WSWS
: விவாதங்கள்
Letter from SK
SK யிடம்
இருந்து வந்த கடிதம்
10 March
2001
Use
this version to print
உலக சோசலிச வலைத் தளத்துக்கு,
பின்வருவது சோசலிச சமத்துவக் கட்சியின்
பொதுச் செயலாளருக்கும் SRக்கும்
இடையே இடம்பெற்ற விவாதத்துக்கு ஒரு சிறிய பங்களிப்பாகும்.
சோசலிச சமத்துவக் கட்சி பொதுச் செயலாளரின் பதிலில்
நான்கு அம்சங்களை நான் கவனத்தில் எடுத்துள்ளேன்.
1. சோசலிச சமத்துவக் கட்சி பின்வரும் யதார்த்தங்களை
ஒப்புக் கொள்ளத் தயங்குவதாகத் தெரிகின்றது:
Ü) தமிழ பிராந்தியங்களில் இருந்து சிங்கள ஆட்சியை
தூக்கி வீசும் நோக்கமாக தீவின் வடக்கு-கிழக்கில் தமிழ் இனக்குழுவினால்
ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் நடாத்தப்பட்டு
வருகின்றது.
ஆ) இப்போராட்டத்துக்கு தமிழீழ விடுதலைப்
புலிகள் தலைமை தாங்குகின்றது.
இ) இதற்கு தமிழ் தேசிய இனத்தின் சகல வர்க்கங்களும்
ஆதரவளிக்கின்றன.
சோசலிச சமத்துவக் கட்சி
இந்த மூன்று சாதாரண உண்மைகளை அங்கீகரிக்கத் தவறுமேயானால்
அது இனக்குழு மோதுதல் தொடர்பாக, ஒரு நிச சோசலிஸ்ட் செய்வதை
அதனால் கவலைக்கிடமான முறையில் செய்ய முடியாது போய்விடும்.
அவை முறையே தமிழர் விடுதலைப் போராட்டத்துக்கும் அவர்களின்
சுயநிர்ணய உரிமை போராட்டத்துக்கும் நிபந்தனையற்ற ஆதரவு
வழங்குவதாகும், இதைச் செய்யத் தவறுவது "தேசிய இனப்
பிரச்சினை" சம்பந்தமான லெனினின் கொள்கைப் பிடிப்பான
நிலைப்பாட்டில் இருந்து அன்னியப்பட்டுப் போவதாகும்.
சோசலிச சமத்துவக் கட்சி சிங்கள மக்களுக்கு
மேற்கண்ட உண்மையை தெளிவாக எடுத்துச் செல்ல வேண்டும்
என நான் நினைக்கின்றேன். இல்லாது போனால் தீவிரவாத
கோரிக்கையாகத் தோன்றும் "சிங்களப் படைகளை வாபஸ்
பெறு" என்ற கோரிக்கை பெரிதும் வெற்றுகோரிக்கையாகிப்
போய்விடும்.
இன்னும் மோசம் என்னவென்றால் சோசலிச
சமத்துவக் கட்சி இதை உணராமல் சிங்கள ஆட்சியின் கரங்களாக
இயங்க நேரிடும்.
இலங்கை அரசாங்கத்தின் இன்றைய முக்கிய முன்னுரிமைக்குரிய
விடயம் யுத்தம் தனித்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இடம்பெறுவதாகக்
காட்டுவது. அக்கறைக்குரிய இவ்விடயத்தை சோசலிச சமத்துவக்
கட்சி இலங்கை அரசுக்கு வாய்ப்பாக மறைமுகமாக வேனும் செய்கிறது.
வேறு வார்த்தைகளில் சொன்னால் சோசலிச
சமத்துவக் கட்சி குழப்பம் நிறைந்த சிங்களப் படைகளை வாபஸ்
பெறும் சுலோகத்தையிட்டு அநேகமான சிங்கள மக்களுக்கு அக்கறை
கிடையாது என்பதை கொழும்பு பூரணமாக அறியும். ஏனெனில்
அது அதே சமயம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவுக்கும் வாதிக்கின்றது.
எவ்வாறெனினும் கொழும்பு ஆட்சியாளர்களுக்கு
இன்று தீர்க்கமாகியுள்ளது சிறப்பாக தமிழர்களிடையேயும் அத்தோடு
சிங்கள தொழிற்சங்க இயக்கத்தினுள்ளேயும் தமிழீழ விடுதலைப் புலிகள்
தொடர்பான எதிர்ப்பை உக்கிரமாக ஊக்குவிப்பதேயாகும். தெரிந்தோ
தெரியாமலோ தற்சமயம் சோசலிச சமத்துவக் கட்சியின் கருத்துக்கள்
பங்களிப்பு செய்யும் கொள்கை இதுவே.
சோசலிச சமத்துவக் கட்சி தேர்தலில் போட்டியிடுவதை
முன்னர் தடை செய்த தேர்தல் ஆணையாளர் திடீரென அதற்கு
தலையாட்டியதும் வானொலியிலும் தொலைக் காட்சியிலும்
அரசியல் ஒலிபரப்புக்கான அவகாசத்தை பயன்படுத்த இடமளித்ததும்
அப்படி ஒன்றும் ஆச்சரியத்துக்கு உரியது அல்ல.
அத்தோடு SR
சுட்டிக்காட்டுவது போல் யுத்தப் பிராந்தியங்களில் இராணுவக்
கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சோசலிச சமத்துவக்
கட்சி அங்கத்தவர்களின் அரசியல் நடவடிக்கைகளையிட்டு இராணுவம்
பாராமுகமாக இருப்பது சோசலிச சமத்துவக் கட்சியின் நடவடிக்கை
இராணுவத்தின் சொந்த நிகழ்ச்சி நிரலோடு பெரிதும் ஒத்துப்
போகின்றதை எடுத்துக் காட்டுகின்றது.
(2) சோசலிச சமத்துவக் கட்சி, இடதுசாரி
கட்சிகளான போல்ஷிவிக் -லெனினிஸ்ட் கட்சியும் லங்கா சமசமாஜக்
கட்சியும் காலனித்துவத்துக்கு பிந்திய சிங்கள அரசாங்கத்தின்
இனவாத நடவடிக்கைகளை எப்படி எதிர்த்தது என எமக்கு அறிவிக்கின்றது.
ஆனால் இந்த இரண்டு கட்சிகளும் பிரித்தானிய காலனித்துவவாதிகள்
ஒரு ஒற்றையாட்சி அரசை அமைத்ததும் அதை சிங்களவர்களிடம்
கையளித்ததும் உள்ளடங்கியுள்ள அடிப்படை ஜனநாயக பிரச்சினைகளை
எழுப்பியது உண்டா?
இல்லை. அவர்கள் எழுப்பியதே கிடையாது. (ஈழம்-ஸ்ரீலங்கா
ஐக்கிய அரசுகளுக்கான அழைப்பு அன்றைய ட்ரொட்ஸ்கிஸ்டுகளிடம்
இருந்து வெளிப்படாதது விந்தையானது இல்லையா!)
பிரித்தானியர் சந்தேகித்த ஒரு தமிழ் சமஷ்டி நிர்வாகத்தைக்
காட்டிலும் பிரித்தானியர் பெரிதும் வசதியானதாக ஒரு போதும்
கொள்ளாத இந்தியாவுடன் உறவுகளை கொள்வதை பெரிதும் விரும்பும்
ஒரு தமிழ் சமஷ்டி நிர்வாகத்தைக் காட்டிலும் டீ.எஸ்.சேனநாயக்க
தலைமையிலான சிங்களப் பிரமுகர்களின் மேற்கத்தைய சார்பு உணர்வுகளில்
பெரிதும் நம்பிக்கை வைக்க முடியும் எனக் கண்டதாலேயே
பிரித்தானியர் இதைத் திட்டமிட்டுச் செய்ததாக சில வரலாற்றாசிரியர்கள்
சுட்டிக் காட்டுகின்றனர்.
உண்மையில் இந்த விவகாரத்தில் தமிழ் அரசியல்
பிரமுகர்கள் ஈடாட்டம் கண்டவர்களாக இருந்திருப்பார்களாயின்-நான்
அவ்வாறு தான் நம்புகின்றேன்- அக்காலப் பகுதியின் சோசலிசத்
தலைவர்கள் அவர்களை சவால் செய்து அவர்களின் சந்தர்ப்பவாதத்தை
தமிழ் மக்களுக்கு அம்பலப்படுத்தாது போனது ஏன்?
ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய அரசுகள் சுலோகத்தை
முன்வைப்பதற்கான உரிய காலமாக அது விளங்கவில்லையா?
பிரித்தானியரின் 1947ம் ஆண்டின் அரசியல் சட்ட தீர்வில்
ஜனநாயகத்துக்கு பெரிதும் துரோகமான வெட்கக்கேடு அடங்கியிருந்த
தன்மை சிங்கள மேலாதிக்கம் கொண்ட ஒற்றையாட்சி அரசை
நிறுவுவதாகும். அக்காலத்தின் சோசலிஸ்டுகள் இவ்விடயம் பற்றி
பேசவில்லை. ஆதலால் சிங்கள அரசாங்கங்களால் தமிழர்கள்
கொடுமையாக நடாத்தப்பட்டதற்கு எதிரான பின்னைய எதிர்ப்புகள்,
ஆணிக்கு தலையடி கொடுக்கத் தவறிவிட்டது. இந்த மத்திய பிரச்சினை
பின்னர் தமிழ் தேசியவாதிகளிடம் கையாளும்படி தனித்துவிடப்பட்டது.
உண்மையில் அவர்கள் ஒரு கொள்கைப் பிடிப்பான
நிலைப்பாடு கொண்டு தமிழர்களின் உரிமைகளுக்காக கடுமையாகப்
போராடியிருந்தால் இந்த ட்ரொட்ஸ்கிஸ்டுகள் தமிழ் சமுதாயத்தினுள்
கணிசமான அளவு ஊடுருவிக் கொள்வதற்கு சாத்தியம் இருந்தது.
இது இலங்கையின் காலனித்துவ ஆட்சிக்குப் பிந்திய முழு வரலாற்றையும்
அடியோடு மாற்றியமைக்கும் சாத்தியம் இருந்தது.
எவ்வாறெனினும் உண்மையில் பிரித்தானியர் ஆட்சிக்
காலத்தின் போதோ அல்லது அதன் பின்னரோ தமிழ் தேசிய இயக்கத்தை
எந்த ஒரு அர்த்தபுஷ்டியான முறையிலும் தொடர்புபடுத்த அவர்கள்
தவறிவிட்டனர். (ஏகாதிபத்திய ஆட்சிக் காலத்தின் போது ஆரம்பமான
சிங்கள தேசியவாத இயக்கத்துடன் தொடர்பு படுத்தவும் கூட
அவர்கள் தவறிவிட்டார்கள் என்றே நான் நினைக்கின்றேன். அது சிங்கள
பிரமுகர்களின் அரசியலுக்கு எதிரான அதற்கேயுரிய முக்கியத்துவத்தையும்
கொண்டிருந்தது.)
இது பிரித்தானியர் ஆட்சியின் கீழ் சுதேச கலாச்சாரத்தையும்
சிங்கள ஏழைகளின் வாழ்க்கை நிலைமைகளையும் காக்கும் ஒரு
சிங்கள மறுமலர்ச்சி இயக்கத்தின் வடிவை எடுத்தது. ஒரு சிங்கள
அரசின் ஊடாக தமிழர்களை அரசியல் ரீதியில் மேலாதிக்கம் செய்வது
இதன் பாகமாக விளங்கவில்லை.
வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் சைவ கலாச்சாரத்தை
மறுமலர்ச்சி பெறச் செய்யும் ஒரு இயக்கமும் சமாந்தரமாகத்
தோன்றியது. இது தமிழ் தேசிய விழிப்புணர்வின் வளர்ச்சியின் தொடக்கத்தை
பிரதிநிதித்துவம் செய்தது.
எனது கருத்தின்படி இந்த இரண்டு இயக்கங்களும்
ஜனநாயக உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தன. ட்ரொட்ஸ்கிஸ்டுகள்
இந்த இணைந்து போகும் தன்மையைக் கொண்டிராததோடு
உண்மையில் இதைத் தொடர்புபடுத்தும் சாமர்த்தியத்தையும்
கொண்டிருக்கவில்லை.
இந்த சமூக அபிவிருத்திகளின் சாராம்சத்தை உள்ளீர்த்துக்
கொள்ள சோசலிஸ்டுகள் தவறியமை நிச்சயமாக அவர்களை இதனுள்
ஊடுருவுவதைக் கஷ்டமாக்கியது. இதன் மூலம் இந்தச் சமூகச்
சக்திகளை இருதரப்பிலும் உள்ள சந்தர்ப்பவாத அரசியல் பிரமுகர்களுக்கு
அடிபணிந்தவர்களாக்கியது.
இதன் மூலம் வளர்ச்சி கண்டு வந்த சிங்கள
பெளத்த மறுமலர்ச்சி பிரச்சாரம் யூ.என்.பி.யின் காலனித்துவத்துக்கு
பிந்திய முதலாவது அரசாங்கத்துடன் மோதிக் கொள்ளச் செய்தது.
நன்கு ஸ்தாபிதம் செய்யப்பட்ட லங்கா சமசமாஜக் கட்சி கையாலாகாது
உதவியின்றி நிற்கையில் புதிய முதலாளித்துவ அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சி யூ.என்.பி.யை பதிலீடு செய்யத் தோன்றியது.
லங்கா சமசமாஜக் கட்சி, சிங்கள பெளத்தர்களின்
விருப்புவெறுப்புகளின் ஜனநாயக உள்ளடக்கத்துடன் தொடர்புபடுத்த
முடியாது பரிதாபமான விதத்தில் தோல்வி கண்டது. இதனால் சிங்கள
பெரும்பான்மையினர், ஒரு ஒற்றையாட்சி அமைப்பினுள் தமிழர்
விரோத இனவாதத்தை தூண்டிவிடுவதன் மூலம் ஏற்படும் சாதகமான
நிலைமைகளை ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டு இருந்த சிங்கள
பிரமுகர்களின் அதிகாரத்துக்கான அரசியலை நோக்கும் நிலை ஏற்பட்டது.
.
அடிப்படையில் இந்த சிங்கள அபிலாசைகள்
பெரிதும் தமிழர்களினது அபிலாசைகளை ஒத்தனவாக விளங்கின. ஆனால்
சிங்கள ஆட்சியாளர்களோ முழுத் தீவிலும் தமிழர்களின் ஆத்திரத்தை
தூண்டும் விதத்தில் சிங்கள பெளத்த கோரிக்கைகளை அமுல் செய்ய
விரும்பினர்.
காலனித்துவ ஆட்சிக் காலத்தில் இருந்து சகல
பொருளாதார நடவடிக்கைகளும் சிங்கள பிராந்தியங்களுக்குள்ளேயே
இடம் பெற்றன. தலைநகர் கொழும்பைச் சூழ இடம்பெற்றது.
இது சிங்கள தென்பகுதியை நோக்கி தமிழர்களை புலம்பெயர வைத்ததோடு,
வேலைகளுக்கும் வர்த்தகத்துக்குமான போட்டி நிலைமையையும்
உருவாக்கியது.
அதே சமயம் சிங்கள- தமிழ் இனவாத பதட்டநிலை
ஒரு நிலையான யுத்தக்களமாக மாறிவருகையில், தமிழ் வடக்கு-கிழக்கு
மாகாணங்கள் பொருளாதார தரிசு நிலங்கள் ஆக்கப்பட்டன.
இராணுவப் பிரசன்னத்தை விரைவாக அதிகரித்து வந்தது.
இதன் மூலம் விரைவாக வளர்ச்சி கண்டு வந்த
இனவாத உணர்வுகள், முதலாளித்துவ அதிகார அரசியலுக்கான ஒரு
இலாபகரமான பண்டம் ஆகியது.
சிங்கள பெளத்த பிரச்சாரத்தின் ஜனநாயக
சாராம்சம் தமிழர் விரோத இனவாதத்தினாலும் சிங்கள மேலாதிக்க
உணர்வுகளாலும் பதிலீடு செய்யப்படுவது என்பது ஒரு காலம் சம்பந்தபட்ட
பிரச்சினையாகவே அப்போது விளங்கியது.
இந்த காலனித்துவ ஆட்சியின் பின்னைய சோர்வூட்டும்
காட்சிகள் இந்த வடிவம் எடுத்ததற்கு முதல் காரணம்- Ü)
ஒரு இரண்டு தேசியங்களின் தீவில் ஒற்றையாட்சி அரசு தன்னிச்சையாக
திணிக்கப்பட்டமை. ஆ) இந்த அநீதியான அரசியலமைப்பு தீர்வை
சோசலிஸ்டுகள் சவால் செய்யத் தவறியமை; இ) இரண்டு தேசிய
மறுமலர்ச்சி இயக்கங்களையும் தாண்டிச் செல்வதில் சோசலிஸ்டுகளின்
திறமையீனம்.
எமது நாட்டின் இடதுசாரி அரசியலில் இந்த காலகட்டத்தை
இன்றைய சோசலிஸ்டுகளால் பக்கச்சார்பற்ற முறையில் ஆய்வு
செய்யப்பட வேண்டும் என நான் சிபார்சு செய்கிறேன்.
அநாகாரிக தர்மபால போன்ற ஆட்களால்
ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த ஆரம்ப சிங்கள தேசியவாதம்
தமக்கேயுரிய முறையில் பிரித்தானிய ஆட்சியை எதிர் கொண்டதுடன்,
இதற்கென ஒரு ஜனநாயக உள்ளடக்கத்தையும் இது கொண்டிருந்தது.
ஆனால் சோசலிஸ்டுகள் இதை விளங்கிக்கொள்ளத் தவறியமை அவர்கள்
இதனுள் ஊடுருவிச் செல்வதை கஷ்டமாக்கியது என நான் எண்ணுகின்றேன்.
இதன் மூலம் இந்த இயக்கத்தை சிங்கள வலதுசாரி அரசியல்வாதிகளுக்கு
அடிபணிந்ததாக்கியது. இந்த அரசியல்வாதிகள் அவர்களது அபிலாசைகளை
தமது சொந்த அரசியல் இலாபங்களுக்காக சுரண்டிக் கொண்டனர்.
நிஜ தமிழ் காலனித்துவ எதிர்ப்பு இயக்கம் ஓரளவுக்கு
தமிழ் பிரமுகர்களின் அரசியலில் இருந்து சுயாதீனமாக விளங்கியது.
இது ஆறுமுக நாவலர் போன்ற தமிழ் தேசாபிமானிகளால் ஆரம்பித்து
வைக்கப்பட்டது. இந்த தேசியவாதப் போக்கின் தவிர்க்க
முடியாத வரையறைகளும் பற்றாக்குறைகளும் என்னவாக இருந்த
போதிலும் இதன் உள்ளடக்கம் முக்கியமாக முற்போக்காக
விளங்கியதாக நான் எண்ணுகின்றேன்.
ஆனால் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அதன் உருவத்தினால்
(அல்லது தோற்றத்தினால்) தள்ளி வைக்கப்பட்டிருந்தாலும்,
அவர்களின் "வர்க்கப் போராட்ட" மாதிரியுடன் பெரிதும்
பொருந்திப் போகாது விட்டிருந்தாலும், அப்போது அது தாம்
ஏன் ஒரு சாதகமான வழியில் தொடர்புபடுத்த தவறிப் போயின
என்பதை விளக்கும்.
இறுதியாக முதன் நிலையான தமிழ் அரசியல்வாதிகள்
சிங்கள அரசுடனான தமது கொடுக்கல் வாங்கல்களின்போது
தமிழர் இயக்கத்தின் வளர்ச்சி கண்டுவந்த ஜனநாயக அபிலாசைகளை
தொடர்ந்து விட்டுக் கொடுத்து வந்தனர். விரக்தியடைந்த தமிழ்
இளைஞர்கள் தமது சொந்த அணியில் இருந்து ஒரு புதிய
தலைமையை சிருஷ்டிக்க கடுமையாகப் போராடினர். இது விடுதலைப்
புலிகளின் தோற்றத்துடன் உச்சக்கட்டத்தை அடைந்தது.
சோசலிச சமத்துவக் கட்சி, இப்போது இந்த
யதார்த்தத்தை சிங்கள மக்களுக்கு அம்பலப்படுத்திக் காட்டும்
தயக்கம் இவர்களும் கூட தமது முன்னோடிகளின் இளம்பிள்ளை
வலிப்பில் (Infantile disorder)
இருந்து தலையெடுக்கவில்லை என்பதை அம்பலப்படுத்துகிறது.
உண்மையில் படைகளை வாபஸ் பெறும்படி வேண்டும் சோசலிச
சமத்துவக் கட்சியின் சுலோகம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும்
அவர்களின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஒரு ஆணியை அறையும்
வீணான சதியாக தமிழர்களால் புரிந்து கொள்ளப்பட முடியும். இந்த
சிங்கள அரசாங்கம் இடைவிடாமல் கையாண்டு பயன்படாது
போன ஒரு மூலோபாயமாகும்.
3) சோசலிச சமத்துவக் கட்சி பெரிதும் எதிர்பாராத
விதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தேசிய விடுதலைப் போராட்டத்தை
இடை வழியில் காட்டிக் கொடுக்கும் ஒரு அபாயம் இருந்து
கொண்டுள்ளது என மறைமுகமாக காட்ட முயற்சிப்பது போல்
தெரிகின்றது. இதையிட்டு சோசலிச சமத்துவக் கட்சி விசுவாசமானதாக
இருப்பின் அவர்கள் ஏன் உண்மையிலேயே Ü) சிங்களப் படைகளை
வெளியேற்ற நடக்கும் போராட்டத்தை சந்தேகமின்றி நியாயப்படுத்தி
ஆதரிக்க வேண்டும்? ஆ) நான்கு தசாப்தங்களுக்கு மேலாக
தமிழர் நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள சிங்களப் படைகளை
அப்புறப்படுத்தும் முயற்சியை கைவிடப் போகின்றது என்பதை நம்பவைக்கும்
சாட்சியமாக தமிழ் மக்களை எச்சரிக்கை செய்ய வேண்டும்?
இ) தலைமை பதவியை பொறுப்பேற்று படைகளுக்கு எதிரான
போராட்டத்தை ஒரு வெற்றிகரமான முடிவுக்கு இட்டுச் செல்ல
தமது சொந்தப் பொறுப்பை வெளிப்படுத்த வேண்டும்?
அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தவறுகளையும்
அண்மித்துக் கொண்டுள்ள காட்டிக் கொடுப்பையும் பற்றிய குற்றச்சாட்டுகளை
மீளப் புதுப்பிப்பதேயன்றி இதில் எதையும் செய்யப் போவதில்லை.
