WSWS: செய்திகள்
& ஆய்வுகள் : மத்திய
கிழக்கு
Israeli-Palestinian negotiations stalled
இஸ்ரேல் பாலஸ்தீன பேச்சுவார்த்தை ஸ்தம்பிதமடைந்துள்ளது
By Chris Marsden
29 December 2000
Use
this version to print
இஸ்ரேலிய பிரதமர் எகூட் பராக்கிற்கும் பாலஸ்தீன
தலைவர் யசீர் அரபாத்திற்கும் எகிப்தின் ஜனாதிபதி கொஸ்னி முபாரக்குக்கும்
(Hosni Mubarak) இடையில்
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனையை தீர்க்க அமெரிக்காவால்
முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை கலந்துரையாட டிசம்பர்
17ம் திகதி கூட்டப்படவிருந்த உச்சி மாநாடு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை அமெரிக்காவின்
ஆலோசனைகளை எதிர்த்த பாலஸ்தீன குழுக்களால் வைக்கப்பட்ட
குண்டுத் தாக்குதலால் 2 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதுடன்,
ஆகக்குறைந்த்து 16 பேர் காயமடைந்தனர். இதற்கு பதிலாக
இஸ்ரேல் மேற்குகரை, காஸா பிரதேசங்களை மூடியது.
இஸ்ரேலிய அரசாங்கம் அமெரிக்காவின்
ஆலோசனைகளை பாலஸ்தீனியர்கள் எதிர்க்காவிட்டால் மட்டுமே
பேச்சுவார்த்தைக்கான அடிப்படையாக ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்டனர்.
ஒரு தேச (One Nation) கூட்டரசாங்கத்தின்
அறிக்கை ஒன்று இறுதி நிபந்தனை போல் பின்வருமாறு தெரிவித்தது.
''இஸ்ரேல் இந்த கருத்துக்கள் பாலஸ்தீன பக்கத்தில் இருந்தும்
மாற்றப்படாது இருக்கும்வரை அடிப்படை பேச்சுவார்த்தைகளுக்கானதாக
நோக்குகின்றது''
பாலஸ்தீன பேச்சுவார்த்தையாளர்கள் இது
தொடர்பாக சில கேள்விகளையும், உடன்பாடின்மையையும் கிளின்டனுக்கு
கடிதம் மூலம் தெரிவித்ததும் எகிப்தின் Sharm
el-Sheik நகரில் நடாத்த திட்டமிட்டிருந்த
மாநாட்டில் தாம் கலந்து கொள்ளமாட்டோம் என பராக்
தெரிவித்தார். அத்துடன் தான் ஜெருசலமிலுள்ள அல்-அக்ஸா மசூதியின்
சுற்றாடலின் உரிமையை பாலஸ்தீனியர்களுக்கு வழங்கும் உடன்படிக்கையில்
கையெழுத்திடமாட்டேன் எனவும் தெரிவித்தார்.
5 வருட பேச்சுவார்த்தைகளின் பின்னர் அமெரிக்க
ஜனாதிபதியின் முன்மொழிவுகளில் பின்வரும் விடயங்கள் அடங்கியிருந்தன.
*யூதர்களின் மலைக்கோவில் [Temple
mount] எனப்படும் கூடுதலான கிழக்கு
ஜெருசலமினதும், அல்-அக்ஸா மசூதியினதும் உரிமையை இஸ்ரேல்
பாலஸ்தீனியர்களுக்கு வழங்கவேண்டும்.
*பாலஸ்தீனியர்கள் கிட்டத்தட்ட 4 இலட்சம்
அகதிகள் திரும்பிவர கேட்கும் உரிமையை கைவிடவேண்டும்.
*ஒரு பாலஸ்தீன அரசு 95% மேற்கு கரைப்பிரதேசத்தையும்,
10% காஸா கரையோரப்பகுதியையும் கொண்டு உருவாக்கப்படவேண்டும்.
