WSWS: செய்திகள்
& ஆய்வுகள்: கலை
இலக்கியம்
The Aesthetic Component of Socialism
The attitude of classical Marxism
toward art
சோசலிசத்தின் அழகியற் கூறுகள்
கலை பற்றிய பண்டைய மார்க்சிச பார்வை.
பகுதி2
A lecture by David Walsh
use
this version to print
பின்வரும் விரிவுரை 1998, ஜனவரி 9ம் தேதி, சர்வதேச
கோடை பள்ளியில் மார்க்சிசமும் இருபதாம் நூற்றாண்டின் அடிப்படைப்
பிரச்சினைகளும் என்ற தலைப்பில் இடம் பெற்ற தொடர் சொற்பொழிவுகளில்
வழங்கப்பட்டது. சிட்னியில் ஜனவரி 3 லிருந்து 10 வரை இடம் பெற்ற
இச்சொற்பொழிவுகள், (ஆஸ்திரேலிய) சோசலிச சமத்துவக் கட்சியால்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உலக சோசலிச வலைதளத்தின்
கலைத்துறை பத்திரிகை ஆசிரியரும் மார்க்சிச நிலைபாட்டிலிருந்து
தற்கால கலை மற்றும் இலக்கியம் பற்றிய பல மற்றும் விமர்சனக்
கட்டுரைகளின் ஆசிரியரும் ஆவார். இந்த விரிவுரையின் இரண்டாம்
பகுதியை நாம் இங்கே பிரசுரிக்கிறோம்.
மார்க்சியம் எதிர் "பாட்டாளிகள்
"கலாச்சாரம்
மதிப்புமிக்க ஒரு சமர்த்தியமான விவாதிக்கப்பட்ட
ஆக்கங்களாக ``இலக்கியமும் புரட்சியும்`` ``வர்க்கமும்
கலையும்`` ஆகியன இருக்கின்றன. அவை தொட்டிருக்கின்ற
அனைத்து கேள்விகளையும் கவனத்திற் கொள்வது-அப்படிச் செய்யக்கூடிய
ஒரு சூழ்நிலையில் நானிருந்தாலும் கூட-பொருத்தமற்ற
ஒன்றாகவே இருக்கும். தற்போதைய எமது வேலையின் நோக்கிற்கு
இவ்வரலாற்றுடன் பொருத்தப்பாடு பற்றியும் நான் ஏற்கனவே
திரு எவான்சின் கடிதம் சம்பந்தமாக எழுப்பியிருந்த கருத்துக்களுக்கு
பதில்களை அளிக்கும் முகமாகவும் நான் பின்வரும் பிரச்சனைகளில்
கவனம் செலுத்துவதானது உபயோகமாக இருக்கும் : ஒரு
வரலாற்று மற்றும் விஞ்ஞான நிலைப்பாட்டில் ஆன்மீக கலாச்சாரம்
உட்பட கலாச்சாரம் என்றால் என்ன? கலாச்சாரம்,
கலை முதலியவற்றிற்கு வர்க்க அளவீட்டை பயன்டுத்துவதன் எல்லைகள்
மற்றும் அதன் முக்கியத்துவம் என்ன? மனித விடுதலைக்கு கலையும்,
அழகியல் அனுபவமும் தாமே என்னென்ன பங்களிப்புக்களைச் செய்கின்றன.
எனது இப்பகுதி விரிவுரையை கீழ்வரும் விதத்தில் அளிக்க
விரும்புகிறேன். கலையின் ``பங்களிப்பை`` ஏற்றுக் கொள்ளுதல் பற்றி
இங்கு நாம் பேசும் போது, அதை ஒரு குறுகிய அர்த்தத்தில் ஒரு
நிர்ணயிக்கப்பட்ட கருத்தாக அல்லது வெளிப்படையாக சொல்வதனால்
கலைஞர்கள் தங்கள் ஆக்கங்களைச் செய்வதற்கு எமது முத்திரைகுத்திய
அங்கீகாரம் தேவை என்ற வகையில் தவறாக புரிந்து கொள்ளப்படக்கூடாது.
கலைகள் மனிதகுலத்தை நீண்ட காலமாக ஆழமாக பாதிப்புக்குளாக்கியே
வந்துள்ளன. எங்களுடைய மதிப்பீடுகளை நாம் நிறுத்திக் கொண்டாலும்கூட
அவை தொடர்ந்தும் பாதிப்பு செலுத்தியே வரும். இதிலோ அதிலோ
கலைஞர்களோ அல்லது அவர்களது பாணியிலேயோ மார்க்சிய
ஆசீர்வாதத்தை வழங்குவதே எமது நோக்கு என்ற பணி எனக்கு
மிக மோசமான எரிச்சலை உண்டுபண்ணியிருக்கிறது. எமது வெளியீட்டில்
வரும் பல கட்டுரைகளில் இப்போதும் கூட இந்தத் தன்மைகளின்
கூறுகள் சிலவற்றைப் பார்க்க முடிகிறது.
மார்க்சிய அழகியலை நாம் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளவில்லை.
இன்னொரு வகையிற் கூறுவதானால் எலிசபெத் நாடகங்களை அல்லது
14ம் 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த இத்தாலிய ஓவியங்களை
தொழிலாளர்களுக்கு சிபாரிசு செய்ய வேண்டாமா என்ற கேள்வியுடன்
நாம் தொடங்கவில்லை. குறைந்த பட்சம் கலைப்படைப்பில்
நாமும் பங்கு கொள்ள விரும்பும் ஓர் ஆர்வமும் தடையின்றி அதனது
ஆக்கங்கள் எமக்கு கிடைப்பதற்கு உரிமையுடையதாய் விஞ்ஞானிகளுக்கே
உரியதான உரிமை-பொறுப்பாகிய இந்த இயற்கைப் பிரபஞ்சத்தை
நுணுகி ஆராய்ந்து அவர்களின் கண்டு பிடிப்புகளை சாத்தியமான
அளவு பெரும்பான்மை மக்களுக்கு கொண்டு செல்ல வைக்க
வேண்டுமென்ற அடிப்படையிலேயே இந்த விரிவுரை எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
நாங்கள் மனித மனத்தால் செய்யப்பட்ட புறவய முன்னேற்றங்கள்
பற்றி பேசுகிறோம் அவை விவாதத்திற்கு அப்பாற்பட்டவை. இந்த
கலாச்சார வரலாற்றுப் பிரச்சனைகளை நாங்கள் கவனிக்கும்
விதத்தில் இவை நிறைய பாத்திப்புகளைக் கொண்டுள்ளன. திடமான
கருத்துக்களுடனும் நோக்கத்துடனுமே நாம் இவைபற்றிய மதிப்புரைகளைச்
செய்கிறோம்.
கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கறாரான ஆய்வுகளுக்கு
மார்க்சியத்தை ஒரு இழிவான மாற்றிக் கொண்டிருந்த பதிலீட்டுத்
திட்டமாக ஸ்ராலின் தலைமையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த
மத்தியதர வர்க்க தட்டுக்களின் கோட்பாட்டு மற்றும் அரசியல்
சவால்களுக்கு ஒரு பகுதியாகவாயினும் பதிலளிப்பதாகவே 1922-26
காலகட்டத்தில் கலாச்சாரம் பற்றி ட்ரொட்ஸ்கி எழுதிய அனைத்தும்
இருந்தன. நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த இந்த இரகசிய திட்டமிடுதலின்
ஒரு வடிவமாக முதலாளித்துவ மற்றும் பாட்டாளி வர்க்க புரட்சிகளை
விமர்சன பூர்வமற்ற முறையில் அடையாளப்படுத்திக் கொள்ளுதல்
இருந்தது. சோவியத் தொழிலாள வர்க்கத்தின் பணி பழைய கலாச்சார
சாதனைகள் அனைத்தையும் துறந்து ஒரு புதிய ``பாட்டாளிகள்``
கலாச்சாரத்தை அமைப்பதே என்பது போன்ற கோட்பாட்டு
விரிவாக்கங்களுடன் கையோடு கைகோர்த்தே இவை பெரும்பாலும்
நிகழ்ந்தன.
மனிதகுலத்தின் கடந்தகால கலாச்சார சாதனைகள்
நிவர்த்தி செய்ய முடியாத வகையில் (சம்பந்தமில்லாத) வர்க்கத்
தொடர்புகளால் பாதிக்கப்பட்டிருக்கிறது போன்ற மார்க்சியத்துக்கு
எதிரான கருத்துக்கள், `புரொலிட்கல்ட்` -பாட்டாளிகள் கலாச்சாரம்-இயக்கத்தினரின்
புத்திஜீவித சொத்தாக இருந்தது மட்டுமின்றி, கட்சிச் சூழலிலும் குறிப்பிட்டளவில்
ஆட்சி செலுத்தத் தொடங்கியது. உதாரணத்துக்கு ரஷ்ய முதலாளித்துவ,
நிலப்பிரபுத்துவ புத்திஜீவித சொத்தாக இருந்தது, கட்சிச் சூழலிலும்
குறிப்பிட்டளவில் ஆட்சி செலுத்தத் தொடங்கியது. உதாரணத்துக்கு
ரஷ்ய முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ புத்திஜீவித பிரதிநிதிகள் புதிய
தொழிலாளர் அரசின் குடிமக்களுக்கு என்ன சொல்ல வேண்டும்?
மரபான மார்க்சியத்தை விட 19ம் நூற்றாண்டு
ஜனரஞ்சகவாதத்தையே இவ்வகையான விவாதங்கள் எதிரொலித்தன.
தனது ``ஆன்மீக மறுபிறப்``புக்கு பிறகு 1896ல் டால்ஸ்டாய் எழுதிய
``கலை என்றால் என்ன?`` என்பதை ஒருவர் படிப்பாரானால்
அவர் இதேமாதிரியான தன்மைகளை அவதானிக்கலாம். அவர்
சமகாலக்கதையை ``தொழில் செய்யும் மனிதனின்`` ஒரு மேல்
வர்க்க கலாச்சார தன்மையுடையது என்று அழுத்தமான சொற்களில்
கண்டனம் செய்கிறார். அவர் இரண்டு வகை கலையை மட்டுமே
அனுமதிக்கிறார், ஒன்று கிரிஸ்டியன் கலை மற்றையது சாதாரண உணர்வுகளையும்
பொதுவாழ்க்கையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கலை... மக்களின்
கலை--பிரபஞ்சக் கலை. மிகுதிக்கலைகள் அனைத்தையும் பற்றி,
அவை ``இல்லாமற் செய்யப்படவேண்டும் மறுக்கப்பட்டு இழிவானதாக்கப்பட
வேண்டும்`` என்கிறார். டால்ஸ்டாய் என்ற நாவலாசியரை ஸ்ராலினின்
அதிகாரத்துவத்துடன் இணைத்துப் பார்ப்பதல்ல நோக்கம்.
