World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்

HIV/AIDS danger increasing in the West

மேற்கத்தைய நாடுகளில் எச்.ஐ.வி. /எயிட்ஸ் அபாயம் அதிகரிக்கின்றது

By Barry Mason
11 May 2001

Back to screen version

உலகளாவிய ரீதியில் எயிட்ஸ் பரவி வருவது ஒரு பாரிய சுகாதார அழிவாக வளர்ச்சி கண்டுள்ள போதிலும் அதனுடைய தாக்கம் குறிப்பாக ஆபிரிக்காவிலும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளிலும் முனைப்பாக உள்ளது. ஆனால் மேற்கு ஐரோப்பாவிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் இருந்து அண்மையில் கிடைத்த சாட்சியங்களின் படி அபிவிருத்தியடைந்த நாடுகளிலும் கட்டுப்பாட்டில் வைக்க முடியாத நிலை தோன்றியுள்ளதை சுட்டிக் காட்டுகிறது.

பிரித்தானிய மருத்துவ சஞ்சிகையில் (British Medical Journal) மே 5ம் திகதி பிரசுரிக்கப்பட்ட HIV மருந்து எதிர்ப்பு செலுத்துதல் தொடர்பாக கண்காணிக்கும் ஐக்கிய இராச்சிய ஒத்துழைப்பு குழுவின் அறிக்கை விசாரப்பட காரணமாக அமைகிறது. இந்த அறிக்கை பேமிங்கடாம் மருத்துவ கல்லூரியின் பொதுஜன சுகாதார ஆய்வுகூட சேவை பகுதியின் ஆய்வை அடிப்படையாக கொண்டுள்ளது. இவ்வறிக்கை 1994 ஜூன் மாதத்துக்கும் 2000 ஆகஸ்ட்டுக்கும் இடையில் HIV-1 வைரஸ், தொற்றியுள்ள 69 பேரை மையமாகக் கொண்டது. இதில் 10 பேருக்கு தொற்றியுள்ள HIV வைரஸ், வைரசுக்கு எதிரான மருந்துகளுக்கு எதிர்ப்புத் தன்மை கொண்டவை என அடையாளம் காணப்பட்டுள்ளது. பத்தில் இருவர் மூன்று வகுப்பு AIDS எதிர் மருந்துகளில் இரண்டிற்கு எதிர்ப்பு தன்மை கொண்ட வைரசை காவிச் செல்கின்றனர்.

பரீட்சிக்கப்பட்டவர்களில் எவருக்கும் இன்னும் வைரஸ் எதிர் மருந்துகள் கொடுக்க ஆரம்பிக்கப்படவில்லை. அவர்கள் அனைவரும் மருந்து எதிர்ப்பு தன்மை கொண்ட HIV வைரசை தொற்றின் ஊடாக பெற்றுள்ளனர். வைரஸ் எதிர் மருந்துகள் 1996 அறிமுகப்படுத்தப்பட்டு அது AIDS சம்பந்தமான மரணத்தில் பாரிய வீழ்ச்சிக்கு வழி சமைத்தது. ஆனால் இந்த புள்ளி விபர ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் ஐக்கிய இராஜ்ய அரசுகளிலும் HIV தொற்றியுள்ளவர்களில் 25 சதவீதத்துக்கு மேற்பட்டோர் மருந்து எதிர்ப்பு வைரசால் பீடிக்கப்பட்டுள்ளனர் என 2000ம் ஆண்டில் கணிக்கப்பட்டுள்ளது.

தொடரும் இந்த அறிக்கை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு புதிதாக தொற்றுவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதோடு இவர்கள் மருந்து எதிர்ப்பு HIV வைரசை கொண்டுள்ளனர்.

இது போன்ற இன்னுமொரு அறிக்கையை சன்டியாகோவில் (San Diego) உள்ள கலிபோர்னியப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் சுசான் லிட்டிலும் டாக்டர் டக்லஸ் ரிச்மேனும் பெப்பிரவரியில் வெளியிட்டனர். அவர்கள் அமெரிக்காவின் பிரதான நகரங்களான வன்கூவர், நியூயோர்க், சீட்டேல் போன்ற பெரும் வட-அமெரிக்க நகரங்களில் புதிதாக HIV தொற்றிய 394 பேரை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு 1998-2000ல் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட HIV எதிர் மருந்துக்களுக்கு எதிர் தன்மை காட்டும் வைரசை கொண்டவர்களின் எண்ணிக்கை 14% அதிகரித்துள்ளதை காட்டுகிறது. 1995-1998ல் இது 3.5 வீதமாக இருந்தது. இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட வைரஸ் எதிர் மருந்துகளுக்கு எதிர்ப்பு தன்மை காட்டும் நபர்களின் எண்ணிக்கை 1995-1998ல் 0.4% வீதத்திலிருந்து 1999-2000 வரை 5.8 வீதமாக அதிகரித்துள்ளது.

