World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: உலகப் பொருளாதாரம்

An exchange on globalisation

பூகோளமயமாக்கல் பற்றிய ஒரு கருத்துப் பரிமாற்றம்

24 November 2000

Use this version to print

அன்பார்ந்த WSWS ஆசிரியர் குழுவினருக்கு,

இக்கடிதத்தின் கருப்பொருள் பூகோளமயமாக்கலாகும். நிக்பீம்சால் எழுதப்பட்ட கட்டுரையிலும், மெல்போர்னில் நடைபெற்ற உலகப் பொருளாதார உச்சிமாநாட்டிற்கு எதிரான எதிர்ப்பு பற்றிய கட்டுரையிலும், உலக சோசலிச வலைத்தளம் ஆய்வு செய்த வழியுடன் நான் முழுமையாய் உடன்படுகின்றேன். தேசிய-அரசுடன் தொடர்புடைய தடைகளில் இருந்து உற்பத்தி சக்திகளை விடுவிப்பது வரலாற்று ரீதியாக முற்போக்கானதுதான்.

எனது கேள்விகள் எல்லாம் பூகோளமயமாக்கல் உற்பத்தி செய்த மற்றும் தொடர்ந்து உற்பத்தி செய்து கொண்டிருக்கிற துருவ முனைப்படுத்தல் மற்றும் ஏழ்மைக்கு எதிராக எந்த மட்டத்தில் ஒருவர் போராடமுடியும் என்பதுதான். நீங்கள் முன்வைக்கிறதாற்போல், முதலாளித்துவத்தின் நலனுக்காக இல்லாது, மனித தேவைகளை நிறைவு செய்யக் கூடியதான பொருளாதாரத்தை மறு ஒழுங்கமைக்க, சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அனைத்து நாட்டுத் தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்துவதுதான் பணி. நீங்கள் எளிமைப்படுத்தும் சுலோகங்களையும் தீவிரப் பிரச்சாரங்களையும் நிராகரிக்கிறீர்கள். "சுதந்திர வணிகம்'' மற்றும் "சாதகமான வணிகம்" இவற்றுக்கு எதிரான எதிர்ப்பினையும் கூட நீங்கள் விமர்சிக்கிறீர்கள். நான் அது பற்றி நினைப்பது இதுதான்:

* WSWS முன்னோக்கில் நிலவும் நிலைமைகளுக்கும், உலகத் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் இறுதி இலக்கிற்கும் இடையில் இடைவெளி ஒன்று உள்ளது.

* இறுதி இலக்கிற்கும் நிலவும் நிலைமைகளுக்கும் இடையில் அங்கு ஒருபாதை கட்டாயம் இருக்கிறது. தத்துவார்த்த தெளிவூட்டலை அறிமுகப்படுத்துவதற்கு மேலும், அது தீவிரப் பிரச்சாரங்களின் வழியாகக் கடந்து செல்லும் தேவைகளிலிருந்து எழுகிறது. பின்னையது சரியான பகுதி இலக்குகளின் அடிப்படையில் நிகழவேண்டும், வெறும் முழக்கங்களின் அடிப்படையில் அல்ல.

* பூகோளமயமாக்கலானது, தங்களது சொந்த இலாபத்திற்காக பெரும் பூகோள வணிக நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகிறது. உலகத் தொழிலாள வர்க்கம் பூகோளமயமாதலைத் தமது கட்டுப்பாட்டில் எடுக்கும் வரையில் நாம் என்ன செய்ய வேண்டும்?

* உற்பத்தியை குறைந்த கூலி உள்ள நாடுகளுக்கு நகர்த்துவதன் மூலம், உலகம் முழுவதும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை பூகோளமயமாக்கல் தாழ்த்துகிறது. ஏற்கனவே குறைந்த கூலி நாடுகளில் இருந்து வேலையானது மிகக் குறைந்த கூலி உள்ள நாடுகளுக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்நாடுகளில் தொழிலாளர்கள் சுகாதாரம், கல்வி, வீடு மற்றும் வேலை உத்திரவாதம் போன்றமிக அடிப்படை உரிமைகள் இல்லாது இருக்கின்றனர். அந்த சூழ்நிலைகளின் கீழ், இப்போது திரும்ப எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கடந்தகாலத்தில் போராடிப் பெற்ற வெற்றிகளுடன் தொழிலாளர்கள் என்ன செய்ய முடியும்? எடுத்துக்காட்டாக, தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச உரிமைகள் அளிக்கப்படாத நாடுகளிலிருந்து உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு எதிராகப் போராடுவதன் மூலம், "சுதந்திர வர்த்தகத்துக்கு" ''நியாயமான வர்த்தகத்தை" எதிராக வைப்பது தவறு அல்ல என்றே எனக்குப்படுகிறது.

அமெரிக்காவில் ஷூ தயாரிப்பாளர்களுக்கு எதிராக என்ன நிகழ்ந்தது என்பது ஒரு உதாரணமாகும். (நான் நம்புகிறேன் ரீபொக் மற்றும் நைக் என்று.) நுகர்வோர்களிடமிருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக, தொழிலாளர்களை மிகச் சுரண்டலுக்கு உள்ளாக்கும் உப ஒப்பந்தத்துக்கு விடுவதை பயன்படுத்தக்கூடாது என்பதற்கு அவர்கள் சம்மதித்தனர். அந்த கருத்தின் அடிப்படையிலான அரசியல் மூலோபாயம் அனைத்துத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் மிகக் குறைந்த மட்டங்களுக்கு குறைவதைத் தடை செய்வது மட்டுமல்லாமல், இதே இயங்கு முறை ஊடாக வளர்ச்சி அடைந்த நாடுகளின் தொழிலாளர்கள், பெரும் மூலதனத்தால் உற்பத்திச் செலவைக் குறைக்கத் தேர்ந்தெடுக்கப்படும் நாடுகளில் அதிகமாய்ச் சுரண்டப்படும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் கூடிய இயங்கு முறையாகவும் கூட இருக்கும்.

நன்றியுடன், HL

Buenos Aires Argentina .

