WSWS :செய்திகள்
& ஆய்வுகள் :ஆசியா:பாகிஸ்தான்
Pakistani regime allows jailed prime minister Sharif to go into exile
சிறை வைக்கப்பட்டிருந்த பிரதமர் ஷெரீப் நாட்டில்
இருந்து வெளியேற பாகிஸ்தான் ஆட்சி அனுமதி
By Vilani Peiris
19 December 2000
Use
this version to print
டிசம்பர் 10ம் திகதி பாகிஸ்தானிய இராணுவ ஆட்சியாளர்கள்
பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் நவாஸ் ஷெரீபை சிறையில்
இருந்து விடுதலை செய்யவும் சவூதி அரேபியாவுக்கு நாடு கடத்தவும்
போவதாக திடீரென அறிவித்தனர். இந்த உடன்பாட்டின் ஒரு பாகமாக
ஷெரீப் வெளிநாட்டில் இருக்கும் போது அரசியலில் இருந்து ஒதுங்கிக்
கொள்ளவும் 10 மில்லியன் டாலர்கள் மதிப்பான நிலம், வங்கி, கைத்தொழில்
சொத்துக்களை இழக்கவும் இணக்கம் தெரிவித்துள்ளார். இதே
சமயம் ஷெரீபுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படட்டுள்ள
போதிலும் அவர் 21 வருடங்களுக்கு அரசாங்கப் பதவிகளை வகிப்பதற்கு
தகுதியற்றவராக செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் ஜெனரால் பேர்வஸ்
முஷாராப் தலைமையிலான பாகிஸ்தான் இராணுவம் ஒரு தெரிவு செய்யப்பட்ட
அரசாங்கத்தை சதிப்புரட்சி மூலம் பதவி நீக்கம் செய்தது. ஷெரீப்
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதோடு விமானக் கடத்தல்,
கொலை முயற்சி முதலிய போலி குற்றச் சாட்டுக்களின் பேரில்
பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்காக நிறுத்தப்பட்டார்.
அவரது சகாக்களுடன் சேர்ந்து ஷெரீப் குற்றவாளியாகக் காணப்பட்டதோடு,
ஆயுட்காலச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு
எதிராக ஊழல் குற்றச் சாட்டுக்களும் சுமத்தப்பட்டன.
ஷெரீபின் தகப்பன், மனைவி, மகன், சகோதரன் உட்பட
16 குடும்ப அங்கத்தவர்கள் சவூதி மன்னர் குடும்பத்தினால் வழங்கப்பட்ட
ஒரு விமானத்தில் ஷெரீபுடன் சவூதி அரேபியா சென்றனர். இவர்கள்
மன்னர் குடும்ப அங்கத்தவரான அப்துல் மஜீத்தினால் அங்கு வரவேற்கப்பட்டதோடு
ஜெட்டாவில் உள்ள ஒரு ஆடம்பர மாளிகையில் வதிவிடமும் வழங்கப்பட்டது.
ஒரு சவூதி அரேபிய அதிகாரியின் தகவலின்படி ஷெரீப் "இராணுவ ஆட்சியாளர்களுக்கு
எதிரான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாது இருப்பதை"
சவூதி அரேபியா ஊர்ஜிதம் செய்யும்.
அமைச்சரவையில் பேசிய பாகிஸ்தான் இராணுவ
தளபதி முஷாராப் "இத் தீர்மானம் பெரும் தேசிய நலனின்
பேரில் எடுக்கப்பட்டதாகத்" தெரிவித்தார். ஆனால் அவர்
அதை தெளிவுபடுத்தவில்லை. பல மாதங்களாக பேச்சுவார்த்தைகள்
இடம்பெற்று வந்தன. முஷாராப் சவூதி அரேபியாவுக்கு பல தடவைகள்
விஜயம் செய்தார். அவரது பேச்சில் இது "சகோதர நாட்டின்
வேண்டுகோளின் பேரில்" செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
ஷெரீப் குடும்பத்துக்கு கருணை காட்டும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் உடல்நலக் குறைவுகளை
கொண்டிருந்ததோடு வைத்திய நிபுணர்களின் சிகிச்சை அவசியமாக்கப்பட்டது.
