WSWS :செய்திகள்
& ஆய்வுகள்: வட
அமெரிக்கா : ஐக்கிய
அமெரிக்கா
Testimony highlights Greenspan's erratic course
கிரீன்ஸ்பானின் அறிக்கை அவரது நிலையற்ற பாதையை
வெளிப்படுத்திக் காட்டுகின்றது
By Nick Beams
14 February 2001
Back to screen
version
அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கை
தொடர்பான பகிரங்க அறிக்கையில் வழமைபோல் விமர்சனமற்ற
தொலைத்தொடர்பு சாதனங்களின் ஆதரவுடன் Federal
Reserve Board இன் தலைவரான அலன் கிரீன்ஸ்பான்,
(Alan Greenspan) தற்போதுள்ள
நிலைமையில் எவ்வளவுதான் பிரச்சனைகள் இருந்தாலும் எல்லாம்
கட்டுப்பாட்டினுள் இருப்பதாக காட்ட முனைகின்றார்.
ஆனால் கடந்த செவ்வாய்க்கிழமை செனட்வங்கி
குழுவிற்கு வழங்கிய அறிக்கையை வாசிக்கும் போதும், முக்கியமாக
கடந்த 5 வருடங்களில் Federal
Reserve Board இனது ஆவணங்களைப் படிக்கும்
போதும் இது வித்தியாசமான கதையைக் கூறுகின்றது. இத்தகைய
ஆய்வானது அமெரிக்க நிதித்துறை அதிகாரிகளுடன் முற்றாக உடன்படாததும்,
எவ்வாறு கட்டுப்படுத்துவது என தெரியாத சக்திகளால் தொடர்ந்து
தாக்கப்பட்டுள்ளதைக் காட்டுகின்றது.
கிரீன்ஸ்பான் செனட்டுக்கு வழங்கிய அறிக்கையில்
2000 இன் மத்தியில் தொடங்கிய அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியானது
மிகுதி வருடத்தில் தீவிரமடைந்தது எனவும் ''வருட திருப்பத்தின்
போது சிலவேளை இயக்கமற்ற நிலையை அடையலாம் எனவும்,
ஒரு சில பொருளாதாரக் காட்டிகளின் வழமைக்கு மாறான பலவீனம்
ஜனவரியில் தொடர்ந்து காணப்படவில்லை'' எனக் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த மாத Federal
Open Market Committee கூட்டத்தில் கிரீன்ஸ்பான்
இவ்வாறு குறிப்பிட்டிருந்த போதும் வட்டி வீதங்களை தீர்மானிப்பதற்கு
பொறுப்பான குழுவானது எவ்வாறிருந்த போதிலும் ''அபாயமான
நிலைமையை கணிப்பிட முடியாத காலத்திற்கு பொருளாதார பலவீனத்தை
ஏற்படுத்தும் நிலைமைகளை நோக்கியிருப்பதான கருத்தை
ஞாபகப்படுத்தியது''.
அமெரிக்கப் பொருளாதாரம் மந்தநிலையை
நோக்கி செல்கின்றதா என கிரீன்ஸ்பானிடம் கேட்டபோது ''தற்போது
நாம் அந்த நிலையிலில்லை'' எனப் பதிலளித்தார்.
கிரீன்ஸ்பான் தனது உரையின் குறிப்பிடத்தக்களவு
பகுதியை வர்த்தக வட்ட இயக்கத்தில் புதிய தகவல் தொழில்நுட்பத்தின்
தாக்கம் குறித்து செலவிட்டார். இத்தொழில்நுட்பம் பாரிய
தொடர் நிர்வாகத்தினை வளங்குவதுடன் [supply-chain
management] வளைந்து கொடுக்ககூடிய
[flexible]
உற்பத்தியையும் அனுமதிப்பதால்
நிறுவனங்களின் வர்த்தக நிர்வாகிகள் பரந்த, தகவல் மிகுந்த
முடிவை எடுப்பதற்கும், பொருளாதார சூழ்நிலைகளில் வரும்
மாற்றங்களுக்கு ஏற்றமாதிரி விரைவாக நடவடிக்கை எடுக்கமுடியும்
எனத் தெரிவித்தார்.
ஆனால் இந்த துரிதமான மாற்றங்கள் ''பொதுவாக
இலாபமானதுடன்'', இப்போக்கு ''சில எச்சரிக்கைக்
கொடியையும் காட்டுகின்றது''. இத்தகவல்கள் அதிகரித்தவகையில்
எல்லோருக்கும் கிடைப்பதுடன், கடந்த காலத்தைப் போலல்லாது
நிறுவனங்கள் கூட நெருங்கி இயங்கத் தொடங்குவதுடன், ''மிகக்குறைந்த
காலத்தில் மாற்றங்களை திணிக்கமுடியும்''.
ஒரேகாலத்தில் நிகழும் இதன் அதிகரித்த பாதிப்பானது,
கடந்த காலத்தைப் போலல்லாது ஒரு துறையில் ஏற்படும்
நெருக்கடியோ அல்லது நம்பிக்கையிழப்போ வெகுவிரைவில்
முழுப் பொருளாதாரத்தினுள்ளும் பரவமுடியும்.
''தொழில்நுட்பம் உற்பத்தியில் மாற்றங்களை
துரிதப்படுத்தும்'' என கிரீன்ஸ்பான் செனட் குழுவிற்கு கூறுகையில்
மனித இயல்பு மாறாதுள்ளது. உறுதியற்ற தன்மையுடன் இணைந்த
மாற்றங்களின் உயர்ந்த வேகத்திற்கு நாம் எப்போதும் போல்
வழமையான முறையிலேயே பதிலளிக்கின்றோம். நாங்கள் இயங்காது
விடுவதுடன், தீர்மானங்களை பின் தள்ளிப்போடுவதுடன், புதியதும்,
மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அடித்தளத்தில் நடவடிக்கை
உருவாகும்வரை நாம் பொதுவாக அதனுடன் ஒட்டிப்போயிருப்போம்.
இதன் அதியுயர் வடிவமாக பல பொருளாதார தீர்மானம் எடுப்போர்
அபாயத்தில் இறங்க விருப்பமற்றிருப்பதுடன் எல்லாவித அபாயத்திலும்
தலையிட முயலவும் விருப்பமற்றுள்ளனர். ஒவ்வொரு நடவடிக்கையிலும்
அபாயம் இயற்கையாக அமைந்திருப்பதால் இது எந்தவொரு
முன்னெடுப்பையும் எடுக்க இயலாது தடுக்கின்றது.
உதாரணமாக 1998 இல் சொத்துக்களை பெறுமதி
இல்லாது செய்துவிடுவதற்கான விருப்பம் மிக தீவிரமாக இருந்தது.
ஏனெனில் நிதிச்சந்தை இயங்காது போய்விட்டதாலாகும். பதிலாக
முதலீட்டாளர்கள் அபாயத்திலிருந்து விலகுவதை புறக்கணிக்க முன்னதாகவே
அண்மையில் வழங்கப்பட்ட நிதிப்பாதுகாப்பின் உயர் சொத்துக்களை
பெறுமதியில்லாது செய்துவிடுவதற்கான நிதிப்பாதுகாப்பினை வழங்கத்தள்ளப்பட்டனர்.
''ஆனால் தீர்மானம் எடுப்போர் அபாயத்திலிருந்து
தவிர்த்துக்கொள்ள விருப்பமற்றிருந்த போதும் ஒரு சிக்கன ஏற்பாட்டுபோக்கு
நிகழலாம். புதிய உயர் தொழில்நுட்ப முதலீட்டின் நீண்டகால எதிர்பார்ப்பு
சிறிதளவு மாற்றமடைந்தாலும் அத்திருப்பங்களின் உயர்கழிவுடன்
வாங்கலாம் என்ற உறுதியற்றதன்மை அதிகரிக்கலாம். அத்துடன்
நிலையற்ற அல்லது திரவமான உடைமைகளாக நிலையான அல்லது
திரவமற்ற சொத்துக்களாக மாற்றுவதற்கான விருப்பமற்ற
தன்மை அதிகரிக்கும்.
நீண்டகால நிர்வாக மூலதனத்தின் உடைவு
1998 செப்டம்பர்-ஒக்ரோபர் அனுபவங்களை
கிரீன்ஸ்பான், கடந்தமாத ஆரம்பத்தின் நெருக்கடிகளுக்கான
சைகைகளின் அபிவிருத்தியின் உள்ளடக்கத்தில் மீண்டும் நினைவு கூர்ந்தது
முக்கியத்துவம் வாய்ந்தது. 1998 இல் பில்லியன் டொலர் பெறுமதியான
hedge fund Long Term Capital
Management உடைந்தபோது Federal
Reserve Board 3 பில்லியன் டொலர்களை
முதலிட்டு பிணையெடுத்துடன், ஒரு தொடர் வட்டிவீத வெட்டுக்களை
நடைமுறைப்படுத்தி, உருவாகிய உலக நிதி நெருக்கடி தவிர்க்கப்பட்டது.
இந்த ஜனவரியில் 0.5% மான இரண்டு வட்டிவீத
வெட்டுக்களை Federal Reserve
Board நடைமுறைப்படுத்தியது. இது பாரியளவானது
மட்டுமல்லாது 1998 இன் இறுதியில் வழங்கியதைவிட உடனடியான
விளைவைக் கொடுத்தது. இது கிரீன்ஸ்பானும் மற்றைய நிதி உடைமையாளர்களும்
வருடத் தொடக்கத்தில் பங்குச் சந்தையின் பாரிய வீழ்ச்சியின்போது
Long Term Capital Management நெருக்கடியை
ஒத்த ஒரு நெருக்கடியை உருவாக்கிவிடுமோ என்ற நம்பிக்கையை
உருவாக்கிவிடும் என்று பயமடைந்துள்ளதாக தோன்றுகின்றது.
இவ்வறிக்கையானது கிரீன்ஸ்பானின் மற்றைய அறிக்கைகளை
போலல்லாது Federal Reserve
Board இன் கொள்கைகள் பங்கு சந்தையின்
இயக்கத்தால் அதிகரித்துவரும் வகையில் தீர்மானிக்கப்படுகின்றது
என்ற விடயத்தை நோக்கி கவனத்தை ஈர்ப்பதால் முக்கியமானது.
Federal Reserve Board கடந்தமாதம்
வட்டி விகிதங்களை வெட்டியது வாடிக்கையாளர்களின் செலவினையும்
நம்பிக்கையையும் அதிகரிக்கும் நோக்கத்திலேயே செய்யப்பட்டது.
இவ்விரண்டும் பங்குச்சந்தையின் இயக்கத்துடன் இணைந்து நெருக்கமாகத்
தொடர்புள்ளதாக கருதப்படுகின்றது.
கிரீன்ஸ்பானின் வார்த்தைகளில் கூறுவதானால் ''பங்குசந்தையின்
செல்வத்தில் ஏற்படும் மாற்றங்கள் கடந்த ஐந்து ஏழு வருடங்களைப்
போலல்லாது தற்போதைய வீட்டு வருமானத்தில் மாற்றத்தை
ஏற்படுத்துவதுடன் தொடர்புள்ளதால் பாவனையாளரினுடைய செலவின்
மாற்றத்தில் மிகமுக்கியமான தீர்க்ககரமானதாக இருக்கின்றது''
''பொருளாதாரக் கொள்கையில், நம்பிக்கையில்
ஏற்படும் தீடீர் உடைவுகளை அணுகுவது சிக்கலானது. வியாபாரத்திலும்,
முதலீட்டாளர்கள், பாவனையாளர்களின் நம்பிக்கையினம் தொடர்பாக
உயர்ந்த அளவிலிருந்து மத்திய அளவிற்கு ஒரு மெல்லிய மாற்றம் இல்லாது
இருக்கலாம். கடந்த கால வட்டங்களைப் பார்த்தால் மாற்றங்கள்
தொடர்பான அணுகுமுறை திடீரென நிகழ்ந்துள்ளது. எனது முன்னைய
அறிக்கைகளில் இப்போக்கினை நான் ஒரு அணைக்கட்டை நீர்
மோதி இறுதியில் உடைப்பதான போக்காக காட்டவிரும்புவேன்.
இந்த நீரோட்டம் கடந்த காலங்களில் கட்டியெழுப்பிய உறுதித்தன்மையையும்,
சுபீட்ச நிலையையும் அடித்தக்கொண்டு வருகின்றது'' என கிரீன்ஸ்பான்
குறிப்பிட்டுள்ளார்.
பாவனையாளரினதும் வியாபாரத்தினதும் நம்பிக்கையை
வட்டிவீதத்தை வெட்டுவதன் மூலமும் நிதிச்சந்தையை பெருக்கவைப்பதன்
மூலமும் பாதுகாக்கலாம் என்ற நோக்கத்தை உருவாக்கும்
விதமாகவே உத்தியோகபூர்வ கொள்கை நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
அணைக்கட்டு தொடர்பான கிரீன்ஸ்பானின் விளக்கமானது Federal
Reserve Board ஒரு துளையில் இருந்து மற்றத்
துளையை நம்பிக்கையற்று அடைக்க முயல்வதுபோல் தெரிகின்றது.
இப்படியான முயற்சியால் குறைந்தகால மந்தநிலையைத்
தவிர்கலாம். ஆனால் அமெரிக்கப் பொருளாதாரம் எதிர்நோக்கும்
நீண்டகால அடிப்படையான ஏற்றத்தாழ்வின் மீது நம்பிக்கையை
ஏற்படுத்த முடியாது.
கடந்தவாரம் Financial
Times பத்திரிகை
ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டபடி ''ஒரு குறுகிய மீட்சியை எதிர்பார்க்கலாம்.
கடந்த பத்தாண்டில் இருந்த போக்குகள் நிரந்தரமாக
தொடர்ச்சியாக இருக்கும். முதலாவதாக தேசிய வருமானத்தின்
இலாபத்தின் பங்கு முடிவில்லாது அதிகரிக்கும் என்பதும், இரண்டாவதாக
தனியார் தாம் உழைப்பதிலும் பார்க்கக் கூடுதலாக தொடர்ச்சியாக
முடிவற்று செலவழிப்பர் என நம்புவதும் பிழையானதாகும்.
மூன்றாவதாக முதலீட்டுக்கான வருமானம் மூலதனபங்கு அதிகரிக்கையில்
குறையும். நான்காவதாக பாரிய அமெரிக்க நட்டக்கணக்கில்
அந்நிய முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட நிலைமையில் தொடர்ந்தும்
முதலீடு செய்யமாட்டார்கள்''.
வேறுவார்த்தைகளில் கூறுவதானால் Federal
Reserve Board உடனடிப் பிரச்சனைக்களுடன்
அணுகுவதற்காக, முக்கியமாக சந்தைகளில் பாரிய வீழ்ச்சிக்கு
எதிராக குறைந்தகால நடவடிக்கையை மேற்கொள்ளுகின்றது.
இது நாளைய பாரிய பிரச்சனைகளுக்கான நிலைமைகளையே
உருவாக்கும்.
இப்பாடங்கள் தான் அதன் கடந்தகால ஆவணங்களை
ஆய்வு செய்கையில் உருவாகின்றது. இரண்டு வருடங்களுக்கு முன்னர்
Wall Street ''சிந்தனைக்கு
ஒவ்வாத செழிப்பினை'' காட்டுவதாக எச்சரித்ததை கருதாது,
1998 இன் இறுதியில் கிரீன்ஸ்பான் நிதிச் சந்தையை பெருக்கும் நோக்கத்தில்
ஒரு தொடர் வட்டிவீத வெட்டுக்களை உருவாக்கினார்.
1998 இன் வெட்டுக்கள் 1999 இன் இறுதியில் Y2K
பிரச்சனையால் இன்னுமொரு மந்தநிலை
ஏற்படலாம் என்ற பயம் தொடர்ந்ததுடன் மேலும் கலைப்பு
அதிகரித்தது. இதன் விளைவால் 1998 நவம்பரில் இருந்து 2000 பெப்ரவரி
வரையில் Nasdaq
சுட்டென் 3 ட்ரில்லியன் டொலர் பெறுமதியான 250% அதிகரித்த நிதி
பெருக்கத்தை உருவாக்கியது.
வட்டி வீதங்களை உயர்த்திய பின்னர் பங்குச்சந்தையின்
வீழ்ச்சியை கட்டுப்படுத்த கிரீன்ஸ்பான் முயன்றதுடன், இப்போது
அவற்றை மீண்டும் வெட்டுவதன் மூலம் பங்குசந்தையின் வளர்ச்சி
பாவனையாளரினதும் வர்த்தகத்தினதும் நம்பிக்கையை அதிகரிக்கும்
என நம்புகின்றார்.
அமெரிக்கப் பொருளாதாரத்தின் பாரிய நெருக்கடிகளை
தவிர்த்து கொள்ள முயலும் Federal
Reserve Board இன் அதிகரித்துவரும் அமைதியற்ற,
கால் உதறலெடுக்கும் நடவடிக்கைகள் இவைதான். எவ்வளவு
காலம் அவர்களால் இதைத்தொடர்ந்து செய்யமுடியும்
என்பது இன்னொரு கேள்வியாகும்.
Top of Page
வாசகர்களே: உலக
சோசலிச வலைத்தளம்(WSWS
)
உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல்
அனுப்பவும்.
Copyright
1998-2000
World Socialist Web Site
All rights reserved
|