World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : ரஷ்யா

Unicef report highlights situation of children in E. Europe and the former SovietUnion: The terrible price of capitalist restoration

கிழக்கு ஐரோப்பாவிலும், முன்னைய சோவியத் யூனியனிலும் சிறுவர்களதும், இளம் வயதினரதும் நிலைமையை யுனிசெப் அறிக்கை எடுத்துக்காட்டுகின்றது: முதலாளித்துவ புனரமைப்பின் கோரமான விளைவு

By Elizabeth Zimmermann
6 January 2001

Use this version to print

1989ம் ஆண்டு பேர்ளின் சுவர் உடைக்கப்பட்ட காலகட்டத்தில் கிழக்கு ஐரோப்பாவிலும், சோவியத்யூனியனிலும் வாழ்ந்த 5-14 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 5 லட்சம் பேர் இப்பொழுது உயிருடன் இல்லை

மாறும் சமூகத்தில் இளம்வயதினர் என்ற ஆய்வின் கீழ் இத்தாலியின் புளோரன்ஸ் நகரத்தில் Innocenti Research Centre ஆல் UNICEF இன் (ஐ.நா.சிறுவர் நலன்புரி அமைப்பு) சார்பில் நடாத்திய ஆய்வின் பிரகாரம் இந்தக் கோர நிலைமைகள் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. கிழக்கு ஐரோப்பாவினதும், சுதந்திரநாடுகளின் கூட்டமைப்பினதும் (CIS- 1992 வரை சோவியத் யூனியனின் பகுதியாக இருந்தது) 27 நாடுகளைச் சேர்ந்த 650 இலட்சம் ''மாற்றமடைந்துவரும் பரம்பரை'' என்று அழைக்கப்படுகின்ற 15 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டவர்களை உள்ளடக்கிய ஆய்வின் மூலம் இந் நிலைமை கணிக்கப்பட்டுள்ளது.

இப்பிராந்தியத்தில் இலட்சக்கணக்கான சிறுவர்கள், இளம் வயதினர் பொதுவாக முழுமக்களும் முகம் கொடுக்கும் கோரமான நிலைமைகளுக்கான காரணத்தை இதன் எழுத்தாளர்களால் வெளிப்படுத்தப்படவில்லை. அவர்கள் வெளிப்படுத்தியிருக்கும் தரவுகள் சோவியத்யூனியனிலும், கிழக்கு ஐரோப்பாவிலும் முதலாளித்துவ புனரமைப்பை குற்றஞ்சாட்டுகின்றது. (இது தொடர்பாக முழுமையான அறிக்கை http://www.unicef.org/moneer/index.htmt வலைத்தளத்தில் எண்ணற்ற வரைபடங்களுடனும், புள்ளி விபரங்களுடன் ஆங்கில, ரஷ்ய மொழிகளில் கிடைக்கும். அத்துடன் சுருக்கமாக இத்தாலி மொழியிலும் கிடைக்கும்.)

அவர்களது முன்னுரையில் இரும்புத்திரையின் வீழ்ச்சியினதும், அதனுடன் தொடர்புபட்ட பொருளாதார, அரசியல் மாற்றங்களினதும் அனுபவங்களைக் கொண்ட இக்குழந்தைப் பருவத்திலிருந்து இளம்பருவத்திற்கான மாற்றமடைந்த தலைமுறையுடன் எந்தவொரு பரம்பரையையும் உதாரணமாக சுட்டிக் காட்டமுடியாது என குறிப்பிட்டுள்ளனர். "ஒரு பரம்பரையிலிருந்து அடுத்த பரம்பரைக்கு செல்வதற்கான சுமுகமான பாதையாக இருந்த அமைப்புக்கள், வளங்கள், சமூகவடிவங்கள் ஒன்றில் பலவீனமாக அல்லது அடிப்படை மாற்றம் அடைந்துள்ளதாக அல்லது அப்படி எதுவும் இல்லாததாக இன்றுள்ள இளம் வயதினர் உணர்கின்றனர்'' எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

1999ல் பரிசோதிக்கப்பட்ட இந்தப் பிரதேசத்தில் உள்ள 650 இலட்சம் இளம் வயதினரில் 260 இலட்சம்பேர் (41 வீதம்) இன்னும் பாடசாலை செல்கின்றார்கள் அல்லது உள்வாரிப்பயிற்சி பெறுகிறார்கள். 210 இலட்சம்பேர் வேலை செய்கிறார்கள். ஏனைய 180 இலட்சம்பேர் படிக்கமுடியாது அல்லது வேலையற்று இருக்கின்றார்கள்.

1989ம் ஆண்டில் இதே பிரதேசத்தில் 5-14 வயதுக்கு இடைப்பட்ட 670 இலட்சம் சிறுவர்கள் இருந்தார்கள். 1999ல் கிட்டத்தட்ட 10 இலட்சம்பேர் வெளியேறிவிட்டார்கள். ஆனால் சிறிய தொகையினர்தான் உலகத்தின் ஏனைய பகுதியில் நல்ல வாழ்க்கை நிலைமையை பெறமுடிந்தது. ஏனையோர் மோசமான வறுமையிலும் ஆதரவற்ற நிலையிலும் கடுமையான தொழில்களில் அல்லது பாலியல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். யுத்தத்தினாலும், இன மோதலினாலும் பொருளாதாரப் பற்றாக்குறையினாலும் இப்பிரதேசத்தினுள்ளும் பெருமளவிலான இடப்பெயர்வுகள் ஏற்பட்டுள்ளன. பெரும்பான்மையான நாடுகளில் அதிகளவிலான இளவயதினர் நாடு திரும்பியதைவிட நாட்டைவிட்டு வெளியேறினர்.

எழுத்தாளர்களின் கணிப்பீட்டின்படி 1989-1999 களுக்கிடையில் 5 இலட்சம் சிறுவர்களும் இளம் வயதினரும் இறந்துள்ளனர். இதில் அரைவாசிப்பேர் ரூஷ்யாவை சேர்ந்தவர்கள். 1998ம் ஆண்டு 15 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட இளம்வயதினர் 85,000 பேர் இறந்துள்ளனர். இது 1989 இலும் பார்க்க 30% அதிகமாகும். 11 நாடுகளின் இளம் வயதினரின் இறப்புவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக சீ.ஐ.எஸ். நாடுகளிலும், பால்டிக் நாடுகளிலும், கிழக்கு ஐரோப்பா உட்பட்ட 16 நாடுகளில் இது மிகவும் மோசமாக உள்ளது. நாடுகளுக்கிடையேயான வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றது.1998ல் ரூஷ்யாவிலும், காஸாஸ்தானிலும் இளம் வயதினர் இறக்கும் ஆபத்து ஸ்லோவினியா, செக் குடியரசு, ஹங்கேரி ஆகிய நாடுகளிலும் பார்க்க கிட்டத்தட்ட மூன்று மடங்குகள் அதிகமாகக் காணப்பட்டது.

பெரும்பான்மையான இளம் வயதினரின் மரணம் விபத்து, வன்முறை, கொலை, தற்கொலை, தொற்றுநோய், போஷாக்கின்மை, அத்துடன் கர்ப்பம் தரித்தல், குழந்தைப்பிராய பிரசவம் ஆகியவற்றால் இடம் பெறுகின்றது. இவை அனைத்திற்கும் பெரும்பாலும் சமூகக் காரணிகள் உள்ளன. வேறு சமூக நிலைமைகளின் கீழ் இவற்றை தவிர்க்கபட முடியும்.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நாடுகளில் ஆகக்கூடிய பாதிப்புக்கு உள்ளாகி, இறப்பில் முன்னணியில் இருக்கும் நாடு ரூஷ்யாவாகும். நெதர்லாந்திலும் பார்க்க 6 மடங்குகள் அதிகமாக இருப்பதாக அறிக்கை கூறுகின்றது. அந்த அறிக்கையில் மேலும் உறுதிப்படுத்தியவாறு பரந்தளவிலான வறுமையும், பலவீனமான சமூகக்கூட்டும் பிரச்சினைகளை ஆழமாக்குகின்றன. அவை சுகவீனம், போஷாக்கின்மை, அபாயகரமான பாலியல் உறவு, போதைப்பொருள் பாவனை போன்றவற்றிற்கும் காரணமாகின்றன.