நாம் சில வர்க்க, மற்றும் கருத்தியல் போக்குகள் பற்றியே
பேசுகிறோம்.
ட்ரொட்ஸ்கியின் பாங்கு கொஞ்சம் வித்தியாசமானது.
ஒருவேளை லெனினதும் கூடத்தான். 1920 அக்டோபரில்
பாட்டாளிவர்க்க கலாச்சாரம் தொடர்பாக லுனாசார்ஸ்கியால்
வழங்கப்பட்ட சாதகமாக எடுத்துக்கொண்ட விமர்சனத்திற்கு
பதிலளிக்கையில் லெனின் எழுதிய வரைவு தீர்மானத்தினை ஒருவர்
குறிப்பாகக் கருதமுடியும். அவரது முன் மொழியப்பட்ட தீர்மானம்
பகுதி கூறுவதாவது: ``மார்க்சியம் புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின்
தத்துவம் என்றவகையில் அதன் வரலாற்று முக்கியத்துவத்தை
வென்றிருக்கிறது. ஏனென்றால், முதலாளித்துவ சகாப்தத்தின் மிகவும்
மதிப்புள்ள சாதனைகளை நிராகரிப்பதற்கு அப்பால், மாறாக,
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான மனித சிந்தனை மற்றும்
கலாச்சார அபிவிருத்தியின் மதிப்பின் அனைத்தையும் உட்கிரகித்து மற்றும்
மறுபாணியாக்கியுள்ளது.``
``இயற்கை அளித்த வளத்தில் இருந்து இதுவரைகால
மனித வரலாற்றுத் தொடர்ச்சியில் அவனால் உருவாக்கப்பட்ட
கைப்பற்றப்பட்ட கற்றுக்கொள்ளப்பட்ட, நிர்மாணிக்கப்பட்ட
அனைத்தும்`` கலாச்சாரத்துக்கான வரைவிலக்கணம் என தனது
``கலாச்சாரமும் சோசலிசமும்`` என்ற புத்தகத்தில் ட்ரொட்ஸ்கி
எழுதுகிறார்.
அதன்பிறகு மனிதனின் கலாச்சாரச் சாதனையின்
இதயத்தில் இருக்கும் முரண்பாட்டைச் சுட்டிக்காட்டுகிறார்.
``கலாச்சாரம் மனிதனது இருத்தலுக்கான இயற்கையுடனான
போராட்டத்தாலும் வாழ்நிலையின் அபிவிருத்திக்காகவும் ஆதிக்கத்தை
அதிகரிப்பதற்காகவுமாக வளர்ச்சியடைந்தது என்பதை நாங்கள்
இப்பொழுது உறுதியாக நிர்மாணிக்கலாம்-கூறலாம். ஆனால்
இதே அடிப்படையில் தான் வர்க்கமும் தோன்றியது. அதாவது
வரலாற்றுரீதியான கலாச்சாரம் வர்க்கத்தன்மையுடையதாக
இருந்தது. ஆனால் இதன் அர்த்தம் நாம் கடந்தகால கலாச்சாரங்கள்
அனைத்திற்கும் எதிரானவர்கள் என்பதா?
``உண்மையில் இங்கு ஒரு ஆழமான முரண்பாடு உள்ளது.
மனித ஆதிக்கத்துக்காக, மனித முயற்சியால் உருவாக்கப்பட்ட
கைப்பற்றப்பட்ட நிர்மாணிக்கப்பட்ட அனைத்துமே கலாச்சாரம்.
ஆனால் இது ஒரு தனிமனிதன் சம்பந்தப்படாமல் ஒரு சமூக மனிதன்
சம்பந்தப்பட்ட விஷயமாக இருப்பதால், கலாச்சாரம் வர்க்க
ஒடுக்குமுறையின் அடிப்படைக்கருவியாக இருக்கிறது.``
மேலும் நாம் தொழிலாளர்களை இக்கலாச்சாரத்தை
படிக்கவும் துறைபோக உணரும்படியும் தூண்டுவோம் என்று
ட்ரொட்ஸ்கி குறிப்பிடுகிறார். இது எப்படிச் சாத்தியம்? அடிப்படையில்
வர்க்கச் சமுதாயம் என்பது உற்பத்தியை ஒழுங்கமைப்பது
என்பதை மறந்து பலர் இந்த முரண்பாடுகளில் தடுமாறுவதை
அவர் கவனத்திற்குக் கொண்டுவருகிறார்.
அவர்மேலும் தொடர்கிறார். ``இவ்வடிப்படையின்
அடிப்படை என்ன?- சமூகத்தின் வர்க்க ஒழுங்கமைப்பா அல்லது
உற்பத்திச் சக்திகளா? எந்தச் சந்தேகமும் இன்றி உற்பத்திச்
சக்திகள்தான். இந்த உற்பத்திச் சக்திகளில் மனித குலத்தின்
பொருள்வகைப்பட்ட பொருளாதார நுட்பத்திறனும் தனது இருத்தலை
உறுதிப்படுத்த அவனது வரலாற்று திறனும் தெளிவாகின்றன'' (அழுத்தம்
எனது)
நமது தற்போதைய விவாதத்திற்கு இது மிகவும்
இன்றியமையாதது என நான் நினைக்கின்றேன். கலாச்சாரத்தின்
முதன்மைச் சிறப்பு, மனிதகுலத்தின் புறநிலை சாதனை என்றவகையில்,
வரலாற்று ரீதியாக முயன்று பெற்ற அதனுடைய தேர்ச்சி மற்றும்
திறமைகளின் சடரீதியான வடிவம் என்றவகையில், அதன் வர்க்கத்தன்மைக்கு
மேலாக தீர்மானகரமானது , அதன் மாறும் தன்மை மற்றும்
சார்புரீதிக் களஞ்சியம் என்று டிராட்ஸ்கி வலியுறுத்துவதாக எனக்குப்படுகிறது.
இந்த அம்சத்திற்கு பின்னர் வர விரும்புகிறேன்.
ட்ரொட்ஸ்கியின் பார்வையில், ஒரு ஆன்மீக கலாச்சாரத்தின்
வடிவத்தைப்போல் கலையும் இவ்வகையான புறநிலைத்
தன்மையை கொண்டிருந்தது.`` தனது சுமைகளை மனிதன் கண்டு
கொள்வதற்கான வழிகளில் ஒன்றாக இது இருக்கிறது. இக்கருத்துப்படி
விஞ்ஞான தொழில்நுட்ப பாரம்பரியத்தில் இருந்து கலையின்
பாரம்பரியம் வேறுபாடுகள் கொண்டதல்ல. அல்லது
(இதேபோல்) அவை குறைந்தபட்ச முரண்பாடுகளையும்
கொண்டவையும் அல்ல. எப்படியிருப்பினும் விஞ்ஞானம்
போலன்றி கலையானது விதிகள் அமைப்புகள் மூலமாக அன்றி குழு பிம்பங்கள்
மூலமாக உலகை ``அறிதல்`` வடிவமாக இருக்கிறது.
இதுசம்பந்தமான கேள்வியை அலெக்சாண்டர்
வொரொன்ஸ்கியின் ``வாழ்வின் அறிதலாக கலை`` என்பது மிக
விரிவாக ஆராய்ந்துள்ளது. சோவியத் இலக்கிய உலகின் ஒரு முக்கிய
நபராக இருந்த வொரொன்ஸ்கி, இடது எதிர்ப்பின் அங்கத்தவராகவும்
இருந்து பின்பு ஸ்ராலின் 1937 சோசலிச எதிர்ப்பு கொலைகளில் பலியானது
பலருக்கு தெரிந்திருக்கும். நாங்கள் விரைவில் அவரது முக்கியமான
கட்டுரைகள் பரவற்றை பிரசுரிக்க இருக்கிறோம். வொரொன்ஸ்கி
எழுதினார். ``விஞ்ஞானத்தைப் போலவே கலையும் வாழ்வை அறிந்துணர்கிறது.
கலையும் விஞ்ஞானமும் ஒரே விஷயத்தையே: வாழ்க்கை, யதார்த்தம்
இவற்றைக் கொண்டிருக்கின்றன. ஆனால் விஞ்ஞானம் ஆய்வுசெய்கிறது.
கலை தொகுக்கிறது. விஞ்ஞானம் அருவமானது, கலை ஸ்தூலமானது.
விஞ்ஞானம் மனித மனத்தை நோக்கித்திரும்புகிறது கலை, அவனது
புலன் சார்ந்த இயல்பை நோக்கித் திரும்புகிறது. கருத்துக்களின்
அடிப்படையில் விஞ்ஞானம் வாழ்வை அறிகிறது. கலை ஆழ்ந்த சிந்தனை
உணர்வுகளால் வாழும் பிம்பங்களின் உதவியுடன் வாழ்வை, அறிகிறது.
உண்மையான கவிஞன், உண்மையான கலைஞன் என்பவன் கருத்துக்களை
பார்ப்பவனே``.
``பாட்டளிகள் கலாச்சாரம்`` என்ற சாதாரண
சூத்திரம் உருவாக்கியதில் இருந்து இந்த அணுகல் முறை மிக
ஆரோக்கியமான வரவேற்கத்தக்க பலாபலன்களைக் கொண்டிருந்தது
என்பது மிக இலகுவில் விளங்கும். ``இலக்கியமும் புரட்சியும்``
என்ற புத்தகத்தில், ட்ரொஸ்கி அசாதாரணமான தீர்வுவிடையாக
மார்க்சியக் கருத்துக்களை சோவியத் இலக்கிய வாழ்விற்கும்
கலைப் படைப்பின் பொதுவான பிரச்சனைகளுக்கும் பயன்படுத்துகிறார்.
கலையாக்க முறைபற்றிய எந்தவித ஆழமான
கருத்துக்களோ அல்லது படைப்பாளிக்கு எதுவித உதவிகளோ செய்யாத
சமகால ``விமர்சனக் கோட்பாடுகள்`` மாதிரியின்றி, ட்ரொட்ஸ்கி
சமகால ருஷ்ய சோவியத் இலக்கியம் பற்றிய வெவ்வேறு போக்குகள்,
வேலைகள் மற்றும் தனிநபர்கள் பற்றிய ஸ்தூலமான விவாதங்கள்,
ஓரளவு முழுமையான பார்வைக்கு தன்னை உட்படுத்தியுள்ளார்.
