World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: மத்திய கிழக்கு

Israeli right wing demands no compromise with the Palestinians

இஸ்ரேலிய வலதுசாரிகள் பாலஸ்தீனியர்களுடனான உடன்பாட்டை நிராகரிக்க கோருகின்றனர்

By Chris Marsden
12 January 2001

Use this version to print

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையில் அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட சீர்குலைந்துவிட்டது. எகூட் பராக்கின் கீழான ஒரு தேசக் கட்சியும் யசீர் அரபாத்தின் கீழான பாலஸ்தீனிய அதிகார வர்க்கமும் கிளின்டன் பதவிவிலகி ஜோர்ஜ் புஸ் ஜனாதிபதியாக வருவதற்க்கு முன் எதனையும் நடைமுறைப்படுத்துவதை எதிர்பார்க்கவில்லை என்பதை தெளிவாக்கியுள்ளனர். பிரதமர் எகூட் பராக் பெப்ரவரி 6ம் திகதி தேர்தலில் லிகுட் கட்சியின் தலைவரான ஆரியல் ஷரோனிடமிருந்து தேர்தல் போட்டியை எதிர்நோக்குவதுடன், கருத்துகணிப்பெடுப்பின்படி 20% பின்தள்ளி உள்ளார். இஸ்ரேலிய வலதுசாரிகள் தமது முயற்சிகளுக்கு அப்பால் சென்று பாலஸ்தீனியர்களுடனான பேச்சுவார்த்தை உடன்பாடுகளுக்கான சாத்தியப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர். சில பிரிவுகளின் படி பாரிய ஒடுக்குமுறையின் தேவையும், மத்திய கிழக்கில் ஒரு யுத்தத்தின் சாத்தியப்பாடு குறித்தும் பேசப்படுகின்றது.

அரபாத்தால், கிளின்டனால் வழங்கப்பட்ட முன்மொழிவுகளை பாலஸ்தீனமக்கள் மீது திணிக்கமுடியாது போனமை நிரூபிக்கப்பட்டது. இம்முன்மொழிவுகளில் கிழக்கு ஜெருசலம் மீதான பாலஸ்தீனியர்களின் இறைமையும் முக்கியமாக 1948 இலிருந்து தமது தாய்நாட்டை விட்டு கலைக்கப்பட்ட இலட்சக்கணக்கான அகதிகளின் நாடுதிரும்பும் உரிமையும் நிராகரிக்கப்படுகின்றது.

இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளினதும் பாசிச குடியேற்றவாதிகளின் ஒடுக்குமுறைக்கும் மத்தியிலும் இன்டிபாடா என அழைக்கப்படும் மக்கள் எழுச்சி இன்னும் தொடர்கின்றது. இதனால் இதுவரை 350 உயிர்கள் பலியெடுக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனிய பிரதேசங்கள் பலவற்றில் அகதிகள் இஸ்ரேலுக்கு திரும்பும் உரிமையை ஆதரித்து பல ஊர்வலங்கள் அண்மைக்காலமாக நிகழ்ந்து வருவதுடன், லெபனானில் வாழும் 360,000 அகதிகளாலும் ஊர்வலங்கள் நடாத்தப்பட்டுள்ளன.

ஜனவரி 8ம் திகதி Dawn பத்திரிகையில் பாலஸ்தீனிய பொருளாதார அரசியல் விமர்சகரான Edward Said கிளின்டனின் திட்டத்தை ''சிறந்த மேற்கு கரைப்பிரதேசத்தை இணைப்பதும், ஜோர்டான் பள்ளத்தாக்கை நீண்ட குத்தைகைக்கு [குறைந்த செலவிலான] விடுவதும், கூடுதலான கிழக்கு ஜெருசலமை குறித்த காலத்திற்க்கு இணைத்தலும், பாலஸ்தீன பிரதேசங்களில் முன்னேற்பாடான எச்சரிக்கை நிலையங்களை அமைத்தலும், பாலஸ்தீன எல்லைகளை [இஸ்ரேலுடனானதை மட்டும் ஏனைய நாடுகளுடனானதை அல்ல] கட்டுப்படுத்துவதும், சகல வீதிகளையும் நீர் விநியோகத்தையும் கட்டுப்படுத்துவதும், சகல அகதி உரிமையை இரத்துச்செய்வதும், இஸ்ரேல் சரியென கருதுபவர்களுக்கு மட்டும் நஷ்ட ஈடுவழங்குவது'' போன்றவை இஸ்ரேலுக்கு சன்மானம் வழங்குவதை போன்றது என பரிகாசம் செய்துள்ளார்.

இதற்கு பதிலாக பாலஸ்தீனியர்களுக்கு ''மேற்கு கரையின் ஒரு சிறிய துண்டுக்கு பதிலாக இஸ்ரேல் பெரும்தன்மையுடன் நேகாவ் பாலைவனத்தின் ஒரு துண்டினை பண்டமாற்றாக வழங்குகின்றது எனவும், இக்குறிப்பிட்ட நேகாவ் பாலைவனத்துண்டு இஸ்ரேலால் விஷக்கழிவுப் பொருட்களை புதைக்கும் இடமாக பாவிக்கப்படுவதை கிளின்டன் கவனிக்கவில்லை'' எனவும் குறிப்பிடுகின்றார்.

ஆனால் ஐக்கிய நாடுகள் தீர்மானங்களில் பலதடைவை இணைக்கப்பட்டுள்ள அகதிகள் திரும்பும் உரிமையை காலால் மிதிக்கும் கிளின்டனின் வரலாற்று அநீதியான முன்மொழிவானது வலதுசாரி சியோனிச ஸ்தாபகர்களுக்கு கூடுதலான சாதகமானது.

3,5 மில்லியன் அகதிகள் திரும்புவதை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்ற பாலஸ்தீனியர்களின் வலியுறுத்தலானது, அரபாத் இவ் அகதிகள் கடுமையாக கட்டுப்படுத்தப்படுவார்கள் என கூறியுள்ள போதும் அது இஸ்ரேலின் இருப்புக்கு அச்சுறுத்தல் என கூறி வெறுமனே நிராகரிக்கப்பட்டது. பாராக் தான் இப்பிரச்சனை தொடர்பாக இணங்கும் நோக்கம் எதுவும் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளபோதும் வலதுசாரிகள் தமது பிரசாரத்தில் யூதர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பொதுவான புனிதத்தலமான ஜெருசலமின் மலைக்குன்று மற்றும் அல்-அக்ஸா பள்ளிவாசல் பிரதேசத்தின் இறைமையை பங்கீடு செய்வது தொடர்பான கிளின்டனின் முன்மொழிவை பராக் ஏற்றுக்கொண்டது தொடர்பாகவும் வெளிப்படுத்தினர்.

பாலஸ்தீனர்களுக்கான தேசிய உரிமைகள் தொடர்பான கிளின்டனின் ஆகக்குறைந்த குறைந்த சலுகைகள் இன்று ''இனச்சுத்திகரிப்பு என கருதத்தக்க'' பயங்கரவாத பிரச்சாரத்தால் மில்லியன் கணக்கான பாலஸ்தீனர்களை வெளியேற்றுவதன் மூலம் 1948 ல் உருவாக்கப்பட்ட இஸ்ரேல் அரசை கேளிவிக்குரியதாக்குவதாக பாலஸ்தீனர்களுடனான உடன்பாட்டுக்கு எதிரானவர்கள் விவாதிக்கின்றனர். இதனால் தான் ஜெருசலமினதும் மலைக்கோவிலினதும் தலைவிதி யூத தேசியவாதத்தின் மூர்க்கமான மீள்வலியுறுத்தலின் மத்திய புள்ளியாகியுள்ளது.

ஜனவரி 8ம் திகதி வலதுசாரி குடியேற்றவாசிகளின் பெரும்பகுதியினரான 25,000 பேர் மலைக்கோவில் பாலஸ்தீன அதிகாரிகளின் கைகளுக்குள் போவதற்கு எதிராக ஒரு ஊர்வலத்தை நடாத்தியுள்ளார்கள். இப்பழைய நகரத்தின் சுவரின் மீது 1967 ம் ஆண்டு 6நாள் யுத்தத்தில் மலைக்கோவில் கைப்பற்றப்பட்டது பற்றிய படங்கள் திரையிட்டுக்காட்டப்பட்டது.

Simon Wiesenthal Center இன் நிறுவனரும் தலைவருமான Rabbi Marvin Hier ஜனவரி 10ம் திகதி Los Angeles Times பத்திரிகையில் ''சியோனுக்கு நாம் திரும்புவதற்கான அடிக்கல் நாம் எமது வரலாற்று பைபிளின் அடித்தளத்திற்கு திரும்புவதை அடித்தளமாக கொண்டதாகும். இவ்விடத்தில்தான் ஆபிரகாம் முதலாவதாக தனது கடவுளை சந்தித்ததும், மோஸஸ் தனது மக்களை வழிநடாத்த சத்தியப்பிரமாணம் எடுத்ததும், குருவானவர்கள் சமூக நீதி மற்றும் சுதந்திரம் தொடர்பான கருத்துக்களை முதல்முதலாக அறிமுகப்படுத்தியதும், சொலமன் தனது மதிப்புக்குரிய கோவிலை கட்டியதும் இம்மலை உச்சியில் தான். இம்மலைக்கோட்டையை விட்டுக்கொடுப்பதன் மூலம் நாம் இஸ்ரேல் அரசின் ஏனைய பகுதிகளுக்கான எமது உரிமையை சுருக்கிக்கொள்கின்றோம். 3500 வருடங்கள் தொடர்ச்சியான வரலாற்றை கொண்ட மலைக்கோவில் எங்களுடையதில்லை எனில் ஜவ்வா, ரெல் அவீவ், கைவா மீதான எமது உரிமைகள் எந்தளவிற்க்கு சட்டபூர்வமானது'' என எழுதியுள்ளார்.

1993ல் ஒஸ்லோவில் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதிலிருந்து பேச்சுவார்தையால் உடன்பாடு ஒன்றை அடைய எடுத்த முயற்சிகள் அனைத்தும் மத்திய கிழக்கில் இஸ்ரேலை ஒரு இராணுவரீதியான பாரிய சக்தியாக உருவாக்கும் மத்திய நோக்கத்தையும் பாலஸ்தீனருடன் பொஸிஸ் முறைகளால் கையாள்வதற்க்கு மாறாக அதிலிருந்து பிரித்து பேச்சுவார்த்தைகளால் அணுகுவதற்குமான பக்கத்திற்கு தள்ளியுள்ளதாக கூடுதலான வலதுசாரிகள் விவாதிக்கின்றனர். அமெரிக்காவில் புஷ் உம் இஸ்ரேலில் ஷரோனும் பதவிக்கு வருவது மூலோபாய நிலைப்பாட்டில் கட்டாயம் அடிப்படையான மாற்றம் ஏற்படுவதற்கான சந்தர்ப்பமாக இருக்கும் என அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

ஜனவரி 4ம் திகதி Jerusalem Post இல் Uri Dan sang ஆல் இஸ்ரேலின் எதிர்கால பிரதமராக ஆரியல் ஷரோன் புகழப்பட்டுள்ளதுடன், தென்பகுதி படைகளுக்கான முக்கிய அதிகாரியாக 1970 இல் இருந்தபோது ''காஸா கரைப்பகுதியில் பாலஸ்தீன பயங்கரவாதத்தை துடைத்துக்கட்டி 15 வருடங்கள் மோசே தயான் அமைதியை நிலைநாட்டியதனை'' ஏற்றுக்கொள்வதுடன், Menachem Begin இன் அரசில் 1982 இல் பாதுகாப்பு அமைச்சராக இருந்த பொது ''அவரது அரசாங்கம் பாதுகாப்பு படைகளுக்கு லெபனானில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அழித்ததிலும் யசீர் அரபாத்தையும் அவரது 10,000 பயங்கரவாதிகளையும் பெய்ரூட்டில் இருந்து கலைத்ததையும்'' சரியென ஏற்றுக்கொள்கின்றது.

மிகவும் இறுக்கமான விமர்சனம் Avigdor Haselkorn ஆல் 1ம் திகதி Jerusalem Post இல் ''சமாதானம் பிழையான மூலோபாயம்'' என்ற தலையங்கத்தின் கீழ் பின்வருமாறு விவாதிக்கப்படுகின்றது. ''சமாதானப் பேச்சுக்களை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு பதிலாக இஸ்ரேலிய தலைவர்கள் நாட்டின் பாண்டித்தியம் பெற்ற மூலோபாயத்தைப் பற்றி மீண்டும் சிந்திக்க வேண்டும். இஸ்ரேல் பேச்சுவார்த்தைகளை சாதகமாக்கும் நோக்கத்தில் இராணுவ பின்வாங்கும் கொள்கையை முன்னெடுத்துள்ளது. ஆனால் இந்த அணுகுமுறையானது இஸ்ரேலின் மற்றவர்களுக்கு எச்சரிக்கையான உருவகத்தை பாரியளவு பலவீனப்படுத்தியுள்ளது''.

Avigdor Haselkorn மேலும் ''இதனால் இஸ்ரேல் தனது மற்றவர்களுக்கு எச்சரிக்கையான மூலோபாயத்தை புத்துயிரூட்ட வேண்டும். அது தனது மூர்க்கமான முன்கூட்டி கூறமுடியாத பலத்தை கண்டுகொள்ள வேண்டியதுடன், அதனது இருப்புக்கான அபாயத்திற்கு எதிராக தன்னிடமுள்ள சகல வழிகளையும் பாவிக்கவேண்டும்''. மேலும் அவர் 1995 இல் அமெரிக்க ஆகாய மூலோபாய கட்டளையகத்தின் ஆலோசனையை சாதகமாக காட்டுகின்றார். அதில் ''[அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பின்] சில பிரிவுகள் குறிப்பிட்டளவு கட்டுப்பாட்டைவிட்டுப் போகின்றது. இது தேசியத் தன்மையின் பகுதியாக அதன் முக்கிய நலன்கள் தாக்குதலுக்குள்ளாகும் போது அமெரிக்கா பகுத்தறிவிற்கு ஒவ்வாததாகவும் பழிவாங்கும் தன்மையுடையதாகவும் மாறக்கூடியதாக நாம் திட்டமிடவேண்டும்'' என குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் இதேபோல் ''இஸ்ரேல் அதன் உயிர்வாழ்வினை உத்தரவாதப்படுத்திக்கொள்ள சாதகமான ஒருதலைப்பட்டசமான இராஜதந்திர முயற்சிகளை குறைத்துக்கொள்ள வேண்டும்'' என்ற முடிவிற்கு வருகின்றார்.

இதனை உறுதிப்படுத்துமுகமாக தற்போது யுத்த மூலோபாயங்கள் முக்கிய கவனத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது. Wall Street Journal பத்திரிகையில் Seth Lipsky ''மத்திய கிழக்கில் ஒரு யுத்தம் வருமானால் யார் யாருடைய பக்கம் நிற்பார்கள் என்ற கேள்வி எழுகின்றது. ஆரியல் ஷரோன் எம்மீது யுத்தம் நிற்கின்றது என கூறியுள்ளார். யார் யாருடன் நிற்பார்கள் என்பது போல் இவ்யுத்தம் எதனை கொண்டுவரும் என்பதும் நீண்ட காலத்திற்கு முன்னரே எம்முன் உள்ளது'' என கேள்வி எழுப்பியுள்ளார்.

இஸ்ரேலில் வலதுசாரிகள் உச்சத்தில் நிற்பதற்கான காரணம் மில்லியன் கணக்கான யூத மக்கள் மத்தியில் சமாதானம் தொடர்பான விருப்புக்களை உத்தியோகபூர்வ இடதுசாரி அரசியல் பிரிவினரின் காட்டிக்கொடுப்பாலாகும். பல இடதுசாரி விமர்சகர்கள் இஸ்ரேலில் பாசிச சக்திகளின் அதிகரித்துவரும் மூர்க்கத்தனம் தொடர்பான தமது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். Ha'aretz பத்திரிகையின் எழுத்தாளரான Gideon Samet வலதுசாரிகளாலும் மிக பழைமைவாத பிற்போக்குவாதிகளாலும் உருவாக்கப்படும் அபாயம் தொடர்பாக எச்சரித்துள்ளார். ஆனால் உண்மை என்னவெனில் இரு முக்கிய இடது கட்சிகளான பராக்கின் தொழிற்கட்சியினதும் Me'eretz இனதும் முக்கிய குரல்கள் லிகுட் கட்சியினதுடன் வித்தியாசப்படுத்த முடியாதுள்ளதாகின்றது.

உதாரணத்திற்கு அமைதி இப்போது இயக்கத்தின் உருவாக்குனர்களில் ஒருவரான Amos Oz New York Times பத்திரிகைக்கு பாலஸ்தீனர்களை திரும்ப அனுமதிப்பது ''இஸ்ரேலை அழிப்பதற்கு'' ஒத்ததாகும் என எழுதியுள்ளார். முக்கிய தொழிற்கட்சி நகரசபை தலைவரான Meir Nitzan ஜெருசலம் ஆர்ப்பாட்டங்களின் பேச்சாளர்களில் ஒருவர் மட்டுமல்லாது 1993 ல் அன்றைய தொழிற் கட்சி பிரதமரான இட்ஸாக் ரபீனின் உரையை எடுத்துக்காட்டி இஸ்ரேலிய இறைமையின் கீழ் ஜெருசலம் ஐக்கியப்பட்டதாக இருக்கும் என தெரிவித்தார்.

முன்னாள் தொழிற்கட்சி பிரதமரான Ezer Weizman தான் பராக்கிற்கான ஆதரவை கைவிட்டு ஷரோனுக்கும் லிகுட் கட்சிக்கும் வாக்களிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

ஐனநாயக கொள்கைகளுக்காக உண்மையான பொறுப்பில் அடித்தளத்தை கொண்டிருக்காது பாலஸ்தீனியர்களுடனான பேச்சுவார்தைக்கான உடன்பாடானது எப்போதும் அரபு நாடுகளால் சூழப்பட்டிருந்த நிலைமையின் கீழ் இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புக்கான தந்திரோபாய தேவையின் நோக்கத்தினால் இடதுசாரிகளின் விவாதமானது சூழப்பட்டிருந்தது. இஸ்ரேல் ஒரு யூத அரசாக மட்டும் இருக்கவேண்டும் என்பதால் ஒரு பொதுவான கூட்டினுள் அப்பிரதேசத்திலுள்ள அரபு, முஸ்லீம் மக்களுடன் ஒன்றிணைந்து இருக்ககூடாது என்ற சியோனிசத்தின் மத்திய கருத்துக்கு எதிராக ஒரு அரசியல் எதிர்ப்பு ஒருபோதும் மேற்கொள்ளப்பட்டது கிடையாது.

இஸ்ரேலிய காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக பாலஸ்தீன மக்களின் எழுச்சியை ஒடுக்க அரபாத்தை நம்பமுடியாது என்ற அவர்களின் முடிவு, பல தொழிற்கட்சி இடதுசாரிகளையும் தாராளவாதிகளையும் இஸ்ரேலின் தேசிய நலன்களுக்கு ஆதரவாக தீவிரமாக பிரசாரம் செய்து பாதுகாக்க, பேச்சுவார்த்தை மூலமான உடன்பாட்டுக்கான தந்திரோபாய ஆதரவிலிருந்து பின்வாங்கச் செய்துள்ளது.