WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா
:ஸ்பெயின்
12 immigrant workers killed at Spanish railway crossing
12
குடிவரவு தொழிலாளர்கள்
ஸ்பானிய ரயில்பாதைக் கடப்பில் கொல்லப்பட்டுள்ளனர்
By Vicky Short
8 January 2001
Back to screen
version
ஸ்பெயினில் மீண்டும் ஒரு மனித அழிவு புலம் பெயர்ந்த
சமுகத்தினருக்கு அடியாக வந்துள்ளது. தை மாதம் 3 ம் திகதி
காலை 7.40 மணிக்கு தென்கிழக்கு ஸ்பானில் லொர்கா என்னுமிடத்தில்
சிறு புகையிரதம் ஒன்று எக்குடோரில் இருந்து வந்திருந்த 14
விவசாய தொழிலாளர்களை ஏற்றிவந்த வாகனம் புகையிரத
பாதை கடப்பை குறுக்கறுத்துச் சென்றபோது மோதியதில்,
வாகனம் 200 மீற்றறருக்கு அப்பால் அதேதிசையில் தூக்கிவீசப்பட்டு
நொருங்கியது. அதில் இருந்தவர்களில் -எட்டு ஆண்கள் நான்கு
பெண்கள் உட்பட-12 பேர் கொல்லப்பட்டனர். மரணமடைந்தவர்களில்
ஓர் தாயும் மகனும் மேலும் ஓர் தகப்பனும் மகனும் அடங்குவர்.
தொழிலாளர்கள் எவரும் எந்தப் பத்திரங்களையும்
தம்முடன் கொட்டிராததனால் அடையாளம் காணுதல் கடினமமானதாகவே
இருந்தது, எனினும் பின்னர் சொந்தக்காரர்கள் இறந்தவர்களில்
எட்டுப் பேரை அடையாளம் காட்டினர், இவர்களுள் ஏழுபேர் ஓறாவினது
எக்குடோரியன் பிராந்தியத்திலிருந்து வந்திருந்தனர். இதில்
படுகாயமடைந்த, 46 வயதான சாரதியான நொ எலியோ
எலியாஸ் லியோன் என்பவரும் மற்றுப் சிறுகாயமடைத்த 13 வயது
நான்சி போறாஸுமே உயிர் தப்பியவர்களாவர். அவள் கூறினாள்
"வீட்டிற்கு பணம் சேர்க்க உதவவேண்டியிருந்தது", அவள்
இந்த விபத்து நடப்பதற்கு சிலநாட்கள் முன்னதாக காலை முறித்துக்கொண்ட
அவளது தாயின் இடத்திற்காக வத்திருந்தாள். அடையாளம் காணப்பட்ட
சடலத்தில் ஒன்று 16 வயது பையனுடையதாகும். இருந்தபோதிலும்
மோதிய இவ் உள்ளூர் இரயிலின் மூன்று பெட்டிகள் தடம் தவறின,
இதன் 30 பயணிகளுக்கு சிறிய காயங்களே ஏற்பட்டது.
இப் பெயர் குறிக்கப்படாத இரயில் பாதைக்
கடவை ஸ்பெயினில் இப்பொழுதுவரை இருந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கனவற்றுள்
ஒன்றாகும். இவை தடுப்பு படலை [Barriers]
எதுவும் இல்லாது இருப்பதுடன் ஆக STOP
அடையாளம் இடப்பட்ட தாங்கி மரங்களையே
கொண்டுள்ளன.
என்ன நிலைமைகளின் கீழ் இவ் விபத்து நடந்தது
என்பது இன்னும் தெளிவாகவில்லை. இந்த வண்டி பாதையைக்கடப்பதற்கு
முன்னதாக ரயில்பாதைக்கு சமாந்தரமாக எதிர்ப்போக்கில்
பயணம் செய்ததாக அறிவிக்கப்பட்டது. நான்சி பொறஸ் பின்னர்
வைத்தியசாலையிலிருந்து கூறியபோது தான் முதலாவதாக இரயில்
நெருங்கிவருவதை சாரதிக்கு எச்சரித்ததாக கூறினாள். "அதையவர்
பார்த்திருந்திருப்பார் என நான் நினைக்கவில்லை" என்றாள்.
இங்கு தொழிலாளர்கள் பயணம் செய்த இவ் வாகனம்
பத்துவருடம் பழமையான எட்டு இருக்கைகள் கொண்ட Fiat
Talento Supercombi van ஆகும், இது இச்
சாரதியினால் தொழிலாளர்களை வேலைத்தளத்திற்கு ஏற்றிச் செல்வதற்காக
மறுகைப்பாவனையாக(second
hand) வாங்கப்பட்டிருந்தது. UGT
தொழிற்சங்கத்தின் கூற்றுப்படி, சாரதி
ஒருநாளைக்கு பலதடவகள் எற்றி இறக்ககுபவர்- பேச்சு-ஒப்பந்தத்தில்
வேலைக்கு அமர்த்தப்படும் இத் தொழிலாளர்கள் piecework
rates இற்கே வேலைவாங்கப்படுகின்றனர்.
இவர் மட்டுமே இவ் வகனத்தில் பயணித்தவர்களில் ஒழுங்கான
வேலையும் வதிவிட பத்திரமும் கொண்டிருந்தவராக இருந்தார்.
இந்த விபத்து நடந்த காலையில் வழக்கம்
போல நொஎலியொ எலியாஸ் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு
Puerto Lumbreras
இற்கு broccoli தாவர
அறுவடைக்கு ஒரு நாள் வேலையை தொடங்குவதற்காக
சென்றார், மொறிசியா மாவட்டடத்தில் ஆயிரக்ககணக்கான எக்ககுடொரியர்கள்
தினந்தோறும் இதேபோன்ற வேலைகளைச் செய்கின்றனர். இத்தொழிலாளர்கள்
இவ்வாறாகவே Greensol S.L இல்
வேலைசெய்கின்றனர், இது ஒரு விவசாய உற்பத்தி வியாபார விடையங்களுடன்
சம்பந்தப்பட்ட சிறிய நிறுவனமாகும். இந் நிறுவனம் இப்பொழுது
வங்குரோத்து அடந்துவிட்டதாக அறிவித்துள்ளது, எனினும்
தொழிலாளர்களுக்கு அதனது அற்பமான கூலியைக்கூட வளங்காமல்
வேறு பெயரில் அதனது வியாபாரங்களை தொடர்ந்துகொண்டிருக்கின்றது.
விபத்தினது செய்தி அறியப்பட்டதும் எந்தவொரு முகாமையாளரோ
அல்லது வேலைத் தரகர்களோ அங்கு காணப்படவில்லை அத்துடன்
Greensol இன்
உரிமாயாளர்களும் உடனே பின்வாங்கிவிட்டனர்.
முர்சியா அல்மெரியாவிற்கு அயலில் உள்ளது, இப்பகுதிகளில்தான்
கடந்தவருடம் முகலாய (முஸ்லீம்) குடிவரவு தொழிலாளர்கள் மீது
பல இனவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. ஸ்பெயினின்
தென்கிழக்குப் பிராந்தியத்தின் பகுதியான இது மிக இலாபகரமாக
மரக்கறி உற்பத்தி செய்துவருகின்றது. Hot
house முறையின் அபிவிருத்தியானால் வருடத்திற்கு
இரண்டு அல்லது மூன்று ஏன் நான்கு harvests
கள் கூட பண்ணமுடிவதுடன் இதற்கு வெளிநாட்டு
வேலையாட்கள் பருவவேலை என்னும் வழக்கில் பயன்படுத்தப்படுவதுடன்
அவர்களுக்கு மிகமோசமான குறைந்த கூலி வழங்கப்படுவதுடன்
அவர்கள் எந்தவொரு உரிமைகளையும் அனுபவிக்காத நிலையிலேயே
உள்ளனர்.
அரசு சார்பற்ற அமைப்புகள் 12,000 எண்ணிக்கையிலான
எக்குடோரியன் தொழிலாளர்களை லோர்க்காவில் தனியாக
விட்டுள்ளனர், இத்துடன் எல்லாமாக 20,000 அளவிலானோர் இவ்வாறாக
முர்சியா பிராந்தியத்தில் உள்ளனர். எக்குடோர் நாட்டின் சனத்தொகையில்
அறுபத்தைந்து வீதமானவர்கள் வேலையற்றவர்களாகவோ அல்லது
கீழ்நிலையான வேலை செய்பவர்களாகவோ இருக்கின்றார்கள்.
கடந்த இரண்டு வருடங்களில் கிட்டத்தட்ட அரை மில்லியன் (ஐந்து
இலட்சம்) மக்கள் இந்நாட்டை விட்ட வெளியாறியிருப்பர் என
நம்பப்படுகின்றது, இதில் பலர் ஸ்பெயினுக்கு பயணப்பட்டனர்.
