World Socialist Web Site www.wsws.org |
WSWS: செய்திகள் & ஆய்வுகள் : தொழிலாளர் போராட்டம்Workers Struggles: Asia, Australia and the Pacific தொழிலாளர் போராட்டங்கள்: ஆசியா, அவுஸ்திரேலியா, பசுபிக் உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களையும் வாசகர்களையும் இந்த தொடர்ச்சியான வெளியீட்டுக்கு மின் அஞ்சல் மூலம் பங்களிப்புச் செய்யுமாறு வேண்டுகிறது: editor@wsws.org 10 February 2001ஆசியா அசேஹ் சாரதிகள் சட்ட விரோத வரி விதிப்புக்கு எதிராக வேலை நிறுத்தம்இந்தோனேசிய அசேஹ் மாகாணத்தில் உள்ள அரச எண்ணெய் கம்பனியான பெட்டாமினா கம்பனியின் தொழிலாளர்களும் ட்ரக்சாரதிகளும், இராணுவமும் பொலிசும் அமுல்படுத்தியுள்ள சட்டவிரோத வரி அறவிடல்களுக்கு எதிராக பெப்பிரவரி 5ம் திகதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தம் எரிபொருள் பற்றாக்குறைக்கும் உணவு மற்றும் பொருட்களின் விநியோகத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மேற்கு ஆசேஹ் அரச மின்சாரக் கம்பெனியான பீ.எல்.என். (PLN) பெரும்பாலான பிரதேசங்களில் சுழற்சி முறையிலான மின்சார வெட்டை அமுல்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. இதுபற்றி ட்ரக் சாரதி ஒருவர் பின்வருமாறு குறிப்பிட்டார்: "கிட்டத்தட்ட 10-15 தடை முகாம்கள் (இராணுவ, பொலிஸ்) இருக்கும். சாரதிகள் ஒவ்வொரு தடை முகாமிலும் பணம் செலுத்த வேண்டும். சில இடங்களில் 20,000 ரூபையா கொடுக்க வேண்டியிருந்தாலும் பாரமான பொருட்களைக் கொண்ட அல்லது மரக்குற்றிகளைக் கொண்ட ட்ரக் ஒன்றுக்கு 200,000 ரூபையாக்கள்வரை செலுத்த வேண்டும்." மற்றுமொரு சாரதி குறிப்பிட்டதாவது: எமது பிரச்சினைகளைப் பற்றி ட்ரக் உரிமையாளர்கள் கவனிப்பதில்லை. அநேகமாக இந்த வரிகளை நாமே செலுத்த வேண்டியுள்ளதுடன் சில வேளைகளில் பணம் செலுத்த மறுக்குமிடத்து உத்தியோகத்தரிடமிருந்து அடி உதை கிடைத்தாலும் சொல்ல முடியாது. முதலில் பொலிசார் இதனை -அதாவது வரி சேகரிப்பை மறுத்தாலும் சுதந்திர அசேஹ் இயக்க பிரிவினையாளரால் வேலைநிறுத்தம் தொடரப்பட்ட நிலையில், ஒரு உயர் பொலிஸ் அதிகாரி சாரதிகளின் கோரிக்கை உண்மையானதென்றும் இது குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பதிலளித்துள்ளார். ட்ரக் சாரதிகள், அசேஹ் பொலிஸ் பிரிகேடியர் ஜெனரல் சாவுலிரசீட்டிடமிருந்து சட்டவிரோத வரிகளை இனம் கண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறும் கடிதமொன்றை பெற்றுத் தருமாறு கோரியுள்ளனர். தாய்லாந்தில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்திச் சேவையாளர் பழிவாங்கப்பட்டனர்.பெப்பிரவரி 7ம் திகதி தாய்வான் தேசிய ஒளிபரப்பு நிலையமான ஐ.டி.