WSWS :செய்திகள் & ஆய்வுகள் :
ஆசியா
China reacts sharply against US proposal for Asia security forum
ஆசிய பாதுகாப்பு மன்றத்துக்கான அமெரிக்க
முன்மொழிவுக்கு எதிராக சீனா கடுமையான எதிர்ப்பு
By Peter Symonds
3 August 2001
Use
this version to print
அமெரிக்க அரசாங்க செயலாளர் கொலின்
பாவெல் (Colin Powell)
அண்மையில் ஆசியாவின் ஐந்து நாடுகளில் மேற்கொண்ட சுற்றுப்
பயணத்தை முடித்துக் கொண்டுள்ளார். அது சீனாவுடனான பதட்டங்களைத்
தணிப்பதற்கும் இந்த ஆண்டின் இறுதியில் ஜனாதிபதி புஷ்ஷால் மேற்கொள்ளவிருக்கும்
பெய்ஜிங் வருகைக்கான வழியை சுமுகமாக்குதற்கும் ஆன வழிமுறைகளாக
திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், இந்த பயணமானது ஜப்பான்,
ஆஸ்திரேலியா மற்றும் தென்கொரியாவுடன் நெருக்கமான அமெரிக்க
இராணுவ ஒத்துழைப்புக்களை இறுக்கமாக்கும் ஆத்திரமூட்டும்
திட்டத்தை திரை நீக்கிக் காட்டியது. இந்த நகர்வினை பெய்ஜிங்கை
இலக்காகக் கொண்ட நேட்டோ போன்ற கூட்டு என்று சீனா
உடனடியாக தாக்கியது.
பாவெலுடனும் அமெரிக்க பாதுகாப்புத்துறை
செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட் (Donald
Rumsfeld) உடனுமான ஆஸ்திரேலிய அமைச்சக
பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நான்கு- அரசுகள்
பாதுகாப்பு மன்றம் பற்றி கான்பெர்ரா (Canberra)
வில் அறிவிக்கப்பட்டது. அதற்கு வழக்கமான
ராஜதந்திர மறைப்பு போடப்பட்டிருக்கிறது --அது "தற்காலிகமானது"
மற்றும் "ஆரம்ப நிலையில் உள்ளது" என்று விவரிக்கப்பட்டது.
ஆனால் அதன் நோக்கம் தெளிவானது. பெய்ஜிங்கை நோக்கிய
அதனது வலுச்சண்டைக்கு முனைதலில் இருந்து பின்வாங்குவதற்கு
அப்பால், எதிர்காலத்தில் சீனாவுடனான எந்த மோதலுக்கும்
தயாரிக்கும் விதமாக, இப்பிராந்தியத்தில் உள்ள அதனது பிரதான
கூட்டாளிகளை இழுத்து நிறுத்தி திசை திருப்ப வாஷிங்டன் முயற்சித்துக்
கொண்டிருக்கிறது.
ஹார்வர்ட் பல்கலைக்கழக கல்விமான்
ரொபர்ட் பிளாக்வில் (Robert
Blackwill) கடந்த ஆண்டு அமெரிக்காவின்
ஆசிய கூட்டாளிகள் என்று தலைப்பிடப்பட்ட ஒரு ஆய்வில் இக்கருத்தை
வெள்ளோட்டம் விட்டார். பிளாக்வில் அது பற்றி எச்சரித்ததாவது:
"சீனாவும் தைவானும் ஒரு இராணுவ மோதலுக்கான பாதையில்
இடைப்பருவத்தில் இருக்கின்றனர்.... தலைநிலப் பகுதி தைவானுக்கு
எதிராக பலாத்காரத்தைப் பயன்படுத்தினால், தைவான் தன்னைப்
பாதுகாக்க அமெரிக்கா உதவுவது நிகழும். பேர்இடர் தரக்கூடிய
அச்சூழ்நிலைகளில் தனது கூட்டாளிகளான ஆஸ்திரேலியா, ஜப்பான்
மற்றும் தென்கொரியாவிடமிருந்து உறுதியான ஆதரவை அமெரிக்க
ஜனாதிபதி கேட்பார் என்பதில் சந்தேகம் எதுவும் இருக்கிறதா?"