முர்சியாவில் அவர்கள் ஒரு சில ஆபிரிக்கன் தொழிலாளர்களை
தவிர எல்லோருமே எக்குடோரியன் ஆவார்கள். தொழிலதிபர்களினது
அபிப்பிராயம் என கூறுவதன்படி அவர்கள் எக்குடோரியன்
தொழிலாளர்களையே பெரிதும் விரும்புகின்றனர் ஏனெனில் அவர்கள்
(தமது) மொழிபேசுபவர்கள், கடுமையாக வேலைசெய்பவர்கள்
அத்துடன் அதிகம் "இங்கிதம்" உள்ளவர்களாக இருக்கின்றனர்.
ஒவ்வொரு நாள் காலையிலும், இவர்களில் நூற்றுக்
கணக்கானோர் லொர்காவில் உள்ள Plaza
del Ovalo இல் குவிகின்றனர், இவர்கள் சிறிய
விவசாய முகாமையாளர்கள் மற்றும் விவசாய வியாபாரம் செய்யும்
இடைத்தரகர்கள் தம்மை ஒரு நாள் வேலைக்கு தெரிவுசெய்வதற்காக
காத்துக்கிடக்கின்றனர். பின்னர் அவர்கள் "வான்"களில்
நெருக்கமாக அடைந்து ஏற்றப்பட்டு broccoli
மற்றும்
lettuces பயிர்கள் ஒன்றுகுவிக்கப்படும்
மற்றும் பதன்பண்ணப்படும் வயல்கள், பச்சை நிலபுலங்கள் மற்றும்
சேமிப்பு நிலையங்கள் என்பவற்றிகு கொண்டுசெல்லப்படுகின்றனர்,
அங்கு மணித்தியாலத்திற்கு ஏறத்தாள $3
என்னும் அளவிற்கு 11 மணிநேரம் வேலைசெய்கின்றனர். இதற்கு
இன்னொரு முறையில், அவர்கள் வேலையின் அளவுக்கு (
piecework basis) என்னும் அடிப்படையில்
ஒப்பந்தப்படுத்தப்பட்டு 1 கிலோ broccoli
க்கு10 pesetas (1US
சதத்திலும் குறைந்த) அளவில் அவர்களுக்கு
வழங்கப்படுகின்றது. தொழிலாளர் பருசோதகர்களிடமிருந்து (Labour
inspectors) தப்புவதற்காக வழக்கமாக
தொழிலதிபர்களினால் இரவு வேலைக்கு வற்புறுத்தப்படுவதுடன்
அவர்கள் வேலைசெய்யக்கூடாது என கட்டுப்படுத்தப்பட்டிருப்பின்
அவர்கள் தாம் கட்டுப்பாட்டு சபைக்கு வேலைசெய்வதாக
அறிவிக்கப்பட்டுவிடுவோம் என்னும் பயத்தில் தொடர்து இருந்துகொண்டிருக்கின்றனர்.
மெஸ்டெஸ் என்றழைக்கப்படும், இச்சம்பவத்தில்
உயிரிழந்த ஒரு பெண்ணின் சகோதரியான நிறீணீபீஹ்s
விணீக்ஷீணணீ லிஷீணீஹ்க்ஷ்ணீ சிணீஜீணீ பீமீ லிமீரஸீ என்பவள் எனது
சகோதரி இன்று உயிருடன் இருந்திருந்தால் அவள் வேலை மற்றும்
வதிவிட பத்திரங்களைப் பெற்றிருந்திருப்பாள் என கூறினாள். " இந்த
வான் விடிவதற்கு முன்னரே லோர்க்காவை விட்டுப்புறப்பட்டுவிட்டது,
ஏனெனில் இரவில் எல்லாப் பூனைகளுமே சாம்பலாக இருக்கும்
என்பதனால். சாரதி பாதுகாப்பானதோ அல்லது குறைந்ததூரமானதுமான
பெரும் போக்குவரத்து சாலையை தெரிவுசெய்யவில்லை, காரணம்
அங்கே வழக்கமாக வழிப்பரிசோதனை செய்யும் காவலர்களை
சந்திக்கும் ஆபத்து உள்ளது என்பதினாலாகும். ஆகவே அவர்கள்
கறைந்த நெருக்கடி உள்ள இரட்டாம் பட்சமான பாதையைத்
தெருவுசெய்தனர்". மேலும் அவள், அவர்கள் பெரும் போக்குவரத்து
சாலையால்-குறுகிய தூரபாதை- சென்றிருப்பின் வாகனம் ரயில்பாதை
கடப்பினை கடந்திருக்க நேரிட்டிருக்காது. "நான் உங்களிற்கு
பொய் எதுவும் கூறவில்லை, சகோதரி Gladys
மாத்திரம் இந்த ரயிலினால் கொல்லப்படவில்லை"
என குறிப்பிட்டாள்.
