World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்:உலகப் பொருளாதாரம்

World economy moving towards recession

உலகப்பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்கின்றது

By Nick Beams
6 March 2001

Back to screen version

அமெரிக்க பொருளாதாரம் மட்டுமல்ல உலகப்பொருளாதாரமும் முற்றுமுழுதாக சுருக்கமடையாவிட்டாலும் பாரிய வீழ்ச்சியின் ஆரம்பத்திலுள்ளதற்கான அதிகரித்துவரும் ஆதாரங்கள் காணப்படுகின்றன.

சர்வதேச ஆட்குறைப்பு நிறுவனமான Challenger, Gray & Christmas திங்கள்கிழமை வெளிவிட்ட தனது அறிக்கையில் பெப்ரவரியில் மட்டும் 101,731 வேலைநீக்கம் நிகழ்ந்துள்ளதாக காட்டியுள்ளது. ஆனால் இது ஜனவரியின் ஆகக்கூடிய தொகையான 142.208 இலும் பார்க்க குறைவாகவுள்ளபோதிலும், இது கடந்தவருட இதேமாத தொகையான 35,415 இலும் பார்க்க 3 மடங்கு அதிகமானதாகும்.

டிசம்பர் ஆரம்பத்திலிருந்து அறிவிக்கப்பட்ட வேலைநீக்கங்கள் 377,652 ஆகவுள்ளது. இதே காலப்பகுதியில் கடந்த வருடம் 130,752 ஆக இருந்தது. அந்நிறுவனத்தின் முக்கிய நிறைவேற்று அதிகாரியான John Challenger ''1990 இன் பாரிய நிறுவனங்களின் வீழ்ச்சிக்காலங்களில் கூட நாங்கள் இப்படியான மாதாந்த எண்ணிக்கைகளை காணவில்லை'' என குறிப்பிட்டுள்ளார்.

முதலீட்டு நிறுவனமான Morgan Stanley Dean Witter (MSDW) இன் பிரதம பொருளியளாளரான Stephen Roach உலகப்பொருளதாரம் மந்தநிலைக்குள் நுளைவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பெப்ரவரி 26ம் திகதி பிரசுரிக்கப்பட்ட அறிக்கையை ஒன்றில் அவர் ''உலகத்தின் முழு அரைப்பகுதியான அமெரிக்காவும் ஜப்பானும் ஏற்கனவே வீழ்ச்சியில் உள்ளன எனவும், தற்போதுள்ள தகவல்கள் உழைப்பின் மீது இரக்கமற்ற தாக்குதலை காட்டுவதுடன், இது தகவல் தொழில்நுட்பத்தினால் முன்னெடுக்கப்படும் முதலீடுகளிலும் வேலை உருவாக்கத்திலும் பாரிய வெட்டுதலை உருவாக்கியுள்ளது. பாவனையாளர்களின் நம்பிக்கையின் தடையற்ற வீழ்ச்சி பரந்தமக்களின் செலவீனங்களை வெட்டுதலை உருவாக்கும் என்பதையே உறுதிப்படுத்துகின்றது. தற்காலிகமாக தயாரிக்கப்பட்ட ஒரு திருத்தமானது ஒவ்வொருவருக்கும் விருப்பமான V-வடிவ மறுபுனரமைப்புக்கு [அதாவது வீழ்ச்சியும் எழுச்சியுமான ஒரு வட்டவடிவான] விரைவான வழிவகுக்கும் என்பதை நம்புவது கடினமாக உள்ளது'' என குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் 2ம் திகதி வெளியான ஒரு விமர்சனத்தில் Stephen Roach ஏற்கனவே வேலைநீக்கங்கள், மூலதன செலவீட்டின் வெட்டுக்கள் தொடர்பாக கவனத்திற்கு எடுக்கப்பட்டதாக எச்சரித்துள்ளதுடன், ''இன்னுமொரு கால்நூற்றாண்டு காலப்பகுதிக்கு வியாபார நிரந்தர முதலீடுகள் வீழ்ச்சியடையும் என தோன்றுவதாகவும் இவ்வீழ்ச்சியின் காலகட்டத்தின் இரட்டிப்பானது 2000 இன் இறுதிகளில் ஆரம்பமானதாகவும், இவ்வீழ்ச்சி ஆழமடையுமானால் அல்லது நீடிக்குமானால் நாம் தற்போது முன்கூறியுள்ள மூலதன, தொழில் சீர்ப்படுத்தல்கள் இன்னும் அதிகரிக்கவேண்டியிருக்கும். எனது பார்வையில் இப்பின்வாங்கல் போக்கானது நிறுத்தமுடியாது போய்விடும் மிக அபாயமானது'' என கூறியுள்ளார்.