என்றார்.
புஷ் அரசாங்கத்தின் பிரச்சினை என்னவென்றால்,
இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க கூட்டாளிகள் ஒரு பிணைப்பில்
இருக்கிறார்கள் என்பதுதான். ஆஸ்திரேலியா அமெரிக்காவுடனான
தனது பாரம்பர்ய மூலோபாய உறவுகளை பராமரித்துக் கொண்டிருக்கிற
அதேவேளையில், சீனா உட்பட வடகிழக்கு ஆசியாவுடன் கணிசமான
பொருளாதார உறவுகளை வைத்துள்ளது. அதனால் அது பெய்ஜிங்குடன்
ஒரு இணக்கமான ராஜதந்திர உறவுகளைப் பராமரிக்கவேண்டி
உள்ளது. ஜப்பானும் தென்கொரியாவும் சீனாவுடன் பிரதான வர்த்தக
மற்றும் முலீட்டுத் தொடர்புகளை வைத்துள்ளது மற்றும் எந்த
இராணுவ மோதலிலும் முன்னணியில் இருக்கக்கூடிய அவை பெய்ஜிங்கை
தனிமைப்படுத்துவதில் ஆர்வத்தைக் கொண்டிருக்கப்போவதில்லை.
இருப்பினும், வாஷிங்டன் அதன் கூட்டாளிகளை வழிக்குக்
கொண்டுவர தனது செல்வாக்கைப் பயன்படுத்தும் என்பதை
பிளாக்வில் தெளிவு படுத்தினார். சிட்னி மோர்னிங் ஹெரால்ட்
பத்திரிக்கையில் குறிப்பிட்டபடி, "ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பின்
மேம்படுத்தும் வடிவங்களைக் கட்டி எழுப்ப நான்கு கூட்டுக்களை
இப்பொழுது ஆரம்பிப்பது, நெருக்கடியின் மத்தியில் அவ்வாறு செய்வதற்கு
அவர்கள் நிர்பந்திக்கப்படுவது நிகழாதிருக்கும்படி செய்வதற்கான
விவேகமாகும்" என்று அவர் எண்ணினார். நான்கு நாடுகளின் கூட்டங்கள்
ஜப்பான் பெரும் பாதுகாப்பு பாத்திரத்தை ஆற்ற ஊக்குவிக்க
வேண்டும், "மோசமானதற்கு தயாரிப்பு செய்ய" மற்றும்
சீனாவுடன் "இணக்கமான" கொள்கைகளை மேற்கொள்ள
வடகொரியாவை ஈடுபட வைக்கும். முக்கியமாக, அமெரிக்க நிர்வாகம்
இந்தியாவுடன் நெருக்கமான மூலோபாய உறவுகளை ஏற்படுத்துதற்காக,
புஷ் நிர்வாகமானது பிளாக்வில் (Blackwill)
ஐ இந்தியாவிற்கான தூதராக அண்மையில்
நியமித்தது.
பயண முடிவில் இம் முன்மொழிவுகளின் திரைநீக்கிப்
பார்த்தலை பாவெல் விட்டுச் சென்றது எதிர்பாராத செயல்
அல்ல --அவர் பெய்ஜிங்கிற்கு வருகைதந்த பிறகு புஷ் நிர்வாகத்தின்
தேசிய ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டம் மற்றும் தைவானுக்கு
அமெரிக்க ஆயுத விற்பனை அதிகரிப்பு மீதான அச்சத்தை தணிக்க
வரும்பினார். சீன தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அவர்
பின்வருமாறு கூறினார்: "வாஷிங்டன் மோதும் நோக்கில் இல்லை"
என்றார் மற்றும் சீன பயணம் முழுவதிலும் "சீனாவை"
பகை நாடாகப் பார்க்கக்கூடிய தேவை இல்லை என்றார்.
கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரம் முழுவதும்,
அமெரிக்கா சீனாவை "மூலோபாய பங்காளியாக அல்ல
மூலோபாய போட்டியாளராக" செயல் தொடர்பு கொள்ளவேண்டும்
என்று திரும்பத் திரும்பக் கூறிய புஷ் அறிக்கையை அது மறைமுகமாக
வெளிப்படுத்துவதாக இருந்தது. நிர்வாகத்தில் உள்ள ஏனையோர்
கடும்போக்கை எடுத்துள்ளனர். எடுத்துக்காட்டாக ரம்ஸ்பெல்ட்
வலதுசாரி வாஷிங்டன் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்தபேட்டியில்,
பாவெல் பெய்ஜிங்கிற்கு வருகைதர இருந்த பொழுது, ஆசியாவிற்கான
நீண்டதூர இராணுவ ஆற்றல் மீது அதிகமாய் குவிமையப்படுத்துதற்கு
அழைப்பு விடுத்தார். சீனாவுடன் எவ்வாறு செயல்தொடர்பு
கொள்வது என்பதற்கான பதிலாக, அவர் "ஆத்திரமூட்டல்தான்
பலவீனம் என்பதை நான் எப்பொழுதும் அறிவேன், அது மற்றவகைகளில்
செய்வதற்கு எண்ணிப்பார்க்கத் துணியாத நபர்களை அவ்வாறு செய்வதற்கு
வரவேற்கும்" என்றார்.
புஷ் நிர்வாகத்தினுள் உள்ள பிரிவுகளானது, ஆளும் வட்டங்கள்
மொத்தமாகவும் அதனுள்ளே உள்ள வேறுபாடுகளை எதிரொலிக்கின்றன.
சீனாவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்களுக்கு
அல்லது இந்தப் பிராந்தியத்தில் பலமான அமெரிக்க
மூலோபாய நிலையை நியாயப்படுத்துதற்கான முன்னுரையாக அதனைப்
பயன்படுத்த விரும்புபவர்களுக்கு எதிராக, பெரிய அமெரிக்க கம்பெனிகள்
சில சீனாவில் ஆதாயம் அளிக்கும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு
வாய்ப்புக்களை இட்டு கவலை அடைந்திருக்கின்றன..
பாவெலின் மிக மிதமான அணுகுமுறையின் மட்டுப்பாடுகள்
ஆஸ்திரேலியாவில் உடனே தெளிவானது. ஹெளவார்ட் அரசாங்கத்திடமிருந்து
வந்த நான்கு நாடுகள் பாதுகாப்பு கலந்துரையாடல்களுக்கான
முன்மொழிவு வெளிவேஷம், இத்திட்டம் தோல்வியைத் தழுவினால்,
கான்பெர்ரா முழுப்பொறுப்பையும் சுமக்குமாப்போல் விட்டுச்சென்றது.
இருப்பினும், முக்கியமாக செய்தி சாதனங்களுக்கு விவரங்களை
கசியச்செய்தவர் பாவெல் ஆவார். ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கையில்
அவர் குறிப்பிட்டார்: "(நான்கு நாடுகளுக்கு) அத்தகைய
பொது நலன்கள் இருப்பதால், அதனை அகழ்ந்தெடுத்தல் புதிசாலித்தனமானதாக
இருக்கும் (என்று நாங்கள் நினைக்கிறோம்) என்றார்.
இத்திட்டத்தின் சிற்பி என்று கூறப்படுகிற, ஆஸ்திரேலிய
வெளிவிவகார அமைச்சர் அலெக்சாண்டர் டெளனர் (Alexander
Downer), தடுமாறும்படி விடப்பட்டார்.
சீனாவை அந்நியப்படுத்துதற்கான உள்ளுறையை உணர்ந்த அவர்,
முன்மொழிவானது "சீனாவைக் கட்டுப்படுத்தும் பரந்த
மூலோபாயமாக இருக்கக்கூடிய ஏற்பாடு அல்லது
அதுபோன்ற எதுவும்" அல்ல என்று வலியுறுத்தினார். இன்னும்
சொல்லப்போனால் பாதுகாப்பாக அவர் மேலும் குறிப்பிட்டார்:
"அது முடிவில், பெருமளவில் பிராந்திய திண்டாட்டத்தை விளைவிக்கப்
போகிறது என்றால், அதைச் செய்வதில் பலனில்லை."
அறிவிப்பைச் செய்வதற்கு உரிய இடமாக பாவெல்
கான்பெர்ராவைத் தேர்ந்தெடுத்தது சாதாரணமாய் அது அவரின்
பயணமுடிவில் வந்நததால் அல்ல. பிரதம மந்திரி ஜோன்
ஹெளவார்டின் அரசாங்கம் புஷ் நிர்வாகத்தின் வலுச்சண்டைக்கு
இழுக்கும் மற்றும் ஒருதலைப்பட்சமான நிலைக்கு மிகவும் இணங்கத்தக்க
ஒன்று என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அமைச்சரவைக் கூட்டத்தில்
ஆஸ்திரேலிய அமைச்சர்கள், புதிய உயிரி ஆயுதங்கள் (Biological
weapons) பற்றிய உடன்பாட்டில் அமெரிக்கா
கையெழுத்திடாதது பற்றி பவ்யமாக கடிந்து கொண்டனர், ஆனால்
உடனேயே, ஏனைய எல்லா விஷயத்திலும் உண்மையில் அமெரிக்காவின்
அந்த நிலைக்கே விழுந்தனர். இறுதி அறிவிப்பில், ஆஸ்திரேலிய அரசாங்கம்
தேசிய ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தினைக் கட்டி அமைக்கும்
வாஷிங்டன் பற்றிய "அதன் புரிதலை" கடமையுடன் வெளிப்படுத்தியது.
பெய்ஜிங் இந்த முன்மொழிவுக்கு உடனடியாய் கடுமையான
எதிர்ப்பை வெளிப்படுத்தியது. பீப்பிள்ஸ் டெய்லி பத்திரிகையில் உள்ள
குறிப்பு ஒன்று, அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் சீனாவை வளைப்பதில்
ஈடுபட்டுள்ளன என்று குற்றம் சாட்டியதுடன் ஆஸ்திரேலியா
"அமெரிக்காவின் தாளத்துக்கு ஆடுகிறது" என்று குறிப்பிட்டது.
அது ஆஸ்திரேலியா "அதன் கூட்டைப் பற்றி அதிகம் சிந்திக்கட்டும்"
என்று வேண்டிக்கொண்டது. அடுத்து காங்ழூ டெய்லி (Ghangzhou
Daily) எனும் பத்திரிகையில் இடம்
பெற்றகட்டுரை குறிப்பிட்டதாவது: "இந்தப் பிராந்தியத்தில்
அமெரிக்க நலன்களைக் காப்பதற்கு வாஷிங்டன் சிறிய ஆசிய பசிபிக்
நேட்டோவைக் கட்டி எழுப்ப விரும்புகிறது. "அது ஆஸ்திரேலியாவை
வாஷிங்டனின் மக்கியான்ஜூ (Washington's
maqianzu) என்றது-- குதிரையில்
அமர்ந்துள்ள படைத்தலைவரைக் காப்பாற்றும் பொறுப்புடைய
பாராம்பரிய காலாட்படை வீரர் என்றது.