மீள் வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் செயற்படாமையினால் வைரஸ் எதிர் தன்மையில் வாடும் வைரஸ் எந்த அளவு அதிகரித்துள்ளது அதனால் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பது தொடர்பாக தரப்பட்ட புள்ளி விபரங்களில் இல்லை. அரிசோனாவில் டக்சன் பிராந்தியத்தில் பெரும்பான்மையான AIDS, HIV நோயாளர்களுக்கு சிகிச்சையளித்து வரும் குழுவின் டாக்டர் கிவின் கார்மிசெல்லை ஒரு பத்திரிகையாளர் பேட்டி கண்டபோது அவர் வழங்கிய தகவல்கள் சில விடயங்களை சுட்டிக் காட்டுகின்றது. அவருடைய HIV நோயாளர்களில் 1000ற்கு 7 பேர் ஒரு வருடத்துக்கு முன்பு இறந்ததாகவும் அது தற்போது இன்றைய திகதி வரை 1000 க்கு 18 ஆக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். தற்போது உள்ள நிலைமையில் இந்த வருடம் இரட்டிப்பாகும் என அவர் குறிப்பிட்டார். இந்த வருட ஆரம்பத்தில் நாங்கள் இது ஒரு குருட்டு அதிர்ஸ்டமாக இருக்கலாம் என நினைத்தோம். ஒரு சில கெட்ட வாரங்களுக்கு விளக்க முடியாத விதத்தில் ஒரு தற்காலிக வேலால் குத்துவது போல் இருந்தது. ஆனால் நாம் அதைக் காட்டிலும் பெரிய அளவில் முகம் கொடுக்க வேண்டி வரும்.

1995ல் இருந்து சிகிச்சை வழங்கப்படாத நோயாளர்கள். வைரஸ் மருந்துக்கு தாக்கிப்பிடிக்கும் காட்டும் தன்மையை நாங்கள் பார்க்கக் கூடியதாக இருப்பதோடு புதிய சிகிச்சை முறைகளும் போடும் இந்த நிலைமைக்கு சமமாக்கக் கூடியதாக இருந்தது என ஒவ்வொருவரும் கவலைப்படுகின்றனர். நாங்கள் வாரந்தோறும் ஆட்களை இழந்து வந்த கெட்ட காலம் ஆரம்பித்துள்ளதாக எண்ணத் தோன்றுகிறது."

ஐக்கிய அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு நோய்த்தடுப்பு நிலையங்களில் (CDC) மருந்து எதிர்ப்பு HIV நோயாளர்கள் தொடர்பாக புள்ளி விபரங்கள் இல்லை. எப்படியிருப்பினும் 1996ல் AIDS நோயாளர்கள் இறப்பு வீழ்ச்சியடைந்து வந்தமை தற்போது சமப்படுத்தப்பட்டுள்ளது. CDC பேச்சாளர் கார்தியன் பினா கூறியதாவது "எங்களிடம் 2000, 2001 ற்கான எண்ணிக்கை இல்லை, ஆனால் எல்லா இடங்களிலும் சிகிச்சை பிழைத்துப் போக தொடங்கியதை காண எவரும் ஆச்சரியமடைய மாட்டார்கள்."

மருந்து எதிர்ப்பு வைரஸ்களின் தொகை அதிகரிப்பது மாத்திரம் பிரச்சினை அல்ல மொத்தத்தில் HIV தொற்றும் அதிகரித்துள்ளது. குறிப்பாக பாதுகாப்பில்லாத பால் உறவினால் வரும் ஆபத்து தொடர்பான கல்வி மற்றும் பொது சுகாதார விடயங்கள் தொடர்பாக நிதி ஒதுக்கீடுகள் பாரியளவில் குறைந்து ஐக்கிய நாடுகளின் கடந்த டிசம்பர் AIDS அறிக்கை ஐக்கிய அமெரிக்க அரசுகளிலும் மேற்கு ஐரோப்பாவிலும் முன்னைய வெற்றிகள் தற்போது பின்நோக்கி செல்கின்றன என விபரிக்கப்பட்டிருந்தது. "உலகின் பணக்கார நாடுகளின் செய்திகள் தடுப்பு நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதை காட்டி நிற்கின்றன. கிடைக்கும் தகவல்களின்படி புதிதாக நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை கடந்த வருடங்களைவிட குறைந்ததாக இல்லை. மொத்தத்தில் 2000ம் ஆண்டில் மேற்கு ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் 30,000 ற்கும் அதிகமான பெரியோர்களும் சிறியோர்களும் HIVக்கு ஆளாகியுள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது."

நாஷனல் எயிட்ஸ் ட்ரஸ்ட் (National Aids Trust) ஆன 'கருணை இல்லத்தில்' (Charity) இருந்து ஒரு பிரித்தானிய வைத்திய சஞ்சிகையில் (BMJ) வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட கருத்தில், இன்றைய தலைமுறை "கூட்டு சிகிச்சை முறை சகாப்த" காலத்தில் இருந்து கொண்டுள்ளதாகவும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கும் சாத்தியம் குறைவு எனவும் தெரிவித்தது. "அச்சமூட்டுவது என்னவெனில் ஐக்கிய இராஜ்யத்தில் (UK) முன்னர் ஒரு போதும் இல்லாத அளவில் அதிக அளவிலான புதிய நோயாளிகளை -ஆண்டுக்கு 3000 பேர்- காண்பதுவே" என எச்சரிக்கை செய்தது.

இவ்வாண்டு பெப்பிரவரியில் அமெரிக்க CDC யால் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கை அமெரிக்காவின் பெரும் நகரங்களில் உள்ள கறுப்பின இளைஞர்களில் மூவருக்கு ஒருவர் எச்.ஐ.வி.யால் பீடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றது. நகர்ப்புறங்களில் வாழும் 20 வயதைக் கொண்ட கறுப்பின இளைஞர்களில் 12 வீதமானோர் HIV யினால் பீடிக்கப்பட்டுள்ளதையும் இந்த அறிக்கை கண்டது. CDC பேச்சாளர் கூறியதாவது: "கண்டுபிடிப்புக்கள் பயமூட்டுபவையாக உள்ளன. இதில் துன்பகரமானது என்னவெனில் இவர்கள் 30 வயதை அடையும் போது ஆபிரிக்கன்-அமெரிக்கன் தன்னினச் சேர்க்கையாளர்களில் (Homosexual) 1/3 பங்கினர் இதனால் பீடிக்கப்பட்டு போய்விடுவார்கள் என்பதுவேயாகும்."

அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் சமீபத்தில் செய்யப்பட்ட சகல ஆய்வுகளும் எச்.ஐ.வி. கிருமியினால் ஏற்படும் அதிகரித்த அளவிலான ஆபத்தைச் சந்திக்க அதிக வளங்களையும் ஆராய்ச்சிகளையும் தடுப்பு நடவடிக்கைகளையும் அவசியமாக்கியுள்ளது. சிறப்பாக மருந்து எதிர்ப்பு வைரஸ்களின் பரு இப்போது பரந்துபட்டு வருகின்றது. கூட்டு மருந்துவில்லை சிகிச்சைகளில் தொடர்ந்து தங்கியிருப்பது -மூன்றாம் உலக நாட்டின் பரந்த பெரும்பான்மைக்கும் அப்பால்- நோய்க்கான நற்பயன் அளிக்கக்கூடியதும் நோய்க்கான தடுப்பூசி ஏற்றும் முறைக்குமான பதிலீடாகிவிடாது. மேற்கத்தைய அரசாங்கங்கள் அவசியமான வளங்களுடனும் அரசியில் மனவுறுதியோடும் பூகோளரீதியான எயிட்ஸ் நெருக்கடியை கையாள பிரசித்தமான முறையில் தவறிவிட்டன என்பதற்கான அறிகுறிகள் இல்லாதுள்ளன. அவை தமது சொந்த வாசற்படிகளில் நோயின் வளர்ச்சி பெறும் தாக்கத்தை இன்னமும் பாரதூரமானதாகக் கொண்டுள்ளன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved