WSWS :செய்திகள்
& ஆய்வுகள் : கலை
விமர்சனம்
Deepa Mehta calls off production of her film Water
தீபா மேத்தா வாட்டர் திரைப்படத் தயாரிப்பை
நிறுத்தினார்
By Richard Phillips
10 April 2001
Use
this version to print
இந்தியாவை பிறப்பிடமாக கொண்ட தீபா மேத்தா,
கலைச் சுதந்திரத்தை வெளிப்படுத்தலில் முக்கிய பின்னடைவால்
வாட்டர் (தண்ணீர்) படத் தயாரிப்பு தொடர்வதைக் கைவிடுவதாக
அறிவித்ததார். அவரது திரைப்படம் இந்தியாவில் விதவைகள் படும்
துயரத்தைப் பற்றியதாகும். இந்தியாவில் கூட்டரசாங்கத்தில்
முதன்மை வகிக்கும் பிஜேபி யுடன் தொடர்புடைய இந்து அடிப்படைவாதிகளால்
ஏற்பாடு செய்யப்பட்ட வன்முறையான அரசியல் பிரச்சாரத்தினால்
கடந்த ஆண்டு திரைப்படம் எடுக்கமுடியாமல் தடுக்கப்பட்டதைத்
தொடர்ந்து, மேத்தா வேறு எங்காவது படத்தை எடுப்பதற்கான
எண்ணத்தை கைவிடுவதாக கடந்த ஆண்டு இறுதியில் கனடிய செய்தி
நிறுவனம் ஒன்றிடம் கூறினார்.
இந்த முடிவு மற்றும் "முழுமையற்றுவிட்டதை
உணர்வது" தொடர்பாக அவர் வருத்தப்பட்ட போதிலும்,
தான் கரோல் ஷீல்ட்ஸால்(Carol
Shields) எழுதப்பட்ட நகைச்சுவை
காதல் காவியமான காதல் குடியரசு (The
Republic of Love) பற்றிய படத் தயாரிப்பில்
கவனம் செலுத்தப் போவதாக மேத்தா குறிப்பிட்டார்.
திரைப்படத்தைக் கைவிடுவது என்பது கடினமான
முடிவு என்பதில் சந்தேகமில்லை. அத்திரைப்படம் இந்தியாவில்
எடுக்கப்பட்ட முப்படங்களுள் (தீ மற்றும் பூமி ஆகியன முதல் இரண்டு
ஆகும்) மற்றொன்று ஆகும். இது 1930 களில் இந்துக் கோவிலில்
விதவைகள் குழு எதிர்கொள்ளும் சமூகக் கட்டுப்பாடுகளையும்
வறுமையையும் பற்றிய படம்
இந்திய நடிகர்கள் ஷபனா ஆஷ்மி, நத்திதா தாஸ் மற்றும்
அக்ஷய் குமார், மற்றும் திறமை மிக்க சர்வதேச தொழில் நுட்ப
கலைஞர்கள் ஆகியோரை ஒன்று சேர்த்த வாட்டர் படப்பிடிப்பு
கடந்த ஆண்டு பிப்ரவரியில் நிறுத்தப்பட்டது. படத் தயாரிப்பு
தொடக்கத்தில் இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில்
ஜனவரி 3, 2000 அன்று தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
இந்து பேரினவாத அமைப்புக்கள் 1996 மற்றும் 1999 களில் தீ மற்றும்
பூமி ஆகிய படங்கள் திரையிடப்பட்டபோது திரையிடலைத் தடுக்க
முயற்சித்தன. அவை இப் புதிய படத்தின் கதை- வசனங்களைப் படிக்காமல்
அதனை "இந்து விரோத " மற்றும் " இந்தியா
விரோத " படம் என்று பிரகடனம் செய்தன.
படத்தயாரிப்பின் முதல் நாள் அன்று மாநில பிஜேபி
அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்பட்ட குண்டர்கள் கும்பல்
ஒன்று, வீதிகளை ஆக்கிரமித்தது மற்றும் உள்ளூர் போலீசாரால் கண்டுகொள்ளப்
படாதிருந்தது, ஆயிரக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள திரைப்பட
அரங்கை அழித்து சேதப்படுத்தியது. உத்திரப்பிரதேச அரசாங்கம்
குழப்பத்துக்கு மேத்தாவே காரணம் என்று பொய்க்குற்றம்
சுமத்தி, இயக்குநரையும் சர்வதேச பணியாளர்களையும் மாநிலத்தை
விட்டு வெளியேறுமாறு ஆணையிட்டு, படத் தயாரிப்பைத் தடைசெய்தது.
அடுத்தடுத்த வாரங்களில் இந்து வெறியர்கள் தீபா
மேத்தா, இந்தியப் புத்தகத்தில் இருந்து படக் கதை எழுத்துத்
திருட்டு செய்வதாகவும், இந்தியப் பெண்களை விலைமாதர்களாக
காட்டுவதாகவும், காந்தியை எதிர்ப்பதாகவும் கூறியதுடன்,
அவரது படைப்பு இந்துத்துவத்திற்கு எதிரான கிறிஸ்தவ சதி என்றும்,
மற்றும் இந்தியாமீதான மேற்குலகின் ஒடுக்குதலை அவர் ஆதரிப்பதாகவும்
கூட பொய்யாகக் குற்றம் சுமத்தப்பட்டார்.
இத் திரைப்படத் தயாரிப்பாளர் அவதூறுகள் மற்றும்
மரண அச்சுறுத்தல்கள் கூட விடுக்கப்பட்டார். துல்லியமாக
விபரித்தால் திரைப்படத்தைத் தடுப்பதற்கான இப்பிரச்சாரம்
"குண்டர்களால் திணிக்கப்பட்ட தயாரிப்பின் முன்னதான தணிக்கை
"எனலாம். ஆனால் பணம் விரயமானதாலும் மற்றும் செய்தி
சாதனங்களின் அறிக்கை இந்திய அரசாங்கம் படத்தயாரிப்பிற்கான
அனுமதியை திரும்பப் பெறத் திட்டமிட்டதாகவும், அவர் பின்னர்
படத்தயாரிப்பைத் தொடர்வதற்கு ஊறுதி பூண்டு இந்தியாவை விட்டுச்
சென்றதாகவும் சுட்டிக் காட்டின.
அடுத்து வந்த மாதங்களில் அவர் இந்தியாவிற்கு
வெளியே பொருத்தமான இடங்களைப் பார்க்க முயற்சித்தார்.இலங்கையிலும்
தென் ஆபிரிக்காவில் டர்பனிலும் சாத்தியக்கூறுகள் இருந்தன.பெரும்
திரைப்படக் கம்பெனிகள் மற்றும் சர்வதேச விநியோகஸ்தர்கள்
போன்றோரிடமிருந்து நிதி ஆதாரத்தைப் பெறமுடியாத மேத்தா
போன்ற சுதந்திரமான படத் தயாரிப்பாளர்கள், அவரது செலவையும்
பணியாளர்களையும் மறு ஒழுங்கு செய்யவும் வேலையைத் திரும்ப
ஆரம்பிக்கவும் குறிப்பிடத்தக்க அளவு நிதிரீதியான கஷ்டங்களை எதிர்
நோக்குவர். இந்திய வியோகஸ்தர்கள் படத்திற்கு ஆதரவளிக்க
மறுக்கையில் அல்லது அது முடியும் பொழுது அதனைத் திரையிட
உறுதி கொடுக்க மறுக்கையில், தான் மேற்கொண்டு முன் செல்லமுடியாது
என்ற முடிவுக்கு மேத்தா வந்தார்.
ஏன் அடிப்படைவாதிகள் மேலாதிக்கம் செய்தனர்?