அன்புள்ள HL,

பூகோளமயமாக்கல் மீதான உங்களது கடிதத்திற்கு நன்றி. அது நிறைய முக்கிய பிரச்சினைகளை எழுப்பியுள்ளது. உங்களுக்கு பதில் கிடைக்க தாமதமானதற்கு மன்னிக்கவும்.

பூகோளமயமாக்கல் பற்றிய WSWSன் ஆய்வு மற்றும் "தேசிய-அரசுடன் தொடர்படைய தடைகளிலிருந்து உற்பத்திச் சக்திகளை விடுவிப்பது வரலாற்று ரீதியாக முற்போக்கானதாக இருக்கிறது" என்றதுடனும் உங்களது உடன்பாட்டை வெளிப்படுத்தி, நீங்கள் தொடங்கினீர்கள். இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கையில், அதனை அதன் முடிவுவரை சிந்தித்துப் பார்ப்பது அவசியமானது என்று நான் நினைக்கிறேன்.

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் பல போக்கினருடன் நீண்ட அனுபவம் இருக்கிறது. அவர்கள் சர்வதேசியத்திற்கு அவர்களின் ஆதரவை முழங்குவார்கள், தேசிய-அரசு அடித்தளத்தில் தங்கிநிற்கும் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் வேலைத்திட்டங்களை சூத்திரப்படுத்துகின்ற வேளை, நடைமுறையில் இந்த முன்னோக்கை மட்டும் கைவிட்டு விடுவார்கள். அரசியல் போராட்டத்தை தொடுப்பதற்கு இதுதான் "யதார்த்தமான" அடித்தளம் என்பார்கள்.

1988ல் அனைத்துலகக்குழு வெளியிட்ட முன்னோக்குகளின் தீர்மானத்தில், "நீண்டகாலமாக மார்க்சிசத்தின்" அடிப்படைக்கூற்று, வர்க்கப் போராட்டமானது, வடிவத்தில் மட்டுமே தேசிய ரீதியானது என்றும் சாராம்சத்தில் அது சர்வதேசிய ரீதியான போராட்டம் என்றும் இருந்தது. என்றாலும் முதலாளித்துவ வளர்ச்சியின் புதிய தோற்றங்களில், வர்ககப் போராட்டத்தின் வடிவம் கூட ஒரு சர்வதேசத்தன்மையை எடுக்க வேண்டியுள்ளது. தொழிலாள வர்க்கத்தின் மிக அடிப்படை ரீதியிலான போராட்டங்கள் கூட அதன் நடவடிக்கைகளை சர்வதேசரீதியில் ஒருங்கிணைக்க வேண்டிய தேவையை முன்வைக்கின்றது" என்று நாம் வலியுறுத்தினோம். பூகோள முதலாளித்துவப் பொருளாதாரத்தின் அனைத்து அபிவிருத்திகளும் இந்த அணுகு முறையின் சரியான தன்மையைக் கோடிட்டுக் காட்டியிருக்கின்றன.

பூகோள முதலாளித்துவப் பொருளாதாரத்தில் அனைத்து அபிவிருத்திகளும் இந்த அடிப்படை அணுகுமுறையின் சரியை அடிக் கோடிட்டுக் காட்டுகின்றன. தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலையைத் தாக்குவதற்காக முதலாளித்துவ வர்க்கத்தால் உற்பத்தி பூகோளமயமாக்கல் பயன்படுத்தப்படுகிறது. அதிலிருந்து எழுகின்ற, தொழிலாளர்கள் எதிர்கொள்கின்ற போராட்டங்களை, தொழிலாள வர்க்கத்தை சர்வதேசிய ரீதியாக ஐக்கியப்படுத்தும் இலக்குடன் இணைப்பதற்கு வழியைக் காண்பதற்கான அத்தியாவசியத்தை நீங்கள் சரியாக எழுப்புகிறீர்கள்.

ஆனால் அத்தகைய பாதை அல்லது வேலைத்திட்டம், தேசிய- அரசு அமைப்பைத் தூக்கி வீசுவதையும் பூகோளப் பொருளாதாரத்தை இலாபத்திற்காக அல்லாமல், மனித தேவையை பூர்த்தி செய்யக்கூடியதாக மறு ஒழுங்கு செய்வதையும் நோக்கமாகக் கொண்ட சர்வதேச மூலோபாயத்தின் அடிப்படையில் தளப்படுத்தாது தொழிலாள வர்க்கத்தின் நலன்களை முன்னெடுக்க முடியாது.

அத்தகைய வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்கையில், எல்லாவற்றுக்கும் மேலாக சந்தர்ப்பவாத விவாதத்தின் பாணியை எதிர்க்க வேண்டும். அது சர்வதேசியவாதத்தை வாயால் பற்றிக் கொண்டிருக்கிற அதேவேளை, எனினும் "யதார்த்தவாதம்" அல்லது உடனடி விளைவுகளின் நலன்களின் பேரில் தேசிய-அரசுமேல் போராட்டத்தைத் தளப்படுத்துவது தேவையானது என்று கோரும்.

நீங்கள் விழிப்பாயிருக்கச் சாத்தியப்படுகிறவாறு, நான்காம் அகிலம், தொழிலாள வர்க்கத்தின் உடனடிப் போராட்டங்களில் இருந்து சோசலிச முன்னோக்கிற்கு வழிகாட்டுதற்கு, வேலைத்திட்டத்தை வளர்த்தெடுப்பதில் எப்போதும் அக்கறை கொண்டிருக்கிறது. எமது இயக்கத்தின் ஸ்தாபனப் பத்திரத்தில், டிராட்ஸ்கி எழுதினார்: "நாளாந்தப் போராட்டத்தின் நிகழ்ச்சிப் போக்கில் புரட்சியின் சோசலிச வேலைத்திட்டத்திற்கும் தற்போதைய கோரிக்கைகளுக்கும் இடையில் ஒரு பாலத்தைக்காண வெகுஜனங்களுக்கு உதவி செய்வது அவசியமானது. இந்தப் பாலமானது இடைமருவு கோரிக்கைகளின் அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும். அவை இன்றைய சூழ்நிலைகளில் இருந்தும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த தட்டினரின் இன்றைய நனவிலிருந்தும் கிளைத்திருக்கக் கூடியதாகவும் மற்றும் மாற்ற முடியாதவாறு ஒரு இறுதி முடிவுக்கு பாட்டாளி வர்க்கத்தால் ஆட்சி அதிகாரம் கைப்பற்றப்படுவதற்கு இட்டுச் செல்லக்கூடியதாகவும் இருக்க வேண்டும்."

