World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்:ஆசியா: இலங்கை

Preparations for peace talks drag out as Sri Lankan government continues military offensive

இலங்கை அரசாங்கம் இராணுவ தாக்குதல்களை தொடர்வதால் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கான தயாரிப்புகள் இழுபட்டுப் போகிறது

By a correspondent
1 February 2001

Use this version to print

புத்தாண்டு பிறந்து ஒரு மாதம் கழிந்து போய்விட்ட போதிலும் இலங்கை அரசாங்கத்துக்கும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்புக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான உறுதியான யோசனைகளோ அல்லது திகதியோ முன்வைக்கப்படவில்லை. முன்னர் இதனை ஜனவரியில் ஆரம்பிப்பதென கடந்த நவம்பரில் தெரிவிக்கப்பட்டது.

உண்மையில் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பொதுஜன முன்னணி அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையில் "நம்பிக்கையில்லை" என இடைக்கிடையே குற்றம் சாட்டி வந்துள்ளதோடு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் டிசம்பரில் பிரகடனம் செய்யப்பட்ட ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்தத்தை, யாழ்ப்பாணக் குடாநாட்டில் இராணுவத் தாக்குதலை நடாத்த பயன்படுத்திக் கொண்டது.

'அன்வில் 9' (Anvil-9) எனப் பெயர் கொண்ட இந்த இராணுவ நடவடிக்கை, கடந்த ஏப்பிரல், மே மாதங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கைப்பற்றப்பட்ட பெருமளவிலான நிலப்பரப்பை மீளக் கைப்பற்றுவதை இலக்காகக் கொண்டிருந்தது. 18 வருட கால மோதுதலில் இராணுவம் முதற்தடவையாக யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு நுழைவாயிலாக விளங்கிய மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவு இராணுவ முகாமில் கட்டுப்பாட்டை இழந்தது.

இத்தோல்விகள் கொழும்பில் ஒரு பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் மனமுடைந்து போன 30,000 படையாட்களை கட்டிக் காக்கும் முகமாக அரசாங்கம் புதிய குண்டு வீச்சு விமானங்களையும் துப்பாக்கி படகுகளையும் பீரங்கிகளையும், பலகுழல் ஏவுகணைகளையும் கொள்வனவு செய்ய 350 மில்லியன் அமெரிக்க டாலர்களை அள்ளி வீசியது.

குமாரதுங்க அரசாங்கம் யுத்தத்துக்கு ஒரு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும்படி கோரும் பெரும் வர்த்தகர்களதும் பெரும் வல்லரசுகளதும் நெருக்குவாரங்களுக்கு உள்ளாகியது. இதே சமயம் தனது அணியினுள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எதுவிதமான சமரசமும் செய்து கொள்ளக் கூடாது எனக் கோரும் சிங்கள தீவிரவாதிகளையும் அது தள்ளிவைக்க முடியாமல் போயிற்று. தமிழீழ விடுதலைப் புலிகளின் யுத்த நிறுத்தத்துக்கு இணங்க மறுத்து "அன்வில்-9" இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டதன் மூலம் குமாரதுங்க இறுதியில் ஒரு பலம் வாய்ந்த நிலையில் இருந்து பேரம் பேசலில் ஈடுபட விரும்புகின்றார் என்பது தெளிவாகியுள்ளது.

யாழ்ப்பாண இராணுவத் தளபதி மேஜர் ஜெனரால் அன்டன் விஜேந்திரா 'டைம்' (The Time) சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியில் இந்த எதிர்த்தாக்குதலின் அரசியல் நோக்கத்தை சுட்டிக்காட்டியுள்ளார். "இந்தத் தன்மையிலான ஒரு யுத்தத்தை இராணுவ நடவடிக்கைகளால் மட்டும் வெற்றி கொண்டுவிட முடியாது" என அவர் குறிப்பிட்டார். "நாம் இதனை எதிரி போதுமான அளவு பலவீனம் கண்ட நிலைக்கு இட்டுச் செல்ல வேண்டும். அப்போதுதான் அவர்கள் எமது பேச்சுவார்த்தை நிபந்தனைகளுக்கு உடன்படுவார்கள். நாம் தற்சமயம் ஒரு பலம் கண்ட நிலையில் உள்ளோம்... இந்த நிலைமை எமக்கு பெரிதும் சாதகமானது."

சரியான இராணுவ நிலைமை தெளிவாக இல்லை. பொறுக்கி எடுக்கப்பட்ட பத்திரிகையாளர்களை ஒரு சில வரையறுக்கப்பட்ட சுற்றுலாக்களுக்கு செல்ல இலங்கை அரசாங்கம் இடமளிப்பதை தவிர யுத்தப் பிராந்தியங்களில் இருந்து சுதந்திரமான செய்தி அறிக்கைகள் கிடையாது. ஆனால் இராணுவத்தின் கோரிக்கைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் மறுத்து அறிக்கை வெளிவிடுவதாக இல்லை. இதன்படி இராணுவம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் கணிசமான வெற்றிகளை ஈட்டிக் கொண்டுள்ளதோடு ஆனையிறவு பிராந்தியத்தை நோக்கியும் முன்னேறிக் கொண்டுள்ளது.

யாழ்ப்பாண நகருக்கு கிழக்கே சாவகச்சேரியை அரசாங்கப் படைகள் மீளக்கைப்பற்றிக் கொண்டதன் பின்னர், அரசாங்கப் படைகள் குடாநாட்டின் தெற்கு, கிழக்கு பக்கங்களில் மேலும் முன்னேறிக் கொண்டுள்ளது. சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையின்படி இராணுவம் ஆனையிறவில் இருந்து 22 கி.மீட்டர்கள் அப்பால் நின்று கொண்டுள்ளதோடு, தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது பாதுகாப்பு கோட்டையும் கடந்து சென்றுள்ளது.

சண்டை உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. ஜனவரி 17ம் திகதி கிடைத்த அறிக்கைகளின்படி அரசாங்கப் படைகள் 50 படையாட்களையும் இரண்டு இராணுவ அதிகாரிகளையும் இழந்துள்ளதோடு தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் 54 பேர் மரணமடைந்துள்ளனர். இரு தரப்பில் இருந்தும் சுமார் 300 பேர் காயமடைந்துள்ளனர். இராணுவப் பேச்சாளர் சனத் கருணாரத்னவின்படி இதற்கு முதல் நாள் "மோதுதலில் 18 படையாட்கள் கொல்லப்பட்டதோடு 89 பேர் காயமடைந்தனர். இதே சமயம் 22 கிளர்ச்சியாளர்களின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டன." செப்டம்பரில் ஆரம்பித்த ஒரு தொகை தாக்குதல்களில் 1200 விடுதலைப் புலிகளின் போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியான ஒரு கண்கண்ட சாட்சி சாவகச்சேரியை பற்றி வருணித்ததாவது: "முன்னர் இது யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஒரு விரகி முக்கியத்துவம் வாய்ந்த சந்தியில் ஒரு வர்த்தக மையமாக விளங்கியது. துப்பாக்கி குண்டுகள் துழைத்த வங்கிகளதும், கூட்டுறவுச் சங்கங்களதும், கடைகளதும் பெயர்ப் பலகைகளே எஞ்சியுள்ளன. 18 வருடகால பிரிவினைவாத யுத்தம் எந்தளவு உயர்ந்த மட்டத்துக்கு கொணரப்பட்டுள்ளது என்பதற்கு இவை சாட்சி பகர்கின்றன. முன்னர் செழிப்பு நிறைந்த இந்த நகரத்தின் மக்கள் இப்போது அகதிகள் முகாம்களில் நிறைந்து போயுள்ளனர். வெளியிடங்களில் உக்கிரமான யுத்தம் இடம்பெற்றுக் கொண்டுள்ளது."

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு அறிக்கை கூறுவதாவது: "இராணுவம் நாம் சுயமாக திணித்த யுத்தத்தின் காரணமாக செய்து கொண்ட படைவிலக்கலின் நன்றிக் கடன் காரணமாக சமீப கால தாக்குதல்களில் முன்னேற்றம் கண்டது." ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் கணிசமான அளவு தோல்வி கண்டுள்ளதோடு ஆனையிறவைக் காப்பாற்ற அது தனது படைகளை இப்போது திரட்டி வருகின்றது. வன்னி மாவட்டத்தில் இருந்து தனது விநியோகங்களை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்ல இது முக்கியமானது.