அமெரிக்காவின் சம்பிரதாயபூர்வமான அறிவுடைமை Federal Reserve Board வீழ்ச்சியை தடைசெய்யாவிட்டாலும் மேலதிகமான வட்டிவீத வெட்டுக்கள் மூலமாக அதன் விளைவுகளை குறைக்கும் என்பதாகும். Financial Times பத்திரிகை தனது அண்மைய விமர்சனத்தில் குறிப்பிட்டபடி எல்லா ஆய்வாளர்களும் முதலீட்டாளர்களும் Federal Reserve Board திறவுகோலை வைத்திருக்கின்றது என்ற நம்பிக்கையுடன் இணைந்திருப்பதுடன், அது யுத்தத்திற்கு பின்னரான சகல வர்த்தக சுற்றுக்களிலும் ''நாணய கொள்கையில் புத்திசாலித்தனமான நடைமுறையானது மீள்ச்சியை கொண்டுவரும்'' என நம்புவதாக குறிப்பிட்டிருந்தது.

ஆனால் இந்த அமைதிப்படுத்தும் கருத்தை நோக்கி ஐயுறவு எழ தொடங்கியுள்ளது. Financial Times குறிப்பிட்டுள்ளபடி''மத்திய வங்கியின் பலம் மீதான இந்த உலக நம்பிக்கை வைக்கப்பட்டுள்ளது பிழையானது என நிரூபிக்கப்பட்டால் என்ன நிகழும்? ஆனால் இந்தநூற்றாண்டின் திருப்பத்தில் பொருளாதார வட்டத்தில் நாணய கொள்கையின் விருப்பமான விளைவுகளை உருவாக்கும் தகமையை மட்டுப்படுத்தப்படும் வித்தியாசமான நிலை உருவாகினால் என்ன நிகழும்?''.

அது மேலும் யுத்தத்திற்கு முந்திய காலப்பகுதியின் சகல வீழ்ச்சிகளும் ஒரு பணவீக்கத்துடன் ஆரம்பித்ததுடன், Federal Reserve Board வட்டிவீதத்தை உயர்த்துவதால் அதற்கு பதிலளித்தன் மூலம் வருமானத்தை அதிகரிக்க தூண்டியது எனக்குறிப்பிட்டுள்ளது.

அது மேலும் ''வழமையான கேள்விப்பக்கத்திலிருந்து [demand-side] எழும் விலைவீக்கம் Federal Reserve Board இனை நடவடிக்கை எடுக்கவைப்பதுடன் மந்தநிலையை உருவாக்குவதற்கு பதிலாக தற்போதைய பலவீனமானநிலை 1990 இன் வியாபார முதலீட்டின் அதிகரிப்பால் விநியோகத்தின் மிககூடிய குவியலினால் உருவாகியதாகும். தொழில்நுட்பத்தில் உண்மையான உற்பத்தியின் அதிகரிப்பிற்கான முதலீடுகள் வேகமான வளர்ச்சிவீதத்திலும் பார்க்க தேவைக்கு அதிகமான அளவு உற்பத்தி செய்ய நிறுவனங்களை தூண்டியது. இந்த போக்கானது பணவீக்க அழுத்தங்களை இல்லாதொழிப்பதற்கு பதிலாக பங்கு விலைகளின் செங்குத்தாக வீழ்ச்சியையும் வியாபார முதலீடுகளில் சிக்கனத்தையும் உருவாக்கியது'' என குறிப்பிட்டுள்ளது.

