World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இலங்கை

Sri Lankan police kill three at fishermen's protest

இலங்கை பொலிசார் மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது மூவரைக் கொன்றனர்

By W.A.Sunil
27 November 2001

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை பொலிசார் நவம்பர் 20ம் திகதி கொழும்புக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் மீது மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தால் மூவர் கொல்லப்பட்டனர். மீனவர்கள் தலைநகரில் இருந்து 10 கிலோமீட்டர் வடக்கே அமைந்துள்ள உஸ்வட்டகெய்யாவ கிராமத்தில் தங்களது ஜீவனோபாயத்தை அழிப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளூர் மீனவர்கள் சங்கத்தின் தலைவரான பி.டி.மார்கஸ், ஒரு கிராமத்துப் பெண்ணான சிரியலதா, அருகில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு முச்சக்கர வண்டி சாரதியான சுனில் ஆகியோரே கொல்லப்பட்டவர்களாகும். ஒரு துப்பாக்கிச் சன்னம் சுனிலின் கூடாரத்தை துளைத்தபோது அவர் கொல்லப்பட்டார். 12 பேர் கடும் காயமடைந்தனர்.

கண்கண்ட சாட்சியங்கள் உலக சோசலிச வலைத் தளத்திடம் பேசுகையில்: பொதுவில் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் அதிரடிப்படையின் உறுப்பினர்கள் எந்த எச்சரிக்கையுமின்றி டி.56 ரக துப்பாக்கிகளில் கண்மூடித்தனமாக சுடத்தொடங்கியதாகவும் 300க்கும் மேற்பட்ட பொலிசார் கடமையில் இருத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.

புனித அந்தோனியார் மீனவர்கள் சங்கத்தின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் ஒரு கொரிய நிறுவனமான கய்ங்கம் (Kiangnam) கம்பனியின் உள்ளூர் காரியாலயத்தின் முன் ஒன்று கூடி, உள்ளூர் கடற்கரையிலிருந்து பெரும் பகுதி மணலை அகற்றுவதால் ஏற்படும் தாக்கத்துக்கு நஷ்டஈடு கோரினர். கய்ங்கமும் ஒரு டட்ச் நிறுவனமான பொஸ்கலிஸ் (Boskalis) கம்பனியும் கொழும்பு கட்டுநாயக்க அதிவேக சாலைக்கான நிர்மாணப் பணிகளுக்காக மணலை அகற்றின.

துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து கூட்டத்தின் ஒரு பகுதியினர் பொலிசார் பயன்படுத்திய கம்பனி பஸ் ஒன்றை தீயிட்டுக் கொழுத்தினர். அடுத்தநாள் கத்தோலிக்க தேவாலயத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டத்தில் கிட்டத்தட்ட 3,000 பேர் கலந்துகொண்டதோடு சம்பந்தப்பட்ட பொலிசார் கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் எனக் கோரினர்.

இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள தேர்தலுக்காக 40,000 பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஒரு நிலைமையில் இடம்பெற்றுள்ளது. பொதுவில் இந்த பொலிஸ் குவிப்பானது தேர்தல் வன்முறைகளை நசுக்குவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தது. ஆனாலும் மீனவர்களின் ஆர்ப்பாட்டம் மீதான இந்த இரக்கமற்ற தாக்குதல், வளர்ச்சி கண்டுவரும் வேலையின்மையினாலும் வறுமையினாலும் உருவாகியுள்ள மோசமான பதட்ட நிலைமையின் எந்தவொரு வெளிப்பாட்டையும் நசுக்குவதற்கான திட்டங்கள் இருந்து கொண்டுள்ளதை சுட்டிக் காட்டுகின்றது.

பொதுஜன முன்னணி அரசாங்கம் உலக வங்கிக் கடன் மூலம், கட்டுநாயக்கவில் உள்ள சுதந்திர வர்த்தக வலயத்திலிருந்து கொழும்பு துறைமுகத்துக்கு ஒரு அதிவேக பாதையை நிர்மாணித்து வருகின்றது. ஆனபோதிலும் அரச நெடுஞ்சாலைகள் திணைக்களமும் கய்ங்கம் மற்றும் பொஸ்கலிஸ் கம்பனிகளும் தமது முன்னைய வாக்குறுதிகளின்படி இந்த நடவடிக்கையால் ஜீவனோபாயத்தை இழக்கவுள்ள உள்ளூர் மீனவர்களுக்கு எந்தவித நஷ்டஈட்டையும் வழங்கவில்லை.

கொலைச் சம்பவங்களை அடுத்து உடனடியாக துப்பாக்கிப் பிரயோகத்தை ஆதரித்து தொடர்புசாதனங்களில் கருத்து வெளியிட்ட நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஏ.எச்.எம்.பவுசி, ஆர்ப்பாட்டக்காரர்கள் "சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வதாக" குற்றஞ்சாட்டினார்.