லியான் டிராட்ஸ்கியின் தத்துவார்த்த மற்றும் அரசியல் மரபுரிமைச் செல்வத்தில், சந்தர்ப்பவாதப் போக்கினரிடமிருந்து பெரும் தாக்குதலுக்கு ஆளானதில் இடைமருவு கோரிக்கைகள் பற்றிய பிரச்சினையைவிட வேறு எந்தப் பகுதியும் இல்லை என்பது அநேகமாக உண்மை. அத்தகைய கோரிக்கைகளின் இலக்கு புறச் சூழ்நிலையின் பக்குவத்திற்கும்---முதலாளித்துவ உற்பத்தியின் பூகோளமயமாக்கல் தன்னில் இருந்து எழுகின்ற சோசலிசத்துக்கான வரலாற்றுத் தேவையின் பக்குவத்திற்கும்--தொழிலாளர் வேகுஜனங்களின் நனவின் பக்குவமின்மைக்கும் குழப்பத்திற்கும் இடையிலான இடைவெளியைக் கடந்து வந்தாக வேண்டும்.

"இதே காரணத்தினால்தான்" நாம் 1988 முன்னோக்குகளின் தீர்மானத்தில் விளக்கியவாறு, "இடைமருவு கோரிக்கைகளை எழுப்புகையில், இவை அடிப்படையாகக் கொண்ட புரட்சிகர சோசலிச முன்னோக்கில் இருந்து தனிமைப்பட்ட விதத்திலோ அல்லது அதற்கு எதிரிடையாகவோ ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. இடைமருவு வேலைத்திட்டத்தினை சந்தர்ப்பவாத அடி பணிவுகளுக்கும் இடைநிலைவாத தட்டிக் கழிப்புக்களுக்குமான ஒரு மருந்துச்சீட்டாக மாற்றும் இடைவிடாத முயற்சிகள் பப்லோவாதிகளின் காட்டிக் கொடுப்புக்களில் முக்கிய இடம் பிடித்திருந்தது; அதாவது இக்கோரிக்கைகளை அவற்றின் உண்மையான புரட்சிகர அடிப்படையிலிருந்து அப்புறப்படுத்தி, அவற்றைத் தொழிலாள வர்க்கத்திற்கு நிஜ புரட்சிகர வேலைத்திட்டத்திற்கான ஒரு பதிலீடாக வைக்கப்பட வேண்டுமென சிபாரிசு செய்வதாகும்.

இந்த திரிபுவாத முறையினை முன்மொழிபவரின்படி, இடைமருவு கோரிக்கைகள் வெகு ஜனங்களின் பின்தங்கிய நனவினை எதிர்த்துப் போராடுவதற்கு மாறாக, அவர்களின் பின்தங்கிய நனவிற்கு அடி பணிந்து போவதற்கான கருவிகளாகும். சாராம்சத்தில் இந்நிலைப்பாட்டினை முன்மொழிபவர்கள் தொழிலாள வர்க்கத்தின் உள்ளே சோசலிச நனவுக்காக எந்த ஒரு வெளிப்படையான போராட்டத்தின் அவசியத்தினையும் நிராகரிக்கின்றனர். தொழிலாளர் இயக்கத்துக்கு மார்க்கிச கலாச்சாரத்தின் வளமான பலாபலன்களைப் பொறுமையாகப் புகட்டுவது அவசியமில்லை என்று இவர்கள் தெரிவிக்கிறார்கள், மாறாக அவர்களின் இறுதி இலக்கு பற்றிய நனவே இல்லாமல், வெக ஜனங்களைக் கவரக்கூடிய ஒருசில சாதாரண கோரிக்கைகளை வழங்குவது அவர்களை சோசலிசப் புரட்சிக்கு இட்டுச்செல்லும் என நினைக்கின்றார்கள்."

இந்தக் கருதுகோள்களின் அடிப்படையில் நீங்கள் எழுப்பிய சிறப்பான அம்சங்களுக்குத் திரும்ப அனுமதியுங்கள். நீங்கள் கேட்கிறீர்கள்: "பூகோளமயமாக்கலை உலகத் தொழிலாள வர்க்கம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும்வரை நாம் என்ன செய்யவேண்டும்?" தொழிலாள வர்க்கம் பூகோளமயமாக்கலையும் உற்பத்திச் சக்திகளையும் தன் கட்டுப்பாட்டில் எடுக்கமுடியுமா என்பது, நாம் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்துக்குள்ளே சோசலிசக் கலாச்சாரத்தையும் கண்ணோட்டத்தையும் வளர்த்தெடுப்பதற்கு என்ன செய்கிறோம் என்பதில்தான் தங்கி உள்ளது என்பதை முதலாவதாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

தற்போது தொழிலாள வர்க்கம் அதன் மிகவும் அடிப்படையான நிபந்தனைகளைக் கூட பாதுகாப்பதற்கு ஒரு முன்னோக்கை முன்னெடுக்க இயலாமை, கடந்த காலத்தில் தொழிலாள வர்க்கம் இறுதியாக அடிப்படையாகக் கொண்டிருந்த சோசலிச கலாச்சாரம் மற்றும் கண்ணோட்டம் அழிக்கப்பட்டுவிட்டது என்ற உண்மையுடன் கட்டுண்டிருக்கிறது. ஆகையால் முதன்மையான பணி- மற்றும் உலக சோசலிச வலைத்தளம் தளப்படுத்தியிருக்கும் பணி- தொழிலாள வர்க்கத்துக்குள் சோசலிச நனவை வளர்த்தெடுப்பதுதான். இதன் அர்த்தம் எல்லாவற்றுக்கும் மேலாக இருபதாம் நூற்றாண்டு மற்றும் அதன் காலப்பகுதியில் மேலாதிக்கம் செய்திருக்கும் அரசியல் போக்குகள் பற்றிய மதிப்பீடு மற்றும் புரிதலை வளர்த்தெடுப்பதுதான்.

