WSWS: செய்திகள் & ஆய்வுகள் : ஐரோப்பா
: பிரான்ஸ்
France: First round in local elections reveals
political turmoil
முதலாவது சுற்று மாநகர சபைத் தேர்தல் பிரான்சின்
அரசியல் நெருக்கடியை அம்பலப்படுத்துகிறது.
By FrancisDubois
17 March 2001
Back to screen version
மார்ச் 11 நடந்த முதலாவது சுற்று தேர்தல்
பிரான்சின் அரசியல் நெருக்கடியை அம்பலப்படுத்தியுள்ளது. பல
பத்திரிக்கையாளர்கள் கணிப்பிட்டதுபோல், 1997 யூன் மாதத்தில்
சோசலிச கட்சியின் கூட்டரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிற்கு பின்னரான
மிக முக்கியமான வாக்கெடுப்பின்படி, அரசாங்க கட்சிகள் அனைத்தும்
வலதுசாரி எதிர்க்கட்சிகளிற்கு எதிராக சிறிய அளவில் தான் வெற்றியடைந்திருக்கிறார்கள்.
தேர்தலின் ஆரம்பகாலத்தில் அரசாங்கம் எடுத்த
எந்த நடவடிக்கைகளும் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் ஏழை
மக்கள் மத்தியில் எவ்வித தாக்கத்தையும் உண்டுபண்ணவில்லை.
உதாரணத்திற்கு தேர்தலுக்கு முன்னர் லியோனல் யொஸ்பன் 60
வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான புதிய கொடுப்பனவு ஒன்றினை
அறிவித்திருந்தார்.
கருத்து கணிப்பானது, சோசலிச கட்சிக்கு சார்பாக
ஒரு சிறு அலைதான் வீசுகிறது என முன்னறிவித்திருந்தது. எப்படியிருந்தபோதும்
கோலிச மரபுக் கட்சிகளான (RPR,UDF,DL)
அனைத்தும் தாம் ஏற்கனவே தேர்தலில்
வெற்றியடைந்திருந்த நகரங்களிலும் ஊர்களிலும் பொதுவாக தமது
கட்டுப்பாட்டினை வைத்திருந்தார்கள். அரசாங்கத்தில் அங்கம்
வகிக்கும் கூட்டுகட்சிகளின் வெற்றியானது அவர்களது சொந்த
செல்வாக்கின் அபிவிருத்தியால் தீர்மானிக்கப்பட்டது அல்ல
மாறாக பரந்த அளவில் வலதுசாரிக் கட்சிகளுக்குள் ஏற்பட்ட
நெருக்கடிகளே அதற்கு காரணமாக இருந்தன.
வாக்களிக்காத மக்களின் எண்ணிக்கை 33 வீதத்திற்கு
மேலாகும். இது இந்த வகையான ஒரு தேர்தலில் எப்பவும்
இருக்காத உயர் எண்ணிக்கையாகும் அத்துடன் இது ஒரு ஆழமான
அரசியல் அன்நியப்படலை காட்டுகிறது. எப்படியிருந்தபோதும்
பாரிஸ், லியோன், தூலூஸ் போன்ற இடங்களில் அதிகமானவர்கள் கலந்துகொண்டதுடன்
நகரங்களிலும் ஊர்களிலும் முடிவுகள் உறுதியற்று இருந்தன. பிரான்சின்
பிரதானமான நகரங்களில் சாதரணமாக வெவ்வேறு கட்சிகளினதும்
பழைய அங்கத்தவர்கள் தான் நகரபிதாக்களாக இருந்து வருகிறார்கள்.
இது, கோலிச மற்றும் சோசலிச கட்சிக்குள் உள்ள வித்தியாசமான
கன்னைகளுக்கு ஆதரவுக்கான ஒரு முக்கியமான அடித்தளத்தை
வளங்குகிறது.
சோசலிச கட்சி ஜெயிக்க போகின்றது என முன்னறிவித்த
நகரஙகளிலும் கூட அவர்களுக்கு கடினமானதாக இருந்தது.