கிளின்டனின் ஆலோசனைகள் 1967 ஆறு நாள் யுத்தத்தில்
இஸ்ரேல் கைப்பற்றிய பிரதேசங்கள் சிலவற்றை கைவிட
ஆலோசனை வழங்கினாலும், இவை பாலஸ்தீனியர்களுக்கு மிகவும் தீர்மானகரமானவையாகும்.
இஸ்ரேலிய தாராளவாத பத்திரிகையான Ha'aretz,
"ஜெருசலம், மலைக்கோவில் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள
ஆலோசனைகள் எல்லைகள் மாற்றுவது மூலம் பெற்றுக்கொள்ளும்
அங்கீகாரத்திலும் பார்க்க [ஜெருசலம் உட்பட...] நாட்டின்
பாதுகாப்பு தொடர்பாக 10 மடங்கு இலாபத்தை பயனளிக்கசசெய்கின்றது''.
எவ்வாறிருந்தபோதும் ஜனவரி 12ம் திகதி கிளின்டன்
பதவிவிலகுவதற்க்கு முன்னரும், வலதுசாரி லிகுட் கட்சி தலைவரான
ஆரியல் ஷரோனின் கைகளில் எதிர்வரும் பெப்ரவரி 6ம் திகதி பிரதம
மந்திரி தேர்தலில் பராக் தோற்கடிக்கப்படலாம் என தெரிகின்ற
நிலைமையின் கீழும் ஏதோ ஒரு விதமான உடன்பாட்டை அடைந்து
விடலாம் என விரும்பிய போதும் அரபாத்தால் அமெரிக்கா விரும்பியபடி
கையெழுத்து வைத்துவிட முடியவில்லை.
அகதிகள் திரும்பிவருவதை கைவிடக்கோரும்
ஆலோசனைகள் பாலஸ்தீனியர்களிடம் ஆகக்கூடிய பரந்த எதிர்ப்பை
பெற்றுமட்டுமல்லாது, ஏனைய முக்கிய உடன்பாடின்மைகளும்
இருக்கின்றன.
ஜெருசலமில் இஸ்லாமின் மூன்றாவது புனித ஸ்தலமான
அல்-அக்ஸா மசூதியின் சுற்றாடலின் உரிமையை பெற்றுக்கொள்ள
கூடியதாக இருந்தாலும், நிலத்தின் கீழுள்ள புதைபொருள் ஆய்வு
நிலையங்களின் கட்டுப்பாடு இஸ்ரேலிடமே தொடர்ந்தும் இருக்கும்.
தமது உரிமை நிலத்தின் கீழும் இருக்க வேண்டுமென பாலஸ்தீனியர்கள்
கூறுகின்றார்கள்.
ஆறுநாள் யுத்ததில் மேற்கு கரையிலும், காஸா
கரையோரத்திலும் கைப்பற்றப்பட்ட பிரதேசத்தில் 6% இனை இஸ்ரேல்
தொடர்ந்தும் வைத்திருக்கும். மேற்கில் ஜெருசலத்தில் இருந்து
கிழக்கில் Dead Sea
வரையான மேற்கு கரையை இரு கூறாக்கும் 6-10 மைல் அகலமான
பிரதேசத்தை இஸ்ரேல் கட்டுப்படுத்தும்.
ஜோர்டான் பள்ளத்தாக்கில் இஸ்ரேல் படைகள்
3-6 வருடங்கள் எல்லையை கட்டுப்படுத்துவதுடன், இதன் பின்னர்
சர்வதேச படைகள் இப்பிரதேசத்தை கண்காணிக்கும்.இப்படியான
பலவீனமான அடித்தளத்தில் உருவாக்கப்படும் பாலஸ்தீன அரசு
ஒன்றிணைந்ததாக இல்லாததுடன், பொருளாதார ரீதியிலும் இராணுவ
ரீதியிலும் பலமான அண்டைநாடுகளுக்கு அடிமைப்பட்டே இருக்கவேண்டும்.