ஜப்பானின் வீழ்ச்சி

இப்படியான நிலைமைகளில் Federal Reserve Board இன் பிரச்சனை என்னவெனில் ஜப்பானிய நாணய உத்தியோகத்தர்கள் கடந்த பத்து ஆண்டில் அனுபவப்பட்ட ''சில உபாயங்களை அதிகரிப்பதற்கு'' பதிலாக வட்டிவீதங்களை வெட்டுவதன் மூலம் சமாளிக்கப்பார்க்கின்றது.

அதன் பொருளாதாரம் 1990 இன் நிதிநெருக்கடியினை தொடர்ந்து கடந்த பத்து வருடங்களாக எவ்வித வளர்ச்சியும் அடையாதுள்ளதுடன், வெற்றிகரமாக 2 காலாண்டுகளாக வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படும் அதிகூடிய வீழ்ச்சியை அடைந்துள்ளது. கடந்த வருடத்தின் செப்டம்பர் மாதத்தில் பதியப்பட்ட 0.6% வீழ்ச்சி டிசம்பர் மாத புள்ளிவிபரங்கள் வெளிவிடப்பட்டால் அதேயளவானதாக இருக்கும்.

பொருளாதார அமைச்சரான Taro Aso பொருளாதார வளர்ச்சி நின்றுள்ளதாக குறிப்பிடும் பொழுது, நிதி அமைச்சர் Kiichi Miyazawa ''வீழ்ச்சியடையும் அபாயம்'' இருப்பதாக எச்சரித்துள்ளார். ஜப்பானிய அரசாங்கம் அறிவித்துள்ளதன்படி அது இன்னுமொரு பொருளாதார ஊக்குவிக்கும் திட்டத்தை தயாரிப்பதாகவும், இது இவ்வார இறுதியில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளது.

எவ்விதமான நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் கடந்த பத்துவருடங்களாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு தொடர் ஊக்குவிப்பு திட்டங்களை போலவே அவை எந்த வெற்றியையும் கொண்டுவரும் என எதிர்பார்க்கமுடியாது. மாறாக ஏதாவது மாற்றங்களை செய்வதற்கு அரசாங்கத்திற்கு உள்ள வசதிகள் குறுகியுள்ளன. வட்டிவீதங்கள் ஏற்கெனவே பூச்சியத்தை அண்மித்துள்ளதால் மேலதிக வெட்டுக்கள் பயனளிக்கப்போவதில்லை. அத்துடன் குவிந்துள்ள பொதுக்கடனினால் அவர்களால் மேலதிகமாக செலவளிப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இப்பொதுக்கடனானது மொத்த உள்ளூர் உற்பத்தியின் 130% ஐ அடைந்துள்ளதுடன், இது எந்தவொரு பாரிய தொழிற்துறை நாட்டினதிலும் பார்க்க அதிகமானதாகும்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் ஜப்பான் தள்ளாடிக்கொண்டு முன் செல்லலாம் ஆனால் இது எவ்வளவு நாட்களுக்கு என்பது கேள்விக்குரியதாகும். கடந்த வெள்ளிக்கிழமை Financial Times இன் ஆசிரியர் தலையங்கம் ''இயங்காத வர்த்தகத்தையும்,பயனளிக்காத வங்கிகளையும் மூடுவதால் ஏற்படும் கடினமான விளைவுகளை ஏற்கமறுப்பதால் ஒரு நீடித்தகாலத்திற்கு அரசாங்கம் பாரியளவு தாக்கப்பட்டிருக்கும்'' என குறிப்பிட்டுள்ளது.

''பாரிய நிதி உதவிகளால்'' பொருளாதாரத்தை ஓரளவு மூழ்காது பாதுகாக்கு கூடியாதாக இருந்தது. ஆனால் ''தற்போதய பொருளாதார வட்டத்தின் பலவீனமானது ஜப்பானை ஆழ்ந்த வீழ்ச்சியினுள் கொண்டு செல்லுவதுடன் 'நீண்டபாலமாக பின்போடப்பட்டிருந்த' நிறுவங்களின் வங்குரோத்தினை தூண்டிவிடலாம்''.

ஐரோப்பா அண்மைக்காலங்களில் பொருளாதார வளர்ச்சியை அடைந்திருந்தாலும் அது கீழ்நோக்கி செல்வதற்கான அறிகுறிகள் தோன்றுகின்றன. Goldman Sachs ஐரோப்பிய பிரதேசத்தின் வளர்ச்சி இவ்வருடம் 2.6% ஆக எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இது கடந்த வருடத்தின் 3.4% இலும் பார்க்க குறைவானதாகும். ஜேர்மனியின் பிரதமர் Gerhard Schroeder 2000 ஆண்டின் ''முன்னெதிர்பார்த்திராத நல்ல வளர்ச்சி'' இவ்வருடம் தொடரும் என எதிர்பார்ப்பதாக கூறுகையில் அந்நாட்டின் பொருளாதாரம் எதிர்த்திசையை காட்டுகின்றது.

கடந்த வருடத்தின் கடைசிக்கு முதல் காற்பகுதியின் வளர்ச்சியான 0.3% ஐ தொடர்ந்த கடைசி காற்பகுதியின் வளர்ச்சியான 0.2% உடன் வருட இறுதியில் வளர்ச்சி நின்றுவிட்டதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு ஆசியாவின் பொருளாதாரம் இரண்டு பக்கத்திலிருந்து பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றது. அமெரிக்காவின் வீழ்ச்சியானது அதனு ஏற்றுமதி சந்தையில் வெட்டுக்களை ஏற்படுத்துவதுடன், அப்பிரதேசத்தின் முக்கிய பொருளாதார ஊண்டுகோலான ஜப்பான் இன்னுமோரு வீழ்ச்சியை நோக்கி செல்கின்றது.

அவுஸ்திரேலிய பொருளாதாரத்தின் தலைகீழான வீழ்ச்சி

உலகப்பொருளாதாரத்தின் திருப்பத்தின் தெளிவான வெளிப்பாடு அவுஸ்திரேலிய பொருளாதாரத்தில் காணக்கூடியதாகவுள்ளது. கடந்த நவம்பர்மாதம் பொருளாதாரத்தின் வளர்ச்சி தொடர்பான முற்கூற்றை அரசாங்கம் திருத்தியுள்ளது. எவ்வாறிருந்தபோதும் இக்கிழமை டிசம்பர் பகுதிக்கான குறைவான வளர்ச்சியை அல்லது சுருக்கத்தை காட்டும் என எதிர்பார்க்கப்படும் தகவலை தேசிய கணக்கீட்டு தகவல் வெளிவிடப்படுவதை பங்கு சந்தைகள் அமைதியின்மையுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன.

மார்ச் மாதம் 3ம் திகதி Australian பத்திரிகை ''அவுஸ்திரேலியா வீழ்ச்சியின் எல்லையை அடைந்துள்ளதுடன், வர்த்தகத்தின் குறைவும் , வீடமைப்பு முதலீடுகள் பின்தங்கியுள்ளதானது 1991 இற்கு பின்னர் முதல் வீழ்ச்சியை காட்டுகின்றது. நிதி அமைச்சு 2000ம் ஆண்டின் இறுதி மூன்றுமாதங்களில் பொருளாதாரம் பின்நோக்கி செல்லும் அபாயம் தொடர்பான உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு தொடர்பாக ஹவாட் அரசாங்கத்தை எச்சரித்துள்ளதாக நம்பப்படுகின்றது''.

முக்கியமாக வியாபார மூலதன செலவீடு 5.2% ஆலும், வீடமைப்புக்கானது 12.8% ஆலும், ஏற்றுமதி 2.2% ஆலும் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், சில்லறை விற்பனையானது 1.8% ஆல் அதிகரித்திருந்த போதும் செப்டம்பர் காற்பகுதியில் 3.3% ஆல் வீழ்ச்சியடைந்துவிட்டது. திங்கட்கிழமை ANZ வங்கியால் வேலை விளம்பரத்திற்கான மதிப்பீடு ஒன்றில் 1991 இன் வீழ்ச்சிக்கு பின்னர் தற்போது ஆகக்கூடிய வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இவ்வங்கியின் பிரதான பொருளியலாளரான Saul Eslake ''பொருளாதாரம் பலவீனமடைந்துள்ளதாலும், இலாபம் அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதால் நிறுவனங்கள் வேலைநீக்கத்தில் ஈடுபட்டுள்ளன'' என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க, உலக பொருளாதார வீழ்ச்சிக்குப்பின்னர் 10 வருடங்கள் கடந்துவிட்டன. அப்போது மிகவும் ஒருங்கிணைந்த பங்குச்சந்தைகளால் பொருளாதார நிலைமை மிகவும் சிக்கலானதாக இருந்தது.''தொற்றுநோய்'' என குறிப்பிடப்பட்ட ஆசிய பொருளாதார நெருக்கடியானது வெகுவிரைவாக ரஷ்யாவிற்கும் பின்னர் செப்டம்பர் 1998 இன் வால் ஸ்ரீட்டின் hedge fund, Long-Term Capital Management போன்றவற்றின் வீழ்ச்சிக்கு இட்டுச்சென்றது. இந்நெருக்கடிகள் Federal Reserve Board இன் தலையீட்டினாலும், ஆசியாவின் வீழ்ச்சியானது அமெரிக்க பொருளாதாரத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியாலும் மீளமைக்கப்பட்டது.

ஆனால் துருக்கியில் அல்லது ஆர்ஜன்ரீனாவில் அல்லது தென்கிழக்கு ஆசியாவில் நிகழும் ''மேல் எழும் சந்தை'' பொருளாதார நெருக்கடியானது வித்தியாசமான நிலைமைகளுக்குள் நிகழ்கின்றன.

MSDW இன் பொருளியலாளரான Roach "1997-1998 இல் உருவாகிய பொருளாதார நெருக்கடியானது அமெரிக்க பொருளாதார வீக்கத்தால் உறுதியாக்கப்பட்டன. அக்காலப்பகுதியில் அமெரிக்க பொருளாதாரம் வருடாந்தம் 4.4% ஆல் வளர்ச்சியடைந்திருந்ததுடன், அதன் இறக்குமதி 13% ஆலும் அதிகரித்திருந்தது. இதன் விளைவாக 2-3 வருடத்திற்கு முந்திய அபிவிருத்தியடையும் நாடுகளின் திடீர் நெருக்கடியானது முதலும் இறுதியானதுமான புகலிடமான உலகத்தின் இறக்குமதியாளனான அமெரிக்காவால் தடுக்கப்பட்டது.. இப்போது அப்படியல்ல. 2001 இல் உருவாகும் எந்தவொரு சந்தை அபாயங்களும் அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியால் அதிகரிக்கப்படும்''என குறிப்பிட்டுள்ளார்.

அவரின் ஆய்வுகளின்படி அமெரிக்க சக்திவாய்ந்த வளர்ச்சியின்மையானது ''ஒரளவு சிறிய சந்தை நெருக்கடியானது பாரியளவானதாக அதிகரிக்கலாம். அமெரிக்க பொருளாதார வீக்கமானது அபிவிருத்தியடையும் உலகின் ஒன்றிணைந்த அபாயத்துடன் ஒன்றிணைந்துள்ளது. அமெரிக்க நெருக்கடியானது அவ் ஒன்றிணைந்த அபாயத்தை வெளிப்படுத்தலாம்''.

வேறுவார்த்தைகளில் கூறினால் பொருளாதார வீழ்ச்சியினதும் நிதிநெருக்கடியினதும் கூட்டானது V-வடிவ மறுபுனரமைப்புக்குக்கான பரிந்துரையாளர்கள் சிந்திப்பதை விட மோசமான நிலைமைகளை உருவாக்கும்.

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved