம்சார்ந்த சுயாதீனத்தையும் அளிப்பதற்கு மறுத்து 2000 கோடை
காலத்தின்போது இவரது பதவியை இராஜினாமா செய்தார். இப்போது, இவர் ஒரு ஜனாதிபதி வேட்பாளர் என்ற
முறையில் தனது சொந்த தேர்தல் பிரச்சாரத்தை செய்துவருகிறார். இந்த சூழ்நிலைக்குள், ''எதை அவசியம் செய்யவேண்டுமோ
அதைச் செய்வதற்கான துணிவு'' ஜொஸ்பனிடம் இல்லை என பொதுவிடங்களில் அவரை விமர்சிப்பதை இவர் ஒருபோதும்
தவறவிடுவதில்லை.
அதே நேரம் பாதுகாப்பு என்ற விவாதம் முழு தேர்தல் பிரச்சாரத்திலும் செல்வாக்கு
செலுத்தி வருகிறது. இந்த பிற்போக்கானதும் வெறியூட்டபட்ட நிலைமையின் கீழ், ஒவ்வொரு நாளும் தெரிவில் நின்று
இன்னும் காவலர்களை அதிகப்படுத்தும்படியும், சம்பளத்தை உயர்த்தும் படியும் குற்றங்களுக்கு எதிராக போராட
வளங்களை அதிகரிக்கும்படியும் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பில் கடந்த கிழமை காவல்துறையினர் ஈடுபட்டதானது
வெளிப்படுத்திக்காட்டியுள்ளது. கடந்த சனிக்கிழமை பச்சைக் கட்சியினரின் ஜனாதிபதி வேட்பாளரான
Noel Mamère,
காவல் துறையின் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பங்குகொள்ள விரும்பியபோது, ஒரு அவமதிப்பை உண்டாக்கினார் என்பதன்
கீழ் உடலியல் ரீதியாக தூக்கியெறியப்பட்டார்.
அச்சுறுத்தும்
பொருளாதார மந்தநிலை
புதிய பாதுகாப்பு சட்டங்கள் அரசுக்கு முழுமையான அதிகாரத்தை அளிக்கின்றதேயன்றி,
பொதுமக்களிற்கு உண்மையான பாதுகாப்பை உத்தரவாதம் செய்வது பற்றி அந்த சட்டங்களில் எந்தவித சிறிய
விடயங்களும் இல்லை. வறுமை, வேலையின்மை அல்லது வெளியேற்றம் மற்றும் வீடில்லாத நிலைமைகளில் இருந்து தனிப்பட்ட
தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை வளங்குவது எதுவுமே அதில் இல்லை.
பிரான்சின் பொருளாதார ஏற்றம் பற்றியும் புதிய வேலைவாய்ப்புகளுக்கான உறுதியையும்
கூட்டாக புகழ்ந்து தள்ளி நீண்ட காலமில்லை. பொருளாதார மந்தநிலை பற்றி எந்த பதட்டமும் வளர்ச்சியடையாமல்
பார்த்துக்கொள்ள அரசாங்கம் அதனது தேர்தல் பிரச்சாரத்தில் முயன்றுவருகிறது. ஆனால்,
செப்படம்பரின் கணிப்பு கால்வருடத்திற்கு 2.25 வீதத்தால் பொருளாதார ஏற்றம் இருப்பதாக
பொருளாதார அமைச்சர் Laurent Fabius
பின்னோக்கி திருத்தவேண்டியிருந்தது. எவ்வாறு இருந்தபோதும் இங்கு அப்படியான எந்த உத்தரவாதமும் இல்லை.
மே மாதத்திலிருந்து வேலையின்மையானது தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து
கொண்டிருப்பதுடன் ஏற்கனவே 10 வீத எண்ணிக்கை எல்லையை தாண்ட அச்சுறுத்திக் கொண்டுள்ளது. சிலநாட்களுக்கு முன்னர்
தான் அரசாங்கம் ஒரு தூய பொதுவான அளவுகோட்டை அறிமுகப்படுத்தியது. அது வேலையின்மை நிலுவையை பதிவுசெய்ய
உபயோகப்படுத்திவந்த முறையை திருத்தம் செய்தது. இங்கே இப்போது
ILO (சர்வதேச தொழிலாளர் கழகத்தின்,
International Labour Organization) கணிப்புமுறை உபயோகப்படுத்தப்படுகிறது. அதன்
பிரகாரம் செப்டம்பரில் வேலையின்மையானது 80.9 வீதத்தை அடைந்துள்ளது ஆனால் இது எந்தவித மாற்றத்தையும் செய்துவிடவில்லை.
மாறாக உண்மையென்னவெனில் ஒவ்வொரு வருடத்திற்கு வருடம் 2.4 வீதமாக வேலையின்மை மட்டம் அதிகரித்துக்கொண்டுள்ளது
என்பதுதான்.
இந்த வருட தொடக்கத்தில் இருந்து பிரான்ஸ் கிட்டதட்ட நிரந்தரமான தொழிலாளர்
பிரச்சனைகளை சந்தித்துக்கொண்டுள்ளதுடன் தொழிலாளர்களின் வேலை, வாழ்க்கைத்தரம் அல்லது வேலை பாதுகாப்பு
அச்சுறுத்தல்களுக்கு உள்ளானதால் தொழிலாளர்கள் பலாத்காரமான நடவடிக்கைகளை செய்தார்கள்.
Danone மற்றும் தனியார் மருத்துவநிலைய ஊழியர்களின் வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து
ஒரு சில நாட்களுக்கு முன்னர் மூலினஸ் தொழிலாளர்கள்
Cormelles-le-Royal இல் இருக்கும் தொழிற்சாலையை தீயிட்டு எரித்துவிடுவதாக பயமுறுத்தியபோது
தலையங்கங்களை ஆக்கிரமித்துக்கொண்டார்கள்.
புதிய பாதுகாப்பு சட்டங்கள் கூடிய மட்டத்தில் நேரடியாக சர்வதேச பயங்கரவாதத்திற்கு
எதிரானதல்ல என்பதை இந்த சீரழிந்த பொருளாதார நிலைமை தெளிவாக்குகிறது. அதற்கு மாறாக அந்த சட்டங்கள்
உள்நாட்டில் நடக்கும் எந்தவொரு அமைதியின்மையையும் அடக்குவதற்கு அவசியமான வழிவகைகளை அரசுக்கு
வழங்கின்றது.
|