பவுசி நஷ்டஈட்டுக்காக ஒரு மில்லியன் ரூபாய் பங்கிடப்பட்டுள்ளதாக தொடர்புசாதனங்களுக்கு தெரிவித்தபோதும் இதுவரையும் ஒரு சதமேனும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஒவ்வொரு மீன்பிடி வள்ள உரிமையாளருக்கும் நாளொன்றுக்கு 1,000 ரூபாவும் (9 அமெரிக்க டொலர்கள்) இடம்பெயர்ந்துள்ள ஒவ்வொரு மீனவருக்கும் நாளொன்றுக்கு 500 ரூபாவும் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கோரினார்கள். நவம்பர் 19ம் திகதி கம்பனியும் திணைக்களமும் ஒரு வள்ளத்துக்கு மாதம் ஒன்றுக்கு 7,000 ரூபாவும் ஒரு மீனவருக்கு 30 ரூபாவும் கொடுப்பதாக அறிவித்தன. இந்தத் தீர்மானத்துக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்த மணல் அகற்றும் நடவடிக்கை மீன்பிடி நடவடிக்கைகளில் ஆறுமாதங்களுக்கும் அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்தும் -பெரும் வலைகள் உட்பட மீன்பிடி சக்கரங்களையும் சேதப்படுத்துவதோடு மீன்களை வெளியேற்றி மீன் முட்டைகளையும் கொல்லும்- அதேவேளை உஸ்வத்தகெய்யாவையிலிருந்து பள்ளியாவத்த வரை 6 கிலோமீட்டர் தூரத்துக்கு பரந்தளவில் சூழலை சேதப்படுத்தும். கரையோர மீன்பிடி வழமைக்குத் திரும்ப இரண்டு வருடகாலம் செல்லும். அரசாங்கம் இந்த நடவடிக்கைகளின் தாக்கங்கள் பற்றிய சூழல் மாசடைதல் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபடும் ஒரு அரச நிறுவனமான என்.ஏ.ஆர்.ஏ. முன்வைத்த அறிக்கையையும் நசுக்கியது.

பெரும் எண்ணெய் கம்பனியான ஷெல் கம்பனியின் நடவடிக்கைகளால் உள்ளூர் மக்களும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இந்தக் கம்பனி, வாயு மற்றும் பெற்றோலை முத்துராஜவலைக்கு அருகாமையில் உள்ள கிடங்குகளுக்கு கடலில் இருந்து கடற்கரைக்கு நான்கு கிலோமீட்டர் தூரத்திலிருந்து இறைக்கின்றது. இது 9 கிலோமீட்டருக்கு குறைந்த தூரத்தில் இருந்து இறைப்பதை தவிர்த்துக்கொள்வதாக அரசாங்கத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறுவதாகும்.

அரசாங்க மற்றும் தனியார் தொடர்புசாதனங்கள் பொலிஸ் தாக்குதலையிட்டு முழு மெளனத்தைக் கடைப்பிடிக்கின்றன. எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (UNP) இந்த சம்பவத்தின் மூலம் தேர்தல் இலாபம் பெற முயற்சிக்கும் அதேவேளை பொதுஜன முன்னணி, தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுப்பதோடு அரசாங்கத்தை அவமானப்படுத்துவதன் பேரில் மோதுதலைத் தூண்டிவிட்டதாக யூ.என்.பி.யை குற்றம்சாட்டுகிறது. இரண்டு கட்சிகளும் தொழிலாளர்களுக்கு எதிராக பொலிஸ் அடக்குமுறைகளை பயன்படுத்துவதில் வரலாறு கண்டுள்ளன.

மீனவர்கள் இலங்கையில் மிக வறுமையில் வாடும் மக்களில் ஒரு பகுதியினராகும். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) எதிராக இடம்பெற்று வரும் யுத்தத்தின் ஒரு பாகமாக வெளியாகியுள்ள பாதுகாப்பு அறிவித்தல்களின் கீழ், மீன்பிடி நடவடிக்கைகள் வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்களிலும் மேற்கு மற்றும் வடமேல் பிராந்தியத்தின் சில பகுதிகளிலும் தீவிரமாக மட்டுப்படுத்தப்பட்டும் சில சந்தர்ப்பங்களில் தடைசெய்யப்பட்டும் உள்ளன.

