World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்:ஆசியா:துருக்கி

Turkish state suppresses prison revolts

துருக்கி அரசு சிறைச்சாலை எழுச்சியை ஒடுக்குகிறது

By Justus Leicht
22 December 2000

Use this version to print

கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கான பொலிசார் துருக்கியின் தேசியக் கொடியையும், துப்பாக்கிகளையும் உயர்த்திப் பிடித்தவாறு சித்திரவதை செய்த அவர்களுடைய பொலிஸ் நண்பர்களை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் இறங்கினர். ''இரத்தத்துக்கு இரத்தம்'', ''இடதுசாரி இயக்கங்கள் இல்லாதொழிக்கப்பட வேண்டும், நாம் எமது துப்பாக்கிகளை பாவிப்பதற்கு ஆயத்தமாக உள்ளோம் என்ற கோசங்களை அங்கே பொழிந்தனர்''. MHP பாசிசக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், (சாம்பல் நிற ஓநாய்கள் - Grey Wolves- ஆளும் கூட்டணியின் பங்காளிகள்) எதிர்ப்பு காட்டும் கைதிகளை ''பட்டினியால் சாகவிடு'' என வெளிப்படையாகவே தெரிவித்துக் கொண்டார். அவர்கள் எதிர்பார்த்தது அவர்களுக்கு செவ்வாய்க்கிழமை கிடைத்தது.

தனிமைப் படுத்தப்பட்ட சிறைச்சாலைகளை அறிமுகப்படுத்துவதற்கு எதிராக கடந்த 60 நாட்களாக உண்ணாவிரதத்தை மேற்கொண்ட 20 சிறைகளில் இருந்த இடதுசாரி அரசியல் கைதிகளை, பொலிஸூம், இராணுவமும் இணைந்து காலை விடிவதற்கு முன்பு மோசமாகத் தாக்கியது. மேலும் இத்தாக்குதலுக்காக ஹெலிகொப்டர்களும், கவச வாகணங்களும் பாவிக்கப்பட்டன. கைதிகளை அடைவதற்கு வசதியாக இராணுவத்தினர் மதில்களை உடைத்தனர். சில இடங்களில் கைதிகளின் எழுச்சிகளும் அவற்றை அடக்குவதற்கான சண்டைகளும் நாள்பூராவும் இடம் பெற்றன. இவற்றினால் ஏற்பட்ட புகை மண்டலங்கள் தொலைவில் உள்ள பல நகரங்களுக்கும் தென்பட்டதுடன், துப்பாக்கி வேட்டுக்களின் சத்தங்களும் கேட்டன. இராணுவம் இச்சம்பவத்தை பார்வையாளர்கள் நெருங்காவண்ணம் அவர்களை வெகு தொலைவிற்கு அப்புறப்படுத்தியது. கைதிகளின் உறவினர்கள், சட்டத்தரணிகள், மனித உரிமைச் சங்கத்தின் பிரதிநிதிகள் போன்ற, அரசுக்கு எதிராக ஊர்வலம் செய்த அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இச் சம்பவம் நடைபெறுவதற்கு முதல்நாள், சிறைச்சாலை வாயிலுக்கு முன்பாக நின்ற பத்திரிகை ஆசிரியர்கள் அவ்விடத்திலிருந்து கலைக்கப்பட்டதுடன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதம் பற்றிய செய்திகளும் தணிக்கை செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஐக்கியத்திற்கான ஊர்வலங்கள் பலவந்தமாக கலைக்கப்பட்டன. ஊர்வலம் செய்தவர்களையும், இடதுசாரி எதிர்ப்பாளர்களையும் சாம்பல் நிற ஓநாய்கள் (Grey Wolves) பொலிசாரின் உதவியுடன் பயமுறுத்தியதன் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட சிறைச்சாலை முறைக்கு தமது ஆதரவினைக் காட்டினர்.