வி. சில நிர்வாகிகள், கம்பெனியின் தொழில் நிலைமை வெட்டு, மற்றும் செய்தி அறிவிப்புகளிலும் தலையிடுவதற்கு எதிராக பிரச்சாரம் செய்ததால் 23 செய்திச் சேவையாளர்களை வேலையிலிருந்து நீக்கியது. கடந்த ஆண்டின் இறுதியில் நிலையங்கள் வேலை நேரத்தை கிழமைக்கு 5 நாள் என்பதில் இருந்து 6 நாட்களாக அதிகரித்ததோடு நிர்வாகம் தனது தற்துணிவுக்கு அமைய தொழிலாளர்களை நெறிப்படுத்துவதற்கு தடையாக இருந்த ஐவர் மட்ட நெறிமுறை திட்டத்தையும் ஒழித்துக் கட்டியது. வேலை நீக்கப்பட்ட தொழிலாளர்கள் கிளர்ச்சி செய்தனர். பொதுஜனங்களும் தொழிலாளர் குழுக்களும் ஐ.டி.வி.யைப் பகிஷ்கரிக்குமாறு பகிரங்கமாகக் கோரினர். தமது பெருமைக்கு பங்கம் விளைவித்ததன் அடிப்படையில் நிலைய நிர்வாகத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் வழக்குத் தொடரவும் தொழிலாளர்கள் தீர்மானித்துள்ளனர். எனினும் தாய்லாந்து சட்டப்படி இந்த வேலை நீக்கங்களை தக்கவைக்கும் முகமாக கம்பனி தனது ஊழியர்கள் "நிறுவனத்துக்கு தீங்கு விளைவித்துள்ளார்கள்" என்று காட்டினால் மட்டும் போதுமானதாகும். தாய்லாந்தில் வேலை நீக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் தமது போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர்.தாய்லாந்து மற்றும் பத்தும் தானியிலுள்ள (Pathum Thani) இரு வங்குரோத்தடைந்த ஆடைத் தொழிற்சாலையில் வேலை நீக்கப்பட்ட தொழிலாளர்கள் நான்கு மாதமாக தொடர்ந்த போராட்டப் பிரச்சாரத்தை நட்டஈடு கொடுப்பனவு வழங்குவதாக அளித்த வாக்குறுதியை ஏற்று வேலைநிறுத்தத்துக்கு முடிவுக்கு கொண்டுவந்தனர். தாய் இரியோ பப்ளிக் கம்பனி, தாய் இரியோ காமன்ட் பக்டரி என்பவற்றை சேர்ந்த 1230 தொழிலாளர்கள் அக்டோபர் 5ம் திகதி நிதி நெருக்கடியினால் கம்பனிகள் மூடப்பட்டதையடுத்து வேலை இழந்துள்ளனர். அன்று முதல் சம்பளம் மற்றும் ஏனைய உரிமைகளையும் கோரி தொழிற்சாலைக்கு வெளியில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டிசம்பரில் தனியபரி தொழில் நீதிமன்றம், தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய 40.3 மில்லியன் பகுதியை 15 வீத வட்டியுடன் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் சட்ட நிர்வாகத் திணைக்களம் இந்த இரு கம்பனிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து, அதனை விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இலங்கையின் சவர்க்கார தொழிற்சாலை தொழிலாளர் இடைநிறுத்தப்பட்டதை எதிர்த்து போராட்டம்கொழும்பில் உள்ள சவர்க்கார தொழிற்சாலையான வொன்டலைட் (Wonderlight) நுகர்வோர் உற்பத்தி தொழிற்சாலையின் ஊழியர்கள் பெப்பிரவரி 6ம் திகதி வேலை நீக்கம் செய்யப்பட்ட 15 ஊழியர்களை மீள வேலைக்கு சேர்க்குமாறு கோரி பத்தரமுல்லையில் பராளுமன்றத்துக்கு வெளியே ஊர்வலம் சென்றனர். தொழிலாளர்கள் தொழிற்சங்கக் கிளை ஒன்றை தொழிற்சாலையினுள் ஆரம்பித்ததைத் தொடர்ந்து கம்பனி நிர்வாகம் 15 அமையத் தொழிலாளர்களை வேலை இடைநிறுத்தம் செய்துள்ளது. இந்திய சுரங்கத்தில் மாட்டிக் கொண்ட தொழிலாளர்களை மீட்கும் நம்பிக்கையில்லைகிழக்கு இந்திய நகரமான டன்பாட்டில் (Dhanbad) உள்ள அரசுடமை பாரத் நிலக்கரி சுரங்கத்தின் அடியில் பெப்பிரவரி 2ம் திகதி மூழ்கிப் போன 19 தொழிலாளர்களை மீட்கும் பணி