World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்:உலகப் பொருளாதாரம்

WTO's "reality check" reveals widening differences

உலக வர்த்தக சம்மேளனத்தின் ''யதார்த்தத்தை அறிதல்'' ஆழமடையும் முரண்பாடுகளை எடுத்துக்காட்டுகின்றது

By Joe Lopez
7 August 2001

Use this version to print

யுத்தத்திற்கு பின்னரான காலகட்டத்திற்கும், கடந்த 20 வருடங்களில் இருந்திராததுமான உலகப்பொருளாதாரத்தின் வீழ்ச்சியை எதிர்நோக்கையில், முக்கிய முதலாளித்துவ சத்திகளுக்கு இடையிலான உறவு அதிகரித்தளவில் மோதல்நிலைக்குள்ளாவது குறித்து கூடியளவில் கவலை உருவாகியுள்ளது.

இம்முரண்பாடுகள் புஷ் நிர்வாகத்திற்கும், ஐரோப்பிய சக்திகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் முன்மொழியப்பட்ட அணு ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தாலும், அமெரிக்கா Kyoto சுற்றாடல் பாதுகாப்புத்திட்டத்தில் இணைந்துகொள்ள மறுப்பதன் மூலமும் அரசியல் அரங்கிற்கு வந்துள்ளது.

பொருளாதார பிளவுகளும் அதிகரித்துவருகின்றது. அண்மைய G8 உச்சிமகாநாட்டில் ஒரு புதிய உலகவர்த்தக பேச்சுவார்த்தைக்கான அழைப்புவிடப்பட்டபோதும், காட்டார் [Qatar] நாட்டின் டோகா [Doha] நகரில் நடைபெறவிருந்த அமைச்சர்கள் மட்டத்தில் நவம்பரில் அதிட்டமிடப்பட்டிருந்த கூட்டம் கலைந்துபோவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. இது 1999 சியாட்டிலில் வெளிப்பட்ட முரண்பாடுகளை ஆழமாக்கின்றன.

கடந்த வாரம் ஜெனோவாவில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய உலக வர்த்தக சம்மேளனத்தின் தலைவரான Mike Moore 142 அங்கத்தவர்களை கொண்ட அமைப்பின் வர்த்தகப் பிரதிநிதிகளுக்கு ''நாம் ஒரு உடன்பாட்டுக்குவராவிட்டால் உலகவர்த்தகத்தின் நடவடிக்கைகள் பலதரப்பட்ட வர்த்தகத்திலிருந்து பிராந்தியவாத, இருநாடுகளுக்கு இடையிலான, மிகவும் கவலையளிக்கூடிய ஒருதலைப்பட்டசமான திசையைநோக்கி மத்தியப்படுத்தப்படுவதாக'' குறிப்பிட்டார்.

பரந்துசெல்லும் முரண்பாடுகள் தீர்க்கப்படாவிட்டால், புதிய உலக கூட்டம் வர்த்தக உடன்பாட்டு ''வெடிக்கும்'' எனவும், உலகவர்த்தகசம்மேளனமும் உலக வர்த்தக அமைப்பும் ''நீண்டகாலத்திற்கு தேவையற்றதாக'' கண்டிக்கப்படும் என Mike Moore தெரிவித்தார்.

அவர் மேலும் ''நாங்கள் உடன்பாட்டுக்கு வெகுதூரத்திலேயே இன்னும் உள்ளோம். புதிய உடன்பாட்டுக்கான தேவை உள்ளதை எல்லா உறுப்பினர்களும் நம்பிக்கை கொள்ளாததுடன், அவர்கள் மத்தியில் இந்நம்பிக்கை குறித்தும், இந்நோக்கத்தின் அளவு குறித்து சிந்திப்பதும் போதிய தெளிவற்றதாகவுள்ளது என குறிப்பிட்டார்.