சோசலிச கட்சி முன்னணியில் இருந்த லியோன், லில், தூலூஸ் மற்றும்
பாரீசிலும் கூட (Lyons, Toulouse,
Lille and Paris) அதனது வாக்குகள் எதிர்பார்த்ததை
விட மிகக் குறைவானதாகஇருந்தன. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்
அமைச்சர்கள் போட்டியிட்ட சில நகரங்களில் (e.g.
Avignon, Beziers and Blois) அவர்கள்
தோல்வியடைந்திருந்ததுடன் அவர்கள் கெடுதியான முறையில் ஆட்டம்
கட்டிருந்தனர். சில அறிக்கைகளின்படி, கடந்து ஜரோப்பிய தேர்தலின்போது
அவர்களுடன் இணைந்த ஒரு கன்னையையும் தேர்தல் பிரச்சாரத்தின்
போது சோசலிசக் கட்சியினர் அணிதிரட்டியிருந்தனர்.
பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி தமது நிர்வாகவாகத்தின்
கீழ் இருக்கும் நகரங்களில் கிட்டதட்ட 4.5 மில்லியன் 45 இலட்சம்(8வீதமான
மக்கள் தொகையினரை) தமது கட்டுப்பாட்டில் கொண்டிருந்தனர்.
பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியினது வாக்கின் வீழ்ச்சியானது அதனது
கட்டுப்பாட்டில் இருக்கும் நகரங்களிலும் கூட அது வெற்றி பெறுவதை
கடினமாக்கியுள்ளது. கிட்டதட்ட 1 இலட்சம் மக்கள் தொகையினர்
இருக்கும் நிம் நகரத்தையும் இழந்துவிடலாம். பிரெஞ்சு கம்யூனிஸ்ட்
கட்சி சோசலிச கட்சி மற்றும் பச்சைக் கட்சியனரின் ''பல இடதுகளின்''
கூட்டு அரசாங்கத்தில் முக்கிய பங்காளிகள் ஆவர். இவர்கள் தேர்தலை
முன்னிட்டு சோசலி கட்சியுடன் ஒரு ஒன்றுபட்ட ஜக்கியத்திற்கான
உடன்படிக்கை செய்துகொண்டதுடன் இணைந்து நின்று போட்டியிடுவதாகவும்
அறிவித்தனர்.
கம்யூனிஸ்ட் கட்சி செல்வாக்கு இழந்து நிலையில்,
பச்சைக் கட்சினரின் சார்புரீதியான வாக்குகளின் அதிகரிப்பின் காரணமாக,
பச்சைக் கட்சினருக்கு உள் நிர்வாகங்களில் அதிக இடங்களை அளிக்க
சோசலி கட்சி ஏற்கனவே நிர்பந்திக்கப்பட்டுள்ளதுடன் இது தேசிய
அளவிலும் இடம்பெறலாம். இன்று, கம்யூனிஸ்ட் கட்சியினரை கீழ்
நிலைக்கு தள்ளிவிட்டு பச்சைக் கட்சினர் சோசலிச கட்சின் கூட்டின்
முதன்மையான பங்காளிகளாக பரிணமிப்பதும் சாத்திமானதே.
பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி 'குடிமக்கள் பட்டியல்'
என அழைக்கப்படும் குழுவாலும் மற்றும் அவர்களது பலதரப்பட்ட
இடது தீவிரவாத மத்தியதர வர்க்கத் தட்டுக்களுடனான போட்டியிலும்
அதனது வாக்குகளை இழந்தது. இந்த தட்டுக்கள் அதிகமாக
குழப்பமான வேலைத்திட்டத்தில் அடிப்படையாக கொண்டிருந்ததுடன்,
கூடுதலான ஜனநாயகம், இன்னும் ''மக்களுக்கு நெருக்கமாக
இருக்க'' வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக இருந்துடன்,
'பழைய இடதுகளினால் மனவிரக்தியடைந்த' வர்களினது வாக்குகளை
பெற்றுக்கொள்வதே தமது அடிப்படையாக கொண்டிருந்தனர்.