அதன் அர்த்தம் தொழிலாள வர்க்கத்துக்குள், முதலில் முன்னேறிய பகுதியினர் மத்தியிலும் அவர்கள் ஊடாக மிகப் பரந்துபட்ட பகுதியினர் மத்தியிலும், ஏன் ஸ்டாலினிசமும் பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சிகளும் சோசலிசத்தைப் பிரநிதிநிதித்துவப் படுத்தவில்லை மாறாக மிக நேர்மாறானதைப் பிரதிநிதித்துவப் படுத்தின என்பதையும் பற்றிய புரிதலை வளர்த்தெடுக்க வேண்டும். பல்வேறு சந்தர்ப்பவாதப் போக்குகளுள் ஒன்றாக ஆர்ஜெண்டினாவில் இருந்த மரோனிசம் இருந்தது. நான்காம் அகிலத்துக்குள் எழுந்த இச்சந்தர்ப்பவாதப் போக்குகள், போருக்குப் பிந்தைய காலப்பகுதியில் முதலாளித்துவ ஆட்சிகளை நிலைப்படுத்த முக்கிய பாத்திரத்தை ஆற்றின.

அனைத்திற்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்தின் தலைமைகளின் சீரழிவு பற்றிய புரிதல்களை அதன் நனவில் ஊறிச் செறிய வைப்பது தேவையானதாகும். ஜெர்மன் சமூக ஜனநாயகத்தினுள்ளே சந்தர்ப்பவாதத்தின் அபிவிருத்தி தொடங்கி, ஸ்டாலினிசத்தின் வளர்ச்சி மற்றும் ஒருநாட்டில் சோசலிசம் என்ற தத்துவம் மற்றும் சோசலிசத்திற்கான தேசிய பாதையிலிருந்நு நான்காம் அகிலத்திற்குள்ளே பல்வேறு பப்லோவாத சந்தர்ப்பவாதப் போக்குகளின் தோற்றம் வரையிலான அதன் தலைமைகளின் சீரழிவு-- சர்வதேச முன்னோக்கிற்கும் கண்ணோட்டத்திற்கும் தேசியவாத நிகழ்ச்சிநிரலை, இதுதான் "ஒரேயொரு யதார்த்த" அணுகுமுறை என்ற வாதத்தை அடிக்கடி வைத்து, பதிலீடாக்கியதுடன் பிரிக்க முடியாதவாறு கட்டுண்டிருக்கிறது. இந்த " யதார்த்தத்தின்" பலாபலன்கள் சர்வதேசரீதியாக தொழிலாள வர்க்கம் முரண்கொள்கின்ற அரசியல் மற்றும் தத்துவ நெருக்கடியில் இப்பொழுது காணப்படுகிறது.

ஆகையால் மையப் பணியானது தொழிலாள வர்க்கத்துக்குள் சோசலிச கண்ணோட்டத்தை மீட்டமைப்பதாகும். அது இருபதாம் நூற்றாண்டு அனுபவங்களைப் பற்றிய ஸ்தூலமான வரலாற்று மதிப்பீட்டுக்கும் குறைந்ததாக எதுவும் இல்லை. அத்தகைய மதிப்பீடு இல்லாமல், தொழிலாளவர்க்கம் உண்மையில் நினைவிழந்த ஒன்றாக இருக்கும், அது எங்கிருந்து வந்திருக்கிறது என்ற உணர்வையும் பெற்றிருக்காது, எங்கு அது போக வேண்டும் என்ற புரிதலும் இருக்காது.

இந்த அம்சத்தை வலியுறுத்தவிடுங்கள்: சோசலிச முன்னோக்கினைப் புதுப்பிக்காமல் மற்றும் உண்மையில் தொழிலாள வர்க்கம் அதன் கடந்தகால வெற்றிகளின் மிகக்குறைந்த பட்ச அம்சங்களைக் கூடப் பாதுகாப்பதற்கு அக்கறை கொண்ட போராட்டத்தை நடத்தாமல், அது பூகோளமயமாக்கலை கட்டுப்பாட்டில் எடுப்பது என்பது, அதாவது அரசியல் அதிகாரத்தை வெற்றி கொள்வது என்பது பற்றிய பேச்சே இருக்க முடியாது.

தொழிலாள வர்க்கத்தின் பல்வேறு போராட்டங்கள் எல்லாவகையான பகுதி கோரிக்கைகளையும் எழுப்பும். ஆனால் இவ்வொவ்வொரு கோரிக்கைகளும் அவற்றுக்காக அமர்த்தப்படும் செயல் தந்திரங்களும், பின்வரும் நிலைப்பாட்டிலிருந்து கட்டாயம் மதிபீடு செய்யப்படவேண்டும்: அவை தொழிலாள வர்க்கத்துக்குள் சோசலிச மற்றும் சர்வதேசக் கண்ணோட்டத்தை வளர்த்தெடுக்க உதவுகிறதா அல்லது அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறதா?

இந்த நிலைப்பாட்டிலிருந்துதான் "நலம் பயக்கும் வாணிபம்" என்று அழைக்கப்படும் பிரச்சாரத்தை நாம் மதிப்பீடு செய்ய வேண்டும். இது தொடர்பாக நீங்கள் எழுதுகிறீர்கள்: "எடுத்துக்காட்டாக, தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச உரிமைகள் வழங்கப்படாத நாடுகளில் இருந்து உற்பத்திப் பொருளை இறக்குமதி செய்தலுக்கு எதிராகப் போராடுவதன் மூலம், 'சுதந்திர வாணிகத்திற்கு' 'நலம் பயக்கும் வாணிகத்தை' எதிராக முன்வைப்பது தவறாக எனக்குப் படவில்லை" என்று. அந்த விவாதத்தின்படி, இந்த வழிகளினூடாக அமெரிக்காவில் நீங்கள் பராமரிக்கும் அழுத்தம் நைக் (NIKE) தொழிலாளர்களின் நிலைமைகளில் முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் மற்றும் இதனை "அரசியல் மூலோபாயமாக" நீட்டிப்பதற்காக நீங்கள் அழைப்பு விடுக்கிறீர்கள்.