பொலிசாரின் அடாவடித்தனத்தால் பதினைந்து கைதிகள் வரையில் செவ்வாய்கிழமை இறந்ததுடன், மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததோடு இத்தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட இரு இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர். கைதிகள் தானியங்கி ஆயுதங்களை (Semi-Automatic) பெருமளவில் தன்வசம் வைத்திருப்பதாக பிரதமமந்திரி புலென்ற் எஸ்விற் (Bulent Ecevit) பத்திரிகையாளர் மாநாட்டில் தெரித்தார். இவர் இதையே, கடந்த வருடம் அங்காராவில் உள்ள உலுகான்சா (Ulucanlar) சிறைச்சாலையில் பத்துப்பேரை ஆயுதப்படைகளால் படுகொலை செய்வதற்கு பொறுப்பாக இருக்கையிலும் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இம் முறை அனேகமான கைதிகள் தமக்குத் தாமே தீ மூட்டிக் கொண்டு உயிர் நீத்தனர் என்ற இந்த உத்தியோகபூர்வமான வெளிப்படுத்தலின் உண்மையானது ஒரு சந்தேகத்துக்கு இடமானதே. ஒரு கைதி எரிந்த நிலையில் இராணுவத்தை நோக்கிப் போனதால் சுடப்பட்டார் என நீதிமந்திரி கிக்மெற் சாமி ரூக் (Hikmet Sami Türk) குறிப்பிட்டார். மனிதர்கள் எரிந்து கொண்டு இருப்பதை அரசாங்கம் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்காது என மிகவும் சிடுமூஞ்சித்தனமாக அவர் குறிப்பிட்டார். அவர் கைதிக்கு அவருடைய ''பாதுகாப்பு''பை வழங்காமல், கைதி ஏன் தனக்குத்தானே தீ மூட்டிக்கொண்டார் (இது உண்மையிலும் இவ்வாறு நடைபெற்றிருந்தால்) என்பதற்கு அவர் விளக்கம் கூறவில்லை.

சிறைச்சாலை சம்பவங்களுக்கு அரசாங்கத்தின் கோரமான நடவடிக்கைகளே உண்மையான காரணங்களாக இருந்தன. கைதிகளின் நடவடிக்கைகளினூடு ''பொதுஜன ஒழுங்கு'' பாதிக்கப்படுவதாக துரூக் (Türk ) கடந்த வாரம் எச்சரிக்கை செய்தார். உலுகான்சா (Ulucanlar) சிறைச்சாலையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, ''அது என்ன நடவடிக்கை எடுத்தாலும்" அரச கட்டுமானங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என பொலிசாரின் செயலை நியாயப்படுத்தி எஸ்விற் (Ecevit) கருத்துதெரிவித்தார்..

இந்த உண்ணாவிரதம் மிகவும் பரந்தளவிலான ஆதரவைப் பெற்றுக் கொண்டது. கடந்த வாரம் பத்திரிகைகளுக்கு விதித்த தடையை மேலும் நீட்டிப்பதை ''நாடு பிளவு பட்டுவிடும்'' எனக்கூறி நியாயப் படுத்துவது இதற்கான ஆதரவை அதிகரித்துவிடும் என நீதி மந்திரி மறைமுகமாக நம்பினார். மேலும் அதிகமான கைதிகள் இவ் எதிர்ப்பில் ஈடுபட்டனர். இறுதியாக ஆயிரம் பேர் வரையில் இதில் பங்கு கொண்டனர். இவர்களில் 200 பேர் தண்ணீர் மட்டும் அருந்தும் ''சாகும்வரை உண்ணாவிரதத்துடன்'' கலந்தும் கொண்டனர். அனேகமான கலைஞர்கள், புத்திஜீவிகள் போன்றோர் கைதிகளின் கோரிக்கைகளுக்கு தமது ஆதரவைத் தெரிவித்துக் கொண்டனர். முக்கியமான அனைத்து மனித உரிமைச் சங்கங்களின் பிரிவுகளும், மற்றும் கைதிகளுக்கான உதவி நிறுவனங்கள், மருத்துவர்கள், உளவியலாளர்களும், அதேபோன்று சட்டத்தரணிகளின் சங்கம், கட்டிடக்கலை நிபுணர்கள், பொறியியலாளர்கள், தொழிற்சங்கவாதிகள் போன்ற அனைவரும் "F-type" எனும் சிறைச்சாலையான தனிமைப்பட்ட சிறைச்சாலைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்புக்கு அவர்களது ஆதரவையும், அதற்கான கடுமையான விமர்சனத்தையும் தெரிவித்துக் கொண்டனர்.