இப்படியான தட்டுகளின் அடிப்படை உதராணமாக ஒன்றைக்க
குறிப்பிடலாம், அவர்கள் தம்மை "Motiv-é-es"
(motivated) (காரியக் காரர்கள்)
என அழைத்துக்கொள்கிறார்கள். பல
நகரங்களில் இவர்கள் போட்டியிட்டார்கள், சில இடங்களில் சார்புரீதியான
அதிக வாக்குகளை பெற்றனர். உதரணமாக தூலூஸில் 12 வீதமாகும்.
தூலூஸில் Zebda என
அழைக்கப்படும் ஒரு இசைக் குழுவில் இருந்தே ''Motiv-é-es"
வாக்காளர் உருவாக்கப்பட்டார்.
முக்கிய கட்சிகளுடனான அவர்களது எதிர்ப்பு வெறும் வாய்ச்சவாடல்
நிறைந்ததாகும், கூடிய விரைவில் பெறுபேறுகள் என்னவென தெரிந்தவுடன்
அவர்கள் சோசலி கட்சியுடன் பேரம்பேச தொடங்கிவிட்டதுடன்
இரண்டாவது சுற்றில் அவர்களுடன் இணைந்து விட்டார்கள்.
தம்மை ட்ரொட்ஸ்கிஸ்ட்டுகள் என அழைத்துக்கொள்ளும்
மற்றும் ''தீவிர இடதுசாரி'' என பிரெஞ்சு பத்திரிகைகள் அழைக்கும்
கட்சிகளான, Lutte Ouvrière
(Workers Fight, LO),the Ligue Communiste Revolutionnaire (Revolutionary
Communist League,LCR) and the Parti des Travailleurs (கீஷீக்ஷீளீமீக்ஷீs றிணீக்ஷீtஹ்,
றிஜி) லிளி, லிசிஸி, றிஜி-தொழிலாளர்
போராட்டம், புரட்சி கம்யூனிஸ்ட் கழகம், தொழிலாளர் கட்சி
ஆகியன தமது வாக்குகளை குறிப்பிடும்படியாக உயர்த்தியுள்ளன. LO
தனது வேட்பாளர்களை129 நகரங்களிலும்,
LCR 93
இடங்களிலும், PT
136 இடங்களிலும் நிறுத்தியதுடன், 1995 இல் இருந்து உள் தேர்தலில்
பங்குபற்றிவரும் இவர்கள் தமது வேட்பாளர் பட்டியலை இரட்டிப்பாக
அதிகரித்துள்ளனர்.
குறிப்பாக இந்தக் கட்சிகள் அனைத்தும் பரந்த
நகரங்களிலும், மைய தொழிற்துறை இடங்களிலும் செயல்பட்டுவருகிறார்கள்.
இவர்களது சார்புரீதியான வாக்கின் அதிகரிப்பானது பல தடவை
அவர்களை பலம் வாய்ந்த இடைத்தரகர்கள் ஆக்கியுள்ளது. PCF
இன் அதிருப்தியான அங்கத்தவர்கள் சில
நகரங்களில் அவர்களது வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்று
இருந்தனர், இன்னும் சில நகரங்களில்
LCR, PCF இன் உத்தியோகபூர்வ கிளைகளுடன்
இணைந்து போட்டி இட்டனர்.
சில பத்திரிக்கையாளர்கள் குறிப்பிட்டது போல்
பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியானது
"அதி தீவிர இடது'' களால், அவர்களின்
அர்த்தத்தில் ''பொதுஜன வாக்கு'' களால், அதாவது
தொழிலாள வர்க்கத்தின் வாக்குகளால் பதிலீடு செய்யப்பட்டுள்ளது.
''பலதரப்பட்ட இடது'' களின் வாக்குகள் இந்த மக்கள் பகுதியினரின்
வாக்குகளை அடிப்படையாக கொண்டிருக்கவில்லை. பச்சைக்
கட்சியினர் தமது வாக்காளர்களை ''உத்தியோக மத்தியதர வர்க்கத்
தட்டினர்'' உள் காண்பதாக குறிப்பிட்போது சோசலி கட்சி, முதலாளிகளின்
வாக்குகளுக்கு பின்னால் இருந்தது என்ற உண்மையை மறைக்கவில்லை.
