WSWS:
செய்திகள் &
ஆய்வுகள் :ஆசியா
:பங்களாதேஷ்
Bangladesh's worst ferry disaster claims nearly 200 lives
பங்களாதேஷின் படுமோசமான படகு விபத்து சுமார்
200 உயிர்களைப் பலிகொண்டது
By Nishanthi Priyangika
5 January 2001
Use
this version to print
பங்களாஷின் படுமோசமான படகு விபத்தினால்
165 பேர் உயிரிழந்ததோடு 100க்கு மேற்பட்டவர்கள் காணாமல்
போயுள்ளனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்
கூடும். இறந்தவர்களின் தொகை 188 என உத்தியோகபூர்வமற்ற
அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இறந்தவர்களில் குறைந்த பட்சம்
40 பேர் குழந்தைகள்.
கிட்டத்தட்ட 400 பயணிகளை ஏற்றிச் சென்ற ராஜ்ஹொன்காஷி
(Rajhongashi)
படகு, டிசம்பர் 29ம் திகதி அதிகாலை கடுமையான மேக மூட்டத்தில்
மெக்னா ஆற்றில் வேறு ஒரு படகுடன் மோதி நீரில் மூழ்கியது. மற்ற
படகுக்கு எந்த சேதமும் ஏற்படாத நிலையில் தலை நகரம் டக்காவில்
இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் எக்லன்பூரில் 10 மீட்டர்
ஆழமான நீரில் ராஜ்ஹொன்காஷி சில நிமிடங்களில் மூழ்கியது.
இப்படகு நாட்டின் தென் கிழக்கில் உள்ள பகுதியான
ஷாரியட்பூருக்கு (Shariatpur) பயணித்தது.
பயணிகளில் பெரும்பான்மையானவர்கள் அன்றாட தொழில் செய்யும்
பெண் தொழிலாளர்களாகவும் 6 மாதத்துக்கும், 12 வயதுக்கும்
இடைப்பட்ட பிள்ளைகளாகவும் இருந்தனர். சுழியோடிகள் ஆற்றிலிருந்து
படகை மீட்டெடுத்தபோது துண்டுகளுக்கிடையில் சிக்கியிருந்த 80
சடலங்களை கண்டெடுத்தனர்.
இந்த சம்பவம் அதிகாலை 2.30 மணியளவில் பயணிகள்
உறங்கிக் கொண்டிருந்த போது இடம்பெற்றுள்ளது. படகு
மோதிய சத்தம் கேட்டு எழுந்து என்ன நடிந்தது என்பதைப்
பார்ப்பதற்காக மேல் தளத்துக்கு ஓடியதாக உயிர் தப்பிய ஒருவரான
சொஹெல் ஹூசைன் கூறினார். தன்னைப் போல மேல் தளத்துக்கு
வருவதற்காக உதவி கேட்டு மக்கள் கெஞ்சுவது தனக்கு கேட்டதாக
அவர் குறிப்பிட்டார். கிட்டத்தட்ட 200 பேர்வரை கரைக்கு நீந்தியோ
அல்லது ஏனைய படகுகளால் காப்பாற்றப்பட்டோ உயிர் காத்துக்
கொண்டார்கள்.
உத்தியோகபூர்வ அறிக்கைகளின்படி பலியானவர்களின்
உடல்கள் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து 45 கிலோமீட்டர்
தூரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற
இடத்துக்கு அருகாமையிலும் வைத்தியசாலை வளவிலும் உறவினர்கள்
தொடர்ந்தும் நடமாடிக் கொண்டிருந்தனர். இறந்த உடல்கள்
அடையாளம் காணமுடியாத விதத்தில் சிதைந்து போய் விட்டதாகக்
கூறி அதிகாரிகள் பலதை ஏற்கனவே புதைத்துவிட்டனர்.
கப்பல் திணைக்களமும், பங்களாதேச உள்நாட்டு
நீர் போக்குவரத்து அதிகார சபையும் (BIWTA)
புலனாய்வுக் குழுக்களை நியமித்துள்ளன. சேதமடையாத படகான
MV ஜொல்காபொட்
11 (MV Jolkapot 11), டாக்காவை
சென்றடைந்த போது, பயணிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன்
அதன் மாலுமியும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் கடந்த
காலத்தைப் போலவே விரும்பாத விசாரணைகள் அடிப்படையான
பிரச்சினைகளுக்கு பதில் காணும் சாத்தியம் இல்லை.
பிரதமர் செய்க் ஹசீனா இடம்பெற்ற நடந்த
பிழைக்கு "ஆழ்ந்த கவலை" தெரிவித்ததோடு, எதிர்க் கட்சியினர்
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்குமாறு அரசாங்கத்துக்கு
அழைப்பு விடுத்தனர். ஏனைய உத்தியோகபூர்வ விசாரணைகளைப்
போலவே, இந்தக் கருத்துக்களும் அரசியல் கட்சிகளின் கவலைகளும்
தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் அநியாயமான படகு விபத்துக்களைக்
குறைக்கப் போவதில்லை.
