World Socialist Web Site www.wsws.org |
WSWS :செய்திகள் & ஆய்வுகள்:ஆசியா:இந்தியா Indian government hands down a budget to please big business இந்திய அரசாங்கம் பெரு வர்த்தகர்களை மகிழ்ச்சிப்படுத்த வரவு-செலவு திட்டத்தை கொடுத்துள்ளது By Deepal Jayasekera இந்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா (Yashwant Sinha) தொடரான பொருளாதார "சீர்திருத்தங்களை" க் கொண்ட வரவு-செலவு திட்டத்தை பிப்ரவரி 28 அன்று தாக்குதல் செய்துள்ளார். அது முக்கியமாக நாடு முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான மக்கள் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடியை உக்கிரப்படுத்தும். வரவு-செலவுத் திட்டம் பொது செலவீனங்களை வெட்டும், விவசாய உதவிக் கொடைகளை வெட்டும், மேலும் தனியார் மயமாக்கலை அமல்படுத்தும் மற்றும் புதிய சுற்று ஆட்கள் வெளியேற்றப்படுவதற்கு வழிவகுக்கும். அது இந்திய தொழிற்சட்டங்களுக்கு மாற்றங்களை அறிமுகப்படுத்தும் அதேசமயம், அது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தொடரான புதிய நிதி ஊக்கத்தொகைகளை வழங்கும். இந்தியாவுக்கு வெளியிலும் உள்ளும் இருக்கின்ற பெரும் வர்த்தகர்கள் மற்றும் நிதி விமர்சகர்கள் இவ் வரவு- செலவு திட்டத்தை வரவேற்கின்றனர். பாரதீய ஜனதாக் கட்சி தலைமை வகிக்கும் அரசாங்கம் சர்வதேச நிதிமூலதனத்தால் கோரப்படும் "கடும்" நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருக்கிறது என்பதற்கான அடையாளமாக வரவேற்கின்றனர். இதன் எதிரொலியாக மும்பாய் பங்குச்சந்தை 4069 புள்ளியிலிருந்து 4247 புள்ளிகளுக்கு 4 சதவீதமாக உயர்ந்தது. இந்திய டெலிகிராப் பத்திரிகை பின்வருமாறு குறிப்பிட்டது: "அவரது நாலாவது வரவு-செலவு திட்டத்தில், எதிர்பார்த்திராத அளவுக்கு சீர்திருத்தக்காரரின் பாத்திரத்தை ஆற்றியுள்ளார். தடுமாறும் பொருளாதாரத்தைச் சுற்றி தூண்டல்களைக் கட்டவிழ்த்துவிட்டு, வரிசெலுத்துவோரை மேலும் வரி செலுத்தவிடாமல், அவரது முந்தைய நிதி அமைச்சரையும் பார்க்க நிதிக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து எல்லாவற்றிலும் சிறப்பாக இவை எல்லாவற்றையும் செய்துள்ளார்." "வர்த்தகர்கள் 10க்கு10 கொடுக்க விரும்புவர், ஆனால் கருமிகள் அவற்றில் சிறந்ததாக 9/10 கொடுப்பர். எல்லாவகையில் கணக்கில் எடுத்துப் பார்த்தாலும் வரவு-செலவு திட்டம் பாதகமான அம்சங்களைக் கொண்டிருக்கவில்லை" என்றார் தொழில் அதிபர் குமாரமங்கலம் பிர்லா. "இரண்டு புனிதமான பசுக்கள் இரத்தம் சிந்துதற்கு -அரசாங்கத்தின் அளவு மற்றும் தொழிலாளர் சட்டங்கள்" உறுதி கொடுத்ததற்காக மேலும் அக் கட்டுரை புகழ்ந்து தள்ளியது. இந்திய தொழிற் கூட்டமைப்பின் தலைவர் (Confederation of Indian Industries) தலைவர் அருண் பாரத்ராம், "பல பல ஆண்டுகள் காத்துக் கிடந்த பின்னர் புதிய திசை" எடுத்ததற்காக நிதி அமைச்சரைப் புகழ்ந்தார். வரவு-செலவு திட்டம் பற்றாக்குறையைக் குறைத்து வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றார். மற்றவர்கள் இன்னும் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். அமெரிக்க-இந்திய வர்த்தக சபை வரவு-செலவு திட்டத்தின் திக்கு சரியானது. ஆனால் தொழிற் துறையை போட்டித்திறன் உள்ளதாகச் செய்ய பொருளாதாரத்தைத் தட்டி எழுப்ப போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று புகார் செய்தது. பிரிட்டிஷ் எக்கனாமிஸ்ட் இதழின் தலையங்கம் குறிப்பிட்டது: "இதுவரைக்கும் இந்திய அரசாங்கத்தால் பொருளாதார சீர்திருத்தத்துக்கு உதட்டளவில் செய்யப்பட்ட சேவை இப்போது நிஜமாய் ஒலிக்கத் தொடங்கி உள்ளது...... மிக உற்சாகமூட்டுவது யாதெனில் காப்பாற்றுகிறோம் என்ற பிரமையின் கீழ் சிறிய வர்த்தகர்களை முடமாக்குதல் மற்றும் வேலை வாய்ப்பை மட்டுப்படுத்தல் போன்ற இந்தியாவின் மிகவும் முண்டு முடிச்சுக்களான கொள்கைகளை கண்டதுண்டமாக வெட்டும் சின்ஹாவின் விருப்பம் மகிழ்வூட்டுகிறது. அரசாங்கம் இதை செய்வதற்கு கஷ்டப்படும் வேளையாக இருக்கின்ற போதிலும் அங்கு அவர் ஆர்வமுள்ளவராக உள்ளார். அவ் இதழ் இவ்வாறு முடித்தது: "வரவு-செலவுத் திட்டம் பங்கு விலைகளை உயரச் செய்யவும் அடுத்த நிதி ஆண்டிற்கான வளர்ச்சி முன்னறிவிப்புக்களை உயர்த்தவும் பொருளாதாரவாதிகளை சுறுசுறுப்பாக செயலாற்றத் தூண்டுகிறது. குறைந்த வரி, வட்டிவீதங்கள் மற்றும் சில சலுகைகள் ஆகியன அதற்கான பெரும் பகுதி ஆகும். இந்திய அரசாங்கம், பொருளாதாரச் சீர்திருத்தங்களின் அரைகுறையான பாதுகாப்பாளன் அல்ல மாறாக தங்களுக்காகப் போராடுபவர்களென்று அதன் மேல்தட்டினரில் உள்ள நம்பிக்கையையும் கூட இந்த உற்சாகம் எதிரொலிக்கிறது." பெரு வர்த்தகர்கள் தொழிலாளர்களை விருப்பம்போல் வேலையில் அமர்த்தவும் நீக்கவும் அனுமதிக்கும் வண்ணம் இந்திய தொழிற் சட்டங்களில் மாற்றத்திற்காக நீண்டகாலம் கோரிவந்துள்ளனர். இந்த வரவு-செலவு திட்டத்தில் சின்ஹா, 1000 க்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களில் அனுமதியின்றி தொழிலாளர்களை நீக்க அரசாங்கத்தின் முன் அனுமதி இனியும் தேவைப்படாது என்றார். இந்தியாவில் உள்ள 80 சதவீதம் கம்பெனிகள் இந்த வகையில் வருவதால் இம்மாற்றத்தின் விளைவு தொழிலாளர்களுக்கு கடும் பாதிப்புக்களைக் கொண்டிருக்கும். தொழிலாளர்களை வேலை நீக்குதலுக்கான எதிர்ப்புக்களின் சாத்தியத்தை நனவில் கொண்டு, ஒவ்வொரு பணிக்கான வேலைநீக்க நிவாரணத்தொகை 15 நாட்கள் சம்பளத்திலிருந்து 45 நாட்கள் சம்பளமாக மாற்றப்படும் என்று சின்ஹாவும் கூட குறிப்பிட்டுள்ளார். வரவு- செலவு திட்டம் சமர்ப்பித்த அடுத்த நாள், இந்திய தொழிற்துறை மற்றும் வர்த்தக சபை கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருமாறு கோரிக்கை விடுத்தார். "வேலை வாய்ப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்டதாக உள்ள நாட்டில், தொழிற்துறை சீர்திருத்தங்கள் முக்கியமான விஷயம். இதன் மீது எதிர்ப்புக்கள் திடீரென்று தோன்றும். ஆகையால் உங்களது பெருந்தன்மையைக் காட்டுங்கள் எனவேதான் தொழிலாளர்கள், அரசாங்கம் அல்லது தொழிற்துறையை சந்தேகப்படத் தொடங்க மாட்டார்கள்." அடுத்த ஐந்து ஆண்டுகளில் பொதுத்துறையில் 10 சதவீத அளவில் வேலைகளை வெட்டுவதற்கான நடவடிக்கைகளை வரவு-செலவு திட்டம் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புதிய ஆள்சேர்ப்பு மட்டம் வெறும் ஒரு சதவீதமாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் அரசாங்க ஊழியர் ஓய்வு பெறுவது 3 சதவீதமாக இருந்தபோதிலும் ஆண்டு தோறும் ஊழியர் குறைப்பு 2 சதவீதம் ஆகும். இத்துடன் சின்ஹா அறிவித்த "தாக்குப்பிடிக்க முடியாத" பொதுத்துறை நிறுவனங்கள் மூடவிருப்பது வேலை இழப்புக்களை மேலும் கூட்டும். 1999-2000 ஆண்டிற்கான தேசிய மாதிரி 1994-95 க்குப் பின்னர் இந்தியாவில் ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு வளர்ச்சி 0.7 சதவீதமாக விழுந்துள்ளது-- இது1947 இந்திய சுதந்திரத்தின் பின்னரான மிகக் கீழ்மட்டம் ஆகும். அடுத்த நிதி ஆண்டிற்கான 120 பில்லியன் ரூபாய்கள் விற்பனைக்கான இலக்கை அடைய அரசாங்கம் தனியார் மயமாக்கலை துரிதப்படுத்துகையில் மேலும் ஆட்கள் வேலைநீக்கத்தை எதிர்பார்க்கலாம். கடந்த ஆண்டின் திட்ட இலக்குகளை அடையத்தவறிய நிலையில், சின்ஹா வாங்குவோரை ஈர்க்கக்கூடிய எயர் இந்தியா, இந்தியன் எயர் லைன்ஸ் இரு வானூர்தி நிறுவனங்கள் உட்பட-- நாட்டின் பெரிய கார் உற்பத்தித் தொழிற்சாலையான மாருதி உத்யோக் (Maruthi Udayog) மற்றும் சர்வதேச தொலைபேசி அழைப்புக்களில் ஏகபோகத்தைக் கொண்டிருக்கும் தொலைத் தொடர்பு நிறுவனமான விதேஷ் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Videsh Sanchar Nigam Limited [VSNL]) போன்ற பல அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை சின்ஹா சேர்த்துள்ளார். விலை உதவிக்கொடைகளை வெட்டல் வரவு-செரவுத் திட்டம் சிறிய விவசாயிகளையும் கூட பாதிக்கும். சின்ஹா குறித்த விலையில் உணவு தானியங்களை வாங்குவதற்கான பொறுப்பை தேசிய அரசாங்கத்திடமிருந்து மாநில அரசாங்கங்களுக்கு மாற்றியுள்ளார். இந்நடவடிக்கை தவிர்க்க முடியாதவாறு ஏழை விவசாயிகளை, தனியார் பேரத்தினர் மற்றும் கடன் சுறாக்களின் தயவில் வாழவிடும். அவர் யூரியா உப்பு விலை மீதான கட்டுப்பாடுகளை படிப்படியாக அகற்றுவதையும் மின்சார விநியோகத்தை "வியாபாரமாக்கலுக்கு" முன்மொழிவுகளையும் கூட அறிவித்தார். இது விவசாயிகளுக்கு மின்சார உதவிக் கொடைகளை துண்டாடுவதாக இருக்கும். மற்றைய விலைக் கட்டுப்பாடுகள் மீதும் தாக்குதல் இருக்கின்றன. பெட்ரோலியம் துறையில் அரசாங்க விலை நிர்ணயத்தை சீர்குலைக்க மார்ச் 2002 ஐ எல்லைக் கோடாக அரசாங்கம் வைக்கும் என்று சின்ஹா குறிப்பிட்டார். இந்தியாவில் எரிபொருள் விலைகள் சர்வதேச மட்டத்திற்கு விலை உயர்ந்தால், போக்குவரத்து மற்றும் ஏனைய அத்தியாவசிய சரக்குகளின் விலையும் விரைந்து அதிகரிக்கும். சர்க்கரை மற்றும் மருந்துப் பொருட்கள் மீதான விலைக் கட்டுப்பாடுகளும் கூட மாற்றமடைந்திருக்கின்றன. அதிகாரபூர்வ வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களுக்கு மட்டும் மலிவு விலையில் சர்க்கரை இப்போது கிடைக்கின்றது. இருந்தும் கூட அதன் விலை கிலோவுக்கு 13 லிருந்து 13.25 ரூபாயாக ஆகியிருக்கிறது. அடிப்படைப் பொருட்கள் மீதான விலைக் கட்டுப்பாடுகளில் வெட்டல் நாட்டின் ஏழைகளுக்கு பலத்த அடி ஆகும். அண்மைய உலக வங்கியின் அறிக்கையான, தெற்காசியாவில் ஏழ்மைக்கு எதிராகப் போராடல் குறிப்பிட்டது: "இந்தியாவின் ஏழ்மை நிலைமை ஆபத்தானதாக உள்ளது. ஏழைகள் இன்னும் 30 கோடிக்கு மேல் உள்ளனர். "உலக வங்கியாலும் சர்வதேச நாணய நிதியத்தாலும் வக்காலத்து வாங்கப்படும் மறு சீரமைப்புக் கொள்கைகளைப் பேணுவோர், இக் கொள்கைகள் இறுதியில் மக்கள் தொகையின் பரந்த தட்டினருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுகின்றனர். அண்மைய தேசிய மாதிரி கணக்கை மேற்கோள் காட்டி, உலக வங்கியின் அறிக்கை, 1990 களில் பொருளாதார சீர்திருத்தங்களின் ஆரம்பத்திற்குப் பின்னர் "1990 களின் மத்தியில் உயர் வளர்ச்சிக் கட்டம் இருப்பினும்" இந்தியாவில் ஏழ்மை மட்டம் குறைந்த அளவே வீழ்ச்சி அடந்துள்ளது. வரவு-செலவு திட்டத்தில் ஏதாவது அதிகரிப்பு இடங்கள் இருக்குமானால் அதில் ஒன்று பாதுகாப்பு ஆகும். இராணுவச் செலவு 13.8 சதவீதம் அளவில் அதிகரித்திருக்கின்றது. கடந்த ஆண்டு எதிர்பாராத 28 சதவீத உயர்வின் மேல்- இவ்வாறு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2.6 சதவீதம் பாதுகாப்பு ஒதுக்கீட்டை பராமரிக்கிறது. பாதுகாப்பு வரவு-செலவு திட்ட அறிக்கை ஆயுதப் படையின் சுடும் திறனை மேம்படுத்தவும் நவீனப்படுத்தவும் பயன்படுத்தப்படும். இது இப்பிராந்தியத்தில் இந்தியாவுக்கு பெரும் மூலோபாய பாத்திரத்தினை ஆற்ற வலதுசாரி பிஜேபி யின் அபிலாஷைகளுடன் ஒத்ததாகும். பாதுகாப்புச் செலவு அதிகரிக்கும் அதே நேரம், முதலீட்டாளர்களுக்கு ஊக்க உதவித்தொகை வழங்க, அரசாங்கம் ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு விலை உதவிக் கொடைகளை வெட்டியிருக்கிறது மற்றும் பொதுத்துறை வேலை வாய்ப்புக்களை வெட்டியிருக்கிறது. 10 ஆண்டுகள் வரி விடுமுறை போன்றவை வானூர்தி நிலையங்கள், துறைமுகங்கள், தொழில் துறைப் பூங்காக்கள் மற்றும் மின் உற்பத்தி விநியோகம் போன்ற முக்கிய துறைகளுக்கு வழங்கப் பட்டுள்ளது. 2000 மார்ச் 31 வரை தொலைத்தொடர்பு துறைகளுக்கு இருந்த 5 ஆண்டு வரிவிடுமுறை, மார்ச் 31 க்கு முன்னரோ அல்லது அன்றோ செயல்படத் தொடங்கும் கம்பெனிகளுக்கும் வழங்கப்படுகிறது மற்றும் அது இணைய சேவை வழங்குவோர் (Internet service providers) மற்றும் வானொலி கூட்டுச் சேவைக்கும் (Broadband networks) நீட்டிக்கப்பட்டிருக்கிறது. சின்ஹா, 15 சதவீதம் கூடுதல் வரியை தனி நபர்கள் மற்றும் 10 சதவீதக் கம்பெனிகள் மீது குறைத்துள்ளதுடன் தற்காலிகமாக ஜனவரியில் ஏற்பட்ட பூகம்பத்தைத் தொடர்ந்து மறு கட்டுமானத்திற்கு உதவியாக தற்காலிகமாக 2 சதவீதம் கூடுதல் வரியை மட்டும் விட்டுள்ளார். 1999ல் அறிமுகப்படுத்தியதிலிருந்து பெரும் வர்த்தகர்கள் கடுமையாக எதிர்த்தனர். கம்பனி லாபங்களின் இலாப பங்கு மீதான வரி 10 சதவீதமாக பாதியாகக் குறைக்கப்பட்டது. புதிய பங்குகளிலிருந்து வரும் நீணைட கால முதலீட்டு இலாபங்களின் மீதான வரி நீக்கப்பட்டிருக்கிறது. நிதி அமைச்சர் மூன்று துறையில்-- தோல், ஷூக்கள் மற்றும் பொம்மைகள் ஆகியவற்றில் சிறு தொழிலுக்கான பாதுகாப்பை அகற்றி விட்டார். முன்னர் இந்தத் தொழிற்துறைகளில் 14 சதவீத உற்பத்தி சிறு தொழில் நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் வெளிநாட்டு முதலீடு மற்றும் நாட்டுக்கு வெளியே இந்திய முதலீடு ஆகியவற்றின்மீது கட்டுப்பாடுகளை தளர்த்தல் உட்பட பல நடவடிக்கைகள் வரவு- செலவு திட்டத்தில் பெரு வர்த்தகர்கள் நலனுக்காக வடிவமைக்கப்பட்டன. வரவு- செலவு திட்டமானது, வெளிநாட்டு மூலதனத்தை ஊக்கப்படுத்துவதற்கும் மெதுவாகச் செல்லும் இந்தியப் பொருளாதாரத்தின் மீது அக்கறை கொண்டு இந்தியப் பெரும் கம்பெனிகளைத் தூக்கிவிடும் முகமாக தெளிவான இலக்குகளைக் கொண்டுள்ளது. வரவு- செலவு திட்டத்திற்கு முன் எடுத்த அதிகாரபூர்வ புள்ளிவிவர கணக்கெடுப்பு பின்வருமாறு எச்சரித்தது: "பொருளாதாரம் தற்போது கடினமான நிலையில் உள்ளது. வரும் ஆண்டில் வளர்ச்சி பற்றிய சில பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடலாம்" அது மார்ச் நிதி ஆண்டிற்கான வளர்ச்சி ஆறு சதவீதம் எனக் குறிப்பிட்டது. இது கடந்த ஆண்டு வரவு- செலவு திட்ட இலக்கான ஏழு சதவீதத்தை விட குறைவானது. நேரடி வெளிநாட்டு முதலீடு மற்றும் தனியார்மயமாக்கலுக்கான இலக்குகள் அதேபோல உதவிக் கொடைகள் மற்றும் அரசாங்க செலவீனங்களில் வெட்டுக்கான இலக்குகள் ஆகியன அடையப்படவும் இல்லை. ஆனால் அரசாங்கம் நன்கு அறிந்தவாறு, தற்போதைய வரவு-செலவு திட்டம் அரசியல் அபாயங்களைக் கொண்டிருக்கிறது. பிஜேபி என்பது இந்து பேரினவாத வேலைத் திட்டத்தை சுற்றி பல்வேறு தட்டினரைக் கொண்டுவந்துள்ள கலவை ஆகும். அவர்களுள் சிலர் பெரும் வர்த்தகர்கள் மற்றும் பன்னாட்டு நாணய நிதியத்தால் கோரப்படும் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலுக்கு வெளிப்படையாக ஆதரவு தருபவர்களைப் போல சிலர் இந்திய மரபைப் பேணல் என்ற பதாகையின் கீழ் பலவீனமான வட்டார தொழில் துறையைப் பாதுகாக்க கோருகின்றனர். மேலும் இவ் வரவு-செலவு திட்ட நடவடிக்கைகள் கடுமாயாகப் பாதிக்கப்படவிருக்கும் தொழிலாளர்கள், சிறிய விவசாயிகள் மற்றும் ஏனையோரால் பரந்த எதிர்ப்புக்களை உந்திவிடும் ஆபாயத்தைக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருளுக்கான விலைகள் வீழ்ச்சி அடைந்ததால் நாட்டின் பல பகுதிகளில் ஏற்கனவே ஆர்ப்பாட்டங்களை நடத்தி இருக்கின்றனர். மாநிலத் தேர்தல்கள் வர இருக்கின்ற நிலையிலும் கூட, அரசாங்கமானது அதனது மறுசீரமைப்புக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடிவெடுத்திருக்கும் உண்மையானது, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் எங்கும் பொருளாதார தளர்ச்சி தொடர்ந்து குவிந்து கொண்டிருக்கின்ற வேளையில், இந்தியப் பொருளாதாரத்தின் முன்னேற்றம் பற்றி அரசாங்க வட்டாரங்களில் உண்மையான அச்சம் நிலவுகிறது என்பதை சுட்டிக் காட்டுகிறது.
Copyright
1998-2000 |