இளம் வயதினரிடையே தற்கொலை அதிகரிப்பதானது நம்பிக்கையீனம், அழுத்தங்கள் ஆகியவற்றின் அதி உச்ச வெளிப்பாடாகும். சில 'இடைமருவு' நாடுகளில் 15 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட இளம் வயதினரிடையே தற்கொலை வீதம் குறையும்போது, 16 நாடுகளில் அதிகரிக்கின்றது. லிதுவேனியா, வெள்ளைரூஷ்யா, ரூஷ்யா, துருக்மேனிஸ்தான் ஆகிய நாடுகளில் இரண்டு மடங்காக இருக்கின்றது. குறிப்பாக ஸ்லோவினியா, எஸ்தோனியா, உக்கிரேன், காஸாக்ஸ்தான் ஆகிய நாடுகளிலும் உயர்ந்து காணப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் இப்பிராந்தியம் பூராவும் 15 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட 10,000 ஆண்களும், 2,000 பெண்களும் தற்கொலை செய்துகொள்கிறார்கள். மேலும் 5000 இளம் ஆண்களும், 1500 இளம் பெண்களும் கொலைக்குப் பலியாகிறார்கள்.

இளம் வயதினரின் சுகாதார நிலைமைகள் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கோ அல்லது ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கோ சாத்தியமில்லாததாக அவ்வறிக்கை குற்றம் சாட்டுகின்றது. அவ்வசதிகள் ஸ்டாலினிச ஆட்சி வீழ்ச்சி அடைந்த பின்னர் இது மிகவும் மோசமடைந்துள்ளது அல்லது இல்லாமல் போயுள்ளது. இது இளைஞர்கள் மத்தியில் புகைப்பிடிப்பதினாலும், மதுபான பாவிப்பின் அதிகரிப்பினாலும் மேலும் வெளிப்படுகின்றது.1993-1994 இல் சகல 15 வயது பெண்களில் 10% உம், இவ்வயதையுடைய ஆண்களில் 22% னரும் வழமையாகப் புகைப்பிடிக்கின்றனர். நான்கு வருடத்தின் பின்னர் இது 18% ஆகவும் 29% ஆகவும் அதிகரித்துள்ளது. உண்மையாக இந்நாடுகளில் உள்ளவர்கள் மேற்குநாடுகளில் உள்ளவர்களிலும் பார்க்க கூடுதலாகப் புகைபிடிக்கின்றனர்.

இவ்வறிக்கை அபாயகாரமான போதைப் பொருள் பாவிப்பினையும் எடுத்துக்காட்டுகின்றது. 1999 இல் கங்கேரியில் 15 வயதுடையவர்களில் 25% ஆனோர் பலவிதமான போதைப் பொருட்களை பாவிப்பதாக ஒரு அறிக்கை தெரிவிக்கின்றது. உக்ரேனில் போதைப் பொருட்களைப் பாவிக்கும் 13.000 பேரில் 1000 பேர்களுக்கு 1999 இன் முதல் மூன்று மாதங்களில் HIV+ இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் எயிட்ஸ் நோய்க்கு உள்ளாகியதற்கான காரணம் அசுத்தமான ஊசிகளைப் பாவிப்பதனாலாகும்.

1995ம் ஆண்டு இப் பிராந்தியத்தில் சகல வயதினரிடையே 12,000 பேர் HIV க்கு உட்பட்டிருந்தார்கள். ஆனால் 1998ம் ஆண்டின் முடிவில் 50,000 க்கும் கூடுதலாக இது அதிகரித்தது. ஐ.நா. அமைப்பான Unaids இன் கணிப்பின்படி 1999ம் ஆண்டு முடிவில் 3,60,000 மக்கள் எயிட்ஸ் நோய்க்கு உட்படுவார்கள். இளம் வயதினர் இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றார்கள். லித்துவேனியா, செக் குடியரசில் 15 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட இளம் வயதினரில் மூன்றில் ஒருபகுதியினர் HIV உடையவர்களாக உள்ளனர். இது வெள்ளை ரூஷ்யாவில் மூன்றில் இரண்டு பகுதியாக உள்ளது.

பாடசாலையும் மேலதிகக் கல்வியும்

பாடசாலை வரவு, மேலதிகக் கல்விக்கானவழி, பயிற்சி தொடர்பாக இவ்வாய்வு பயங்கரமான விபரங்களைத் தருகின்றது. பாடசாலையைவிட்டு வெளியேறும் 15 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட இளம் வயதினர் 1989ல் 60 லட்சமாக இருந்து 1998ல் 90 லட்சமாக அதிகரித்தது. இந்த வயதினரில் மூன்றில் ஒரு பங்கினருக்கு மேல் ஒன்றில் தகுதி இல்லாமல் அல்லது இடை நடுவில் பாடசாலையை விட்டு வெளியேறுகின்றனர். இது தொடர்பாகவும் வெவ்வேறு நாடுகளுக்கிடையில் வேறுபாடுகள் இருக்கின்றது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் பால்டிக் அரசுகளிலும் மேலதிக படிப்புக்கான வரவுகளின் மிதமான அதிகரிப்பு இருக்கின்றது. அந்தப் பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளில் பலமான வீழ்ச்சி பதியப்பட்டுள்ளது. குறிப்பாக பாதிக்கப்பட்டவை தஜிகிஸ்தானும் துருக்மேனிஸ்தானுமாகும். தஜிகிஸ்தானில் 1989ம் ஆண்டில் 61 வீதத்திலிருந்து 1998ல் 14 வீதமாக வீழச்சி அடைந்துள்ளது. இதேகாலப் பகுதியில் துருக்மேனிஸ்தானில் 68 வீதத்துக்கு 30 வீதமாக வீழச்சி அடைந்துள்ளது.

உயர் கல்விக்குப் பின்னர் சிறு தொகையினர்தான் கல்வியைத் தொடர்வதுடன், 15 வயதில் அல்லது அதற்கு முன்பாக பாடசாலையைவிட்டு வெளியேறுகின்றார்கள். 1989ம் ஆண்டில் பெரும்பாலும் எல்லாப் பிள்ளைகளும் உயர் பாடசாலை படிப்பினை முடித்தார்கள். CIS நாடுகளில், 1997ம் ஆண்டில் உயர் பாடசாலை படிப்பினை முடித்தவர்களின் எண்ணிக்கை இல்10% க்கும் 20% க்கும் இடையில் வீழ்ச்சிகண்டது. கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில், இதனிலும் கூடுதலாக வீழ்ச்சியடைந்துள்ளது. அல்பேனியா, பல்கேரியா, ரூமேனியா ஆகிய நாடுகள் மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நாடுகளில் உயர்பாடசாலையை நிறைவு செய்யும் பிள்ளைகளில் 1989ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 1997ல் 80% குறைவாக உள்ளது.

இவ்வறிக்கையில் மேலும் பாதிக்கப்பட்ட இளவயதினரில் கூடுதலானோர் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள், சிறுபான்மை இனத்தவர்கள் அல்லது ஊனமுற்றவர்களாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் உள்ளடங்கியவர்களில் பெரும்பான்மையினர் உரிய காலத்திற்கு முன்பே பாடசாலையைவிட்டு வெளியேறுகின்றார்கள். இவர்களுக்கு மேலதிகமான கல்விக்கோ அல்லது பல்கலைக்கழகத்துக்கோ சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.

ஏழைப் பிள்ளைகளுடைய பெற்றோர்களால் பாடசாலைக்கு அல்லது கல்விக்கு பணம் வழங்க முடியாதது மாத்திரமன்றி, புத்தகங்களுக்கும் மேலதிகப் படிப்புக்கும் பணம் வழங்க முடியாதுள்ளனர். இளம் வயதினரும் பிள்ளைகளும் தங்களுடைய குடும்பத்தின் வாழ்க்கைச் செலவைச் சமாளிப்பதற்கும் வருவாய்க்கு பங்களிப்பு செய்வதற்கும் கூடுதலாக பாடசாலையை விட்டு வெளியேறுகின்றனர்.

இந்தப் பிராந்தியம் ஆசிரியர்களின் மோசமான நிலைமைகளை குறிப்பாக குறைந்த சம்பளம் போன்றவற்றால் மேலும் உக்கிரமாகின்றது. உதாரணமாக மோல்டிவியாவில் பெற்றோர்கள் வழக்கமாக நூற்றுக்கணக்கான அமெரிக்க டொலர்களை கட்டணமாகவோ அல்லது கைலஞ்சமாகவோ வேறு மொழியையும், கணிதம், இயற்கை விஞ்ஞானம் போன்றவற்றை தம்பிள்ளைகளுக்கு படிப்பிக்க செலவு செய்கின்றார்கள்.

இவ் அறிக்கையின் ஆசிரியர்கள் இந்த பாதிக்கப்பட்ட பிராந்தியம் பூராவுமுள்ள இளம் வயதினரை தமது வெவ்வேறு ஆய்வுகளுக்காக விசாரணைக்கு உட்படுத்தியுள்ளார்கள். தமது பாடசாலை வரவு சம்பந்தமாக 15 வயதுடைய கெய்ரற் என்பவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். ''சில வேளைகளில் எனது ஆசிரியரைப் பார்க்கும்போது, நான் அவருக்காக கவலைப்படுவேன். வேறு விடயங்களைப் பற்றி சிந்திப்பதால் அவர் பாடத்தில் கவனம் செலுத்த முடியாதுள்ளார். நாளாந்த பிரச்சனைகளைப்பற்றி அவர் கவலைப்படாமல் இருக்கவேண்டும் என்பதே எனது விருப்பமாகும். அவரிடம் போதுமான பணம் இருந்தால், அவர் எம்மை படிப்பிப்பதற்கும் தனது வேலையை செய்வதில் கவனம் செலுத்துவதற்கும் உதவியாக இருக்கும்'' என்றார்.

வேலையின்மை

எல்லா நாடுகளிலும் இளைஞர் வேலையின்மை சாதாரண மட்டத்திலுள்ள வேலையின்மையிலும் பார்க்க இரண்டு மடங்கு உயர்வாகும் என அவர்களின் ஆய்வு தெரிவிக்கின்றது. இந்தப்பிரச்சனை 1989க்கு முன்பு தெரியாமல் இருந்தது. 1998ல் சராசரி இளைஞர் வேலையின்மை 18 இடைமருவு நாடுகளில் கிடைக்கப்பெற்ற புள்ளிவிபரங்களின்படி 18 வீதமாகும். இளம் வேலையற்றோரில் 40% இனர் ஏற்கனவே ஒருவருடத்துக்கு மேலாக வேலையற்றவர்களாக இருக்கிறார்கள். இதுவும் இப்பிரதேசத்தில் வேறுபாடாகவுள்ளது. செக் குடியரசில் உத்தியோகப் பூர்வமான வேலையின்மை 7 வீதமாகும். முன்னாள் யூகோஸ்லாவியா குடியரசின் மசடோனியாவில் 70 வீதத்துக்கும் கூடுதலாக உள்ளது.

இந்த உத்தியோகபூர்வமான புள்ளி விபரங்கள் பயங்கரமானவையாக இருக்கின்றன. ஆனால் இவை ஒரு பகுதியேயாகும். 1998ல் 180 இலட்சம் இளவயதினர் பாடசாலைக்கு செல்வதில்லை அல்லது வேலையற்ற நிலைமையிலுள்ளனர். இதில் அண்ணளவாக 80 இலட்சம்பேர் வேலையற்றவர்களாக கணிப்பிடப்பட்டுள்ளனர். 100 இலட்சம் இளவயதினர் வேலையற்றவர்களாகவும், கல்வி கற்றபவர்களாக இல்லாதபோதும் வேலையற்றவர்களின் புள்ளிவிபரங்களில் சேர்க்கப்படவில்லை. இவர்களில் பெரும்பான்மையினர் இப்பிராந்தியத்தின் தென்பகுதியில் வாழ்கிறார்கள் என ஆய்வு கூறுகின்றது.

இளவயதினரில், சில குழுவினர் குறிப்பாக வேலைச்சந்தையில் சேர்த்துக் கொள்ளப்படாததினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என மேலும் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. குறைந்த கல்வித்தரத்தில் உள்ளவர்கள், இளம் பெண்கள், மிகவும் பின்தங்கிய கிராமப்புறங்களில் வாழ்பவர்கள், இன, தேசிய சிறுபான்மை இனத்தவர்கள் இந்த வகையில் அடங்குவர்.

மேற்குத் தொழிற்துறை நாடுகளைப் போல் பொருளாதார வளர்ச்சி தானாக கூடுதலான வேலைவாய்ப்பை வழங்கமாட்டாது என்பதை ஆய்வு மேலும் எடுத்துக்காட்டுகின்றது. 1995ம் ஆண்டு போலந்து, ஹங்கேரி, ஸ்லோவினியா போன்ற நாடுகளில் இளவயதினரின் வேலையின்மை உயர் மட்டத்துக்கு வளர்ச்சியடைந்தது. ஆனால் பால்டிக் அரசுகள், செக்குடியரசு, சுலோவாக்கியா இதற்கு எதிரிடையாக உள்ளன. அங்கே பொருளாதார வளர்ச்சி இருந்த பொழுதும் இளம் வயதினரை வேலைக்கு சேர்ப்பது குறைகின்றது. 1995-1998ம் ஆண்டுகளுக்கிடையில் ரூஷ்யாவின் மொத்த தேசிய உற்பத்தி 7 வீதத்தால் குறைந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் வேலையில் இணைவது 4 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளபோது, இளவயதினரின் வேலை 23 வீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்தப் புள்ளிவிபரங்களின்படி பார்த்தால் கிழக்கு ஐரோப்பாவிலும், CIS நாடுகளிலும் உள்ள இளவயதினர் சுயாதீனமான வாழ்க்கையை அல்லது தங்கள் சொந்தக் குடும்பவாழ்க்கையை ஆரம்பிக்க முடியாதுள்ளதென்பது ஆச்சரியப்படத்தக்கதல்ல. 20 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட இளவயதினர் அவர்களின் பெற்றோர்களுடன் சேர்ந்து வாழும் வீதம் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பகுதியால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இப்பிராந்தியத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் பிறப்பு வீதம் 1/3 க்கும் கூடுதலாகக் குறைந்துள்ளது. ஆர்மேனியா, லித்துவோனியாவில் அரைவாசியாகக் குறைந்துள்ளது. இந்த நிலைமை தொடருமானால் 15க்கும் 24க்கும் இடைப்பட்ட இளம் வயதினர் இன்னும் 20 வருடங்களில் மூன்றில் ஒன்றாக குறைவடைவார்கள்.

சிறுவர்களிடையேயும் இளம் வயதினரிடையேயும் குற்றச்செயல்கள் அதிகரிப்பதாக அந்த அறிக்கை மேலும் விபரிக்கின்றது. அவர்கள் உயிர் வாழ்வதற்காக போராடவேண்டும் என்பதை இந்நிலைமைகள் பிரதிபலிக்கின்றது. சில நாடுகள் இவர்களை பயங்கரமான குற்றவாளிகளாக நடத்துகின்றார்கள். உதாரணமாக கிறிஜிஸ்தானில் சிறிய களவுகளை செய்கின்றவர்களுக்கு 6 மாதம் தனிப்பட்ட சிறைவாசம் வழங்கப்படுகின்றது. இந்த மிலேச்சத்தனமான சிறை நிலைமைகளில், கல்விக்கோ, குடும்பத்தினர் பார்வையிடுவதற்கோ உரிமை கிடையாது. அல்பேனியாவில் விசாரணைக்கு முன்பு 8 மாதத்துக்கு சிறையில் அடைக்கப்படுவார்கள். இளவயதினரை வைத்திருப்பதற்கு வசதிகள் இல்லாததினால் அவர்கள் வயதானவர்களுடன் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

உக்கிரேனில் 1995ம் ஆண்டுக்கான அறிக்கையின்படி இரண்டு இளவயதினரில் ஒருவர் விரும்பத்தகாத பாலியல் உறவு கொண்டிருந்தால் உள்நாட்டு அமைச்சின் கட்டுப்பாட்டிலுள்ள நிலையங்களில் சிறை வைக்கப்படுகின்றார்கள் என்பது வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. விசாரிக்கப்பட்ட போது அவர்களில் 30 வீதத்தினர் கற்பழிக்கப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது. மத்திய ஆசியாவில் ஐந்துநாடுகளிலும் யுனிசெப் நடாத்திய ஆய்வின்மூலம் இளைஞர்கள் தனிமையான சிறைகளில் அடைக்கப்படுகின்றார்கள் என அறியப்பட்டுள்ளது. காஸஸ்தானைத் தவிர ஏனைய நாடுகளில் குடும்ப அங்கத்தவர்கள் பார்வையிடுவதற்கு கூட அனுமதி இல்லை. ஜோர்ஜியா போன்ற நாடுகளில் அடிப்படை சட்டப் பாதுகாப்புக்கூட கிடையாது. இளைஞர் விவகார ஆணைக்குழு, இளம் குற்றவாளிகளை நீதிமன்ற விசாரணை இல்லாமல் மூன்று வருடகாலம் அடைக்கப்பட்ட நிலையங்களில் வைத்திருப்பதற்கு மீண்டும் கட்டளையிடமுடியும். இந்தப் பிராந்தியம் பூராவும், பொருத்தமான இளைஞர் நிலையங்களோ, உரியமுறையில் பயிற்றப்பட்ட ஊழியர்களோ கிடையாது. இளவயதினரின் எதிர்காலத்திற்காக, முதலீடுகளுக்கு இத்தகைய வியாபார அரசாங்கங்களில் பொதுமக்கள், சிரத்தையும் செலவும் காட்டவேண்டுமென எழுத்தாளர்கள் தெளிவுபடுத்துகின்றார்கள்

இவ்வறிக்கையின் ஆசிரியர்கள் இக்கவலைக்குரிய நிலைமையை எடுத்துக்காட்டி இளம்வயதினரின் எதிர்காலத்திற்கு முதலீடு செய்வதற்காக பாரிய பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதுடன், உதவியளிக்கவும் அழைப்புவிடுகின்றனர். அவர்கள் தமது சொந்த வாழ்க்கையை ஒழுங்கமைத்துக் கொள்ள முக்கிய பங்குவகிக்க இளம்வயதினரிடம் அழைப்புவிடுகின்றனர். இவைகள் எதுவும் பிழையல்ல. இருந்தபோதும், இத்தகைய நிலைமைக்குக் காரணமாக இருந்த, இதன் மூலம் தம்மை செல்வந்தராக்கிக்கொண்ட அரசியல் கட்சிகளிடம் இந்த மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது.

"புதிய ஜனநாயக நிலையங்கள்" (இது ஒரு பொய்யான புகழ்ச்சியான விபரணம்) என்று கூறப்படுபவைகள் மீது தாம் விசாரித்த பெரும்பான்மையான இளம் சந்ததியினருக்கு நம்பிக்கை கிடையாதென எழுத்தாளர்கள் குறிப்பிட்டார்கள். 1998ம் ஆண்டில் லித்துவேனியாவில் நடத்திய ஒரு விசாரணையில் 18 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 89 வீதத்தினர் நாட்டின் அரசியல் கட்சிகள் தமக்கு எவ்வித முக்கியத்துவமும் அற்றவை என நம்புவதாக கண்டு பிடித்துள்ளது. ரூஷ்யாவின் இதே மாதிரியாக விசாரணை நடாத்திய போது 18 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட இளவயதினர் அரச அமைப்புகள்பற்றி எதிர்மாறான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்கள்.

எப்படியிருந்தபோதும் இவை ஒருபோதும் வெளிப்படையாக ஜனநாயக உரிமைகளை நிராகரிப்பதுடன் ஒப்பிடப்பட முடியாது. லித்துவேனியாவில் இளம் வயதினரில் 85 வீதமானோர் அவர்களது நாட்டின் அரசியல் வாழ்க்கையில் அக்கறை உடையவர்களாக இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இளைஞர்களில், விசாரணை செய்யப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஜனாதிபதி தேர்தல்களை இடை நிறுத்திவைப்பதையோ அல்லது கூட்டங்களை அல்லது ஊர்வலங்களை தடை செய்வதையோ "அனுமதிக்க முடியாதது" எனக் கூறியமை ரூஷ்ய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.