உங்கள் விவாதத்தின் தர்க்கத்தைப் பின்தொடரவும் இந்த மூலோபாயம் எங்கு இட்டுச்செல்லும் என்று பார்க்கவும் என்னை அனுமதிக்கவும். அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள், அர்ஜெண்டினா போன்ற மற்றும் எங்கும் உள்ள குறைந்த கூலி கொடுக்கும் நாடுகளில் இருந்து சரக்குகளை இறக்குமதி செய்வதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்யவேண்டும். அர்ஜெண்டினியத் தொழிலாளர்கள், இன்னும் குறைந்த கூலி நாடுகளான எடுத்துக்காட்டாக சிறிலங்கா அல்லது இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து சரக்குகளை இறக்குமதி செய்வதற்கு எதிராகப் போராடுவதாக வைப்போம். இந்தோனேஷிய மற்றும் சிறிலங்கா தொழிலாளர்கள் முறையே வியட்நாம் அல்லது சீனா முதலியவற்றில் இருந்து சரக்குகளை இறக்குமதி செய்வதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோர வேண்டும். மேலும் அத்தகைய தடைகள் மற்றும் தலையிடலின் கீழ்வரும் பொருட்களின் பட்டியலை ஷூக்கள் மற்றும் துணிகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட முடியாது. சாதாரணமாக, போயிங் விமானம் முதல் எஃகு இரும்புக் கார்கள், கணினிகள் வரையிலான--கிட்டத்தட்ட அனைத்துப் பொருட்களின் பகுதிப் பொருட்கள்-- குறைந்த கூலி நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அந்த நாடுகளில் ஏதோ ஒரு அளவில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

"நலம் பயக்கும் வாணிகம்" வேலைத்திட்டத்தின் கடினமான அரசியல் தர்க்கம் தொழிலாள வர்க்கத்தை தேசிய வழிகளில் பிளவுபடுத்தி பிரிக்கிறது. நாடு கடந்த பூகோள நிறுவனங்களுக்கு எதிரான பொதுவான போராட்டத்தில், தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்குப் பதிலாக, அது அவர்களின் சொந்த தேசிய அரசுடன் அவர்களைக் கட்டிப்போட விழைகிறது. மற்றும் அவ்வாறு செய்வதில், அது நேரடியாக அவர்களை மிகவும் பிற்போக்கு மற்றும் வலதுசாரி சக்திகளுடன் அணிசேர வைக்கும்.

பன்னாட்டு நிதியத்துக்கு எதிராக வாஷிங்டனில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் அணுபவம் அந்த விதமானதுதான். ஆர்ப்பாட்டம் AFL-CIO தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் தேசியவாத வேலைத்திட்டத்தால் மேலாதிக்கம் செய்யப்பட்டிருந்தது. AFL-CIO அதிகாரத்துவம் ஆப்பிரிக்காவிலிருந்து சரக்குகளை இறக்குமதி செய்வதில் வரித்தடைகளைக் குறைப்பதற்கு எதிர்த்தது. மற்றும் அது சீனாவுடன் வர்த்தக உறவுகளை இயல்பாய் ஆக்குவதையும் எதிர்க்கிறது. AFL-CIO தலைமை அதனது கொள்கைகளை, மூன்றாவது உலகம் என்றழைக்கப்படும் நாடுகளில் தொழிலாளர் உரிமைகளையும் உழைப்புத்தரங்களையும் பாதுகாப்பதில் முற்போக்கான பிரச்சாரம் என முன்வைப்பதற்கு முயற்சித்திருந்தது. யதார்த்தத்தில், தொழிற்சங்க தலைமை அமெரிக்க தொழிற்துறையின் பகுதிகள் சார்பாக பிரச்சாரம் செய்கின்றது. அவை பாட்ரிக்புக்கானன் போன்ற மிகவும் பிற்போக்கு அரசியல் பிரமுகர்களை முன்கொண்டு வரவும் போட்டியிட முடியாதிருப்பதாகவும் அவை உணர்கின்றன.

குறிப்பாக வாஷிங்டனில் நடைபெற்ற AFL-CIO வின் சீன எதிர்ப்பு ஊர்வலத்தில் பேசிய ஸ்வெட்ஷாப்புக்கு எதிரான ஐக்கியமாணவர்கள் சங்கத்தின் பிரதிநிதி பேசியதை WSWS அப்பொழுது குறிப்பிட்டவாறு: "அரசியல் சந்தர்ப்பவாதத்தினால் இலக்கு வைக்கப்பட்டதோ அல்லது கரவில்லாததோ, இந்த மாணவர்கள் அமெரிக்க அரசியலில் மிகவும் பிற்போக்கான சக்திகளுள் ஒன்றுடன் தங்களை அணி சேர்த்துக் கொண்டிருக்கின்றனர். கோரமாகச் சுரண்டப்படும் தொழிலாளர்களுக்காக அக்கறைப்படும் ஒரு மாணவர் இயக்கம், எப்படி பிற்போக்கு தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் அமெரிக்க பாசிச புக்கானன்முகாமில் போய் முடியும்? அத்தகைய அபிவிருத்தி, "நலம் பயக்கும் வாணிகம்" என்று அழைக்கப்படுவதை இலக்காகக் கொண்ட அரசியல் வேலைத்திட்டத்தின் விளைபயன்கள், உலகின் எந்தப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டாலும் அது ஒன்றும் குறைந்த அளவு பிற்போக்கானது அல்ல.