அவரது தொடர்ந்த ஆய்வுகள் உதாரணத்திற்கு அலெக்சாண்டர்
புளொக், போரிஸ் பில்நியாக், மற்றும் விளாமிடிர் மயாகோவ்ஸ்கி
பற்றிய எழுத்துக்கள், ஒருவர் அவர்களின் கலைமுயற்சிகளில் பழக்கம்
உடையவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவருக்கு
இவை மார்க்சிய விமர்சனத்துக்கான சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும்.
புத்தகம் முழுவதும் ட்ரொட்ஸ்கியின் எழுத்துப்பணி
அராஜகத்தன்மை கொண்டதாகவோ அல்லது சுயம்மழிப்பாகவோ
தாழ்விரக்கம் கொண்டதாகவோ இல்லை. தான் நினைப்பதை
அவர் எந்த சுத்துமாத்துக்களும் இன்றி அழுத்தமாக, ஆழமாக
எடுத்துக் கூறுகிறார். அவர் நிறைய வேலைகளை ஒரே நேரத்தில்
கவனித்து வந்தார். கட்சியங்கத்தவர்களுக்கும் சோவியத்
தொழிலாளர்களுக்கும் கலாச்சார மட்டத்தை உயர்த்துவதற்கு
முயன்றுவந்தார். கலாச்சாரம் பற்றி பிழையான குறுகிய கருத்துக்கள்
என்றுதான் நினைத்ததற்கு எதிராக வாதிட்டு வந்ததுடன், கலைத்துவ
சமூக முன்னோக்கு பற்றிய உரையாடலில் கலைஞர்களையும் அவர்கள்
தாமாகவே விரும்பி வந்து பங்குபற்றும் வண்ணம் ஊக்குவித்தும்
வந்தார்.
தனதும் மார்க்சியக் கட்சியினதும் கடமையாக
தான் என்ன நினைக்கிறார் என்பதை அவர் பின்வருமாறு கூறினார்.
``கட்டாயமாகவும் நேரடியாகவும் கட்சி வழிகாட்டும் சில செயற்களங்கள்
உண்டு. அது ஒத்துழைத்தல் மட்டும் செய்கின்ற வேறு சில செயற்களங்களும்
உண்டு. இறுதியாக கட்சி தன்னையே திசை முகப்படுத்த மட்டும்
செய்யும் செயற்களங்களும் உண்டு. கட்சியின் உத்தரவு தேவைப்படாத
ஒன்றாக கலைபற்றிய செயற்களம் இருக்கிறது. கட்சி அதை
பாதுகாக்கவோ அதற்கு உதவவோ முடியும், முடிய வேண்டும்.
ஆனால் அதை நேரடியாக இன்றி மட்டுமே வழிநடத்த முடியும்``
மார்க்சிய வழிமுறை என்ன செய்யலாம் என்பது பற்றி அவர் குறிப்பிடுகையில்,
``விமர்சன விளக்கங்களின் பாதை வழியாகவே பெரும்பான்மையான
முற்போக்கு தன்மைகளுக்கு உதவமுடியும். `` என்கிறார். எனது
கருத்துப்படி இந்த ``விமர்சன விவாதங்களை`` உள்ளடக்கியதாக
இருக்கிறது அவரது ``இலக்கியமும் புரட்சியும் ``.
இன்று நாம் எடுத்துக்கொண்ட விஷயத்துக்கும்
திரு எவான்சின் உடனான எமது முரண்பாடுகளுக்கும் எம்மை
அழைத்துவரும் மார்க்சிய அழகியலுக்கும் ``பாட்டாளிகள் கலாச்சாரம்``
என்ற பல்வேறு கோட்பாடுகளுக்கும் இடையிலான முரணுக்கு
நான் திரும்பிவர விரும்புகிறேன்.
இங்கு முக்கிய பிரச்சனையாக இருப்பது என்ன?
அநேகமாக இத்தருணத்தில் கொஞ்சம் முறைமையான தன்மையில்
இருந்து இலகுவான முறையில் பேச விரும்புகிறேன்.
கலையில் நாங்கள் மதிப்பது என்ன? வர்க்கப்போராட்டத்துக்கு
ஒரு யதார்த்த முன்னோக்கை வழங்குவது மட்டுமே கலையின் பங்காக
இருப்பதாக திரு எவான்சும் பலரும் குறிப்பிடுகிறார்கள். அது ஒரு
மார்க்சிய கட்சியின் சரியான பணியே அன்றி கலைஞனுடையதல்ல
என்பதை முதலில் கவனிக்க வேண்டும். எனது பார்வையில் அவர்
கலையில் அதிகமாகவும் குறைவாகவும் என்ற இரண்டையுமே எதிர்பார்க்கிறார்.
மேலும் நவீன வர்க்கப் போராட்டத்துக்கு விளக்கமாக இருப்பதே
கலையின் நோக்கமென்றால், பழைய கலாச்சாரம் என்ற
ஒன்று என்னாவது? அது பற்றிக் கேட்கவே எனக்கு பயமாக இருப்பதை
நான் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். 1848 அல்லது 1871
அல்லது 1917-அந்த எல்லைத் திகதியாக நீங்கள் முடிவெடுத்தது
எதுவாக இருப்பினும்- அதற்கு முதல் எழுதப்பட்டனவெல்லாம்
குப்பைக் குவியலுக்குள் போடப்படக் கூடியதாக வெளிப்படையாய்
ஒப்படைக்கப்பட வேண்டுமா? அருவமாகவோ அல்லது வேறுவிதமாகவோ
இருக்கும், பூச்சோவியம் என்னாவது? அல்லது கருவி இசை, அல்லது
கட்டிடக்கலை மற்றும் இவைபோன்ற பல்வேறு கலை வடிவங்கள்
பாட்டாளிகள் போராட்டத்தில் எவ்வித பயன்பாட்டு மதிப்பும்
அற்றவையா? அவையும் ஓட்டை உடசல்களுடன் போடப்பட
வேண்டுமா? இம்மாதிரியான சிந்தனை ஒருவரை எங்கே இட்டுச்செல்லும்
என்பது எமக்கு நன்றாகவே தெரியும் அதனால் நாம் அதை
மறுதலிக்கிறோம்.
கடந்த கலாச்சாரம் பற்றிய பிரச்சினைக்கு மீண்டும்
வருவோம், கோமர் தான்தே அல்லது சேக்ஸ்பியரை மக்கள்
ஏன் தொடர்ந்து வாசிக்க வேண்டும்? 1990ல் வெளிவந்த இலியாட்டின்
புதிய ஆங்கில மொழி பெயர்ப்பானது ஒரு முக்கியமான புத்தி ஜீவித
நிகழ்வாக கருதப்பட்டது. கோமரது இவ்வாக்கம் ஏறத்தாழ
இரண்டாயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முந்தியது என்று அதுபற்றிய
கல்வியாளர்கள் கணிப்பிட்டிருக்கிறார்கள். ஆசிரியர் நிகழ்ந்ததாகக்
குறிப்பிடும் சில பகுதிகளான இறுதியான பத்தாவது ஆண்டு ட்ரொஜன்
சண்டை இலியாட்டின் கதாநாயகன் அகிலசின் மூர்க்கத்தை மையப்படுத்தியிருக்கிறது.
அது கிரேக்க படைகளுக்கு ஒரு மோசமான விளைவை எற்படுத்துவதாதக
இருந்தது. ஒருவருக்கெதிரான இன்னொருவருடைய சதியிலும் ஒரு
இராணுவத்தின் கதாநாயகர்களுக்கு எதிராகவோ சார்ந்தோ
கிரேக்கக் கடவுள்கள் தலையிட்டன. அசாத்தியமான அனைத்து
நிகழ்வுகளும் நடந்தேறின. ஆயிரக்கணக்கான அதன் புதிய பிரதிகள்
விற்றுத்தள்ளப்பட்டன. இப்புத்தகங்களை வாங்கும் மக்கள் சார்பில்
இது அவர்களின் ஒரு சாதாரண பற்றாக மட்டும் விளக்கப்படுகிறதா?
அல்லது பழைய கிரேக்க வரலாற்றிலும் அதன் பகுதிகள் மீதான
புராணக்கட்டுக்கதையிலும் கொண்ட விளக்க முடியா ஆர்வத்தின்
விளைவுகள் மட்டும்தானா? நான் அப்படி நம்பவில்லை. அழகியல்
மீதான இவ் அதி தீவிர பயன்பாட்டுவாத, அணுகுமுறையானது கலையின்
நிரந்தரமான மதிப்பு பற்றியோ அதன் சக்தி பற்றியோ
எதையுமே எமக்கு சொல்லவில்லை என்பதை உணர்த்தவே இவ்வுதாரணத்தை
இங்கு நான் தந்தேன்.
ஏற்கெனவே 1924 மேயில் நிகழ்ந்த கட்சி விவாதத்தில்
இது ஒரு முக்கிய விஷயமாக எடுக்கப்பட்டிருந்தது. மிக திறமையாக
ட்ரொட்ஸ்கி அதில் தலையிட்டிருந்தார். அதுவே வர்க்கமும்
கலையும் என்ற ஆக்கம். அன்று ட்ரொட்ஸ்கியின் குறிப்புகளுக்கு
முன்பு அன்றைய போல்ஷேவிக் தவைரான லியோடர் ராஸ்கோல்னிகோவும்
பேசியிருந்தார். அவர் தனது குறிப்புகளில் தான்தேயின் தூய இன்பியல்
(Divine Comedy)
நவீன வாசகனுக்கு மதிப்புடையது ஏனென்றால் அது ஒரு குறிப்பிட்ட
காலத்து ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் மனோவியல் பற்றி அவன் புரிந்து
கொள்ள உதவுகிறது என்ற விஷயத்தையும் சேர்த்திருந்தார்.
