WSWS :செய்திகள்
& ஆய்வுகள்: வட
அமெரிக்கா : ஐக்கிய
அமெரிக்கா
US-British air strikes on Baghdad: Bush draws first
blood
பாக்தாத் மீதான அமெரிக்க-பிரித்தானிய ஆகாயத்தாக்குதல்:
புஸ் முதலாவது இரத்தத்தை உறிஞ்சுகிறார்
By Barry Grey
17 February 2001
Back to screen
version
தனது முதலாவது வெளிநாட்டுக் கொள்கை
தொடர்பான தீர்மானத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதியான
ஜோர்ஜ் புஸ், பாரசீக வளைகுடா நாடுகள் மீதான அமெரிக்காவின்
யுத்தத்தை பரவலாக்கும் விதத்தில் பாக்தாத் புறநகர்ப்பகுதியின்
மீதான தூண்டப்படாத ஆகாயத்தாக்குதலின் உடமையாளராகின்றார்.
அமெரிக்காவின் 20 விமானங்களும், பிரித்தானியாவின்
4 விமானங்களும், குவைத்திலும் சவுதி அராபியாவிலும் உள்ள தளங்களில்
இருந்து வெள்ளிக்கிழமை காலை (அமெரிக்க நேரம்) புறப்பட்டு
பாரசீக வளைகுடாவில் உள்ள அமெரிக்க விமானங்தாங்கி கப்பலான
USS Harry Truman உடன்
இணைந்து ஈராக்கின் தலைநகருக்கு அண்மையில் 5 வெள்வேறு
இடங்களில் உள்ள 30 இலக்குகளை நோக்கித் தாக்கியுள்ளன. அமெரிக்க
அதிகாரிகளின் கருத்தின்படி அப்பகுதிகள் ராடார், கட்டளையிடும் கட்டுப்படுத்தும்
நிலையங்கள் என்பதாகும்.
இத்தாக்குதலானது ''பறக்கத் தடை செய்யப்பட்ட''
பிரதேசம் என அழைக்கப்படும் பிரதேசத்திற்கு வெளியேயான முதலாவது
தாக்குதலும், 1998 டிசம்பர் மாதம் அமெரிக்க-பிரித்தானிய
நான்கு நாள் தாக்குதலின் பின்னரான முதலாவது தாக்குதலுமாகும்.
1991 வளைகுடா யுத்தத்தின் பின்னர் அமெரிக்காவினாலும் அதன் நேசநாடுகளாலும்
வடக்கிலும் தெற்கிலும் உருவாக்கப்பட்ட ''பறக்கத் தடை செய்யப்பட்ட''
பிரதேசத்தினுள் அமெரிக்காவும் பிரித்தானியாவும் இராணுவ,
பொதுமக்களின் இலக்குகளை நோக்கி நூற்றக்கணக்கான தாக்குதலை
செய்துள்ளன. ஈராக்கின் கூடியளவு நிலப் பிரதேசத்தைக் கொண்ட
பகுதியானது ஐக்கிய நாடுகளின் சபையின் பெயரளவிலான சட்டபூர்வ
தீர்மானம்கூட இல்லாது கட்டுப்படுத்தப்படுகின்றது.
''பறக்கத் தடை செய்யப்பட்ட'' பிரதேசத்தில்
நாளாந்த அமெரிக்க-பிரித்தானிய ஆகாயத்தாக்குதல் மூலம்
300 ஈராக்கியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 800 பேர்கள்
காயமுற்றுள்ளதாகவும் ஈராக் தெரிவிக்கின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை
தெற்கில் நடந்த தாக்குதலில் மட்டும் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன்
17 வீடுகள் அழிக்கப்பட்டதோடு, செவ்வாய்கிழமை தென்மாநிலமான
Kerbala
வில் நடாத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 2 குழந்தைகள் இறந்தும்
அவர்களின் தாய்மார்கள் காயமடைந்தும் உள்ளனர்.
இத்தாக்குதலானது வளைகுடா யுத்தத்தின் பின்னர்
நோய்களாலும், ஊட்டச்சத்துப்பற்றாக் குறையாலும் ஆயிரக்கணக்கான
ஈராக்கியர்களின் உயிரைப் பலியெடுப்பதற்கு காரணமாக
நடைமுறைப் படுத்தியிருந்த பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாகும்.
இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படலாம் எனக் கூறி
பொதுப் போக்குவரத்து, மின்சாரம் உற்பத்தியாக்கும் ஜெனரேற்றர்கள்,
எண்ணைய் தொழிற்துறை, மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான பில்லியன்
கணக்கான டொலர் இறக்குமதியை இதுவரையில் அமெரிக்க இராஜதந்திரிகள்
கட்டுப்படுத்தி வைத்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை தாக்குதலானது ஈராக் மீதான
அமெரிக்காவின் குற்றச்சாட்டின் பொருத்தமற்ற குள்ளத்தனமான
தன்மையின் உதாரணமாகும். யுத்த விமானங்கள் தெற்கிலுள்ள ''பறக்கத்
தடை செய்யப்பட்ட'' பிரதேசத்திலிருந்தும், தமது இலக்கிலிருந்து
30 மைல் தூரத்திற்கு அப்பால், ஈராக்கிய விமான எதிர்ப்புத் தாக்குதலுக்கு
எட்டாத தூரத்திலிருந்து நவீன தொழில்நுட்பம் மிக்க ஏவுகணைகளை
ஏவின.
ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுசெயின், இத்தாக்குதல்
இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ''அரபு மக்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும்
எதிரான'' பாரிய தாக்குதலுக்கான தயாரிப்பின் ஒரு பகுதியாகும்
எனக் கண்டித்துள்ளார். ஈராக்கிய தொலைக்காட்சி காயமடைந்த
பல பொதுமக்களையும், குண்டுத்தாக்குதலால் இறந்த பெண்
ஒருவரையும் காட்டியது.
இத்தாக்குதலைத் தொடர்ந்து சில மணித்தியாலங்களில்
அமெரிக்க-பிரித்தானிய ஆக்கிரமிப்பை கண்டித்து பாலஸ்தீனியர்களால்
மேற்குகரையிலும் காஸாபகுதியிலும் பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள்
நடாத்தப்பட்டன. ருஷ்ய பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரி
ஒருவர் இத்தாக்குதலை ''சர்வதேச பாதுகாப்பு மீதானதும்
உலகமக்கள் மீதானதுமான தாக்குதல் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸின் வெளிநாட்டு அமைச்சின் அதிகாரி ஒருவர் இத்தாக்குதலில்
இருந்து பாரிஸை அந்நியப்படுத்திக் கொண்டதுடன், எங்களுக்கு
இத்தாக்குதல் தொடர்பாக அறிவிக்கப்படவோ அல்லது கலந்துரையாடப்படவோ
இல்லை எனத் தெரிவித்தார்.
மெக்ஸிக்கோவின் புதிதாக தெரிவு செய்யப்பட்ட
ஜனாதிபதியான Vicente Fox
உடனான ஒருநாள் சந்திப்புக்கு பயணமாக முன்னர் இத்தாக்குதலுக்கான
அனுமதியை புஸ் வியாழக்கிழமை வழங்கியிருந்தார். வெள்ளிக்கிழமை Vicente
Fox இன் பண்ணை ஒன்றில் பத்திரிகையாளர்
மகாநாட்டில், தான் இத்தாக்குதலுக்கான அனுமதியை வழங்கியதாக
புஸ் குறிப்பிட்டதுடன், அதனை ஈராக் மீதான அமெரிக்கக் கொள்கையின்
''வழமையான'' நடைமுறைப்படுத்தல் என வரையறுத்தார். இத்தாக்குதல்கள்
ஈராக் தொடர்பான அமெரிக்காவின் கொள்கையிலான மாற்றத்தினை
காட்டுகின்றது எனபதனை மறுத்த புஸ் ''பறக்கத் தடை செய்யப்பட்ட''
பிரதேசத்தில் அமெரிக்க விமானங்கள் பறப்பதை பாக்தாத் அரசு
தொடர்ந்து எதிர்க்குமானால் மேலும் பாரியளவிலான தாக்குதல்கள்
நடாத்தப்படும் என மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்.
அமெரிக்க வெளிநாட்டு கொள்கையின் வெளியீடான
"newspeak" ல்
''எமது நோக்கம் உலகத்தை எந்தளவிற்கு அமைதியாக வைத்திருக்க
முடியுமோ அந்தளவிற்கு அமைதியாக வைத்திருப்பதை உறுதிப்படுத்துவதே''
என புஸ் கூறியதாக தெரிவித்துள்ளது.
நீண்ட தூர, துல்லியமாக வழிப்படுத்தப்படும்
ஏவுகணைகள் மூலமான இந்த அமைதிவாதம் பென்டகன் பேச்சாளரான
Gen. Gregory Newbold
பத்திரிகையாளர் மகாநாட்டில் இத்தாக்குதல்கள் ''தற்பாதுகாப்பு
நடவடிக்கை'' எனக் குறிப்பிட்டதன் மூலம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
Newbold இன் கூற்றானது
பாதுகாப்பற்ற நாட்டிற்கு எதிரான அமெரிக்காவின் பாதுகாப்பு
அரண் அமைப்பது என்ற வழமையான நியாயப்படுத்தும் சீரழிந்த
விவாதத்தினை அடிப்படையாகக் கொண்டது. பிரச்சனையின் ஆரம்பத்திலிருந்தே
ஈராக்கின் இறைமையை நசுக்குவதற்கான அமெரிக்காவின் உரிமையும்,
அந்நாட்டினை தொடர்ச்சியான பயங்கரத்தினுள்ளும் பகுதி பட்டினியினுள்ளும்
வைத்திருப்பதுடன், ஈராக் தன்னை அமெரிக்க குண்டுபோடும்
விமானத்திலிருந்தும் ஆத்திரமூட்டும் நடவடிக்கையிலிருந்தும்
பாதுகாத்துக் கொள்ள எடுக்கும் நடவடிக்கைகள் அமெரிக்க
விமானிகளின் உயிர்களுக்கு ஆபத்தானது எனவும் வாஷிங்டன் கூறுகின்றது.
இதன்படி அண்மையில் ஏவுகணை எதிர்ப்புப் பலத்தை ஈராக்
அதிகரித்துக்கொள்ள எடுத்த நடவடிக்கைகள் மத்திய கிழக்கில்
சதாம் ஹுசெயினின் பேய்த்தனமான பங்கிற்கான மேலதிகமான
சாட்சியாக காட்ட முயற்சிக்கப்பட்டது.
இந்த முட்டாள்தனமான நிலைப்பாடானது முழு
அரசியல் அமைப்புகளாலும் விமர்சனத்திற்கு உட்படுத்தப்படாத
உண்மையாக ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், தொலைத்தொடர்பு
சாதனங்களால் மக்களிடையே பரப்பிவிடவும்பட்டது. வெள்ளிக்கிழமை
நிகழ்ந்த பாக்தாத் மீதான தாக்குதலுக்கான ஜனநாயகக்கட்சியின்
ஆதரவு, கிளின்டனின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான Samuel
Berger CNN
இற்கு ''இத்தாக்குதல் முற்றுமுழுதான
பொருத்தமான நடவடிக்கை. அது முன்னரும் செய்யப்பட்டுள்ளது'
'என குறிப்பிட்டுள்ளதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை தாக்குதலானது ''வழமையானது''
என அமெரிக்க அதிகாரிகளால் குறிப்பிடப்பட்டுள்ளமை கொள்கையின்
புதுமைப்படுத்தலுக்கு மேலாக மோசமான இராணுவ நிலைப்பாட்டை
குறிக்கின்றது. பாக்தாத்திற்கும் அமெரிக்காவிற்கு அடங்காத அதன்
கூட்டுகளான முக்கியமாக பிரான்ஸ்க்கும் ருஷ்யாவிற்கும் ஒரு
சைகை அனுப்பப்பட்டுள்ளது. அதாவது ''பறக்கத் தடை செய்யப்பட்ட''
பிரதேசத்தினை நடை முறைப்படுத்துவதின் கீழ் தனக்கு பொருத்தமாக
பலமுள்ள போதும், தான் விரும்பிய போதும், ஈராக்கின் எந்தவொரு
இலக்கையும் தாக்குவதற்குமான உரிமையை வாஷிங்டன் தனக்குரியதாக்கி
உள்ளதுடன், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஏனைய அங்கத்தவர்களுடன்
கலந்துரையாட தேவையேதும் இருப்பதாக உணராததுடன்,
அவர்களின் சம்மதத்தைக் கூட பெற்றுக்கொள்ள விரும்பவில்லை
என்பதே.
புஸ் இன் முதலாவது வெளிநாட்டுக் கொள்கை
தொடர்பான நடவடிக்கையானது கிளின்டனின் நிர்வாகத்தின்போது
இருந்ததிலும் பார்க்க மிக தீவிரமாக ஒருதலைப்பட்சமான நிலைப்பாட்டினை
வெளிப்படுத்துகின்றது.
பாதுகாப்பு அமைச்சரான Colin
Powell இன் மத்தியகிழக்கிற்கும் பாரசீக
வளைகுடாவிற்குமான அடுத்த வார விஜயத்தின் போது இவ் ஆகாயத்தாக்குதல்
தொடர்பான மூர்க்கமான வெளிநாட்டு கொள்கையின் முக்கியத்துவம்
கோடிட்டுக்காட்டப்படும். இப்பிரதேசத்தில் மதிப்பிழந்து வரும்
வாஷிங்டன் அரபுநாடுகளை தனது பொருளாதாரத்தடை கொள்கைகளின்
பின்னர் அணிதிரட்ட முயல்கின்றதுடன், மத்திய கிழக்கு மக்கள் மீதான
தனது ஆழுமை நிலையை மீண்டும் பலப்படுத்த முனைகின்றது.
புஸ்ஸினது அமைதிவாத வாயடிப்புகளுக்கும், அமெரிக்க
தொலைத்தொடர்புச் சாதனங்களின் பிழையான தகவல்களுக்கும்
மத்தியில் ஈராக் மீதான தற்போதைய தாக்குதலானது 1991 ஆக்கிரமிப்பின்
போது பதவியிலிருந்த அதே நபர்களால் செய்யப்பட்டது என்ற
உண்மையை மறைப்பது சாத்தியமில்லை. Colin
Powell அப்போது இராணுவ கட்டளையிடும்
தலைவராகவும் முக்கிய அதிகாரிகளின் தலைவராகவும் இருந்தவர்.
உப ஜனாதிபதி Richard Cheney பாதுகாப்பு
செயலாளராக இருந்தவர். தற்போதய ஜனாதிபதியின் தகப்பன்
வெள்ளைமாளிகையின் தலைவராக இருந்தார். எண்ணை வளமான
பிரதேசத்தில் வாஷிங்டனின் மூர்க்கமான கொள்கையானது உண்மையான
பொருளாதார, பூகோள நலன்களுக்கான நோக்கங்களால்
எடுத்துக் காட்டப்படுவதுடன், George
Herbert Walker Bush இற்கும் அவரது
மகனான GeorgeW இற்கும்
உள்ள தனிப்பட்ட, நிதி உறவுகளாலும் மற்றும் Cheney
இற்கும் அமெரிக்க எண்ணெய்த் துறைக்கும் உள்ள உறவுகளாலும்
தீர்மானிக்கப்படுகிறது.
ஈராக் மீதான இராணுவ நடவடிக்கையின் அதிகரிப்பானது
தீர்க்கமான உள்நாட்டு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
உலக சோசலிச வலைத்தளம் பலதடவைகள் எச்சரிக்கை
செய்ததுபோல் குடியரசுக்கட்சியினர் வஞ்சக முறைகளால் வெள்ளைமாளிகையை
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த நாளிலிருந்து, புஸ் நிர்வாகம்
விரைவிலோ அல்லது காலம் தாழ்த்தியோ வெளிநாடுகளில் இராணுவ
நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மிகவும் பலவீனமான ஆதரவை
அடித்தளமாகக் கொண்ட, இலட்சக்கணக்கானோரால் சட்டபூர்வமற்றதென
நோக்கப்படும் ஒரு மிகவும் உறுதியற்ற அரசாங்கமானது, அதிருப்தியும்
அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடி நிலைமையும், சமூக
எதிர்ப்புக்கான கொள்கைக்கு உட்படுத்தப்பட்ட நிலைமையில்,
தனது உள்நாட்டு நெருக்கடியைத் தீர்க்கும் முகமாக வெளிநாடுகளில்
இராணுவ நடவடிக்கைகளுக்காக தவிர்க்க முடியாதபடி திரும்பும்.
Top of Page
வாசகர்களே: உலக
சோசலிச வலைத்தளம்(WSWS
)
உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல்
அனுப்பவும்.
Copyright
1998-2000
World Socialist Web Site
All rights reserved
|