ஜனவரி 24ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு மாத கால ஒருதலைப்பட்சமான யுத்த நிறுத்தம் முற்றுப் பெற்று இருந்த வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சாளர் அன்டன் பாலசிங்கம் நோர்வேயினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள சமாதான பேச்சுவார்த்தைகளில் கொழும்பு கலந்து கொள்ளாது போகுமிடத்து இது நீடிக்கப்படமாட்டாது என எச்சரித்தார். யுத்தத்தை தணிக்க நோர்வே சிறப்பு தூதுவர் எறிக் சொல்ஹெயிம்மால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஒரு தொகை யோசனைகளை பொதுஜன முன்னணி அரசாங்கம் நிராகரித்து விட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

"ஒரு இரத்தம் தோய்ந்த யுத்தம் நடைபெற்றுக் கொண்டுள்ள வேளையில் எம்மால் பேச்சுவார்த்தை நடாத்த முடியாது என நாம் கூறினோம்" என பாலசிங்கம் தெரிவித்தார். அரசாங்கம் நோர்வேயின் பிரேரணைகளை கணக்கில் கொள்ள தயாராக இருக்குமானல் நாம் யுத்த நிறுத்தத்தை நீடிக்க தயாராக உள்ளோம். இல்லாது போனால் யுத்த நிறுத்தத்தை நீடிப்பதில் அர்த்தம் இல்லை". எவ்வாறெனினும் அரசாங்கம் யுத்தத்தை நிறுத்த மீண்டும் மறுத்துவிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறெனினும் தனது யுத்த நிறுத்தத்தை மேலும் ஒரு மாதத்தில் நீடித்ததோடு இலங்கை அரசாங்கத்தை அதைக் கடைப்பிடிக்க தூண்டும்படி அனைத்துலக சமூகத்தை வேண்டியது."

அரசாங்கத்தின் ஆத்திரமூட்டல் இராணுவ நடவடிக்கைகளுக்கிடையேயும் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்தத்தை நீடிப்பது என எடுத்த தீர்மானம், அது கணிசமான அளவு நெருக்குவாரத்தின் கீழ் இருந்து கொண்டுள்ளதை சுட்டிக் காட்டுகின்றது. ஒரு தீர்வுக்காக நெருக்கி வரும் பிரித்தானிய அரசாங்கம், விடுதலைப் புலிகள் அமைப்பு அது கீறிய கோட்டினுள் நிற்காது போனால் அதனை ஒரு பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்து விடப் போவதாக பல தடவைகள் சமிக்கை காட்டி வந்துள்ளது. விடுதலைப் புலிகள் லண்டனில் இயங்கும் தளத்தை இழுத்து மூடிவிடப் போவதாக அது கூறி வந்துள்ளது.

பொதுஜன முன்னணி அரசாங்கம் தனது இராணுவ பலத்தை பலப்படுத்தியதன் பின்னர் இது பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க விரும்புவதாக காட்டிக் கொண்டது. கடந்த வார இறுதியில் குமாரதுங்க தமிழீழ விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தையை ஆரம்பித்து முடிப்பதற்கான திட்டவட்டமான கால வரையறைகளை தெரிவிக்கும்படி கேட்டார். "சுரங்க முடிவில் சமாதானத்துக்கான நம்பிக்கை நலிவு கண்டு வருவதாக" அவர் தெரிவித்தார். ஆனால் யுத்தத்துக்கு முடிவு கட்டுவதை அவர் நிராகரித்தார். எந்த ஒரு பேச்சுவார்த்தையின் போதும் இராணுவ தாக்குதல் தொடரும் என அவர் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சாளர் அன்டன் பாலசிங்கத்துடன் லண்டனில் பேச்சுவார்த்தைகளை நடாத்தியதன் பின்னர் அரசாங்கத்துடனும் அரசியல் தலைவர்களுடனும் மீண்டும் பேச்சுவார்த்தை நடாத்த சொல்ஹெயிம் புதன்கிழமை கொழும்பு வந்தார். ஜனவரி நடுப்பகுதியில் அவர் மேற்கொண்ட கொழும்பு விஜயம் எதுவித பலனையும் தராததோடு அவரது வரவேற்பு பெரிதும் குளிரானதாகவும் விளங்கியது. அச்சமயத்தில் சொல்ஹெயிம் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பல அமைச்சர்களைச் சந்தித்தார். அத்தோடு அவர் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை இராணுவ முன்னரங்கங்கள் ஊடாக சென்று வன்னியில் சந்திக்க அரசாங்கத்தின் அனுமதியையும் நாடினார். இப்பயணம் இடம்பெறாததோடு இதற்கான காரணமும் வழங்கப்படவில்லை. சொல்ஹெயிம் இரண்டு நாட்களின் பின்னர் எதுவித விளக்கமும் இல்லாமல் திரும்பினார்.

அவரது இறுதிப் பயணம் பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு படிக்கல்லாக விளங்குமா என்பதை பொறுத்து இருந்துதான பார்க்க வேண்டும்.