WSWS
: ICFI
Stalinism in Eastern Europe: The Rise and Fall of the GDR
ஐரோப்பாவில் ஸ்ராலினிசமும் ஜேர்மன் ஜனநாயகக்
குடியரசின் எழுச்சியும் முடிவும்
பின்வரும் விரிவுரை 1998, ஜனவரி 6ம் தேதி, சர்வதேச
கோடை பள்ளியில் மார்க்சிசமும் இருபதாம் நூற்றாண்டின் அடிப்படைப்
பிரச்சினைகளும் என்ற தலைப்பில் இடம் பெற்ற தொடர் சொற்பொழிவுகளில்
வழங்கப்பட்டது. சிட்னியில் ஜனவரி 3 லிருந்து 10 வரை இடம் பெற்ற
இச்சொற்பொழிவுகள், (ஆஸ்திரேலிய) சோசலிச சமத்துவக் கட்சியால்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பீட்டர் சுவார்ட்ஸ், நான்காம் அகிலத்தின் அனைத்துலக்
குழுவின் காரியதரிசியும், நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின்
ஜேர்மன் பகுதியின் தலைவருமாவர்.
இந்த விரிவுரையின் மூன்றாவதும் இறுதிப் பகுதியையும்
இங்கே பிரசுரிக்கிறோம். இதன் முழு தொகுப்பையும் ICFI
பற்றியவை
என்ற பகுதியில் காணலாம்.
பகுதி-3
Use
this version to print
கிழக்கைரோப்பாவின் எந்தவொரு
பொருளாதாரமும் ஸ்ராலினிச அரசுகளால் உண்மையாக
முன்கொண்டு செல்லப்படவில்லை. ஸ்ராலினிச நாடுகளுக்கிடையேயான
பொருளாதார தொடர்புகளைப் போலவே அவர்களுக்கிடையேயும்
அதிகாரத்துவ ஊழலாலும், தகுதியின்மையாலும் பிளவுபட்டிருந்தனர்.
இந்த சமூக நலன்கள் சோசலிசத்தின் இருப்பை எடுத்துக் காட்டவில்லை.
இச்சமூக நலன்களின் நோக்கம் தொழிலாள வர்க்கத்தினதும்,
சமூகத்தினதும் பொதுவான கலாச்சார நிலையை உயர்த்துவதற்காகவல்ல.
இதற்கு மாறாக இவை தொழிலாள வர்க்கத்தை சமாதானப்படுத்துவதையும்,
ஒவ்வொரு கணமும் சமூகத்தின் ஒவ்வொரு துறையையும் தனது கட்டுப்பாட்டுக்குள்
வைத்திருந்த அதிகாரத்துவம் தனது ஆட்சியை ஸ்திரப்படுத்திக்
கொள்ள செய்தவையாகும். 17 மில்லியன் மக்களைக் கொண்ட
நாட்டில் 200,000 பேரைக் கொண்ட இராணுவத்தையும் முழுநேர
பகுதிநேர இரகசிய கையாட்களையும் கொண்டு மக்களின் வாழ்க்கையின்
ஒவ்வொரு நிகழ்வும் அவதானிக்கப்பட்டது. மக்களால் ''தேசிய
மயமாக்கப்பட்ட அவதான கைது நிறுவனம்'' என புனைபெயரால்
அழைக்கப்பட்ட ஸ்ராசி (STASI) சந்தேகத்திற்குரிய
சிறிய மாதிரிகளைக் கூட சேர்த்தது. இதற்கு அவர்கள் நாய்களை
பாவித்ததுடன் தேவையேற்படின் கைதும் செய்தனர். இம்மாதிரிகள்
பிளாஸ்ரிக் பையினுள் அடைக்கப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டது.
ஏனைய துறைகளை போலவே ஸ்ராசியிலும் திறமையும், அக்கிரமும்
தகுதியின்மையுடன் கலந்திருந்தது.
அதிகாரத்துவம் அரசியல் எதிர்ப்பையிட்டு மட்டுமல்ல
சுயாதீனமான அல்லது உண்மையான சிந்தனைகள் குறித்தும் பயப்பட்டது.
அரசியல் ஈடுபாடற்றிருந்த கலைஞர்கள் கூட குறிப்பாக கவனமாக
அவதானிக்கப்பட்டிருந்தனர்.
7.