பாரீசில் சோசலிசக் கட்சியின் வாக்குகள் பற்றி ஒரு பத்திரிக்கையாளர்
கீழ்காணும் முறையில் குறிப்பிட்டார்; ''தேர்தலுக்கு தேர்தல்
இடதுகள் தலைநகரத்தில் குறிப்பிடும்படியாக அபிவிருத்தியடைவது
ஒன்றும் ஒரு விபத்தல்ல. முரண்பட்ட வடிவத்திலான சோசலிச கட்சியினரின்
இந்த பரிணாமத்தை பார்க்கும் போது பாரீசின் முதலாளிமயப்படுத்தலுக்கு
சாதகமாக இருப்பதுடன் அது இன்னும் இன்னும் வசதிபடைத்த தட்டுக்களை
நோக்கி நகருகிறது. இதனால் இது பரந்தமக்களின் மத்தியிலான
பின்னணியை இழந்துவருகிறது.''
தீவர வலதுசாரி கட்சியான தேசிய முன்னணி முதலாவது
சுற்றில் தூலோன் நகரத்தை இழந்தபோதும், இது குறைந்தபட்சம்
1995 இல் வெற்றிபெற்றதுபோல் ஏனைய நகரங்களில் தனது
நிலையை பேணிக்கொண்டது. விற்றோலில் 38 வீத வாக்குகளை பெற்றதுடன்,
ஓறஞ்சில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதிவலது சாரி
கட்சிகளான (FN and the Mouvement
National Republicain, MNR) தேசிய முன்னணி
மற்றும் தேசிய குடியரசு இயக்கத்தினது அரசியல் வாதிகள் தமது
சொந்த வேட்பாளர்களை நிறுத்த முடியாத இடங்களில், அவர்களை
வரவேற்ற கிறிஸ்தவ ஜனநாயக கட்சி மற்றும் வலதுசாரி
தாராளவாதிகளின் அனைத்து வித பட்டியலையும் மீண்டும்
உபயோகப்படுத்திக் கொண்டனர்.
UDF, RPR மற்றும் (Rassemblement
Pour la France, பிரான்சுக்கான ஜக்கிய
இயக்கம்) RPF இந்த
கட்சிகளுடன் இவர்கள் ஒரு தொகை தேர்தல் உடன்படிக்கைகள்
செய்துகொண்டனர். சில நகரங்களில் வலதுசாரி முதலாளிகள் அவர்களது
சொந்த இடது வேட்பாளர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய
MNR க்கு
இடம் விட்டுக்கொடுத்து விலகிக்கொண்டார்கள்.
கடந்த இருவருடங்களாக தொழிலாள வர்க்கத்தின்
சமூக வெற்றியின் மீது திட்டவட்டமான தாக்குதலை செய்வதில்
முன்னணிப் பாத்திரம் வகிக்கும் முதலாளிகள் அமைப்பான மெடெப்
(Medef)-இன்
பல வட்டார கிளைகள், பாரம்பரிய வலதுசாரிக் கட்சிகளில்
தமது வேட்பாளர்களை சுதந்திரமாக நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்க
ஒன்றாகும். மேலும் முதலாளிகளின் நலன்களை பிரதிநித்துவப் படுத்துவதற்கு
தாம் சக்தியற்று இருப்பதை அவர்கள் கணித்துள்ளனர்.
'பலதரப்பட்ட இடதுகள்' மற்றும் வலதுசாரிகளின்
தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய அம்சம், சட்ட ஒழுங்கு மற்றும்
'வாழ்க்கைத் தரம்'' என ஒன்றையொன்று ஒத்ததாகவே இருந்தன.
எதிரேதிரான இளம் கும்பல்களுக்கிடையிலான சண்டைகள் அனைத்தும்
பிரச்சார ஊடகங்களினூடாக பரப்பபட்டதுடன், வெளியிடப்பட்ட
அனேகமான கட்டுரைகள் பாடசாலையில் நடக்கும் பலாத்காரங்கள்
பற்றி இருந்தன. சமூக பிரச்சனைகளுக்கான காரணமாக அரசியல்
தஞ்சம் கோருபவர்கள் தந்திரோபாய பாணியில் உபயோகப்படுத்தப்பட்டனர்.