இன்னமும் தொடர்கின்றது. ஏறத்தாள 100 பேர்வரை இச்சம்பவத்தில் சுரங்கத்தினுள் சிக்குண்டனர். கடந்த வியாழனன்று சலிம் அன்சாரி என்பவர் சுரங்க வழிகளில் அடைபட்டிருந்த நீர் வெளியேற்றப்பட்ட பின் உயிருடன் மீட்கப்பட்டார். சுயநினைவு திரும்பிய அவர் சிறிது காற்றோட்ட வழியும் சிறிது நீரும் தனக்கு கிட்டியதால் உயிர் பிழைத்ததாக தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அதே சமயம் இன்னுமோர் சுரங்கத் தொழிலாளியின் உடலும் மீட்கப்பட்டுள்ளது. உயிருடன் இருப்பதாக நம்பப்படுபவர்களுடன் கடற்படையினரும் சுழியோடிகளும் தொடர்புகொள்ள முடியாதிருப்பதால் வேறு எவரையும் தேடிக் காப்பாற்றும் வாய்ப்பு அருகியுள்ளதாக கருதப்படுகின்றது. சிக்குண்ட சுரங்கத் தொழிலாளர்களின் உறவினர்கள் மீட்புப்பணியின் அசமந்தப் போக்கையிட்டு குற்றம் சாட்டியுள்ளார்கள். இந்திய ஓட்டுத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்மங்களூரில் உள்ள தக்ஷின கன்னட, உடுப்பி, உத்தர கன்னட ஆகிய ஓட்டு உற்பத்தி கம்பனிகளின் தொழிலாளர்கள் வரையறுக்கப்பட்ட குறைந்த பட்ச சம்பளத்தை வழங்குமாறு கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர். மூன்று வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த 39 தொழிற்சாலைகளின் 6000 தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மிகவும் அசுத்தமும் உஷ்ணமும், காற்றோட்டம் இல்லாததுமான கீழ்மட்ட வேலைகளில் ஈடுபடுகின்றார்கள். இந்திய தொழிலாளர்கள் வேலை கோரி போராட்டம்பெப்பிரவரி 7ம் திகதி சண்டிகாருக்கு அண்மையிலுள்ள பரிட்கொட்டில் (Faridkot), இந்திய உணவுக் கூட்டுத்தாபன ஊழியர்கள் 100 பேரும் அவர்களது குடும்பங்களும் துணை முகாமையாளர் அலுவலகத்தின் முன்னால் கூடி வேலை கோரிப் போராடினர். கம்பனி குறைந்த உழைப்புப் படையைக் கொண்டு உற்பத்தி செய்வதால் 8 மாதங்களாக இவர்கள் வேலையிழந்துள்ளனர். சுமார் 80 குடும்பங்கள் பட்டினி கிடப்பதாக ஒரு தொழிற்சங்கவாதி குறிப்பிட்டார். எட்டு மாதங்களாக தமது சுயவிருப்பின் பேரில் சேவைக்கு வராமல் இருந்ததாக கூறும் உறுதிப்பத்திரத்தில் கையெழுத்திடுமாறு நிர்வாகம் வற்புறுத்துவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றார்கள். நீண்ட எதிர்ப்பு போராட்டங்கள், கோரிக்கைகளின் மத்தியிலும் கூட, அரசாங்க அதிகாரிகள் இவர்கள் சார்பில் இன்னமும் தலையிடவில்லை. அவுஸ்திரேலியா, பசுபிக் அவுஸ்திரேலியா உருக்குத் தொழிலாளர்கள் மீண்டும் வேலை நிறுத்தம்தெற்கு சிட்னியின் பி.எச்.பி. போட் கெம்பிளா தொழிற்சாலையின் 2500 க்கு மேற்பட்ட ஊழியர்கள் பெப்பிரவரி 5ம் திகதி கூடி உருக்கு பராமரிப்பு, உட்புற நடவடிக்கைள் போன்றவற்றை கொந்தராத்துக்கு விடும் கம்பனியின் திட்டங்களுக்கு எதிராக பரந்த கைத்தொழில் பிரச்சாரத்தை உக்கிரமாக்க வாக்களித்தனர். கம்பனியின் திட்டத்தால் 900 பேரின் தொழில் பாதிப்பு ஏற்படலாம். 24 மணித்தியால வேலை நிறுத்தம் செய்யவும் தொடர்ந்து இடைக்கிடையே வேலைநிறுத்தத்தில் ஈடுபடவும் உருக்கு தொழிற்சங்க பிரதிநிதிகள் முன்வைத்த பிரேரணையை இக் கூட்டம் அங்கீகரித்தது. தொழிற்சங்கம் சகல தேசிய உருக்குத் தொழிலாளர் பிரதிநிதிகள் கூட்டமொன்றை கூட்டி இவ்விடயம் தொடர்பாக ஆலோசிக்க வேண்டுமெனவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். கடந்த மாதம் பராமரிப்பு தொழிலாளர்களது 48 மணித்தியால வேலை நிறுத்தத்தை தொடர்ந்து, திங்கட்கிழமையும் வேலைநிறுத்தம் இடம்பெற்றது. உருக்குத் தொழிற்சாலை நடவடிக்கைகளை சிறிது சிறிதாக அலட்சியப்படுத்தி குறைத்து, பின்னர் அந்த சொத்துக்களை முழுமையாக தமது கனிப்பொருள் பெற்றோலிய வள நலன்களுக்கு உபயோகப்படுத்துவதே பி.எச்.பி.இன் நிலைப்பாடாகும். இந்த வாரம் கம்பனியின் நிதியாண்டில் அரையாண்டுக்கான இலாப பதிவு அறிக்கையை வெளியிட்டது. அதன் முழு இலாபம் 1.43 பில்லியன் டாலர்களாக விளங்குகையில்- அதாவது கடந்தாண்டிலும் பார்க்க 17.9 சதவீத அதிகரிப்பை காட்டும் அதே வேளை- உருக்கு பிரிவின் பங்களிப்புகள் 12 மில்லியன் டாலர்களாக (4.5 %) வீழ்ச்சியுற்று 252 மில்லியன் டாலர்களாகவே விளங்குகின்றன. வேலை இழப்புக்கு எதிராக வென்ட் வேர்த் (Wentworth) ஹோட்டல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்சிட்னி வென்ட் வேர்த் ஹோட்டல் ஊழியர்கள் 20 பேரை வேலைநீக்கம் செய்ததை ஆட்சேபித்து வீட்டு பராமரிப்பு, சமையலறை கையாட்கள், மற்றும் களஞ்சியம் பகுதிகளைச் சேர்ந்த ஊழியர்கள் பெப்பிரவரி 6ம் திகதி 24 மணித்தியால வேலைநிறுத்தம் செய்தனர். இந்த ஹோட்டல் உரிமையாளர் பகுதியான ஏ.எக்ஸ்.ஏ. வினர் இந்த ஹோட்டலை சிட்டி பிரி ஹோல்ட்ஸ்சுக்கு 108 மில்லியன் டாலர்களுக்கு விற்கத் தீர்மானித்ததை அடுத்தே இந்த வேலை வெட்டுக்கள் இடம்பெற்றுள்ளன. விற்பனை இடம்பெற முன்னர் புதிய சொந்தக்காரர் ஊழியர் குறைப்பு பற்றி கோருவது ஓர் சகஜமான விடயமாகிவிட்டது எனக் கைத்தொழில் பேச்சாளர் தெரிவித்தார். அவுஸ்திரேலிய ஹோட்டல் கூட்டமைப்பு, ஹோட்டலில் உள்ள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது வென்ட் வேர்த் தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். ஹோட்டலில் வெளிநாட்டவர்கள் நிறைந்து வழிந்த சமயத்தில் 431 அறைகளையும் சுத்தப்படுத்துவதில் நிர்வாக அதிகாரிகளே ஈடுபடத் தள்ளப்பட்டனர். கோல்ட் கோஸ்ட்டில் (Gold Coast) காசினோ (Casino) தொழிலாளர்கள் வேலை நீக்கம்குயின்ஸ்லாந்து கோல்ட் கோஸ்டில் ஜுபிட்டர் (Jupiter ) காசினோ நிர்வாகம், ஊழியர்கள் சம்பள உயர்வு பிரச்சாரத்தின் ஓர் அம்சமாக தொழிற்சங்கச் சின்னங்களை அணிந்து சேவைக்கு சமூகமளித்திருந்ததன் காரணத்தால் அவர்களை வெளியில் தள்ளி, மூடுவிழா நடாத்தியது. பெப்பிரவரி 2ம் திகதி இரவு நேர சேவைக்கு வந்த 100 ஊழியர்களும் மறுநாள் பகல் சேவைக்கு வந்த 80 ஊழியர்களும் வேலை செய்ய முடியாது தடுக்கப்பட்டனர். ஜூபீட்டர்சில் 500க்கு மேற்பட்ட ஊழியர்கள் ஏனைய காசினோ ஊழியர்களுக்கு சமமான சம்பள உயர்வைக் கோரி நிற்கின்றனர். ஒரு மணித்தியாலத்துக்கான ஊதியம் ஸ்டார் காசினோவில் 16.54 ஆகவும் றிசுவரி காசினோவில் (Treasury Casino) 16.95 ஆகவும் விளங்குகையில் இங்கு 13.04 ஆக மட்டுமே விளங்குகிறது. ஜூபிட்டர்ஸ் அமெரிக்கா, கனடா, தென் அமெரிக்கா, தென் ஆபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் பார்க் பிளேஸ் என்டர்டைன்மன்ட் கோப்பரேஷனின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் 20 கம்பனிகளுக்கு உரிமையாளராவார். பாதுகாப்பு காவலர்கள் சம்பள வெட்டுக்கு எதிராக ஊர்வலம்ஜனவரி 30ம் திகதி மேற்கு அவுஸ்திரேலிய பிரதமர் ரிச்சாட் கோட், லிபரல்- தேசிய கூட்டின் கல்விக் கொள்கை பற்றிய தேர்தல் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது, பாதுகாப்பு காவலர்களது காத்திரமான ஊர்வலம் ஒன்றை சந்தித்தார். அரச பாடசாலைகளை ரோந்து காவல் செய்து வருவதற்காக நியமிக்கப்பட்ட 35 பாதுகாப்பு காவலர்கள் அரசாங்கத்தின் திட்டமொன்றுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ததன் பெறுபேறே இந்த சம்பள வெட்டாகும். அரசாங்க பாடசாலைகளுக்கான பாதுகாப்பு காவல்சேவையை தனியார் மயமாக்கப்பட்டதுடன் அரசாங்கம் இதற்கான டென்டர்களைக் கோரியுள்ளது. பிரஸ்டில் புரொடெக்டிங் சேவிஸ் எனும் புதிய கம்பனி ஒன்றுக்கு கல்வித் திணைக்களம் கொந்தராத்தை வழங்கியுள்ளது. இக்கம்பனி திங்கள் முதல் வெள்ளிவரையிலான ஒரு வார காலத்துக்கு மணித்தியாலத்துக்கு 12 டாலர்களை மட்டும் சேவை மணித்தியாலங்களை மனங்கொள்ளாது வழங்குவதாக தெரிவித்தது. காவலர்கள் தண்டப் பணத்தையும் கொடுப்பனவாக பெறுவதில்லை. இந்த நடவடிக்கை கையில் கிடைக்கும் பணத்தில் 250 டாலர்களைக் கொண்ட இரண்டு வாரத்துக்கான சம்பள வெட்டாக விளங்கும். சம்பள வெட்டை ஏற்றுக்கொண்டதாக ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும், அல்லது வேலை வெட்டுக்குமுகம் கொடுக்க வேண்டும் என பிரஸ்டிஜ்சால் இந்த வாரம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்க டிக்கட் ஊழியர்கள் கம்பனி கையளிப்புக்கு எதிர்ப்புஅவுஸ்திரேலிய அரச டிக்கட் கம்பனியான பீ.ஓ.சி.எஸ் கம்பனியின் தொழிலாளர்கள் பெப்பிரவரி 6ம் திகதி கம்பனி கையளிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். கம்பனி விற்கப்படுமானால் 50 தொழிலாளர்களுக்கு வேலை பறிபோகும். பேர்த் சென்டர் ஹோல், பர்ஸ்வுட், ரீகல் மற்றும் பிலேஹவுஸ் தியேட்டர்களிலும், விளையாட்டு வீரர்களுக்கு பதிவு கொடுத்தல், ஒபெரா, இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள், அதே போல் திரைப்பட விழாக்களிலும் மற்றும் பெரும் விளையாட்டு நிகழ்வுகளிலும் அழைப்பு நிலையங்களில் பீ.ஓ.சி.எஸ். ஊழியர்கள் சேவை செய்கின்றார்கள். பேர்த் கொன்சர்ட் ஹாலி நிலையத்தின் இஸ்லா சுவாட்டன் குறிப்பிட்டதாவது: "நாம் எமது தொழிலைப் பேண விரும்புவதுடன் மேற்கு அவுஸ்திரேலிய கலை கலாச்சாரங்களுக்கு பொதுஜனமே பெரும் சொத்தாக உள்ளனர் எனும் எண்ணத்தை பேணவும் போராடுகின்றோம்" என்றார்.
Copyright
1998-2000 |