WSWS : செய்திகள்
& ஆய்வுகள் : ஐரோப்பா:
ஜேர்மனி
Germany : Violence against foreigners increases by 40 percent
ஜேர்மனி : வெளி நாட்டாவர்களிற்கு எதிரான
வன்முறை 40 வீதத்தினால் அதிகரித்துள்ளது
By Dietmar Henning
27 February 2001
Use
this version to print
வலதுசாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டவர்களிற்கு
எதிரான வன்முறை கடந்த வருடம் ஜேர்மனியில் மிகவும் அதிகரித்துள்ளது.
அதிலும் குறிப்பாக கிழக்கு ஜேர்மனியில் வாழும் வெளி நாட்டவர்களுக்கு
ஆபத்து அதிகமாக இருக்கிறது என சமூக ஜனநாயகக் கட்சி (SPD)
யின் உள்நாட்டு அமைச்சரான ஓட்டோ ஷிலி (Otto
Schily) பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு முழுவதிலும் நடைபெற்ற வன்முறைகளின்
உத்தியோகபூர்வமான எண்ணிக்கை இதுவரையிலும் தெரியாமலே
உள்ளது. இதற்கு பொறுப்பான அரசியல்வாதிகளே இது தொடர்பான
அபாயத்தை தெரிவித்துள்ள போதும், அது அவர்கள் இளைத்த
சொந்த குற்றங்களுக்கான காரணங்களை திசைதிருப்புவதற்காகவாகும்.
ஹம்போக்கில் இருந்து வெளிவரும் Die
Woche எனும் பத்திரிகைக்கு கொடுத்த
பேட்டியில் ஷிலி கடந்த 12
மாதங்களில் மாத்திரம் வெளிநாட்டவருக்கு எதிரான வன்முறை 40
வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். ஜனவரி முதல் நவம்பர்
2000
வரையிலும் அதிதீவிர வலதுசாரிகளால் 13,753
குற்றச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
1999 ன்
அதே காலப் பகுதியில் 9,465
வன்செயல்கள் இடம்பெற்றதாக பதிவு செய்யப்பட்டன. வெளிநாட்டவருக்கு
எதிரான வன்செயல்களின் எண்ணிக்கை 397
இருந்து 553
வரை அதிகரித்துள்ளது. இவற்றில் 18%
மானவை வெளிநாட்டவருக்கு எதிரான
குற்றச் செயல்கள் ''கொலை செய்தல், நெருப்பு வைத்தல்,
வெடிகுண்டுகளை வீசுதல் போன்ற வன்முறைகள் நடைபெற்றிருப்பதாக
ஷிலி மேலும் குறிப்பிட்டார். இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட்ட
மூன்றில் இரண்டு பகுதியினர் 21
வயதுக்குட்பட்ட இளைஞர்களாவர்.
Schily யின் அறிக்கைக்கு
முன்னதாக குறிப்பிட்ட, Manfred
Püchel (இவர் SPD
யைச் சேர்ந்த கிழக்கு ஜேர்மனியின் Saxony-Anhalt
மாநிலத்தின் முன்னைய பிரதிநிதியும், மாநில அரசுகளைச் சேர்ந்த
உள்நாட்டு அமைச்சரவையின் தலைவருமாவார்.) இவற்றில் 50
வீதமான வளர்ச்சியை எதிர்பார்த்திருந்ததாகவும், Saxony-Anhalt
மாநிலத்தில் மட்டும் 1,029
பயங்கரவாத வன்முறைகள் வலதுசாரிகளினால் செய்யப்பட்டுள்ளதாகவும்,
இது கடந்த வருடத்தையும் விட 11
வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கிழக்கு ஜேர்மனி வலதுசாரிகளினதும், புதிய நாசிகளினதும்
பயங்கரவாதத்திற்கு மிகவும் ஓர் பலம் வாய்ந்த இடம் எனவும்,
''நடைபெறும் வன்முறைகளில் அரைப்பகுதி நடவடிக்கைகள் இங்கேதான்
இடம் பெறுகின்றன, நாட்டின் மொத்த மக்கள் சனத்தொகையில்
21 வீதத்தினர்
இங்கு வாழ்கின்றனர். வலதுசாரிகளால் மேற்கொள்ளப்படும்
வன்முறைகள், கிழக்கு ஜேர்மனியின் ஒவ்வொரு 100,000
பேருக்கும் இடம் பெறும் வன்முறையானது மேற்கு ஜேர்மனியின்
ஒவ்வொரு 100,000
பேருடனும் ஒப்பிடுகையில் மூன்று மடங்குக்கு அதிகமாக இங்கு
நடைபெறுவதாக அவர் மேலும் தெரிவித்தார். இது 23
க்கு 7
விகிதம் ஆகும். ஒரு மிகக் குறைந்த எண்ணிக்கையைக் கொண்ட
வெளிநாட்டவர்களே கிழக்கு ஜேர்மனியில் இருக்கிறார்கள்
என்பதை ஒருவர் கணக்கில் எடுத்தால், மேற்கூறப்பட்ட
தொகை மிகவும் கவலைக்கிடமானதாகும்'' என Schily
குறிப்பிட்டார்.