பகுதிக் கோரிக்கைகளை சூத்திரப்படுத்துவதற்கு உங்களது அணுகு முறையில் அடிப்படைக் குறைபாடு, நீங்கள் தேசிய-அரசின் கட்டமைப்பிலிருந்து தொடங்குகிறீர்கள். ஆனால் இந்த வடிவிலான அரசியல் இயக்கம், உயர்ந்த சமூக யதார்த்தத்தினால்- உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கு பூகோளமயமாதல் தம்மினால்--அதிகமாய் காலத்துக்கு ஒவ்வாததாய் கடனாற்றுகிறது. ஒருவர் தேசிய-அரசை கொடுக்கப்பட்ட யதார்த்தம் என ஏற்றுக் கொள்வதன் மூலம் தொடங்கினால்--அதனால் தேசிய பாதைகளின் வழியாக தொழிலாளர்களின் பிரிவுகள் ஏற்றுக்கொண்டால்-- அப்பொழுது சோசலிச முன்னோக்கிற்கான போராட்டத்திற்குத் தேவைப்படும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேசிய ஐக்கியத்தை அடைவது என்பது வெளிப்படையாகவே சாத்தியமில்லை.

ஆயினும், பூகோள நாடுகடந்த உற்பத்தியின் அதே அபிவிருத்தியே, அத்தகைய போராட்டம் வளர்த்தெடுக்கப்படக்கூடிய வழியையும் சுட்டிக்காட்டுகிறது. ஒரு நாட்டில் உள்ள தொழிலாளர்கள் மற்றொரு நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்தக் கோருவதற்குப் பதிலாக அதே நாடு கடந்த நிறுவனங்களினால் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்களால், இன்னும் பரந்த அளவில், அதே நிறுவனத்தின் ஏனைய கிளைகளில் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்க ஏன் பிரச்சாரங்கள் வளர்த்தெடுக்கப்படக்கூடாது?

அத்தகைய போராட்டங்கள், தொழிற்சங்கங்கள் வழியாக ஒருபோதும் ஏற்பாடு செய்யப்பட முடியாதுதான். அது தொழிற்சங்கங்கள் அவற்றின் தேசியவாத வேலைத்திட்டம் மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் இலாப அமைப்பு முறையைப் பாதுகாக்கின்றன எனும் உண்மையினால் ஆகும். அவை அமைப்பு ரீதியாக ஒரு உண்மையான சர்வதேச வேலைத்திட்டத்தை வளர்த்தெடுக்க திறனற்றவை ஆகும். தேசிய எல்லைகளைக் கடந்து தொழிலாள வர்க்கத்தினை அணிதிரட்டும் பணி நிச்சயமாக புதிய பணிகளையும் சவால்களையும் முன்வைக்கிறது-- சில விடைகள் அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே காணப்படும். எடுத்த எடுப்பில் ஒரு விஷயம் சொல்லப்படக்கூடும்: இந்த புதிய பணிகள், முதலாளிததுவ உற்பத்தி முறையினைத் தூக்கி வீசுவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் சர்வதேச புரட்சிகர தலைமையினைக் கட்டி எழுப்புவதனூடாக மட்டுமே ஆரம்பிக்கப்படமுடியும்.

இது எனக்கு இறுதி மற்றும் ஒருவேளை மிக முக்கியமான அம்சத்தைக் கொண்டுவருகிறது. பூகோளமயமாக்கலின் விளைவை மிகக் குறுகிய கண்ணோட்டத்தில் நீங்கள் பேணுவதாக நான் நினைக்கிறேன். பூகோளமயமாக்கலானது நாடுகடந்த நிறுவனங்கள் தொழிலாள வர்க்கத்தின் சம்பளங்களையும் சூழ்நிலைகளையும் பலவந்தமாகக் கீழிறக்க தங்களது நடவடிக்கைகளை இடம் மாற்றக் கூடியதாய் இருக்கின்றன என்று வெறுமனே அர்த்தப்படுத்தவில்லை. அதுமிகப் பரந்த விளைபயனைக் கொண்டிருக்கிறது. அது முதலாளித்துவ வர்க்கத்தைப் பொருத்தவரை ஆழமான அரசியல் நெருக்கடியை முன்வைக்கிறது. நாடுகடந்த உற்பத்தியின் அதே அபிவிருத்தியும் உண்மையான பூகோள சர்வதேச நிதிஅமைப்பு முறையின் அபிவிருத்தியும், வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் மூன்றாம் உலகம் என்றழைக்கப்படும் நாடுகளிலும் முதலாளித்துவ வர்க்கம் கடந்த அரைநூற்றாண்டாக வர்க்கப் போராட்டத்தை ஒழுங்கமைத்த அரசியல் ஸ்தாபனங்களைக் கீழறுத்துள்ளது.

இது சோசலிசப் புரட்சிக்கான அபிவிருத்திக்கான தீர்க்கமான விளைபயன்களைக் கொண்டிருக்கிறது. அரசியல் அதிகாரத்துக்கான போராட்டம் எப்படியோ கூலிகளுக்கான, நிலைமைகளுக்கான மற்றும் உடனடிக் கோரிக்கைகளுக்கான போராட்டத்திலிருந்து வெளிப்பட்டால் போல, தொழிலாள வர்க்கத்தின் பொருளாதாரக் கோரிக்கைகளிலிருந்து சோசலிசத்துக்கான போராட்டம் எனக் கருக்கொள்வது தவறான மற்றும் முழுமையாய் ஒருபக்க சார்புடையது.

சோசலிசப் புரட்சியின் அபிவிருத்தியானது மாபெரும் அரசியல் அபிவிருத்திகள் மற்றும் நெருக்கடியில் எழுகிறது என்று வரலாறு தாமே வெளிப்படுத்துகிறது. அந்நெருக்கடியில் கூலிகள், வேலை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான சமூக அதிருப்தி ஆகியன வெளிப்பாட்டைக்காண ஆரம்பிக்கின்றன ரூஷ்யப் புரட்சியானது ருஷ்யத் தொழிலாள வர்க்கத்தின் சம்பளப் போராட்டங்களிலிருந்து எழவில்லை, மாறாக ஜாரிச ஆட்சியின் அரசியல் நெருக்கடியில் இருந்து எழுந்தது. இதேபோல 1919லும் 1923லும் ஜெர்மனியில் புரட்சிகர சூழ்நிலைகள் அரசியல் நெருக்கடியில் இருந்தே தோன்றின. ஸ்பானிய உள்நாட்டு யுத்தமும் கூலி மற்றும் மற்ற கோரிக்கைகளிலிருந்து எழவில்லை, மாறாக பிராங்கோவின் கீழ் ஆயுதப்படைகளால் ஒழுங்கு செய்யப்பட்ட எழுச்சியிலிருந்து ஆகும்.

இன்று, உற்பத்தி பூகோளமயமாதல் அங்கு பெரும் அரசியல் மோதல்களை மீண்டும் கொண்டுவரும் சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளது. அதில் சமுதாயம் மற்றும் உற்பத்தியின் மீதான கட்டுப்பாடு, பொருளாதார செல்வத்தை விநியோகித்தல் ஆகியவை மீதான போராட்டங்களில் பரந்த மக்கள் நேரடியாக ஈடுபடுவர். பத்தாண்டுகளுக்கு முன்னால், சோவியத் ஒன்றியத்தின் உடைவும் கிழக்கு ஐரோப்பிய ஷ்டாலினிச ஆட்சிகளின் வீழ்ச்சியும், முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகளிடமிருந்து, இந்நிகழ்ச்சிகள் முதலாளித்துவத்தின் இறுதி வெற்றியையும், சோசலிசத்தின் மரணத்தையும் ஏன் வரலாற்றின் முடிவையும் கூட குறிக்கிறது என்று வெற்றி அறிவிப்புக்களுடன் வாழ்த்தி வரவேற்கப்பட்டது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஸ்டாலினிச ஆட்சிகளின் முடிவு சோசலிசத்தின் முடிவைப் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை என்று விளக்கியது--முதலாவதாக இவ் அதிகாரத்துவ அரசுகள் சோசலிச அரசுகள் அல்ல--மாறாக இன்னும் சொல்லப்போனால் தோன்றிக் கொண்டிருந்த பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தி, போருக்குப் பிந்தைய சகாப்தத்தில் முதலாளித்துவ ஆட்சிக்கான அடிப்படையாக இருந்த அரசியல் கட்டமைப்புக்களின் மீது ஏற்படுத்திய விளைவின் ஆரம்ப வெளிப்பாடு என்றதுடன் , இவ்விளைவுகள் விரைந்து எங்கும் விளக்கிக் காட்டப்படும் எனறும் விளக்கியது. இந்த முன் கணித்தல்கள் மெய்ப்பிக்கப் பட்டிருக்கின்றன. 1997-98 ஆசிய நெருக்கடி--வெறும் ஆசியாவின் நெருக்கடி அல்ல மாறாக பூகோள முதலாளித்துவத்தின் நெருக்கடி-- உலகின் பெரும் மக்கள் தொகை கொண்ட நான்காவது நாட்டில், முப்பதாண்டு சுகர்த்தோ ஆட்சியின் வீழ்ச்சியில் பார்த்தது.

ஐரோப்பாவில், பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தி பழைய அரசியல் கட்டமைப்புக்களை சிதற அடித்து விட்டிருக்கிறது. ஒரு சமயம் அரங்கில் மேலாதிக்கம் செய்த கட்சிகள், கடந்த காலத்தில் அவை அனுபவித்த ஆதரவை ஆணையிடும் நிலையில் அவை இனியும் இல்லை. மற்றும் நாம் பாசிசக் கட்சிகள் மற்றும் போக்குகளின் மறு தோற்றத்தைப் பார்க்கிறோம். மற்றும் இப்போது அமெரிக்காவில்- இதுவரை சிலவகை அரசியல் சாக்கடை என்று கருதப்பட்ட மற்றும் சோசலிசத்துக்கான போராட்டத்தில் துல்லியமாய் முன்னேற்றமில்லை என (சிறப்பாக இலத்தின் அமெரிக்காவில்) அனைத்துவகை தீவிரவாதிகளும் விலக்கிவிட்ட வேளையில்---- தேர்தல் தொடர்பான பெரிய அரசியல் நெருக்கடியை, அதுவும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மீதான முதலாவது பதவி நீக்கவழக்கு வந்து இரண்டாண்டுகளுக்குப் பின்னர் காண்கின்றோம். சிறப்பாக அமெரிக்காவில் பிரதான நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார பின்னடைவின் முன்னேற்றம் பற்றி அனைத்துக் குறிகாட்டிகளும் சுட்டிக்காட்டும் சூழ்நிலையில், இன்னும் நிறைய அரசியல் அதிர்ச்சிகள் மற்றும் ஆச்சரியங்கள் சேமிப்பில் உள்ளன. இவை இன்னும் ஆரம்ப நாட்களாக உள்ள நிலையில், தொழிலாள வர்க்கத்தின் பரந்த அரசியல் இயக்கத்தின் வளர்ச்சி தொடர்பாகசில அரசியல் படிப்பினைகள் பெறக்கூடியதாக இருக்கின்றன.

