World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்:ஆசியா:இந்தியா

India declares unilateral ceasefire

A renewed diplomatic push for negotiations over Kashmir

இந்தியா ஒரு தலைப்பட்டசமான யுத்த நிறுத்தம்

காஷ்மீர் சம்பந்தமாக புதியதொரு பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க இராஜதந்திர நெருக்குவாரம்

By Sarath Kumara
12 December 2000

Use this version to print

காஷ்மீரிலான ஆயுத மோதுதலை ஒரு முடிவுக்கு கொணர்வதற்கான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவும் 1947 சுதந்திரத்தின் பின்னர் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான மூன்று யுத்தங்களில் இரண்டைத் தூண்டிவிடக் காரணமாக இருந்ததுமான இந்த தகராறுகளுக்கு ஒரு முடிவு கட்டும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.

நவம்பர் 19ம் திகதி இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் இந்தியப் படைகள் காஷ்மீர் பிரிவினைவாதக் குழுக்களுக்கு எதிரான சகல எதிர்த் தாக்குதல்களையும் நிறுத்தும் என அறிவித்தார். இதனை அவர் இஸ்லாமிய மாதமான றம்ஷானில் விடுத்தார். "இராணுவம் எந்த ஒரு தாக்குதலுக்கும் எதிராக முழு விழிப்பாக இருக்கும்" அதே வேளையில் அது நவம்பர் 28ல் இருந்து எதிர்த் தாக்குதல் நடவடிக்கைகளை இரத்துச் செய்யும் என அவர் அறிவித்தார்.

பாகிஸ்தான் அவதானமான முறையில் இந்நடவடிக்கையை வரவேற்றதோடு அதிகரித்துவரும் அனைத்துலக நெருக்குவாரங்களுக்கும் கவனத்தை செலுத்தியது. பாகிஸ்தானின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட அசாத் காஷ்மீரில் இருந்து ஜம்மு-காஷ்மீரை பிரிக்கும் எல்லைக் கோட்டின் ஊடாக "அதிகூடிய கட்டுப்பாட்டை" தனது ஆயுதப் படைகள் கடைப்பிடிக்கும் என பாகிஸ்தான் டிசம்பர் 2ம் திகதி அறிவித்தது. பாகிஸ்தானின் இராணுவ ஆட்சியாளரான ஜெனரால் பேர்வஸ் முஷாராப் இருநாடுகளுக்கும் காஷ்மீர் குழுக்களுக்கும் இடையேயான ஒரு முத்தரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்ததோடு அழைப்பு வருமிடத்து வாஜ்பாயை சந்திக்க 24 மணித்தியால அறிவித்தலில் புதுடில்லி செல்லவும் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சர் அப்துல் சத்தார் நவம்பர் 4ம் திகதி டைம்ஸ் ஒப் இந்தியாவுக்கு வழங்கிய ஒரு பேட்டியில் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு இஸ்லாமாபாத் ஒரு பெரும் அந்தஸ்தை பெற்றுக் கொள்ளத் தயாராக உள்ளதாகவும் சைகை காட்டினார். தனது அரசாங்கம் 1999 ஜூலை 4ம் திகதி அன்றைய பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கும் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் நடக்கத் தயாராக உள்ளதாக அவர் கூறினார். இது பாகிஸ்தான் எல்லைக் கோட்டை மதிப்பதைப் பற்றி பேசுகின்றது. இதற்கு முன்னர் பாகிஸ்தான் காஷ்மீரின் எதிர்காலம் 1948-49 ஐ.நா. பிரேரணையில் குறிப்பிடப்பட்ட விதத்தில் பாகிஸ்தானிய, இந்திய கட்டுப்பாட்டுக்குட்பட்ட பகுதியில் ஒரு கருத்துக் கணிப்பு நடாத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தது.

ஆனால் இந்தியா எந்த ஒரு முத்தரப்பு பேச்சுவார்த்தையையும் நிராகரித்ததால் இந்தப் போக்கின் நிலையற்ற தன்மை ஊர்ஜிதமாகியது. இந்திய வெளிநாட்டமைச்சின் பேச்சாளர் ராமிந்தர் சிங் கடந்த வாரம் இந்தியா காஷ்மீரில் உள்ள சகல குழுக்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்த தயாராக உள்ளது. ஆனால் பாகிஸ்தானுக்கு அங்கு எதுவித பாத்திரமும் கிடையாது எனக் குறிப்பிட்டார். இந்தியா எப்போதும் காஷ்மீர் ஒரு உள்நாட்டுப் பிரச்சினை என வலியுறுத்தி வந்துள்ளதோடு அங்கு எந்த ஒரு பாகிஸ்தானிய அல்லது அனைத்துலக தலையீடு இடம்பெறுவதையும் இடைவிடாது எதிர்த்தது.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இப்பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முயற்சிகள் செய்யப்பட்ட வேளையில் இதே விடயத்தில் பிரச்சினைகள் தலைதூக்கின. ஹிஸ்புல் முஜாஹிதீன் என்ற பெரும் காஷ்மீர் ஆயுதம் தாங்கிய பிரிவினைவாத குழு ஜூலை மாதத்தில் மூன்று மாத ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்தத்தை பிரகடனம் செய்தது. எதிர்பாராத விதத்தில் இக்குழுவின் பிரதிநிதிகளுக்கும் இந்தியன் அரசாங்கத்துக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில் இடம்பெற்றது. ஆனால் எந்த ஒரு நிலையான தீர்வின் பேரிலும் பாகிஸ்தான் சேர்த்துக் கொள்ளப்படவேண்டும் என்ற ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் கோரிக்கையை இந்திய அரசாங்கம் நிராகரித்ததை தொடர்ந்து இப்பேச்சுவார்த்தை முறிவடைந்தது.

காஷ்மீர் கடும் போக்காளர் குழுவான லக்ஷாரே-ஈ-டைபே (Lashkar-e-Taiba) இந்தியாவின் பிந்திய யுத்த நிறுத்தத்தை கண்டனம் செய்ததோடு கட்டுப்பாட்டுடன் நடக்கும் பாகிஸ்தான் வாக்குறுதியையும் விமர்சனம் செய்தனர். அத்தோடு அவர்கள் இந்தியப் படைகளுக்கு எதிரான 'ஜிகாத்' அல்லது புனித யுத்தத்தை உக்கிரமாக்கும்படி அழைப்புவிடுத்தனர். நவம்பர் 28ல் இருந்து பிரிவினைவாதிகள் இரணுவ, சிவிலியன் இலக்குகள் மீது நடாத்திய தாக்குதல்களில் குறைந்தபட்சம் 35 மக்கள் கொல்லப்பட்டனர். இதில் படுமோசமான சம்பவம் இந்தியாவின் ஆரம்ப அறிவிப்பின் ஒரு சில நாட்களின் பின்னர் நடைபெற்றது. நவம்பர் 22ம் திகதி 5 இந்து, சீக்கிய ட்ரக் சாரதிகள் முதலில் இறந்தனர். இரண்டாவதில் ஐந்து இந்து பஸ் பிரயாணிகள் இறந்தனர்.

ஆனால் வாஜ்பாய் அரசாங்கம் ஒரு ஆபத்தில் இருந்து கொண்டிருந்த வேளையில் "யுத்த நிறுத்தத்தை நிறுத்திவிட்டு திரும்பிச் செல்வதற்கு இல்லை" என அறிவித்தார். அரசாங்கத்தின் ஆரம்பிப்புகள் பிரிவினைவாத குழுக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையே புதிய பிளவுகளையும் சாத்தியங்களையும் ஏற்படுத்தும் என கணித்துக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இந்தியா அடக்குமுறையான விதத்தில் ஆட்சி செய்வதில் ஏற்படும் பரந்த அளவிலான பகைமையை சுரண்டிக் கொள்கின்றது. ஆனால் இவைகளிடையே அரசியல் இலக்கை அடைவது தொடர்பாக கணிசமான அளவு வேறுபாடுகள் நிலவுகின்றன. சிலர் சுயாட்சியை இந்தியாவின் ஒரு பாகமாக கொள்கின்றனர். சிலர் சுதந்திர காஷ்மீரை கோருகின்றனர். வேறு சிலர் காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைத்துவிடும்படி கோருகின்றனர்.

அனைத்து கட்சி ஹுரியாட் மாநாடு (All Party Hurriyat Conference) -காஷ்மீரில் உள்ள சகல பிரிவினைவாதக் கட்சிகள், குழுக்களின் அமைப்பு- இந்தியாவின் யுத்த நிறுத்த அறிவித்தலை ஆதரித்ததோடு பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுத்தது. இந்த APHC யின் தலைவர்கள் தாம் இந்திய, பாகிஸ்தானிய அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து வைக்க அனுமதிக்கப்பட வேண்டும் எனக் கோரினர்.

இந்த APHC சில தருணங்களில் இந்திய அரசாங்கத்துடன் சமரசம் செய்து கொள்கிறது. இந்திய சஞ்சிகையான "புரொன்ட்லைன்" குறிப்பிட்டதாவது: "APHC தலைவர்களில் ஒருவரான அப்துல் கானி, லோனின் நெருங்கிய சகா 'புரொன்ட்லைனுக்கு' (Frontline) அந்தரங்கமாக தெரிவிக்கையில் ஹுரியாட் ஆகக் கூடுதலாக பெற்றுக் கொள்ளக் கூடியது காஷ்மீர் சமவெளிக்கான அரை சுதந்திர அந்தஸ்தே என்றார். ஆனால் எந்த ஒரு தீர்வும் முதலமைச்சர் பாருக் அப்துல்லா தலைமையிலான இன்றைய தேசிய மாநாட்டு கட்சி தலைமையிலான மாநில அரசாங்கத்தினால் ஜூனில் அறிவிக்கப்பட்ட சுயாட்சி தீர்வுகளுக்கு அப்பால் வெகுதூரம் செல்லவேண்டி இருக்கும்.

APHC தலைவர்கள் தாம் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்து இராணுவ ஆட்சியாளர்களுடன் அங்கிருந்து இயங்கும் ஆயுதம் தாங்கிய பிரிவினைவாதக் குழுக்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்த அனுமதிக்கப்பட வேண்டும் என இந்திய அரசாங்கத்தை வேண்டியுள்ளனர். ஆனால் இந்திய அரசாங்கம் அத்தகைய ஒரு விஜயத்துக்கு இடமளிக்கவில்லை. புதுடில்லி ஆட்சியாளர்கள் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட காஷ்மீரில் ஜம்மு- காஷ்மீர் விடுதலை முன்னணியின் (JKLF) தலைவர் அமானுல்லா கானின் மகளுக்கும் லோனின் மகனுக்கும் இடையேயான திருமணத்தில் கலந்து கொள்ள மட்டுமே அனுமதி வழங்கியுள்ளனர். இந்திய அரசாங்கம் கட்டாரில் இடம்பெற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள (Organization for Islamic countries) APHC தலைவர்களான மிர்பைஸ் பாரூக்குக்கும் மெளலவி அன்சாருக்கும் அனுமதி வழங்கியது.

இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துவது சம்பந்தமான சாத்தியங்களுக்கான அறிகுறிகளும் பிளவுகளும் ஹிஸ்புல் முஜாஹிதீனில் ஏற்பட்டுள்ளன. இந்தியப் பத்திரிகைகளின்படி ஹிஸ்புல் தலைவர் செயிட் சலாகுதீன் இந்திய யுத்த நிறுத்த அறிவித்தலுக்கு முன்னர் ஹிஸ்புல் அர்த்தமான கலந்துரையாடல்களுக்கான பேச்சுவார்த்தைகளை பரிமாறிக்கொள்ள வேண்டுமென்றுள்ளார். ஆனால் இஸ்லாமாபாத்தை தளமாகக் கொண்டு இயங்கும் முத்தஹிடா ஜிஹாத் கவுன்சிலின் நெருக்குவாரத்தின் கீழ் இக்குழு யுத்த நிறுத்தத்தை நிராகரித்தது. டிசம்பர் ஆரம்பத்தில் இது அறிவித்ததை மேலும் தூய்மைப் படுத்திக் கொண்டது. ஹிஸ்புல் தலைவர் அமைப்புக்கு கூறியதாவது: "எமது அமைப்பு யுத்த நிறுத்தத்தை அடியோடு நிராகரிக்கவில்லை" ஆனால் "இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னர் வாய்ப்புகளை ஆராய்வோம்" என்றுள்ளார்.

இந்தியாவுக்கு எத்தகைய சலுகைகளும் வழங்க வேண்டாம் என்ற இஸ்லாமிய தீவிரவாத குழுக்களின் நெருக்குவாரத்துக்கு பாகிஸ்தான் உள்ளாகியுள்ளது போல் இந்து அடிப்படைவாதத்தை அடிப்படையாகக் கொண்ட பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான இந்திய அரசாங்கம் இந்து சோவினிச அமைப்புகள் தரப்பில் இருந்து எதிர்ப்புக்கு முகம் கொடுக்கிறது. நவம்பர் 22ம் திகதி காஷ்மீர் பிரிவினைவாதிகள் ட்ரக்கு சாரதிகளை தாக்கி கொன்றதன் பின்னர் சிவசேனையை சேர்ந்த 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் யுத்த நிறுத்தத்துக்கு எதிராக பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.

சுமார் 150 சிவசேனை ஆதரவாளர்கள் ஒரு ஆர்ப்பாட்டம் நடாத்தியதோடு வாஜ்பாயின் கொடும்பாவிக்கும் தீமூட்டினர். வாஜ்பாய் இந்துக்களை இஸ்லாமிய குழுக்களிடம் தாரைவார்த்து விட்டதாக இவை குற்றம் சாட்டின. இக்கட்டத்தில் சிவசேனா தொடர்ந்தும் கூட்டரசாங்கத்தில் இருந்து வந்ததோடு மூன்று அமைச்சர் பதவிகளையும் வகித்தது. கனரக கைத்தொழில் அமைச்சர் மனோகர் ஜோசி தமது கட்சி "இந்த விடயத்தை மேலும் தொடரும்" எனத் தெரிவித்தார்.

எவ்வாறெனினும் இந்தியன் ஆளும் வர்க்கத்தின் கணிசமான பகுதியினர் யுத்த நிறுத்தத்துக்கே ஆதரவு வழங்குகின்றனர். கூட்டரசாங்கத்தில் (NDA) உள்ள ஏனைய சகல பெரும் கட்சிகளும் ஆதரவைத் தெரிவித்துள்ளன. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எதிர்க் கட்சிகளும் இதற்கே ஆதரவளிக்கின்றன. சீ.பீ.(எம்) பாராளுமன்ற உறுப்பினரான மொகமட் யூசுப் டரிகாமியே முதலில் இந்த ஒருதலைப்பட்சமான யுத்த நிறுத்த யோசனையை மிதக்கவிட்டவர். அவரே பின்னர் "இந்த விடயத்தில் ஒரு முக்கிய புள்ளி" என விஷயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த யோசனை இராணுவ பிரதம தளபதி எஸ்.பத்மநாபனால் ஆதரிக்கப்பட்டு, பாரதீய ஜனதா கட்சியின் இந்து அடிப்படைவாதிகளில் ஒருவரான உள்நாட்டு அமைச்சர் எல்.கே.அத்வானியினால் தயக்கத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இராஜதந்திர நடவடிக்கைகளில் அமெரிக்க ஈடுபாடு

காஷ்மீர் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளும்படி கூறும் ஐரோப்பிய வல்லரசுகளதும் அமெரிக்காவினதும் நெருக்குவாரங்களுக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் உள்ளாகியுள்ளன. இந்தியா யுத்த நிறுத்தத்தை அறிவித்ததும் வாஷிங்டன், இஸ்லாமாபாத்தையும் காஷ்மீர் குழுக்களையும் அதைக் கடைப்பிடிக்குமாறு நெருக்குவாரம் கொணர்ந்தது. அமெரிக்க உதவிச் செயலாளர் கார்ள் இன்டர்பேத் சமீபத்தில் துணைக் கண்டத்துக்கு விஜயம் செய்ததோடு, புதுடில்லியிலும் கொழும்பிலும் பேச்சுவார்த்தைகள் நடாத்தினார். இவற்றில் அமெரிக்கா இலங்கை அரசாங்கத்தை நாட்டின் நீண்ட உள்நாட்டு யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொணர பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஒரு உடன்பாட்டுக்கு வரும்படி நெருக்குவாரம் கொடுத்தது.

இந்தியாவின் யுத்த நிறுத்தம் பெரும் ஐரோப்பிய வல்லரசுகளால் வரவேற்கப்பட்டது. கடந்த மாதம் இலங்கை விஜயத்தை மேற்கொண்ட பிரித்தானிய பிரதி வெளிநாட்டு அமைச்சர் பீட்டர் ஹெயின், லண்டன் பாகிஸ்தான் மீது நெருக்குவாரங்களைக் கொணரும் எனத் தெரிவித்தார். பாகிஸ்தானுடன் ஒரு நெருக்கமான உறவை அபிவிருத்தி செய்ய முயன்ற பிரான்சு, காணக்கிடைத்த கணிசமான அளவு தாமதத்தின் பின்னர் இந்திய நடவடிக்கையை ஆதரித்தது. பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய யூனியனின் தலைவரான டொமினிக் கிராட், ஐரோப்பிய யூனியன் ஒரு பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கு ஆதரவாக இருந்து கொண்டுள்ளது என்றார்.

இலங்கையிலும் காஷ்மீரிலும் மோதுதல்களை தீர்த்து வைக்க இராஜதந்திர தீர்வுகள் பக்கம் தள்ளப்பட்டமை குளிர்யுத்த காலத்தின் பின்னர் தென் ஆசியாவில் பெரும் வல்லரசுகளின் நலன்கள் அதிகரித்துக் கொண்டுள்ளதை காட்டுகின்றது. அமெரிக்கா 1999 ஜூலையில் தனது முன்னைய குளிர்யுத்த பங்காளியான பாகிஸ்தானிடமிருந்து பிரியும் சைகையைக் காட்டியது. இந்தியக் கட்டுப்பாட்டுக்குட்பட்ட ஜம்மு-காஷ்மீர் பகுதியில் உள்ள கார்கில் பிராந்தியத்தில் இருந்து காஷ்மீர் பிரிவினைவாதிகளை விலக்கிக் கொள்ளும்படி அமெரிக்கா பாகிஸ்தானை நெருக்கியது. இவ்வாண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா ஜனாதிபதி கிளின்டன் இந்திய துணைக் கண்டத்துக்கு விஜயம் செய்தார். தனது நேரத்தில் பெரும் பகுதியை இந்தியாவில் கலந்துரையாடல்களில் செலவிட்ட அவர், பாகிஸ்தானில் ஒரு சொற்ப காலமே தரித்துச் சென்றார். கிளின்டனின் விஜயத்தின் பின்னர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உட்பட்ட ஏனைய அனைத்துலக தலைவர்கள்- இந்தியாவுக்கு விஜயம் செய்தனர்.

இந்தியா மீதான பார்வை அது வர்த்தகத்தினதும் முதலீட்டினதும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியமாக வளர்ச்சி கண்டு கொண்டுள்ளதைக் காட்டிக் கொண்டுள்ளது. இது கணனி மென்பொருள் கைத்தொழில்களையும் உள்ளடக்கியுள்ளது. புதுடில்லி, ஒரு பிராந்தியத்தில் சாத்தியமான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாக நோக்கப்படுகின்றது. எண்ணெய்க்கும், கனிப்பொருள் வளங்களுக்கும் பெரும் வல்லரசுகள் குதிரையோடும் மத்திய கிழக்குடனும் மத்திய ஆசியாவுடனும் இணைந்து கொள்ளும் உரிமையையும் கொண்டுள்ளது. இலங்கையிலான மோதுதல்களும் குறிப்பாக காஷ்மீரும், அணுவாயுதம் கொண்ட பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே மற்றொரு யுத்தத்தை தூண்டிவிடும் சாத்தியத்தை கொண்டுள்ளது. இவை இரண்டும் பிராந்தியத்தின் ஸ்திரப்பாட்டை அச்சுறுத்திக் கொண்டுள்ளன.

அனைத்துலகத் தலையீட்டுக்கு எதிரான இந்தியாவின் கெளரவமான எதிர்ப்புக்கு மத்தியில் அமெரிக்க நிர்வாகம் காஷ்மீர் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் உத்தியோகபூர்வமாக சம்பந்தப்படவில்லை. வாஷிங்டன் திரைமறைவில் நெருக்கமாக ஈடுபட்டுள்ளது. அமெரிக்க வர்த்தகரான மன்சூர் இயாஸ் முக்கிய தரகர்களில் ஒருவராக விளங்குகின்றார். அவர் வெளிநாட்டு உறவுகள் தொடர்பான அமெரிக்க சபையின் அங்கத்தவரும் நியூயோக்கில் உள்ள கிறசன்ட் இன்வேஸ்ட்மன்ட் மனேஜ்மன்டின் தலைவரும் ஆவார். அத்தோடு அவர் தனிப்பட்ட முறையில் கிளின்டனோடு நெருக்கமானவர் எனவும் கூறப்படுகின்றது. அவர் அமெரிக்க காங்கிரஸ் அங்கத்தவர்களையும் மாஜி. இராஜதந்திரிகளையும் கொண்ட காஷ்மீர் ஆய்வு குழுவின் (Kashmir Study Group) தலைவர் எனவும் கூறப்படுகின்றது. காஷ்மீர் சம்பந்தமான அமெரிக்க கொள்கை ஆக்கங்களில் இது ஈடுபட்டுள்ளது.

நவம்பர் 22ம் திகதி இன்டர்நஷனல் ஹெரால்ட் ட்ரிபியூனின் ஒரு தலையங்கத்தில் இயாஸ், ஜூனில் ஜம்மு காஷ்மீரிலும் புதுடில்லியிலும் உயர் அதிகாரிகளுடனும் அரசியல் புள்ளிகளுடனும் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் தனது பாத்திரத்தை வெளிப்படுத்தி உள்ளார். இது ஹிஸ்புல் முஜாஹிதீன் ஜூலையில் தனது ஒரு தலைப்பட்சமான யுத்தநிறுத்த அறிவிப்பை வெளியிடுவதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்றது. தனது விஜயத்தின் போது கிளின்டன் ஆதரவு வழங்கும் பேச்சுவார்த்தைகளின் வடிவத்தையிட்டு வாஜ்பாயுடனும் பாகிஸ்தான் தலைவர் ஜெனாரால் முஷாராபுடனும் பேசியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அத்தோடு தான் ஹிஸ்புல் இயக்கத் தலைவர் சலாகுதீனிடம் இருந்து கிளின்டனுக்கு ஒரு கடிதத்தை கொணர்ந்து கொடுத்ததாகவும் அது அத்திட்டத்துக்கு அமெரிக்க ஆதரவு இருந்து கொண்டு உள்ளதாக திருத்திக் கொள்ளப்பட வேண்டும் என அது கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

புதுடில்லிக்கு சமீபமாக அண்மையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் தலைமையுரையை இயாஸ் வழங்கினார். "ஜம்மு-காஷ்மீரில் அடுத்தபடி: சமாதானத்துக்கு ஒரு வாய்ப்பு வழங்கு" என்பது அதன் தலைப்பாக விளங்கியது. இக்கூட்டம் அம்னாஸ்டி இன்டர்நஷனலின் தலைவரும் பிரித்தானிய பிரபுக்கள் சபையின் பிரபல உறுப்பினருமான எரிக் அவ்பரி பிரபுவுடன் இணைந்து புதுடில்லியில் உள்ள பீஸ் இனிசேட்டிவ் ஓர்கனைசேசனால் (Peace Initiatives organization) ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்தச் சக்திவாய்ந்த கருத்தரங்கு, பல்வேறுபட்ட காஷ்மீர் குழுக்களையும் சேர்ந்த -ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யசீன் மாலிக், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர்' பிரதமரின் மகள் சர்த்தார் அட்டீக் அகமட் டான் லடாக், ஆட்டோனோமஸ் டெவலப்மன்ட் கவுன்சிலின் பிரதம நிறைவேற்று சபை உறுப்பினர் தப்ஸ்டான் சோவாங் ஆகியோரை ஒன்று கூட்டியது.

அமெரிக்கா ஏனைய வழிகளில் நெருக்குவாரம் கொணர்கிறது என்பதில் சந்தேகம் கிடையாது. பாகிஸ்தானில் கடந்த ஆண்டு இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து அது இராஜதந்திர ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டது. அதனது பொருளாதாரம் வீழ்ச்சிகண்டு போகும் விளிம்புக்கு வந்துள்ளது. சர்வதேச நாணயநிதியம் பெரிதும் தாமதப்படுத்தி வந்த 596 மில்லியன் டாலர்கள் கடந்த நவம்பரிலேயே சரிப்பட்டு வந்தது. இது நாட்டின் நிதிகளை சரிசெய்ய பெரிதும் அவசியப்பட்டது. கட்டுப்பாட்டு கோட்டுக்கூடாக "அதிகூடிய கட்டுப்பாட்டு" கொள்கையை பாகிஸ்தான் அறிவிப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னரே இது வழங்கப்பட்டது.

1989ல் ஆரம்பமான இந்திய இராணுவத்துக்கும் ஆயுதம் தாங்கிய காஷ்மீர் பிரிவினைவாத குழுக்களுக்கும் இடையேயான மோதுதல்கள் ஜம்முவிலும் காஷ்மீரிலும் பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. 30000 மக்கள் இறந்துள்ளதோடு இன்னும் பலர் காயமடைந்துள்ளனர் அல்லது வீடுகளை இழந்து வெளியேறியுள்ளனர். 5 இலட்சத்துக்கும் அதிகமான இந்தியத் துருப்புக்கள் பாகிஸ்தான் இராணுவத்துக்கும் காஷ்மீர் கிளரச்சியாளர்களுக்கும் எதிராக இலக்குவைத்தபடி காஷ்மீரில் நிலைகொண்டுள்ளன. அனைத்துலக மனித உரிமைகள் இயக்கங்களின்படி இந்திய பாதுகாப்பு படைகள் பெரும் எண்ணிக்கையானோரை வழக்கு விசாரணை இல்லாமல் தடுத்து வைத்துள்ளதோடு சித்திரவதைகளும் நீதிவிரோத கொலைகளும் இடம்பெற்றுள்ளன. உள்ளூர் சனத்தொகையை இதன் மூலம் கிலியடையச் செய்யவும் பிரிவினைவாத குழுக்களுக்கு அனுதாபத்தை இல்லாமல் செய்யவுமே இங்ஙனம் செய்கின்றது.

இந்திய, பாகிஸ்தானிய அரசாங்கங்களுக்கு யுத்தமும் ஒரு பெரும் செலவீனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேன் பாதுகாப்பு செய்திகளின்படி (Jane Security News) "காஷ்மீரை பாதுகாக்கும் வருடாந்த செலவு (இந்தியாவுக்கு) 54.75 பில்லியன் ரூபாய்கள்" ஆகும். 1999ல் கார்கில் மலைக் குன்றுகளில் நடைபெற்ற 11 கிழமை யுத்தம் இந்தியாவுக்கு 450 மில்லியன் டாலர்கள் செலவை ஏற்படுத்தியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் தகவல்களின்படி பாகிஸ்தான் காஷ்மீரில் இயங்கும் பிரிவினைவாத குழுக்களுக்கு நிதியீட்டம் செய்யவும் ஆயுதபாணிகளாக்கவும் பயிற்சியளிக்கவும் ஆண்டொன்றுக்கு 110 மில்லியன் டாலர்களை செலவிடுகின்றது. இக்குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

கணிசமான அளவு அனைத்துலக செல்வாக்குகள் கொணரப்பட்ட போதும் இன்றைய இராஜத்நிதர போக்கு பெரிதும் ஸ்திரம் அற்றதாக உள்ளது. காஷ்மீர் தகராறின் மூலம் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் இறுதியில் 1947ல் இந்தியத் துணைக் கண்டம் இனவாதக் கோட்டின் மூலம் கூறுபோடப்பட்டதில் ஆழமாக வேரூன்றியுள்ளது. ஒரு இந்து மகாராஜாவினால் ஆழப்பட்ட காஷ்மீரில் சனத்தொகையில் பெரும்பான்மையினர் முஸ்லீம்களாக விளங்கினர். ஆரம்பத்தில் மகாராஜா சுதந்திரத்தைப் பிரகடனம் செய்ய முனைந்தார். ஆனால் பாகிஸ்தான் கிளர்ச்சியில் ஈடுபட்டதும் மகாராஜா காஷ்மீரை இரு நாடுகளிடையேயும் பிளவுண்டு போகச் செய்யும் வகையில் அவர் இந்தியாவுடன் இணைந்து கொண்டார்.

காஷ்மீர் மீதான பதட்டம் கடந்த அரை நூற்றாண்டு காலமாக தணிந்து போகாததோடு, இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள அரசியல் அமைப்புகள் மத அடிப்படைவாதத்தில் அதிகரித்த அளவில் ஈடுபட்டன. இதன் மூலம் யுத்த மோதுதல்களையும் ஆபத்துக்களையும் அதிகரிக்கச் செய்தது. 50 ஆண்டுகளின் பின்னர் காஷ்மீர் பிரிவினையின் பிற்போக்கு தன்மைக்கு இது நல்ல எடுத்துக்காட்டு. துணைக்கண்டம் பூராவும் உள்ள ஆளும் வர்க்கங்கள் தீர்க்கப்படாத அரசியல், சமூக பிரச்சினைகளை முற்போக்கான விதத்தில் தீர்த்துக்கொள்ள இலாயக்கற்றவை என்பதற்கு எடுத்துக்காட்டு.