இந்த புள்ளி விபரங்கள் பதியப்படாத பல குற்றச்செயல்களை
தவிர்த்துள்ளதை ஊகிக்கலாம். மற்றும் விசேடமாக வலதுசாரிகளின்
சட்ட விரோதமான நடவடிக்கைகளை பதிவு செய்கையில் ''பல
திருத்தங்கள் இடம் பெற்றிருக்கின்றன'' என்பதை உள்நாட்டு மாநில
அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இன்றைய கணிப்பின்படி மொத்தம் ''36
பேர் வரையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள், இப் பயங்கரவாத
நடவடிக்கைகளுக்கான பெறுபேறுகள் 1990
முதல் 2000
ஜூலை வரையிலுமான காலப்பகுதியில் இடம்பெற்ற வலதுசார
தீவிரவாதத்தின் உத்வேகத்தால் மேற்கொள்ளப்பட்டன'' எனக்
குறிப்பிட்டார். கடந்த செப்டம்பரில் Frankfurter
Rundschau மற்றும் Tagesspiegel
போன்ற பத்திரிகைகளின் நிருபர்கள் நவ-பாசிஸ்டுகளால்
கொலை செய்யப்பட்டோரின் விபரமான ஒரு ஆய்வுப் பட்டியலை
வெளியிட்டனர். அதிதீவிர வலதுசாரிகளால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள்
முற்றுமுழுதாக ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படாவிட்டாலும்
அவை உத்தியோகபூர்வமான கணக்கெடுப்புடன் முரண்படுவதை
காட்டுவதுடன், அதில் இவர்களில் வெளிநாட்டுக்காரர்கள்,
நாடோடிகள், வீடற்றோர்- என்போர் உட்பட 93
பேர் ஜேர்மனியின் மறு இணைப்புக்குப் பின்னாலான 10
வருடத்திற்குள் கொலை செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரியவருகிறது.
ஆறு மாதத்துக்கு முன்னால் இந்தப் பட்டியல்
வெளிவந்தபோது, Schily
அமைச்சரவை புள்ளிவிபரப்பட்டியலை பரிசீலனை செய்யப் போவதாக
அவசரமாகத் தெரிவித்தார். அதற்குப் பின்னால் வலதுசாரி பயங்கரவாதத்தால்
மேற்கொள்ளப்பட்ட கொலைகள் தொடர்பான உத்தியோகபூர்வமான
எண்ணிக்கை கடந்த செப்டம்பருக்குள் 26
லிருந்து 36
வரைக்கும் சென்றுவிட்டது. ஆனால் இதுவும் பத்திரிகை நிருபர்களுடைய
எண்ணிக்கையிலிருந்து அரைவாசியாகவே உள்ளது.
ஜேர்மனியில் வளர்ச்சியடையும் வலதுசார பயங்கரவாதத்தைப்
பற்றிக் கேட்கையில், Schily மிகவும்
புகழ்பெற்ற கம்யூனிச விரோத அபிப்பிராயமான ''சோசலிசத்தின்
தோல்வி'' இது எனக் கூறிக்கொண்டார். ''GDR
(முன்னைய ஸ்ராலினிச ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு) ஆட்சிமுறை
அங்கே பெருமளவிலான உளவியல் மற்றும் ஆன்மீக ரீதியான பாதிப்புக்களை
ஏற்படுத்தியுள்ளது.'' என அவர் மேலும் தெரிவித்தார். ஆனால் உண்மையில்
இந்த உளவியல் பாதிப்பு ஸ்ராலினிச SED
(ஜக்கிய சோசலிச கட்சி) அரசாங்கத்தை சோசலிசத்துடன் ஒப்பிடுவதுடன்,
சோசலிச முன்னோக்கை பல தொழிலாளர்களின் கண்ணெதிரே மதிப்பிழக்க
செய்ததில் தங்கியுள்ளது.
WSWS (உலக சோசலிச
வலைத் தளம்) முன்னர் ஏற்கனவே பிரசுரித்திருந்த அதன் கட்டுரைகளில்,
கிழக்கு ஜேர்மனியில் தோன்றி இருக்கும் வலதுசாரி பயங்கரவாதத்துக்கு
SED யின்
தேசியவாதக் கொள்கைகளும் GDR
அரசாங்கத்தின் பொறுப்பும் தொடர்பாக மிகவும் விபரமாக எடுத்துக்காட்டி
எச்சரிக்கை செய்திருந்தது. கிழக்கு ஜேர்மனியில் அதி தீவிர வலதுசாரித்தனம்
பரவுவதற்கான காரணங்கள் பல உள்ளன. ஆனால் இதைப் பற்றிய
அனைத்து விளக்கங்களையும் அவற்றிற்கான கடந்த காலத்துடன்
தொடர்புபடுத்த முடியாது.
கிழக்கில் நிலவும் இந்த ''உளவியல் ரீதியான பாதிப்பு'',
இது அநேகமாக ஜேர்மனியின் மறு இணைப்பிற்கு பின்னால் ஏற்பட்டிருக்க
முடியுமா எனும் கேள்விக்கு உள்நாட்டு அமைச்சரால் பதிலளிக்க
முடியாமல் போய்விட்டது. உண்மையில் இது ஒரு வெளிப்படையான
பதில்தான். உத்தியோகபூர்வமான வேலையில்லாத் திண்டாட்டம்
மேற்கை விட கிழக்கு ஜேர்மனியில் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.
முன்னைய GDR
ன் தொழிற்துறை இடங்களில் நால்வருக்கு ஒருவர் எனும் வீதப்படி
வேலையில்லாமல் இருக்கின்றனர், எனவே இங்கிருந்த உழைக்கும்
மக்களில் பெரும் பகுதியினர் இவ் இடங்களை விட்டு ஏற்கனவே வெளியேறி
விட்டனர். இந் நிலமைகள் குறிப்பாக, இளைஞர்களைப் பொறுத்தமட்டில்
மிகவும் மோசமாக உள்ளன.
அதிகரித்துச் செல்லும் வேலையில்லாத் திண்டாட்டம்
ஒருபக்கம் இருக்க, வசதியற்ற நகராட்சி மன்றங்களால் நடாத்தப்பட்ட
பொதுஜன நூல் நிலையம், இளைஞர் கழகங்கள் போன்றவை பல
சமூக சேவை வசதிகளுக்கான செலவுகள் இரத்து செய்யப்பட்டு
பின்னால் அவைகள் மூடப்பட்டுள்ளன.
அங்கே வளர்சியடையும் திருப்தியின்மையை, ஒரு முற்போக்கான
முறையில், சோசலிசத்தை நோக்கி செல்ல முடியாமல் இருப்பதற்கான
ஒரு பெரிய பங்கை PDS
(ஜனநாயக சோசலிச கட்சி, இது SED
யின் ஒரு வாரிசுக் கட்சியாகும்) வகிக்கிறது. இது தன்னை ஒரு
சோசலிசக் கட்சி என கூறிக்கொள்கிறது, ஆனால் இதனுடைய
நடைமுறை ஒரு முதலாளித்துவக் கட்சியைப் போன்றுள்ளது. இது
அரசியல் செல்வாக்கை கொண்டுள்ள மாநிலங்களில், SPD
யுடனும் CDU
(கத்தோலிக்க ஜனநாயகக் கட்சி) உடனுமான போட்டியில்
தன்னை ஒரு அரசாங்கத்தை பாதுகாக்கும் கட்சியாக காட்டிக்
கொண்டும், மேலும் அரசாங்கத்தின் சேமிப்புத் திட்டத்தை இது
கடுமையாக அமுல் படுத்தவுமாக முன்னணியில் நிற்கிறது. இவ்வாறான
ஒரு நிலமைகளின் கீழ், சமூக, அரசியல் நெருக்கடிகள், வலதுசாரி
மற்றும் நவ-பாசிச நலன்களுக்கான அடித்தளத்தை பெற்றுக்கொள்கிறது.