தொழிலாள வர்க்கத்தின அரசியல் மயப்படுத்தலில் ஜனநாயகத்துக்கான போராட்டம் தீக்கமான பாத்திரத்தை ஆற்றப்போகிறது. அமெரிக்க ஐக்கியநாடுகளின் சூழ்நிலையைப் பாருங்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசியல் ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் முயற்சியைப் பார்த்தோம், அதைப் பின்தொடர்ந்து தேர்தலைத் திருடும் முயற்சிவந்தது. பூகோளமயமாக்கலில் இருந்து எழும் அமரிக்கப் பொருளாதாரத்தில் பரந்த மாற்றங்களால் உற்பத்தி செய்யப்பட்டுவரும் சமூகப் பதட்டங்களை, முதலாளித்துவ வர்க்கம் கடந்த காலத்தில் ஆட்சி செய்யக் கூடியதாய் இருந்த அரசியல் கட்டமைப்புக்களால் வரவர கட்டுப்படுத்த முடியாதிருக்கிறது. குடியரசுக்கட்சிக்குப் பின்னால் தங்களின் செல்வப் பெருக்கத்தின் வழியில் தடைபோடக் கூடாது என்று கோரும் முதலாளித்துவ வர்க்கத்தின் ஈவிரக்கமற்ற பகுதி உள்ளது. தற்போதைய நெருக்கடியின் உடனடி விளைவு எதுவாயினும், ஜனநாயகக் கட்சியின் தீர்ந்துபோன, வலிமையற்ற தாராளவாதத்தின் கட்டமைப்புக்குள்ளே தொழிலாள வர்க்கம் தங்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்தல் முற்றிலும் சாத்தியமில்லை என்பது, தொழிலாள வர்க்கத்தின் பரந்த பகுதியினருக்கு என்றுமில்லாத வகையில் தெளிவாகியுள்ளது.வேறுவார்த்தைகளில் சொன்னால், அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தீவிரமயப்படுத்தலுக்கான களம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் பிரச்சினைகள் பரந்த முக்கியத்துவத்தினைப் பெற்றிருக்கின்றன. உற்பத்தி பூகோளமயமாக்கல் மற்றும் பூகோள மூலதனத்தின் ஆதிக்கம் இதே பிரச்சினைகளை எங்கும் எழுப்பி இருக்கின்றன.கடந்த காலத்தில் நிலைகொண்டிருந்த சூழ்நிலைகளின் கீழ், பொருளாதார நிகழ்ச்சிப் போக்குகள் குறிப்பிட்ட அளவு தேசிய ஒழுங்குபடுத்தலுக்கு கீழ்ப்பட்டிருந்தன, ஆளும் வர்க்கங்கள் வெகுஜனங்களின் ஜனநாயக அபிலாஷைகளுக்கு குறிப்பிட்ட சலுகைகளைச் செய்ய முடிந்தது. அது இனியும் இல்லை. எங்கும் சர்வதேசப் போட்டியின் அபிவிருத்தியின் ஊடாக, பூகோள மூலதனம் இலாபத்தைச் சுரண்ட சிறந்த நிலைமைகள் உருவாக்கப்படுமாறு கோருகிறது.

ஐக்கிய அமெரிக்காவில், எடுத்துக்காட்டாக ஜனாதிபதி தேர்தலில், முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து ஊது குழல்களும் உண்மையில் நடுநிலைமையாய் வாக்கு எண்ணலுக்கான அடிப்படை உரிமையை ஒதுக்கி வைத்துவிட்டு, புஷ்- ஐ இருத்தக் கோருகிற நிலையில், இந்த அடிப்பைக் கோரிக்கை கூட பரந்த அரசியல் பிரச்சினைகளை எழுப்புகிறது. இந்த நிகழ்ச்சிகள் காட்டுவது என்னவெனில், பூகோள மூலதனத்தின் மேலாதிக்கம், கடந்த காலத்தில் முதலாளித்துவ வர்க்கம் எந்த ஜனநாயக வடிவங்களூடாக ஆட்சி செய்தனவோ அவற்றுடன் வரவர ஒத்துப் போகாததாய் ஆகிவருகின்றது என்பதாகும். இதன் அர்த்தம் அடிப்படை பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடாமல், ஜனநாயகத்துக்கான பாதுகாப்பு என்பது சீரியசாக எடுத்துக் கொள்ளப்பட முடியாது என்பதை --அதாவது மிகச் சிறிய தட்டினரின் கைகளில் செல்வமும் அதிகாரமும் அதிகமாய் குவிக்கப்பட்டிருக்கும் சமுதாயத்தில் உண்மையான ஜனநாயகம் இருக்க முடியாது என்பதை, அமெரிக்காவிலும் சர்வதேசிய ரீதியிலும் வருகின்ற போராட்டங்கள் என்றுமில்லாத வகையில் மிகக் கூர்மையாக வெளிப்படுத்துகின்றன.

முன்னரே நான் குறிப்பிட்டவாறு, நமது இயக்கம் இடைமருவு கோரிக்கைகளின் வேலைத்திட்டத்தை உடைய, பாலத்தை அபிவிருத்தி செய்வதற்கான தேவை மீது எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது. அக்கோரிக்கைகள் இன்றைய சூழ்நிலையிலிருந்து தோன்றி வளர்ந்திருக்கக் கூடியதாகவும் தொழிலாள வர்க்கத்தால் ஆட்சி அதிகாரம் கைப்பற்றப்படலுக்கு இட்டுச் செல்லக்கூடியதாகவும் இருக்க வேண்டும். கடந்தகாலஅனுபவம் மற்றும் வேலைத்திட்டங்கள் வழிகாட்டுதலை அளிக்கலாம், ஆனால் வழிகாட்டியாக மட்டுமே.வரலாறு நிகழ்ச்சி நிரலில் வைத்திருக்கும் சவால்களுக்கும் புதிய பணிகளுக்குமான வேலைத்திட்டமானது, அரசியல் பொருளாதார சூழ்நிலையின் பன்முக ஆய்வை தேவையாகக் கொண்டிருக்கிறது. அத்தகைய ஆய்வின் அபிவிருத்தியே WSWS வேலையின் இதயநாடி ஆகும். மேலும் வருகின்ற காலத்தில், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் அதிகமாய் அணிதிரட்டப்படக் கூடியதாய் உடனடி மற்றும் பகுதிக் கோரிக்கைகளின் முழுத் தொகுதிக்குமான அடிப்படையை அது வழங்கும்.

ஆனால் அத்தகைய வேலைத்திட்டமும் வரிசைக்கிரமமான கோரிக்கைகளும், தற்போதைய சகாப்தத்தின் மைய முரண்பாடு உலகப் பொருளாதாரத்தின் அபிவிருத்திக்கும் காலாவதியாகிப்போன தேசிய-அரசு அமைப்புக்கும் மற்றும் அது தங்கியிருக்கும் அனைத்து அரசியல் கட்டமைப்புகளுக்கும் இடையிலான முரண்பாடு என்பதைப் புரிந்து கொள்வதன் மீது கட்டாயம் தளப்படுத்தப்பட வேண்டும். இதனால் தான் நாம் அனைத்து வேலைத்திட்டங்களையும் நிராகரிக்கிறோம். "நலம் பயக்கும் வாணிகம்" மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகளுக்குமான அத்தகைய அழைப்பு போன்றவை அவற்றை முன்னெடுப்பவர்களின் நோக்கங்கள் என்னவாக இருந்தாலும், தொழிலாளர்களை தேசிய வழியில் பிரிக்கின்றன.

தங்கள் உண்மையுள்ள,

நிக்பீம்ஸ்