இதுவரையில் பல அறைகளைக் கொண்ட சிறைச் சாலையில் ஒரு அறையில் மட்டும் 60 பேர் அல்லது அதற்கும் மேலானோர் படுத்துறங்கினர். இது இங்கே சித்திரவதை, முறைகேடான நடவடிக்கைகளை தடுக்க ஓரளவு எதிர்க்க உதவியதுடன் கைதிகள் மத்தியில் அரசியல் கலந்துரையாடல்கள் இடம்பெறவும் வசதியாக இருந்தது. மிகவும் பலம்வாய்ந்த சத்தம் புகாத சுவர்களைக் கொண்ட புதிய தனிமைப் படுத்தப்பட்ட சிறைச்சாலையில் கூடுமான வரையில் மூன்றுபேர்கள் ஒரு அறையில் அடைத்து வைக்கப்படுவார்கள். இங்கே அடைத்து வைக்கப்பட்ட இடதுசாரிகளும், குர்திஸ் தேசியவாதிகளும் பாசிசக்கட்சியின் (MHP) முக்கிய ஆதரவாளர்களான காவல்காரர்களினதும், அவர்களை சித்திரவதை செய்தவர்களினதும் கீழ்ப்படிவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பாராளுமன்ற மனித உரிமைச் சங்கத்தின் தலைவராக இருந்து விலக்கப்பட்ட சேமா பிஸ்கின்சூட் (Sema Piskinsuet) துருக்கியின் சிறைச்சாலைகளில் சித்திரவதையும், முறைகேடான நடவடிக்கைகளும் ஒரு நாளாந்த நிகழ்சிகளாகும் எனத் தெரிவித்துள்ளார்.

''சிறைச்சாலை சீர்திருத்தம்'' என்பதன் உண்மையான நோக்கமானது தனிமைப்படுத்தப்பட்ட சிறைச்சாலைக்கு மாற்றுதல் என்பதாகும். ஆனால் அரசாங்கம் இது '' பயங்கரவாத இயக்கத்தின் ஆதிக்கத்தை உடைப்பதற்கு மிகவும் அவசியமாகும் '' என மீண்டும், மீண்டும் கூறுகின்றது.

F-cells எனும் சிறைச்சாலையைப் பற்றிய தொடர்ச்சியான கருத்துக்கள் மற்றும், உண்ணாவிரதத்திற்கான ஆதரவுகளை பின்னடிக்கும் முகமாக அரசாங்கமானது, கடந்த வாரம் இதைப் பற்றிய ''ஒரு பரந்தளவிலான மதிப்பீடு'' வரும் வரையில் இது பின்போடப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளது. விமர்சன கருத்துக்களும், அவற்றிற்கான அச்சங்களும் அதிகரிக்கையில் முறைகேடான தகாத நடவடிக்கைகளை ஆராய்வதற்கு பொதுமக்கள் சுயாதீன கட்டுப்பாட்டு குழுக்களை நிர்மாணிக்க முன்மொழியப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் ரூக் (Türk) இவற்றை நடைமுறைப் படுத்துவதற்கான அரசியலமைப்புச் சட்டத்தின் மாற்றங்களையிட்டு அவரால் உத்தரவாதம் அளிக்கமுடியாது எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