ஷெரீபை விடுதலை செய்வது என்ற ஷெரீபின் தீர்மானம்
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆட்சியாளர்களின் ஆட்டங்கண்ட
நிலையுடன் தொடர்புபட்டது. சதிப்புரட்சி இடம் பெற்ற சமயத்தில்
அமெரிக்காவும் மற்றும் பெரும் வல்லரசுகளும் முஷாராபுக்கு
எதிராக எதுவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இராணுவ
ஆட்சிக்கு ஒரு ஜனநாயக சாயம் பூசும் நெருக்குவாரங்களுக்கு
முஷாராப் உள்ளானார். அத்தோடு ஜனநாயக வடிவங்களுக்கு
மீளத் திரும்பும் "இறுதி" நிகழ்ச்சி நிரலையும் அவர் வகுத்துக்
கொள்ள நேரிட்டது. முதல் நடவடிக்கையாக உள்ளூராட்சி
சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளன.
கடந்த ஒன்றரை வருடகாலமாக அமெரிக்கா
பாகிஸ்தானின் போட்டியாளரான இந்தியாவின் பேரில் கணிசமான
கொள்கை மாற்றங்களை செய்து கொண்டதைத் தொடர்ந்து,
அது அரசியல் ரீதியிலும் இராஜதந்திர ரீதியிலும் பெரிதும் தனிமைப்படுத்தப்பட்டது.
ஷெரீபின் விடுதலை, பாகிஸ்தானின் அனைத்துலக அந்தஸ்த்தை பலப்படுத்திக்
கொள்வதை இலக்காகக் கொண்டு செய்யப்பட்ட ஒரு
தொகை நடவடிக்கைகளின் ஒரு பாகமாக விளங்குகின்றது. டிசம்பரின்
தொடக்கத்தில் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் காஷ்மீரில் இந்தியாவின்
ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்தத்துக்கு சாதகமாக செயற்பட்டனர்.
இந்திய, பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலான காஷ்மீர் எல்லைக்
கோட்டினூடாக இராணுவம் "அதிகூடிய கட்டுப்பாட்டை"
கடைப்பிடிக்கும் என பாகிஸ்தான் அறிவித்தது.
மாஜி பிரதமரை விடுதலை செய்யும் தீர்மானத்தை
அமெரிக்காவும், மற்றும் மேற்கத்தைய வல்ரசுகளும் வரவேற்றுள்ளன.
இப்பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா நேரடியாக தொடர்புபட்டிருக்கலாம்
என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. பாகிஸ்தான் பத்திரிகையான
"நியூஸ்" அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபைப் பேச்சாளர்
குரோவ்லி பின்வருமாறு கூறியதாகத் தெரிவித்தது: "நாம் சவூதி
அதிகாரிகளுடனும் ஷெரீப் குடும்பத்துடனும் முஷாராப் ஆட்சியாளர்களுடனும்
தொடர்பு கொண்டுள்ளோம்." ஷெரீபின் குடும்ப அங்கத்தவர்களில்
சிலர் சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி கிளின்டனை சந்தித்ததாகவும்
அவர் உதவுவதாக வாக்குறுதியளித்ததாகவும் பத்திரிகை செய்தி வெளியிட்டது.
நாட்டின் படுமோசமான நிதி நிலைமையை சீர்செய்ய
முஷாராப், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து மேலதிக கடன்
உதவிகளை பெறுவதில் ஈடுபட்டுள்ளார். பாகிஸ்தான் 38 பில்லியன்
டாலர்களை வெளிநாட்டுக் கடனாக கொண்டுள்ளது. நவம்பர்
29ம் திகதி சர்வதேச நாணய நிதியம் 596 மில்லியன் டாலர்களை வழங்கத்
தீர்மானித்தது. 1998ம் ஆண்டின் இந்திய, பாகிஸ்தானிய அணுவாயுத பரீட்சைகளைத்
தொடர்ந்து விதிக்கப்பட்ட அனைத்துலக தடைகளின் பின்னர் சர்வதேச
நாணய நிதியம் கடன் வழங்குவது இதுவே முதல் தடவை.
ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் பொதி ஒரு
தொகை சிக்கன நடவடிக்கைகளை உள்ளடக்கிக் கொண்டுள்ளது.
இது மறைமுக வரிகளை திணிப்பதையும் அடக்கியுள்ளது. இது இராணுவ
ஆட்சியாளர்களுக்கு எதிரான எதிர்ப்புக்கு எண்ணெய் வார்க்கும்.
ஸ்டேட் பாங்க் ஒப் பாகிஸ்தான் (State
Bank of Pakistan) சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் அத்தியாவசிய
சேவை செலவினங்களும் பெற்றோல் விலையும் வரிகளும் அதிகரிக்கும்
என குறிப்பிட்டது. இன்றைய உயர்மட்ட வேலையில்லாத் திண்டாட்டமும்
அதிகரிக்கும் எனவும் அது குறிப்பிட்டுள்ளது. அரசுடமை கைத்தொழில்களை
தனியுடமையாக்க அரசாங்கம் முயற்சிப்பதால் இந்நிலைமை ஏற்படும்
என அது மேலும் குறிப்பிட்டுள்ளது.
ஷெரீபை நாடு கடத்துவதன் மூலம் ஆட்சியாளர்கள்
அதனது முக்கிய அரசியல் எதிரிகளில் ஒருவரை நீக்குவதாக கணக்கிட்டுக்
கொண்டுள்ளது என்பதில் சந்தேகம் கிடையாது. அத்தோடு இது
எதிர்க் கட்சியையும் பிளவுபடச் செய்கின்றது. அமைச்சரவை
அதனது அறிக்கையில் "(ஷெரீபின் விடுதலை) துருவப்படுத்தலை
குறைத்து அரசியல் அரங்கில் அமைதியை உருவாக்கும்" எனக்
குறிப்பிட்டது. உள்நாட்டு அமைச்சரான லெப்டினென்ட் ஜெனரால்
மொயிறுதீன் ஹைடர், மாஜி பிரதமர் பெனாஷீர் பூட்டோவின் சிறையில்
உள்ள கணவர் அசிவ் ஷாடருடன் ஒரு உடன்படிக்கை செய்து கொள்ளும்
தயார் நிலையையும் காட்டிக் கொண்டுள்ளார்.
இராணுவத்துடன் "அரசியல் வைத்துக் கொள்வது
இல்லை" என உடன்படிக்கை செய்து கொள்ள ஷெரீப் எடுத்த
முடிவு, பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கினுள் (PML) பிளவுகளை
ஏற்படுத்தியுள்ளது. இக்கட்சியின் ஒரு பகுதியினர் ஷெரீப் நாட்டை விட்டு
ஓடியதை கண்டனம் செய்துள்ளதோடு, கட்சி தலைவர் பதவியில்
இருந்து அவரை விலக்கவும் முயற்சிக்கின்றனர். கட்சியின் ஒரு
மாகாணத் தலைவரான மக்பூல், ஷெரீப் நாட்டை விட்டு
ஒடியமை "கட்சிக்கு ஒரு பின்னடைவு" எனக் கூறியதாக பத்திரிகைகள்
கூறின. ஆனால் ஷெரீபின் ஆதரவாளர்கள் அவரே இன்னமும் கட்சித்
தலைவர் எனக் கூறி வருகின்றனர். பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (PML)
அதனது படுமோசமான எதிரியான பூட்டோவின் பாகிஸ்தான்
மக்கள் கட்சியுடன் (PPP)
ஜனநாயகத்தை புனருத்தாரனம் செய்யும் கூட்டு என்ற
யுன்டா எதிர்ப்பு கூட்டில் இணைவது என சமீபத்தில் எடுத்த ஒரு
முடிவினால் அது ஏற்கனவே பிளவுபட்டுள்ளது.
ஷெரீபின் வாழ்க்கை இந்த யுன்டா எதிர்ப்பு கூட்டின்
எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது. பாகிஸ்தானில் இருந்து
தானாகவே வெளியேறிய பெனாசீர் பூட்டோ, பாகிஸ்தான் முஸ்லீம்
லீக்கிடம் இருந்து தான் ஒரு போதும் "அத்தகைய ஒரு அதிர்ச்சி
தரும் நடவடிக்கையை" எதிர்பார்க்கவில்லை எனக் கூறினார்.
