WSWS :செய்திகள்
& ஆய்வுகள் : ஆசியா :
இலங்கை
SEP campaigners speak to voters in Sri Lankan election
இலங்கை தேர்தலில் சோ.ச.க. பிரச்சாரகர்கள் வாக்காளர்களுடன் கலந்துரையாடினர்
By a correspondent
1 December 2001
Use
this version to print |
Send this link by email
| Email the author
சோசலிச சமத்துவக் கட்சி
(SEP) டிசம்பர் 5ம் திகதி இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தலில் தனது 24 வேட்பாளர்களுக்காக
கொழும்பின் பல பிரதேசங்களில் வீட்டுக்கு வீடு பலம்வாய்ந்த பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றது. இந்தப் பிரச்சாரக்
குழுவுக்கு வாக்காளர்களிடமிருந்து உணர்ச்சிகரமான பிரதிபலிப்புக்கள் கிடைத்தன. இவர்கள் ஆளும் பொதுஜன முன்னணியாலும்
(PA) எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக்
கட்சியாலும் (UNP) கலந்துரையாடப்பட்டவர்கள்.
அவர்களின் பிரச்சாரத்தில் பேரினவாதமும் பொய் மற்றும் வன்முறைகளும் பிரதிநிதித்துவம்
செய்கின்றன. பொதுஜன முன்னணி எதிர்க்கட்சி "நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்காக" பிரிவினைவாத தமிழீழ விடுதலைப்
புலிகளுடன் (LTTE) ஒரு இரகசிய உறவை
உருவாக்கிக் கொண்டுள்ளதாக குற்றம்சாட்டுவதன் மூலம் இனவாத உணர்வுகளுக்கு எண்ணெய் வார்த்து வருகின்றது. யூ.என்.பி.
அரசாங்கத்தின் ஊழல்களையும், அதன் இலாயக்கற்ற தன்மையையும் கூறி திருப்பித் தாக்குகின்றது. இரண்டு கட்சிகளது
குண்டர்களும் தமது எதிரிகளை உடல்ரீதியான தொந்தரவுகளுக்கும் பயமுறுத்தல்களுக்கும் ஆளாக்குகின்றனர். கடந்த வார
இறுதியில் பொலிஸ் திணைக்களம், கடந்த சனிக்கிழமை மட்டும் நடைபெற்ற இரண்டுக்கு மேற்பட்ட "அரசியல் உள்நோக்கம்
கொண்ட கொலைகளுடன்" சேர்த்து மொத்தமாக 1,250 "தேர்தல் சம்பவங்களை" அறிக்கை செய்திருந்தது.
சோ.ச.க. பிரச்சாரகர்கள் சில வாக்காளர்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் சூழ்நிலையின்
போது, உள்ளே இருந்துகொண்டுள்ள பிரச்சினைகளையிட்டு கலந்துரையாடுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை வரவேற்பதைக்
கண்டனர். ஆப்கானிஸ்தானில் இடம்பெறுவது என்ன என்பதையிட்டும் சோ.ச.க. விஞ்ஞாபனத்தில் உள்ள இலங்கையின்
உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்டத்தைப் பற்றியும் ஒரு வருடத்துக்குள் ஒரு புதிய தேர்தலுக்கு
அழைப்புவிடுப்பதற்கு காரணமாகிய அரசியல் நெருக்கடி பற்றிய கட்சியின் ஆய்வுகளையிட்டும் குறிப்பிடத்தக்க அக்கறை
காணப்பட்டது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தலைமையிலான யுத்தத்தின்
தாத்பரியங்களைப் பற்றி அவர்களின் கருத்தை அறிந்துகொள்வதற்காக சில மாணவர்களுடன் உரையாடினோம். அவர்கள்
அமெரிக்கா அந்த நாட்டை தமது சொந்த பொருளாதார மற்றும் யுத்த நலன்களின் பேரில் ஆதிக்கம் செலுத்துவதற்கு
முயற்சிக்கின்றது என்ற கருத்துடன் உடனடியக இனக்கம் கொண்டார்கள்.
ஒரு பிரசித்தி பெற்ற பத்திரிகையாளரான டி.என்.எஸ். மாயாதுன்னே எம்மிடம் குறிப்பிட்டதாவது:
"நீங்கள் மாத்திரமே ஆப்கான் யுத்தத்தைப் பற்றி பேசுகின்றீர்கள். நான் தொடர்புசாதனங்களுடன் இணைந்த ஒருவன்.
நான் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த யுத்தத்தை எதிர்த்த போதும் இப்போதுதான் இந்த கலந்துரையாடலின் மூலம்
அமெரிக்காவின் உண்மையான குறிக்கோள்களை அறிந்துகொண்டேன். நீங்கள் இந்த இரண்டு கட்சிகளுக்கும் எதிராக ஒரு
பதிலீட்டைக் கொண்டுள்ளீர்கள் என நினைக்கின்றேன். நான் இவ்வாறான ஒரு தொடர்புசாதனத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்."
பெரும்பாலானவர்கள் -தொழிலாளர்கள், குடும்பப் பெண்கள், மாணவர்கள்- விடுதலைப்
புலிகளுக்கு எதிரான 18 வருடகால உள்நாட்டு யுத்தத்துக்கு ஒரு முடிவு வேண்டும் எனக் கூறியதோடு அது உருவாக்கிவிட்டுள்ள
அழிவுகரமான நிலைமைகளையிட்டும் கலந்துரையாடினர். பெரும்பாலானோர் இரண்டு கட்சிகளையிட்டும் நம்பிக்கை இழந்துள்ளனர்.
பொதுஜன முன்னணி 1994ல் யுத்தத்தை நிறுத்துவதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்தபோதும் அதை உக்கிரமாக்கியது.
இப்போது யூ.என்.பி. விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதாக உறுதிமொழி வழங்குகிறது.
கொழும்புக்கு அருகாமையில் உள்ள நுகேகொடையில் வாழும் ஒரு சிங்களக் குடும்பப்
பெண் குறிப்பிட்டதாவது: "இந்தக் கட்சிகளில் எதற்கும் இந்தமுறை நாம் வாக்களிக்கப் போவதில்லை. அவர்கள் முழுமையாகப்
பொய் சொல்கிறார்கள். அவர்கள் தேர்தல் காலத்தின் போது ஒன்றைச் சொல்கின்றார்கள் ஆனால் ஆட்சிக்கு வந்தபின்னர்
வேறொன்றைச் செய்கின்றார்கள். எம்மைப் பொறுத்தவரையில் இந்த அழிவுகரமான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர
வேண்டியது அவசியமாகியுள்ளது. எனது அயலவர்களும் அதையே சொல்கிறார்கள்."
இரண்டு மகன்களின் தாய் -ஒருவர் யுத்தக களத்தில் உள்ளார்- சுட்டிக் காட்டியதாவது:
"யுத்தம் இன்றி வாழ்வதே எமது எதிர்பார்ப்பாகும். எனது மகன்கள் வேறு தொழில் இல்லாததால் யுத்தத்துக்கு சென்றுள்ளார்கள்.
யார் ஆட்சிக்கு வந்தாலும் எமது நிலைமைகளில் மாற்றமில்லை. எனது கனவரின் சம்பளம் வாழ்க்கைக்கு போதாததால்
நான் எனது குடும்பத்துக்கு ஒத்திசைவாக தையல் வேலைகளில் ஈடுபடுட்டுவருகிறேன். அவரது கனவன் ஒரு நாளைக்கு
250 ரூபாய் (3 அமெரிக்க டொலர்கள்) சம்பாதிக்கும் ஒரு லொரி சாரதியாகும்."
விடுமுறையில் இருந்த ஒரு இராணுவவீரர் கருத்துத் தெரிவிக்கையில்: "நான் யுத்தப் பிராந்தியத்தில்
சேவை செய்கிறேன். எமது அரசாங்கமோ அல்லது புலிகளின் தலைவர்களோ கணித்துக் கொண்டிருப்பது போல் இந்த
யுத்தம் எங்களைப் போன்ற சாதாரண மக்களுக்கு எந்த நன்மையையும் வழங்கப் போவதில்லை. எங்களால் தொழில்
தேடிக்கொள்ள முடியாத நிலைமையில் யுத்தத்தில் சேரத் தள்ளப்பட்டோம். பெரும்பாலான படையினர் யுத்தத்தில்
போராடுகிறார்கள். ஏனென்றால் அவர்களால் அதைத் தவிர்த்துக் கொள்ள முடியாது. நாங்கள் இந்த தொழிலிலால்
வெறுப்படைந்துள்ளோம்."
கொழும்புக்கு வடக்கே தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் கலந்து வாழும்
கொட்டகேனையில் எல்லா வீடுகளும் இனவாதப் பிரச்சாரங்களுக்கு உள்ளாகியிருந்தன. குறிப்பிட்ட சிலர் எல்லாவிதமான
இனவாதத்துக்கும் சோ.ச.க.வின் எதிர்ப்பை வரவேற்றதோடு யுத்தம் தொடர்பாக கட்சியின் நிலைப்பாட்டைப்
பற்றிக் கலந்துரையாடவும் முன்வந்தனர்.
ஒருவர் பொலிஸ் அடக்குமுறைகளையும் தமிழர்கள் முகம் கொடுத்துக் கொண்டுள்ள பீதியையும்
விளக்கினார். "எவ்வளவு காலத்துக்கு யுத்தத்தின் முடிவுக்காகவும் சமாதானமான வாழ்வுக்காகவும் நாம் காத்திருப்பது?
