World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இந்தோனேசியா

Wahid's position as Indonesian president looks increasingly shaky

இந்தோனேசிய ஜனாதிபதியான வாகீட்டின் பதவி அதிகரித்தளவில் உறுதியற்றதாக இருக்கின்றது

By Peter Symonds
10 March 2001

Back to screen version

அப்துல்ராமன் வாகிட் (Abdurrahman wahid) ஆட்சிக்கால 3 வருடத்தில் வழமையாக காலாவதியாவதற்கு முன்னர் அவரின் ஜனாதிபதி பதவி முடிவிற்கு வருவதற்கான எல்லாவிதமான அறிகுறிகளும் இந்தோனேசியாவிற்கு உள்ளேயும், வெளிநாடுகளிலும் தென்படுகின்றன. மத்திய கலிமான்தான் (Kalimanthan) பகுதியின் இன மோதலானது குறைந்தது 450 உயிர்களை பலிவாங்கியதுடன் பத்தாயிரக்கணக்கான Madurese குடியேற்றவாசிகளை அவர்களுடைய வீட்டில் இருந்து துரத்தப்பட காரணமாகியது. இது விமர்சனத்தின் முக்கிய புள்ளியாக மையப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல்வாதிகளும் விமர்சகர்களும் வாகிட்டினுடைய வெளிநாட்டு பிரயாணங்களை திரும்பவும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததோடு, அவருடைய அண்மைக்கால மத்திய கிழக்கு சுற்றுலாவை குறைத்து தற்போதைய பிரச்சனைகளை கையாள வேண்டுமெனக் கோரினர்.

வாகிட்டினுடைய பதவிக்கு பதிலீடாக மிகவும் ஆர்வத்துடன் முன்கொண்டு வரப்படும் உதவி ஜனாதிபதி மேகாவதி சுகானோபுத்திரி (Megawathi Sukarnoputri) தனது சொந்த நலன்களை பாதுகாக்கும் வகையில் சண்டையில் சீரழிக்கப்பட்ட தீவான Borneo விற்கு சென்றுள்ளார். வாகிட் வெளிநாட்டு பிரயானத்திலிருந்து திரும்பிய சில மணித்தியாலத்திற்குள், மார்ச் 8 ம் திகதி மத்திய கலிமான்தானுக்கு பறந்து சென்று தனது சொந்த விசாரனையை மேற்கொண்டதுடன் தனது அரசியல் நிலைப்பாட்டையும் பிடியில் வைத்துள்ளார்.

ஜனாதிபதி தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்யும் கோரிக்கைகளை தொடர்ச்சியாக நிராகரித்ததுடன் தன்னை வெளியேற்றுவது பயனற்ற செயலென நம்பிக்கையுடன் தெரிவித்தார். தனது மந்திரி சபையை மறு சீரமைக்கமாட்டேன் எனவும் தனது எதிர்தரப்பாளருக்கு இறுதியில் சலிப்பாக இருக்கும் எனவும் நேற்றய தினம் குறிப்பிட்டார். எது எப்படியிருப்பினும் இவர் 2 கிழமை வெளிநாடுகளில் இருந்த காலத்தில், இவருடைய எதிர் தரப்பினர் மேகாவதி ஜனாதிபதியாவதற்கு தங்களது உதவியை உறுதிப்படுத்தினர்.

இந்தோனேசியாவினுடைய பாரிய கட்சிகளின் பிரதிநிதிகள் மார்ச் 2 ம் திகதி ஜக்கார்த்தாவிலுள்ள Al Azhar பள்ளிவாசலில் சம்பிரதாயமற்ற முறையில் சந்தித்தனர். அங்கு சமூகமளித்தவர்களில் மேகாவதியினுடைய கணவரான Taufik Kiemas உட்பட Golkar கட்சியின் தலைவரும் பாராளுமன்ற பேச்சாளரான Akbar Tandjung, அத்துடன் பல இஸ்லாமிய கட்சிகள், மேல் மன்ற (MPR) பேச்சாளரும் National Mandate கட்சியின் தலைவர் Amien Rais, ஐக்கிய அபிவிருத்தி கட்சித் தலைவர் Ali Manan Hanan னும் நீதிக்கான கட்சித் தலைவரான Hidayat Nur Wahid ம் அடங்குவர்.