உண்ணாவிரதம் பற்றிய உடன்பாடு தோல்வி கண்டதிற்கு கைதிகள் மட்டுமே பொறுப்பென அவர் மேலும் தெரிவித்துக் கொண்டார். இருப்பினும் சிறையின் அறைகளில் 18 முதல் 20பேர் வரையிலுமான கைதிகளை அடைப்பதற்கு கைதிகள் ஒத்துக்கொண்டுள்ளனர். எனினும் நீதி அமைச்சரின் இந்த ஐயுறவான வாக்குறுதி ஒரு பொய் என நீரூபிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நடவடிக்கையைத் தொடர்ந்து உடனடியாக கைதிகளில் ஒரு பிரிவினரை அங்காராவிற்கு அண்மையில் இருக்கும் சின்கான் (Sincan ) சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டுமென்பதை ரூக் (Türk) செவ்வாய் அன்று உறுதிப்படுத்தினார்.

மிகவும் பரிதாபகரமான விரக்தி, மற்றும் தற்கொலை முயற்சிகளுக்கு உட்பட்டு உண்ணாவிரதம் இருந்தோர் ( இவர்களில் அதிகமானோர், சாகும்வரை உண்ணாவிரதம், தம்மைத் தாமே தீ மூட்டுதல் போன்றவற்றில் ஈடுபட்டோர், இவர்களுக்கு இருபது வயதே நிரம்பிருந்தது.) அரசினதும், அரசாங்கத்தினதும் சிடுமூஞ்சித்தனத்துக்கும், மன்னிப்பு மறுக்கப்பட்ட குற்றங்களுக்கும் ஆளாக்கப்பட்டனர். உண்ணாவிரதத்தின் இரத்தம் தோய்ந்த இந்த முடிவானது, சமூக முரண்பாட்டின் ஆழமான உடைவையும், கொந்தளிப்பான நிலைமையையும் எடுத்துக் காட்டுகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதும், ஐரோப்பிய கூட்டுக்குள் இணைந்து கொள்ள துருக்கி முன்வைத்துள்ள பொருளாதார நிலைமையும், அத்துடன் துருக்கியை ஒரு நிரந்தரமான இராணுவமயப் படுத்தலுக்கு தொடர்ச்சியாக உட்படுத்துவதும் போன்ற நடவடிக்கைகளினூடு ஒரு சிறிய தட்டு தொழில் வழங்குனர்களும், அரசியல்வாதிகளும், ஜெனரெல்களும் நாளாந்த வருமானத்துக்காகப் போராடும் பெரும்பான்மை மக்களின் செலவில் கணக்கிடமுடியாத செல்வத்தை சம்பாதிக்கின்றனர்.

இவ் விடயத்தில் ஜேர்மன் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறிப்பிடத்தக்கதொன்றாகும். Junge Welt எனும் பத்திரிகைக்கு பேட்டிகொடுத்த துருக்கியைச் சேர்ந்த மனித உரிமைச் சங்கத்தின் (IHD) தலைவரான சாக்கின் சேவிம் (Sakine Sevim) " நான் ஜேர்மன் பாராளுமன்றத்தைச் சேர்ந்த மனித உரிமைச் சங்கத்தின் தலைவரான கிளவுடியாரொத் (Claudia Roth) உடன் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அது இது வரையிலும் ஒரு சாத்தியமில்லாமலே உள்ளது. நான் அதைத் தொடர்ந்து பசுமைக் கட்சியின் பாராளுமன்றப் பிரதிநிதியான செம் ஓஸ்டெமிய (Cem Özdemir-இவர் துருக்கி இனத்தவர்) என்பவருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் இதுவரையிலும் அவர் எனக்கு திருப்பி தொலைபேசி எடுக்கவில்லை. '' ஐரோப்பிய நிலைமைகளை அறிமுகப்படுத்தும்'' ஒரு பகுதியாகவும், கவலைக்குரிய முறையில் ஐரோப்பாவிலும் இப்புதிய சிறைச்சாலைமுறை வருகையில் இவர்கள் இவ்வாறு கவலையீனமாக இருப்பது என்பது ஆச்சரியப்படக் கூடியதொன்றல்ல.