World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : ஆப்கானிஸ்தான்

US atrocity against Taliban POWs: Whatever happened to the Geneva Convention?

தலிபான் போர்க் கைதிகள் மீது அமெரிக்கக் கொடுமை: ஜெனிவா உடன்படிக்கை என்னவாயிற்று?

By Jerry White
28 November 2001

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க செய்தி ஊடகங்களும் அமெரிக்க அரசும் மெளனம் சாதித்தாலும் மஜார்-இ-ஷெரிப்பில் ஞாயிறு மற்றும் திங்களில் நூற்றுக் கணக்கான தலிபான் போர்க்கைதிகள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக சர்வதேச அளவிலான கோபம் அதிகரித்து வருகின்றது. அமெரிக்க சிறப்புப் படை மற்றும் சி.ஐ.ஏ வழிகாட்டலில் அமெரிக்க போர் விமானங்களும் பீரங்கி பொருத்தப்பட்ட ஹெலிகொப்டர்களும் மற்றும் வடக்குக் கூட்டணியின் பல்லாயிரக்கணக்கான படைவீரர்கள் ஆதரவுடன் இப்படுகொலை நடத்தப்பட்டுள்ளது. காலா-இ-ஜாங்கி கோட்டையில் 800 க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் கொல்லப்பட்டனர்.

சிறைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள தலிபான் துருப்புக்கள் மத்தியில் நூற்றுக்கணக்கான பாக்கிஸ்தானிய தொண்டர்கள் இருப்பதால், மக்களின் வற்புறுத்தலின்பேரில், பாக்கிஸ்தான் அரசு சிறைக் கைதிகளின் படுகொலையை வன்மையாகக் கண்டித்தது. இச்செயல் ஜெனிவா உடன்படிக்கையை மதித்து செயலபடுத்துமாறு நிறைவேற்றப்பட்ட ஐ.நா பாதுகாப்பு தீர்மானங்களுக்கு முரணாக இருப்பதாக அறிவித்தது. இரண்டாண்டுகளுக்கு முன்னர் பாக்கிஸ்தான் ஆட்சியைக் கைப்பற்றிய ஜனாதிபதி பெர்வேஷ் முஷாரப் பாக்கிஸ்தானுடைய முன்னாள் ஆதரவாளரான தலிபான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை ஆதரித்துள்ளார். மஜார்-இ-ஷெரிப்பில் இருந்த கைதிகளுக்கு எதிரான தாக்குதலின் ஒரு பகுதியாக அமெரிக்க படைகள் பாக்கிஸ்தானிய தளங்களைப் பயன்படுத்துதற்கு ஆதரவளித்தார்.

பாக்கிஸ்தானிய நாளேடான தி நேஷன்-ல் பத்தி எழுதுபவர், "மஜார்-இ-ஷெரிப் படுகொலைகளை ஒரு சதி என்றும் திட்டமிட்ட மக்கள் படுகொலை என்றே மதிப்பிடக் கூடியது" என்று கூறினார். ஜெயில் கைதிகள் தற்கொலை முயற்சியில் இறங்கி தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டார்கள் என்ற கூற்றுக்களை நிராகரித்து, "இப்பொழுதுதான் புதிதாக சரண்அடைந்த கைதிகள் தங்களைப் பிடித்து வைத்திருப்பவர்கள் மீது- அவர்களது வாழ்க்கையே பணயமாக வைக்கப்படல் அல்லாமல், திடீரென மற்றும் வெளிப்படையான கிளர்ச்சியை செய்வாரகள் என்பது நம்பத்தகுந்ததன்று" என்று அவர் எழுதுகின்றார்.

என்ன நடந்தது என்பது பற்றி அமெரிக்க அரசு என்னதான் சப்பைக்கட்டு கட்டினாலும் ஒரு இராணுவக் கண்ணோட்டத்தின்படி பார்த்தாலும் கூட, நூற்றுக்கணக்கான பிடிபட்ட நூற்றுக் கணக்கான வீரர்களை தான்தோன்றித்தனமாய் படுகொலை செய்வதற்கு எந்தவிதமான நியாயமும் கற்பிக்க முடியாது. இந்த 19ம் நூற்றாண்டு கோட்டையை வடக்குக் கூட்டணியைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான கொடிய ஆயுதங்களைத் தாங்கிய போர்வீரர்களும் அதேபோல அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் சிறப்புப் படைகளும் சுற்றிவளைத்திருந்தன என்று செய்திக் குறிப்புக்கள் உறதிப்படுத்துகின்றன. அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் சிறப்புப் படைகளின் தளம் கோட்டையின் வெளியில் அருகாமையிலேயே உள்ள இராணுவ விமான நிலையத்தில் அமைந்துள்ளது.