இக் கூட்டம் சம்பந்தமாக Rais பிரகடனப்படுத்துகையில் "இந்தத் தேசம் இன்னுமோர் தேசிய தலைமை மாற்றத்தை முகம் கொடுப்பதற்கு மனோவியல் ரீதியாக தங்களை தயார்படுத்த வேண்டும் என நான் நினைக்கிறேன்" என்றார். 1999 ஒக்டோபரில் Rais வாகிட்டை ஜனாதிபதியாக்குவதற்கு திட்டமிடுவதிலும், மே மாதம் நடந்த பொதுத்தேர்தலில் கூடிய வாக்குகளினால் வெற்றி பெற்ற இந்தோனேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவியான மேகாவதியை ஜனாதிபதியாவதிலிருந்து தடுப்பதிலும் முன்னனி வகித்தார்.

அந்த நேரம் Rais உடன் தொடர்புள்ள பல இஸ்லாமிய கட்சிகளும், குழுவினர்களும் ஓர் பெண் நாட்டினுடைய ஜனாதிபதியாக முடியாதென ஆவேசத்துடன் எதிர்த்தனர். Rais இனைப் போல் இவ்வமைப்புகளும் தீடீரென ஓர் திருப்பத்தை ஏற்படுத்தி, தங்களது முன்னைய எதிர்ப்புகளை கைவிட்டதுடன் திரும்பவும் மேகாவதியை 2004 தேர்தல் மட்டும் ஜனாதிபதியாக இருப்பதற்கு கோரியுள்ளனர். முக்கியமாக நீதிக்கான கட்சித் தலைவரான Hidayat இக் கூட்டத்தில் பின்னர் மார்ச் 2ம் திகதி ''முஸ்லீம் மக்களுக்கு ஒரு பெண் தலைவராவது தொடர்பாக எவ்வித பிரச்சனையும் இல்லை எனவும், மேலும் அவர் முஸ்லீமாகவும் இருக்கின்றார்'' எனக் கூறியுள்ளார்.

உண்மையில் இவ் அரசியலில் முகம் கொடுப்பது மேகாவதியினுடைய பால் சம்பந்தமாகவோ அல்லது வாகிட்டினுடைய வெளிநாட்டு பிரயாணங்கள் சம்பந்தமாகவோ கவனத்தில் கொண்டுள்ளதாக இல்லை. 1999 இல் மேகாவதியின் மேல் வந்த எதிர்ப்பு தனிப்பட்ட பிரச்சனையாக இருக்கவில்லை சுகார்ட்டோ (Suharto) ஆட்சியில் இருக்கும்போது மேகாவதி ஒரு பொழுதுமே மனப்பூர்வமான சவால்களை விட்டதில்லை. சுகாட்டோவின் கீழ் ஆளும் கட்சியான Golkar உம், ஓர் பகுதி இரானுவத்தினரும் மேகாவதிக்கு இருந்த கணிசமான சமூக அடித்தளங்களையிட்டு, இவரால் சில வேளை தங்களுடைய சலுகைகளுக்கும் பதவிகளுக்கும் ஆபத்து ஏற்படலாம் என பயமடைந்தனர்.