தற்கால திரைப்படத் தயாரிப்பாளர்களிடம் மிகவும்
அரிதாகக் காணப்படும், துணிவுடனும் உறுதியுடனும் தீபா மேத்தா
படத்தை விடாப்பிடியாய் பேணுகின்ற அதேவேளையில், இது எப்படியிருந்தபோதும்
அடிப்படைவாதிகளால் மேலாதிக்கம் செய்ய முடிந்தது. இதன்
ஒரு முக்கியமான காரணி பத்திரிக்கை செய்தி சாதனங்களாகும்.
இந்த சம்பவங்களில் அவை இழிவான பாத்திரத்தை ஆற்றின. அவை
எடுத்த எடுப்பிலிருந்தே படத்தைப் பற்றி அதிக பட்ச குழப்பத்தை
உண்டு பண்ண முயற்சித்தன. மேத்தாவை "இந்திய
விரோத" விளம்பரப்பிரியராக காட்டின. பேரினவாதிகளால்
உற்பத்தி செய்யப்பட்ட எல்லா அவதூறுகளையும் பொய்களையும்
பரப்பின. வாட்டர் தயாரிப்பாளரான டேவிட் ஹாமில்டன் எதிர்
கருத்து கூறிய பொழுது, ஒரு மூத்த பத்திரிக்கையாளர் கடுகடுப்புடன்
"பொய் சொல்வதற்கு உரிமை இருக்கிற ஜனநாயகம்
இதுதான்" என்றார்.
மேத்தாவின் பின் அணிதிரளவும் கருத்துச் சுதந்திரத்தைப்
பாதுகாக்கவும் முக்கிய இந்திய படத் தயாரிப்பாளர்கள் மறுத்தமை
இன்னொரு முக்கிய காரணி ஆகும். அபர்ணாசென், மிர்ணாள் சென்
ஷ்யாம் பெனகல் மற்றும் இன்னும் ஓரிரு பிரபலமானவர்களைத்
தவிரபெரும்பான்மையான இந்திய தயாரிப்பாளர்கள் அவரது துயரத்தை
அலட்சியம் செய்தனர். மிகவும் காதடைக்கும் அமைதி பாலிவுட்,
பாம்பேயில் இருந்து வந்தது. பல கோடி டாலர்கள் கொண்ட
திரைப்படத் தொழில்துறையில் இரண்டு நடிகர்கள் மற்றும் ஒரு
இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் மட்டுமே மேத்தாவை
தொடர்பு கொள்ளவும் தங்களது ஆதரவை வழங்கவும் அக்கறை
கொண்டனர். பாலிவுட்டின் எஞ்சிய பகுதி ஒன்றும் கூறாமல்
என்றென்றைக்குமாய் மானக் கேடாய் நின்றது.
சிலர் அவரை வெளிநாட்டு படத் தயாரிப்பாளர்
என்ற அடிப்படையில் பாதுகாக்க மறுத்தனர். மற்றவர்கள் தாங்கள்
பிறர் காரியத்தில் தலையிட்டால் தங்களது சொந்த முன்னேற்றம்
பாதிக்கப்படலாம் என்ற பயத்துடன் வாயை மூடிக் கொண்டனர்.
அவர்களின் நியாயம் எதுவாக இருப்பினும் பாலிவுட் படத் தயாரிப்பாளர்களின்
அமைதி இந்து தீவிரவாதிகளைப் பலப்படுத்தியது.
இருப்பினும் இந்தியாவின் காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட்
கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் மிகவும் குறிப்பிடத்தக்க பாத்திரத்தை
ஆற்றின. அடிப்படைவாத குண்டர்கள் படப்பிடிப்பு அரங்குகளை அழித்த
போது, படத் தயாரிப்பாளரை அச்சுறுத்தி மற்றும் தணிக்கை செய்யக்
கோரியபோது அல்லது அவரது படைப்பை கட்டுப்படுத்தக்
கோரியபோது, இந்து பேரினவாதத்தை எதிர்ப்பதாகக் கூறிக்
கொள்ளும் இவ்வமைப்புக்கள் சுண்டு விரலைக்கூட உயர்த்த மறுத்தன.
மத்திய பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அரசாங்கமும்
மேற்கு வங்காளத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)
ஆட்சியும் மாற்று படப்பிடிப்பு இடங்களை வழங்க முன்வந்தன
ஆனால் அடிப்படைவாதிகளால் மேற்கொண்டு சரீரரீதியான தாக்குதல்கள்
எதுவும் நடந்தால் அதனைத் தடுப்பதற்கான எந்த உத்தரவாதங்களையும்
வழங்க முன் வரவில்லை. அவர்களிடம் மிகுதியான வளங்கள் இருந்தபோதிலும்,
மேத்தாவின் பாதுகாப்பு தொடர்பாக எந்த பாதுகாப்பு பிரச்சாரமும்
ஏற்பாடு செய்யப்படவில்லை அல்லது பிஜேபியின் அவதூறுகளுக்கு
விடை அளிக்க எந்த முயற்சியும் செய்யப்படவில்லை.
தீபாமேத்தாவுக்குப் பின்னால் அவருக்கு
ஆதரவாக சர்வதேச பிரச்சாரத்தை முன்னெடுத்த ஒரே ஒரு
அமைப்பு உலக சோசலிச வலைதளம் மட்டும் தான். பிப்ரவரி
28, 2000 அன்று வெளியிட்ட அறிக்கையில், உலக சோசலிச வலைதளம்
இந்தியாவிலும் சர்வதேச ரீதியாகவும்--இந்தியாவில் தீபாமேத்தா
படம் எடுப்பதற்கான உரிமையை பாதுகாக்குமாறு நிரைப்படத்
தயாரிப்பாளர்களுக்கு, மாணவர்களுக்கு மற்றும் தொழிலாளர்களுக்கு
அழைப்பு விடுத்தது. அறிக்கையானது, இனவாத பிரச்சாரமானது,
இந்து மத அடிப்படையிலான தேசியவாத அரசு சித்தாந்தத்தைத்
திணித்து, நாட்டை சாதி மத அடிப்படையில் பிளவு படுத்தவும் முழு
இந்திய மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதும் அவர்களின் வாழ்க்கைத்
தரங்களின் மீதும் தாக்குதல் தொடுக்கவும் பிஜேபி மற்றும் ஏனைய
வலதுசாரி சக்திகளால் எடுக்கப்படும் முயற்சிகளுடன் தொடர்புடையது
என்று அந்த அறிக்கை விளக்கியது. மேத்தாவுக்கு எதிரான அடிப்படைவாதிகளின்
பிரச்சாரமானது இந்தியாவிலும் மற்றெங்கிலும் பரந்த அளவிலான
பிரச்சாரத்தினால் சவால் செய்யப்படாது விடப்படுமாயின், அது
பாரதூரமான விளைவுகளைக் கொண்டிருக்கும் என்று அது எச்சரித்தது.
அடுத்தடுத்த வந்த மாதங்களில், கென் லோச்
மற்றும் மோச்சன் மக்மால்பாப் (Ken
Loach and Mohsen Makhmalbaf) போன்ற சர்வதேசரீதியாக
புகழ் பெற்ற இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், கலைஞர்கள்
மற்றும் திரைப்பட விழா ஏற்பாட்டாளர்கள் உலக சோசலிச
வலைதளத்தின் வேண்டுகோளுக்கு செவிமடுத்தார்கள்.
அதேபோல ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் ஜார்ஜ் லூகாஸ் மற்றும்
பரிசுகள் வென்ற ஆசிரியர்கள் பாப்சி சித்வா மற்றும் மேத்தாவை
நடத்துவது தொடர்பாக சுயேச்சையாய் எதிர்ப்பு தெரிவித்த
தஸ்லிமா நஸ்ரீன் ஆகியார் விதிவிலக்கானவர்கள்.
முக்கிய ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க
திரைப்படத் தயாரிப்பாளர்கள், அடிப்படை வாதிகளின் பிரச்சாரத்தால்
அடிப்படைக் கொள்கைகளை -- மேத்தாவை பாதுகாக்க வேண்டிய
தேவை மற்றும் மதம் அல்லது அரசாங்க கட்டுப்பாடுகளில்
இருந்து சுதந்திரமாக தங்களின் வேலையை செய்வதற்கு அனைத்து
கலைஞர்களுக்கும் உள்ள உரிமையை பாதுகாக்க வேண்டிய
தேவைகளை--- அலட்சியம் செய்வதைத் தேர்ந்தெடுத்தனர்.
அவர்களின் அமைதி இந்திய எதிர்க்கட்சிகளை பிடியிலிருந்து நழுவ
விட்டதுடன், அடிப்படைவாதிகளை துணிச்சலடையச்
செய்தது, இந்திய கலைஞர்களையும் இயக்குநர்களையும் ஊக்கமிழக்கச்
செய்தது மற்றும் முன்னனி சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்களின்
கோட்பாட்டு ரீதியான அறிக்கைகளை எதிர் கொண்டிருப்பார்களாயின்
தங்களின் குரலை அதில் கண்டுகொள்ளக்கூடியதாக இருந்திருக்கும்.
உண்மையில் மேத்தா அடிப்படைவாதிகளுடன் மோதும்படி தனிமையில்
விடப்பட்டார்.
தாக்குதல்கள் தொடர்கின்றன
இந்தியாவில் முறையான பாதுகாப்பு பிரச்சாரம்
இல்லாமல் மேத்தா கனடா சென்றதுடன், படத்தயாரிப்பாளர்கள்
மீதும் கலைஞர்கள் மீதும் அடிப்படைவாதிகள் புதிய தாக்குதல்களைத்
தொடுக்க தங்களது பிரச்சாரத்தை முன்னெடுக்கத் தொடங்கினர்.
* கடந்த நவம்பரில், வாரணாசியில் உள்ள
காசி சமஸ்கிருத பாதுகாப்பு சபை (KSRSS)
மற்றும் வேத பாராயண கழகம் (VPK)
ஆகியவற்றின் உறுப்பினர்கள், ஆதித்ய
சோப்ராவினால் இயக்கப்பட்ட மொஹப்பத்தன்(Mohabbatien)
படத்திலிருந்து காட்சிகளை நீக்குமாறு கோரினர். திரைப்படம்
இந்து மதத்தைத் தாக்குவதாகக் கூறி தீவிரவாத குண்டர்கள்
உள்ளூர் திரைப்பட அரங்கு மேலாளரை படச் சுருளை வெட்டுமாறும்
"சிவன் வீற்றிருக்கும் இடத்தின் மத ஆச்சாரம் உடைய மக்களுக்கு
பெரு மதிப்பு கொடுக்க வேண்டும்" என்று உடன்படும் அறிக்கை
ஒன்றில் கையெழுத்திடுமாறும் நிர்ப்பந்தித்தனர். அது முதற்
கொண்டு KSRSS மற்றும்
VPK
ஆகியன, "இந்து உணர்வுகள் எதிர் காலத்தில் புண்படுத்தப்படாதிருப்பதை
உறுதிப் படுத்த" வும் அனைத்து திரைப்படங்களையும்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் கண்காணிக்கவும் 21 உறுப்பினர்கள்
கொண்ட "விழிப்புணர்வுக் குழு" வை அமைத்துள்ளனர்.
* டிசம்பர் 28 அன்று (உலக இந்து சபை) விஷ்வ
இந்து பரிஷத்தின் இளைஞர் அமைப்பான பஜ்ரங்தள் உறுப்பினர்கள்,
புகழ் பெற்ற இந்திய ஓவியர் எம்.எப்.ஹூசைனால் ஆன உலக
முதன்மையான கஜகாமினி என்ற படத்தை காலவரையற்று
ரத்துச் செய்யுமாறு நிர்ப்பந்தித்தனர். அக் கும்பல் இப்படம்
திரையிடப்பட இருந்த அலகாபாத் பல் வகை அரங்குடைய
திரைப்பட அரங்கை சேதப்படுத்தியதுடன் படம் திரையிடுவதற்காக
இருந்த சிறப்பு மேடையையும் அழித்தனர். ஹூசைன் இந்து பெண்
கடவுளின் உருவத்தை நிர்வாணமாக வரைந்த பின்னர், இரண்டு ஆண்டுகளுக்கு
முன்னர்தான் VHP பொறுப்பாளர்கள்
அவரை நகருக்குள் நுழையவிடோம் என சபதம் எடுத்திருந்தனர்.
அவ்வாறு பூச்சு ஓவியம் செய்ததன் விளைவாக ஹூசைன் இன்றும்
"வகுப்ப ஒற்றுமையை சீர்குலைப்பதாக " வழக்கை எதிர்
கொண்டுள்ளார்.
* மார்ச் இறுதியில், "(இந்து தீவிரவாத நிகழ்ச்சி
நிரல்) இந்துத்துவ தத்துவத்தை" திணித்து "சிடுமூஞ்சித்தனமான
அரசியல் கூட்டால்" நாட்டின் பிரதான திரைப்பட விருதுகள்
களவாடப்பட்டதாக அறிவித்ததன் பின்னர், இந்தியாவின் 48வது
திரைப்பட விருது குழுவில் இருந்து மூன்று நடுவர் உறுப்பினர்கள்
ராஜினாமாச் செய்தனர்.16 பேர்கள் கொண்ட நடுவர் குழுவில்
ராஷ்ட்ரிய சுயசேவக் சங்கத்தின்(RSS)
ஊதுகுழலான பஞ்ச்சன்ய பத்திரிக்கையின்
ஆசிரியர் தாருண் விஜய், பிஜேபி உறுப்பினர் ஷாஷி ரஞ்சன், பிஜேபி
பாராளுமன்ற உறுப்பினர் நிவேதிதா பிரதான், ரவீன் டாண்டனின்
மாமா, செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் மாக்மோகனின்
பிரச்சார மேலாளர் பார்வதி இந்து சேகர், (ரவீன் டாண்டன்
சிறந்த நடிகைக்கான விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது)
மற்றும் அண்மையில் பிஜேபியில் சேர்ந்த வைஜயந்திமாலா
பாலி தலைமை நடுவராகவும் உள்ளடங்குவர்.
ஆனால் கலைத் தணிக்கை, குண்டர்கள் தாக்குதல்கள்
மற்றும் முக்கிய கலை மற்றும் கலாச்சார அங்கங்களில் மத
தீவிரவாதிகளின் அதிகரித்து வரும் பாத்திரம் இந்தியாவுக்கும் அப்பால்
சென்று விட்டது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதிலும்
வரவர அதிகமாய் மத அடிப்படைவாதிகளும் அதி வலதுசாரி பிரிவினரும்,
கலைஞர்கள் எதை உருவாக்க வேண்டும் எதை உருவாக்க்
கூடாது என அதிகாரம் செய்வதற்கு உரிமை கோருகின்றனர்.
திரைப்படத் தயாரிப்பாளர்களையும் கலைஞர்களையும்
வாயை மூடப் பண்ணுவதற்கான முயற்சியானது மிகப் பொதுவில்
அனைத்து விமர்சன சிந்தனைகளையும் கருத்து வேறுபாடுகளையும்
குழிதோண்டிப் புதைக்கும் முயற்சி ஆகும்.
தீபா மேத்தா தற்போதைக்கு, தனது படத்தைக்
கைவிடுவதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிற அதே வேளை,
திரைப்படத் தயாரிப்பாளரைப் பாதுகாக்கவும் சுதந்திரமாய்
கலையை வெளிப்படுத்துவதற்கான அவரது உரிமையைப் பாதுகாக்கவும்
உலக சோசலிச வலை தளத்தால் தொடங்கப்பட்ட பிரச்சாரம்,
இந்த நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான சர்வதேச எதிர்த் தாக்குதலின்
அபிவிருத்தியில் முக்கிய முதல் அடி ஆகும்.
|