ட்ரொட்ஸ்கி தனது குறிப்பில், கலையின் வேலைப்பாடுகள்
பற்றிய இந்த அணுகுமுறை கலையின் வேலைப்பாடுகளை எவை ஆக்கின
என்பதை கவனிக்காமல் விடுகிறது என்று குறிப்பிட்டார். ராஸ்கோலினிகோவ்
தூய இன்பியலை (Divine Comedy)
ஒரு வரலாற்று ஆவணமாக மட்டுமே ஆக்கினார். ஒருவனுக்கோ
ஒருத்திக்கோ பாதிப்பை எற்படுத்துவதாக அல்லது தாக்கத்தை
விளைவிப்பதாக அல்லது தாழ்வுபடுத்துவதாகவோ தான் வாசகருடன்
அல்லது பார்வையாளருடன் ஒரு கலைஆக்கம் நேரடியாக பேசியாக
வேண்டும் என்பதை ட்ரொட்ஸ்கி அவதானித்திருந்தார். வரலாற்று
அணுகுமுறை உபயோகமானதாக இருந்தாலும் அது அழகியல்
முறையுடன் குழப்பிக்கொள்ளப்படக் கூடாது. 14ம் நூற்றாண்டில்
எழுதப்பட்ட ஒரு புத்தகத்திற்கும் ஒரு நவீன வாசகனுக்கும் எப்படி
நேரடியாக ஒரு அழகியல் உறவு இருக்க முடியும்? என்று ட்ரொட்ஸ்கி
கேட்டார். அதற்கவர் பின்வருமாறு பதிலளித்தார். ஏனெனில் ஒரு
சமூகத்தில் உடனடிச் சமூக நிலைமைகளில் பாரிய மாறுபாடுகள்
இருப்பினும், சில பொதுத் தன்மைகளும், இருக்கின்றன. கலைத்திறமை
என்பது இவ்வகை பொதுத்தன்மைகளையும், அவை தூண்டும் சிந்தனைகள்
மற்றும் உணர்வுகளையும் பதிவு செய்யக் கூடியதாகவும் அவற்றை
நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அக்கலை
தோற்றக் காலத்துக்கு நாம் பிந்தியிருப்பினும் அவை எம்முடன்
நேரடியாக பேசுவது போன்று நாம் காணக் கூடியவாறு அழிக்க
முடியாத பிம்பங்களாக மாற்றுகின்றன.
மரணம் பற்றிய பயம் என்ற உதாரணம் வழியாக
ட்ரொட்ஸ்கி பேசினார். கலை சகாப்தம் மற்றம் சமுதாயச்
சூழல்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப இப்பயத்தின் தோற்றங்களும்
மாறிக் கொண்டே வந்துள்ளன என்பது உண்மைதான். இருப்பினும்
இது பற்றி சேக்ஸ்பியர், பைரன், கோதே, ஏன் பழைய ஏற்பாட்டு
தோத்திரப் பாடல்களில் சொல்லியவை இன்று கூட எம்மை பாதிக்கின்றன.
தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
நாங்கள் ஏன் புஸ்கினை தொழிலாளர்களுக்குச்
சிபாரிசு செய்கிறோம்? என்று அவர் கேட்டார். காலநிலை மாற்றத்திற்கு
எதிராக எவ்வாறு ஒரு பிரபுவும் அடிமை உடைமையாளனும் எவ்வாறு
போராடினான் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
என்பதற்காகவா? நிச்சயமாக இல்லை. இச்சமூகக் காரணியும்
இருக்கிறது என்பது உண்மைதான். ''ஆனால் புஸ்கின் தன் உணர்வுகளுக்கு
கொடுக்கும் வெளிப்பாடு-கலைத்துவத்தில் ஊறிய தன்மை
பொதுவாக மனோவியலுடனும் பல நூற்றாண்டு அனுபவங்களுடனும்
பின்னி இறுகிய தன்மை அதை சமகாலத்திலும் நிலைத்து நிற்க வைக்கிறது....
ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாழ்க்கையை வெளிப்படுத்தும் முறையிலேயே
தான்தேயின் கலைத்துவ முக்கியத்துவம் இருக்கிறது என்று எனக்கு
யாரும் சொல்லும் பொழுது அது அவர்களது இயலாமையைப்
பரப்புவதாகவே இருக்கிறது.''
இங்கு அனைத்தும் முக்கிய புள்ளியாகவே இருக்கிறது.
13ம் 14ம் நூற்றாண்டு புளோரன்ரன் குட்டி முதலாளி என்பதற்காக
நாம் தான்தேயை ரசிப்பதில்லை. அன்றைய சூழ்நிலைமைக்கு மத்தியில்
ஒரு குறிப்பிடத்தக்க அளவில் அவர் முற்போக்காக இருந்தார்
என்பதற்காகத்தான் நாம் அவரை இரசிக்கிறோம். கலையின்
வரலாற்று ரீதியான வர்க்கத் தீர்மானமுடைய காரணிகளுடன் சேர்த்து
கலையில் பாரிய முறையில் காலமாற்றத் தன்மையான புறநிலை உண்மையுடைய
ஒரு சார்பியல் பிரபஞ்சக் கூறும் உண்டு. கலை தன்கூறுகளில்
ஒரு முழு உண்மையின் விதைகளையும் கொண்டிருக்கிறது என்பது
ஒரு அடிப்படையான விஷயம். இது எமக்கு மிக முக்கியத்துவம்
உடையதாகவும் மிக்க ஆர்வம் உடையதாகவும் உள்ள ஒன்று.