இந்த விபத்தானது ஸப்பெயின் நாட்டில் வெளிநாட்டுத்
தொழிலாளர்கள் மனிதாபிமானமற்ற முறையில் கீழ்ப்படுத்தப்படுவதை
மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. இவ் விபத்தில்
காயத்துடன் உயிர் தப்பிய Nancy
Porras எனப்படும் 13 வயது சிறுமி அவளது
8 வயதான சகோதரியுடன் 11 மாதங்கள் முன்பாக அவளது பெற்றோருடன்
இணைவதற்காக வந்திருந்தாள், அவர்கள் இவர்களுக்கு சில
மாதங்கள் முன்னராகவே வந்திருந்தனர். இக் குடும்பம் இரு
படுக்கை அறைகள் கொண்ட ஒரு வீட்டில், வாடகை கட்டுவதற்கு
உதவியாக வேறு வயதுவந்தவந்த நால்வரை இணைத்து, வசித்துவருகின்றது.
இவர்கள் எக்குவடொர் நாட்டில் அவர்களது வீட்டின் கட்டுகாசு
(mortgage)
கட்டும்படி பலவந்தப்படுத்தப்பட்டு $30,000
அளவிலான கடனை கட்டமூடியாத நிலையில்
வெளியேறி வந்திருந்தனர்.
இந்த விபத்தில் கொல்லப்பட்ட தந்தையும்
மகனுமாகிய நோர்மன் மற்றும் அல்பேட்டோ ஆகியோரும்
இதேபோன்ற நிலமையில் பாதிப்புக்குள்ளானவர்கள்தான். அவர்களது
மரணச்சடங்கின் போது அவர்களின் நண்பரான அல்பேர்டோ
ஜவியர் கூறினார்: "நோர்மன் அவரது மனைவியையும் ஐந்து
பிள்ளைகளையும் எக்குவடோரில் விட்டுவத்த நிலையில் எட்டு
மாதங்களாக ஸ்பெயினில் வாழ்ந்துவந்தார். அவரது 21 வயதுடைய
மகனான அல்பேர்ட்டோ டிசம்பர் 28 அன்றே வந்திருந்தான்,
ஆக இரண்டாம் தடவையே அவர் இங்கு வேலைசெய்திருந்திருந்தார்.
அவன் தனது தாயை இங்கு அழைப்பதற்காக அவளது வீட்டிற்கு கட்டுப்பணம்
(mortgage)
கட்டுவதன் பொருட்டு இறந்துபோனான்.
ஸ்பெயினில் உள்ள எக்குடோரியர்களிற்கான தேசிய
இணைப்பு சபையின் தலைமை அதிகாரி Guillermo
Imbaquingo கூறினார், "எங்களில் ஒவ்வொருவருக்கும்
ஆகக் குறைந்த கடன் தொகை கிட்டத்தட் $2,500$1,600
அளவில் வருகின்றது, இதில் விமான பயணச்சீட்டிற்கு
(ticket)
செலுத்தும் கட்டணம் தவிர எஞ்சியுள்ளதை Barajas
[Madrid airport] இல் காண்பிக்கவேணடும்
இல்லையேல் நீங்கள் உல்லாசப்பயணியாக வந்துள்ளனர் என
அவர்கள் நம்பமாட்டார்கள்"
சமூக ஜனநாயகம் மற்றும் ஸ்ராலினிசம் இரண்டினது
தொழிற் சங்கங்களும் - இந்நேரத்தில் இவ் விபத்தினை இட்ட
அவகளது எதிர்ப்பானதுஜிலீமீ
நிமீஸீமீக்ஷீணீறீ கீஷீக்ஷீளீமீக்ஷீs ஹிஸீவீஷீஸீ (ஹிநிஜி) ணீஸீபீ கீஷீக்ஷீளீமீக்ஷீs சிஷீனீனீவீssவீஷீஸீs (சிசி ளிளி) குடிவரவு
தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் நிலைமைகளை இட்டும்
அவர்களை இருட்டுள் வைத்திப்பதிலும் நனவாக இருந்தன. அவர்கள்
இந்த துன்பியலுக்கு அரசாங்கத்திடம் வேலை வளங்கிய கம்பனிகளே
பொறுப்பேற்க வேண்டும்,'' தொழில் ஒழுங்கு முறைகளுக்கும்
சட்டரீதியான விடையங்களுக்கும் நிர்வாக பொறுப்பு எடுக்கவேண்டும்''
என கேட்பதன் மூலம்ன பதிலளித்தது. CC
OO இணைய தளத்தில் வெளியான கட்டுரையொன்றில்,
தொழிற்சங்கம்; கடந்த இரண்டு வருடங்களில் குறைந்த கூலி மற்றும்
தவறான வழியில் வெளியேற்றல் எனப் புகார் செய்த பல Greensol
S.L இற்கு எதிரான வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்ததாக
ஏற்றுக்கொண்டது. தொழிற் சங்கம் தொழில் உடன்படிக்கைகளில்
உள்ளபடி 'சமூக பாதுகாப்பு கொடுப்பனவு,வேலை ஒப்பந்தம்,
கூலி ஆகியவை இந்நிறுவனத்தால் வளங்கப்படாததுடன், நீண்ட
வேலை நேரம் போன்றவையும் இடம்பெற்றன...,இதுதான் இந்நிறுவனத்தில்
கண்டுபிடிக்கப்பட்ட உண்மையாகும், தொழில் இடத்தில் ஏற்பட்ட
அழிவுகளிற்கு சட்டபூர்வமற்ற மற்றும் எல்லா வகையான ஆபத்தான
நிலைமைகளுமே இதற்கு பொறுப்பாகும் என கூறியது'' .
இந்நிலைமைகளுக்குள் தொழிலாளர்களது இந்தப்பிரச்சனைகளுக்களுக்கு
அவர்கள் சரியான வேலை மற்றும் ஸ்பெயினில் வசிவிட அனுமதிப்பத்திரங்களை
பெற்றுக்கொள்வதில் உள்ள கடினமான நிலைமைகளே காரணமாகும்,
தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் கடினமான நிலைமைகளை
கட்டுப்படுத்துவதற்கு போக்குவரத்து, வாழ்க்கை மற்றும்
வேலை நிலைமைகள் ஆகியவற்றை இட்ட கடுமையான கட்டுப்பாடுகளை
மேற்கொள்ளவேண்டும் என பிராந்திய நிர்வாகத்தை தொழிற்சங்கங்கள்
கேட்பது வெறும் வார்த்தையாலங்கள் ஆகும். வாகனத்தில்
இருந்தவர்களுள் 13,16 வயது பிள்ளைகளும் அடங்குவர் என்பது தெரிய
வந்ததும், தொழில் சங்கம் ஸ்பெயினில் விவசாய வியாபார
தொழிற்துறையில் 12 ஆயிரம் சிறுவர்கள் வேலை செய்கிறார்கள்
என்பதை ஏற்றுக்கொண்டது.
1996இல் எப்போது வலதுசாரி மக்கள் கட்சி ஆட்சிக்கு
வந்ததோ அன்றிலிருந்து, தொழிற்சங்கத்தினது முக்கிய கவனமெல்லாம்
அரசாங்கம் மற்றும் தொழிலதிபர்களுடன்
முக்கட்சி உடன்படிக்கை என்பதற்குள்
முடிவுகட்டி அவற்றினது சலுகைபெற்ற நிலையினை பாதுகாத்துக்
கொள்வதாகவே இருந்துவருகின்றது. இந் நடவடிக்கைகள்
உழைப்புச் சந்தையில் மலிவுக்கூலியை இலகுவாக்குவதிலும் ஸ்பானிய
மற்றும் குடிவரவு தொழிலாளர்களினது வேலையின் தராதர நிலமையினை
அழித்தொழிப்பதையிட்டும் அடிப்படையான மாற்றங்களை உண்டுபண்ணியுள்ளது.
Top of Page
வாசகர்களே: உலக
சோசலிச வலைத்தளம்(WSWS
)
உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல்
அனுப்பவும்.
Copyright
1998-2000
World Socialist Web Site
All rights reserved
|