பொலிஸ் தாக்குதலால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த உஸ்வத்தகெய்யாவ பிரதேச மக்கள் உலக சோசலிச வலைத் தளத்துக்கு (WSWS) கருத்துத் தெரிவித்தனர். கொல்லப்பட்ட மூவருக்கும் இளம் குடும்பங்கள் உள்ளன. சிரியலதாவுக்கு ஒரு பிள்ளையும் மார்கஸ், சுனில் இருவருக்கும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். அந்த வழியே பயணித்த 17 வயதான சதுனும் துப்பாக்கிப் பிரயோகத்தின் போது காயமடைந்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளைக் கொண்ட மீனவரான அனில் வசன்த குறிப்பிட்டதாவது: "நான் 15 வருடங்களாக வேலை செய்தபோதும் எந்த சேமிப்பும் கிடையாது. ஆனபோதும் நான் பெரும் கடன்பட்டுள்ளேன். இந்த மணல் அகற்றும் நடவடிக்கை எங்களை பெரிதும் பாதித்துள்ளது. இரண்டு கப்பல்கள் ஒரு நாளைக்கு ஆறு தடவைகள் மணலுக்காக வந்து போகின்றன. அவர்கள் எங்களது வலைகளையும் ஏனைய பொருட்களையும் நாசம் செய்துவிட்டார்கள். இதுவரையும் எங்களுக்கு நஷ்டஈடு எதுவும் கிடைக்கவில்லை. வாழ்க்கை மிகவும் அசாதாரணமான ஒன்றாகியுள்ளது. இந்த பொலிஸ் தாக்குதல் அதை உச்சக்கட்டத்துக்கு இட்டுச் சென்றுள்ளது. நாங்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தவர்களை தண்டிக்குமாறு வேண்டுகிறோம். ஆனால் எங்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

இன்னுமொரு மீனவரான நிமால் ரன்ஜித் கருத்துத் தெரிவிக்கையில்: எனக்கு நான்கு பிள்ளைகளைக் கொண்ட ஒரு குடும்பம் உள்ளது. ஆனால் அடிக்கடி எனக்கு ஒன்றுமே கிடைக்காமல் போவதுண்டு. தென்மேற்கு பருவ மழைக் காலத்தில் எதுவுமே செய்யமுடியாது. வேறு ஒரு தொழிலைத் தேடிக்கொள்வதும் இலகுவானதல்ல. எனது மனைவியின் நகைகள் அனைத்தையும் ஈடுவைத்துவிட்டோம். நான் கடனில் மூழ்கியுள்ளேன்."

இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.அல்பட் பேசுகையில்: "எனது அற்பமான வருமானம் வேகமாக அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு ஈடுகொடுக்க போதுமானதல்ல. உபகரணங்களதும் வள்ளத்துக்கான எரிபொருட்களதும் விலை வானுயர அதிகரித்துள்ளது. தொடர்புசாதனங்களில் அரச நிவாரனங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த போதிலும் நான் எதையும் பெற்றுக்கொள்வில்லை. வங்கிகள் கடன் தடையை திணித்துள்ளன. அரசுக்குச் சொந்தமான மக்கள் வங்கி மீனவர்களுக்கு கடன் வழங்குவதை நிறுத்திவிட்டது. அவர்கள் அது மிகவும் அபாயகரமானது என நினைக்கின்றார்கள். ஏனென்றால் பெரும் அபாயகரமான நிலைமைகளுக்குள் செல்வது நாங்களே. எமக்கு எமது கழகங்களின் அந்நியோன்ய உதவி மாத்திரமே உண்டு.

ஒரு மாணவனான சாமர ஹர்ஷ கூறுகையில்: "நான் முதலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றவில்லை. ஆனால் நான் பொலிஸ் தாக்குதலுக்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டேன். அது மிருகத்தனமானதும் அக்கிரமமானதுமாகும்.

ஒரு மீனவரின் மனைவியான மேரி பேசுகையில்: "மீன்பிடித் தொழில் நிச்சயமற்றது. பெண்களுக்கு தொழில் கிடையாது. கடந்த யூ.என்.பி. அரசாங்கம் எங்களுக்கு சமுர்தியை கூட வழங்க முன்வரவில்லை (ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு சிறிய சலுகை). அவர்கள் எங்களுடைய மாத வருமானம் 3,000 எனக் கூறினார்கள். அவர்கள் எந்த அடிப்படையில் கணக்கிடுகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. நாங்கள் அதைப் பெற்றுக்கொண்டாலும் கூட ஐந்துபேரைக் கொண்ட ஒரு குடும்பத்தால் ரொக்கட் வேகத்தில் உயரும் வாழ்க்கைச் செலவின் அடிப்படையில் எவ்வாறு ஜீவிக்க முடியும்? எங்களுடைய பிள்ளைகளுக்கு ஒழுங்கான கல்வி கிடையாது. இப்பிரதேசத்தில் உள்ள எல்லாப் பாடசாலைகளும் ஜீ.சீ.ஈ. சாதாரண தரம் வரையிலான வகுப்புகளை மாத்திரமே கொண்டுள்ளன. உயர்தர வகுப்புகளைக் கொண்ட பாடசாலைகள் மிகத் தொலைவில் உள்ளன. இங்குள்ள பாடசாலைகளிலும் அவசியமான உபகரணங்கள் கிடையாது. இப்போது அரசாங்கம், பாடசாலைகளையும் எங்களைப் பராமரிக்கச் சொல்கின்றது.