ஏன் இதுதான் பாரிய ஆக்கத்தின் குணாம்சம் என்று கூட ஒருவர்
வரையறுக்கலாம் . அதாவது இது எம்மை பாதிப்பதை மட்டும்
செய்யவில்லை. அதற்கும்மேலாக அது தன் வர்க்க சார்புடன்
தன் உடனடித்தன்மையுடன் உடனடியாக வேகமாக விசயங்களையும்
இவை உள்வாங்கினாலும் கூட, தன் காலத்தின் அனுபவத்தை ஒரு மிகப்பெரிய
கலை உச்சிக்கு இட்டுச்செல்கிறது. கோமரின் கதாபாத்திரமான
கிலஸ் - அவனது தாய் கடல்தேவதை என்று நம்புவதாக எடுத்துக்
கொள்கிறோமோ இல்லையோ- இன்றும் எம்மை பாதிக்கின்றான்.
அவனது மூர்க்கம், அவனது கர்வம், அவனது பொறாமை ஆகியவற்றின்
கலைத்துவமான வர்ணணைகள் மனிதகுலத்தில் ஏதோ உண்மையான
ஒன்றை பிரதிபலிப்பதாக இன்றும் தொடர்ந்து எம்மை பாதிப்புக்குள்ளாக்கி
வருகின்றது.
இவையெல்லாம் சேர்ந்து வர்க்க ஆய்வின் வர்க்க
விமர்சனத்தின் பிரயோகமானது எந்த மதிப்புமற்றது என்பதையா
சொல்லவருகின்றது? நிச்சயமாக இல்லை. எந்தக் கலை பற்றிய
விமர்சனத்திலும் இது முக்கிய பகுதியாக இருக்கிறது. ஏனெனில் அது
அந்த படைப்புக்கு பிறப்புக் கொடுத்த ஒரு சமூக யதார்த்தத்தை
பிரதிபலிக்கிறது. ஒரு குறிப்பிட்ட தருணத்தில் கலைத்துறையில் ஒரு குறிப்பிட்ட
போக்கு ஏன் எப்படி தோன்றியது -என்ன சமூகச்சக்தி அல்லது
யதார்த்தம் அதற்கான மனோவியல் தாக்குதலை ஒரு கலைஞனுக்கு
தன் கலையை தோற்றுவிக்கத் தூண்டியது என்பதை மார்க்சியம்
மட்டும் தான் விளக்க முடியும். கலைப்படைப்பு என்பது எப்பொழுதும்
மிகவும் சிக்கலான ஒன்றாகும் என்றும் மேலும் ட்ரொட்ஸ்கி விளக்குகிறார்.
கலைக்கு வெளியில் தோன்றும் புதிய ஒரு தூண்டுதலின் ஆதிக்கத்தில்
கலைப்படைப்பு என்பது பழைய வடிவங்களை உள் வெளியாகத் திருப்பும்
மிகவும் சிக்கலான ஒன்று. கலையானது தனக்குத்தானே இரைதரும்
ஒரு விலக்கப்பட்ட கூறல்ல மாறாக அது சமூக மனிதனின் செயல்-விஞ்ஞானம்
மனோதத்துவம் அல்லது எவ்விதமானதுமான வேறு சமூக நனவின்
வடிவத்தைப்போலவே.
ஆனால் ஒரு குறிப்பிட்ட ஆக்கம் எந்தச் சமூக
வரலாற்றுச் சூழ்நிலையில் உருவாகியது என்பதை தெளிவாக்கும்
வேலையை ஒரு அழகியல் நோக்கில் அதனைக் கணிப்பிடுவதுடன்
குழப்பிக் கொள்ளக் கூடாது -இதுதான் அடிக்கடி எமக்கு நடக்கிறது.
ஒரு படத்தயாரிப்பாளருடைய, ஒரு நாவலாசிரியருடைய வர்க்க
வெளித்தோற்றத்தை தெளிவாக்கிக் கொள்வதுடன் வேலை முடிந்து
போய்விடுவதில்லை. வெளிப்படையாக சொல்வதானால் அது
ஒரு பாதி வேலை கூட இல்லை. இந்த வகையான அணுகுமுறையை
தூண்டுவதென்பது இலகுவான விஷயமில்லை என்பதை என்னால் விளங்கிக்
கொள்ள முடிகிறது. இது ஒரு அனுபவமற்ற, முதிர்ச்சியற்ற ஒருவரின்
உற்பத்தியே அன்றி தீய நோக்கம் உடையவரது அல்ல. ஆனாலும்
நாம் கட்டாயமாக, இது இன்னும் மார்க்சிய அழகியல் ஆகிவிடவில்லை
என்ற விஷயத்தை கூறியேதான் ஆகவேண்டும்.
ஒரு படைப்பு எழுப்பிய புதிய சிந்தனைகளையும்
உணர்வுகளையும் ஒரு உண்மையான அழகியல் அனுபவத்தின் உள்ளடக்கத்தையும்
ஒரு முரண் நிலையிைல் எடுத்துக் கொள்ளும் முயற்சியும் அவதானிக்கக்
கூடியதாக இருக்கிறது. இங்கு நான் ப்ரெக்டனின் குறிப்புடன்
உடன்படுகிறேன். ``ஒரு ஆக்கத்தின் மீதான கவர்ச்சியின் இரகசியம்
பற்றிய விசயத்தின் ஆழத்தையும் அதன் இதயத்தையும் வெளியிடாத
கலைபற்றிய எவ்விதமான ஊகங்களுமே பயனற்றவை.`` ஆக்கத்தின்
எவ்வகையான மனோவியல் இயக்கம் எமக்குள் தூண்டப்பட்டது
அல்லது தூண்டப்படாமல் விடப்பட்டது?
தொடரும்...
|