World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

US Commission on Civil Rights charges "voter disenfranchisement... at heart" of Bush victory in Florida

புளோரிடாவில் புஷ் வெற்றியின் "மையத்தில்...வாக்காளரின் வாக்குரிமை பறிப்பு" பற்றி அமெரிக்க மக்கள் உரிமை ஆணைக்குழு குற்றம் சாட்டுகிறது.

By Jerry White
10 March 2001

Back to screen version

மக்கள் உரிமை தொடர்பான அமெரிக்க குழு, வெள்ளிக் கிழமை அன்று முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டது. அது 2000ல் ஜனாதிபதி தேர்தலின் பொழுது புளோரிடா அதிகாரிகளால் வாக்காளர்கள் திட்டமிட்டவாறும் உள்நோக்கத்துடனும் வாக்காளர்கள் வாக்குரிமை பறிக்கப் பட்டதற்கான தண்டனைக்கு உரிய ஆதாரத்தை வழங்கியது. ஜனாதிபதி புஷ்ஷின் சகோதரர் கவர்னர் ஜெப் புஷ்ஷால் தலைமை தாங்கப்படும் மாநில நிர்வாகம், தேர்தல் நாளன்றும் தேர்தல் நாளுக்கு முன்னரும் ஜனநாயகக் கட்சி வாக்காளர்கள் வாக்களிப்பதிலிருந்து ஒன்றில் தடுக்கப்பட்டனர் அல்லது அவர்களது வாக்குகள் எண்ணப்படுவதிலிருந்து தடுக்கப்பட்டன என்று அதிக அளவு சதவீதம் உறுதிப்படுத்தும் வண்ணம் ஆணைக்குழு வழங்கிய உண்மைகள் உறுதிப்படுத்துகின்றன.

ஆணைக் குழுவால் இந்நாள்வரை சேகரிக்கப்பட்ட சான்றுகளை தொகுத்துப் பார்க்கையில், அதன் தலைவி மேரி பிரான்ஸ் பெர்ரி (Mary Frances Berry) கூறினார், "இந்த பிரச்சினையின் மைய அம்சமாக வாக்காளர் வாக்குரிமை பறிப்பு காணப்படுகிறது. அது மறுவாக்கு எண்ணிக்கையோ அல்லது துல்லியமாய் கணக்கிடுவதோ பற்றியதல்ல, மாறாக பிரச்சினையானது வாக்களிப்பதற்கான உரிமையிலிருந்து விலக்கப்பட்டது இன்னும் சரியாகச் சொன்னால் நடைமுறையில் அதன் அர்த்தம் 'எண்ணுவதில்லை' என்பதாகும்."

புளோரிடாவின் வாக்குகள் ஜனாதிபதி தேர்தலின் முடிவு வருவதற்கு திருகுமுனையாக இருந்தது. ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அல்கோர் கிட்டத்தட்ட 6,00,000 வாக்குகள் வித்தியாசத்தில் தேசியரீதியாக வென்றார், புளோரிடாவின் 25 தேர்வாளர் வாக்குகள் (Electoral votes) தேர்வாளர் கல்லூரியில் (Electoral College) வெற்றியாளரை தீர்மானிக்கும் அதன் மூலம் ஜனாதிபதியை வெல்லும் வெற்றியாளரைத் தீர்மானிக்கும்.

தேர்தல் நாளைத் தொடர்ந்து ஐந்து வார காலகட்டம் முழுவதும், ஜனாதிபதி தேர்தலின் முடிவு அந்தரத்தில் ஆடிக் கொண்டிருந்தபோது, புஷ் முகாமானது அதன் அனைத்து வளங்களையும், அதனது அதிகாரப்பூர்வ சில நூறு வாக்குகள் வித்தியாசத்தைப் பராமரிக்கும் பொருட்டு புளோரிடாவில் துல்லியமாய் வாக்கு எண்ணலைத் தடுக்க எல்லாவற்றையும் செய்தன. முடிவில் அமெரிக்க உச்ச நீதிமன்றம், மாநில உயர் நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி கையால் வாக்கு எண்ணலை நிறுத்தியது அதன் மூலம் தேர்தலை புஷ்க்கு சாதகமாக கையாண்டது.

குடிமக்கள் உரிமை (Civil Rights) மீதான அமெரிக்க ஆணைக்குழு இரண்டு விசாரணைகளை நடத்தியது. ஒன்று ஜனவரியில் மாநிலத் தலைநகர் டல்லஸியிலும் (Tallahassee) மற்றொன்றை மியாமியில் (Miami) பிப்ரவரியிலும் நடத்தியது. அங்கு 100 க்கும் மேற்பட்ட சாட்சிகள் சத்தியப் பிரமாணம் எடுத்த பின்னர் சான்றளித்தனர். சான்றளித்தோருள் கவர்னர் ஜெப் புஷ், மாநில செயலாளர் கத்தரின் ஹரிஸ், புளோரிடா பகுதி தேர்தல்களின் இயக்குநர் கிளேட்டன் றொபட் மற்றும் ஏனைய மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகளும் அடங்குவர். அத்துடன் கூட தகவல் புள்ளிவிவர தொழில் நுட்ப நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கூட சான்றளித்தனர். இந்நிறுவனம் மாநிலத்தால் தேர்தல் பணியைச் செய்ய ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தப்பட்டது. அது படுபாதகம் என்று கூறப்படுகின்ற தேர்தல் களையெடுப்பு நடத்தப்படவும், அதேபோல அநேக வாக்காளர்கள் வாக்களிப்பதிலிருந்து தடுக்கப்படவோ அல்லது வாக்களிப்பதில் சிரமப்படவோ செய்யவும் அமர்த்தப்பட்டதாகும்.

தேர்தல் நாளுக்கு முன்பு மாநிலத்தின் முக்கிய அதிகாரிகள் வாக்காளர் பதிவு புள்ளிவிவரப்படி, அங்கு வாக்களிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அனைத்து சமூகங்களிலும் தேர்தல் பகுதி எல்லைகள் வாக்காளர்களின் பெரும் வருகைக்கு ஏற்ப போதுமான வளங்களைப் பெற்றிருந்தனரா என்பதை உறுதிப்படுத்தத் தவறினர் என்று ஆணைக்குழு கண்டறிந்தது. குறிப்பாக இவ் அதிகாரிகள் தொழிலாளர்கள் மற்றும் அக்கம் பக்கம் உள்ள சிறுபான்மைப் பகுதியினர் ஆயிரக்கணக்கில் முதன் முறையாக வாக்களிக்கப் போகின்றனர் என்பதை அறிவர்.

மாநில அதிகாரிகள் --பெரும்பாலும் ஜனநாயகக் கட்சியினர்-- வாக்குரிமையை பயன்படுத்துதற்கு, இவ்வாக்காளர்களுக்கு வாக்களிப்பதை சிரமம் குறைவானதாக ஆக்குவதைக் காட்டிலும் சிரமம் அதிகமானதாக ஆக்கிடும் வகையில் செயல்பட்டனர். (பெர்ரி தான் மறைமுகமாகக் குறிப்பிட்ட "முக்கிய அதிகாரிகளின்" பெயரைத் தவிர்த்தார். ஆனால் அவர்களில் கத்தரின் ஹரிஸ் மற்றும் கவர்னர் ஜெப் புஷ் போன்ற குடியரசுக் கட்சி இயக்கிகளும் உள்ளடங்குவர் என்பதை ஊகிக்கலாம்.)

பல ஆபிரிக்க-அமெரிக்கர்கள் வாக்களிக்க முடியாதிருந்தனர், ஏனெனில் அவர்களுக்கு குறிக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி பகுதிகளில் வாக்காளர்களின் வாக்களிப்பதற்கான தகுதியை உறுதிப்படுத்துவதற்கு பற்றாக்குறையான மனித ஆற்றல் அல்லது மற்றைய வளங்களைக் கொண்டிருந்தனர் என்று ஆணைக்குழு குறிப்பிட்டது. ஏழ்மையான பகுதிகளில் பழமையான மற்றும் பழுதான சாதனங்கள் காணப்பட்டன மற்றும் வாக்களிக்கும் தொழில் நுட்பம் மற்றும் செயல்முறைகள் உட்பட வளங்களின் சமமற்ற ஒதுக்கீடு இவை குறிப்பிட்ட குழுவில் தங்களின் வாக்குகள் எண்ணப்படுவதற்கான சந்தர்ப்பத்தை குறைந்து செல்ல வைத்தது என்று ஆணைக்குழு சுட்டிக்காட்டியது. மிகச் சில தேர்தல் பணியாளர்களே போதுமான அளவு பயிற்றுவிக்கப்பட்டனர் மற்றும் வாக்காளர் கல்விக்கு மிகக் குறைவான நிதியே ஒதுக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

புளோரிடா அதிகாரிகள், மாநில வாக்காளர் பதிவேட்டில் இருந்து கொடிய தண்டணை பெற்றோராக சாட்டி உரைக்கப்பட்டவர்களை களை எடுப்பதற்கு தெரிந்தே துல்லியமற்ற புள்ளி விவரங்களை பயன்படுத்தியதால் இந்த உரிமைகளை மீறினர் என்ற "கண்டறிதலுக்கு சான்று இறுதியில் ஆதரவாக இருக்கும்" என்று கூறி, பெர்ரி கூட்டாட்சி வாக்களிக்கும் உரிமைகள் சட்டத்தினை மீறிய குற்றத்தினை சுமத்துவதற்கு நெருக்கமாக வந்தார். பெர்ரியின் அறிக்கை குறிப்பிட்டது: மாநிலம் வழங்கும் கொடியதண்டணை குற்றவாளி களை எடுப்பு கொள்கையில் ,கன்னாபின்னாவென்று திரட்டப்பட்ட நம்ப முடியாத தகவல்களின் அடிப்படையில் "கொடிய தண்டணை குற்றவாளி அல்லாதோர் வாக்காளர் பதிவேட்டில் இருந்து அகற்றப்பட்டனர்." (அமெரிக்காவில் கொடிய தண்டணைக் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டோர், அவர்களது சிறைத்தண்டனையை அனுபவித்த பின்பும் அல்லது அபராதம் கட்டிய பின்பும் கூட என்றும் வாக்களிக்காதவாறு விலக்கப்படக் கூடிய மாநிலங்களுள் புளோரிடாவும் ஒன்று.)

புள்ளிவிவர தகவல் நிறுவன நிர்வாகி ஜோர்ஜ் புரூடர் அளித்த சான்று குறிப்பாக குற்றச்சாட்டில் சிக்கவைக்கிறது. ஆணைக்குழுவின் முன்னர் பிப்ரவரி16 அன்று தோன்றிய புரூடர், மாநில தேர்தல் பிரிவு, கொடிய தண்டணை குற்றவாளி என்று கூறப்படுகின்ற பெயர்ப் பட்டியலில் ஆட்களைச் சேர்ப்பதற்கு விதிமுறைகளை வகுத்துக் கொடுத்தது என்று சான்றளித்தார். தகவல் புள்ளி விவரங்களுக்கான அவர்களின் விதிமுறைகள் பல துல்லியமற்றவைகளுக்கு வழிவகுக்கப் படலாம் என புளோரிடா தேர்தல் அதிகாரிகள் எச்சரிக்கை செய்யப்பட்டதாகவும் ஆனால் அதிகாரிகள் "சாத்தியமான அளவுக்கு விரும்புகின்றவாறு வாக்களிக்க போலியான சாதகமானதை விரும்பினர்" என்று அவர் கூறினார்.

ஆணைக்குழுவால் சுட்டிக் காட்டப்பட்ட ஏனைய கண்டறிதல்கள் பின்வருமாறு :

தூண்டப்படும் வாக்காளர்கள் போலீஸ் அச்சுறுத்தல் பற்றி முறையிட சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளின் அருகே தேர்தல் நாளுக்கு முன்னர் குறைந்த பட்சம் ஒரு போலீஸ் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டது ;

கால முறையின் அடிப்படையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஏனையோர் வாக்காளர் பதிவு படிவங்களை சமர்ப்பித்தனர், ஆனால் பலவற்றில் விண்ணப்பித்தோர் வாக்காளர் பதிவுச் சீட்டைப் பெறுவதற்கு படிவங்கள் நேரத்தே ஒழுங்கு செய்யப்படவில்லை ;

பல யூதர்கள் மற்றும் வயதான வாக்காளர்கள் "அதிக வாக்குகள்" மற்றும் "குறைவான வாக்குகள்" உண்டுபண்ணும் வகையில் குறைபாடுடைய மற்றும் சிக்கலான வாக்குச் சீட்டைப் பெற்றனர் ;

சில வாக்களிக்கும் இடங்கள் குறித்த நேரத்திற்கு முன்னரே மூடப்பட்டன மற்றும் சில வாக்களிக்கும் இடங்கள் முன் அறிவிப்பில்லாமல் அகற்றப்பட்டன ;

பல ஹைத்தியன்-அமெரிக்கர்கள் மற்றும் போர்ட்டோரிகன் வாக்காளர்கள் கேட்டுக் கொண்ட பொழுதும் அவர்களுக்கு தேவைப்பட்ட பொழுதும் மொழி பெயர்ப்பு உதவி வழங்கப்படவில்லை;

சில குறிப்பிட்ட தேர்தல் பகுதிகளில் உடல் இயலாதவர்கள் வரமுடியாமல் வசதி வாய்ப்பின்றி இருந்தனர்.

1965 வாக்குரிமை சட்டத்தின் கீழ், சட்டம் பாதுகாக்கப்பட வேண்டியவர்களது வாக்குரிமை பறிப்பை சில நடைமுறைகள் விளைவித்தால் மட்டும் குடிமக்களுக்கு எதிரான வேண்டுமென்றே அல்லது உள்நோக்கம் கொண்ட பாகுபாடுகாட்டலுக்கு நிரூபிக்கப்பட வேண்டிய தேவை இல்லை. "நிற,மொழி சிறுபான்மை மக்கள், உடல் இயலாதோர் மற்றும் வயதானோர் அரசியல் நிகழ்ச்சிப் போக்குகளில் முழுமையாய் பங்கெடுத்து தங்கள் விருப்பப்படி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புக்களக் கட்டுப்படுத்தும் பாதிப்பைக் கொண்டிருக்கிற பொழுது சட்ட விரோதமானவை" அந்நடைமுறைகள் என ஆணைக்குழு குறிப்பிட்டது.

தனது முடிவுரையில் ஆணைக் குழுவின் தலைவியான பெர்ரி கவனமாக ஜெப்புஷ், ஹரிஸ் அல்லது மற்றைய புளோரிடா அதிகாரிகளை வாக்குரிமைகளை அத்துமீறிய குற்றவாளி என வெளிப்படையாக குறிப்பிடவில்லை. இருப்பினும், அவரது ஆரம்ப அறிக்கையானது படர்ந்து பரவிய மோசடியை, சூழ்ச்சிக் கையாளலை மற்றும் ஆத்திர மூட்டலைப் பற்றிய தெளிவான படத்தைத் தருகின்றது. அவை வேண்டுமென்றே செய்யப்பட்ட கொள்கையின் விளைவுதான் என காரண காரியத்துடன் விளக்கப்பட முடியும். மேலும் தேர்தல் நாளுக்கு அடுத்து கையால் வாக்கு எண்ணலை புளோரிடாவிலும் தேசியரீதியாகவும் தடுப்பதற்கான குடியரசுக் கட்சி அதிகாரிகளின் மூர்க்கத்தனமான முயற்சி, தேர்தல் நாளன்றே வாக்குகளை நசுக்கும் கொள்கையின் தொடர்ச்சி ஆகும்.

ஆணைக்குழு மேலும் விசாரணையை நடத்தவும் ஜூன் முதல் வாரத்தில் அதன் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவும் திட்டமிட்டுள்ளது. அதன் இறுதி முடிவு எதுவாயினும், ஏற்கனவே ஒன்று திரட்டப்பட்ட உண்மைகள் 2000ம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் மக்களின் இறையாண்மை கொள்கையின் மீதான தாக்குதலின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது, மற்றும் புஷ் நிர்வாகமானது வாக்களிப்பதற்கான ஜனநாயக உரிமை மீதான துடைத்து அடித்துச் செல்லும் தாக்குதலின் சட்ட விரோத விளைவாகும்.

இந்த அரசியல் ஏற்பாட்டுக்குள்ளே, அடிப்படை உரிமை மீதான தாக்குதலுக்கு அர்த்தமுள்ளதான எதிர்ப்பு எதுவும் இல்லை. தேர்தல் நெருக்கடி முழுவதும் ஜனநாயகக் கட்சியினர், ஜனநாயக உரிமைக்கு எதிரான சதித்திட்டத்தின் நீடிப்பை மறைத்தனர் மற்றும் வெள்ளை மாளிகையில் புஷ்ஷை அமர்த்திய அரசியல் சதிக்கு எதிரான உழைக்கும் மக்கள் திரளின் எந்தவிதமான தலையீட்டையும் தடுக்க விழைந்தனர். ஜனநாயகக் கட்சியினர் அப்போதிருந்து இப்போதுவரை புஷ்ஷுக்கு கூனிக் குறுகி முண்டு கொடுத்து, அரசியல் ஏற்புடைமையை வழங்கி வருகின்றனர்.

செய்தி நிறுவனங்களும் பத்திரிகைச் சாதனங்களும் 2000ம் ஆண்டின் தேர்தல் திருட்டை ஒரு விஷயமில்லாததாய் ஆக்கும் அளவுக்கு அசாதாரணமானதாய்ப் போய் விட்டன. புஷ் நிர்வாகத்தின் சட்டவிரோத வம்சாவளித் தன்மை மீதும் அவரது அரசாங்கம் ஜனநாயக உரிமைகளுக்கான அச்சுறுத்தலைப் பொதிந்து வைத்துள்ளதன் மீதும் செய்தி நிகழ்ச்சிகள் ஒளிபாய்ச்சிய பொழுது அவை சுய தணிக்கையை விதித்துக் கொண்டன. அமெரிக்க ஆணைக் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான அவர்களின் நடத்தையானது-- கூட்டரசாங்கத்தின் ஏஜன்சியின் தொழில் முறை ரீதியிலான விவகாரம் என்பதாகும்.

இவ்வறிக்கை வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில், வெள்ளிக் கிழமை 11 மணி அளவில் CBS வானொலியில் பெர்ரியின் அரசியல் வெடிகுண்டு அறிக்கை பிரதான நிகழ்ச்சியாக இருந்தது. ஆணைக்குழுவின் இடைக்கால கண்டறிதல்கள் எந்த விதமான தேசிய ஒலிபரப்புச் சேவையிலாவது வெளியானது என்றால் அதுதான் முதலும் முடிவானதுமான குறிப்பிடலாக இருந்தது. ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் மிக முக்கிய மற்றும் புத்தம் புதிய செய்திகளை அளிப்பதை நோக்கமாகக் கொண்ட CNN உடைய தலைப்புச் செய்திகள் ஆணைக்குழுவின் அறிக்கையைப் பற்றி குறிப்பிடவே இல்லை. ஒரு மாலை தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவை கூட-- அது NBC ஆகவோ அல்லது CBS ஆகவோ அல்லது ABC ஆகவோ இருந்தாலும் சரி-- ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அந்த அளவு உரத்துக் குரல் கொடுக்கவில்லை. உண்மையில் இது பொதுமக்களிடம் இருந்து மறைத்து வைக்கப்பட வேண்டிய செய்தியாக கருதப்பட்டது.

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2001
World Socialist Web Site
All rights reserved