பாராளுமன்றத் தலைவர் Wolfgang
Thierse (SPD) என்பவர் கிழக்கு ஜேர்மனியின்
நிலமைகளைப் பற்றிய தனது ஓர் யதார்த்தமான மதிப்பீட்டை சில
வாரங்களுக்கு முன்னால் பகிரங்கப் படுத்தினார். அவர் அதன்
மூலம் கிழக்கு ஜேர்மன் SPD
அங்கத்தவர் மத்தியில் ஆத்திரமூட்டலை உருவாக்கினார். மற்றும்
சில விடயங்களில் அவருடைய கணிப்பு, ''வலதுசாரி பயங்கரவாதம்
மேற்கை விட, கிழக்கில் தனது சுயரூபத்தை காட்டியுள்ளது எனவும்,
அது அங்கே சாதாரண சமூக வாழ்கையுடன் இணைந்து கொண்டுள்ளது''
எனவும் தெரிவித்தார். மேலும் அவர், ''பொருளாதாரம்,
அரசியல் மற்றும் சமூக ரீதியாகவும் கிழக்கு ஜேர்மனி ''பொறிந்து
விழும் தறுவாயில்'' உள்ளது எனவும் தெரிவித்தார். இவருடைய கருத்துக்கு
அங்கு எவருமே முரண்பாடான பதில்களை தெரிவிக்கவில்லை.
எனினும் இவரால் பகிரங்கப் படுத்தப்பட்ட மதிப்பீட்டை தள்ளி
வைக்கவும், அநேகமாக அதை வாபஸ் வாங்கவும், விசேடமாக
கிழக்கு ஜேர்மனியின் மாநில மந்திரிகளால் அவர் நிர்பந்திக்கப்பட்டார்.
அவருடைய அறிக்கை அனேகமாக சரியாக இருக்கலாம்,
ஆனால் அவற்றை இவ்வாறு உரத்துக் கூறுவதன் மூலம், கிழக்கு
ஜேர்மனியில் முதலீடு செய்பவர்களை திகைப்படைய செய்யக் கூடாது
என்பதே Thuringia
மாநிலத்தின் நீதித்துறை அமைச்சரான Andreas
Birkmann என்பவரின் Wolfgang
Thierse தொடர்பான மதிப்பீடாகும்.
அவர் அங்கு நடைபெறும் அநேகமான குற்றச் செயல்களை
''இவை இளைஞர்களால் காட்டப்படும் ஒரு எதிர்ப்பு எனவும்'',
இவற்றில் ''நாம் ஒன்றில் உண்மையில் அரசியலில் ஈடுபாடுடைய
குற்றவாளிகளுடனா, அல்லது தற்காலிகமாக ஒரு சில காலத்திற்கு
வலதுசாரி வட்டத்திற்குள் போய்விட்ட குற்றவாளிகளுடனா நாம்
அணுகுகின்றோம் என்பது முக்கியமானது'' எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றை வேறுவார்த்தைகளில் கூறுவதாயின், இளைஞர்கள் காட்டும்
எதிர்ப்புக்களின் ஒரு வடிவம்தான் அங்கு நடைபெறும் வலதுசாரி
பயங்கரவாதம் என்பதாகும்.
வலதுசாரி பயங்கரவாதத்துக்கு எதிராக கடந்த
வருடம் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சார
இயக்கத்தின் அதே காலப் பகுதியில்தான் வலதுசாரி பயங்கரவாத்தின்
வளர்ச்சியும் அதிகரித்துக் காணப்பட்டது என்பது ஓர் அப்பட்டமான
உண்மை. Otto Schily
இந்த உண்மையை மூடி மறைப்பதற்காக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட
பிரச்சார இயக்கத்தால் மக்கள் இப் பிரச்சனை சம்பந்தமாக
விழிப்படைந்துள்ளனர் எனவும், வலதுசாரி குற்றவாளிகளுக்கு கூடுதலான
தண்டனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன, மேலும் வலதுசாரிகளை
மிகவும் பகிரங்கமாக அடையாளம் கண்டுகொள்ள பொதுஜன
அலுவலகங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.