இப்படிப்பட்ட பிரச்சாரங்கள் வாழ்க்கைத் தரத்தையும் செல்வங்களையும்
புதிதாக திரட்டிக்கொண்டு, அதையிட்டு பயம் கொண்டிருக்கும்
செல்வம் படைத்தவர்களை கவனத்தில் கொண்டிருந்தது.
அதே நேரம், ஏழ்மை அதிகரிப்பு போன்ற சமூக பிரச்சனைகள்
பற்றி எந்த ஒரு கட்சியும் தமது பிரச்சாரத்தில் கவனம் கொள்ளவில்லை
என சில பத்திரிக்கைகள் குறிப்பிட்டு இருந்தன.
PCF, PS மற்றும் பச்சைக்
கட்சியினரின் சுலோகங்கள் முதலாவது சுற்றிலே கிட்டதட்ட
ஒன்றாகவே இனம் காணப்பட்டது, PS
அணைத்துக் கொண்ட 'சமூக முதலாளித்துவ' கொள்கையுடன் பழைய
ஸ்ராலினிஸ்ட் மற்றும் சூழல் பாதுகாப்பு (பச்சைக்) கட்சியினர் தம்மை
முற்றுமுழுதாக இனம் காட்டிக்கொண்டனர். எப்படியிருந்தபோதும்,
ஒரு குறிப்பிட்ட அளவில் ஜொஸ்பனுக்கு கிடைத்த பொதுஜன வாக்குகள்
ஆழமான முறையில் PS
கட்சியின் இடது பக்கம் நின்றவர்களுக்கு தொழிலாள வர்க்கத்தின்
ஒரு சாரார் அளித்த வாக்குகள் என்பது தெளிவானது.
பிரெஞ்சு அரசியலை ஆட்டம் காணவைத்த ஆழமான
நெருக்கடியானது சில நகரங்களில் வெளிப்பட்ட பாரம்மபரிய
வலதுசாரிகளின் நெருக்கடிகளுடன் குறிப்பிட்ட வடிம் எடுத்தது.
இது, லியோனில் கோலிச பிரிவின் ஒரு கன்னை தீவிர வலது சாரிகளுடன்
கூடியதானது கடந்த மாநாகர சபை தேர்தலில் பல பிரிவுகளை
அவர்களுள் ஏற்படுத்தியது
தலைநகர் பாரீசில் நெருக்கடியானது கூர்மையடைந்துள்ளது.
இந்த நகரபிதா பணிக்கான அலுவலகம் தொடங்கி இன்றைக்கு
25 வருடங்களாக அந்த அலுவலகத்தில் கோலிச வாதிகள் தான்
கடைமையாற்றி வந்திருக்கிறார்கள். எப்படியிருந்தபோதும்,
பாரீசில் நடந்த சில அசிங்கமான ஊழல் மோசடிகளால் கோலிஸ்ட்டுகள்
பரந்தளவில் மதிப்பிழந்துள்ளார்கள், இன்றைக்கு நகரபிதாவாக
பணியாற்றி வரும் ஜோன் திபேரியும், முன்னாள் நகரபிதாவும்
இன்றைய ஜனாதிபதியுமான ஜாக் சிராக்கும் அங்கே நடந்த
ஊழல் விவகாரங்களில் சம்பந்தப்பட்டு இருந்தார்கள்.
PS இன் பாரீஸ் நகரபிதா
வேட்பாளரான Bertrand
Delanoë முதலாவது
சுற்றின் பின்னர் 31 வீத வாக்குகளில் முன்னணியில் இருக்கிறார். அவர்
ஊழல் விவகார மோசடிகளிற்கு எதிராக ஒரு 'ஒழுக்கம்' உடைய
நிர்வாகத்திற்காக பிரச்சாரம் செய்தார்.
ஒரு குறிப்பிட்ட செல்வாக்கை கொண்டிருந்த
RPR
வேட்பாளரான பிலிப் செகன் 25 வீத வாக்குகளை பெற்றார்.
திபேரி கடந்த நவம்பரில் RPR
இல் இருந்த நீக்கப்பட்டிருந்ததுடன், அவர் 14 வீத வாக்குகளோடு
மூன்றாவது நிலையில் உள்ளார்.
முடிவுகள் தெரியவந்ததும் தான் தாமதம் வலதுசாரிகளின்
வெற்றிக்கு சார்பாக தமது போட்டியை கைவிட விரும்பியவர்களுக்கும்,
ஒன்றிணைந்து போட்டியிட விரும்பியவர்களுக்கும் இடையில் உடனடியாக
ஒரு யுத்தம் ஒன்று எழுந்தது. இறுதியாக செவ்வாய்க் கிழமை,
இரண்டாவது சுற்றுக்கான, வேட்பாளர்கள் உத்தியோகபூர்வமாக
பதிவு செய்யும் அலுவலகம் மூடப்படுவதற்கு ஒருசில மணிநேரமே
இருந்த நிலையில் செகனும் அவரது ஆதரவாளர்களும் வலது
சாரி வாக்குகள் சிதைந்து போகாமல் இருப்பதற்காக
திபேரியுடன் உடன்பாடு ஒன்று செய்துகொண்டார்கள். இது கிட்டதட்ட
Delanoë முதலாவது
சோசலிச கட்சியின் நகரபிதாவாக வருவதற்கு உறுதிப்படுத்தியது.
இரு கன்னைகளும் மாறிமாறி ஒருவரை ஒருவர் திட்டிதீர்த்த
மறுநாளே இந்த ஒப்பந்தம் நடந்தேறியது. சிறாக் மற்றும்
பெரும்பான்மையான RPR தலைவர்கள்
மற்றும் ஏனைய வலதுசாரி கட்சிகளும் பாரீசில் ஒரு பாரிய தோல்வி
ஏற்படுமானால் அடுத்த வருடம் நடக்க இருக்கும் ஜனாதிபதி
தேர்தல் மற்றும் பாரளுமன்ற தேர்தல் வெற்றிக்கு ஒரு பாரிய
நெருக்கடியை உருவாக்கும் என பயந்ததுடன் திபேரியுடன் ஒரு
உடன்பாட்டுக்கு செல்லும்படி நெருக்குவாரம் கொடுத்தனர்.
எப்படி இருந்தபோதும், திபேரியும், செகனும்
அந்த பதவிக்கு போட்டியிடுவதை அறிவித்துள்ளார்கள். கோலிச
வாதிகள் இரண்டாவது சுற்றில் ஜெயிப்பாரானால், அடுத்த
நகரபிதாவாக வருபவர் அழிவுகரமான போராட்டத்திற்கு மேலதிகமான
ஆயுதங்களை வளங்குபவராகவே இருந்திருப்பார்.
கோலிச பகுதிக்குள் நடக்கும் தொடர்ச்சியான
உடைவு சோசலிச கட்சி மற்றும் ஏனைய கட்சிகளுக்கும் ஆதாயத்தை
உருவாக்கும், வலதுசாரி கட்சிகள் ஒரு அமைப்பாக ஐக்கியப்பட
வேண்டும் என தேர்தலுக்கு முன்னர் சிறாக் வலியுறுத்தியிருந்தார்.
''ஒரு கலாச்சார புரட்சி செய்வதாக இருந்திருந்தால் எதிர்ப்பானது
செல்வாக்கு மிகுந்ததாக இருந்திருக்கும்'' என அவர் கூறியிருந்தார்.
''ஒரு வெடிப்பை தவிர்ப்பதற்கு'' அவசியமான ஒரு கூட்டு இணைப்பினை
பற்றி Libération பத்திரிகை
கூட எழுதியது.
மார்ச் 18ம் திகதி திங்கள் கிழமை தேர்தலின் இரண்டாவது
சுற்று இடம்பெற இருக்கிறது.
|