WSWS :செய்திகள்
& ஆய்வுகள்:ஆசியா:இந்தியா
India's most powerful earthquake in 50 years claims
at least 2,000 lives
50 வருட காலத்தில் இந்தியாவின் பலம்வாய்ந்த
பூமியதிர்ச்சி பெருந்தொகையான உயிர்களை பலி கொண்டுள்ளது
By Peter Symonds
27 January 2001
Back to screen
version
வெள்ளிக்கிழமை காலை ஐம்பது வருட காலத்தில்
இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தை தாக்கிய மிகவும் பம்வாய்ந்த
பூமியதிர்ச்சி, குறைந்தபட்சம் 2000 மக்களின் உயிர்களை பலி கொண்டுள்ளதாக
உத்தியோகபூர்வ மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. சரிந்து வீழ்ந்த கட்டிடங்களின்
அடியில் புதையுண்டு போன ஆயிரக்கணக்கான மக்களை தேடும்
பணியில் மீட்பு பணியாளர்கள் ஈடுபடும் போது இந்த எண்ணிக்கை
மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 3000 க்கும்
அதிகமானோர் காயமடைந்ததோடு இன்னும் பலர் வீடுகளை விட்டு
வெளியேறியுள்ளனர்.
டைம்ஸ் ஒப் இந்தியா (Times
of India) பத்திரிகையில் வெளியான
ஒரு செய்தியின்படி இறந்தவர்களின் எண்ணிக்கை 4000 ஐ எட்டியுள்ளதோடு
இதில் 3000 பேர் பாகிஸ்தான் எல்லைக்கு அருகேயுள்ள பாலைவன
நகரமான பூஜ் நகரத்தைச் சேர்ந்தவர்கள். நகர கட்டிடங்களில்
90 சதவீதமானவை சேதமடைந்துள்ளதோடு உள்ளூர் இராணுவ ஆஸ்பத்திரி
காயமடைந்தவர்களால் நிரம்பி வழிகின்றது. 150,000 சனத்
தொகையை கொண்ட பூஜ், பூமியதிர்ச்சி மையத்தில் இருந்து 25
கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
ஐந்து இலட்சம் சனத்தொகையைக் கொண்ட
குஜராத்தின் வர்த்தக நகரமான அகமதாபாத் படுமோசமாகப்
பாதிக்கப்பட்டுள்ளது. நகருக்கு குறுக்கே குறைந்தது 150 கட்டிடங்கள்
தகர்ந்து கொட்டியுள்ளன. இதில் பல டசின் கணக்கான மாடிக்
கட்டிடங்களும் அடங்கும். இதனால் 400 மக்கள் கொல்லப்பட்டனர்.
என்.எஸ்.ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு காத்திருந்த 70 மக்கள் இறந்ததாக
பிரஸ் டிரஸ்ட் ஒப் இந்தியா கூறியது. சடலங்கள் இந்நிலையத்தின் விறாந்தையில்
வரிசைக்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
பெரும் பாரம் தூக்கிகளுக்கும் மற்றும் கருவிகளுக்கும்
நிலவும் தட்டுப்பாடு காரணமாக மீட்பு வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மக்கள் கட்டிடங்களின் இடிபாடுகளை தமது கைகளால் தோண்டிக்
கொண்டு இருந்தனர். புதையுண்டு போன தமது உறவினர்களைத்
தோண்டி எடுக்க உதவி வழங்கும்படி கோரி அவஸ்தை கண்ட மக்களால்
தீயணைப்பு நிலையம் சிதறடிக்கப்பட்டு விட்டதாக அகமதாபாத்
தீயணைப்பு படை அதிகாரி ராஜேஸ் பாத் தெரிவித்தார். "இது
ஒரு அவசரகால நிலைமை. நாம் ஒரு கலக கும்பலை எதிர்கொள்கிறோம்.
நகரில் ஒரு பயப் பிராந்தி வளர்ச்சி கண்டு வருகின்றது" என
அவர் தெரிவித்தார்.
அகமதாபாத்திலுள்ள நிலைமையை விபரிக்கையில்
அசோசியயேட்டட் பிரஸ் (Associated
Press) பின்வருமாறு கூறியது: "இரும்பு
தொப்பி அணிந்த மீட்பு தொழிலாளர்கள் உயிர்தப்பி உள்ளவர்களை
தேடும் பொருட்டு கொங்கிரீட்டுகளை உடைக்க அலவாங்குகளை
பயன்படுத்தினர். கதறி அழுத பெண்கள் நெஞ்சில் அடித்து கத்தினர்.
முன்னர் குடும்பங்களையும் கடைகளையும் கொண்டிருந்த கற்குவியல்களின்
மீதாக ஒரு சில பாரம் தூக்கிகள் சென்று கொண்டுள்ளதை அவர்கள்
பார்த்தபடி இருந்தனர். இடிபாடுகளுக்கிடையே படுக்கைகளும்
குழுந்தைகளின் விளையாட்டுப் பொருட்களும் துணிமணிகளும் கைவிடப்பட்ட
நிலையில் அகப்பட்டுக் கிடந்தன. மின்சாரக் கம்பங்களும் பல
கட்டிடங்களும் பரிதாபமான விதத்தில் சிதையுண்டு போய்க் கிடந்தன."
குஜராத்தின் இரண்டு அணுவாயுத நிலையங்கள்
பாதிக்கப்படவில்லை எனக் கூறப்பட்ட போதிலும் எரிவாயு,
மின்சாரம், தொலைபேசி, தண்ணீர் சேவைகள் மாநிலம் பூராவும்
சீர்குலைக்கப்பட்டன. வெள்ளிக் கிழமை பல மணி நேரங்களுக்கு
அகமதாபாத் நகரம் பூராவும் மின்சாரம் தடைப்பட்டது. பலநாட்களாக
தொலைபேசி சேவைகள் செயலிழந்துள்ளன. கடந்த இரவு வீடுகளை
இழந்த அல்லது பூகம்பத்தின் பின்னர் அதிர்ச்சி கண்ட மக்கள்
கூடாரங்களை சுற்றி கூடியிருந்தனர்.
இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மீட்பு
பணியாளர்களை பேரழிவுக்கு ஈடுகொடுக்கும் வகையில்
"ஒரு யுத்த நிலைமையில்" செயற்படுமாறு பணித்துக் கொண்டிருந்த
போதும் நிவாரண உதவிகள் வரையறுக்கப்பட்டதாகவே விளங்கின.
அரசாங்கம் 10,000 கூடாரங்களையும் 10,000 தொன் தானியங்களையும்
20 டாக்டர்களையும் சத்திர சிகிச்சை நிபுணர்களையும் விமானத்தில்
கொண்டு செல்வதாக அறிவித்தது.
இந்திய காலநிலை அவதான திணைக்களம்
தொடக்கத்தில் அதிர்ச்சியின் தாக்கத்தை ரிச்டர் (Richter)
அளவில் 6.9 என மதிப்பிட்டது. பின்னர் இந்த அளவீடு அனைத்துலக
அவதான நிலையங்களின்படி 7.9 என அறிக்கைகள் தெரிவித்தன. புஜ்
நான்கு அல்லது ஐந்து தடவைகள் இடம்பெற்ற அதிர்வினால் தாக்கப்பட்டது.
இது 5 என மதிப்பிடப்பட்டது.
1950ல் வடகிழக்கு மாநிலமான அசாமை தாக்கிய
8.5 அளவிலான பூமியதிர்ச்சியின் பின்னர் இந்நிலையில் இடம்பெற்ற
பெரும் சக்தி வாய்ந்த பூமியதிர்ச்சி இதுவேயாகும். இச்சமயத்தில்
1538 மக்கள் பலியுண்டனர். நேற்று இடம்பெற்ற பூமியதிர்ச்சி அயல்நாடான
பாகிஸ்தானிலும் சிந்துவிலும் நேபாளத்திலும் அத்தோடு இந்திய
நகரங்களான புதுடில்லி, பம்பாய், சென்னையிலும் உணரப்பட்டுள்ளது.
இந்த பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து இந்திய
காலநிலை அவதான நிலைய பணிப்பாளர் நாயகம் ஆர்.ஆர். செல்கர்
பூமியதிர்ச்சி எதிர்வு கூறலில் உள்ள சங்கடங்களையும் குறிப்பிட்டார்.
"பூமியதிர்ச்சிகளை எவராலும் எங்கும் எந்நாட்டிலும் எதிர்வு
கூற முடியாது." எனத் தெரிவித்தார். "இது ஒரு விஞ்ஞான
ரீதியான உண்மை."
தற்சமயம் சரியான நேரம், காலம், இடத்துடன்
பெரும் பூமியதிர்ச்சிகளை தீர்மானம் செய்வது சாத்தியம் அல்ல.
பூகம்பவியலாளர்கள் கண்ட ரீதியான கற்பாறை தட்டுக்கு
இடையேயுள்ள பெரிதும் ஆபத்தான வலயங்களை இனங்காணக்
கூடியதாக உள்ளது.
இறுதியாக பூமியதிர்ச்சி இடம்பெற்ற மையம் -குச்-
உலகில் பூமியதிர்ச்சி இடம்பெறக் கூடிய பெரிதும் ஆபத்தான பிராந்தியங்களில்
ஒன்றாகும். இது இமயமலைச் சாரலிலும் இந்தியாவின் வடகிழக்கிலும்
உள்ளது. இம்மாவட்டம் நர்மதா- சோன் கரையில் உள்ளது.
ஒரு சில வருடங்களுக்கு முன்னர் ஒரு தவறினால் ஒரு பெரும்
பூமியதிர்ச்சி இங்கு ஏற்பட்டது. சமீப மாத காலங்களில் பவாங்காரின்
கரையோர நகரத்தில் அடுத்தடுத்து பூமியதிர்ச்சி ஏற்பட்டது.
இது ஒரு பெரும் பூமியதிர்ச்சிக்கு சாத்தியம் என்பதை எடுத்துக்
கூறியது.
பூமியதிர்ச்சியை எதிர்வு கூறும் விஞ்ஞானம் நிச்சயமற்றதாக
இல்லாது போகலாம். ஆனால் பெரும் நிலநடுக்கங்களுக்கு
நின்று பிடிக்கக் கூடிய முறையில் கட்டிடங்களை கட்டியெழுப்பும்
தொழில்நுட்பம் நன்கு ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது. பெரிதும்
ஆபத்தான வலயங்களில் அவசியமான கட்டிட நிர்மாண தரங்களை
ஏற்படுத்த இன்றைய அல்லது முன்னைய அரசாங்கங்கள் எதுவும்
செய்யவில்லை.
நேற்றைய பூமியதிர்ச்சி பற்றிய அறிக்கைகள்
இன்னமும் சொற்பமாகவே உள்ளன. ஆனால் மட்டரகமான நிர்மாண
வேலைகளே பல மரணத்துக்கு காரணம் என்பதைக் காட்டிக்
கொண்டுள்ளது. ஏ.எப்.பீ. செய்தி சேவையுடன் பேசிய சிவில் பொறியியலாளர்
அஸ்வின் உபத்தியாய "நாம் தொழில் சார் நலன்களுக்காக
முழு (அகமதாபாத்) நகரத்தையும் சுற்றி வந்தோம். கிட்டத்தட்ட
தகர்ந்து கொட்டியுள்ள சகல கட்டிடங்களும் ஐந்து ஆண்டுகளுக்கு
முன்னர் கட்டப்பட்ட பலமாடிக் கட்டிடங்களாகும். இவை எல்லாம்
உரிய அத்திவாரங்கள் இல்லாதவை. நல்ல முறையில் கட்டப்படாதவை.
பழைய கட்டிடங்கள் பெரிதும் பலமானவையாகக் காட்டிக்
கொண்டுள்ளன. புதிய மாடி வீடுகளை மக்கள் பெருமளவு பணத்துடன்
கொள்வனவு செய்தது பரிதாபமானது. அவர்கள் கொடூரமான
முறையில் ஏமாற்றப்பட்டு விட்டனர்."
இந்துஸ்தான் டைம்சில் வந்த ஒரு கட்டுரை குறிப்பிட்டதாவது:
பத்துமாடி மானிஷி டவர்கள் நகரின் பல செல்வந்தர்களின் உறைவிடமாக
விளங்குகின்றது. இது அரைவாசியாக வெட்டித்தள்ளப்பட்ட ஒரு
இராட்சத பிறந்த தின கேக் போல் விளங்கியது. 20 மாடி வீடுகளின்
ஒரு முழு கன்னையும் தகர்ந்து கொட்டியது. குடியிருந்த சகலரையும்
சேர்த்துக் கொண்டு தகர்ந்து வீழ்ந்தது. இந்த இடிபாடுகளுக்கு
இடையே பல மக்கள் இருப்பார்கள் என்பது நிச்சயம். படிக்கட்டுகளின்
பகுதிகள் இன்னமும் நிலைத்து நின்று கொண்டுள்ள கட்டிடத்தின் ஒரு
பகுதியில் தொங்கிக் கொண்டுள்ளன. குளிரூட்டிகள், மின்சார வயர்கள்
போன்றவை பரிதாபத்துக்கு இடமான முறையில் தொங்கிக்
கொண்டுள்ளன."
பல பெரும் நிலநடுக்கங்களிலும் நிலைமை
இதுவாகவே இருந்து வந்த போதிலும் பலவீனமான வீடமைப்புச்
திட்டங்களில் வாழ்ந்து, பாதிக்கப்பட்ட நகர்ப்புற ஏழைகள்
பெருமளவில் இதில் அடங்கியுள்ளனர்.
கடந்த இரண்டு வருடங்களாக புதுடில்லி மேல்
நீதிமன்றத்தில் மேலாய பேரழிவுகளின் அபாயத்தைக் காட்டும்
பொதுமக்கள் நலன் வழக்கு ஒன்று இருந்து வந்தது. இந்த விண்ணப்பதாரரான
டாக்டர்.பீ.எல். வாதர இந்தியன் தலைநகரத்தை பெரும்
பூமியதிர்ச்சியின் தாக்கங்களில் இருந்து காக்கும் நடவடிக்கைகளை
எடுக்கும்படி கோரியிருந்தார். நிபுணர்களை மேற்கோளாகக்
காட்டிய அவர் 7 அல்லது 8 அளவீடுகளுடன் கூடிய பூகம்பம்
புதுடில்லியை எந்நிமிடமும் தாக்கும் எனவும் 5 மில்லியன் மக்கள்
வாழும் நகருக்கு பேரழிவை உண்டுபண்ணும் எனவும் எச்சரிக்கை
செய்திருந்தார். அவர் மேலும் உயர்ந்து வளர்ந்த கட்டிடங்கள்
பூமியதிர்ச்சியில் இருந்து பேணிக்காக்கப்பட வேண்டும் எனக்
கோரினார்.
மேல்நீதிமன்றம் தேசிய அரசாங்கத்துக்கும்
புதுடில்லி அரசாங்கத்துக்கும் டில்லி மாநகரசபைக்கும் புதுடில்லி
மாநகர கூட்டுத்தாபனத்துக்கும் இதையிட்டு உடன் அக்கறை
செலுத்தும்படி கட்டளையிட்டது. இந்திய அரசாங்கத்தின்படி தரங்கள்
விதிக்கப்பட்டதோடு கூட்டங்களும் நடாத்தப்பட்டன. ஆனால்
நிஜமாக எதுவும் செய்யப்படவில்லை என டாக்டர்.பீ.எல்.வாதர
கூறிக் கொள்கின்றார்.
Top of Page
வாசகர்களே: உலக
சோசலிச வலைத்தளம்(WSWS
)
உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல்
அனுப்பவும்.
Copyright
1998-2000
World Socialist Web Site
All rights reserved
|