அத்தகைய ஒரு மறைமுகமான உறவுகளை நாம் கணக்கில் எடுக்காதது
ஆச்சரியத்துக்கு உரியதாகும்" எனவும் கூறியிருந்தார். பாகிஸ்தான்
மக்கள் கட்சியின் ஒரு ஒன்றிணைப்பு கமிட்டி இராணுவ யுன்டா ஷெரீபுக்கு
மன்னிப்பு வழங்கியதற்காக அதைக் கண்டனம் செய்தது. இது
"அரசியலமைப்புச் சட்டத்தை அப்பட்டமாக மீறிய செயலாகும்"
என அது குறிப்பிட்டது.
கடந்த ஆண்டில் முஷாராப் ஆட்சியை கைப்பற்றிய
போது அவர் ஷெரீப் அரசாங்கத்துக்கும் பாகிஸ்தான் மக்கள் கட்சியான
பூட்டோவின் எதிர்க்கட்சிக்கும் இருந்து வந்த பரந்த அளவிலான
எதிர்ப்பையும் பயன்படுத்திக் கொண்டார். இராணுவம் ஊழலை
ஒழித்துக் கட்டும் என அவர் வாக்குறுதி வழங்கினார். இதன்
விளைவாக ஷெரீபுக்கு மன்னிப்பு வழங்க எடுத்த முடிவும் சவூதி அரேபியாவில்
ஆடம்பர வாழக்கை வாழ அவரை அனுமதித்தமையும் சில எதிர்க்
கட்சிகளாலும் சில தொடர்பு சாதனங்களாலும் தமது சொந்த
வாய்வீச்சுக்களுக்கு பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.
GÎv (News) என்ற
பத்திரிகையில் வெளியான "அதிகார விளையாட்டில் மற்றொரு
இருள் சூழ்ந்த நாள்" என்ற தலைப்பிலான ஒரு கட்டுரை
கூறியதாவது: "இரு தரப்பினரதும் உடனடி நலன்கள் என்னவாக
இருந்தாலும் நடவடிக்கை அரசாங்கத்தின் பொறுப்பு முயற்சியை
பற்றி கேள்விகளை எழுப்புகின்றது. ஊழல் மிக்கவர்களில் கொழுத்த
மீன் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டு விடுமானால் எதற்காக சிறிய
மீன்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்?" என்றது.
இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சியான ஜமாத்
இஸ்லாமிய கட்சி முஷாராபை இராஜினாமாச் செய்யக் கோரி
டிசம்பர் 17ம் திகதி ஒரு பொதுஜன ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு
செய்தது. அக்கட்சியின் ஒரு பேச்சாளரான கபூர் அகமட் கடந்த
வாரம் கூறுகையில்: "நவாசை விடுதலை செய்ததன் பின்னர்
இராணுவ அரசாங்கம் ஆட்சியில் ஒட்டிக் கொண்டிருக்கவும்
140 மில்லியன் மக்களின் அடிப்படை உரிமைகளைத் தொடர்ந்தும்
மறுக்கவும் எதுவித நியாயமும் கிடையாது" என்றார்.
ஷெரீபை விடுதலை செய்வதன் மூலம் இராணுவ
யுன்டா அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக
தனது கஷ்டங்களை பெருக்கிக் கொண்டுள்ளது. எதிர்க் கட்சிகள்
ஷெரீபை சிறையில் தள்ளியதை எதிர்க்கத் தவறியதை போலவே அவற்றின்
அரசியல் வேறுபாடுகள் என்னவாக இருந்த போதிலும் அவை
ஜனநாயக உரிமைகளைக் காக்கத் தம்மை அர்ப்பணித்துக்
கொண்டுள்ளதாக கூறிக் கொள்வது எவ்வளவு சிடுமூஞ்சித் தனமானதும்
அற்பத்தனமானதும் என்பதை அம்பலமாக்கியுள்ளது.
|