பங்களாதேசில் 230 ஆறுகள் குறுக்கும் நெடுக்குமான
படகுச் சேவைகள் இடம்பெறும் போக்குவரத்துத் துறையின்
ஒரு பிரதான அங்கமாக விளங்குகின்றன. சராசரியாக 2,200 படகுகள்
40 பிரதான ஆறுகளில் சேவையில் ஈடுபடுகின்றன. அவை எப்போதும்
அளவுக்கு அதிகமாக பாரம் சுமப்பவை. போதிய உபகரணங்களையும்,
பாதுகாப்பையும் கொண்டிராதவை. மிகக் குறைவான
பாதுகாப்பு உபகரணங்களைக் கொண்டுள்ளதோடு பயிற்சி இல்லாத
படகோட்டிகளையும் மாலுமிகளையும் கொண்டு இயக்கப்பட்டு
வருகின்றன. இருந்து கொண்டுள்ள குறைபாடான சட்டங்களும்
அடிக்கடி நடைமுறைப் படுத்தப்படுவதில்லை.
கடந்த வருடத்தில் இடம்பெற்ற எட்டு படகு
விபத்துக்களில் சுமார் 210 பேர் இறந்துள்ளனர் -இறுதியாக இடம்பெற்றது
அல்ல. மே மாதத்தில் மோசமான காலநிலையின் காரணமாக
இதே ஆற்றில் 15 கிலோ மீட்டர் தொலைவில் இடம்பெற்ற இரண்டு
விபத்துகளில் 127 பேர் பலியாகினர். கப்பல் திணைக்களத்தின்படி
1977 முதல் உயிராபத்தான 249 படகு விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதோடு
2,221 உயிர்கள் பலியாகியுள்ளன. மெக்னா ஆற்றில் அண்மைய விபத்து
ஏற்பட்ட பகுதி, குறிப்பாக பருவமழைக் காலத்தில் மோசமானதாக
இருக்கும்.
பங்களாதேஷ் அரசாங்கம் அடிப்படை பாதுகாப்பு
நிலைமைகளை அமுல் செய்வதில் தொடர்ந்தும் தோல்வி கண்டுள்ளது.
பங்களாதேச 'டெயிலி ஸ்டார்' (Daily
Star) பத்திரிகையின்படி: 90 வீதமான பயணிகளை ஏற்றிச் செல்லும்
பங்களாதேச படகுகள் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள
மிதவை மற்றும் பாதுகாப்பு உடைகள் போன்ற உயிர் காக்கும்
சாதனங்களை எடுத்துச் செல்வதில்லை என்பதை சம்பவங்கள்
காட்டுகின்றன. சில படகுகள் தீயணைக்கும் கருவி, கப்பல் லாம்புகள்,
மற்றும் பனி சமிக்கை போன்றவற்றைக் கூட வைத்திருப்பதில்லை."
தேவையான ஆவணங்களும் பயணிகள் பட்டியலும் கூட இருப்பதில்லை.
நாடு முழுவதிலும் உள்ள படகுகளை பரிசோதிப்பதற்கு
எட்டு பரிசோதகர்களே இருக்கின்றார்கள் என உயர் அதிகாரி
ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். கப்பல்கள் வெடிப்புகள் மற்றும்
ஏனைய அமைப்புத் தொகுதிகளில் ஏற்படும் வெடிப்பு அறிகுறிகளுக்காக
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நன்கு பரிசோதிக்கப்பட வேண்டும்,
ஆயினும் பரிசோதனைகள் அடிக்கடி இடம்பெறுவதில்லை. சில சந்தர்ப்பங்களில்
படகுகளை தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுத்துவதை உறுதிப்படுத்திக்
கொள்வதற்காக சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு லஞ்சம்
வழங்கப்படுவதும் உண்டு.
பட்டுவாக்காளி ராணி (Queen
of Patuakhali) என்ற பயணிகள் மாடிப் படகு மூன்று முறை
மூழ்கியது பற்றி பங்களாதேச பத்திரிகைகள் மேற்கோள் காட்டியிருந்தன.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அது காப்பாற்றப்பட்டதோடு,
அதன் பெயர் மாற்றப்பட்டு மீண்டும் உடனடியாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.
பொதுவாக ஏழை பயணிகளின் வாழ்க்கை மற்றும்
கை கால்களை பாதுகாப்பதை விட கப்பல் சொந்தக்காரர்களின்
இலாபமே பிரதானமாகியுள்ளது, இது ராஜ்ஹொங்காஷி (Rajhongashi)
படகுக்கும் நடக்காது என்பதற்கு உறுதி கிடையாது.
|