1960களில் தோன்றிய தொழிலாள வர்க்கத்திலும்,
மாணவர்களினதும் தரமிக்க போராட்டங்கள் மேற்குலகை திகைப்படையச்
செய்ததுடன் இவ்வலை கிழக்கைரோப்பாவை நோக்கியும்
சென்றது. 1968ம் ஆண்டு பிராக்கின் வசந்தகால எழுச்சிகள் கிழக்கு
ஜேர்மனி உட்பட்ட வார்சோ உடன்படிக்கையுள் இணைந்துள்ள
ஐந்து நாட்டு இராணுவத்தால் ஒடுக்கப்பட்டது. 1970ல்
போலந்து வேலை நிறுத்த அலைகளால் நடுங்கியது. கின்ட்ஸ் கப்பல்
கட்டும் தொழிலாளர்களுக்கு மேல் டாங்கிகள் ஏவிவிடப்பட்டு
பல டசின் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். கிழக்கு ஜேர்மனியிலும்
அமைதியின்மைக்கான வெளிப்பாடுகள் தெரிந்தன. 1971ம் ஆண்டு உல்பிறிக்ட்
(Ulbricht)
SED பதவியிலிருந்து
நீக்கப்பட்டு அவரின் நெருங்கிய நண்பரான எரிக் கோனெக்கர்
நியமிக்கப்பட்டார். கோனெக்கர் தொழிலாள வர்க்கத்திற்கு
பெரியளவு சடத்துவ சலுகைகளை வழங்கிக் கொண்டு திட்டமிட்ட
அரசியல் ஒடுக்குமுறையைச் செய்யும் ஒரு கூட்டுக் கொள்கையை
கடைப்பிடித்தார். இவர் இதை செய்யக்கூடியதாக இருந்ததற்கான
காரணம் மேற்குலகுடன் பொருளாதார தொடர்புகளை விஸ்தரித்துக்
கொண்டதாலாகும்.
1969ம் ஆண்டு வில்லி பிராண்ட் (Willy
Brand) யுத்தத்தின் பின்னர் மேற்கு ஜேர்மனியில்
சமூக ஜனநாயகவாதிகளால் தலைமை தாங்கப்பட்ட முதலாவது
அரசினை அமைத்தார். அவர் தனது கிழக்குக் கொள்கையை
முன்னெடுத்து 1970ம் ஆண்டு போலந்துக்குச் சென்றார். கிழக்கு
ஜேர்மனிக்கும், மேற்கு ஜேர்மனிக்கும் இடையேயான அரசியல்
உறவுகளை சுமூகமாக்கும் உடன்படிக்கை ஒன்று கையெழுத்திடப்பட்டது.
இக் கொள்கை ஜேர்மன் முதலாளித்துவத்தினதும், ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினதும்
பரஸ்பர நலன்களை நோக்கமாகக் கொண்டதாகும்.
1970களின் முதல் அரைவாசிப் பகுதியில் உலகப் பொருளாதார
நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு கிழக்கில் தனது பொருளாதாரத்தை
விஸ்தரிப்பது முதலாளித்துவத்திற்கு முக்கிய தேவையாக இருந்தது.
ஸ்ராலினிச அரசுகளுக்கு தொழிலாள வர்க்கத்திடமிருந்து வரும் எதிர்ப்பினை
எதிர்நோக்க மேற்கினது ஆதரவு தீர்க்ககரமானதாகவும் இருந்தது.
இவ் உடன்படிக்கையின் விளைவினால் இரண்டு ஜேர்மன்
அரசுகளுக்கிடையிலான வர்த்தகம் பலமடங்காக பெருகியது.
70களின் முடிவில் கிழக்கு ஜேர்மனியின் 30 வீத வெளிநாட்டு வர்த்தகம்
மேற்கு ஜேர்மனியுடன் செய்யப்பட்டது. மேற்கு ஜேர்மன் அரசிடமிருந்து
அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும், பிரயாணப் பாதைக்காகவும்
கிழக்கு ஜேர்மனி தொழில்நுட்ப உதவிகளையும், பாரிய கடனுதவிகளையும்
இலட்சக்கணக்கான பணத்தையும் பெற்றுக் கொண்டது. இரு
அரசுகளுக்குமிடையே நெருங்கிய தனிநபர் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டதுடன்
தொடர்ச்சியான கலந்துரையாடல்களும் ஒழுங்கு செய்யப்பட்டன.
இதன் அடித்தளத்தில் கிழக்கு ஜேர்மனியின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது.
1970 காலப்பகுதியில் சம்பளம் மூன்றிலொன்றாக அதிகரித்ததுடன்
சேமிப்பு இரண்டு மடங்குகளுடன் சில்லறை வர்த்தகம் 50 வீதத்தால்
உயர்ந்தது. 40 வீதமான மக்கள் வாகன வசதி உடையவர்களாகவும்
84 வீதமானோர் உடைகழுவும் இயந்திரத்தையும் 88 வீதமானோர்
தொலைக்காட்சிப் பெட்டியையும் கொண்டிருந்தனர்.
கோனெக்கர் இதனை ''தனியொரு நாட்டு
சோசலிசத்தின்'' வெற்றிக்கான ஆதாரம் என புகழ்ந்துரைத்த
போதும் உண்மையில் இது எதிர்மாறானதாகும். கிழக்கு ஜேர்மனி
எந்தளவிற்கு உலகப் பொருளாதாரத்தின் வளங்களை பாவிக்கத்
தொடங்கியதோ அந்தளவிற்கு அதனது வர்த்தக வட்டத்திலும்,
நெருக்கடிகளிலும் தங்கியிருக்க வேண்டியிருந்தது. 1980களின் உலகப்
பொருளாதாரத்தில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்கள் கிழக்கு
ஜேர்மனியை முற்றாகப் பலவீனப்படுத்தியதுடன் அதனை வீழ்ச்சிக்கும்
இட்டுச் சென்றது.
உற்பத்தியின் ஒவ்வொரு துறையிலும் கணணித் தொழில்நுட்பம்
புகுத்தப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட உற்பத்தி அதிகரிப்பிற்கு ஏற்ப
ஈடுகொடுக்க முடியாது போனது. கிழக்கு ஜேர்மனி சர்வதேச
போட்டியில் மிகவும் பின்தங்கிவிட்டது. உலகச் சந்தைக்கான
இயந்திர ஏற்றுமதி 1973ல் 3.9 வீதமாக இருந்து 1986ல் 0.9 வீதமாக
வீழ்ச்சியடைந்தது. ஏற்றுமதி அதிகரிப்பினால் கிடைத்த வருமானத்திலிருந்து
கடன் உதவிகளையும் பொருட்களின் இறக்குமதியையும் செய்யக்கூடிய
நிலைமை இயலாமல் போனது.
உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றம்
கிழக்கைரோப்பிய நாடுகளிலும், சோவியத் யூனியனிலும் இதே மாதிரியான
விளைவையே ஏற்படுத்தியது. அவர்களின் முக்கிய ஏற்றுமதிக்கான ஊற்றான
மூலப்பொருட்களின் விநியோகஸ்தர்களாக இருந்தவர்கள் புதிய
தொழில் நுட்பமும், மலிந்த கூலியையும் கொண்ட கிழக்காசியப்
புலிகளின் சவாலை எதிர்நோக்க வேண்டியிருந்தது. தமது ஏற்றுமதியின்
அளவை அதிகரிக்கலாம் என்ற நோக்கில் எடுக்கப்பட்ட பாரிய
கடன்களை தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டலை தீவிரப்படுத்துவதன்
மூலமே திருப்பிக் கொடுக்க வேண்டியிருந்தது. இதனது அரசியல்
விளைவுகளை போலந்தில் முதலாவதாக காணக்கூடியதாக இருந்தது.
1980-81ல் பாரிய சொலிடாநோஸ்க் இயக்கம் தோன்றியது. இது
சகல ஸ்ராலினிச அரசுகளையும் ஈடாடச் செய்தது.
மொஸ்கோவின் ஆளும் தட்டு, இதே போன்ற இயக்கம் அங்கும்
தோன்றி அவர்களை அடித்துச் சென்றுவிடும் எனப் பயந்தனர்.
பாரிய தாக்கத்தின் பின்னர் 60 வருடங்களாக சுரண்டிய
தொழிலாளர் அரசின் சொத்துறவுகளை கையளிக்கத் தீர்மானித்ததுடன்
இதன் மூலம் தங்களுக்கான சமூக முன்னுரிமைகளுக்கு முதலாளித்துவத்
தனிச்சொத்துக்களில் புதிய அடித்தளத்தைத் தேடினர். இதுதான்
கோர்பச்சேவ் இன் தோற்றத்திற்கும் அவரது கொள்கையான
பெரஸ்துரோய்க்காவிற்குமான முக்கியத்துவமாகும்.
கோனெக்கர் பெரஸ்துரோய்க்காவை எதிர்த்தார்.
அவர் இக் கொள்கையை கிழக்கு ஜேர்மனியில் அறிமுகப்படுத்துவதனால்
ஏற்படும் விளைவுகளை சரியாக விளங்கிக் கொண்டிருந்ததுடன்
இது கிழக்கு ஜேர்மனியின் தலைவிதியை முடிவுக்கு கொண்டுவரும்
என்பதையும் தெரிந்திருந்தார். ''சோவியத் யூனியனிலிருந்து கற்றுக்கொள்ளுதல்''
என்ற SED
இனது சுலோகம் அதன் வரலாற்றில் முதல் தடவையாக கைவிடப்பட்டது.
''ஸ்புட்னிக்'' (Sputnik)
போன்ற பிரபல்யமான சோவியத் வெளியீடுகள் சட்ட விரோதமானதாக
ஆக்கப்பட்டது. கிழக்கு ஜேர்மனியின் தலைவிதி முடிவுக்கு வந்ததல்லாது
அது வங்குரோத்து நிலையை நோக்கி விரைவாகச் சென்றது.
குந்தர் மிற்றாக் (Gunther
Mittag) என்ற பொருளாதாரத்திற்கு
பொறுப்பான அரசியல்குழு அங்கத்தவர் பின்னர் "Der
Spiegel"
சஞ்சிகைக்கு அளித்த பேட்டியொன்றில் ''கிழக்கு ஜேர்மனி
தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது இருந்ததுடன் மறு
இணைப்பு இல்லாது கிழக்கு ஜேர்மனி பாரிய பொருளாதார சீரழிவிற்கும்
எதிர்பாராத சமூக விளைவுகளுக்கும் எதிர்நோக்க வேண்டியிருக்கும்"
என்பதை முன்கூட்டியே தெரிந்ததாகக் கூறுகின்றார். 1987களின்
முடிவில் தங்களது நிலைமைக்கு முடிவு வந்துவிட்டதை தான் அறிந்ததாகவும்,
ஆனால் அதிகாரத்துவம் எல்லாவற்றையும் கைவிட்டுவிட்டது
என்பதை மக்கள் பரந்தளவு உணர்ந்து கொள்ள மேலும் 2
வருடங்கள் சென்றதாகவும் குறிப்பிடுகின்றார்.
8.
1989 இலையுதிர் காலத்தில் கிழக்கு ஜேர்மனியின்
அரசியல் சூழ்நிலை நம்பிக்கையின்மையும் செயலிழந்த தன்மையும்
கொண்டிருந்தது. அப்பொழுது ஒரு பொதுஜன அபிப்பிராய கணக்கெடுப்பு
நடத்தப்பட்டிருந்தால் பெரும்பான்மையானோர் முதலாவதாக
நிலைமைகள் மேலும் மோசமடைகின்றது எனவும் இரண்டாவதாக
ஆளும் தட்டினரை தூக்கி வீச நிட்சயமாக எவ்வித வழியுமில்லை
என்றே கூறியிருப்பர். கிழக்கு ஜேர்மன் பாராளுமன்றத்தில் (Volkskammer)
யூன் மாதம் தியனமென் சதுக்கத்தில்
சீன அரசு செய்த படுகொலைகளை வாழ்த்தி ஏகமனதான தீர்மானம்
ஒன்று நிறைவேற்றப்பட்டதுடன் வெறுப்படைந்த நிலைமை மேலும்
தீவிரமடைந்தது. கிழக்கு ஜேர்மனியின் கொர்பச்சேவாக 6 மாதத்தின்
பின் செயற்பட்ட ஹான்ஸ் மோட்ரோ (Hans
Modrow) பீக்கங்கிற்கு நேரடியாகச்
சென்று தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பொதுவான அதிருப்தி
இறுதியில் அரசியலற்ற வடிவம் ஒன்றை எடுத்தது. நூற்றுக்கணக்கான
கிழக்கு ஜேர்மன் உல்லாசப் பிரயாணிகள் பிராக். புடபெஸ்ட் வார்சோவிலுள்ள
ஜேர்மன் தூதுவராலயங்களை ஆக்கிரமித்து தம்மை மேற்கு ஜேர்மனிக்குள்
செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டனர்.
ஹங்கேரிய அரசு அதற்கான ஆஸ்திரியாவின் எல்லையை
திறந்து விட்டதும் ஆயிரக்கணக்கானோர் மேற்கு நோக்கிச்
சென்றனர். கிழக்கு ஜேர்மன் அரசிற்கு இவ் வெளியேற்ற அலையானது
பாரிய சிக்கலான நிலைமையை தோற்றுவித்ததுடன் அவர்களின் ஆளுமையையும்
பலவீனப்படுத்தியது. செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் முதலாவது
பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஆரம்பமாகியது. ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கானவர்களாக
தொடங்கி ஆயிரக்கணக்காகி பின்னர் இலட்சக்கணக்காகியது.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அரசு எவ்வாறு இதற்கு பதிலளிப்பது
என்று தெரியாதிருந்தது. சிலர் கைதுசெய்யப்பட்டு பயமுறுத்தப்பட்டபோதும்
இராணுவம் தலையிடவில்லை.
அக்டோபர் 7ம் திகதி இவ் ஆர்ப்பாட்டங்களுக்கு
மத்தியில் கொர்பச்சேவ் கிழக்கு ஜேர்மனிக்கு வந்து அதன்
40வது ஆண்டுக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார்.
அதில் நிகழ்த்திய உரையில் தான் கோனெக்கரை பாதுகாக்க
முடியாது என்பதைத் தெளிவாக்கினார். இது SED
இனது நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தை
எடுக்கச் செய்தது. அது இப்போது முதலாளித்துவ மறுசீரமைப்பையும்,
ஜேர்மன் மறு இணைப்பையும் நோக்கிய கொள்கையை அனுசரிக்கத்
தொடங்கியது. கோனெக்கர் அரசியல் குழுவிலுள்ள தனது சொந்த
நண்பர்களாலேயே வெளியேற்றப்பட்டு ''பொதுவான கலந்துரையாடல்"
மூலம் ஊர்வலங்களை அமைதிப்படுத்த அழைப்புவிட்ட ஈகோன்
கிரென்ஸ் (Egon Krenz)
அவ்விடத்திற்கு நியமிக்கப்பட்டார். ஆயிரக்கணக்கானோர்
பொது இடங்களில் நிகழ்ந்த அரசியல் கலந்துரையாடல்களில்
கலந்து கொண்டனர். ஆனால் ஊர்வலங்கள் பாரிய வளர்ச்சியடைந்தன.
நவம்பர் 4ம் திகதி 10 லட்சம் பேர் கிழக்கு பேர்லினின் வரலாற்றிலேயே
முதல் தடவையாக பாரிய ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
கொர்பச்சேவின் ஆதரவாளரான ஹான்ஸ் மோட்ரோ பிரதமராக
நியமிக்கப்பட்டார். இதற்கு அடுத்தநாள் பேர்லின் மதில் திறக்கப்பட்டதும்
இலட்சக்கணக்கானோர் மேற்கு ஜேர்மனியைப் பார்க்க பிரயாணம்
செய்தனர். இது அந்நேரத்தில் அரசு மீதான அழுத்தத்தை சற்றுக்
குறைத்தது.
மோட்ரோ இன்றும் PDS
(SED) என மாற்றம் செய்யப்பட்ட கட்சியில்தான்
மதிப்பிற்குரிய தலைவராக இருக்கின்றார். இவர் தான் பிரதமராக
இருந்த காலத்தை பற்றி புத்தகம் ஒன்று எழுதியுள்ளார். அவரின்
கருத்துப்படி ''1989-90 குளிர்காலப் பகுதியில் ஒரு புரட்சிக்கான
சாத்தியக் கூறுகள் இருந்தன. SED
யினது தலைமை நிர்வாகிகளால், அலுவலகங்களில் செய்த ஊழலும்,
துஷ்பிரயோகங்களும் நாளாந்தம் அம்பலப்பட்டமை
பொதுவான கொடுமையை உயர் புள்ளிக்கு இட்டுச் சென்றது.
பொதுமக்களின் ஆத்திரம் நகர, கிராம நிர்வாகிகளுக்கு எதிராகத்
திரும்பியது. பல சந்தர்ப்பங்களில் அவர்களது செயற்பாடு மிகவும்
குறைக்கப்பட்டது. வேலை நிறுத்தங்கள், தற்காலிகமான வேலை
நிறுத்தம், சட்டப்படி வேலை செய்தல் போன்றவையும் ஏனைய
இடையூறுகளும் உற்பத்தியில் பாரிய இழப்பை ஏற்படுத்தியது. இதனையும்
விட சமூக நெருக்கடி அதிகரித்ததுடன் இது அரசியல் கட்டமைப்புக்களால்
மிகவும் குறைவாகக் கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருந்தது.''
என்றார்.
மோட்ரோ தனது அரசாங்கத்தினது முக்கிய
நோக்கம் ''எனது கடமை நாட்டை ஆளும் நிலைமைக்குள் வைத்திருப்பதும்
சீரழிவிலிருந்து தடுப்பதுமே. எனது கருத்துப்படி ஜேர்மன் ஒன்றிணைப்பு
தவிர்க்க முடியாததுடன் மிகவும் சக்தியுடன் நடைமுறைப் படுத்தப்பட
வேண்டும்'' எனக் கூறுகிறார். இது பின்னர் PDS
இனால் கிழக்கு ஜேர்மனி மானபங்கப்படுத்தப்பட்டு
பலவந்தமாக மேற்கு ஜேர்மனியுடன்
ஒன்றிணைக்கப்பட்டது என்பதை தெளிவுபடுத்துகின்றது. ஆனால் உண்மையில்
ஸ்ராலினிஸ்டுக்கள்தான் மறு இணைப்பின் முக்கிய உந்து சக்திகளாகும்.
ஹெல்மூட் கோல் தான் என்ன செய்வதென்ற
முடிவை எடுக்க முடியாது இருக்கையில் மோட்ரோ ''ஜேர்மனி
ஒன்றிணைந்த தந்தை நாடு'' என்பதை தனது மத்திய சுலோகமாகக்
கொண்டிருந்தார். மோட்ரோ மொஸ்கோவிற்கும், பொண் (Bonn)
இற்கும் சென்று ஐக்கியப்படுத்தலைப் பற்றிய ஆலோசனைகளை
நடத்தினார். அவரது அரசாங்கம்தான் Treuhand
என்ற நிறுவனத்தை உருவாக்கி கிழக்கு
ஜேர்மன் பொருளாதாரத்தை அடுத்த ஐந்து வருடங்களில் தனியார்
மயமாக்கலை செய்ய உதவி செய்தது. பொருளாதார அமைச்சரான
கிறிஸ்டா லுவ்ட் (Christa Luft) தனது
ஞாபகங்களை ''சொத்தின் சுகங்கள்'' (The
Joy of Property) என்ற ஆத்திரமூட்டும்
தலையங்கத்தின் கீழ் ஒரு புத்தகமாக எழுதியுள்ளார். 1990 பாராளுமன்றத்
தேர்தல்களில் PDS
தோல்வியடைந்த பின்னரே கூட்டுப் பேச்சுவார்த்தைகளிலிருந்து
விலக்கப்பட்டதுடன் இது பின்னர் அமைதியடைந்தது.
1989ன் ஆர்ப்பாட்டங்களில் பாரியளவு
தொழிலாள வர்க்கம் கலந்து கொண்டபோதும் அது சுயாதீனமான
அரசியல் பங்கு வகிக்கவில்லை. இதற்கான காரணத்தை விளங்கிக்கொள்வது
கடினமில்லை. 12 வருட பாசிச பயங்கரவாதத்தை தொடர்ந்து
40 வருட ஸ்ராலினிச ஒடுக்குமுறையானது அதனது அடையாளத்தை
தொழிலாள வர்க்கத்தின் உணர்மையின் மீது விட்டுச் சென்றுள்ளது.
கிழக்கு ஜேர்மனியில் பல பத்து வருடங்களாக சோசலிசம்
உருவாக்கப்பட்டுவிட்டது என்று கூறப்பட்ட பின்னர் பல
தொழிலாளர்கள் முதலாளித்துவம்தான் முக்கிய மாற்றீடு என நம்பினர்.
கிழக்கு ஜேர்மனியில் இருந்ததைவிட மேற்கு ஜேர்மன் தொழிலாளர்களுக்கு
அரசியல் சுதந்திரம் இருந்ததுடன் அவர்களது வாழ்க்கை
வசதியாகவும் இருந்தது. தொழிலாள வர்க்கத்தின் சாதகமான
அரசியல் முன்னோக்கு இல்லாமல் போனமை நிகழ்வுகளை
சரியாக மதிப்பிட முடியாத தற்செயலான மத்திய வர்க்க பிரதிநிதிகளான
ஆண்களும், பெண்களும் இவ்வியக்கத்தின் பேச்சாளராகினர். முதலாவது
ஆர்ப்பாட்டத்துடனேயே ஒரு தொகை ஜனநாயக அமைப்புக்கள்
பாய்ந்து வந்தன. அவர்களது முன்னோக்கு தெளிவற்ற ஜனநாயகக்
கோரிக்கைகளையும் ''ஜனநாயகப் பேச்சுவார்த்தைக்கான''
அழைப்புக்கும் மேல் செல்லவில்லை. அவர்கள் புரட்சிகர மாற்றத்திற்கான
சிறிதளவு அக்கறையையும் காட்டவில்லை. அதற்கு மாறாக கிழக்கு
ஜேர்மனியின் திடீர் உடைவினால் அவர்கள் அச்சத்தையே வெளிப்படுத்தினர்.
இலட்சக்கணக்கான மக்களின் இயக்கத்திற்கு
திடீரென தலைமை தாங்குவதையிட்டு அவர்கள் பயமடைந்து எவ்வளவு
விரைவாக இவ்வாரம்பத்தை அரசிடம் கையளிக்க முடியுமோ அவ்வளவுக்கு
விரைவாக அதனைச் செய்தனர். அவர்கள் மோட்ரோ அரசுடனான
வட்டமேசை ஒன்றை உருவாக்கினர். இது கிளர்ந்தெழும் எதிர்ப்பிலிருந்து
பாதுகாக்கும் கேடயமாகியது. மோட்ரோ அரசுக்கெதிரான
எதிர்ப்பு இன்னும் அதிகரிக்க அவர்கள் அரசினுள் புகுந்தனர்.
பப்லோவாதிகள் வட்டமேசையின் இடது பிரிவினை
உருவாக்கினர். 1953ம் ஆண்டு நான்காம் அகிலத்திலிருந்து பிரிந்து
சென்று ஸ்ராலினிசம் சோசலிசத்திற்கான புதிய பாதையை உருவாக்கும்
என்றவர்கள் இன்று ஸ்ராலினிசம் முதலாளித்துவப் பாதையை நோக்கி
செல்கையில் அதனைப் பாதுகாத்தனர். பேர்லின் மதில் விழுந்து
ஒரு கிழமைக்குப் பின்னர் மண்டேல் கிழக்கு ஜேர்மனிக்குச்
சென்றார். அவர் ஸ்ராலினிச இளைஞர் பத்திரிகையான ''Junge
Welt" என்பதற்கு வழங்கிய பேட்டியிலும்,
அவரது முதலாவது பகிரங்க அறிக்கையிலும் ஜேர்மன் சமூக சமத்துவக்
கட்சியின் முன்னோடியான சோசலிச தொழிலாளர் கழகத்தை
மறுதலித்தலுக்காக அர்ப்பணித்தார். நவம்பர் 4ம் திகதி ஆர்ப்பாட்ட
ஊர்வலத்தில் நாங்கள் சட்ட விரோதமாக மறு சீரமைப்பின்
அபாயம் குறித்தும் சர்வதேச சோசலிச முன்னோக்கை
பாதுகாக்கக் கோரியும் துண்டுப்பிரசுரம் விநியோகித்தோம்.
மண்டேல் இதனை ''அனுமதிக்க முடியாத வெளியார் தலையீடு''
எனக் கண்டித்தார். பின்னர் அவர்
PDS இன் தலைவரான கிரிக்கோர் கீசி (Gregur
GYSI) இன் ஆலோசகராக இயங்கினார்.
ஜேர்மனியில் சர்வதேச செயலகத்தின் நீண்ட நாள் உறுப்பினரான
யாக்கோப் மொனிற்றா (Jacob
Moneta) PDS
இன் மத்திய குழுவில் இணைந்து கொண்டார். மண்டேலின் சீடனான
வின்பிரெட் வொல்வ் (Winfrid Wolf)
இப்போது PDS இன்
பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார்.
9.
எனது உரையை தொகுத்துப் பார்க்கையில் சில
அரசியல் முடிவுகளை எடுக்க என்னை அனுமதியுங்கள். கிழக்கைரோப்பாவையும்,
சோவியத் யூனியனையும் மூழ்கடித்த எதிர்ப்புரட்சிக்கு முன்னால்
தொழிலாள வர்க்கம் எதிர் நடவடிக்கை எடுக்கமுடியாதிருந்ததற்கான
காரணம் அரசியல் முன்னோக்கின் நெருக்கடியாகும். இது பல
பத்து வருடங்களாக ஸ்ராலினிச, சீர்திருத்தல்வாத ஆளுமை
தொழிலாள வர்க்கத்தின் மேலிருந்ததினாலாகும். ஆனால்
தொழிலாளர்கள் குழப்பமடைந்த நிலையில் இருக்கின்றார்கள்
என்பதன் அர்த்தம் அவர்கள் சிந்திப்பதை நிறுத்தி விட்டார்கள்
என்பதல்ல. கடந்த எட்டு வருடங்களில் அவர்கள் பாரிய அனுபவங்களை
பெற்றுள்ளார்கள். எட்டு வருடங்களுக்கு முன்னர் முதலாளித்துவத்தின்
மீதிருந்த நப்பாசைகள் பாரியளவில் மறைந்து விட்டது. பெருந்தொகையான
தொழிலாளர்கள் கசப்பான அனுபவங்களை அடைந்துள்ளனர்.
ஆனால் சோசலிசம், ஸ்ராலினிசத்திற்கு சமமானது என அடையாளம்
காணப்படும் வரையில் இதற்கு வேறு வழி கிடையாது. கடந்த
காலத்தை விளங்கிக் கொள்வதும், ஸ்ராலினிசத்தையும் அது எதனைப்
பிரதிநிதித்துவப்படுத்தியது என்பதை விளங்கிக் கொள்வதுமே முன்னோக்கு
தொடர்பான நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கு முக்கியமானது.
தோல்விகளை விளங்கிக் கொண்டு அதிலிருந்து பாடங்களை எடுத்துக்
கொள்வதும்தான் லெனின் குறிப்பிட்டதுபோல் எதிர்கால வெற்றிக்கான
அடித்தளமாக மாற்றப்படக்கூடியது. இப்படியானதொரு புரிந்து
கொள்ளல் பெரும்பாலான அல்லது சராசரித் தொழிலாளர்களிடமிருந்தோ
ஆரம்பிப்பதில்லை. இது எங்களது கட்சிகளுக்கூடாகவே
தொழிலாள வர்க்கம் இப்படியான விளக்கத்தை பெற்றுக்
கொள்ளும். இதுதான் இந்தக் கோடைகால வகுப்புக்களின்
வரலாற்று முக்கியத்துவமாகும்.
இந்த வகுப்புகள் பாரிய ஆதரவை பெற்றுக்
கொள்ளுமா? தோழர் வாடிம் (Wadim)
நேற்று முதலாளித்துவ தொலைத் தொடர்பு சாதனங்களின் ஆதிக்கம்
தொடர்பாக குறிப்பிட்டார். அளவிட முடியாதளவில் திரிபுபடுத்தல்
நிகழ்கின்றது என்பது உண்மைதான். ஆனால் முதலாளித்துவம் இதனை
செய்வதன் மூலம் தனது ஆட்சியை நிலைத்திருக்கச் செய்ய முயல்வது
அதன் பலத்தினால் அல்ல. பயத்தினாலாகும். செயற்கையாக
உருவாக்கப்பட்ட மாயைகளில் தங்கியிருக்கும் அரசுகள் இன்று
ஒருவராலும் வழங்க முடியாது. இருக்கும் சமூக நலன்களில் தங்கியிருக்கும்
அரசுகளை விட அவை ஸ்திரமற்றவையாகும்.
தோழர் வாடிம் நேற்றுக் கூறிய நகைச்சுவையான
''நாங்கள் பல உறுதி மொழிகளை வழங்கியுள்ளோம், மக்கள்
இன்னும் திருப்தியாக இருக்கிறார்கள்'' என்பதை இது ஞாபகமூட்டுகிறது.
எதிர்வரும் காலத்தில் நாங்கள் கிழக்கைரோப்பா, சோவியத்
யூனியனில் மட்டுமல்லாது உலகம் முழுவதுமே பாரிய சமூக வெடிப்புகளைப்
பார்க்கலாம். இந்த வெடிப்புக்கள் முன்னோக்கின் நெருக்கடிகளை
சுயாதீனமாக தீர்க்க முடியாததுடன், சில சரியான சுலோகங்களால்
ஸ்ராலினிசம் தொழிலாள வர்க்கத்தின் உணர்மையில் விட்டுச் சென்றுள்ள
மோசமான அரசியல் பாரம்பரியத்தை வென்று கொள்ள
முடியாது என்பதுவாகும். ஆனால் சமூக நெருக்கடிகளுடன்
அரசியல் நிலைமைகளில் ஏற்படும் மாற்றம் அரசியல் மீதான ஆர்வத்தை
அதிகரிப்பதுடன் அனைத்துலகக் குழுவால் வழங்கக்கூடிய அரசியல்
கேள்விகளுக்கான பதிலைத் தேடுவர். இந்த அடித்தளத்திலேயே,
போல்ஷிவிக் போராளி நான்காம் அகிலத்தினால் ஆயுதபாணியாக்கப்பட்டு
உறுதிப்படுத்தப்படுவார். இது சர்வதேசத் தொழிலாளர்களின்
அரசியலை மறுசீரமைப்பதற்கான முக்கிய மையமாக இருக்கும்.்
|