WSWS:
செய்திகள் & ஆய்வுகள் :
மத்திய
கிழக்கு
Israel seizes control of East Jerusalem
இஸ்ரேல் கிழக்கு ஜெரூசலேமை
தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது
By Chris Marsden
11 August 2001
Back to screen
version
கடந்த வெள்ளிக்கிழமை கிழக்கு ஜெரூசலேமில் உள்ள
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் முக்கிய தலைமையகமாகிய Orient
House இனை இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர்
தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். அதே நாள் F-16
ரக யுத்தவிமானங்கள் இரண்டு ஏவுகணைகள் மூலம் மேற்குகரையின்
நகரமான Ramallah இல்
உள்ள பாலஸ்தீனிய பொலிஸ் நிலையத்தை தாக்கியழித்துடன், காஸா
கரையோரத்திலுள்ள பொலிஸ் நிலையத்தையும் புல்டோசர்களாலும்,
தாங்கிகளாலும் தரைமட்டமாக்கினர். ஜெரூசலேமிற்கு சற்று தூரத்திலுள்ள
Abu Dis
நகரத்தில் பாலஸ்தீன நிர்வாகத்தின் கட்டிடத் தொகுதி ஒன்றினையும்
இஸ்ரேலிய படைகள் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தனர்.
இந்நடவடிக்கையானது மேற்கு ஜெரூசலேமிலுள்ள
மிகுந்த ஜனசந்தடியான பகுதியிலுள்ள Pizza
உணவு விடுதியினுள் அடிப்படைவாத ஹமாஸ்
இயக்கத்தின் உறுப்பினர் ஒருவரால் நடாத்தப்பட்ட தற்கொலை
குண்டுத் தாக்குதலுக்கான பதிலடி எனக்கூறப்பட்டது. இத் தற்கொலைத்தாக்குதலில்
6 சிறுவர்கள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டதுடன், 90 பேர் காயமடைந்தனர்.
அக்குண்டுத் தாக்குதலில் தப்பிய மூவர் பின்னர் வைத்தியசாலையில்
மரணமாகினர். இறந்தவர்களில் ஐவர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
பலவருடங்களுக்கு பின்னர் இக்குண்டுவெடிப்பு ஜெரூசலேமில்
இடம்பெற்றுள்ளபோதிலும், இது யூலை 31ம் திகதி நாபுலுஸ் நகரத்தில்
இஸ்ரேலிய படையினரால் 8 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதற்கான
மறுதாக்குதலாகும். அதில் மேற்குகரையின் நகரத்தின் ஹமாஸ் இயக்கத்தின்
முக்கிய இரண்டு உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். இத்துடன் பாலஸ்தீன
விடுதலை இயக்கத்தை சார்ந்தவர்களை கொலை செய்யும் இஸ்ரேலால்
அறிவிக்கப்பட்ட கொள்கையால் 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அவ்வேளை, ஹமாஸ் இயக்கத்தினரின் மறுதாக்குதல் ஒன்றினை நடத்தும்
சந்தர்ப்பத்தை இஸ்ரேல் தேடிக்கொண்டிருப்பதாகவும், இதன்
மூலம் அமெரிக்காவால் திணிக்கப்பட்ட யுத்தநிறுத்தத்தை முடிவிற்கு
கொண்டுவருவதை நியாயப்படுத்தவும், மேற்குகரையிலும் காஸா
கரையோரத்திலும் தமது இராணுவ ஆக்கிரமிப்பை அதிகரிக்கவும்
முயலுவதாகவும் பாலஸ்தீனத்தின் அறிக்கைகள் குறிப்பிட்டன.
இஸ்ரேலிய பிரதமரான ஆரியல் ஷரோன் பாலஸ்தீன
நிருவாகத்தின் தலைவரான யசீர் அரபாத் அக்குண்டுத்தாக்குதலை
கண்டித்ததையும், யுத்தநிறுத்தத்தை மீளகொண்டுவருவதற்கான
கோரிக்கையையும் நிராகரித்தார். லிகுட் கட்சியால் தலைமை
தாங்கப்படும் கூட்டரசாங்கத்தின் உள்நாட்டமைச்சரான
அதிதீவிர வலதுசாரிக்கட்சியான Shas கட்சியின்
தலைவரான Eli Yishai, ரெல்
அவீவ் [Tel Aviv]
நகரத்தின் நடனசாலை மீதான குண்டுத்தாக்குதலின் பின்னர் பாலஸ்தீன
நிர்வாகத்தின் மீதான நீண்ட விளைவை உருவாக்க கூடிய தாக்குதலை
[இது பின்னர் யுத்தநிறுத்தத்திற்கான யசீர் அரபாத்தின் கோரிக்கையின்
பின்னர் கைவிடப்பட்டது] நடைமுறைப்படுத்துமாறு ஆரியல் ஷரோனிடம்
கேட்டுள்ளார்.
கூட்டரசாங்கத்தின் தலைவரும் லிகுட் கட்சியின்
உறுப்பினருமான Ze'ev Boim " ஜெருசலேம்
மீதான தாக்குதலுடன் பாலஸ்தீன நிர்வாகத்தினை முடிவுகட்டுவதற்கான
நேரம் வந்துவிட்டதாக'' குறிப்பிட்டுள்ளதுடன், பாலஸ்தீன நிர்வாகத்தின்
உயர்மட்டத்தினரை ''தேர்ந்தெடுத்து கொல்லும்'' ஷரோனின்
கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு அவரிடம் கேட்டுள்ளார்.
பாராளுமன்றத்தின் Herut கட்சியின்
அங்கத்தவரான Michael Kleiner இன்னுமொருபடி
சென்று இஸ்ரேல், அரபாத்தை கொல்லவேண்டும் என கூறியுள்ளார்.
அவர் மேலும் ''ஷரோன் உலகத்தின் அபிப்பிராயத்தை கவனத்திற்கெடுக்காது
ஒஸ்லோவின் மணிக்கூட்டை மறுபக்கமாக திருப்பி பாலஸ்தீன நிர்வாகத்தினரை
[பயங்கரவாதிகளை] கைதுசெய்து, மத்திய கிழக்கில் அரபாத்தின்
பிரசன்னத்தை இல்லாது செய்யவேண்டும்'' என கூறியுள்ளார். இரத்தவேட்கை
குறையா வார்த்தை ஜாலங்களுடன் லிகுட் கட்சியின் கூட்டான
தொழிற்கட்சியும் பாலஸ்தீன நிர்வாகத்தின் மீதான தாக்குதலுக்கான
தனது ஆரதவை வழங்கியுள்ளது.
இஸ்ரேலின் நடவடிக்கைகள் ஒரு அறிகுறி மட்டுமல்லாது,
நடைமுறை முக்கியத்துவமும் உள்ளது. ஏனெனில் அது பாலஸ்தீனர்கள்
தமது எதிர்கால பாலஸ்தீன அரசின் தலைநகரம் எனப்படுவதின் மீதான
கட்டுப்பாட்டை எடுத்துள்ளது. அரபாத்தின் முக்கிய ஆதரவாளரான
அகமட் அப்துல் Orient House மீதானதும்,
ஏனைய பாலஸ்தீன அரசாங்கத்தளங்கள் மீதானதுமான ஆக்கிரமிப்பு
இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் ஒஸ்லோ உட்னபடிக்கையை ஏற்றுக்கொண்ட
திகதியான 1993 இன் பின்னர் எழுதப்பட்ட சகல உடன்படிக்கைகளையும்
அழிக்கும் நோக்கத்தை கொண்டுள்ளதாகவும், பாலஸ்தீனர்களுக்கு
எதிர்த்துபோராடுவதை தவிர வேறு மாற்றுவழியேதும் இல்லையெனவும்,
புனித ஜெரூஸலேமையும், Orient
House இனையும், இஸ்ரேலிய படைகளால்
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஏனைய நிலையங்களையும் விடுவிக்கும் Intifada
[இன்டிபாடா] தொடரும்'' எனவும்
குறிப்பிட்டார்.
Shas கட்சியினரும், சியோனிச
குடியேற்றவாசிகளினது கட்சியும், லிகுட் கட்சியினரின் முக்கிய பிரிவினர்
உட்பட இஸ்ரேலிய ஆளும் தட்டினரின் அதிதீவிர வலதுசாரி பிரிவினரிடையே
முழு மேற்குகரையையும், காஸாகரையோரத்தையும் ஆக்கிரமிக்கும்
இராணுவத் தீர்வினை முன்மொழிகின்றனர் எனபதில் எவ்வித ஐயுறவுமில்லை.
லிகுட் கட்சியினுள் ஷரோனின் எதிராளியும், முன்னாள் பிரதமரான
பென்ஜமின் நெட்டான்யாகுவின் நெருக்கமானவருமான தேசிய கட்டமைப்பிற்கான
தலைவரான Avigdor Lieberman பாலஸ்தீன நிர்வாகத்தை
பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தவேண்டும் என அழைப்புவிட்டுள்ளார்.
Shas கட்சியின் பிரதித்தலைவரும் தொழில்,
சமூக சேவைகளுக்கான அமைச்சரான Shlomo Benizri
பேச்சுவார்த்தைக்கான அழைப்பை நிராகரிக்கவும், பாலஸ்தீன நிர்வாகத்தின்
மீதான தாக்குதலை தீவிரமாக்கும் படி ''அவர்களுக்கு புரியும்
வார்த்தைகளால் நாங்கள் தாக்க தொடங்கவேண்டும் ''என
கூறியுள்ளார்.
கூட்டரசாங்கத்தில் வெளிநாட்டமைச்சரான
தொழிற்கட்சித் தலைவரான சிமோன் பெரஸ் அரபாத்துடனான பேச்சுவார்த்தைகளை
தொடர்ந்து நடாத்தவேண்டும் என வலியுறுத்தியதுடன், பாலஸ்தீன நிர்வாகத்தினரிடையேயான
முரண்பாடுகள் வெளிப்படும் நிலையை அடைந்துள்ளது தொடர்பான
பயக்குரல்கள் தென்படுகின்றன. அவர் '' 10 மாத கட்டுப்பாட்டினுள்''
30 இலட்சம் பாலஸ்தீனர்கள் வசிப்பதாகவும், இம்முக்கிய பிரச்சனைதான்
எமது முகத்திற்கு எதிராக வெடிக்கலாம் எனவும் எச்சரித்துள்ளார்.
எவ்வாறிருந்தபோதிலும் பேச்சுவார்த்தைக்கான கதவுகளை திறக்க
அழைப்புவிடும் பெரஸுனதும், ஏனையவர்களினதும் அழைப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதிகாரத்தை தீவிரவாதிகளினது கைகளில் விட்டுள்ள வன்முறை நிறுப்பட்டும்
வரை பேச்சுவார்த்தையை ஷரோன் நிராகரிப்பது தொடர்பாக
பெரஸ் குற்றம்சாட்டுகின்றார். லிகுட் கட்சி மீதான பெரஸின் கடுமையற்ற
குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையில் Avigdor
Lieberman அவரை ''யதார்த்தத்திற்கு முற்றாக
அப்பாற்பட்டவர்'' என நிராகரித்துள்ளார்.
|