இந்த தேசிய பிரச்சினையில் சோசலிச சமத்துவக்
கட்சி இதன் மூலம் ஒரு நிஜமான புரட்சிகர தோற்கடிப்புவாத
நிலைப்பாட்டை எடுப்பதைத் தவிர்த்துக் கொண்டுள்ளது. இதனால்
ஆக்கிரமிப்பு நிலைமையின் கீழ் தமிழர்களின் நிலை பற்றிய அவர்களது அக்கறை
கேவலமான ஒரு மோசடி போல் தெரிகிறது.
4) "ஈழம் -இலங்கை ஐக்கிய அரசுகளுக்கான"
சோசலிச சமத்துவக் கட்சியின் சுலோகத்தில் உள்ளடங்கியுள்ள
உயர்ந்த பார்வை உண்மையில் மிகவும் கவர்ச்சிகரமானது.
அனைத்து நிஜமான சோசலிஸ்டுகளும் ஒரு "தென் ஆசிய ஐக்கிய
அரசுகள்" பற்றியும் H.G.
வெல்ஸ் செய்தது போல் சில சமயம் ஒரு "உலக ஐக்கிய
அரசுகள்" பற்றியும் கூடக் கனவு காணலாம்.
எவ்வாறெனினும் அத்தகைய பிரமாண்டமான கூட்டுகள்
சுதந்திர, சமத்துவ அரசுகளின் சுயேச்சையான நடவடிக்கைகள்
ஊடாக மட்டுமே தோன்றும். தேசிய அரசுகளின் பிடியில் இருந்து
உற்பத்திச் சக்திகளை விடுவிப்பதன் மூலம் சாதாரண மக்களுக்கு
இருந்து கொண்டுள்ள பரஸ்பரம் நலன்களை அடைவதன் மூலமே
ஏற்படும்.
எவ்வாறெனினும் இந்த வகையிலான கூட்டு அரச
அமைப்புக்களை சம்பந்தப்பட்ட பிராந்தியங்களில் ஒடுக்கப்பட்டதும்
ஒடுக்குகின்றதுமான தேசியங்கள் இருக்கும் வரை நினைத்தும் பார்க்க
முடியாது.
ஆதலால் ஒரு சுதந்திர ஈழம் என்பது உண்மையில்
தமிழ் மக்கள் ஸ்ரீலங்காவுடன் ஒரு சுயாதீன அடிப்படையில் ஒரு ஐக்கிய
அமைப்பை அமைத்துக் கொள்ள விரும்புகின்றார்களா இல்லையா
என்பதை கலந்தாலோசிப்பதற்கு ஒரு முன்நிபந்தனையாகும்.
சிலவேளை சோசலிச சமத்துவக் கட்சி தெற்கில்
ஒரு அரசாங்கத்தை அமைக்கப் போகின்றதொரு நிலையில்
என்றோ ஒரு நாள் அவர்களது ஈழம்- ஸ்ரீலங்கா ஐக்கிய அரசுகளுக்கான
விடயத்தை ஈழம் தமிழர்களுக்கு முன்வைக்கலாம். ஆனால்
அதைச் செய்வதற்கு அவர்கள் முதலில் தற்சமயம் தமிழீழ விடுதலைப்
புலிகளால் தலைமை தாங்கப்படுகின்றதும் தமிழ் விடுதலைப்
போராட்டத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதன்
மூலமும் சிங்கள மக்களை அதைச் செய்யுமாறு அழைப்பு விடுப்பதன்
மூலமும் தமிழ் மக்களின் நம்பிக்கையை வெற்றி கொண்டாக வேண்டும்.
இதைச் செய்யாமல் "ஐக்கிய அரசுகள்"
சுலோகத்துக்கு சோ.ச.கட்சி வழங்கும் வாயளவிலான சேவைகூட
பெரும்பான்மை தமிழ் மக்களால் அவர்களது போராட்டத்தின்
தீர்க்கமான இக்கட்டத்தில் முன்னணிப் படையை கீழறுக்கச் செய்யும்
மற்றொரு சுற்றிவழைத்த சூழ்ச்சியாகவே பெரிதும் இலகுவாக
நோக்கப்படும்.
SK
|