அமெரிக்க அரசு அதிகாரிகளும் செய்திஊடக நிறுவனங்களும் கூறுவது போல் சிறைக் கைதிகள் சிறைக் காவலாளிகளின் ஆயுதங்களைக் கைப்பற்றி இருந்தாலும்கூட, அவர்களுக்கு எதிராக அணிவகுத்து நிற்கும் பலமான தரைப்படைகள், ஜெட் விமானங்கள் மற்றும் டாங்கிகளை எதிர்த்து நிற்கும் அளவுக்கு அவர்களிடம் ஆள்பலமோ ஆயுத பலமோ இல்லை. அமெரிக்க இராணுவம் எடுத்த அதிரடி நடவடிக்கை முன்கூட்டிய திட்டமிட்டு செயல்படுத்திய போர்க்கால குற்றமாகும்.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் மற்றும் உயர் மட்ட அதிகாரிகளும் அடிக்கடி அறிவித்த கொள்கைகளுக்கு முற்றிலும் பொருந்துகிறவாறே மஜார்-இ-ஷெரிப் தாக்கதல் நடைபெற்றிருக்கிறது. இந்த அமைச்சர் தலிபான் படைவீரர்களை சிறப்பாக ஆப்கானிஸ்தானுக்கு வெளியில் இருந்து வந்த படைவீரர்களைக் கொன்றுவிடுவதற்கு தான் ஆதரவு என்றும், அவர்களைப் பிடித்து சிறையிடுவதைக் காட்டிலும் இதுவே மேலானது என்றும் திரும்பத் திரும்பக் கூறினார்.

படுகொலையைப் போலவே அமெரிக்க செய்திப் பத்திரிகைகள் இதுகுறித்து எங்கும் மெளனம் சாதிப்பது மிகவும் வருந்தத்தக்கது. தலிபான் கைதிகள் மீதான பயங்கரமான படுகொலையை அமெரிக்க தாராண்மைப் பத்திரிகைகள் என்று கூறப்படுவன உள்பட கண்டுகொள்ளவேயில்லை. ஒரு செய்தித்தாளோ செய்தி ஊடகமோ --அவர்களுடைய நிருபர்கள் களத்திலிருந்தும் அங்கு என்ன நடந்தது என்று அறிந்நிருந்தும்-- அந்நடவடிக்கை குறித்து எந்தவிதமான கேள்வியையும் எழுப்பவில்லை.

அமெரிக்க செய்தி நிறுவனங்கள் அமெரிக்க போர் விமானங்கள் சிறைமீது தாக்குதல் நடத்திய போது இறந்த ஐந்தாறு அமெரிக்க இராணுவ, சி.ஐ.ஏ படைவீரர்களைப் பற்றி கவனம் செலுத்தி எழுதின. ஆனால் நூற்றுக் கணக்கான ஆப்கன் மற்றும் வெளிநாட்டுக் கைதிகள் குண்டு வீச்சுகளாலும் துப்பாக்கி ரவைகளாலும் அடிபட்டு இறந்ததைப் பற்றி கண்டு கொள்ளவே இல்லை. அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான சி.என்.என் சிறைக்குள் சிதறிக்கிடந்த மற்றும் காயம்பட்டுக் கிடந்த பல சடலங்களைப் படம் பிடித்துக் காட்டிற்று. இதற்கு முன்னரே வடக்குக் கூட்டணி மற்றும் அமெரிக்க மற்றும் பரிட்டிஷ் படைகள் சிறை வளாகத்தினுள் நடத்திய தாக்குதலைப் படம் பிடித்துக்காட்டியது. ஆனால் ஒரு சி.ஐ.ஏ அமெரிக்க உளவாளிக்கு சாத்தியமான மரணம் பற்றி சி.என்.என் அதிக அக்கறை காட்டியது. இது எதிர்மறையாக இருந்திருக்குமானால், வடக்குக் கூட்டணி கைதிகளை தலிபான் துருப்புக்கள் தாக்கி இருந்தால், இந்த செய்தி மற்றும் தொலைக்காட்சி எப்படிப் படம் பிடித்துக்காட்டி இருக்கும் என்பது பற்றி ஒருவர் கற்பனை செய்து பார்க்க முடியும்.

இரண்டு முன்னணி அமெரிக்க செய்தித் தாள்கள் இந்தப் படுகொலையைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட விளக்கங்களைக் கொடுத்திருந்தன. நியூயோர்க டைம்ஸ், ஒரு செஞ்சிலுவைச்சங்க ஊழியர் "கைதிகள் சண்டையை ஆரம்பித்தனர்" மற்றும் வடக்குக் கூட்டணிப்படை அவர்களைத் தாக்கவில்லை என்று கூறியதை மேற்கோள்காட்டியது. "நடவடிக்கையை மேற்பார்வை செய்த" அமெரிக்க சிறப்புப் படைகள் மற்றும் சி.ஐ.ஏ அதனைக் கட்டுப்படுத்தும் பாத்திரம் பற்றி, நேர்மையற்ற படுகொலைகள் இடம் பெற்றிருக்க முடியாது என்பதற்கு இது உத்தரவாதம் என்பதாக இப்பத்திரிக்கை மேற்கோள் காட்டியது.

வாஷிங்டன்போஸ்ட் என்ற நாளேடு கைதிகள் கொலைசெய்யப்பட்டனர் என்பதை ஒப்புக்கொண்ட போதிலும் வடக்குக் கூட்டணிதான் இந்த படுகொலைகளை செய்தது என்று கூறுகிறது. மேலும் சாவுகளின் எண்ணிக்கையை துல்லியமாகக் கணக்கிட முடியாது என்றும் ஆனால் அதிகப் படியான தலிபான் சாவுகள் வடக்குக் கூட்டணியினரின் 40 சாவுகளோடு ஒப்பிடுகையில், இந்த வன்முறை கூட்டணி துருப்புக்களால் நடத்தப்பட்ட படுகொலையை விட கிளர்ச்சி என்பது குறைவானதாக இருக்குமோ என்ற கேள்விக்ள இங்கு எழுகின்றன" என செவ்வாய் அன்று போஸ்ட் எழுதியது.

மேற்கூறியவற்றிலிருந்து அமெரிக்கப் பத்திரிக்கைச் செய்திகள் ஒன்றுக்கொன்று நேர் எதிர்மறை எனத் தெரிகிறது. ஆனால் அவை இனங்காட்டிக் கொள்ளும் அரசியல் நோக்கங்களுக்கு சேவை செய்கின்றன: ஒட்டுமொத்தமாக அமெரிக்க இராணுவம் இந்த பாரிய யுத்தக் குற்றத்துக்கு எந்தவிதத்திலும் பொறுப்பல்ல என்று மறுப்பதற்கு. இது அமெரிக்க செய்தி ஊடகத்தின் பாத்திரத்தை துல்லியமாய் வெளிப்படுத்துகின்றது, அமெரிக்க மக்களுக்கு உண்மையான தகவல்களைத் தெரிவிப்பதை விட்டுவிட்டு, எல்லாவிதமான திரித்தல்கள் மற்றும் பொய்களின் மூலம் அமெரிக்க அரசின் நடவடிக்கைகளை ஆதரிக்கின்றதை ஆரம்பப் புள்ளியாகக் கொண்டிருக்கின்றன.

இருப்பினும், சிலமுக்கிய உண்மைகள் டைம்ஸ் குறிப்புக்களில் காணப்பட்டன. சி.ஐ.ஏ விசாரணை அதிகாரிகள் சிறைக்குள் இருந்ததே கிளர்ச்சி பற்றிக்கொண்டதற்கான காரணம் என்று இந்நாளேடு செய்தி அறிவித்தது:

"வடக்குக் கூட்டணியைச் சேர்ந்த உளவுத்துறைத் தலைவர் சையத்கமால் மற்றும் சி.ஐ.ஏ அதிகாரிகளும் நடுப்பகலில் சிறைக் கைதிகளை பேட்டி கண்டதாக, கூட்டணி அதிகாரிகள் கூறினர்.

"ஒசாமா பின் லேடனின் அல் கொய்தா இயக்கத்தைச் சார்ந்த வெளிநாட்டு தலிபான் போராளிகள் மத்தியில் அல்லது தத்தம் நாடுகளுக்கு நாடு கடத்தப்படும் அபாயத்தைக் கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் அமெரிக்கர்கள் இருந்தது பயத்தையும் விரக்தியையும் தோற்றுவித்திருக்கலாம்.

"அந்த வேளை சிறை வளாகத்தினுள் இருந்த வடக்குக் கூட்டணி போராளிகள் குழு ஒன்று சி.ஐ.ஏ அதிகாரிகள் காணப்பட்டது கிளர்ச்சிக்கு வழிவகுத்தது என்றது."

மேலும் டைம் நாளிதழ் ஞாயிறு காலையில் சிறைக்கைதிகள் தேடப்படும்போது இந்த கிளர்ச்சி நிகழ்ந்தது என்று கூறுகிறது. "இதை நேரில் பார்க்க அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு பத்திரிகை நிருபர்கள், சுமார் 250 கைதிகள் சோதனையிடப்பட்டனர் என்றும் அவர்களின் கைககள் பின்னால் கட்டப்படிருந்தனவென்றும் கூறினர்." சில டஜன் வடக்குக் கூட்டணி துருப்புக்களுடன் ஒப்பிடுகையில் --600லிருந்து 800 தலிபான் கைதிகள் தங்கள் கைகள் பின்னால் கட்டப்பட்டு, தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள முடியாத நிலையில் படுகொலை செய்யப்பட்டனர் என்று உறுதியாகக் கூறுகிறது.

போர் கைதிகளும் யுத்த விதிமுறைகளும்

செய்தி ஊடகங்களிலும் சரி தாராண்மை அமைப்புக்களும் சரி வடக்குக் கூட்டணி மற்றும் அமெரிக்கப் படைகள், 1949 ஜெனிவா உடன்படிக்கை உட்பட சிறைக் கைதிகளை நடத்தும் விதம் பற்றிய சர்வதேச விதிகளை மீறல் பற்றி யாரும் ஒன்றும் ஆட்சேபக்குரல் எழுப்பாதது குறிப்பிடத் தக்கது.

மேற்படி உடன்படிக்கையின் மூன்றாவது ஷரத்து: "சரணடைந்த இராணுவ வீரர்கள், இன, நிறம், மதம், நம்பிக்கை அல்லது இது போன்ற மற்றைய வகையினம் பற்றிய வேற்றுமையின்றி எல்லா சூழ்நிலைகளிலும் மனித நேயத்துடன் நடத்தப்படவேண்டும்" என கூறுகின்றது.

முற்றுகையிடப்பட்ட குண்டுஸ் நகரத்தில் சரணடைந்த தலிபான் துருப்புக்களை வடக்குக் கூட்டணிப் படைகள் கொடுமைப்படுத்தின. இது மேற்கூறிய உடன்படிக்கை ஷரத்தை மீறுவதாக அமைந்துள்ளது. பல ஆயிரக் கணக்கான ஆப்கானிய தலிபான்கள் வடக்குக் கூட்டணியில் சேர்க்கப்பட்டனர். சிலர் தத்தம் கிராமங்களுக்கு வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். தலிபானைச் சேர்ந்த வெளிநாட்டுக் கைதிகள் ஒன்றில் தனித்தனியாக கொல்லப்பட்டனர் அல்லது பெருங் குழுக்களாக சுற்றிவளைக்கப்பட்டு, விசாரணை, சித்திரவதை பிறகு மரணதண்டனை கொடுப்பதற்கு டிரக்குகளில் கொண்டுசெல்லப்பட்டனர்.

அமெரிக்கப் பாதுகாப்புத்துறை செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட், ஒருவார கால குண்டுஸ் முற்றுகையின்போது தலிபான் கைதிகளை சிறைப்பிடிக்குமாறும் கொன்றுவிடுமாறும் திரும்பத்தரும்ப வலியுறுத்தினார். வேறு வார்த்தைகளில் சொன்னால் வடக்குக் கூட்டணி ஜெனிவா உடன்படிக்கையை திட்டவட்டமாக மீறும்படி மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

ஜெனிவா உடன்படிக்கை மனித உயிருக்கும் நபருக்கும் வன்முறை நிகழ்த்துவது, சிறைக் கைதிகளை கொலை, கொடுமை, சித்திரவதை செய்வதைத் தடை செய்கிறது. "அனைத்து நாகரிகமான மக்களாலும் இன்றியமையாததாக கருதப்படும் சட்ட பூர்வமான பாதுகாப்பைக் கொடுக்கின்ற வழமையான நீதிமன்றத்தால் தீர்ப்பு எதுவும் கொடுக்கப்படாமல் தண்டனை விதிப்பதோ அதை அமலாக்குவதோ சட்டப்படி குற்றமாகும்."

போர்க்கைதிகளை சித்திரவதை செய்வதை 17 வது பிரிவு பின்வருமாறு கூறுகின்றது: சிறைக் கைதிகளை மனதாலோ உடலாலோ சித்திரவதை செய்து துன்புறுத்தி அவர்களிடமிருந்து எந்த செய்தியையும் வலுக் கட்டாயமாக வரவழைக்கக் கூடாது. பதில் சொல்லாத கைதிகளை எந்தவிதத்திலும் அச்சுறுத்தப்படக்கூடாது, அவமானப்படுத்தப்படக் கூடாது, துன்புறுத்தத்தப்படக் கூடாது அல்லது எந்தவிதமாகவும் பாதகத்திற்கு உள்ளாக்கப்படக் கூடாது.

ஜெனிவா உடன்படிக்கை மற்றும் ஷரத்து 23 கூறுவதாவது: "யுத்தக் களங்கள், வானத்திலிருந்து வீசும் குண்டுத்த தாக்குதல் மற்றும் தீ அபாயங்கள் உள்ள இடங்களுக்கு போர்க்கைதிகள் அனுப்பப்படக் கூடாது." அத்துடன் போர்க்கைதிகளுக்கு "விமானக் குண்டுவீச்சுக்கள் மற்றும் போர்த் தாக்குதல்களிலிருந்தும்" பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும்.

சமீபகாலமாக அமெரிக்கப் படைகள் மேற்கண்ட "யுத்த விதிமுறைகளை" மீறுவது இதுதான் முதன்முறை அல்ல: பாரசீக வளைகுடாபோரின் கடைசி நாட்களில் திரும்பிச் சென்ற ஈராக்கியத் துருப்புக்கள் மீது அதிரடித்தாக்குதல் நடத்தியது. இதனை ஒரு அமெரிக்க விமானி "பாரலில் மீனைச் சுடல்" என்று ஒப்பிட்டிருந்தார். குவைத் நகரத்திற்கு செல்லும் பாதை "மரணத்தின் நெடுஞ்சாலை" என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் அந்தப் பாதையில் எரிந்து உருக்குலைந்து போன ஈராக்கிய வீரர்கள் சடலங்கள், டிரக்குகள், கார்கள் மற்றும் இதர வாகனங்கள் கிடந்தன.

வல்லரசுகளின் கொடுமையான செயல்களைக் கண்டித்து அவற்றை ஒரு நெறிப்படுத்தவே இரண்டாம் உலகப் போரின் கடைசியில் ஜெனிவா உடன்படிக்கை ஏற்பட்டது. இன்று புஷ் நிர்வாகம் சர்வதேச சட்டதிட்டங்களை மீறி வெளிப்படையாகவே போர்க் கொடுமைகளை நடத்துகிறது. இதற்கு அமெரிக்காவில் இருந்து எந்த எதிர்ப்பையும் யாரும் தெரிவிக்கவில்லை.

மஜார்-இ-ஷெரிப்பில் நடந்த படுகொலைகளை எதிர்த்து சர்வதேச கண்டனம் தெரிவிக்காதவரை மேலும் கொடூரமான கொலைகள் ஆப்கானின் இரண்டாவது பெரிய நகரமான கந்தஹாரில் நடக்கக் கூடும். இங்கு அமெரிக்க கப்பற்படைகளும் அமெரிக்க சிறப்புப்படைகளும் பஷ்துன் மலைவாழ்மக்களிடம் (நன்கு வெகுமதி வழங்கப்படும்) புதிதாக சேர்க்கப்பட்டவர்கள் மத்தியிலான கூட்டாளிகளும் தலிபானின் கடைசி நிலையைத் தாக்க முனைகின்றன.