1999 இல் இருந்து இராணுவ உயர் தலைமைகளுடனும் Golkar தலைவர்களுடனும் மேகாவதி தன்னை ஒன்றிணைத்துக் கொள்ள முயன்றார். மேற்கு பப்புவாவிலும், ஏசே (Aceh) பகுதிகளிலும் பிரிவினையைக் கோரும் இயக்கங்களை அரசாங்கம் கடுமையான முறையில் கையாளுவதற்கு இராணுவத்திற்கும் Golkar உம், மேகவதியின் PDI-P இடையே ஓர் கூட்டு உருவாகியிருந்தது. மேலும் இந்தோனேசிய பொருளாதாரத்தினை மறு சீரமைக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டங்களுக்கு எதிரான ஆளும் வர்க்கத்தின் தேசிய வாத எதிர்ப்பு பிரமுகர்களுக்கிடையே மேகாவதி மையப் புள்ளியாக இருந்தார்.

வாகிட்டை முறைப்படி பதவியிலிருந்து அகற்றுவதற்குரிய வழிவகைகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் இரண்டு ஊழல் சம்பந்தமாக கண்டித்து பெப்ரவரி 1 ம் திகதி பாராளுமன்றத்தில் 395 இற்கு நான்கு என்ற ரீதியில் ஏகமனதாக வாக்களிக்கப்பட்டது. புருனாய் (Brunei) சுல்தான் இடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் வெகுமதியாக பெறப்பட்டதும், 35 இலட்சம் ($U3.7mill) அமெரிக்க டொலர் தேசிய போக்குவரத்து ஏஜென்சியிடமிருந்து இவருடைய முன்னைய உடல் மசாஜ் (masseur) செய்பவரிடமிருந்து ஏமாற்று முறையில் பெறப்பட்டதுமாகும். ஆனால் குற்ற விசாரணையானது இந்தோனேசியாவில் ஓர் நீண்டகாலமெடுக்கும் நடவடிக்கையாகும். இதற்கு குறைந்தது நான்கு மாதங்களாவது எடுக்கும்.

விசேடமான ஓர் MPR கூட்டத்தை கூப்பிடுவதன் மூலம் குற்றம் சாட்டப்பட்ட பிரச்சனையை சிறிய முடிப்பு (Short Cinurt) ஆக்குவதற்கு Rais தொடக்கத்தில் முயற்சித்தார். எப்படியிருந்தபோதும் இரண்டு பாரிய பாராளுமன்றக் கட்சிகளான PDI-P யும் Golkar இரண்டு பிரிவுகளும் கிழக்கு ஜாவாவில் வாகிட்டினுடைய ஆதரவாளர்களால் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதை தொடர்ந்து, வாகிட்கு எதிரான எந்தவிதமான காலத்துக்கு முந்திய நகர்வுகளும் பின்னடிக்கப்பட்டது.

கடந்த கிழமை வெளிப்படையாகவே Rais தனது திட்டத்தை கைவிட்டதுடன் அநேகமாக இன்னுமோர் DPR கண்டனத்திற்கான அறிகுறிகள் உண்டு என்றார். வாகிட்டுடைய தவறான நிர்வாகத்தால் ''இவ் இரண்டாவது கட்டம்'' மிகவும் பாரதூரமாக இருக்கலாம்.

மேகாவதியின் திருப்பம்

அண்மைக்காலம் வரை வாகிட்டிற்கு எதிராக இயங்குவதற்கு மேகாவதி விருப்பமில்லாதவராக இருந்தார். ஒரு பகுதி PDI-P தலைவர்கள் வாகிட்டினுடைய நகர்வால் ஏற்படும் விளைவுகளை கருத்தில் கொண்டதுடன் அது அவருக்கெதிராக பாவிக்க கூடிய முன் நிபந்தனையாக அமையலாம் என்றனர். ஓர் PDI_P பாராளுமன்ற உறுப்பினரான Dimyati Hartono கடந்த கிழமை எச்சரிக்கையில்: ''GUS Dur ä (வாகிட்டினுடைய புனை பெயர்) அவர்கள் விரும்பாதபடியால், மேகாவதியை முன்னுக்கு கொண்டு வந்துள்ளார்கள். மேகாவதி எழுச்சியடைந்தால் அவர்கள் தங்களுடைய சிந்தனையை மாற்றலாம் என நான் பயப்படுகிறேன்" என்றார்.

ஜனாதிபதியானால் வாகிட் முகம் கொடுத்த மாதிரியான அரசியல், பொருளாதாரப் பிரச்சனையை எதிர்நோக்க வேண்டுமென மேகாவதியும் PDI-P தலைவர்களும் கூட கவலைப்படுகின்றார்கள். ஆழமான வேலையில்லாத் திண்டாட்டத்தால் உருவாகிய சமூக பிரச்சனையும், வாழ்க்கைத்தரத்தின் வீழ்ச்சியினதும் விளைவுகளுக்கு Borneo இல் தலை தூக்கியுள்ள இன மோதல்கள் ஒரு உதாரணமாகும். Malukus உட்பட, பல பிராந்தியங்களில் இன மோதல்கள் மூளத் தொடங்கியதுடன் தொழிலாளர்கள் சம்பளத்திற்காகவும், தரமான வேலைத்தள நிபந்தனைகளுக்காகவும் (Conditions) நீண்ட போராட்டத்தை தொடுத்துள்ளார்கள்.

இவ் வருடம் இந்தோனேசியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 4,5% இற்கும் 5% இற்கும் இடையில் சாதமாக இருக்குமென இந்தோனேசிய தேசிய வங்கி எதிர்பாக்கும் அதேவேளை 1997-98 ஆசிய நிதி நெருக்கடியிலிருந்து நாட்டின் மீட்சி என்பது பலமற்றதாகவேயுள்ளது. இந்தோனேசியாவின் பொருளாதாரம் கடந்த வருட இறுதிக் காலப்பகுதியில் 0,7 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. எண்ணைய் தவிர்ந்த பொருட்களின் ஏற்றுமதி 10,4 வீதத்தால் வீழ்ச்சியடைந்ததுடன் அமெரிக்கா, ஜப்பானிய பொருளாதார மந்தத்தால் இது இன்னமும் குறையக்கூடும். வங்கிகளும், நிதி அமைப்புகளும் தொடர்ந்து திரும்பி செலுத்தாத கடன் சுமையுடன் இருப்பதுடன் இந்தோனேசிய நாணயமான Rupian டொலருக்கெதிராக கிட்டத்தட்ட 10,000 ஆல் வீழ்ச்சியடைந்துள்ளது.

பெப்ரவரி முடிவில் மேகாவதி தனது நிலைப்பாட்டில் மாற்றத்தை செய்ததாக தோற்றத்தையளித்ததுடன், வாகிட்டை பிரதியீடு செய்ய முதல் தெளிவான சமிக்கையை காட்டினார். Rais உடன் தொடர்புள்ள இஸ்லாமிய நிறுவனமான முகமதுதியா (Muhammadiya) வின் தலைவர்களுடன் மேகாவதி பேச்சுவார்த்ததை நடத்தினார். கலந்துரையாடலை தொடர்ந்து முகமதியா தலைவர்கள் பத்திரிகைக்கு அறிவிக்கையில் ''தனது நிர்வாக பாத்திரமான உதவி ஜனாதிபதி என்ற வரையறையின் கீழ் மட்டுமே வாகிட்டிற்கு தொடர்ந்து உதவியாக இருப்பேன் என தங்களுக்கு கூறியதாக'' அறிவித்தனர். மேகாவதி கூட அக்கூற்றை மறுக்கவில்லை

Jakarta Post பத்திரிகை மார்ச் மாதம் 7 ம் திகதி ஆசிரியர் தலையங்கத்தில் கருத்து தெரிவிக்கையில் "அக்டோபர் 1999 உதவி ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஒரு பொழுதும் இல்லாத மாதிரி இன்று மேகாவதி சுகார்னோபுத்திரி ஒரு ஜனாதிபதி பதவிக்கு காத்திருப்பதாக காட்சியளிக்கின்றார். அத்துடன் அப்துல்ராமன் வாகிட் அழுக்குகளுக்கு முகம் கொடுத்து ஏதோ ஒரு வழியில் செல்ல வேண்டியுள்ளது. அதிகமான மக்கள் இங்கும் வெளிநாட்டிலும் ஏற்கனவே மேகாவதியை இந்தோனேசியாவின்அடுத்த ஆட்சியாளராக ஆவதற்கான கருத்துக்களை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்'' என குறிப்பிட்டுள்ளது.

மேகாவதியின் திடகாத்திரமான நிலை, சர்வதேச ரீதியிலும் ஒரே வேளையில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. பல ஆசிரியர் தலையங்கங்களும், விமர்சகர்களும் வெளிப்படையாகவே வாகிட்டின் மேல் பொறுமை காட்ட முடியாது என தெரிவிக்கத் தொடங்கிவிட்டனர்.

Washington Post கட்டுரை மார்ச் 5 ம் திகதி "வாகிட்டினுடைய பொறுப்பில்லாத நடைமுறை பாரிய சுமையாக மாறியதுடன், உலகில் 4வது சனத்தொகை கூடிய நாட்டை அரசியல் நெருக்கடிக்குள் தள்ளுவதற்கு உதவியாக அமைந்தது. இதன் முடிவுகள் அவர் மேல் குற்றச்சாட்டுதலையும் சக்தி கூடிய பதவி மாற்றத்தினையும், கிழக்கு ஆசியா முழுவதும் பரந்துபட்ட ஸ்திரமற்ற நிலையையும் உருவாக்கியுள்ளது" எனக் கூறிப்பிட்டது.

மார்ச் 6 ம் திகதி Time பத்திரிகை ஓர் புண்படக் கூடிய வகையில் விமர்சனத்தை வெளியிட்டதுடன் பின்வரும் கேள்வியை கேட்டது: ''அவரின் நாடு மேற்கில் Aceh இருந்து கிழக்கில் Irian Jaya வரை தீவுக் கூட்டம் ஊடாக இனப்பிரச்சனையால் தூண்டிவிடப்பட்ட வன்முறையால் கொழுந்துவிட்டு எரிந்த கொண்டிருக்கையில் Gus எங்கே?'' "ஜக்கார்த்தாவை சுற்றி இராணுவப் புரட்சி நடப்பதற்கான வதந்திகள் உலாவுவதுடன், ஜனாதிபதியின் எதிர்ப்பாளர்கள் குற்றச்சாட்டுக்களை அவர் மேல் தொடுக்க, வாகிட்டின் உதவியாளர்கள் தமது எதிரிகளுக்கு எதிராக கிழக்கு ஜாவாவில் தீ பரவியது போல தொடர்ந்து அரசியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். உலக வங்கி இந்தோனேசியாவின் பொருளாதாரம் 1997 ஆசிய நிதி நெருக்கடியால் இளகியுள்ளதுடன், பொறிந்து கொட்டும் நிலையில் உள்ளதென" எச்சரித்துள்ளமை நிலைமைகளை மேலும் மோசமாக்கியுள்ளது.

Time பத்திரிகை இந்தோனேசியாவின் அரசியல் சோக நிலைமை தொடர்பாக முடிவுரையில் குறிப்பிடுகையில்: "மத்திய கிழக்கிற்கு வாகிட் புறப்படும் போது ஜக்கார்த்தா விமான நிலையத்தில் ஓர் ஆர்ப்பாட்டக் குழுவினர் கூடினர். ஒரு சிலருடைய மட்டையில் " திரும்பி வருவதற்கு கவலைப்படாதே" எனவும், Gus எங்கே? என எழுதப்பட்டிருந்தது மிகவும் சீக்கிரமாக வாகிட் மாற்றங்களை செய்வதற்கு தொடங்காவிடில் பதில் 'இது பற்றி யாருக்கு கவலை' என்பதாகவே அமையும்'' என்றது.

வாகிட் இராஜினாமா செய்தால் அல்லது பதவியில் இருந்து விலகினால் மேகாவதி பதிலீடு செய்யலாம் என அனேகமான விமசர்கர்கள் எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் Washington Post மார்ச் 2 ம் திகதி ஆசிரியர் தலையங்கத்தில், அமெரிக்காவில் ஓர் கபடமான மாற்று வழி சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டுள்ளது என குறிப்பிட்டது. அது பின்னர் குறிப்பிடுகையில் மேகாவதி, வாகிட்டை விட "ஓர் வலிமை குறைந்த நடிகையாக" இருக்கலாம் எனக் கூறியதுடன்: "இவ் கவலைக்குரிய நிலையானது புதிய (புஷ்) நிர்வாகம் திரும்பவும் அமெரிக்கா இந்தோனேசிய இராணுவத்துடன் தொடர்பு வைத்திருப்பது சம்பந்தமாக கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஏனெனில் வாகிட்டிற்கு மேலான குற்றச்சாட்டினால் கிளர்ச்சிகள் தோன்றினால் அது அடக்க இராணுவமே இறுதியில் ஆட்சியின் தரகர் வேலையைச் செய்யும்" என்றது.

இந்தோனேசியா ஆளும் வட்டங்களிடையில் இந்தக் கட்டுரை ஓரளவு குழப்பத்தை உருவாக்கியுள்ளது. Jakarta Post இன் கருத்தின் படி இவ் கட்டுரையை வாசித்த பலர் "நாட்டை அராஜக நிலைக்கு தள்ளாமல் தடுப்பதற்காக "புஷ் சில வேளை இந்தோனேசிய இராணுவத்திடம் திரும்பலாம் என கருதுவதாகவும், ஏனையோர் நாட்டின் தற்போதைய அரசியல் பிரச்சனையின் பார்வையில் இராணுவப் புரட்சி நடப்பதற்கு பரந்துபட்ட ஊகம் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை விளங்கிக் கொண்டுள்ள போதும் இராணுவம் பதவியேற்பதை குற்றம் சாட்டியுள்ளனர்."

ஜக்காட்டாவிலுள்ள அமெரிக்க தூதராலயம் புஷ் நிர்வாகத்தின் பெயரில் ஓர் சிறிய அறிக்கை வெளிவிட வேண்டிய நிலைக்கு உள்ளாகியதுடன், "இந்தோனேசியாவிற்கு அமைதியான ஜனநாயக, சட்ட ரீதியான அரசியல் வழியில் செல்ல நிச்சயமாக அமெரிக்காவிடம் இருந்து உதவி கிடைக்கும்." என குறிப்பிட்டதுள்ளது. இப் பொய்யான அறிக்கையை வெளியிட்ட போதும், Washington Post இன் ஆசிரியர் தலையங்கம் அமெரிக்க அரசியல் ஸ்தாபனங்கள், இராணுவ ஆட்சி இந்தோனேசியாவிற்கு ஓர் மாற்று வழியாகலாம் என கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டது.

இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை. எல்லாவற்றிற்கும் பின்னால் அமெரிக்கா 1965-66 சதியின் தூண்டுதலாக இருந்து சுகாட்டோவினை (Suharto) ஆட்சிக்கு கொண்டு வந்ததுடன், 32 வருட காலமாக இராணுவ சர்வாதிகாரத்தில் தங்கியிருந்து எல்லா விதமான எதிர்ப்புக்களையும் மிகவும் வெளிப்படையாக கொடூரமான முறையில் அடக்கியது. புதிய புஸ் நிர்வாகம் நேர்மையற்ற முறைகள் மூலம் ஆட்சிக்கு வந்தது. அது எந்த விதமான மன உறுத்தலுமேயில்லாமல் மாற்றுவழி எதுவுமே இல்லையென நம்பினால் ஜனநாயகத்திற்கு எதிரான முறைகளைப் பாவித்து இந்தோனேசியாவில் தனது நலன்களை உறுதிப்படுத்தும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved