WSWS:
செய்திகள் & ஆய்வுகள் :
மத்திய
கிழக்கு
US and Britain step up bombing of Iraq
அமெரிக்காவும் பிரித்தானியாவும்
ஈராக் மீது குண்டுத்தாக்குதலை நடத்துகின்றன.
By Kate Randall and Patrick Martin
17 August 2001
Use
this version to print
கடந்த வாரங்களில் அமெரிக்காவினதும், பிரித்தானியாவினதும்
படைகள் ஈராக் மீது மூன்று ஆகாயத் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
செவ்வாய்க்கிழமை பாக்தாத்திற்கு 170 மைல் தூரத்திலுள்ள
நகரமான An Nasiriya இற்கு
அண்மையில் அமெரிக்க யுத்தவிமானங்கள் குண்டு வீசியுள்ளன. இவ்
இலக்கு ஈராக்கிய ஏவுகளைகளை வழிநடத்த பயன்படுத்தப்படும்
ராடார் நிலையம் என கூறப்பட்டது.
நான்கு நாட்களுக்கு முன்னர் ஆகஸ்ட் 10ம் திகதி
வெள்ளிக்கிழமை கடந்த பெப்பிரவரி மாதத்திற்கு பின்னர் முதலாவது
பாரிய தாக்குதலை அமெரிக்காவினதும், பிரித்தானியாவினதும் யுத்தவிமானங்கள்
தென் ஈராக்கின் மீது நடத்தியுள்ளன. இத்தாக்குதலில் கிட்டத்தட்ட
20 ஜெட்களும், 30 உதவி விமானங்களும் ஈடுபட்டன. ஆகஸ்ட் 7 ம்
திகதி அமெரிக்க விமானங்கள் வட ஈராக் மீது தாக்கின.
கடந்த வெள்ளிக்கிழமைத் தாக்குதலில் மூன்று
விமான பாதுகாப்பு தளங்களான, ஒரு விமான கட்டுப்பாட்டு நிலையத்தின்
மீதும், விமான எதிர்ப்பு ஏவுகளைத்தளத்தின் மீதும், நீண்ட தூர
ராடார் நிலையத்தின் மீதும் தாக்க தன்னியங்கி ஏவுகளைகள் பாவிக்கப்பட்டதாக
பென்டகன் [Pentagon]
தெரிவித்தது. இவை தென் ஈராக்கின் ''பறக்க தடைசெய்யப்பட்ட''
பிரதேசம் என அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளன.
ஈராக் அத்தாக்குதல் பாக்தாத்திற்கு தென்கிழக்கே
முறையே 110,190 மைல் தூரத்திலுள்ள Wassit,
Thi Qar மாநிலத்திலுள்ள மக்களின்
சேவை நிலையங்கள் மீது குறிவைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தது.
அத்தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், 11 பேர்
காயமடைந்ததாகவும், ஈராக்கிய விமான எதிர்ப்பு நிலையங்கள்
அவ்விமானங்களை நோக்கி சுட்டதாகவும் ஈராக்கிய செய்தி நிறுவனங்கள்
தெரிவித்தன.
இவ் இராணுவ தாக்குதல்களுக்காக அமெரிக்காவும்,
பிரித்தானியாவும் அதிகரித்துவரும் சர்வதேச கண்டனங்களுக்கு
முகம் கொடுக்கிறன. ஈராக்கிய அரசாங்கத் தகவல்களின் படி
1998 இற்கு பின்னராக தாக்குதல்களால் இதுவரை 300 இற்கு
அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் வெளிநாட்டமைச்சு
ஆகஸ்ட் 10 இன் தாக்குதல் குறித்து கண்டித்துள்ளதுடன், ''இப்படியான
நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபைக்கு மேலாக
நடாத்தப்படுவதாகவும், சர்வதேச சட்டங்களை மீறுவதாகவும்,
ஈராக்கின் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு காண்பதை இன்னும்
மோசமாக்குவதாகவும்'' குறிப்பிட்டது.
ரஷ்யாவின் இவ்வறிக்கையானது, அமெரிக்காவும்,
பிரித்தானியாவும், பிரான்சும் ஈராக்கின் வடக்கு தெற்கு பிரதேசத்தில்
ஐக்கியநாடுகள் சபையின் தீர்மானமில்லாது உருவாக்கியுள்ள ''பறக்க
தடைசெய்யப்பட்ட'' பகுதியானது ஈராக்கின் சுதந்திரத்தை மீறும்
ஒரு நடவடிக்கை என்பதை எடுத்துக்காட்டியுள்ளது. இப்பகுதியில்
ஈராக்கியர்கள் விமானங்களையோ அல்லது வான் ஊர்திகளையோ
பாவிப்பது அமெரிக்காவால் தடைசெய்யப்பட்டுள்ளது.
ரெக்ஸாஸின் [Texas]
Crawford இல்
தனது மூன்று மாத விடுமுறையை கழித்துவரும் அமெரிக்க ஜனாதிபதி
புஷ் தனது மாட்டுப்பண்ணையிலிருந்து வெளிவிட்ட அறிக்கையில், இத்தாக்குதல்கள்
''பறக்க தடைசெய்யப்பட்ட'' பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள
அமெரிக்க படைகளால் தற்பாதுகாப்பிற்காக நடாத்தப்பட்டதாகவும்,
பாக்தாத்திற்கு அண்மையில் தாக்குதல் நடத்தப்படுவதென்றால்
மட்டுமே வெள்ளை மாளிகையின் அனுமதி தேவை எனவும், இப்படியான
தாக்குதல்களுக்கு தேவை இல்லை எனவும் கூறியுள்ளார்.
யூலை மாதம் 24 ம் திகதியின் நிகழ்வு ஒன்று அமெரிக்காவை
ஆத்திரமூட்டியது. அதில் ஈராக்கிய இராணுவம் தெற்கின் ''பறக்க
தடைசெய்யப்பட்ட'' பகுதியில் தவறுதலாக U-2
ரக அமெரிக்க உளவு விமானம்
ஒன்றினை சுட்டுவீழ்த்தின. ராடாரின் துணையற்ற SAM-2
ரக மேலதிகமான எரிபொருளைக் கொண்ட ஏவுகணையானது
ஆயுதமேதுமற்ற ஒரு இருக்கையை கொண்ட விமானத்தின் அருகே
வந்தபோது விமானி அதிர்ச்சியால் தாக்கப்பட்டார்.
அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு
சபையில், ''கடுமையான தடை'' [smart
sanctions]
எனப்படும் ஒரு தீர்மானத்தை கொண்டுவருவதன்
மூலம் ஈராக் மீதான தடைகளை புதுப்பிக்க முயல்கின்றது. இத்தீர்மானம்
ரஷ்யாவின் வீட்டோ வாக்குரிமையால் தடைசெய்யப்பட்டது.
ஆயுதங்கள் தயாரிப்பதற்கான வசதிகளை ஐக்கிய நாடுகள்
சபையின் குழு ஒன்று சோதனையிட அனுமதிக்கும் பட்சத்தில் ஈராக்கின்
மீதான சகலதடைகளையும் நீக்குவதற்கான ரஷ்யாவின்
முன்மொழிவை அமெரிக்கா நிராகரித்தது.
நடைமுறையில் இப்புதிய தடையானது ஈராக்
உடனான வர்த்தக நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அமெரிக்காவிற்கு
மேலதிகமான உரிமையை வழங்கியிருக்கும். கூடுதலான ஐரோப்பிய
நாடுகள் இப்புதிய ''கடுமையான தடையை'' எதிர்த்ததுடன், இவ்
எண்ணைய் வளமான நாட்டுடன் தமது வர்த்தகத்தை செய்வதற்கு
அமெரிக்காவின் இம்முன்மொழிவு தடையாக இருப்பதாக நோக்குகின்றன.
ஐக்கிய நாடுளின் அறிக்கைகளின்படி வளைகுடா யுத்தத்திற்கு
பின்னரான பத்தாண்டுகளில் உணவு, மருந்துவகைகளின் பற்றாக்குறையாலும்,
அந்நாட்டிற்கு ஏற்படுத்தப்பட்ட கட்டுமான உடைவின் காரணமாகவும்
5 இலட்சம் குழந்தைகள் உள்ளடங்கலாக 15 இலட்சம் மக்கள்
இறந்துள்ளனர்.