யூன் 1967 இன் போர்நிறுத்த எல்லையில் இஸ்ரேலுக்கும்
மேற்கு கரைக்கும் இடையில் பலமான மின்சார வேலிகளை அமைப்பதற்கான
திட்டங்களை இஸ்ரேல் ஏற்கனவே அறிவித்துள்ளது. இவ் 70 கி.மீற்றர்
வேலிக்கு 25$மில்லியன் செலவாகவுள்ளதுடன், இது பாலஸ்தீன பிரதேசத்தை
நிரந்தரமாக மூடிவிடுவதுடன் பாலஸ்தீன பொருளாதாரத்தையும்
முடமாக்கும். இத்துடன் 1பில்லியன்$ செலவிலான வீதிகளும், பாலங்கள்,
நிலத்தின் கீழான குகைகளும், 250 மில்லியன்$ செலவிலான நெடும்
பாதையும் அமைக்கப்படவுள்ளது. இப்பாதையில் இருந்து
காஸா, மேற்குகரைக்கான வெளியேறும் பாதைகள் இருக்காததுடன்,
இது யூத குடியேற்றங்களையும் இஸ்ரேலையும் இணைப்பதுடன் இரண்டு
மக்களையும் இனவாத அடித்தளத்தில் பிரித்து வைத்திருக்கும்.
இதன் தொடர்ச்சியாக முக்கிய பாலஸ்தீன பேச்சுவார்த்தையாளர்களில்
ஒருவரான யஸார் ஆபட் ரபோ அமெரிக்க முன்மொழிவை ''சந்தர்ப்பமல்ல
இது ஒரு பொறி'' என குறிப்பிட்டுள்ளார். சிரியாவின் ஆளும் கட்சியின்
பத்திரிகையான அல்-பாத் ''துர்அதிஸ்டவசமாக அமெரிக்கா இன்னும்
மத்திய கிழக்கின் பிரச்சனையின் உண்மையான தன்மைகளை புரிந்து
கொள்வதற்கு வெகுதூரத்தில் உள்ளது'' என குறிப்பிட்டுள்ளது.
அரபாத்தின் நிலைப்பாடானது பாரியளவில் அவரின்
சுயமான நிச்சயமற்ற தன்மையால் தீர்மானிக்கப்படுகின்றது. அவர்
இஸ்ரேலுடனான உடன்பாட்டிற்கு இஸ்லாமிய அடிப்படைவாத கமாஸ்
இயக்கத்திடமிருந்து மட்டுமல்லாது, தனது சொந்த பாத் [Fateh]
இயக்கத்தினுள் இருந்தும் எதிர்ப்பை எதிர்நோக்குகின்றார். இவ்
எதிர்ப்பை சமாதானப்படுத்தவதற்காக டிசம்பர் 27ம்திகதி பாலஸ்தீனிய
உயர் அதிகாரிகள் கடந்த வருடம் காம் டேவிட்டில் அரபாத்
உடன்படிக்கையில் கையெழுத்திட்டதை விமர்சித்ததற்காக இராஜ
துரோக குற்றத்திற்காக சிறைவைக்கப்பட்ட கமாஸ் தலைவரான
அப்துல் அஸீஸ் அல்-ரன்ரிசியை விடுதலை செய்தனர்.
பராக்கும் வலதுசாரி எதிர்ப்பாளர்களிடமிருந்து
இதேமாதிரியான உள்ளூர் எதிர்ப்பை எதிர்நோக்குகின்றார். பெப்ரவரி
6ம் திகதிக்கு முன்னர் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையில்
செய்யப்பட்ட எந்தவொரு உடன்பாட்டையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை
என ஷரோன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அவர் மேலும்
''பிரதமர் பராக்கிற்கு இராஜதந்திர கொள்கைகளை தீர்மானிக்க
நீதியான, நடைமுறை ரீதியான உரிமை இல்லாதுதடன், பாராளுமன்றத்தில்
பெரும்பான்மையும் இல்லை'' என தெரிவித்துள்ளார்.
இந்த ஸ்தம்பிதம் ஏனைய எதிர்க்கட்சிகளின்
ஆலோசனையின் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பராக்கின் அரசாங்கம் பொது தேர்தலை நடாத்த
நிராகரித்ததால் அதற்கு சட்டபூர்வ உரிமை இல்லை எனக்கூறி
கடந்த செவ்வாய்க்கிழமை விசேட பாராளுமன்ற கூட்டத்தில்
வலதுசாரிக் கட்சிகளும், குழுக்களும் பாலஸ்தீனியர்களுடன் செய்யும்
எந்தவொரு உடன்பாட்டிற்கும் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
Zu Artzeinu இயக்கத்
தலைவரான Moshe Feiglin
தாம் 1993 ஒஸ்லோ உடன்படிக்கையின் ஸ்தாபகரான இட்ஸாக்
ரபீன் 1995ம் ஆண்டு மதவெறியனால் சுட்டுக்கொல்லப்பட்ட
பின்னர் செய்தது போன்ற, பாதைகளை தடைசெய்வது போன்ற
சிவில் ஒழுங்கை குழப்பும் நடவடிக்கைகளில் இறங்கப்போவதாக
தெரிவித்தார்.
Yesha Council இன் தலைவரான
Uri Ariel
"பராக் தனது உயிரை இழந்துவிட்டார், அசாதாரணமான
எதிர்ப்புகள் இப்போது தேவை'' என தெரிவித்தார். பசுமைக்கட்சியின்
பெண்கள் தலைவரான Nedia Matar
பராக்கின் நடவடிக்கைகள் ''தேசத்துரோகம்''
எனவும், வலதுசாரியான Elyakim
Ha'etzni ''பராக் ஒரு சதியை செய்கின்றார்''
எனத்தெரிவித்தார். ஹெப்ரோன் நகரத்தின் யூத சமூகத்தின் பிரதிநிதியான
Noam Arnon யூத
குடியிருப்புக்கள் கலைக்கப்படும் பட்சத்தில் ஆயுதரீதியான எதிர்ப்பிற்கும்
''வெற்றிக்கு தயாராகும் படி'' மக்களை கேட்டுக்கொண்டார்.
இதே நாள் ஜெருசலம் நகரத்தலைவரான Ehud
Olmert பராக் "இஸ்ரேல் அரசை
இல்லாதொழிப்பதாக'' குற்றம் சாட்டினார்.
இஸ்ரேல் மலைக்கோவில் பிரதேசத்தின் மீதான
உரிமையை பங்கிடுவதற்கு எதிராக 200 யூத தீவிரவாதிகள் வியாழக்கிழமை
கலகத்தடுப்பு பொலிஸாருடன் மோதிக்கொண்டனர்.
இஸ்ரேலிய வலதுசாரிகளின் மத்தியிலுள்ள எதிர்ப்பு எழுச்சியானது
இராணுவ அதிகாரியான General Efi
Eitam இன் இராஜினாமா மூலம் வெளிப்படுகின்றது.
அவர் பராக்கின் அரசாங்கம் பாலஸ்தீனியர்களுடன் பேச்சுவார்த்தை
நடாத்துவதை பல பொதுவான நிகழ்ச்சிகளில் கண்டித்தமைக்காக
இஸ்ரேல் இராணுவ தளபதியான Shaul
Mofaz ஆல் விமர்சிக்கப்பட்டவர். முதலாவது
இன்ரிபாடா எழுச்சியின் போது அடி, உதைகளுக்கும் பாலஸ்தீனியர்களின்
அங்கங்களை உடைத்த படைகளுக்கு பொறுப்பாக இருந்தவர்.
இதற்காக ஒருபோதும் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது கிடையாது.
Efi Eitam சில வலதுசாரிக் கட்சிகளின்
தலைவராக அரசியலில் தலையிடலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.
|