சீனாவுடனான உறவுகளைப் பாதிக்கும் உள்ளுறையை
நினைவிற் கொண்டு, ஆஸ்திரேலிய ஆளும் வட்டத்திற்குள் அதன் பதிலானது,
எச்சரிக்கை கொண்டுள்ளதுடன் பிளவுபட்டும் உள்ளது. முன்னாள்
சீனாவிற்கான தூதராக இருந்த ரோஸ் கார்னட் (Ross
Garnaut) இத்திட்டத்தை "உண்மையிலேயே
ஒரு மோசமானகருத்து" என்றார். "ANJUS
க்கு (அமெரிக்காவுடன் வழக்கில் இருக்கும் இராணுவக் கூட்டுக்கு)
என்ன மதிப்பை இது கூட்டப்போகிறது என்பது அரிதாகக் காணக்கூடியதாக
இருக்கிறது.... மேலும் இது ஆட்களைக் கூட்டுகிறது, சிக்கல்
வாய்ந்த களமாக ஆகிறது" என்று அவர் எச்சரித்தார்.
"இதனால் நிச்சயமாய் ஏற்படப் போகிற ஒரேவிளைவு, சீனாவின்
பாதுகாப்புச் செலவில் அதிகரிப்பும் சீன அரசியலில் இராணுவ சக்திகளைப்
பலப்படுத்துவதும் ஆக மட்டுமே இருக்கும்" என்றார் அவர்.
டோக்கியோவிலும் சியோலிலும் இதற்கான பதில்
ஆர்வமுடையதாக இல்லாததுபோல் இருந்தது. ஜப்பானின் வெளிவிகார
அமைச்சகப் பேச்சாளர் அக்கியோ மியாஜிமா
(Akio Miyajima), ஜப்பான் "பேச்சுவார்த்தையை
அதிகப்படுத்துவது பற்றி சாதகமாக" இருந்தது என்பதை சுட்டிக்
காட்டினார். பிறகு அவர் தொடர்ந்தார்: "இந்த நிலைமிக
ஆரம்ப நிலையில் இருக்கிறது என்று, நாங்கள் நம்புகிறோம்;
இன்னும் ஒன்றும் விவாதிக்கப்படவில்லை மற்றும் முடிவு செய்யப்படவும்
இல்லை."
ஆஸ்திரேலியன் பைனான்சியல் ரிவீவ் பத்திரிகையிடம்
தென்கொரிய பாதுகாப்பு பற்றிய ஆய்வாளர் ஒருவர், ஆஸ்திரேலியா-அமெரிக்க
பேச்சுக்கள் குறிப்பாகச் சுட்டும் முழு விவரமும் தெளிவற்றதாக
இருந்தன என்று குறிப்பிட்டார். "சீனா மீதான விளைவு பற்றி
கொரியா மிகவும் கவலைப்படுகிறது மற்றும் சீனாவைக் கட்டுப்படுத்துதற்கான
அல்லது அந்நியமாக்குதற்கான இந்தவேலை, கொரியாவின்
சொந்த சூழலை சீர்குலைக்கக்கூடும் என்ற சந்தேகத்துடனும்
கவலை கொண்டுள்ளது" என்றார்.
இருப்பினும், ஜப்பான், தென்கொரியா மற்றும்
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள தயக்கங்கள் வாஷிங்டன் குறுகிய தீர்ப்புத்
தண்டனை இடையீடு பெற்றதுபோல் இருக்கிறது. தேசிய ஏவுகணை
பாதுகாப்பு திட்டம் முதல் உயிரி ஆயுதங்கள் உடன்பாடு வரையிலான
ஏனைய விஷயங்களில், புஷ் நிர்வாகமானது தனது நெருங்கிய கூட்டாளிகளையும்
கூட பொருட்படுத்தாமல் அல்லது சீர்குலைக்கும் அதன்
விளைவுகளைப் பற்றிக் கூடப் பொருட்படுத்தாமல், அவற்றைத்
தள்ளி விட்டு முன் எடுத்துச்செல்ல ஆர்வம் கொண்டுள்ளது
என்பதைக் காட்டி வருகின்றது.
|