ஈராக்கை தனிமைப்படுத்தும் அமெரிக்காவின் திட்டங்கள்
கடந்த மாதங்களில் கைநழுவிச்செல்கின்றது. பல நாடுகள் பாக்தாத்துடனான
இராஜதந்திர, வர்த்தக உறவுகளை புதுப்பிப்பதுடன், அமெரிக்காவிற்கு
மூக்கில் குத்தியுள்ளன. ஈராக்கின் தலைநகரத்தின் மீதான தாக்குதலுக்கு
அமெரிக்கா பின்னடிப்பதற்கான காரணம், அங்கு தொடர்ந்து
சென்றுகொண்டிருக்கும் வெளிநாட்டு பிரதிநிதிகளால் இப்படியான
ஒரு தாக்குதல் பிரச்சனையை உருவாக்கிவிடும் என்பதாலாகும்
.
கடந்த மூன்று அமெரிக்க, பிரித்தானிய தாக்குதலின்
போது ரஷ்யாவினதும், ஜோர்டானினதும் அமைச்சர்களும், 1991
யுத்தத்தில் அமெரிக்காவின் முக்கிய ஆதரவாளரான சிரியாவின்
பிரதமரும் பாக்தாத்தில் இருந்தனர். ஈராக் சிரியாவுடனும்,
எகிப்துடனும், துனீசியாவுடனும் கடந்த மாதங்களில் வர்த்தக உடன்படிக்கைகளை
செய்துள்ளதுடன், அல்ஜீரியா, யேமன், லெபனான், ஜோர்டானுடனும்
இப்படியான உடன்படிக்கைகளுக்கான பேச்சுவார்த்தைகளை
நடத்தியுள்ளது. சிறிய பாரசீக வளைகுடா நாடான ஷேக்குகளின்
குவைத்தும், சவுதி அராபியாவும் மட்டுமே பாக்தாத்துடனான
உறவுகளை வழமைக்கு கொண்டுவர மறுக்கின்றன.
இத்தாக்குதல்களுக்கு முதல் வாரங்களில் ஜேர்மனி
பாக்தாத்தில் தனது தூதுவராலயத்தை விரைவில் திறக்கப்போவதாக
ஈராக் அரசு அறிவித்தது. கடந்த வருடத்தில் அராபிய நாடுகளுடனான
ஜேர்மனியின் வர்த்தகம் 28% ஆல் அதிகரித்துள்ளதுடன், ஏற்றுமதி 60%
ஆல் அதிகரித்துள்ளது. ஜேர்மன் அரசாங்கம் அண்மையின் தலைநகரான
பேர்லினில் ஜேர்மன்-அரபு பொருளாதார அமைப்பிற்கு வரவேற்பளித்ததுடன்,
நூற்றுக்கணக்கான அரசாங்க, வர்த்தக பிரதிநிதிகளையும் வரவேற்றிருந்தது.
அவ்வமைப்பில் உரையாற்றிய பொருளாதார அமைச்சரான Wolfgang
Müller ஈராக்குடன் ஒரு காலத்தின் முக்கியமான
இருந்த வர்த்தக உறவுகளை புதுப்பிக்கப்போவதாக தெளிவாக
குறிப்பிட்டிருந்தார். அடுத்த மாதம் பாக்தாத்தில் நடைபெறவிருக்கும்
சர்வதேச வர்த்தக கண்காட்சியிலும் ஜேர்மனி கலந்துகொள்ளவுள்ளது.
வாள் வெட்டுப்போன்ற ஈராக் மீதான அமெரிக்காவின்
குண்டுவீச்சானது சதாம் குசேயினுக்கு எதிரானது மட்டுமல்லாது
எண்ணைய் வழமான பிரதேசத்தில் தனது ஆளுமைக்கு எதிராக வரும்
ஐரோப்பிய சக்திகளுக்கும் எதிராகத்தான். ரஷ்யா ஆழமான
விளைவை உருவாக்ககூடிய கட்டுப்பாடுகளை தடைசெய்யலாம்,
சீனா அதிதொழில் நுட்பமிக்க இயந்திரங்களை ஈராக்கிற்கு வழங்கலாம்,
பொருளாதார வளர்ச்சிக்கான முன்னேற்றமான திட்டங்களை
ஜேர்மனியும் பிரான்சும் வழங்கலாம், ஆனால் அமெரிக்கா,
வளைகுடாவில் தீர்க்கரமான இராணுவ சக்தியாக இருப்பது
நான் தான் என்பதை காட்ட அறிவித்தல்களை வழங்க முயல்கின்றது.
பலத்தினை காட்டுகையில் கடந்த இரண்டுவார
நிகழ்வுகள் புஷ் நிர்வாகத்தின் உள்ளே முரண்பாடுகள் அதிகரித்துள்ளன.
அரச செயலாளரான Colin Powell
''பறக்க தடைசெய்யப்பட்ட'' பகுதியின்
மீதான கண்காணிப்புடன், ஈராக் மீதான பொருளாதாரத்தடை
தொடரப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றார். உதவி ஜனாதிபதியான
Dick Cheney உம்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான Donald
Rumsfeld உம் சதாம் குசேனின் அரசாங்கத்தை
தூக்கிவீசுவதற்கும், வெளிநாட்டிலுள்ள அமெரிக்க சார்பான ஈராக்கிய
குழுக்களுக்கு நிதியுதவி வழங்கவும் சாதகமாக இருக்கின்றனர்.
Donald Rumsfeld உம்
பென்டகனின் உயர்மட்டத்தினரும் ஆகாயத் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கு
எதிராக குரல் கொடுத்துள்ளதுடன், இது ஈராக்கிய அரசாங்கத்திற்கு
எவ்வித அபாயத்தையும் கொடுக்கவில்லை எனவும், அமெரிக்க
விமானிகளை பாக்தாத் சுடுவதற்கான சந்தர்ப்பங்களை வழங்க
கூறுகின்றனர். இது புஷ் நிர்வாகத்திற்கு பாரதூரமான அரசியல்
விளைவுகளை ஏற்படுத்தும். 2000 தேர்தல் பிரசாரத்தின் போது
''குண்டூசியால் தாக்குவது'' என கூறி கிளின்டனை விமர்சித்த புஷ், தற்போது
அப்படியான முறைகளை கையாளவேண்டிய நிலையிலுள்ளார்.
கடந்தவாரம் இடம்பெற்ற செய்தியாளர்கள்
மாநாட்டில் Donald Rumsfeld அமெரிக்க
ஆகாயத் தாக்குதல்களை கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டியதற்கான
முக்கிய காரணம் தற்போது இடம்பெற்றுவரும் இஸ்ரேலியர்களுக்கும்
பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான மோதல்களாகும் என குறிப்பிட்டார்.
இஸ்ரேலியர்களின் குண்டுகளுக்கும், மோட்டார் செல்களுக்கும்,
ஏவுகணைகளுக்கும் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதும்,
அமெரிக்காவால் ஆதரிக்கப்படும் ஷரோனின் அரசாங்கத்தின் மூர்க்கத்தனத்திற்கு
எதிரான அரபு நாடுகளின் பரந்துபட்ட எதிர்ப்புக்கு மத்தியிலும்,
இதேயளவிலான ஈராக்கியர்களின் இறப்பு உருவாகிவிடுவதை தடுப்பதற்காக
அமெரிக்கா தனது நடவடிக்கைகளை கட்டுப்படுத்திக்கொள்ள
கடமைப்பட்டுள்ளது.
வாஷிங்டனின் கொள்கை மீதான, அமெரிக்க வெளிநாட்டு
கொள்கை வகுப்பாளர்களின் மத்தியிலுள்ள முக்கிய நெருக்கடியானது,
எவ்வகையிலும் மேலதிக இராணுவ மோதல்களுக்கான சாத்தியப்பாட்டை
குறைத்துவிடவில்லை. அமெரிக்காவின் ஈராக் மீதான கொள்கையின்
தன்மைக்கும், இஸ்ரேலியர்களின் பாலஸ்தீனயர்கள் தொடர்பான
கொள்கையின் தன்மைக்கும் இடையில் முக்கிய சமாந்திரத்தை
காணலாம். ''சுய பாதுகாப்பு'' என்ற பேரில் பாலஸ்தீனிய தலைவர்களை
கொலைசெய்ய இஸ்ரேலிய அரசாங்கம் குறிவைப்பதை போல்,
அமெரிக்காவும் ஈராக்கின் முக்கிய நிலையங்கள் மீதான ஆகாயத்தாக்குதல்
போன்ற மோசமான தாக்குதல்களை நடாத்தக்கூடும். சதாம்
குசேயினை கொல்லும் நோக்கத்துடனான இப்புதிய குண்டுவீச்சுக்களை
பூர்த்திசெய்வதில் முழு ஈராக்கிய மக்களும் தாக்குதலுக்குள்ளாகலாம்.
|