இது ஒரு அமைதிப்படுத்தலுக்கான வாக்குவாதம்
ஆகும். உண்மையில் இந்த அரசாங்கத்தின் பிரச்சார இயக்கம்தான்
வலதுசாரி வளர்ச்சிக்கான உந்துதலை வழங்கியது. அரசாங்கத்தின்
சேமிப்புத் திட்டத்தின் கீழ் சமூக சேவை உத்தரவாதங்கள் தொடர்ச்சியாக
அழித்தொழிக்கப்பட்டு, தன்னலவாதம் போற்றிப் புகழப்படுகிறது.
அதே சமயம் அரசாங்கத்தின் வலதுசாரிகளுக்கு எதிரான பிரச்சாரம்
எல்லாவற்றிற்கும் மேலாக சட்டங்களை மேலும் இறுக்கமாக்குவதையும்,
அரச எந்திரங்களை பலப்படுத்துவதையும் நோக்கமாகக்
கொண்டுள்ளது. ஜனநாயக உரிமைகள் திட்டவட்டமான முறையில்
அழிக்கப்பட்டு, மேலும் இறுக்மாக்கப்படவுள்ளன. அனைத்து
அரசியல் கட்டுமானங்களும் ஒரு வலதுசாரி திசையை நோக்கி பயணம்
செய்வதால், இவை வலதுசாரி குற்றவாளிகளால் போற்றிப் புகழப்படுகின்றன.
இவ்வாறான நிலமைகளுக்கு கீழ் வெளிநாட்டவர்களுக்கு
எதிரான அரசாங்கத்தின் இனவாத அரசியலை கவனத்திற்கு எடுப்பது
பொருத்தமானது. அரச அலுவலகங்களில் நாளாந்தம் முன்னெடுக்கப்படும்
இனவாத அரசியல்களில், குறிப்பாக உள்நாட்டு அமைச்சர் ளிttஷீ
ஷிநீலீவீறீஹ் யும் இதில் முக்கிய பங்கை வகித்துள்ளார். கடந்த வருடம்
அகதிகள் பற்றிய விடயத்தில், சித்திரவதைகள், கொலைகள், மற்றும்
பசி போன்றவற்றில் இருந்து பாதுகாப்பு தேடி ஜேர்மனிக்கு வந்துகொண்டிருந்த
அகதிகளைப் பற்றி ''ஜேர்மனி அகதிகளைக் கொள்ளக்கூடிய தனது
அளவின் எல்லையை வந்தடைந்து விட்டது'' என அவரே தெரிவித்துள்ளார்.
ஜேர்மனிக்குள் அகதிகளின் வருகையை கடினமாக்குவது, வரமுடியாமல்
செய்வது அல்லது ஜேர்மனிக்குள் வந்துவிட்டவர்களை விரைவாக
பிடித்து வெளியேற்றுவது போன்ற வேலைகளை செய்யும் பவேரியா
மாநிலத்தின் வலதுசாரி அமைச்சரான
Günter Beckstein (CSU, கிறீஸ்தவ சமூக
யூனியன்)
என்பவருடன் அவர் மிக நெருக்கமாக இணைந்து வேலை செய்கிறார்.
Beckstein என்பவர், Schily
னுடைய மிக நெருங்கிய ஒரு நண்பர், அவர் வெளிநாட்டுக்காரர்களை
''நாங்கள் பாவிக்ககூடியவர்கள் எனவும், நம்மை சுரண்டுபவர்கள்''
எனவும் வகைப்படுத்துகின்றார். இது ''வெளிநாட்டுக் காரர்களை
வெளியேற்று'' எனும் நாசிகளின் சுலோகத்தை ஒரு இராஜதந்திர
பாணியில் கையாள்வதாகும். இவ்வாறான அரசியல் மீதுதான் சில
இளைஞர்கள் ஈர்க்கப் பட்டுள்ளார்கள்.
|