இம்முரண்பாடுகள் எந்தளவிற்கு ஆழமடைந்துள்ளது என்பதை அவர் Financial Times பத்திரிகைக்கு புதன்கிழமை வழங்கிய பேட்டி காட்டுகின்றது. பொதுச்சபையின் தலைவரான Stuart Harbison அங்கத்தவர்களுக்கு எழுதிய யதார்த்தத்தை அறியும் வரைபில் ''20 துறைகளில் நாங்கள் செய்தவேலைகளில் நாங்கள் எங்கு நிற்கின்றோம் என்து தொடர்பான ஒரு கவனமான ஆய்வை வழங்கியுள்ளோம். இன்று இவ்விடயங்கள் தொடர்பாக அரசாங்கங்கள் மத்தியில் உடன்பாடு இல்லை''.

''நாங்கள் இத்தீர்க்கப்படாத பிரச்சனைகளுடன் டோகாவிற்கு சென்று, 5 நாள் மாநாட்டில் இவற்றை தீர்த்துக்கொள்ளலாம் என நாம் நம்புவோமானால், நாம் அபாயகரமான நிலைமையில் உள்ளோம். நாங்கள் இதனை சியாட்டிலில் முயன்றோம். இதனை அதன் விளைவுகள் எடுத்துக்காட்டுகின்றன''.

Financial Times இன் ஆசிரியத்தலையங்கம் ''சியாட்டிலிக்கு பின்னர் டோகாவின் நிலைகுலைவு உலகவர்த்தக சம்மேளனத்திற்கும், உலக வர்த்தக அமைப்பிற்கும் அழிவுமிக்கதாகும்' எனவும், கடந்த சுற்றின் விளைவுகள் தொடர்பாக அரசாங்கங்களுக்கு எவ்விதமான ஐயுறவு இருந்தாலும், இன்னொரு முறை அவர்களின் முயற்சிகள் தோல்வியடையுமானால் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதில் தெளிவாக இருக்கவேண்டும் என'' எச்சரித்துள்ளது.

இதேமாதிரியான மனநிலையில் Australian Financial Review ''உலகபொருளாதாரம் மோசமாக வீழ்ச்சியடைகையில், இரண்டாவது பிழையானது பாதுகாப்புவாதத்தை சுற்றி பாதிப்பை ஏற்படுத்துவதுடன், இருநாடுகளுக்கிடையிலானதும் பிராந்தியங்களுக்கு இடையிலானதுமான வர்த்தக உடன்பாடுகளுக்கு விரைவாக இட்டுச்செல்லும் என குறிப்பிட்டுள்ளது.

சியாட்டிலின் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தபோது இவ்வுடைவின் முக்கியத்துவம் ஒரு தொகை குறிப்பிட்ட வர்த்தக, பொருளாதார விடயங்கள் தொடர்பானதல்ல மாறாக அடுத்த நூற்றாண்டிற்கான உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் அபிவிருத்திக்கான கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சி எனவும், கடந்த காலத்தில் பாரிய முரண்பாடுகள் இருந்தபோதும் உடன்பாட்டிற்கு ஒருவடிவம் வழங்கவதற்காக கடைசிநேரத்தில் உடன்பாடு எழுதப்படுவது உண்டு, ஆனால் சியாட்டிலில் அப்படி ஒன்றையும் காணவில்லை என உலக சோசலிச வலைத்தளம் குறிப்பிட்டிருந்தது.

முரண்பாடுகள் தீவிரமடைதல்

18 மாதங்களின் பின்னர் முரண்பாடுகள் தீவிரமடைகின்றன. ஜெனோவாவின் கலந்துரையாடல்கள் தொடர்பாக Harbison "இவை தற்போதுள்ள முரண்பாடுகளின் வெளிப்பாடுமட்டுமல்ல, இது கவலையளிப்பதுடன், அம்முரண்பாடுகள் பிரத்தியேகமாக பரந்துள்ளதன் வெளிப்பாடுமாகும் '' என குறிப்பிட்டார்.

ஒரு வர்த்தக பிரதிநிதி இக்கூட்டத்தின் மனநிலையை (4 D களுக்கு demoralising, discouraging, discomforting, depressing) சீர்குலைவு, அதைரியமின்மை, நிம்மதியின்மை, உற்சாகமற்ற தன்மையாகவிருந்ததாக குறிப்பிட்டார்.

டோகாவின் நிகழ்ச்சிநிரலில் உள்ள முக்கிய முரண்பாடுகள் விவசாயத்தையும், சேவைகளையும் தாராளமயமாக்கல், கைத்தொழிற்பொருட்களின் கட்டுப்பாடு, முதலீட்டு கொள்கை, போட்டிக்கொள்கை, தொழில், சுற்றாடல் விடயங்களும், பொருட்களை அழிப்பது தொடர்பானதுமாகும்.

விவசாயம் ஒரு முக்கிய பிரச்சனைக்குரிய விடயமாகும். ஐரோப்பிய ஒன்றியமும் ஜப்பானும் அவுஸ்திரேலியாவினதும், விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளான Cairns குழு நாடுகளினது கோரிக்கையை எதிர்க்கின்றன. அவர்களின் கோரிக்கையின் படி விவசாயப் பொருட்களுக்கான மானியங்களுக்கு 300 பில்லியன் டொலர்கள் வருடாந்தம் செலவிடப்படுகின்றது.

ஐரோப்பாவின் வர்த்தக பிரதிநிதியான Pascal Lamy, வர்த்தக நோக்கங்களின் அடிப்படையில் விவசாயம் தாராளமயமாக்கலுக்கான பேச்சுவார்த்தை டோகாவில் நடைபெறுமானால் அங்கு எவ்வித உடன்பாடும் ஏற்படாது என கூறியுள்ளார்.

விவசாய வர்த்தகத்தை தாராளமயமாக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தினது ஓரளவான விட்டுக்கொடுக்கும் தன்மை, விவசாய ஏற்றுமதி நாடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விடயங்களையும், சட்டங்களையும் ஏற்றுக்கொள்ளுவதுடன் தொடர்புபடுத்தியுள்ள முயற்சியில் எடுத்துக்காட்டப்படுகின்றது. அபிவிருத்தியடையும் நாடுகள் என கூறப்படுபவற்றுடனான இவ்விடயம் தொடர்பான முரண்பாடுகள் எழுந்தபோதும், ஐரோப்பா தனது விவசாய வர்த்தக கட்டுப்பாடுகளை குறைக்கும் என யாரால் நம்பமுடியும். அது சுற்றாடல் பாதுகாப்பின் மீதான கவனத்தை உருவாக்குவதன் மூலம் தமது விவசாயத்தை வெளிநாட்டு உற்பத்திகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும்.

உலகவர்த்தக சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் ஜப்பானினதும், ஏழ்மையான நாடுகளினாலும் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட பொருட்களை அழிப்பதற்கு எதிரான சட்டம் தொடர்பாக தாம் உடன்பாட்டுக்குவர முடியாதென அமெரிக்கா கூறியுள்ளது. பொருட்களை அழிப்பதற்கு எதிரான சட்டமானது ஏற்றமதி சந்தைகளில் பாவனைப்பொருட்களை ''அழிக்கப்படுவதாக'' கூறப்படுவதற்கும், குறைந்தவிலைக்கு விற்பதற்க்கும் எதிரானதாகும். ஜெனோவா மாநாட்டிற்கு முன்னதாக 60 அமெரிக்க செனட்டர்கள் அமெரிக்காவின் முக்கிய வர்த்தக பேச்சுவார்த்தையாளரான Robert Zoellick இற்கு அமெரிக்காவின் சட்டங்களில் கைவைக்கவேண்டாம் என எழுத்து மூலம் கேட்டிருந்தனர்.

ஏழ்மையான நாடுகள் உலக வர்த்தக சம்மேளனம் தம்மீது பாரத்தை சுமத்துவதாக கூறி புதிய உடன்பாடுகளை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. வசதியான நாடுகளுக்கு சாதகமான தீர்மானங்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றன. ஆனால் ஏழ்மையான நாடுகள் பிரயோசனமடையக் கூடிய உடுபுடவை சந்தைகளை திறப்பது போன்றவை தடுக்கப்படுகின்றன.

தன்சானியாவில் அண்மையில் நடந்த கூட்டமொன்றில், உலகின் ஏழ்மையான நாடுகளின் 49 உத்தியோகத்தர்கள் எதிர்வரும் கூட்டம் தொடர்பாகவும், வர்த்தக தாராளமயமாக்கலும், உலகவர்த்தக சம்மேளனத்தினது சட்டங்களும் தமது பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தும் பாரிய தாக்கம் குறித்தும் கவலை தெரிவித்தனர்.

அக்கூட்டத்தின் பிரதம பேச்சாளரான பங்களாதேசை சேர்ந்த S. Rahama "உலக சனத்தொகையின் பத்திற்கு ஒன்று என்ற விகிதத்திலுள்ள 600 மில்லியன் மக்கள் ஓரளவு தரமான வாழ்க்கையை கொண்டுநடத்துவதற்கு அதிகரித்துவருமளவில் கஸ்டப்படுகின்றனர். எமது 49 நாடுகளும் பொதுவாக கட்டுப்படுத்தலை எதிர்நோக்குவதுடன், உலக சந்தையில் தமது பங்கினை இழந்துவருவதுடன், ஒவ்வோரு நாளும் இந்நாடுகளின் பொருளாதாரம் ஏழ்மையை அடைந்துவருகின்றது'' என கூறினார்.

இந் 49 நாடுகளினது நிதி அமைச்சர்களால் கையெழுத்திடப்பட்டுள்ள வரைவு தீர்மானத்தில் உலகவர்த்தக சம்மேளனத்தின் தற்போதைய சட்டங்களால் உருவாக்கப்பட்ட ''விலத்தல்களுக்கும், கட்டுப்படுத்தல்களுக்கும்'' தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அதில் மேலும் ''எந்தவொரு ஏழ்மையான நாடுகளும் 1995 இல் உலகவர்த்தக சம்மேளனம் உருவாக்கப்பட்டதிலிருந்து ஒரு பதவியையும் பெற்றுக்கொள்ளாததுடன், இவ் ஏழ்மையான நாடுகளினது உலகசந்தைக்கான ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளது'' எனவும் குறிப்பிட்டது.

மேலும் இந் நிதிஅமைச்சர்கள் வசதிபடைத்த நாடுகளால் திணிக்கப்படும் கடுமையான சுற்றுச்சூழல், தொழில் சட்டங்கள் வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்துக்கொள்ளும் அந்நாடுகளின் தன்மையை இல்லாதொழித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

வர்த்தகம் தொடர்பான பிரச்சனைகளை விட ஈரானுக்கும், லிபியாவிற்கும் எதிரான கட்டுப்பாட்டு சட்டத்தை [Iran and Libya Sanctions Act] அமெரிக்கா காங்கிரஸ் நீடிப்பது தொடர்பாக அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்துள்ளன. இச்சட்டமானது ஈரானுடனும், லிபியாவுடனும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதையும், அமெரிக்க அராங்கத்திற்கு விற்பனை செய்வதையும், அமெரிக்க வங்கிகளில் இருந்து வருடாந்தம் 10 மில்லியன் டொலர் கடனுதவி பெறுவதையும் அமெரிக்க ஜனாதிபதி தடைசெய்வதற்கான வழிவகுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி உறவுகளுக்கு பொறுப்பான ஆணையாளரான Chris Patten அமெரிக்கா திரும்பவும் ஈரானுக்கும், லிபியாவிற்கும் எதிரான கட்டுப்பாட்டு சட்டத்தை ஐரோப்பிய ஒன்றிய்திறதோ அல்லது தனியார்களின் நிறுவனங்களுக்கு எதிராகவோ பயன்படுத்துமானால் உலகவர்த்தக சம்மேளனத்தின் விசாரணைகுழுற்கு அழைப்புவிடப்போவதாக கூறினார். அவர் மேலும் விசேட பிராந்தியங்களுக்கான தாக்கத்தை கொண்ட ஒரு தலைப்பட்சமான தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் நீண்டகாலமாக எதிர்ப்பதாவும் தெரிவித்தார்.

சியாட்டிலில் உருவாகிய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மாறாக முக்கிய முதலாளித்துவ நாடுகளுக்கு இடையிலானதும், உலகவர்த்தக சம்மேளனத்திற்கு எதிரான ஏழ்மையான நாடுகளினது எதிர்ப்பு அதிகரிப்பதையும் ஜெனோவா உச்சிமாநாட்டின் பேச்சுவார்த்தைகள் எடுத்துக்காட்டியுள்ளன.