நாங்கள் பீதியுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நகருக்குள் ஒரு குண்டு வெடித்தால் எங்களுடைய பிரச்சினைகள் மிகவும்
நெருக்கடிக்குள்ளாகும். நாங்கள் பரிசோதனை நிலையங்களைக் கடக்கும் போது பயமாக இருக்கும். எந்தக் காரணமுமின்றி
எங்களில் ஒருவர் கைதுசெய்யப்பட்டால் அவரை விடுதலை செய்துகொள்வது இலகுவான காரியம் அல்ல."
இன்னுமொருவர் எட்டுபேரைக் கொண்ட தமது குடும்பத்தை 4,500 ரூபா (50 அமெரிக்க
டொலர்கள்) மாத வருமானத்தில் பராமரிக்கும் போது முகம் கொடுக்கும் நெருக்கடி நிலைமையைப் பற்றி விபரித்தார்.
"எனது சகோதரிகள் எனக்கு ஒத்துழைப்பதற்காக அற்ப சம்பளத்தில் ஒரு பக்டரியில் வேலை செய்கின்றார்கள். எங்களது
வீட்டைப் பாருங்கள், அது 20க்கு 12 அடிகளைக் கொண்டது. எனது வீட்டைப் போல் இங்கு கிட்டத்தட்ட 18 வீடுகள்
உள்ளன. எங்களுக்கு ஒரு பொது கழிவறையும் ஒரு தண்ணீர் குழாய் மட்டுமே உள்ளது. கழிவறைக்கு செல்லவோ அல்லது
தண்ணீர் எடுக்கவோ வரிசையில் காத்திருக்க வேண்டும்."
சோ.ச.க. அங்கத்தவர்கள் பிரச்சாரத்தின் போது லங்கா சமசமாஜக் கட்சியின்
(LSSP) முன்னாள் உறுப்பினர்களையும் சந்தித்தனர்.
லங்கா சமசமாஜக் கட்சியானது ஆரம்பத்தில் ஒரு சக்திவாய்ந்த தொழிலாளர் வர்க்க பின்னணியை கொண்டிருந்த
அதேவேளை 1964ல் தமது ட்ரொட்ஸ்கிச அடிப்படைகளை கைவிட்டு திருமதி பண்டாரநாயக்கவின் முதலாளித்துவக்
கட்சியோடு கூட்டு சேர்ந்த கட்சியாகும். அவர்கள் தமது கடந்த கால அனுபவங்களை வெளிப்படுத்தியதோடு லங்கா
சமசமாஜக் கட்சி இனவாத அரசியலுடன் இணைந்துகொண்டதையிட்டு தமது வெறுப்பையும் வெளிப்படுத்தினர்.
நாங்கள் 65 வயது நிரம்பிய பழைய சமசமாஜக் கட்சி உறுப்பினரோடு கலந்துரையாடிக்
கொண்டிருந்த வேளை பாசிச சிங்கள உறுமய கட்சியின் ஒரு பிரச்சார வாகனம் யுத்தத்துக்கு ஆதரவான பேரினவாத
பாடல்களை ஒலிபரப்பிக்கொண்டிருந்தது. "நான் இதைக் கேட்கும் போது மிகவும் வேதனையடைகிறேன். கடந்த
1959ல் நாங்கள் வில்பிரட் சேனாநாயக்கவுடன் (லங்கா சமசமாஜக் கட்சியின் பிரதேச தலைவர்) சிங்கள இனவாதிகளுக்கு
எதிராக கொடியேற்றினோம்." அவர் சமசமாஜக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இனவாத அடிப்படையிலான "சிங்களம்
மட்டும்" கொள்கைக்கு எதிராக தமிழ், சிங்கள மொழிகளுக்கான சம அந்தஸ்துக்காக பிரச்சாரம் செய்ததை
நினைவுபடுத்தினார். இப்போது சமசமாஜக் கட்சி இந்தக் கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தில் பங்காளியாக உள்ளது.
ஒரு குடும்பப் பெண் எங்களிடம் குறிப்பிட்டதாவது: "நாங்கள் சமசமாஜவாதிகள். எனது
கனவர் கொழும்புத் துறைமுகத்தில் வேலை செய்கின்றார். நாங்கள் இனவாதத்தை எதிர்க்கின்றோம். அந்த காலகட்டத்தின்
போது இனவாதிகளுக்கு ஒரு வார்த்தை தன்னும் பேச விடுவதில்லை என எனது கனவர் கூறினார். என்.எம். (சமசமாஜக்
கட்சித் தலைவர் என்.எம்.பெரேரா) திருமதி பண்டாரநாயக்கவோடு இணைந்து கொண்டதையடுத்து அனைத்தும்
முடிவடைந்து விட்டதாக அவர் குறிப்பிட்டார். உங்களுடைய வேலைத் திட்டம் சிறந்ததாக உள்ளது."
|